KAILASA Library/மனதைத் திற/எங்கும் எதிலும்,Sign in
மனதைத் திற

எங்கும் எதிலும்,

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சுகமாய் இருக்கலாம்

சுகங்கள் மூன்று வகைப்படும்...

1. உடலளவு சுகம்.

2. மனதளவு சுகம்.

3. உயிரளவு சுகம்.

பெரும்பாலான மனிதர்கள் உடலளவு சுகத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டு விடுகின்றார்கள். இதைத் தாண்டுவதேயில்லை.

அப்படித் தாண்டுபவர்கள் மனதளவு சுகத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

கேசவ ரிஷியிடம், “ஐம்புலன்
மயக்கத்தைத் தாண்டிய மயக்கம் இருக்கிறதா?”
என சீடரொருவர் கேட்டபோது...

ஒரு மனிதர் உருப்படியாய்,
ஒரு புதுக்கோணத்தில்
சிந்திப்பதற்கே புலன்களின்
கட்டுக்களில் இருந்து
விடுபட வேண்டும்.

ரிஷி : “இருக்கிறது,”

சீடன் : “என்ன அது?”

ரிஷி : “புகழ்”

ஒரு மனிதர் உருப்படியாய், ஒரு புதுக்கோணத்தில் சிந்திப்பதற்கே, புலன்களின் கட்டுக்களில் இருந்து விடுபட ே வண்டும்.

உணவு, உறக்கம், கனவு, பாட்டு என சின்னச் சின்ன உடலளவு சுகங்களைத் தாண்டி முன்னேறுபவர்களால்தான் சாதனையாளர்களாக உருவெடுக்க முடிகிறது.

சாதனையாளராக மாறுவதற்கான தகுதி பெறும்போதுே, அடுத்தகட்ட மயக்கமான பேர், புகழ், பதவி எனும் மன சுகத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டிய சுகம் ஒன்று இருக்கிறது. அதுதான் உயிரளவு சுகம். இது உணர்ச்சிகளையும் தாண்டியது. முழுக்க முழுக்க உணர்வுப் பூர்வமானது.

எப்போதும் நீங்காத, எதனாலும் குறையாத,

இனிமையான உணர்வைப் பெறத்தான், புத்தர் வீட்டைவிட்டு காட்டுக்குப் போனார். இறுதியில் அதைத்தான் அவர் அடைந்தார்.

ஒரு புத்த பிட்சுவிடம், “புத்தர் 10,000 புத்தர்களை உருவாக்கியது நாட்டுக்குள்தான். காட்டுக்குள் அல்ல.

நாட்டுக்குள்ளேயே ஞானமடைவது சாத்தியம் எனும்போது, புத்தர் மட்டும்தான் ஞானமடைய நாட்டைவிட்டு காட்டுக்குப் போக வேண்டிய அவசியமென்ன?” என பேராசிரியர் ஒருவர் கேட்டதற்கு,

“10,000 பேருக்கு ஒரு புத்தர் கிடைத்தார். ஆனால் அந்த புத்தருக்கே ஒரு புத்தர் கிடைக்கவில்லை. நாட்டுக்குள்ளேயே முடியும் எனச் சொல்ல, புத்தருக்குமுன் ஒரு புத்தர் இல்லையே,” எனச் சொன்னாராம்.

portrait

உணவு, உறக்கம், கனவு, பாட்டு என
சின்னச் சின்ன உடலளவு சுகங்களைத்
தாண்டி முன்னேறுபவர்களால்தான்
சாதனையாளர்களாக உருவெடுக்க

"உடலளவில் இனிமையைத் தரும் ஆடம்பர வாழ்வையும், மனதளவில் இனிமையைத் தரும் அரசாட்சியையும், குடும்பத்தையும் துறந்து, உயிரளவில் இனிமையைத் தரும் ஆனந்தத்தை, இருக்குமிடத்திலேயே அடையலாம்," எனச் சொல்ல, ஒரு குரு புத்தருக்கு இருந்திருந்தால், புத்தர் நாட்டிலேயே ஞானமடைந்திருப்பார்... என்ற உண்மையை மீகுக தியானமுகாமில் சொல்லிக்கொண்டிருந்த போது...

பக்தரொருவர் எழுந்து, "புத்தருக்குதான் புத்தன் இல்லை. ஆனால், நமக்குதான் புத்தரின் போதனைகள் இருக்கின்றனவே. இருந்தும் நாங்கள் ஏன் ஞானமடையாமல் தினசரி வாழ்வை நகர்த்தவே கஷ்டப்படுகிறோம்?" எனக் கேட்டார்.

அதற்கு, "நீங்கள் மட்டுமில்லங்க. 2000 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முன்புவரை, நான்கூட உங்களைப் போல் சிந்தித்ததுண்டு."

பக்தர், "அதென்ன, 2000 ஜனவரி ஒன்று முன்பு வரை."

"அப்போதுதான் ஞானமடைந்தோம். ஞானமடைவது என்பது நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் நிகழ்ந்த ஒன்றுதான்."

"அப்படியென்றால் 1978ல் பிறந்த நீங்கள், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழக்கூடிய ஞானத்தைப் பெற, 2000 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது எதனால்?"

"10,000 சாவிகள் இருந்ததுதான் காரணம்,"

"10,000 சாவிகளா?"

