மனதைத் திற
“நான்” இறக்க, “தான்” பிறக்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அதென்ன ‘நான்’...
அது வேறொன்றுமல்ல
அகங்காரமே! - மனிதரை
ஆட்டிப்படைக்கும் துர்ச்சக்தியே.
அதென்ன ‘தான்?’
ஆத்மாவே அது!
வாழ்வை
அழகூட்டிடும்
ஆனந்த சக்தியே அது.
மீண்டும் மீண்டும்
இறந்து,
மீண்டும் மீண்டும்... .
பிறந்த போதும்!
இந்த உடலிலேயே,
எந்தக் கஷ்டமுமில்லாமல்,
அந்த ஆனந்தத்தைச்
சொந்தம் கொண்டாடிட,
இவ்வுடலிலேயே
மறுபிறவி எடுத்திடுங்கள்.