KAILASA Library/மனதைத் திற/வலி நிவாரணிSign in
மனதைத் திற

வலி நிவாரணி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“அன்று பெங்களூரில் தியான சத்சங்கம்.

நாங்கள் சென்ற வாகனம் கோளாறாகிவிட்டதால், ஆஸ்ரமத்திற்குத் திரும்ப வர, பக்தர் ஒருவர் தம்முடைய காண்டஸா காரில் வரும்படி கேட்டுக் கொண்டார்.

எனவே, காண்டஸா காரில் ஏறி உட்கார்ந்தபடி, அங்கேயிருந்த பக்தர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தோம்.

காரின் பக்கவாட்டில் இருந்து கையை எடுப்பதற்குள், காண்டஸாவின் கதவு சாத்தப்பட்டது. கதவிடுக்கில் சிக்கிய கட்டைவிரல், ‘சதக்!’ என நசுங்க, இரத்தம் வடிய ஆரம்பித்தது.

வலியும், எரிச்சலும் அந்த இடத்தில் அதிகரித்துக்கொண்டேபோனது. கொஞ்ச நேரத்திலேயே, அந்த எரிச்சலும், வலியும் மறைந்துபோனது. உடனே அடுத்தடு த்த வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டோம்," என்று ஆஸ்ரமத்து பிரம்மச்சாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னோம்.

ஒரு பிரம்மச்சாரி, “கொஞ்ச
நேரத்திலேயே வலி மறைந்த ரகசியத்தை
எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்,” என
ஆர்வமாய்க் கேட்டார்.

“ரகசியமெல்லாம் எதுவுமில்லையப்பா. யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்,”

கொஞ்ச
நேரத்திலேயே வலி
மறைந்த ரகசியத்தை
எங்களுக்கும்
சொல்லிக்
கொடுங்கள்...

“அவ்வளவு எளிய டெக்னிக்கா அது?”

“வெறும் டெக்னிக் அல்ல அது. தியானம்.

கட்டை விரல் நசுங்கியதும், நசுங்கிய இடத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டேன். என்ன ஆச்சரியம்! உடலின் மொத்த சக்தியும், வலி பொங்கும் இடம் நோக்கித் திரண்டோடியது.

கலவரமிருக்கும் இடம் நோக்கி விரையும் அவசர போலீஸ் போல, உடலின் சக்தி அங்கே சென்றதும், வலி குறைய ஆரம்பித்தது. சக்தி பாயப், பாய, வலி குறைந்தது.

மீண்டும் வலி அதிகரித்தது. உடனே சக்தி பாய்ந்தது. வலி குறைந்தது.

இப்படி மீண்டும், மீண்டும் சிலமுறைகள் நடந்தன. அப்புறம் வலி என்னைத் தொந்திரவு செய்யவே இல்லை.

நானும் வலியை விட்டுவிட்டேன். வலியும் என்னை விட்டுவிட்டது.”

“எங்களின் உடலில் அடி ஏற்படும்போது, இப்படி நிகழ்வதில்லை. வலி இருக்குமிடத்திற்கு சக்தி பாய்வதில்லையே. ஏன்?”

“வலி இருக்கும் இடத்திற்கு சக்தி பாயும் என்பது இயற்கை.

ஆனால், கவனித்தல் எனும் தியானநிலையில் இருக்கும்போதுதான், உங்களின் விழிப்புணர்வு விழித்துக் கொள்கிறது. இந்த விழிப்புணர்வுதான் மொத்த சக்தியையும் திரட்டி எடுத்துவந்து, சில நிமிடங்களுக்குள் அந்த இடத்தைக்

portrait

ஒவ்வொரு மனிதரும் தம்முடைய உடலைக்
குணப்படுத்திக் கொள்ளத் தேவையான ச
க்தியையும், மனத்தைக் குணப்படுத்திக்
கொள்ளத் தேவையான புத்தியையும், கையோடு
எடுத்துக் கொண்டுதான் பூமிக்கு வருகிறார்.

குணப்படுத்துகிறது.

விழிப்புணர்வு மிகாவிட்டால் சக்தி எழாது; வலி அகலாது.

வலி வேதனையாக மாறும் நிகழ்வையே இந்த குணமளிக்கும் சக்தி துண்டித்து விடுகிறது. எனவேதான், விழிப்புணர்வை மாபெரும் குணமளிக்கும் ச க்தி என்றழைக்கிறோம்,'' எனச் சொல்லி முடித்தோம்.

இதேபோல் உங்களுடைய மனவலிகளையும் குணப்படுத்தலாம்.

ஒவ்வொரு மனிதரும், தம்முடைய உடலைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான சக்தியையும், மனத்தைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தியையும், கையோடு எடுத்துக் கொண்டு தாம் பூமிக்கு வருகிறார்.

ஆனால், இங்கு வந்த பின்புதான், அவற்றைப் பயன்படுத்த மறந்துவிடுகிறார். அத்தோடு நில்லாமல், தாம் அவற்றை எடுத்து வந்தோம் என்பதைக்கூட அடியோடு மறந்துவிடுகிறார்.

சாலை என்றால் மேடு - பள்ளங்கள் இருப்பது சகஜம். வாழ்க்கை என்றால் சில ஏமாற்றங்கள், சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும். தவிர்க்க முடியாதவை அவை. ஆனால், அதனால் ஏற்படும் தொடர் மனக்கஷ்டங்கள், மனச்சோர்வுகள், மன அழுத்தங்களைச் சரி செய்யலாம்.

விரல் நசுக்கப்பட்டபோது செய்த அதே கவனித்தல் எனும் தியானச் செயலைச் செய்தால், சக்தி திரண்டு உடல் காயத்தைக் குணப்படுத்தியது போல, புத்தி திரண்டு மனக்காயத்தைக் குணப்படுத்தும்.

வலி மறைந்து பரவசம் பெருகுவதோடு, அந்தப் பிரச்சினையே சரியாகிவிடும்.

இந்தத் தியானம், வலி நிவாரணி மட்டுமல்லாமல், பரவச தாரணி தியானமும்கூட, மேலும், இந்தத் தியானம் உள்ளிருக்கும் மருந்தை உடனடியாய் எடுத்துத் தரும் தியானம்.

கவனித்தல் எனும்
தியானச் செயலைச் செய்தால்,
சக்தி திரண்டு உடல்
காயத்தைக் குணப்படுத்தியது
போல, புத்தி திரண்டு
மனக்காயத்தைக்