KAILASA Library/சிவ தீட்சை/அதிர்ஷ்டசாலியாகுங்கள்Sign in
சிவ தீட்சை

அதிர்ஷ்டசாலியாகுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பலமுறை பல்வேறு சத்சங்கங்களில் சொல்லியிருக்கிறேன்...

சிலபேருக்கு சிவபெருமானிடமிருந்து சொத்து கிடைக்கும், நிலம் கிடைக்கும், பணம் கிடைக்கும், சுகம் கிடைக்கும், வாகனம் கிடைக்கும், சிவபெருமானின் வண்டி, வாகனம், வசதி கிடைத்தவர் எல்லாம் அதிர்ஷ்டசாலி கிடையாது. அவரையே குருவாய் பெற்றவர்தான் அதிர்ஷ்டசாலி.

'அவன் அருளால்தான் அவன் தாள் வணங்கி' என்றுசொல்வோம்.

எம்பெருமான் சொன்னபடி, அவர் விதித்த விதிப்படி, அவர் கொடுத்த சத்தியங்கள் சார்ந்து, அளிக்கப்படும் சிவ தீக்ஷைபெற்று வாழுங்கள். மயத்தை சிவோஹமாக்குங்கள். எத்தனை பேருக்கு முடியுமோ, அத்தனை பேருக்கும் சொல்லி சிவ தீக்ஷை பெற வையுங்கள். 'சிவோஹம்' என்ற ஜீவன்முக்த விஞ்ஞானத்தை, ஜீவன்முக்த வாழ்க்கைமுறையை மக்களெல்லாம் வாழ வையுங்கள்.

வேதநெறி தழைத்தோங்கும் தத்துவத்தைத் தெரிந்து, சத்தியத்தை உணர்ந்து கோயிலை சுற்றி வந்தால்தான் ஞானம் கிடைக்கும். ஆண்டவன் இருப்பதை உணர்ந்து செய்தால்தான் அது ஆலயவழிபாடாகும்.

தத்துவம் தெரிந்து செய்தால்தான் எல்லா செயலும் இறைவனை நோக்கி நம்மை அழைத்துச்செல்லும். தத்துவம் புரியாமல் செய்வது, அறியாமல் செய்வது இறைவனிடம் சேர்ப்பதில்லை.

|| யஜ்ஞோபவீதம் ||

காமிக ஆகமம் - உத்தர பாதம் - சமய தீட்சை விதி - செய்யுள் 88

தத்யாத்யஜ்ஞோபவீதம் து மூலமந்த்ராபிமந்த்ரிதம் || 88 ||

ஏவம் ஸமய ஸம்ஸ்காரயுதோ யஸ்ஸிவபூஜநே || 89 ||

ஹோமே சாத்யயநே சைவ மந்த்ராணாம் ச்ரவணேsபி ச |
யோக்யஸ்ஸ்யாந்முநயோ ரௌத்ரம் பதம் ப்ராப்நோதி மாநவ: ||90

மூல மந்திர உச்சாடனம் செய்து சக்தியூட்டப்பட்டு, தூய்மையாக்கப்பட்ட பூணூலை சீடருக்கு அளித்து, அதை அவர் அணிந்துகொள்ள சொல்லவே வண்டும். இவ்வாறு முதல் நிலை சிவதீட்சை (சமய தீட்சை) பெற்ற சீடர், ஈசனை தனித்து பூஜை செய்வதற்கும் - யாக யஞ்ஞங்களில் உதவி செய்வதற்கும் தகுதி பெறுகின்றார். மறை நூல்களை முறைமையுடன் படிப்பதற்கும், மந்திர உச்சாடனங்களை கேட்பதற்கும் தகுதி பெறுகின்றனர்.

யஜ்ஞோபவீதம், பூணூல் பெற்றவர்கள் அனைவரும் ஆதிசைவர்கள் ஆவார்கள்.

|| வெள்ளை உடை||

உடை விதி சாஸ்த்ரப் பிரமாணம் காமிக ஆகமம் = உத்தரபாதம்

விஹித அவ்யகா: ஸ்நாத தினக்ரியா: ஸிதவஸ்த்தோத்ரியாஸ்த்தவத், பாதபத்ம த்ரித்க்க்ஷரவா

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய கடமைகளான நீராடுதல் போன்ற தினசரி கடைமைகளை நிறைவேற்ற வேண்டும். பிறகு வெள்ளை நிற உடை அணிய வேண்டும்.

|| குரு தட்சிணை ||

மனித இனம் தன்னுடைய வாழ்வில், உடல் நலம், மன நலம், இனிமையான உறவுகள், பொருளாதார வளம், ஆன்மீக வளர்ச்சி என்று எல்லா நிலைகளிலும் உயர்ந்து மலர்வதற்கு மனித உடல் எடுத்து சதாசிவனே குருவாக அவதரிக்கின்றார். அவருடைய வாழ்வே அவர் நமக்கு அர்பணித்த காணிக்கை. தன் வாழ்வையே நமக்காக அர்பணித்த இறைவனுக்கு நாம் நம் ஆழமான நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுதான் குருகாணிக்கை. நாம் செலுத்தும் காணிக்கையையும் அவர் மீண்டும் நமக்கே பல சேவைகளாக திருப்பி அளிக்கின்றார். இது குருகாணிக்கை அல்ல.. இது நமக்கே நாம் அளித்துக்கொள்கின்ற காணிக்கை.

