24 மணி நேர சுகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கோடீஸ்வரர் ஒருவருக்கு எதிர்பாராத விதமாய், ஜென் ஞானியை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, சுகபோகியாய் வாழும் கோடீஸ்வரர், ஜென் ஞானியிடம் கேட்டார், "மது, மாது, மாட மாளிகை என சுகத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் ஆனந்தம் எனக்குத் தேவையா? அதற்காகக் கஷ்டப்பட்டு தியானம் செய்ய வேண்டுமா? தேவையேயில்லையே!" என அலட்சியமாய்க் கேட்டார்.
உறுதியான குரலில் கோடீஸ்வரரிடம், "நான் சொல்லும் ஆனந்தம் உனக்குத்தான் நிச்சயம் தேவை," என்றார் ஜென் ஞானி.
"ஏன்!" என ஆச்சரியமாய்க், கேட்ட கோடீஸ்வரரிடம்,
"நீ ஒரு பிச்சைக்காரன்," என்றார் ஜென் ஞானி.
நான் சொல்லும் ஆனந்தம்
உங்களுக்கு
நிச்சயம் தேவை.
பதிலின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், "என்ன? நான் பிச்சைக்காரனா!?" எனக் கேட்டார் கோடீஸ்வரர். ஜென் ஞானி, "ஆம்! சுகத்தை நீ அனுபவிக்க மதுவிடமும், மாதுவிடமும் பிச்சையெடுக்க வேண்டியிருக்கும்.
இவையில்லாமல் உன்னால்
ஆனந்தமாயிருக்க முடியுமா? சொல்லப்பா..."
என ஜென் ஞானி கேட்டதற்கு, முடியாது எனத்
தலையசைத்தார் கோடீஸ்வரர்.
ஜென் ஞானி, "சுகத்திற்காக வெளியே பிச்சை எடுக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால், எதுவுமேயில்லாமல் சுகத்திலேயே ஊறிக்கொண்டிருக்கும் ஞானிக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்?" என்று கேட்டார்.
அந்தக் கோடீஸ்வரரைப்போன்று திமிராய் இல்லாததால்தான், ஞானிகள் தெய்வத்திற்கு இணையாய் மதிக்கப்படுகிறார்கள்.
துளி சுகத்தைப் பார்த்ததும், "தியானமெல்லாம் தேவையா?" எனக் கேட்கும் அளவுக்கு மந்தமாகவும், திமிராகவும் இருப்பதால்தான் சுக போகிகள் அற்பர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள். புரிந்ததா?" எனக் கேட்டார் ஞானி.
கேள்வியின் முடிவில் கோடீஸ்வரர் மலர்ந்தார்.
பிச்சைக்காரராய் வாழும் கோடீஸ்வரர், நிஜக் கோடீஸ்வரராய் மாற முடிவெடுத்தார்.
வேலூர் தியான சத்சங்கத்தில் பேசும் போது சுகம் பற்றிப் பேசுகையில்,
"மனிதன் தன் சுகத்தை உடலின் ஐந்து புள்ளிகளில் மட்டுமே அனுபவிக்கிறான்.
'சுவையால்' வரும் சுகத்தை 'நாக்கிலும்,'
'வாசனையால்' வரும் சுகத்தை 'மூக்கிலும்,'
'இசையால்' வரும் சுகத்தைக் 'காதிலும்,'
'காட்சிகளால்' வரும் சுகத்தைக் 'கண்களிலும்,'
'ஸ்பரிசத்தால்' வரும் சுகத்தை 'இந்திரியங்களிலும்'
மனிதன் அனுபவித்து மகிழ்கின்றான்.
இந்த ஐந்துமே மனிதனின் உடல் எனும் மிகப்பெரிய பரப்பளவில் உள்ள ஐந்து சிறு புள்ளிகள் மட்டுமே.

துளி சுகத்தைப் பார்த்ததும்,
""தியானமெல்லாம் தேவையா?"
