எல்லாம் வல்லவர் நீங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
புதிதாய் சொற்பொழிவாற்ற வந்திருந்த புதுப்பேச்சாளர் பார்வையாளர்களைப் பார்த்து நாகரிகமாய்க் கேட்டார்.
"நான் எவ்வளவு நேரம் பேசலாம்?"
உடனே எழுந்த ஒரு பார்வையாளர் சொன்னார்...
"நீங்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கோங்க. ஆனால், நாங்க பத்து நிமிடத்தில் எழுந்து போய்விடுவோம்," என்றார்.
புதுப்பேச்சாளர் ஆடிப்போனார்.
இந்தப் பேச்சாளர் ஆடிப்போனது போல, விதவிதமாய் தினம் தினம் மனிதர்கள் ஆடிப்போகிறார்கள்.
எல்லாம் வல்லவர் நீங்கள் எனும் உண்மையை உங்களுக்குத் தெரியவிடாமல் மறைப்பதே இந்த
பேராசிரியர் ஒருவர், "எவ்வளவு நல்லவிதமாய்ப் பழகினாலும், வாழ்ந்தாலும், உள்ளுலக சஞ்சலங்களைத் தவிர்க்க முடிவதேயில்லை. பலர், வெளியே சிரித்து உள்ளே அழுகிறவர்களாகவே இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். ஏன் இப்படி நிகழ்கிறது," எனக் கேட்டார்.
"அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையே நிகழும் இழுபறியால்தான் அப்படி நிகழ்கிறது."
" அகங்காரம் பற்றித் தெரியும், இதென்ன புதிதாய் மமகாரம்?"
"அகங்காரம் - 'நீங்கள் யார்' என வெளியுலகிற்குக் காட்டுவது.
மமகாரம் - 'நீங்கள் யார்' என உள்ளுலகில் நீங்கள் நம்புவது.''
இரண்டுமே பொய்.
அகங்கார மிகுதியால், நிஜத்தில் ஒருவரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்வார்.
நிஜமான அவரின் தகுதியைவிட, அதிகமான ஒரு பர்சனாலிட்டியாகத் தம்மை மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டேயிருப்பார். இது தவிர்க்க முடியாதது. இந்த மிகைப்படுத்தலே அகங்காரம்.
மமகாரத்தின் இயல்பின்படியே, ஒருவர் தன்னைக் குறைத்து மதிப்பிடுவதைத் தவிர்க்க முடியாது.
இறுதியான உண்மைப்படி நீங்களும் கடவுளென்பது உண்மையென்றாலும், 'நீங்கள் யார்' என்பது பற்றிய அனுபவ அறிவு உங்களுக்கு இருக்காது.
அகங்காரத்தால் உலகத்தை ஏமாற்றினாலும், ஒருவரின் இயலாமைகள் அவருக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்கம். அதை அவரால் ஏமாற்ற முடியாது. ஆனால் இறுதி உண்மையின்படி, இந்த இயலாமைகள்கூடப் பொய்தான். உண்மையில் நீங்கள் எல்லாம் வல்லவர்.

அகங்காரத்தால் உலகத்தை ஏமாற்றினாலும்,
ஒருவரின் இயலாமைகள் அவருக்கு
மட்டுமே தெரிந்த அந்தரங்கம். அதை
அவரால் ஏமாற்ற முடியாது. ஆனால், இறுதி
உண்மையின்படி, இந்த இயலாமைகள்கூடப்
பொய்தான். உண்மையில் நீங்கள் எல்லாம்
எல்லாம் வல்லவர் நீங்கள் எனும் உண்மையை உங்களுக்குத் தெரியவிடாமல் மறைப்பதே இந்த மமகாரம்தான்.
மமகாரம் தொடர்ந்து உங்களைக் குறைத்து மதிப்பிட்டு தாழ்த்திக் கொண்டேயிருக்கும். அகங்காரம் தொடர்ந்து உங்களை உயர்வாக மதிப்பிட்டு உயர்த்திக் கொண்டேயிருக்கும்.
அகங்காரம் மேலிழுக்க, மமகாரம் கீழிழுக்கிறது. நடுவிலிருக்கும் அப்பாவி மனம் சஞ்சலப்படுகிறது.
ஏன்? உங்களின் சஞ்சலத்தையே எடுத்துக் கொள்வோம்... நல்லவிதமாய்ப் பழகினாலும், அப்படிப் பழகுமளவுக்கு நீங்கள் நல்லவரல்ல எனும் எண்ணமெழுகிறதா?
"பல இடத்தில், நான் நடிக்க வேண்டியிருக்கிறது. மற்றவர் நம்புமளவுக்கு நான் நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல எனும் எண்ணம் உங்களிடம் இருக்கிறதா?" எனக் கேட்டதும், பேராசிரியர் சிரித்தபடி, "அதெப்படி என் மனத்துக்குள்ளே வந்து படித்தாற்போல அப்படியே சொல்கிறீர்கள்?" என ஆச்சரியமாய்க் கேட்டார்.
