KAILASA Library/மனதைத் திற/விழிப்புணர்வின்மை என்னும் மதுSign in
மனதைத் திற

விழிப்புணர்வின்மை என்னும் மது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அன்று முகுந்தன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தார்.

மது வாசம் தெரியாதிருக்க, பீடா போட்டுக் கொண்டு வந்திருந்த முகுந்தனால், தடுமாற்றத்தை மறைக்க முடியவில்லை. முறைக்கும் மனைவியைப் பார்த்ததும், பூனையைப் போல மெதுவாகத் தம் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, முகுந்தன், புத்தகம் படிப்பவர் போல பாவனை செய்துகொண்டிருந்தார்.

முறைத்தபடியே அறையை எட்டிப்பார்த்த முகுந்தனின் மனைவி “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்,” என்று கேட்டார்.

குனிந்த தலை நிமிராமல், “பார்த்தால் தெரியவில்லையா? நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று!,” விறைப்பாகப் பதிலளித்தார் முகுந்தன்.

அறிவுப்பூர்வமான
விஷயங்களைக்
கவனிக்கும் மேல் மனம்
மட்டுமே விழித்துக்
கொண்டிருக்கிறது. ஆழ்மனம்
விழிப்புணர்வின்மையால்

முகுந்தனின் மனைவி, “நீங்கள் நிறைய குடித்துவிட்டு வந்திருப்பது எனக்குத் தெரியும். அப்பாவிபோல கவிழ்த்து வைத்திருக்கும் தலையை நிமிர்த்தலாம் தப்பில்லை” என்றவள் தொடர்ந்து...

“நடித்த போதும், தலைகீழாகத் திறந்து வைத்திருக்கும் உங்க அப்பாவின் பழைய வெற்றிலை பாக்குப் பெட்டியை மூடிவைத்து விட்டுச் சாப்பிட வரலாம்!'' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

‘வெற்றிலைபாக்குப் பெட்டியையா இவ்வளவு நேரமாகப் புத்தகம் என்று நம்பி வீராப்பாய் அமர்ந்திருந்தேன்’ என்று நினைக்க நினைக்க முகுந்தனுக்கு அவமானமாக இருந்தது!

மதுவால் மயக்கப்பட்ட, மந்தமான மூளையால், வெற்றிலைபாக்குப் பெட்டியைப் புத்தகம் என்று நம்ப முடிந்தது.

நம் மனமும், விழிப்புணர்வின்மை என்னும் மது குடித்திருக்கிறது. மந்தமான மனம் தமக்குச் சரியென்று பட்டதெல்லாம், சரியென்று நம்பித் தொலைக்கும். அத்தோடு நில்லாமல் உடலையும் இதன் இஷ்டப்படித் தூண்டிவிடும்.

இந்த ரகசியம் புரியாத மனிதர்கள், விளக்கு நெருப்பைத் தேடிச் சென்று, தம்மை மாய்த்துக் கொள்ளும் விட்டில் பூச்சியாய் மாறிவிடுவர். தாமே வலிய தேடிச் சென்று துன்பத்திலும், துக்கத்திலும் சிக்கிக்கொள்வர்.

முகுந்தனின் மனைவி, குத்திக்காட்டாதிருந்தால், கடைசி வரை முகுந்தனுக்குத் தம் தவறு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

மேற்கூறிய சிறிய கதையின் கருத்தாழம், மிக ஆழமானது. நம் மனம் மட்டும் மயங்கியிருந்தால், பிரச்சினைகள் குறைவுதான். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அனைவருமே மயங்கியிருப்பதுதான் பிரச்சினை.

அறிவுப்பூர்வமான விஷயங்களைக் கவனிக்கும் மேல்மனம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் விழிப்புணர்வின்மையால் மிகவும் மந்தமடைந்திருக்கிறது. அதனால்தான் அறிவுப்பூர்வமாக, நாம் எதிர்பார்த்தமாதிரி,

portrait

நம் மனமும், விழிப்புணர்வின்மை என்னும் மது குடித்திருக்கிறது. மந்தமான மனம் தமக்கு சரியென்று பட்டதெல்லாம், சரியென்று நம்பித் தொலைக்கும். அத்தோடு நில்லாமல் உடலையும் இதன் இஷ்டப்படி தூண்டிவிடும்.

கனவு கண்ட மாதிரியான வாழ்வோ, வாழ்க்கை அனுபவங்களோ நமக்கு அமைவதில்லை.

குருடன்,குருடனுக்கு வழிகாட்டும் கதையாகிவிட்டது, இன்றைய வாழ்வு முறை.

ஒரு சின்ன சம்பவம்...

பல் மருத்துவரிடம், அந்தப் பெண் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். " இன்னும் சரியாகப் பொருந்தவில்லை இந்த செயற்கைப்பல்... நானும் எத்தனை முறைதான் வருவது," என நொந்துகொண்டு தம் பல்லை சரிசெய்யும்படி சொன்னார்.

பல் மருத்துவர் மிதமான குரலில், "இத்தோடு மூன்று முறை நீங்கள் சொன்னதற்காக ராவி விட்டேன். இனி ஒரு முறை ராவினால்கூட ,அது உங்களின் வாய்க்கு நிச்சயமாகப் பொருந்தாது," என்றார்.

அந்த பெண், "வாய்க்குப் பொருந்துவதை பற்றி யார் கவலைப்பட்டது, நீங்க செய்த செயற்கைப் பல் என் முகத்துக்குப் பொருத்தமாக இல்லை," என்று எரிச்சலோடு சொன்னார்.

