KAILASA Library/மனதைத் திற/ராஜவாழ்க்கைSign in
மனதைத் திற

ராஜவாழ்க்கை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மொத்த உடலில் ஒரு சிறுபகுதியான முகத்துக்கே மிக முக்கியத்துவம் தருகிறார்கள் மனிதர்கள்.

உடல் மெலிந்திருந்தாலும் சரி, முகம் மட்டும் அழகாயிருந்தால் போதும், பலரின் விருப்பத்திற்குரியவராக எளிதில் ஆகிவிடலாம்.

ஏன்? ஏன் மனிதர்கள் முகத்துக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவமளிக்க வேண்டும்?

பதில் காண கட்டுரையைக் கவனமாய்ப் படியுங்கள்.

மனிதர்கள் மூன்று இடங்களிலிருந்து செயல்பட முடியும். அவை:

  1. நாபி மையம் (தொப்புள் பகுதி)
  1. இதய மையம்
  1. மூளை மையம்

நாபி, இதயம், மூளை ஆகிய மூன்று
இடங்களில் ஏதாவது ஒரு இடத்திலிருந்து
மனிதர்கள் செயல்படலாம். அங்கு அவர்
இருப்பை உணரலாம்.

ஏன் மனிதர்கள்
முகத்துக்கு
மட்டும் இவ்வளவு
முக்கியத்துவமளிக்க
வேண்டும்?

நீங்கள் இந்த மூன்று மையங்களில் எந்த மையத்திலிருந்து செயல்படுகிறீர்கள் எனக் கண்டுபிடியுங்கள்.

கண்டுபிடிக்க ஒரு சிறிய பயிற்சி.

அப்படியே, இருக்குமிடத்திலேயே கண்களை மூடிக் கொள்ளுங்கள். முதுகெலும்பு, கழுத்து, தலை ஆகியன ஒரே நேர்க்கோட்டில் வரும்படி நேராய் அமர்ந்து கொள்ளுங்கள். உள்ளே உணருங்கள்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

உங்களின் எண்ணங்கள், உணர்வுகள், உயிர் இருப்பிடம், உடலின் எந்தப் பகுதியில் இருப்பதாக உணர்கிறீர்கள்?

ஒன்றுக்கு இரண்டுமுறையாவது இத்தியானத்தைச் செய்து, உங்களின் மையத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நித்யானந்த ஸ்புரண தியான முகாமில் பக்தர் ஒருவர் இப்படிக் கேட்டார், "கண்களை மூடி, நான் உள்ளே பார்க்கையில், நான் தலைக்குள் மட்டுமே இருப்பதாக உணர்கிறேன்.

என் எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தும் தலையை மட்டுமே மையம் கொண்டிருக்கிறது. தலையிலிருந்து இதய மையத்துக்கு என்னால் கற்பனையில் பிரயாணிப்பதுகூடக் கடினமாக இருக்கிறது. ஏன் இப்படி?" என்று கேட்டார்.

"அதற்குக் காரணம், உங்களின் உயிர்சக்தி மொத்தமும் மூளையால் உறிஞ்சப்பட்டிருக்கிறது.

Nithyananda

உங்களை இதய ரீதியாக வாழும்
மனிதராக மாற்றவே தியானங்களைக்
கற்றுத் தருகிறேன். தொடர்ந்து
செய்யுங்கள். ஆனந்தம் பொங்கும்
உணர்வுமிகு வாழ்வு உங்களுக்கும்

சிறுவயதிலிருந்து மூளை ரீதியாக இந்தச் சமுதாயம் உங்களை வளர்த்துவிட்டது. எனவேதான், மற்ற இரு மையங்களில் உங்களின் உயிர்ச்சக்தி மையங்கொள்ளவில்லை.

நீங்கள் மூளை ரீதியாக வாழும் மனிதர்.

உங்களை இதய ரீதியாக வாழும் மனிதராக மாற்றவே தியானங்களைக் கற்றுத் தருகிறேன். தொடர்ந்து செய்யுங்கள். ஆனந்தம் பொங்கும் உணர்வுமிகு வாழ்வு உங்களுக்கும் வித்தாகும்,” எனச் சொன்னேன்.

அவரின் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி!

வீட்டில் வாழும் மனிதரை, இன்னொரு அழகான வீடு ஈர்க்கும். காட்டில் வாழும் மனிதரை, இன்னொரு அழகான காடு ஈர்க்கும். முகத்தில் வாழும் மனிதரை, இன்னொரு அழகான முகம் ஈர்க்கும்.

மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதில்லை. முகங்கள் முகங்களோடு பழகிக் கொள்கின்றன.

இந்தக் காலத்தில் தலையில் வாழாத மனிதர், தேடினாலும் கிடைப்பது அரிது.

ஒரு மதபோதகரின் மகள், தம் தந்தைக்காகக் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்...

“கடவுளே, எங்கப்பாவுக்கு ஒரு ஜான் உள்ளே இறக்கும்... எங்கப்பாவுக்கு ஒரு ஜான் உள்ளே இறக்கும்...''

அச்சிறு பெண்ணின் தாய், மகளின்
வேண்டுதல் முடிந்து கண் திறந்த பிறகு,
அவளிடம் ஆச்சரியத்தோடு, “அதென்ன குட்டி,
ஒரு ஜான் உள்ளே இறக்கும்,” எனக் கேட்டார்.

