KAILASA Library/ஜீவன் முக்தி/காம உணர்ச்சிகள் வாட்டுகிறது...Sign in
ஜீவன் முக்தி

காம உணர்ச்சிகள் வாட்டுகிறது...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lustful feelings are torturing me...

27.காம உணர்ச்சிகள் என்னை வாட்டுகிறது. அவற்றை அடக்க நினைக்கி றேன் முடியவில்லை வழி சொல்லுங்கள்.

  • இராகுல், காஞ்சி.

காமத்தை அடக்க முயற்சிக்காதீர்கள்,

கடக்க முயற்சியுங்கள்.

முதலில் எந்தவொரு உணர்ச்சியையும் அடக்குவது பாம்பை சும்மா அடிப்பதற்குச் சமம். அடிபட்டதும் அடியில் படுத்திருக்கும் பாம்பு, ஆறடி கூட எழும்பும், ஆச்சரியப்படுவதிற்கில்லை.

கோபத்தைக் கூட அடக்கக் கூடாது. கடக்க வேண்டும்.

யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்களே...

Why no one is understanding Me?

28.நான் நல்லவன் என்பதை ஏன் யாருமே புரிந்துகொள்ள மாட்டங்கறாங்க? எல்லாம் கலி முத்திப்போச்சு... மட மனிதர்கள் மாறுவார்களா?

  • ஜேம்ஸ், திருச்சி.

இது கலிகாலங்க. நீங்கள் நல்லவராக வாழ்வது மட்டுமே போதாது. நீங்கள் நல்லவர் என்பதை மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். நீங்கள் நல்லவர் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்திருப்பதே மாபெரும் முன்னேற்றம்தான்.

நல்லவன் நான் என சொல்வதும்

நல்லவன்போல் நடிப்பதும் - உங்களைக்

கெட்டவனாக்கிக் காண்பிக்கும்

நல்லவன் நான் என

சொல்லாதீர்! காண்பிக்காதீர்!

நல்லவனாகவே மாறிவிடுங்கள். அதை உங்கள் செயல் முகபாவங்களில் முழுமையாய் வெளிப்படுத்துங்கள். மற்றவரைக் குறை சொல்வதால் உங்கள் குறை நீங்காது.

மற்றவர் யாராயிருந்தாலும் அவரை மகான்போல் மதிக்கும் சத்ய யுகம் அல்ல இது. இது கலிகாலம்.

நல்லவனாயிருப்பதோடு - புரியும் வகையில்

நல்லவனாய் வாழ்ந்து காட்டவேண்டும்.

  • இது கலியுக நெறி.

நரகம் செல்வேனா?

Will I go to hell?

29. தவறு செய்தால் நரகம் செல்வேனா?

  • மணிமேகலை, மதுரை

தவறு செய்வதால் நரகம் செல்ல மாட்டீர்கள். நரகத்தில் வாழ்வதால்தான் தவறுகள் பல செய்வீர்கள். நொடிக்கு நொடி உங்களைத் துடிக்க வைக்கும் மன வேதனைகளே நரகம்

நரகம் புவியியல் ரீதியானது அல்ல;

மனவியல் ரீதியானது.

எனவே, நரகம் பற்றித் துளிகூட பயம் வேண்டாம். நரக உணர்வுகளிலிருந்து வெளிவந்தாலே தவறு செய்ய மாட்டீர்கள். உயர்ந்த உணர்வுகளில் வாழ ஆரம்பியுங்கள்.

சொர்க்கத்திலேயே வாழ்வீர்கள்.

illustration of a banyan tree