மதியிறுக்க நோய்வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Autism
நோய் பற்றிய விபரம்
ஆடிஸம் என்பது நரம்புமண்டல வளர்ச்சி சீற்று இருப்பதைக் குறிக்கிறது. சமுதாயத்துடன் தொடர்புகொள்ள முடியாமலும், இயைந்து பழக முடியாமலும் இருப்பது, வரையறைக்குட்பட்ட செயல்களையே மீண்டும் மீண்டும் செய்தல் ஆகியவை அவர்களுடைய குணாதிசயங்களாக இருக்கின்றன. ஒரு குழந்தை மூன்று வயதை அடைவதற்கு முன்பே (இந்த அறிகுறிகள்) துவங்கிவிடும்.
நரம்பு அணுக்களையும் அதன் ஒருவழி இணைப்புகளான நியூட்ரோன் இணைப்புகளையும், அதன் செயல்திறனையும் மாற்றி விடுவதன் மூலம் மூளையின் தகவல் பரிசீலனை செயல்பாட்டை ஆடிஸம் பாதிக்கின்றது. இது எப்படி ஏற்படுகின்றது என்பது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமலேயே இருக்கிறது.
பொதுவாக ஆடிஸத்திற்குப் பரம்பரை மரபணு கோளாறுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது. அரிதாகச் சில நோயாளிகளுக்கு, பிறவிக் குறைபாடுகளும் காரணமாக இருக்கின்றன. சுற்றுச்சூழல் காரணங்கள் அதாவது கனரக உலோகங்கள், பூச்சிமருந்துகள் அல்லது குழந்தைப்பருவ தடுப்பூசிகள் ஆகியவை மற்ற காரணிகளாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் இதில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
உலகம் முழுவதிலும் 1000பேருக்கு 1-2 பேர் ஆடிஸத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆடிஸம் பாதித்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 1980-லிருந்து திடீரென்று உயர்ந்துவிட்டது. இதற்கு காரணம், நோய் கண்டறியும் முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே என அறியப்பட்டுள்ளது. எனவே உண்மையிலேயே ஆடிஸ த்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா என்ற கேள்விக்கு விடை இல்லை. இந்நோய்க்கு மருத்துவ ரீதியான தீர்வு ஏதும் அறியப்படவில்லை என்றாலும், குழந்தைகள் இந்நோயிலிருந்து மீண்டிருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 19, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- பிசி'ஷ்டாஸனம்
- அந்த:கும்பகம்
- பஹி:கும்பகம்
- போதுசோ'காஸனம்
- ப்ரக்ரு'திகும்பகம்
- நாககும்பகம்
- கூர்மகும்பகம்
1. பிசி'ஷ்ட ஆஸனம்,
யோகாஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 67
அத பிசி'ஷ்டாஸனம்
தோஊ பகதலீ ஜோட ஸம்புட கரை /
ஹாத தோஊ பகா பிசி ஆணி தலை கரி பாரை ல்யாயீ கூஹண்யா
மாஹிஸீ ஸந்தி ராஷை /
பாசை தோஊ ஹாதா கீ காகஸீ கரீ பக உஞ்சாயீ காகஸீ ஸஷா பரீ ராஷை /
பக லலாட மோட ஜ் யு ல்காவை த்ரு'ஷ்டி நாஸா அக்ர /
ஆஸண கௌகுண பவன ஸமாஹித ஹோஇ //
செய்நுட்பம்

- கால்களை முன்னோக்கி நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள்.
- இரண்டு கால்களை ஒன்றாக மடித்து, இரண்டு பாதங்களையும் ஒன்றாக அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
- கால்களுக்கு இடையில் கைகளை நுழைத்து கால்களை மேல்நோக்கி உயர்த்துங்கள்.
- முகத்திற்கு நேராகப் பாதங்களை எடுத்து வாருங்கள்.
- கை விரல்களை ஒன்றாகக் கோர்த்து, உள்ளங்கைகளை நெற்றியின்மீது வைத்துக்கொள்ளுங்கள்.
- பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
- இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
2. பிசி'ஷ்டாஸனத்தில் இருந்தபடியே
அந்த:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 28
அத அந்த:கும்பக:
ஸூஷ்ம்ணாந்தர்கதம் தஸ்யாம் நிர்விகல்பேன சேதஸா /
தாரயேந்மாருதம் யோகீ ஸோSந்த:கும்ப: சி'வோதித: // 28
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், அதாவது முற்றிலும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, முதுகெலும்பில் இருக்கும் குண்டலினீ செல்லும் பாதையான சுழுமனை நாடியில் சுவாசத்தை நிறுத்த வேண்டும். இதுவே சிவபெருமானால் அருளப்பட்ட அந்தறகும்பகம்.
செய்நுட்பம்
- எவ்வித எண்ணங்களும் இல்லாமல் அதாவது அன்கிளட்ச் செய்தவாறே, சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை வெளிவிட்டுத் தளர்த்திக் கொள்ளவும். 2 அல்லது 3 முறை இயல்பாக சுவாசிக்கவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
3. பிசி'ஷ்டாஸனத்தில் இருந்தபடியே பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அி பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஒர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.
செய்நுட்பம்
- மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
- எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
4. போதூலோக ஆஸனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 220-222
அி போதூலோகாஸனம்
தோஉ பகதலீ பூபரீ தரை கோர மாஹிலீ ஐஸே கரை
கோர மிலாச உகட பைஸே ஜங்தா சாதீ அக்ர நிவேஸே // 220
ச்யபுக கோடா உபரி கரை நாஸாத்ரிஷ்டி அசல லே தரை /
பூஜா பரஸ்பர பகடே தோச தவாம் லாகனீ கடின ஜு ஸோச // 221
பஹுரி உபை பூஜ கீஜு கலாச கலா கோடா அக்ர தரை லகாச /
யோ ஆஸன சட்தௌ ஜு கராவை ம்ரு'கீ ஆவதீ கதே ன ஆவை // 222
செய்நுட்பம்
- தரையில் குத்துக்காலிட்டு அமருங்கள்.
- முட்டிகளை நெஞ்சப்பகுதிக்கு அருகில் இருக்குமாறு பிடியுங்கள்.
- கைகளைக் குறுக்காக வைத்து, வலது கையால் இடது முட்டியையும், இடது கையால் வலது முட்டியையும் பிடியுங்கள்.
- தாடையை முட்டிகளின்மீது வைக்கவும்.
- பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.

போதஸோக ஆஸனம்
5. போதசோ'காஸனத்தில் இருந்தபடியே ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70
அத ப்ரக்ரு'தி:கும்பக:
வாங்விதேனாசு'கம் கர்ஷன் குர்வந்தூர்ச்சதரம் ஸ்வநம்/
தரயேச்சோ-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
- பிறகு மெதுவாகச்ாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
6. போதசோ'காஸனத்தில் இருந்தபடியே
நாக்கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அத நாககும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோதித: /
க்ஷீதாம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
7. போதசோ'காஸனத்தில் இருந்தபடியே கூர்மகும்புக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79
அத கூர்மகும்புக:
நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: /
நேத்ரயோச்'வ ச'ரீரஸ்ய கூர்மகும்பு: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு

கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு
பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலை
வைக்கும்போது நிகழும்கும்பகம் கூர்மகும்
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந
- உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு பு
- இமைகளை இமைக்காதீர்கள். கண்பா அசைக்காதீர்கள்.
- இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும நிகழும்.
- இதற்குமேல் முடியாது எனும் நிலை
- இதை 21முறை செய்யுங்கள்.