வலிகளை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு ஜென் ஞானியின் முதுகில் ஒரு பெரிய கட்டி இருந்தது. பார்ப்பவரெல்லாம் அதற்காகக் கண்ணீர் வடித்தார்கள்.
ஞானியைப் பார்க்க வந்த அரசர் கேட்டார், "குருவே, ரொம்ப வலிக்கிறதா?" என பக்தியோடு கேட்டார்.
ஞானி சொன்னார்: "அப்பா... வலியிருக்கிறது. ஆனால், வேதனையில்லை."
"வலி வேறு, வேதனை வேறு!,"
ஒரு சின்ன உதாரணம் சொன்னால், இன்னும் ஆழமாய்ப் புரிந்து கொள்ளலாம்.
குழந்தை ஒன்று, கால் தவறி கீழே விழுந்ததும் சுற்றி முற்றிப் பார்க்கும்.
வலி வேறு, வேதனை வேறு,
வலி சரி, வேதனை தவறு.
"அய்யோ! என் கண்ணே விழுந்துட்டியா," என பதறியடிக்கும் உறவினர் ஒருவர் இருந்தால், "ஓ!" என அழ ஆரம்பித்து விடும்.
தூக்கிவிட யாம் இல்லாவிட்டால், கீழே விழுந்த குழந்தை, தானே எழுந்து சென்றுவிடும். வலிக்கும் இடத்தைத் தானே தடவிக் கொடுக்கும்.
குழந்தையின் உடலில் ஏற்பட்டது வலி. அதை நினைத்து, நினைத்து ஒப்பாரி வைப்பது வேதனை.
யூத் கிளப் புரோகிராமிற்கு வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவர், மனவலி, மனவேதனை பற்றிய தியான சொற்பொழிவில், "எங்களுக்குப் புரியும்வகையில் இந்தக் கருத்தை விளக்குங்கள்," எனக் கேட்டுக் கொண்டார்.
உடனே, "காதல் தோல்வி, வலி; அதை நினைத்து தாடி வளர்ப்பது, வேதனை," எனச் சொன்னோம். கேள்வி கேட்டவர் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.
உடலில் அடி விழுந்தால், காயம்; அதே அடி, மனதில் விழுந்தால், மனக்காயம்.
இரண்டு காயமும் சில நாட்களுக்குள் ஆறிவிடக் கூடியவையே. உதாரணத்திற்கு விளையாடும்போது பலமுறை அடிபட்டிருப்பீர்கள். ஆழமான காயங்கள்கூட ஏற்பட்டிருக்கும். இப்போது யோசித்துப் பார்த்தால், அந்தக் காயங்கள் நினைவில்கூட இருக்காது.
அதேபோல் சில சமயங்களில் யாராவது நம்மைக் கடுமையான வார்த்தைகளால் சாடும்போது மனக்காயங்கள் ஏற்படும். ஆனால் இப்போது அதை நினைத்துப் பார்த்தால், அட இந்தச் சின்ன வார்த்தைகளையா நாம் சீரியஸாக எடுத்துக்கொண்டோம். இதற்காகவா வருத்தப்பட்டோம் என ஆச்சரியப்படு வோம்.
இவை வலிகள்.
ஆனால், எப்போதோ உங்களின் கன்னத்தில் விழுந்த அறை, இப்போதுகூட அடிக்கடி நினைவுக்கு வரும். மனத்தை வருத்திக் கொண்டேயிருக்கும்.

வேதனையிலிருந்து விடுபடுவது எப்படி?
வேதனை தரும் எண்ணங்களை விடுங்கள். விடுபடுவீர்கள்.
எப்போதோ யாரோ சொன்ன சில வார்த்தைகளை இப்போது நினைத்தாலும் மனம் கனத்துப்போகும், கவனித்திருக்கிறீர்களா? இவைதான் வேதனைகள்.
வலி சரி; வேதனை தவறு.
வலி இயற்கை;
வேதனை செயற்கை.
வேதனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டாலே போதும், கஷ்டம் என்ற வார்த்தைக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இருக்காது.
வேதனை என்பது, மனதால் திரும்பத் திரும்பக் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்பு.
ஓர் உருட்டுக்கட்டை உடலில் ஏற்படுத்தும் காயத்தைவிட, ஒரு ஆழமான காயத்தை, மனத்தைத் தைக்கும் சில வார்த்தைகள் ஏற்படுத்திவிடும்.
மனத்தைத் தைத்த வார்த்தைகளை அப்போதே விட்டுவிட்டால், சிறுவலியோடு அவை மறைந்துவிடும்.
அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டால், மனதில் சிக்கிய வார்த்தைகள் சீழ் கோர்க்க ஆரம்பித்துவிடும். காதுக்குள் நுழைந்துவிட்ட எறும்புபோல, அவை கொட்டிக் கொண்டேயிருக்கும். நீங்காத மன வேதனைகளோடு மனிதன் வாழ ஆரம்பிப்பது இதனால்தான்.
