KAILASA Library/யந்திர தியானம்/பிற்சேர்க்கை - 1ASign in
யந்திர தியானம்

பிற்சேர்க்கை - 1A

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களின் சுபாவம் ஆனந்தமயமானது. உங்களின் நோய்களையெல்லாம் குணமாக்கும் சக்தி உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள விழிப்புணர்வுக்குள் இருக்கின்றது. அதை பொங்கியோட அனுமதித்தாலே நோய்களெல்லாம் மறைந்து போகும். நாள்பட்ட நோய் என்பதே நாள்பட்ட சக்தி குறைபாட்டால் வந்ததுதானே.

சக்தி குறைபாட்டை சரிசெய்ய அந்தந்த சக்தி
மையத்தில் விழிப்புணர்வை பாய்ச்சினாலே
போதுமானது. சின்மயானந்த தியானம் இதற்கு
நேரடியாக உதவும்.

சின்மயானந்த தியானம்:

கண்களை மூடி 'சுபாவத்தினாலேயே நீங்கள் ஆனந்தமயமானவர்' என்பதை உணர்ந்து ஆனந்தமயமான விழிப்புணர்வுக்குள் நுழையுங்கள்.

உடல் எந்த பகுதியில் வேதனையோ வயோ,
வியாதியோ இருக்கின்றதோ அந்த பகுதிக்கு
அருகேயுள்ள சக்கரத்தில் ஆனந்தமயமான
அதிர்வுகளை முழுமையாக உணருங்கள்.
ஆனந்தமயமான அதிர்வுகளை அங்கிருந்து உடல்
முழுவதும் பரவுவதையும் ஒவ்வொரு செல்லும்
ஆனந்த மயமாவதையும் முழுமையாய்
உணருங்கள். குணமளிக்கும் சக்தி பொங்கி
பாய்வதை உணர்வீர்கள்.

மேற்சொன்ன நுட்பத்தை ஒவ்வொரு நோய்க்குமான தனி தியானமாக செய்யலாம். ஆனால் சின்மயானந்த தியானத்தில் மூலாதாரத்திருந்து சஹஸ்ராரம் வரையுள்ள ஏழு சக்கரங்களிலும் படிப்படியாக உங்களின் விழிப்புணர்வு முழுவதையும் ஒன்றாக்குங்கள்.

ஒவ்வொரு சக்கரத்திலும்
குறைந்தது ஒரு நிமிடமாவது
ஆனந்தமயமான விழிப்புணர்வு
நிலையிருந்து கவனம்
முழுவதையும் அங்கே
ஒன்றாக்குங்கள். அந்த
சக்கரமாகவே மாறிவிடுங்கள்.

இந்த ஏழு சக்கர பயணம்,
ஆனந்த பயணம் மட்டுமல்ல.
ஆரோக்கிய பயணமும் கூட,

இத்தியானத்தின் சிறப்பம்சங்கள்

1. நாள்பட்ட நோய்களுக்கான அருமருந்து

2. சோர்வை போக்கும் உற்சாக நுட்பம்.

3. ஆனந்த சுபாவத்தை புதுப்பிக்கும் கல்பதரு.

மூலாதாரம்

முதுகெலும்பின் நுனியில் உள்ள மூலாதாரம்.

சுவாதிஸ்டானம்

தொப்புளுக்கு இரு அங்குலம் கீழேயுள்ள சுவாதிஸ்டானம்.

மணிப்பூரகம்

தொப்புளுக்கு ஒரு அங்குலம் மேலேயுள்ள மணிப்பூரகம்.

அனாகதம்

இதய மத்தியில் உள்ள அனாகதம்.

விசுத்தி

தொண்டை குழியில் உள்ள விசுத்தி.

ஆக்ஞா

புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா.

சஹஸ்ராரம்

உச்சந்தலையில் உள்ள சஹஸ்ராரம்.