கடைசிவரை பல்மருத்துவர், "தொழில்படி நான் செய்தது சரிதான்," என்று வாதாட, அந்தப் பெண்மணி, "யாருக்கு வேண்டும் உமது உபதேசம், என் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாததற்கு நீர் கூறும் சப்பைக்கட்டு இது," என்று வெறுப்போடு சொல்லிவிட்டு வெளியேறினார்.

மனிதர்கள் தங்கள் வாழ்வில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் கலை கலைந்து போனதே, இதுபோன்ற சச்சரவுகளுக்குக் காரணம்.

சாதாரணம் போன்று தெரியும் இந்தச்
சச்சரவுகள்தான் மனித நேயத்தை மறையச்
செய்து கொண்டிருக்கிறது.

தவறுகள் தம்மிடமிருப்பது தெரியாமல்,
பொறுமையிழந்து, அது சச்சரவுகளாக வெடித்து,
உறவுகள் சிதறக் காரணம், ஆழ்மனதின்
மந்தத்தன்மைதான்.

தவறுகள் தம்மிடமிருப்பது
தெரியாமல்,
பொறுமையிழந்து, அது சச்ச
ரவுகளாக வெடித்து உறவுகள்
சிதறக் காரணம், ஆழ்
மனதின் மந்தத் தன்மைதான்.

மேல்மனம் மட்டும் கொஞ்சம் விழித்துக்கொண்டிருப்பதால், அதிகபட்சம் திறமையாக வாக்குவாதம் செய்ய முடியும் - வாதத்திறமையால் ஜெயித்துவிட்டதாக நம்ப முடியும்.

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஜெயித்தாலும் அது பெருந்தோல்வியே.

வாக்குவாதம் என்ற ஒன்று ஆரம்பிக்கும்போதே, உங்களைச் சுற்றி ஒரு சுமுகமற்ற சூழலை உருவாக்கிவிடுகிறீர்கள். இன்றைய நண்பர்களை, நாளைய எதிரிகளாக மாற்றும் நாசவேலையில், உங்களை அறியாமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

வாக்குவாதத்தில் காலடி எடுத்து வைத்தால், முதல் அடியே தோல்விதான். இவை அனைத்திற்கும் காரணம், அடிமனமயக்கம்தான். அது உடலில் சேர்ந்து விட்ட மதுவுக்குச் சமம். அது, அடி மனத்தைப் பற்றிக் கொண்ட விழிப்புணர்வின்மை.

மது குடித்தவரின் மயக்கம் தெளிவிக்கப்படாத வரை, அவரின் அரைகுறை புரிந்து கொள்ளுதல்கள்தான் சரியென வாதிடுவார். மன மயக்கம் தெளிவிக்கப்படாத வரை, உறவுகளையும், உலகையும் எப்போதுமே தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்க்க முடியாது.

சுற்றியிருப்பவர்களும் இதே மனமயக்கத்தில் சிக்கித் தவிப்பவர்கள்தான். எனவே... யாரும் யாருக்கும் உதவ முடியாது குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது.

நீங்கள்தான் உங்களுக்கு உதவவேண்டும். கொஞ்சம் விழித்துக்

Nithyananda

கொஞ்சம் விழித்துக் கொண்டு, நீங்களே,
மேல் மனதிலிருந்து, அடிமனத்தைத் தெளியச்
செய்யுங்கள். உள்ளுக்குள்ளேயே வெகுகாலமாக
உறங்கிக் கொண்டிருக்கும் அடிமனத்தைத்
தட்டியெழுப்புங்கள். மனதின் மயக்கம்

கொண்டு, நீங்களே, மேல் மனதிலிருந்து, அடிமனத்தைத் தெளியச் செய்யுங்கள். உள்ளுக்குள்ளேயே வெகுகாலமாக உறங்கிக் கொண்டிருக்கும் அடி மனத்தைத் தட்டியெழுப்புங்கள். மனதின் மயக்கம் மறைந்துவிடும்.

உள்ளேயும், வெளியேயும் சுமுகமான சூழல் உருவெடுக்கும்.

  • தவinterfaceறே செய்திருந்தாலும், அதைத், தான் செய்திருந்தால், தவறை, சரியென வாதிட்டு நிரூபிக்க, வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட வைக்கும் 'மனமயக்கம்.'
  • "எதையோ அடைய நினைத்து எதையோ அடைந்து விட்டோம். எப்படியோ வாழ நினைத்து எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.'' இப்படி நினைத்தது நிஜமாகாததின் மூலகாரணம் 'மனமயக்கம்' தான்.
  • "ஏன் இப்படித் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்? நான் அப்படிப்பட்டவன் இல்லையே!" என்று நம்மை மகாத்மா போலக் காண்பித்து, நாம் திருந்துவதற்கான எல்லா வாய்ப்புகளையும் 'மனமயக்கம்' அடைத்து விடும்.
  • வந்த வேலை எந்த வேலையோ, அந்த வேலை மறந்து, சொந்த வேலை என்றெண்ணி ஏதேதோ வேலைகளில் சிக்கவைத்து, மனிதன்,தான் பிறப்பெடுத்த நோக்கம் மறந்து, தன் நிம்மதியிழந்து தவிப்பதின் காரணம், மனம் குடித்துவிட்ட விழிப்புணர்வின்மை என்ற மதுவே!