மரணபயத்தைக்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இந்த பூமிக்கிரகத்தில் உள்ள எல்லா ஞானப் பரம்பரையினரும் மரணபயத்தைக் கடந்துவர மரணத்தின் மீதான இந்த தியான நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
தியான நுட்பம்: ‘உங்கள் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை தீ எரிவதையும், அது உடல் முழுவதையும் எரித்து சாம்பலாக்குவதையும் கவனியுங்கள். எரிவது உங்கள் உடலே- நீங்கள் அல்ல’
கடோபநிதம் இந்த நுட்பத்தை அருமையாக விவரிக்கிறது. வேதபாரம்பரியத்தில், ஞானத்திற்கான தியான நுட்பமாக இந்த மரண தியானம்தான் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. யாராக இருப்பினும், சன்யாச தீட்சை பெறுவதற்கு முன்பு, இந்த மரண தியான நுட்பத்தை செய்து மரண பயத்தை கடந்திட்டபிறகே சன்யாச தீட்சை பெற வேண்டும்.
புத்த மதத்தில் சன்யாச தீட்சை பெற்ற சீடர், முதல் மூன்று மாதம் முழுவதும் சுடுகாட்டில்தான் கழிப்பார். அங்கு உட்கார்ந்து கொண்டு பிணங்கள் எரிக்கப்படுவதையே தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பார். அவ்வாறு பார்க்கும்பொழுது, தன் உடலும் எரிக்கப்படுவதாக பாவனை செய்து கொண்டு பிணங்கள் எரிக்கப்படுவதைப் பார்த்த வண்ணம் இருப்பார்.

எனது பரிவிராஜக
வாழ்க்கையின் போது,
தினமும் குறைந்தது
300 பிணங்களாவது
எரிக்கப்படும் மணிகர்னிகா
படித்துறையில்
பல மணிநேரம்
அமர்ந்திருப்பேன்.
தொடர்ந்து பிணங்கள்
எரிக்கப்படுவதைப்
பார்க்கும் போது,
மரணத்தின் மீது
உங்களுக்கிருக்கும்
மரியாதை போய்விடும்.
தற்போது நீங்கள்
மரணத்தின் மீது மிகுந்த
மதிப்பு வைத்திருப்பீர்கள்.
அதைப்பற்றி
நிறைய கருத்துக்கள்
வைத்திருப்பீர்கள்.
மரணம் என்பது
வேறொன்றுமில்லை.
உள்ளே சென்ற மூச்சு
வெளியே வரவில்லை
என்பதுதான்.
பிணங்கள் எரிவதைத்
தொடர்ந்து பார்த்தபோது
எனக்குள் இருந்த
சிறு பயமும் மறைந்தது.
மெது மெதுவாக
இவ்வாறு பார்ப்பதில் ஒரு
ஆர்வமே வந்துவிட்டது.
பிணத்தின் அருகில் சென்று

அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். ஒருநாள் ‘இந்த உடம்பும் இதுபோல எரிந்து சாம்பலாகத்தான் போகிறது’ என்று நினைக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான், ‘அடக்கடவுளே, ஆம், இந்த உடல் கூட இந்தப் பிணங்களைப்போல ஒரு நாள் எரியத்தான் போகிறது. அப்படியென்றால் அது இப்போதே நடக்கட்டும் என எனக்குள் ஒரு பொறி தட்டியது’. இவ்வாறு ஆழமாக நினைத்ததவுடன் உடல் முழுவதும் ஆழமான மரண பயம் பரவியது. அந்த பயத்தை விழிப்புணர்வோடு எதிர்கொண்டேன். பயத்தை விழிப்புணர்வோடு பார்க்கத்துவங்கியதும், அது எனது மரண அனுபவமாக மாறியது. மரண அனுபவத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டேன். பயத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் பயத்தை எப்பொழுதெல்லாம் ஒடுக்கப் பார்க்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் அந்த பயம் தற்காலிகமாக ஒடுங்கிய பயமாகத் தங்கும். அந்த பயத்தை எதிர்கொள்ளாமலே தொடர்ந்து விட்டு வைத்தால், அப்பயம் பயத்தாக்குதலாக உருவாகி உங்கள் நரம்பு மண்டலத்தையே உடைத்து உருக்குலைத்துவிடும். ஆனால் அதே பயத்தை விழிப்புணர்வுடன் பார்த்தோமானால் - மரண அனுபவமாக மாறும்.
எனது உடல் இறந்து விட்டதை என்னால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனது உடல் அசைவற்றுக் கிடந்தது. இரண்டரை நாட்கள் உடலுக்கு தண்ணீர் இல்லை, உணவும் இல்லை. உடலைப்பற்றி எந்தக் கேள்வியுமில்லை. கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. எனது உடல் இறந்துவிட்டதையும் அது அசைவற்றுக்கிடப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. ஆழமான அனுபவத்தினால், எனக்குள் ஒரு தீர்வும் ஆழ்ந்த தெளிவும் நிறைந்தது. அது என்னவென்றால்? ‘உடல் இறந்துவிட்டது, ஆனாலும் நான் இருக்கிறேன். நான் இங்கேயே இருக்கிறேன்’ என்பது அனுபூதியானது.
மெதுவாக என் கண்களைத் திறந்தேன். என்னால் எனது உடலை அசைக்க முடிந்தது. முதலில் ஆழ்ந்த பரவச நிலையை, சந்தோஷத்தை, நன்றியுணர்வை, ஆனந்தத்தை நான் உணர்ந்தேன். ஏனென்றால் மரணம் பற்றிய பயம் என்னிடமிருந்து அடியோடு அகன்று விட்டது. நான் நினைத்து பயந்ததுபோன்று நான் ஒருபோதும் இனி இருக்க மாட்டேன் என்பது எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் மரணபயம் என்னைவிட்டு அடியோடு விலகியது. இது எனது முக்கியமான அனுபவங்களில் குறிப்பிடத்தக்க ஒரு அனுபவமாகும். இதுபோன்ற அனுபவங்களே என்னை ஞானத்தை நோக்கியும், ஆன்மீக சத்தியங்களை நோக்கியும் பூரணத்துவத்தை நோக்கியும் முன்னேற வைத்தன.