KAILASA Library/பககத் கீதை/முன்னுரைSign in
பககத் கீதை

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஞானமடைந்த சத்குரு பரமஹம்ச நித்யானந்தர் பகவத் கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பல வருடங்களாக, பகவத் கீதைக்கு நூற்றுக் கணக்கான விளக்கவுரைகள் எழுதப் பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் ஆன்மீக குருக்களான ஆதி சங்கராசாரியர், இராமானுஜன், மாத்வர் போன்றோர் விளக்கவுரை எழுதினர்.

அண்மைக் காலத்தில், முக்கியமான சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்சர், இரமண மகரிஷி போன்றோர் கீதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். பலரும் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்காமல் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்.

பரமஹம்சரின் நித்தியானந்தரின் இந்த பகவத் கீதை விளக்கவுரை, கீதையின் மொழிபெயர்ப்போ, அதன் விளக்கவுரையோ, அல்ல அவர் ஒவ்வொரு பாடலையும் (செய்யுள்) விளக்கும் பொழுது நம்மை உலகச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு சுலோகத்திற்கு 7 அடுக்கு அர்த்தங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. பொதுவாக கொடுக்கப்படுவது முதல் நிலை விளக்கமாகும். இங்கே, ஞானமடைந்த சற்குரு நம்மை பொதுவான விளக்கவுரையைத் தாண்டிய நிலைகளுக்கு எளிதாகவும் தளர்வாகவும் அழைத்துச் செல்கிறார்.

பரமஹம்சரின் நித்யானந்தரின் கீதையின் விளக்கவுரையைப் படிப்பது என்பது, மிகவும் அரிதான உள்முகப் பார்வையைப் பெறுதலாகும். இது வெறும் படிப்பது மட்டுமல்ல. இது ஒர அனுபவம். இது ஒரு தியானம்.

சிறந்த சத்குருவும் தத்துவஞானியுமான சங்கரர் கூறுகிறார்,

  • சிறிதளவு கீதையைப் படிப்பது, குடிப்பதற்கு ஒரு துளி கங்கை நீர், அவ்வப் பொழுது கிருஷ்ணனைப் பற்றிய நினைவு - இவையனைத்தும், உங்களுக்கும், மரணத்தின் தேவனான யமனுக்கும் இமையே உள்ள பிரச்சனைகளை நிச்சயமாக இல்லாமல் செய்துவிடும்.

பரமஹம்ஸர் நித்யானந்தரின் விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், அவருடனான கருத்துப் பரிமாற்றங்களால் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் வாசிப்பாளர்களின் வச திக்காகவும், கல்வியாளர்களின் விருப்பத்திற்காகவும், புராதனமான சமஸ்கிருத செய்யுட்களையும், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரம் தினசரி வாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து இறுதி சத்தியத்தை உணர்வதற்கு பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் விளங்குகிறது. நித்யானந்தம், முடிவற்ற பேரின்ப நிலையை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது.

QUESTIONS - 1316

◆ சுவாமிஜி, இயற்கையிலேயே நாம் ஆனந்தமானவர்கள் என்றும், நமது வளர்ப்பால் (கற்பிதங்களால்) அந்நிலையை நாம் இழந்துவிட்டிருக்கிறோம் என்றும் நீங்கள் கூறினீர்கள். நமது உண்மையான அந்த ஆனந்தநிலையின் விழிப்புணர்வையும், இறைவனுடன் ஒன்றிணைவதையும் நாம் எவ்வாறு திரும்ப பெறுவது?

◆ கிருஷ்ணர் குறிப்பிடும் பாகக்கயிறு, பிரபஞ்ச சக்தியா? (பிரபஞ்ச சக்தியைத் தான் கிருஷ்ணர் நூல்இழை என்று குறிப்பிடுகிறாரா?)

◆ சுவாமிஜி, கிழக்கத்திய கல்விமுறை அல்லது மேற்கத்திய பாரம்பரிய கல்விமுறை என எதுவாக இருந்தாலும், கல்வி அறிவை வளர்க்கிறது. இருந்தாலும், மகிழ்ச்சியைத் தர வேண்டிய அந்த கல்வி, அவ்வாறு நம்மை இட்டு செல்வதாக தெரியவில்லையே. ஏன்?

◆ ஜாதி அமைப்பு ஸ்வபவ்ச்ன் அடிப்படையில் அல்லது குணங்களின் அடிப்படையில் உள்ளது, பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றும், அனைத்து சாதிகளும் சமம் என்றும், இதுபோல் இன்ன பிற விஷயங்கள் குறித்து நீங்கள் சொன்னதையும் நான் கேட்டிருக்கிறேன். இன்றும் அது அவ்வழியில் செயல்பட முடியவில்லை. நாம் நடத்துவதை விட ஒன்றையொன்று சிறப்பாக நடத்தும் பல பிற கலாச்சாரங்களும் உள்ளன. இருந்தும், சிறந்த நாகரீகமடைந்த கலாச்சாரங்களில் நம்முடையதும் ஒன்று என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் சத்தியத்தின் உண்மையுடன் என்னால் சமரசப்பட முடியவில்லை.

◆ ஆசிரமத்தில் வாழும் உங்கள் சீடர்களையும், வெளியில் வாழ்ந்து கொண்டே உங்களைப் பின்பற்றுபவர்களையும் பார்க்கும் போது, பொறாமைப்படும் படியான ஓர் அமைதியை அவர்களிடம் நான் பார்க்கிறேன். நானும் அந்த இடத்தை அடைய முடியும் (முடியுமா?) என்று நம்புகிறேன்.

◆ செல்வசெழிப்பில் இருப்பது, ஞானம் அடைய தடையாக இருக்குமா? நாம் ஆன்மீகவாதியாவதற்கு முன்னால் அனைத்து பொருளாசைகளையும் விட்டுவிட வேண்டும் என்று பெரும்பாலான மதங்கள் போதிக்கின்றனவே.

◆ இந்த பாகத்திலும், பிற பாகங்கள் முழுவதும், முக்தி அடைவதற்காக தன்னை வந்தடைவது பற்றி கிருஷ்ணர் பேசுகிறார். அவர் பல நுட்பங்களைக் கூறுகிறார். ஆனால் எதுவுமே நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. அவர் கூறுவதை வெறுமனே அறிவுப்பூர்வமாக புரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று அவர் குறிப்பிடுகிறாரா அல்லது அதையும் தாண்டி ஏதேனும் உள்ளதா? அவரே ஒப்புயர்வற்றவர் என்றும், தெய்வீகமானவர்களையும் (ஸ்ரீருட்டி ஞ்ணிரீண்) கடந்து அவர் என்னை சுதந்திரமடையச் செய்வார் என்றும் எவ்வாறு வெறுமனே ஏற்று கொள்வது?