KAILASA Library/புண்ணிய க்ஷேத்ரங்களில்/ஆயுர்வேதSign in
புண்ணிய க்ஷேத்ரங்களில்

ஆயுர்வேத

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ரிஷிகேஷிலிருந்து தெரியும் இமாலயம்

ரிஷிகேஷிலிருந்து தெரியும் இமாலயம்

Temple in Haridwar

ஹரித்வார் தொன்று தொட்டு ஆயுர்வேத ஔஷதங்களின் கருவூலமாக இருந்து மூலிகை மருந்துகளை அளித்து வருகிறது. கங்கைக்கரையில் தோன்றிய மிகப்புராதன நகரங்களில் ஒன்றான ஹரித்வார், இன்றும் பச்சைபசேலென்று மரங்களும், காடுகளும் நிறைந்து செழுமையுடன் காணப்படுகிறது. ஆயுர்வேத பாடசாலையாக விளங்கும் இந்நகரம் ஆயுர்வேத மருத்துவத்தை பேணிகாக்கும் கருவூலமாகவும் விளங்குகிறது. பரங்கியரின் ஆட்சிக்காலத்தில், ஆயுர்வேத மருத்துவம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, அலோபதி எனப்படும் மேலை நாட்டு மருத்துவ மோகம் பாரதத்தில் மேலோங்கியது. ஆயுர்வேதமுறை இரண்டாம் பட்சமாக்கப்பட்டது. மேலும், ஆயுர்வேதம் ஏழைகளின் மற்றும் படிப்பறிவில்லாதவரின் மருத்துவமாகக் கருதப்பட்டு, பாரதத்தின் கலாச்சாரபழக்க வழக்கங்களில் இருந்து ஒழிக்கப்பட்டது. ஹரித்வாரில் வாழ்ந்த சந்நியாசிகள் இதற்கு புத்துயிரூட்டி, வேத காலத்து அறிவாற்றலையும் விஞ்ஞானத்தையும் அளித்து நிலைநிறுத்தினர்.

மானசா தேவி கோயில்- ஷிவாலிக் மலைத்தொடரில் உள்ள வில்வ பர்வதம் என்னும் மலை உச்சியில் உள்ள இக்கோயில் பக்தர்களின் ஆசை, அபிலாஷைகளை நிறைவேற்றும் மானசா தேவிக்காக உருவாக்கப்பட்டது. மாயா தேவி கோயில்- இது சித்த பீடங்களில் ஒன்று. சதி தேவியின் இருதயமும், நாபியும் விழுந்த இடம் இது. மாயா தேவி இவ்விடத்தில் அதிஷ்தாத்ரி தேவியாக வழிபடப்படுகிறாள்.

கீதை கோயில்- கிருஷ்ண பகவான் தனது கையால் எழுதிய பகவத் கீதையின் மூலப்பிரதியான மிகப்பழைய பிரதி இன்று வரை இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்தப் பிரதி என்பதை மட்டும் தீர்மானமாகச் சொல்ல முடியும். இந்தப் பிரதி தற்போது மகாநிர்வாணி அகாடாவின் பொறுப்பில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பிரதியில் இருந்து தான் பகவத் கீதையின் முதல் அச்சுப் பிரதி அச்சிடப்பட்டது. மிக அழகான கீதை கோயிலொன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த மிகப்பெரிய கோயிலின் உள்ளே பகவத் கீதை முழுவதும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. -பரமஹம்ஸ நித்யானந்தர்

Temple on cliff