அபிலாஷைகளும் தியானமகத்துவமும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மனிதனின் இறுதியான நோக்கம் ஆனந்தம் அடைவது தான் என்றாலும், அதுவரை மனிதன் பல ஜென்மங்கள் எடுப்பது, தன் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான்.
அபிலாஷை என்ற சொல்லை விளக்க வேண்டுமானால் ஆசைகள் நிறைந்த கற்பனை மேகங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நம்முடைய மனமென்னும் வானில் ஆசைகளின் நிறமேறி சுற்றித் திரியும் கற்பனை மேகங்கள் தான், அபிலாஷைகள்தான், ஆனந்தமென்னும் சூரியனை மறைக்கின்றன.
பல வகை அபிலாஷைகளோடுதான் ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்...
- புகழின் உச்சாணியைத் தொட வேண்டும்.
- செல்வச் சீமானாக வாழ வேண்டும்.
- ஆள வேண்டும், அடக்க வேண்டும்.
- விதவிதமான உவ்வு, உடை, காமம் பெற வேண்டும்.
- என்பன போன்ற சில அபிலாஷைகளை எடுத்துக் கொண்டுதான் மனிதன் பறக்கிறான்.
இதுபோன்ற அபிலாஷைகள் மனிதனை சும்மாயிருக்கவிடாமல், ஓயாமல்,
"அந்த விருப்பத்தை நிறைவேற்று! இதை நிறைவேற்று!
அதை அடைந்தாக வேண்டும்! இதை அடைந்தாக வேண்டும்!" என்று தூண்டியபடியே இருக்கும்.
மனிதனுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் உள்ளிருக்கும் அபிலாஷைகள் தான் தன்னை தூண்டுகின்றன என்ற உண்மை தெரியாமல்,அபிலாஷைகளுக்கு அடிமையாகி ஓட ஆரம்பிக்கிறான்.
மனிதன் தனக்காக வாழாமல் அபிலாஷைகளுக்காக வாழ ஆரம்பித்துவிடுகிறான்.
இதில் வேடிக்கை என்னவென்றால்...
அபிலாஷைகள் அதன் ஆசைகள் நிறைவேறும் வரை மட்டும் மனதில் குடியிருக்கும்.
ஆசை நிறைவேறி முடிந்ததும் அபிலாஷைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
ஆசை நிறைவேறியதும் ஆசைக்குக் காரணமானதும் மறைந்து விடுகின்றது.
இதனால்தான் மனிதனுக்குத் திருப்திக்கு பதில் அதிருப்தியே மிஞ்சுகிறது.
எனவே சாதித்த பின்பும் கூட வாழ்ந்த திருப்தி இல்லாமல் மனிதர்கள் பலர் மனச்சோர்வு அடைந்து விடுகின்றனர்.
இன்னொரு முக்கியமான விஷயம், இன்றைய மனிதனிடம் அபிலாஷைகள் அளவுக்கதிகமாக பெருகி இருக்கிறது.
சரியாகச் சொல்ல வேண்டுமானால் வெட்ட வெட்ட வளரும் புற்றுநோய் போல அபிலாஷைகள் மிதமிஞ்சிப் போய்க் கொண்டே இருக்கிறது. இப்படி மனிதனுக்கு தொல்லை தரும் அபிலாஷைகளில் சிக்கி மாளாமல், மனிதன் மீளவேண்டும் என்றே ஞானிகள் காலங்காலமாக சொல்லி வருகிறார்கள்.
எளிமையாகச் சொல்ல வேண்டுமானால்...
‘‘மனிதப்பிறவி எடுக்கும்போது நாம் எடுத்து வந்த அபிலாஷைகள் தீர்க்கப்படவேண்டும்’’.
அதற்கு இரண்டு வழிகள் உண்டு.
1. அபிலாஷைகளை அதன் கடைசிச் சொட்டு ஆசை வரை சென்று அனுபவித்துப் பார்ப்பது, ஒரு அபிலாஷையை ஒரு ஜென்மத்தில் அனுபவித்துத் தீர்ப்பதற்கு உடலையும் மூளையையும் முழுமையாக பயன்படுத்தினால் மட்டுமே சாத்தியம்.
மீதமுள்ள அபிலாஷைகளுக்காக அடுத்தடுத்து பிறவி எடுத்துக் கொண்டே போக வேண்டியதுதான்.
2. அபிலாஷைகளை அதன் இஷ்டத்திற்கு ஆடவிட்டு ஓய விடுவது அல்லது சுட்டெரித்துவிடுவது. இது ஞானம், மற்றும் தியான முறைகளால்தான் எளிதில் சாத்தியம். தியான சக்திக்கு முன், நெருப்பில் பட்ட சிலந்தி வலைகள் போல அபிலாஷைகள் ஒவ்வொன்றும் உடனே மறைந்துவிடும்.
அபிலாஷைகள் அனைத்தும் தீர்ந்தபின்தான் மனிதன் தன்னுடைய உண்மையான வாழ்க்கையையே வாழ முடிகிறது.
அவைகளை சுட்டெரித்ததனால்தான் ஞானிகள் எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள்.
நாம் நமக்காக வாழ ஆரம்பிப்பதே அபிலாஷைகள் எல்லாம் தீர்ந்து போனபின்தான் சாத்தியம்.
★ யாருக்கும் நிரந்தரமாக எந்தப் பயனையும் தராத அபிலாஷைகளைத் தியானம் மூலமாக எளிதில் எரித்துவிட்டு, நம் வாழ்க்கையை நாம் வாழ்வது ஒரு அருமையான வழி முறைதான்.
★ அபிலாஷைகளை சுட்டெரிப்பதில் எனக்கு விருப்பமில்லை. என்னுடைய ஆசைகள் கனவுகள் நிறைவேறியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஞான மார்க்கம் பெரிதும் உதவும். ஆசைகளை ஆழ்ாய்ந்து ஆசைகளைத் தாண்டி
வர ஞான மார்க்கமும், தந்த்ர மார்க்கமும் நேரடியாக உழ்வும்.
★ இன்னொரு முறை! அபிலாஷைகளுக்காக நமது உடலையும் மனதையும் எடுபிடியாக்கி, ஒவ்வொரு அபிலாஷைகளுக்கும் ஜென்மங்கள் பல செலவு செய்து அல்லல்பட்டு சலிப்பு வந்து அபிலாஷைகள் தீர்ந்தபின் நம் வாழ்வை நாம் வாழலாம்.
சாதாரண மனிதன் அபிலாஷைச் சூழலில் சிக்கிக் கொண்டு தவிப்பான்.
தியானி அபிலாஷைகளை ஆராய்ந்து புரிந்து கொண்டு அதைத் தாண்டி விடுவான்.
காரணம் ஞானம் அபிலாஷைகளை பகுத்தறியும் புத்தியையும், தியானம் அபிலாஷைகளை ஆழ்ந்து புரிந்து கொண்டு அனுபவித்து வெளிவரும் சக்தியையும் ஒரு தியானியிடம் உருவாக்கும்.
தியான ஞான வழிமுறைகளை பின்பற்றுவது...
கண்டேதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்வது....
-ஆகிய இரண்டுமே வழிமுறைகள்தான்.
உங்களுக்கு எது நல்லதென்றுபடுகிறதோ அந்த வழியில் நீங்கள் பயணம் செய்யலாம்.