KAILASA Library/புண்ணிய க்ஷேத்ரங்களில்/ஹரித்வார்...Sign in
புண்ணிய க்ஷேத்ரங்களில்

ஹரித்வார்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஹிந்து தர்மத்தின்

கங்கை நதிக்கரை காட்சி

உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஹரித்வார், இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். ஹரித்வாரில்தான் கங்கை சமவெளியில் பாயத்துவங்குகிறாள். அதுவரை மலைப்பகுதிகளில் பாய்ந்துவந்த கங்கை இவ்விடத்திலிருந்து சமவெளியில் நுழைவதால் கங்காத்வாரா (கங்கையின் நுழைவு வாயில்) எனவும் இவ்விடம் புகழ் பெற்றது. ஹரித்வார், வருடா வருடம் கோடிக்கணக்கான ஹிந்து பக்தர்களை கவர்ந்திழுக்கும் இந்தியாவின் புண்ணிய நகரங்களில் ஒன்று. கணக்கற்ற ஆலயங்களையும் ஆசிரமங்களையும் தன்னகத்தே கொண்டது இந்நகரம். இந்நகரத்தின் வருவாய், மத யாத்திரிகர்களின் மூலமாகவும், மத நிகழ்வுகளை மையமாகக்கொண்ட கலாச்சாரப் பெருமை வாய்ந்த திருவிழாக்கள் மூலமாகவும் கிடைக்கப்பெறுகிறது.

கங்கை நதி, ரிஷிகேஷ்:

ரிஷிகேஷ் சட்டப்படி ஒரு ஹிந்து நகரம்; இது எதைக்குறிக்கிறது என்றால், மற்ற மத கோட்பாடுகளைக்குறிக்கும் எந்த விதமான கட்டிடங்கள், நினைவுச்சின்னங்களை நிறுவுவதற்கு இங்கு சட்டப்படி அனுமதி இல்லை.

A riverbed with water reflecting golden light

சதிதேவி, சிவபெருமானை மணந்துகொள்ளும் முன்னர், ஹரித்வாரில் இருந்த தனது தந்தை பிரஜாபதி தக்ஷனது மாளிகையில் வசித்து வந்ததால், இது சாக்ஷாத் ஆதிசக்தியின் அவதாரமும், சிவபெருமானின் துணைவியுமான சதிதேவியின் தாய் வீடு என்ற பெருமை வாய்ந்தது.

சிவபெருமான், சதி தேவியை மண முடிந்ததை கடுமையாக எதிர்த்த பிரஜாபதி தக்ஷன், சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் ஒரு மகாயாகத்தை நடத்தினார். இதனால் சினமடைந்த சதிதேவி தனது கணவருக்கு

இழைக்கப்பட்ட அவமானத்தை பொறுக்க இயலாமல் தன்னைத்தானே வேள்வித்தீயில் எரித்துக்கொண்டார். துக்கம் தாளாமல், சதி தேவியின் பூத உடலை கரமேந்தி ஈசன் அண்டவெளியை வலம் வந்தார். சதி தேவியின் இறந்த உடலை மகாவிஷ்ணு தனது சுதர்சன சக்கிரத்தால் ஐம்பத்தொரு பிண்டமாக ஆக்கினார். சதிதேவியின் இருதயமும், நாபியும் இங்கு விழுந்ததால், ஹரித்வார் மிக முக்கியமான சக்தி ஸ்தலமாக விளங்குகிறது. இன்றும், அந்த இடத்தில் மாயாதேவி கோயில் இருப்பதைக் காணமுடிகிறது.