மீண்டும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பிறக்க
- வாழ்வு?
ஒரு நீண்ட கனவு.
- கனவு?
ஒரு குட்டி வாழ்வு.
- இரண்டும் ஒன்றா?
ஆம்.
இரண்டுமே மாயங்கள்;
கலைந்து போகும் கனவுகள் .
கனவு 6 மணி நேரம் - வாழ்வு 60 வருடம்.
அவ்வளவு.
- பயம் என்பது?
தைரியக் குறைவு.
பயத்திலிருந்து வெளிவருவதெப்படி?
பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்.
- பயத்திலிருந்து வெளிவருவதெப்படி?
பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்.
- எது புகழ்ச்சி?
மிகைப்படுத்தப்பட்ட நிறைகள்.
- எது இகழ்ச்சி?
மிகைப்படுத்தப்பட்ட குறைகள்.
- யார் யோக்கியமானவர்?
நீங்கள் அயோக்கியத்தனம் எனச் சொல்லும் குணங்களை, அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காதவரை... அவர் யோக்கியர்!
- யார் அயோக்கியர்?
ஒருவரின் யோக்கியமான நல்ல குணங்களை, அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காத வரை... அவர் அயோக்கியர்!
- பாவம் செய்தால் நரகம் செல்வோமா?
பாவம் செய்வதால் நரகம் செல்லமாட்டீர்கள். நரகத்தில் வாழ்வதால், தவறுகளைச் செய்வீர்கள்.
- நரகத்தில் வாழ்வது என்றால்?
தினம் தினம் நோகடிக்கும் மனவேதனைகள், நரக வேதனைகளுக்குச் சமம்.

நரகத்தில் வாழ்வது என்றால்?
தினம் தினம் நோகடிக்கும் மனவேதனைகள்,
- புண்ணியம் செய்தால் சொர்க்கம் செல்வோமா?
அப்படியொரு கனவு காணாதீர்கள்.
- ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
இவ்வுலகில் ஆனந்தமாயிருக்க முடியாதவரால், மறுவுலகில் மட்டும் ஆனந்தமாயிருக்க முடியும் என நம்புவது கனவன்றி வேறென்ன!
- புண்ணியங்களுக்கும், சொர்க்கத்துக்கும் சம்பந்தமே இல்லையா?
“சொர்க்கம் கிடைக்கும்!” என எதிர்பார்த்து புண்ணியங்கள் செய்தால், அது தானமல்ல... அது ஒரு கவுரவமான பிஸினஸ் மட்டுமே.
- அப்படியென்றால், சொர்க்கம் செல்ல வழி?
எதிர்காலத்தில், எங்கோ ஓரிடத்தில் கிடைப்பதல்ல சொர்க்கம். அது இருப்பது நிகழ்காலத்தில். தொடர்ந்து அதை நழுவ விடுகிறீர்கள்.
கண்டுபிடியுங்கள்... கண்டுகொள்வீர்கள்.
- யார் வாலிபர்?
மாறாத குதூகலத்தோடிருக்கும் கிழவர்கூட, வாலிபர்தான்.
- யார் கிழவர்?
குதூகலமில்லாதவர், வாலிபரானாலும் அவர் ஒரு கிழவரே!
- குதூகலம் பெருக வழி?
உற்சாகம் பெருக வழி.
- விழி என்றால்... .
சோம்பல் எட்டிப்பார்க்க அவகாசம் தராத அளவுக்கு வாழ வேண்டும் என அர்த்தம்.
- ஆசை?
ஓசையில்லாமல் வாழும் ஓர் உயிர்.
- என்ன அது ஓர் உயிரா?
ஆம்! மனிதர் செத்த பின்னும் வாழ்வது ஆசை!
- செத்தபின் என்றால்?
ஒரு மரணத்திற்கும், அடுத்த ஜனனத்திற்கும் இடையில், ஆசைகளின் தொகுப்பாய் மிதந்து கொண்டிருப்பீர்கள்
- அதிர்ஷ்டம்?
அது அதன் இஷ்டப்படி வருவது.
- துரதிர்ஷ்டம்?
அது உங்களின் இஷ்டப்படி வராதது. அந்த எல்லாவற்றையும் இந்தத் தலைப்புக்கு கீழ் சொல்வீர்கள்.
- அதிர்ஷ்டத்தை ஈர்க்க வழி?
உங்களின் இஷ்டங்களைச் சரி செய்யுங்கள். துரதிர்ஷ்டங்களைக்கூட அதிர்ஷ்டங்களாக்கும் சக்தியைப் பெறுவீர்கள்.

விழி என்றால்... .
சோம்பல் எட்டிப்பார்க்க அவகாசம் தராத அளவுக்கு வாழ வேண்டும் என அர்த்தம்.
- இஷ்டங்களைச் சரி செய்வதென்றால்,..?
குறுகிய வட்டத்தில் வாழும் மனத்தை விசாலமாக்குவது.
- எப்படி?
தியானப் பாதை அதற்கு வழிகாட்டும்போது... நீங்கள் விரும்பினால்!
- உங்கள் பிறப்பின் நோக்கமென்ன?
முதலில் இக்கேள்வியை உங்களிடம் கேளுங்கள், பின் பதில் காணுங்கள்.
- “நீங்கள் கடவுள் என நிரூபிக்கப் பிறப்பெடுத்தீர்களா?
இல்லை “நீங்கள் கடவுள்!” என நிரூபிக்க.
- உங்களின் பிறந்தநாள் செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உடலிலேயே இன்னொரு முறை பிறக்க வேண்டும் என்பதே!