KAILASA Library/மனதைத் திற/மரணம் ஆனந்தத்தின் வாசல்Sign in
மனதைத் திற

மரணம் ஆனந்தத்தின் வாசல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • உங்களைப் பொறுத்தளவு மரணம் என்பது என்ன?

க்ஷண நேரம் ஆனந்தத்தின் வாசல் திறக்கப்படும் காலம்.

  • மரணத்தில் என்ன நிகழ்கிறது?

உடல் இறக்கிறது.
உயிர் பிறக்கிறது.
மனம் துடிக்கிறது.
இம்மூன்றையும் ஓய்வாய்,
ஆத்மா வேடிக்கை பார்க்கிறது.

  • மதங்கள் மரணத்தின் ரகசியத்தை மறைத்தது ஏன்?

முதிர்ந்த மதங்கள் மறைத்ததில்லை. மறைத்த மதங்கள் முதிர்ந்தவையல்ல.

உங்களைப் பொறுத்தளவு
மரணம் என்பது என்ன?
க்ஷண நேரம் ஆனந்தத்தின்
வாசல் திறக்கப்படும் காலம்.

  • முதிர்ந்த மதங்கள் மரணத்தை எப்படி அணுகுகின்றன?

முதல் விஷயம் மரணத்தைக் காட்டிப் பயமுறுத்தமாட்டார்கள். அடுத்தது, மரணத்தின் ரகசியங்களை ஞானமாகவும், தியானமாகவும் மாற்றித் தருவார்கள்.

  • இறந்ததும், நாம் அழிந்து விடுவோமா?

அழியமாட்டார்கள். அலைவார்கள்.

  • அலைவார்கள் என்றால்...?

உடலில்லா உயிர், உடல் தேடி அலையும்.

  • மரணத்தை ஆனந்தத்தின் வாசல் என நீங்கள் சொல்வது ஏன்?

தூக்கம் உற்சாகத்தின் வாசல். தூக்கத்தில், உடல் ஓய்வெடுத்துக் கொண்டு, அடுத்த நாளைச் சந்திக்கத் தயாராகிறது. அதுபோல, மரணத்தில், அடுத்த பிறவியைச் சந்திக்கத் தயாராகிறீர்கள். தூக்கம் சக்தியைத் தருகிறது. மரணம் புத்தியைத் தருகிறது.

  • மரணம், வாழ்வு பற்றி?

சாக பயப்படுபவர்கள் வாழவும் பயப்படுவார்கள்.

வாழ்வும், சாவும், வாழ்க்கைச் சக்கரத்தின் இரு விளிம்புகள். இனிமையாய் முழுமையாய் வாழ்ந்துவிட்டால்,

portrait

வாழ்வும், சாவும், வாழ்க்கைச் சக்கரத்தின்
இரு விளிம்புகள்.
இனிமையாய், முழுமையாய் வாழ்ந்துவிட்டால்,
சாவு இனிமையாகிவிடும்.

சாவு இனிமையாகிவிடும்.

  • இனிமையாய், வாழ வழி என்ன?

நித்ய தியானம் ஒரு சிறந்த வழி.

  • மரணத்திற்கு முன் செய்ய வேண்டியவை என்னென்ன?

எதுவும் எடுத்துச் செல்ல முடியாது என்பதால், கர்மங்களைப் சேர்ப்பதை விட்டு விட்டு, கர்மங்களைக் கழிப்பது பற்றிச் சிந்தியுங்கள்.

  • கர்மங்களைக் கழிப்பதால் என்ன பலன்?

கர்மங்கள் எனப்படும் சம்ஸ்காரங்கள்தான், இனிமையான மரணத்தைக் கொடுமையான மரணமாக்கிவிடுகிறது.

  • சம்ஸ்காரங்கள் அவ்வளவு கொடுமையானவைகளா?

வளர்ந்த நகத்தை வெட்டினால் வலிக்காது. சதையோடு இருக்கும் நகத்தை வெட்டினால்... என்ன ஆகும்!?

சதையையும், நகத்தை இணைப்பது போல் உடலையும், உயிரையும் இணைப்பவை இந்த சம்ஸ்காரங்கள்.

சம்ஸ்காரங்களின் பிடி தளராவிட்டால், மரணகாலத்தில், உடலும் உயிரும் ஒன்றையொன்று பிரிய மகா அவஸ்த்தைக்குள்ளாகும்.

  • சம்ஸ்காரங்கள்?

வினைப்பதிவுகள். அதாவது, மனதில் எழுதப்பட்ட நினைவுகள். அவை, உடலில் வாழும் ஆசைகள், கோபங்கள், வலிகள், உணர்ச்சிகள், சுகங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.

  • மரணத்திற்கும், அடுத்த ஜனனத்திற்கும் இடையில் எப்படி இருப்பேன்?

இனிமையாய் வாழ வழி என்ன?

நித்ய தியானம் ஒரு சிறந்த வழி.