மகள் கண்சிமிட்டிக் கொண்டே
தாயிடம் சொன்னாள், “அப்பா நல்லா
உபதேசம் செய்கிறார். ஊர்மக்கள் பலர்
புகழ்கிறார்கள். அவரின் அறிவுரையால் பலர்
திருந்தியிருக்கிறார்கள்.

உங்களின் எண்ணங்கள்,
உணர்வுகள், உயிர்
இருப்பிடம், உடலின்
எந்தப் பகுதியில்
இருப்பதாக

அவர் தலையில் இருக்கும் அவ்வளவு நல்ல விஷயங்களில் ஒன்றிரண்டு அவரோட நெஞ்சுக்கு இறங்கினால், அவர் திருந்திடுவாரே! அதனால்தான்... அப்படி வேண்டினேன்.”

நம் ஊரில் டீக்கடைகளில் வெட்டிப் பேச்சுப் பேசி நேரம் கழிப்பவருக்குக்கூட ஆன்மீகம் நிறையவே தெரிந்திருக்கிறது. இந்தியரின் இரத்த ஓட்டத்திலேயே ஆன்மீகம் கலந்துதான் ஓடுகிறது.

வாழ்க்கைக்குத் தேவையான பல உண்மைகள் தலையில் ஏறிக் கொண்டுள்ளது. அதனால்தான், வெட்டி நியாயம் பேசினால்கூட, அது மிக சுவாரஸ்யமான விவாதம் போலவே தென்படும்.

அறிந்த உண்மைகள் அனுபவமாக மாறுவதே இல்லை. விளைவு, மனிதரால் எதையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தெரிகிறது.

காதலிப்பவர்கள்கூட, மூளையில்தான் சிக்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் காதல் காலம் இனித்தது போல, கல்யாணக் காலம் இனிப்பாய்த் தொடர்வதில்லை.

ஒரு ரோஜாவைப் பார்த்தால் கூட, மனிதர்கள், அதை ரசிப்பதில்லை. அதனோடு உணர்வு ரீதியாய்த் தொடர்பு கொள்வதில்லை. “அழகு ரோஜா, சிவப்பு ரோஜா, ஈரமான ரோஜா,” என அதை வர்ணனை செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

வர்ணித்தல், ரசித்தல் அல்ல.

வர்ணித்தல் வார்த்தை ரீதியானது. மூளையை மையமாய் கொண்டு இயங்கும்போது வெளிப்படுவது. வெறுமைக்குள் மனிதனைத் தள்ளக்கூடாது.

Sadhguru

ரசித்தல், உணர்வு ரீதியானது. இதயமையம்
சம்பந்தப்பட்டது. மிக ஆழமானது. மனிதரை
ஆனந்தம் நோக்கி அழைத்துச் செல்லவல்லது.
உலகின் மன வேதனைகள் முடிவுக்கு வர...
மனிதன் தலையிலிருந்து இதயம் நோக்கி நகர

ரசித்தல், உணர்வு ரீதியானது. இதயமையம் சம்பந்தப்பட்டது. மிக ஆழமானது. மனிதரை ஆனந்தம் நோக்கி அழைத்துச் செல்லவல்லது. உலகின் மன வேதனைகள் முடிவுக்கு வர... மனிதன் தலையிலிருந்து இதயம் நோக்கி நகர வேண்டும்.

ஜொரோஸ்ட்ரிய ஞானியிடம் சீடர் கேட்டார்... “என் அன்பிற்கும், உங்களின் அன்பிற்கும் என்ன வித்தியாசம்?"

ஞானி, "என்னில் அன்பு நிகழ்கிறது. நீ அன்பு செய்கிறாய் என நினைக்கிறாய். என்னில் அன்பின் அதிர்வுகளை உணர்கிறேன்.

நீ அன்பு செய்வதாய் நினைப்பதால், மனதளவில் அதிர்கிறாய். அதை அன்பென வர்ணிக்கிறாய். அன்பை ஒரே ஒரு முறை சுவைத்திருந்தாலும்... உன்னை ஆனந்தமும், அமைதியும் ஆட்கொண்டிருக்கும்.

உன்னை அன்பு ஆட்கொள்ள... நீ உள்நோக்கி நிறைய பிரயாணிக்க வேண்டும்," எனச் சொன்னார்.

தலையிலிருந்து இயங்குபவர்கள், இதயத்திலிருந்து இயங்க ஆரம்பியுங்கள். இதயத்திலிருந்து சிந்திப்பதாய் உணருங்கள். கேட்பதுகூட, காது வழியாய் இதயத்தைச் சென்றடைவதாகவே பாவியுங்கள்.

உடலின் இயக்கங்களை, இதயத்திலிருந்தே செய்வதாகவும், இதயத்தால் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதாகவும் பாவனை செய்யுங்கள். இதயத்திற்கு உங்களை இழுத்துவரும் ஒரு நல்ல டெக்னிக் இது. நேரம் கிடைக்கும்போதெல்லாம்... ஞாபகம் வரும்போதெல்லாம், உங்களின் செயல்களிலெல்லாம் இந்தத் தியானத்தைத் தொடருங்கள்.

திடீரென ஒருநாள் தலையிலிருந்து இதயத்திற்குள் நழுவி விடுவீர்கள். குதூகலத்தோடு வாழ ஆரம்பிப்பீர்கள். ராஜ வாழ்க்கை ஆரம்பமாகும்.