"சிவன், கிருஷ்ணர், புத்தர், ராமகிருஷ்ணர், ரமணர் என நூற்றுக்கணக்கான ஞானிகள், மனப்பூட்டைத் திறப்பதற்கு, நூற்றுக்கணக்கான சாவிகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

மனமெனும் பூட்டை திறக்கத் ஒருநொடிதான் ஆகுமென்றாலும், நூற்றுக்கணக்கான சாவிகளிலிருந்து சரியான சாவியைத் தேர்வு செய்ய

நொடிக்குள்
ஞானம் உங்களுக்கும்
சாத்தியமே.

காலம் பிடிக்குமே.

2000 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு சாவியாகப் பரிசோதித்து, பரிசோதித்து சரியான சாவி எது எனக் கண்டுபிடிக்கவே சரியாயிருந்தது.

கண்டுபிடித்ததும் திறக்க ஒரு நொடியே நீளம்தான்.

இந்தக் காலத்து மனத்தைத் திறப்பதற்கான சாவியைக் கண்டுபிடித்துவிட்டோமே! இனியும் கவலை ஏன்?!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்தச் சாவியை வாங்கித் திறக்க வேண்டியதுதான்.

நொடிக்குள் ஞானம் உங்களுக்கும் சாத்தியமே.

இருக்குமிடத்தில், உயிரளவில் இனிமையை அனுபவிப்பது என்பது, உங்களுக்கும் எளிதாய் கிடைக்கக் கூடியதே! ஆயிரம் சாவிகளையும் பரிசோதிக்கும் வேலை, உங்களுக்கு இல்லை" எனச் சொல்லி முடித்தோம்.

வாழ்க்கை ஞானம் என்பது, "அனுபவிக்கிறேன்!" என்ற பெயரில் உடலிலும் மனதிலும் மட்டுமே சிக்கிக் கொள்வதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுதான்.

புவியீர்ப்பு விசையின் எல்லைக்குள், ஒரு பொருளை எவ்வளவு தூரம் எறிந்தாலும், அது உடனே பூமிக்குள் இழுக்கப்படும். அதனால் பூமியை விட்டுத் தப்ப முடியாது.

அதேபோல்தான், மனஈர்ப்பு விசை. சாதாரண மனிதர் எவ்வளவுதான்

portrait of Nithyananda

வாழ்க்கை ஞானம் என்பது, ""அனுபவிக்கி
றேன்!" என்ற பெயரில் உடலிலும் மனதிலும்
மட்டுமே
சிக்கிக் கொள்வதிலிருந்து நம்மை

உயர்ந்தாலும், மீண்டும் மீண்டும் உடல்நோக்கியே இழுக்கப்படுவார்.

உடலின் மயக்கங்களுக்கும், மனதின் மயக்கங்களுக்கும் இடையே மாட்டிக் கொண்டு மாய்வதை அவரால் தடுக்க முடியாது.

ஒரு பொருள், புவி ஈர்ப்பு விசையின் எல்லையை மட்டும் தாண்டி விட்டால், அந்தப் பொருளுக்குச் சுதந்திரம் கிடைத்துவிடும். அது மிதக்க ஆரம்பித்துவிடும்.

ஒரு மனிதர், தம் மனஈர்ப்பு விசையின் எல்லையைத் தாண்டிவிட்டால், அந்த மனிதரின் ஒவ்வொரு செல்லும், ஆனந்தத்தில் மிதக்க ஆரம்பித்துவிடும்.

இந்தக் கட்டுரையைப் படித்ததுமே, "அது எப்படி, மன ஈர்ப்பு விசையைத் தாண்டுவது?" என்ற கேள்வி பிறக்கும்.

உடலளவு சுகத்திலேயே காலத்தைக் கழிப்பது, கட்டைவண்டி பிரயாணத்திற்குச் சமம். கட்டை வண்டி, அதன் சுபாவத்தாலேயே, பூமியோடு ஒட்டியே இருக்கும். மேன்மையானவற்றைப் பற்றிச் சிந்திக்கக்கூட முடியாது.

மனதளவு சுகத்திலேயே வாழ்வைக் கடத்துவது, விமானத்தில் பிரயாணிப்பதற்குச் சமம்.

எவ்வளவுதான் பறந்தாலும், இதை வைத்துப் புவிஈர்ப்பு விசையின் எல்லையைக் கடக்க முடியாது. புகழ் என்ற மாய விமானம், இன்றோ, நாளையோ, உங்களை மீண்டும் பூமியிலேயே இறக்கிவிட்டுவிடும்.

உயிரளவு சுகத்தைத் தொடுவது என்பது, ராக்கெட்டில் பறந்தால் மட்டுமே சாத்தியம். மனஈர்ப்பு விசையைத் தாண்டும் சக்தி, அப்போதுதான் கிடைக்கும்.

மன ஈர்ப்பு விசையின் எல்லையையே தாண்டச் செய்யும் சக்திமிகு ராக்கெட்தான் சங்கல்பம்.

உடலளவிலும், மனதளவிலும் மட்டுமே சிக்கிக்கொண்டிருப்பது ஒருவித நோய். அதுவொரு சிறை என்பதைப் புரிந்துகொண்டு, “மன ஈர்ப்பு விசையைக் கடந்தே தீருவேன். அதற்காக இன்றிலிருந்து உற்சாகமாய் செயல்படுவேன்,” என்ற சங்கல்பத்தை ஆழமாய் எடுத்துக் கொண்டு செயல்படுங்கள். மனதின் எல்லையைக் கடந்து விடுவீர்கள்.

மீண்டும், மீண்டும் உடல் மயக்கத்திலும், மன மயக்கத்திலும் உங்களை அமிழ்த்துவதற்காக எழும் மனஈர்ப்புகளுக்கு அடிபணிந்து செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

முழு சுதந்திரம் பெற்றுவிடுவீர்கள்.