ஆசைகளின் தொகுப்புகளாய், சம்ஸ்காரங்களின் தொகுப்புகளாய் உருவமற்ற சக்தியாயிருப்பீர்கள்.

  • ஆனந்தத்தின் வாசலை மரணத்தால் சந்திக்கிறோம் என்பதற்கு நிரூபணம் அல்லது விளக்கம் தர இயலுமா?

நிச்சயமாய்.

துக்கத்தின், வேதனையின் உச்சியில் உயிரை விடும் எல்லா மனிதர்களும், ஆனந்தமயமான குழந்தைகளாகப் பிறப்பதே அதற்கு ஆதாரம்.

குழந்தைகளும் ஞானிகளும் ஒன்றே. பெண்வீட்டுச் சீர் போல,

கடவுள் வீட்டுச் சீராக, மிதமிஞ்சிய ஆனந்த சக்தி, நம்மோடு அனுப்பப்படுவதால்தான், ஞானிகளுக்கு இணையாக குழந்தைகளும் ஆனந்தமாயிருக்கிறார்கள்.

  • மனிதர்கள், மிதமிஞ்சிய ஆனந்த சக்தியை மரணத்திற்குப் பின் சந்தித்தாலும், சாகும்போது எல்லோரும் படாதபாடுபட்டுத்தானே இறக்கிறார்கள்? இது ஏன்?

ஏற்கனவே குறிப்பிட்டது போல், உடலும் உயிரும் சம்ஸ்காரங்களால் பிணைக்கப்பட்டிருப்பதுதான் காரணம்.

  • மரணத்தில்...

நோயுற்று நொந்த உடல் “இனி என்னால் உன்னோடு வாழ முடியாது," என உயிரை விடுகிறது.

"ம்... ம், முடியாது.

portrait of a man with turban

சம்ஸ்காரங்கள்?
வினைப்பதிவுகள். அதாவது,
மனதில் எழுதப்பட்ட நினைவுகள்.
அவை, உடலில் வாழும் ஆசைகள்,
கோபங்கள், வலிகள், உணர்ச்சிகள், சுகங்கள்.

இன்னும் உலகத்தில் அனுபவிக்க வேண்டிய ஆசைகள் நிறைய இருக்கிறது," என ஒவ்வொரு சம்ஸ்காரமும் உடலைவிட மறுக்கிறது. அதனால், வெளியே போகும் உயிரையும் அவை நிம்மதியாய் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை.

அவை, பிரிந்து கொண்டிருக்கும் உடலையும், உயிரையும், இணைக்க முயற்சிக்கின்றன.

அப்போது, உயிரின் உணர்வுகள் கிழிக்கப்படுவதால், மனிதர்கள் உயிரை விட, படாதபாடுபடுகிறார்கள்.

எப்படியோ பாடுபட்டு உடலை விட்டுப் பிரிந்த உயிர், அடுத்த உடலை எடுக்கும் இடைவேளையில், ஆனந்த சக்திக்குள் முங்கி எழுந்திருக்கிறது. உயர்ந்த விழிப்புணர்வைத் தெரிந்துகொண்டு பறக்கிறது.

எனவேதான் குழந்தைகள் அவ்வளவு ஆனந்தமாய், அழகாய், அருமையாய் இருக்கிறார்கள்.

“வேதனையில்லாத இனிமையான மரணத்தை எல்லோர்க்கும் கிடைக்கும்படி வழிவகை செய்ய முடியுமா?” என்று மருத்துவரொருவர் கேட்டபோது...

“முடியும்,” என்றேன்

“என்ன வழி அது?”

“அந்த வழியைச் சொல்ல நான்கு நாளாவது ஆகுமே...”

“சின்ன வழி அல்லது சின்ன தியானம் ஏதாவது எங்களுக்கு சொல்லித்தர முடியுமா?”

"ஓ! அப்படிக் கேட்கிறீர்களா?

இது வரை சேர்த்து வைத்த சம்ஸ்காரங்களை ஆழ ஆராய்ந்து, அவற்றைத் தூக்கி எறியுங்கள்.

புதிய சம்ஸ்காரங்களைச் சேர அனுமதிக்காதீர்கள். முழு விழிப்புணர்வோடு வாழுங்கள்.

இது இரண்டை மட்டும் செய்யுங்கள். நான்கு நாட்கள் செலவு செய்து NSP தியான முகாமில் கலந்து, பெற்றுக்கொள்ளும் ஆனந்தமயமான மரணம் வாய்க்கும்," எனச் சொல்லி முடித்தோம்.

உங்களின் மரணத்தை இனிமையாக்க உதவும் இந்தத் தியானத்தை முழுச் சிரத்தையோடு செய்யுங்கள்.

மனம் ஒரு எதிரியா?

-வருண், ஹைதராபாத்

எதிரியல்ல.

எதிராய்ச் செயல்படும்படி ஏவப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டிருக்கிறது.