தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மார்க்கங்கள் பல...
பக்தி மார்க்கம்!
யோக மார்க்கம்!
ஞான மார்க்கம்!
தந்த்ர மார்க்கம்!
தியான மார்க்கம்!
இத்தகைய மார்ககங்கள் தோன்றியது எதற்கு? அதிலும் ஒவ்வொரு மார்க்கத்திலும் கிளைப்பிரிவுகள் ஏகமாக இருக்கின்றன.
மார்க்கங்கள் பல தோன்றியதற்கு காரணம், அந்தந்த காலக்கட்டத்தில் வாழும் மக்களின் கூட்டு மன அமைப்பு தான் காரணம்.
ஞானிகள் அந்தந்தக் கால மக்களின் தேவைக்கேற்ப மனோ நிலைக்கேற்ப ஆன்மீக மார்க்கங்களை வடிவமைத் திருக்கிறார்கள்.
இந்தக்கால மனிதனின் புது பிரச்சினை தடித்துப் போன இங்ழ்க்ஷழ்ஹப் கஹஹ்ங்ழ் தான்.
மனித வரலாற்றில் வேறெந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு கற்பனைகள் காளான் போல வளர வாய்ப்புகள் இந்நூற்றாண்டில் கொட்டிக் கிடைக்கிறது.
அந்தக் காலங்களில் மனிதனுக்கு இரண்டு விதமான வாய்ப்புகள்தான் இருந்தன.
ஒன்று உண்மையாக அனுபவிக்க முடியும். இல்லை என்றால் முடியாது இந்த இரண்டே வாய்ப்புகள்தான் இருந்தன.
ஆனால் இன்று மூன்றாவது ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதுதான் அனுபவிக்காமலே அனுபவிப்பது.
உங்களின் ஆசை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அந்த ஆசையை தத்ரூபமாக யாரோ ஒருவர் கற்பனையால் படம் பிடித்து, நிஜத்தில் நடப்பது போலவே காவியங்களாகப் படைத்து விடுகிறார்.
விளைவு...
தன் ஆசை உண்மையாக நிறைவேறாத மனிதன் கற்பனையில்தான் ஆசைகளை பார்த்து ரசிக்க ஆரம்பிக்கிறான்.
சரி... நிஜத்தில்தான் சாத்தியமில்லை, கனவிலாவது, கற்பனையிலாவது அனுபவிப்போம் என்று நிஜத்தின் நிழலில் வசிக்க ஆரம்பித்துவிட்டான் மனிதன்.
நிஜத்தை மறந்து நிழலை நிஜமென நம்ப ஆரம்பித்து கற்பனைகள் தோன்றுவதற்கு ஆதாரமாக நம் மூளையில் செயல்படும் அடுக்கு இங்ழ்ங்க்ஷழ்ஹ்ப் கஹ்ஹ்ங்ழ் என்று அழைக்கப்படுகிறது.
நாம் கணக்கில் அடங்கா கற்பனைகளை உருவாக்கி அதை மீண்டும் மீண்டும் நன்க்குள்ளே விதம் விதமாக ஓட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறோம்.
கற்பனைகள் அதிகமாக அதிகமாக, அது உருவாக்கப்படும் மூளை அடுக்கான இங்ழ்ங்க்ஷழ்ஹ்ப் கஹ்ஹ்ங்ழ்-ம் தடித்துப் போய் விடுகின்றது.
அது தடித்துப் போனதால் மனிதன் கண்களைத் திறந்து வாழ்ந்தாலும் 90% -திற்கு மேற்பட்ட விழிப்புணர்வு ச க்தி இந்த மூளையால் உறிஞ்சப்பட்டு விடுவதால் கனவிலேயே தான் மனிதன் வாழ்கிறான்.
வெளியே பேசுவது செய்வது ஒன்றாக இருக்க, உள்ளே வேறு ஏதோ ஒன்று சதா ஓடிக்கொண்டேயிருக்கும்.