எனக் கேட்கும் அளவுக்கு மந்தமாகவும்,
திமிராகவும் இருப்பதால்தான் சுக போகிகள்
அற்பர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.
இதில் உடலளவு சுகம்கூட முழுமையாய் கிடைக்காது. இதை முழுமையாய் அனுபவிக்க வேண்டுமென்றால், 'தியானம் அவசியம்' எனக் குறிப்பிட்டேன்.
இதுபற்றிச் சொல்லும்போது பக்தர் ஒருவர், "சுகபோகம் என்ற வார்த்தையையே பல ஆன்மீகவாதிகள் கண்டனம் செய்கின்றார்கள். ஆனால், ஒரு தியான சொற்பொழிவில் சுகத்தை முழுமையாய் அனுபவிக்கக்கூட தியானம்தான் அவசியம் எனச் சொல்லியிருக்கிறீர்கள். குழப்பமாய் இருக்கிறது... விளக்கம் அளியுங்கள்," எனக் கேட்டார்.
"உதாரணத்திற்குச் சுவையால் வரும் சுகத்தை எடுத்துக் கொள்வோம்.
இனிப்பும், காரமும் நாவை உரசுவதால் ஏற்படும் சுவை உணர்வைத்தான் அனுபவிக்கின்றோம். இது மிகவும் மேம்போக்கானது.
தியானத்தில் ஆழ்ந்து சென்றால், இந்த ரகசியத்தைக் கண்டுபிடிப்பீர்கள்... அது, 'உங்களின் நாவானது எந்தப் பொருளுமே இல்லாமல் இனித்துக்கொண்டேயிருக்கும் தன்மை பெற்றது' என்பதே.
நாவின் இந்த உயர்ந்த நுண்ணுணர்வு எழுப்பப்படாத வரையில், வெளிப்பொருள் மட்டுமே நாவின் சுவைக்கும் சக்தியைப் பொங்கச் செய்ய முடியும்.
தியான விழிப்புணர்வால் நாவின் நுண்ணுணர்வை எழுப்ப முடியும். அப்படி எழுப்பிய ஒரு ஞானியின் நாவில் 24 மணி நேரமும் சுவைக்கும் சக்தி பொங்கிக்கொண்டே இருக்கும்.
இவருக்கு நீர்கூட இனிமையாய் இருக்கும், திருப்தியைத் தரும். ஆனால், சாதாரண மனிதருக்குப் பல இனிப்புகள்கூடத் திருப்தியைத் தராது. இனிப்பைச் சாப்பிட்டு முடிக்க முடிக்க நாவிலிருந்து சுவைக்கும் சக்தி மறைந்துவிடும். அங்கு ஏமாற்றமே தொக்கி நிற்கும்.
நீங்கள் இனிப்பையும்,
மசாலாவையும் விரும்பிச் சாப்பிடுவதுகூட
அந்த உணவின் சுவைக்காக அல்ல.
அந்த உணவு நாவில் உரசும்போது,
> தியான
> விழிப்புணர்வால்
> நாவின்
> நுண்ணுணர்வை
> எழுப்ப முடியும்.
நாவில் பாயும் சிறிதளவு சுவைக்கும் சக்தியை அனுபவிக்கத்தான் மனம் மீண்டும் மீண்டும் சுவைமிகு உணவுகளை நோக்கி மனத்தைத் தூண்டுகிறது. இந்த சுகம் தவறு. ஞானியின் சுக நிலையே சரி!''
“ஏன் இந்த சுகத்தை மட்டும் தவறு என்று சொல்கிறீர்கள்?''
“சுகபோகம் தவறு எனப் பலர் கண்டனம் செய்வது இந்தச் சுகத்தைத்தான். இது விளக்கேற்றுவதற்காக வீட்டைக் கொளுத்துவதற்குச் சமம்.
