KAILASA Library/ஜீவன் முக்தி/யார் கடவுள்? அவர் எங்கிருக்கிறார்?Sign in
ஜீவன் முக்தி

யார் கடவுள்? அவர் எங்கிருக்கிறார்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Is God there? or not there?

25.எந்தச் சத்சங்கத்திலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்வி, “கடவுள் இருக்கிறாரா, இல்லையா?”

‘இல்லை’ என்று சொல்பவர்களும் முட்டாள்கள். ‘இருக்கிறார்’ என்று சொல்லி வாதம் செய்பவர்களும் முட்டாள்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது வாதத்தின் மூலம் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு பொருள் அல்ல. கடந்து உள்ளிருந்து அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு உணர்வு.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது வாத, பிரதிவாதங்களின் மூலமாகத் தெரிந்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு பொருள் அல்ல!

கடந்து, உள்ளிருந்து... உணரப்பட வேண்டிய ஒரு உணர்வு.

“கடவுள் என்கிற வார்த்தைக்கு நமக்கு என்ன தெரியுமோ, அதைவிடவும் தாண்டிய நிலையில் இருப்பவர் ராமகிருஷ்ணர்,” என்று விவேகானந்தர் சொல்கிறார்.

அதனால் தான், அவரைக் கடவுள் என்கின்ற வார்த்தையையும் தாண்டிய அவதாரப்புருஷர் என்று அழைக்கிறேன் என்கிறார்.

யாரும் புரிந்து கொள்வதில்லை ஏன்...?

No one understands... Why?

26.என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்?

  • முருகேசன்,கடப்பா

உங்களை மற்ற எல்லோரும் புரிந்துகொள்வது என்பது, இந்த ஜென்மத்தில் அல்ல.

எந்த ஜென்மத்திலும் நடக்காத காரியம்.

முதலில் உங்களை நீங்கள் புரிந்துகொண்டீர்களா?

அதுவே அரைகுறையாக இருக்கும்பொழுது, “மற்றவரெல்லாம் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று வற்புறுத்துவதும், எதிர்பார்ப்பதும் வறட்டுப் பிடிவாதம்.

புரிந்துகொள்வார்கள் என நினைக்காதீர்கள். “புரிந்து கொண்டேன்,புரிந்து கொள்வேன்,” என வாழ ஆரம்பியுங்கள். இதனால் பிரச்சினை தீர்ந்தது. பிரகாசம் வந்தது, உங்கள் வாழ்வில்!