ஆகமத்தில் சிவபெருமான் குருகாணிக்கையின் முக்கியத்துவத்தை இவ்வாறு விளக்குகின்றார். காமிக ஆகமம் - உத்தர பாதம் - ஸ்நாபன விதி படலம் - அத் = 19 குருவிற்கு தட்சிணையாக எதை அர்ப்பணிக்கலாம்: சாஸ்த்ரப் பிரமாணம்

ஆசார்யம் பூஜயேத் பச்'சாத்த்வஸ்த்ரஹேமாங்குலீயகை: ।। 262 ।।

உபயுக்தமிஹத்ரவ்யம் யாகே ஸ்வர்ணாம்'பராதிகம்
ஆச்சார்யாய ப்ரதேயம் ஸ்யாத் நாந்யபோகாய கல்பயேத் ।। 263 ।।

யாகாவசி'ஷ்டம் யத்த்ரவ்யம் பூஷணம் மண்டபஸ்ய ச
ஸ்தண்டிலம் சாம்பரம் ஸ்வர்ணம் கும்பம் வா கலசா'திகம் ।। 264 ।।

தோரணம் ஸ்ரு'க்ஸ்ரு'வாவஷ்டமங்கலம் நவரத்நகம்
தத்தோம சரு நைவேத்ய சே'ஷோயம் மண்டபஸ்ய ச ।। 265 ।।

வலயம் தத்ப்ரபாதிம்ச்'ச யதந்துபயுக்தகம்
ஆச்சார்யாயைவ தேயம் ஸ்யாத்பஞ்சகோசர வர்திநே ।। 266 ।।

குருவை வணங்கி அர்ப்பணிக்க வேண்டிய பொருட்களாவன - புது வஸ்திரம், தங்க மோதிரம், யஞ்ஞத்தில் பயன்படுத்தப்படும் பயனுள்ள பொருட்களான தங்க நிற வஸ்திரம், யஞ்ஞத்திலிருந்து விடுபட்ட பொருட்கள், மண்டபத்தில் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஸ்தண்டிலம், வஸ்திரம், தங்கம், கும்பம், கலசம், தோரணம், ஸ்ருக் மற்றும் ஸ்ருவா - கரண்டி, அஷ்ட மங்களங்கள், ஒன்பது நவ ரத்தினங்கள், மீதமிருக்கும் நைவேத்தியம், வளை மற்றும் மண்டபத்தின் பிராபம், அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும்

சமய தீட்சை பெற்றவர்கள் செய்ய

வேண்டியவை:

  1. எல்லா நேரமும் ருத்ராக்ஷமும் திருநீரும் அணிய வேண்டும்.
  1. எல்லா நேரமும் தொண்டைக் குழியில் இருக்கும் ருத்ராக்ஷம் அசையும் வகையில் உள்ளுக்குள் தீட்சையான 'மூல மந்திரத்தை' அஜபாஜபமாக ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

சமய தீட்சை பெற்றவர்கள்

செய்யக்கூடாதவை:

  1. உலகத்திற்கு கர்த்தரான சிவபெருமானை நிந்திக்ககூடாது.
  1. அவரால் கூறப்பட்ட சாஸ்திரங்கள், வேதம் மற்றும் ஆகமங்களை நிந்திக்க கூடாது.
  1. குரு மற்றும் இதர சாதகர்கள் மற்றும் தீட்சைப்பெற்றவர்களை நிந்திக்க கூடாது.
  1. சிவபெருமானுக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.
  1. சண்டிகேஸ்வரருக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.
  1. சண்டிகேஸ்வரருக்கு நைவேத்யம் செய்யப்பட்டவையை உண்ணக்கூடாது.
  1. சிவலிங்கத்தின் நிழலை தாண்டவோ, மிதிக்கவோ கூடாது.
Nithyananda

வேத நெறி தழைத்தோங்குக
மிகு சைவ துறை விளங்குக
பூதப்பரம்பரை பொழியட்டும்

சிவபூதங்களாக வாழுகின்ற மக்கள் பரம்பரை பொங்கி பெருகிக்கொண்டே செல்லட்டும்...சிவமாகட்டும்.

ஆனந்தமாக இருங்கள்.

  • பரமஹம்ஸ நித்யானந்தர்