ஒரு யூனிட் சுவைக்கும் சக்தியை நாவில் பொங்க வைப்பதற்காக, உடல் எனும் வீட்டுக்குள் ஏகப்பட்ட குப்பைகளைக் கொட்டிவிடுகின்றார்கள் மனிதர்கள்.
எவ்வளவு சுவைமிகு உணவுகளை எடுத்துக் கொண்டாலும், மனிதரால் சில யூனிட் சுவைக்கும் சக்திக்கு மேல் அனுபவிக்க முடியாது.
இது புரியாத மனிதர் நாக்கை உரசுவதால் வரும் சுவைக்கு அடிமையாகிவிடுகின்றார். உடலைப் பாழாக்க ஆரம்பித்துவிடுகின்றார். உடல் அழிய ஆரம்பிக்கிறது.
ஆனால் ஞானிக்குள் சில யூனிட்கள் என்ற வரையறையை மீறி, ஊற்றுபோல் சுவைக்கும் சக்தி பொங்கிக் கொண்டேயிருக்கும்.
அப்படிப் பொங்கினால் மட்டுமே சுவைக்கு அடிமையாவதிலிருந்து விடுபட முடியும். அப்போது மட்டுமே உடலுக்குத் தேவையான அளவு உணவை மட்டும் எடுத்துக்கொள்ள முடியும். அந்த உணவின் ஒவ்வொரு துளியையும் ஆழமாய் ருசிக்க முடியும். உடலின் ஆரோக்கியம், சுகத்தினால் பாதிக்கப்படாதிருப்பது. அது இந்த நிலையில்தான் சாத்தியம்.
உடலுக்குத்
தேவையான அளவு
உணவை
மட்டும்
எடுத்துக்கொள்ளுங்கள்.
சாதாரண மனிதர்கள் ஒவ்வொரு
புலன்களின் மூலமாகவும், ஒவ்வொரு சு
கத்தை அனுபவிப்பதற்காக உடலை அழிக்கும்
கொடுஞ்செயல் முடிவுக்கு வரவேண்டும்.
ஞானிகளைப்போல 24 மணி நேரமும்
சுகத்தின் உச்சத்திலேயே வாழ்ந்து, ஐந்து
புலன்களையும் கடந்த ஆனந்த நிலையிலேயே
வாழும் இன்செயல் துவங்க வேண்டும்.
அப்போதுதான் உடலளவு சுகம்கூட அதன் முழுப்பரப்பளவிலும் நிகழும். உடலின் ஏதோ ஐந்து புள்ளிகள் மட்டும் சுகத்திற்காக ஏங்காமல், உடலின் ஒவ்வொரு புள்ளியும் சுகத்தை அனுபவித்துக் கொண்டேயிருக்கும்.
ஒவ்வொருவரும் 24 மணிநேர சுகத்தை அடைவதே இலக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்" எனப்பதில் சொல்லி முடித்தோம்.
ஐம்புலன்களை சுகத்துக்காக அழிக்கும் மனிதர், "இறைவா! என்னைக் காப்பாற்று. ஐம்புலன்களும் என்னை அழிக்கின்றன..." எனப் புலம்புகின்றார்.
நாவின் சுவைக்கும் சக்தியைப்போல், ஒவ்வொரு புலனிற்கும் உள்ள சக்திகள் விழித்துக்கொள்ள வேண்டும். அவை அவற்றின் நுண்ணுணர்வின் உச்சத்தில் இயங்க வேண்டும்.
இது நிகழ...
இப்போது 'சுகம்!' என மனிதன் நம்பும் அனைத்துமே சுகமல்ல என்ற ஆழ்ந்த புரிந்துகொள்ளுதல் நிகழ வேண்டும்.
இந்தப் புரிந்துகொள்ளுதல் மட்டும் நிகழ்ந்துவிட்டால், சுகத்திற்கு நீங்கள் அடிமையாக இருக்கமாட்டீர்கள். சுகம் உங்களுக்கு அடிமையாக இருக்கும். தியானித்துப் பாருங்கள்.