உடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Rapid Recovery From Illness
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
நோய் பற்றிய விபரம்
‘குணமான நிலை’ என்பது மருத்துவ சிகிச்சையின் முடிவு நிலையாகும். அறுவை சிகிச்சை, மருந்து எடுத்துக் கொள்ளுதல் போன்ற செயல்முறைகளோ அல்லது நம்முடைய வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருத்துக்களோ அல்லது தத்துவ ரீதியான மன அமைப்போகூட ஒருவரின் கஷ்டங்களை முடிவுக்கு கொண்டுவந்துவிடும். இதனையும்கூட ‘குணமான நிலை’ என்று கூறலாம்.
நோய்க்குறைப்பு அல்லது நோய்க்குறைதல் என்பது குணமாகாத நோய்களுடைய மருத்துவ அறிகுறிகளின் தற்காலிக முடிவு என்று கூறலாம். கொடுக்கப்பட்ட சிகிச்சையினால் நோய் குணமடைந்தவர்களின் விகிதாச்சாரம் எப்படி கணக்கிடப்படுகிறதென்றால், சிகிச்சை கொடுத்த பின் நோய் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும் இதுவரை நோய் என்பதே வந்திராத ஒரு குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட்ட குழு மக்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுக் கணக்கிடப்படுகிறது.
‘குணமடைதல்’ என்பதன் உள்ளார்ந்த பொருள், நோய்களின் நிரந்தரமான முடிவையே குறிக்கிறது. ஒருவருக்கு சாதாரண சளி ஏற்பட்டு அது குணமடைந்துவிட்டால் அவர் குணமடைந்துவிட்டார் என்று கூறலாம். ஆனால் அதே சமயம், நீரிழிவு போன்ற நோய்களைப் பொறுத்தமட்டில், அந்த சமயத்திற்கு அதனுடைய அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாமே தவிர, ‘நோய் முழுமையாகக் குணமாகிவிட்டது’ என்று சொல்லிவிட முடியாது.
அதனால் ‘நோயிலிருந்து குணமடைதல்’ என்பதின் பொருள் அதனுடைய எதிர்செயல், நோய்க்குறைதல், நோயிலிருந்து மீள்தல் போன்ற காரணங்களால் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. நோய்க்கு நோய் வேறுபடுகிறது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 30, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- அஞ்ஜனீ ஆஸனம்
- சீ'தலீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- த்ரிநேத்ரகும்பகம்
- திரிசூ'லகும்பகம்
- க்ரமநேத்ரகும்பகம்.
1. அஞ்ஜனீ ஆஸனம்,
ஜோகப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 283-286
அது அஞ்ஜனீ ஆஸனம்
தோஉ கரகீ உபை ஹதேலீ கோர வாரிலீ மை லே பேலீ/
ஸோ ஆகா நை பூபரி தாகை மாஹா நை அங்குலீ மிலி ராகை // 283
அங்குஷ்ட சீதா ராகை தோஈ புனஹ ஹதேலீ பிஷ்டி ஜூ ஜோஈ /
தாபரி மூலத்வாரி டிக பைஸே பஹுஜ்ஜௌ ஜாகதி கரை ஏக பைஸே //284
குஹுண்யா மஹிலீ ஆதி மிலாவை ஹாத உத்ரஸௌ லக்யா ரஹாவை /
பஹுரோ லாம்பா பாவ பஸாரே பணா உர்த்வ ஏட பூ தாரை // 285
அங்குஷ்ட அவர குலப் மாஹிலா ராகை ஜூடயா கரை நஹீ குலா /
ஸாடை நாஸா த்ரிஷ்டி ல காயீ தாகோ ஹரஸ ரோக ஸப ஜாஈ // 286

அஞ்ஜனீ ஆஸனம்
செய்நுட்பம்
- குதிங்கால்கள் பூமியில் படுமாறும், விரல் நுனிகள் மேல் நோக்கியவாறும் இருக்கும்படி வைத்து கால்களை நீட்டி அமரவும்.
- கைவிரல்களைக் கோர்த்தவாறும் உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறும் வைத்து, கைகளைப் பிருஷ்டத்திற்கு அடியில் வைக்கவும்.
- முழங்கைகளை உடலுக்கருகில் எவ்வளவு கொண்டுவர முடியுமோ அவ்வளவு நெருக்கமாகக் கொண்டுவரவும்.
- பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
- இந்த நிலையில் 30 நொடிகள் அமரவும்.
2. அஞ்ஜனீ ஆஸனத்திலிருந்தபடியே சீ'தலீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அத சீ'தலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் ஸு'பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.(5.73)
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுடுத்துகிறது.(5.74)
செய்நுட்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும். 6. சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
7. இதை 21 முறை செய்யுங்கள்.
3. அஞ்ஜனீ ஆஸனத்திலிருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம் ,
ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அத ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
6. இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
4. அஞ்ஜனீ ஆஸனத்திலிருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
அத த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆசனத்தில் அமரவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 தை 21 முறை செய்யுங்கள்.
5. அஞ்ஜனீ ஆசனத்திலிருந்தபடியே
த்ரிகு'லரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத த்ரிகு'லரும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிகு'லினா த்ரிகு'லாக்rounding: கும்ப உக்தஸ்-த்ரிகு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலரும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆசனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
5. இதை 21 முறை செய்யுங்கள்.
6. அஞ்ஜனீ ஆஸனத்திலிருந்தபடியே
க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191
அத க்ரமநேத்ரகும்பக:
ஸக்ரு'த்ஸூர்யேண சாபூர்ய தூர்ய சந்த்ரேண பூரயேத் /
தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
- வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.