ஆனந்த வாழ்வு பயிலும் மாணவர் ஒருவர், “வேதனையிலிருந்து விடுபடுவது எப்படி?” எனக் கேட்டார்.
“வேதனை தரும் எண்ணங்களை விடு. விடுபடுவாய்,” எனச் சொன்னோம்.
வலி இயற்கை;
வேதனை செயற்கை.
சிரத்தையோடு செய்த மாணவரும், அதிலிருந்து விடுபட்டார், வெகு சீக்கிரத்தில்.
எப்போதோ வாங்கிய அடி ; யாரோ சொன்ன வார்த்தை ; எங்கோ நிகழ்ந்த அவமானம், போன்ற சில விஷயங்களை ஏதோ ஒரு பிடிவாதக் குணத்தால் மீண்டும், மீண்டும் மனதில் Replay செய்து பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்.
இந்தச் செயலை நிறுத்துவதைத்தான் ‘விடுபடுதல்’ என்கிறோம். இது நிகழ்ந்தால், வேதனை, உடனடியாக நிறுத்தத்திற்கு வந்துவிடும். வேதனைகள் அனைத்தும் அந்த நொடியே பறந்துபோகும்.
“சிறுவலியை, பெரிய வேதனையாக மாற்றுவது எது?” என அந்த ஆனந்த யோகா மாணவர் கேட்ட போது சொன்னோம்...
அதற்குக் காரணம், ‘சமுதாயம்’.
“என்னுடைய சிறுவயதிலிருந்து இப்போதுதான் முதல்முறையாக, வலி, வேதனை என்ற இரண்டு இருக்கும் உண்மையே தெரிய வருகிறது.
எனக்கே தெரியாத ஒன்றைச் சமுதாயம் எப்படி எனக்குக் கற்றுத் தந்திருக்க முடியும்?”
“வெளியே இருக்கும் சமுதாயமல்ல. உள்ளே இருக்கும் சமுதாயம்தான், வலியை வேதனையாக மாற்றுகிறது?”
“எப்படி?”
“நாம் எப்போதெல்லாம் புலம்புகிறோமோ, அப்போதெல்லாம் ஆறுதல் கிடைக்கிறது.
அழும்போதெல்லாம் அரவணைக்கப்படுகிறோம். நோய்வாய்ப் படும்போதெல்லாம் பாசத்தோடு கவனிக்கப்படுகிறோம்.
மனதில் வாழும் இந்த மனிதர்களின் நினைவுகள்தான், உள்ளிருக்கும்

வலியை வேதனையாக மாற்றும் இன்னொரு
முக்கியமான காரணி - அகங்காரம்.
இது சிறு அடியையும் பெரிதாக்கிக் காட்டும்
பூதக் கண்ணாடி. வேதனையிலிருந்து நம்மைக்
காப்பாற்றிக்கொள்ள, இதனிடமிருந்தும்
உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
சமுதாயம். அது, புலம்புவது அழுவது போன்றவற்றை மற்றவர்களிடமிருந்து அன்பைப் பெறுவதற்கான வழிமுறைகள் என ஆழ்மனதில் பதிய வைக்கின்றன.
திரும்பத் திரும்பப் புலம்புவது, அழுவது என்பதெல்லாம் தொடர்ந்து நிகழும் நிகழ்வாக மாறிவிடுகின்றன. விளைவு...
திரும்பத் திரும்ப எதையாவது மனதில் அசைபோடுவது என்பது இயல்பாகிவிடுகிறது. மனம் அசைபோடும்போது அது, வேதனையாகிறது எனச் சொன்னோம்.
வலியை வேதனையாக மாற்றும் இன்னொரு முக்கியமான காரணி
- அகங்காரம். இது சிறு அடியையும் பெரிதாக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி. வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, இதனிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
வள்ளுவர்.
தீப்புண் ஆறும்முன்பே, நாவினால் ஏற்பட்ட மனக்காயம் ஆறிவிடும்.
அகங்காரம் இல்லாதவருக்கு
ஜென் ஹைக்கூ
வேதனையிலிருந்து விடுபடுபவரிடம்
பெரிய வலிகூட எடுபடாது?
வேத ரகசியம்.
கடைசியாய் சில வார்த்தைகள்...
"விடுபடுங்கள்
துன்ப வடுகூட இருக்காது,"
டி. வி. சுவிட்சை அணைப்பதுபோல், மனதின் இந்தச் செயலை அணைத்துவிடுங்கள். நிம்மதி பொங்க ஆரம்பிக்கும் முயன்று பாருங்கள். சாத்தியமே.