"ஆச்சரியப்படுமளவுக்கு இது பெரிய விஷயமில்லைங்கையா.
களிமண்ணைப் பற்றி ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொண்டால், எந்த மூலையிலுள்ள களிமண்ணையும் அவரால் புரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் என்னுடைய மனத்தை முழுமையாய் ஆராய்ந்து கடந்து வந்ததால், உலகின் எந்த மூலையிலுள்ளவரின் மன இயல்பைப் பற்றியும் சொல்வது எளிது. அவ்வளவுதாங்கையா," எனச்சொன்னோம்.
நிகழ்காலத்தில்
வாழ்பவரைச் சுற்றி
நிகழ்வதெல்லாம்
நல்லதாகவே இருக்கும்.
நல்லதிலேயே எல்லாம்
முடியும்.
ஒருவர் தம்மை நல்லவராக
மிகைப்படுத்திக் காட்டிக் கொள்வது மட்டுமே
அகங்காரமல்ல. கெட்டவராக, முரடராக,
முன்கோபியாக, விதண்டாவாதியாகக்
காட்டிக்கொள்ளும் எல்லா செயல்களும்
அகங்காரமே.
- உள்ளுக்குள் பயமிருக்கும், வெளியே தைரியசாலிபோல வாய் ஜம்பம் பேசுவார்கள் சிலர்...
- இது சின்ன தவறுதானே என்று தெரிந்தும், அதை சாக்காகப் பயன்படுத்தி, முன்கோபத்தைக் கொட்டித் தீர்ப்பார்கள் சிலர்...
- தம் தரப்புதான் பலவீனமானது. தம் மீதுதான் தவறு இருக்கிறது என புரிந்திருந்தாலும், எதிராளியின் வாயடைக்கும் விதத்தில் விதண்டாவாதம் பேசுவார்கள் சிலர்...
இவையனைத்துமே அகங்காரமே.
பேசி அடங்கிய பின், உள்ளுக்குள் புழுங்க ஆரம்பிப்பார்கள், நடுங்க ஆரம்பிப்பார்கள், கவலைப்பட ஆரம்பிப்பார்கள். இது மமகாரத்தால் ஏற்படும் பாதிப்பு.
மமகாரம் இல்லாத ஒருவர், தாம் செய்து முடித்த செயலை நினைத்து சஞ்சலப்படவே மாட்டார். ஏன்? அதைப்பற்றி நினைக்கக்கூட மாட்டார். இறந்தகாலம் அவரை உறுத்தாது. நிகழ்காலத்தில் வாழவே அவருக்கு நேரம் சரியாயிருக்கும்.
நிகழ்காலத்தில் வாழ்பவரைச் சுற்றி நிகழ்வதெல்லாம் நல்லதாகவே இருக்கும். நல்லதிலேயே எல்லாம் முடியும்.
அவரை அகங்காரமும் ஒன்றும் செய்யாது. மமகாரமும் ஒன்றும் செய்யாது.
அகங்காரத்தாலும் மமகாரத்தாலும், நிகழ்காலத்தில் வாழும் தூயவரின்

ஒருவர் தம்மை நல்லவராக மிகைப்படுத்திக்
காட்டிக் கொள்வது மட்டுமே அகங்காரமல்ல.
கெட்டவராக, முரடராக, முன்கோபியாக,
விதண்டாவாதியாகக்
காட்டிக்கொள்ளும் எல்லா செயல்களும்
அகங்காரமே.
நிழலைக்கூடத் தொட முடியாது.
அகங்காரமும் மமகாரமும் விடாக்கண்டன், கொடாக்கண்டன் போலத்தான்.
இது அதைவிடாது, அது இதைவிடாது. இவற்றிடமிருந்து தப்பிப்பது லேசுபட்டக் காரியமல்ல.
நெருப்பு, பகை, கடன் ஆகிய மூன்றையும், எப்போதுமே விட்டு வைக்கக்கூடாது. விட்டு வைத்தால், ஏகமாய் வளர்ந்துவிடும் என்பார்கள் பெரியவர்கள்.
அதேபோலத்தான், அகங்காரத்தையும் மமகாரத்தையும் விட்டு வைக்காதீர்கள். விட விட அவை ராட்சத வடிவம் பெற ஆரம்பித்துவிடும்.
இவை இரண்டிடமிருந்து தப்பிக்கும் ஒரு அருமையான வழி... அதற்கான சில டிப்ஸ்
1. முதலில் அகங்காரம், மமகாரம் என்ற இரண்டு பிரச்சினைகளும் எவ்வளவு ஆழம் உங்களுக்குள் வளர்ந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
2. நீங்கள் எல்லாம் வல்லவர் என்பதை உணர்ந்து, அதுவாக மாற ஆரம்பியுங்கள்.
3. சீக்கிரமாக இந்த இரண்டையும் செய்து முடித்து நிம்மதியாய் வாழ ஆரம்பியுங்கள்.
நிச்சயம், நீங்கள் எல்லாம் வல்லவர்தான்.