இப்படித்தான் மனிதன் இரட்டை வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டான்.
காதல், காமம், சாகசம், சச்சரவு- இதைச் சுற்றிச் சுற்றித்தான் எல்லா மீடியாாக்களும் செயல்படுகின்றன.
இந்த மீடியாக்கள் மூலம் மனிதனின் அலைபாயும் மனம் நிலையற்ற மனதாக மாறிவிட்டது.
மனித வரலாற்றிலேயே இந்தக் காலத்து மனிதனின் மனம்தான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் மனத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட சூட்சும சரீரம் (உற்ட்ங்ழ்ண்ஸ்ரீ க்ஷர்க்ஹ்) நவீன மனிதனுக்கு மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சூட்சும சரீரம் ஆரோக்கியம் அடையாத வரை ஸ்தூல சரீரத்தில் (ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் க்ஷர்க்ஹ்) ஆரோக்கியத்தை எதிர்பார்க்க முடியாது.
தியான முறைகள் எல்லாமே சூட்சும சரீரத்தில் ஆழ்ந்து வேலை செய்பவை.
நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களுக்கான பிரத்தேக தியானங்கள் நவீன மனிதனின் பிரச்சினைகளுக்கு நேரடித் தீர்வு தருபவை.
மனிதனை ஆட்டிப்படைக்கும் கிளறிவிடப்பட்ட ஆசைகளையும், தேவையற்ற எதிர்பார்ப்புகளையும் களைந்தெறிய வேண்டும்.
இவை களைந்தெறியப்படாத வரை உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலிருந்து மனிதன் விடுபட முடியாது.
தியானம், சக்கரங்கிளில் கஷ்ந்திருக்கும் உணர்ச்சி மாசுகளை நீக்கி சக்கரங்களைப் பொலிவடையச் செய்யும்.
சூட்சும சரீரமும் ஸ்தூல சரீரமும், சக்கரங்கள் என்று அழைக்கப்படும் சக்தி மையங்கிளில் ஒன்றோடொன்று சந்தித்துக் கொள்கின்றான்.
ஆதலால் சக்கர தியானம் செய்வதே சூட்சும சரீரத்தையும் ஸ்தூல சரீரத்தையும் விடும்.
நம் உடலில இருக்கும் சக்கரங்கள் ஏழு.
முதுகெலும்பின் அடி நுனியிலிருந்து உச்சந்தலை வரை அமைந்திருக்கும் சக்கரங்கள் ( சமஸ்த்திரத்தில்):
- மூலாதாரம் (தர்ர்ற் இட்ஹந்ழ்ஹ)
- ஸ்வாதிஷ்டானம் (நல்ப்ங்ங்ய் இட்ஹந்ழ்ஹ)
- மணிப்பூரகம் ( சஹஸ்ங்replaced_char_placeholderப் இட்ஹந்ழ்ஹ)
- அனாகதம் (ஏங்ஹழ்ற் இட்ஹந்ழ்ஹ)
- விஷத்தி (பட்ழ்ர்ஹற் இட்ஹந்ழ்ஹ)
- ஆக்ஞா (ஆழ்ர்ஜ் இட்ஹழ்ந்ழ்ஹ)
- சஹஸ்ராரம் (இழ்ர்ஜ்ய் இட்ஹழ்ந்ஹ)
சுருங்கச் சொன்னால் தியான முறைகளும், ஞானக் கருத்துக்களும் ஆனந்த வாழ்வின் வழிகாட்டிகள்.
அறிவு பெருத்துப்போன இன்றைய மனித சமுதாயத்தின் மன அமைப்பிற்குத் தியான மார்க்கமே மிகச் சரியானது. இந்த சக்கரங்களை சரியாக இயங்கும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டால் இந்த உலகமே உங்கள் கையில்.
தியானம் சக்கரங்களை இயங்கும் சக்தியையும், ஞானக்கருத்துக்களையும் புரிந்து கொண்டு, அதன் மூலமாக எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் திறனையும் தரும்.