KAILASA Library/ஜீவன் முக்தி/ஆனந்தம்Sign in
ஜீவன் முக்தி

ஆனந்தம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள்

வாழ்வு ஒரு அழகிய வீணை.

ஆனந்தம் எனும் இசை, அதிலிருந்து மீட்டப்படுவதற்கு, அதன் நாண் (கம்பி), ஸ்ருதி (tune) ஏற்றப்படவேண்டும்.

ஸ்ருதி ஏற்றப்படாத வீணையை மீட்டினால், இசைக்குப் பதிலாக ஓசைதான் வரும்.

அதுபோல்தான் நம் வாழ்வும். நம் வாழ்வே தொடர்ந்து இயற்கையால் மீட்டப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு இன்னிசைக் கச்சேரிதான். ஸ்ருதி சரியாக ஏற்றப்பட்டிருந்தால், அதிலிருந்து ""ஆனந்தம்" எனும் கீதம் வந்து கொண்டே இருக்கும்.

உங்களின் வாழ்வில் ஸ்ருதியேற்றப்பட வேண்டிய மூன்று ""நாண்களை" இப்பொழுதே ஸ்ருதியேற்றிவிட்டால், உங்களை அழிக்கும் '""நான்' கரைந்துவிடும். ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள் மீட்டப்படும்.

ஆனந்த வாழ்வுக்கு உங்களைச் சுருதியேற்றும் அந்த மூன்று நாண்களைத்தான்...

1. நித்யம்.

2. தியானம்.

3. ஆனந்தம்.

என்றழைக்கிறோம். ஆனந்த வாழ்வின் ஆதார சுருதிகளை உள்வாங்குவதே, ஆனந்த வாழ்வை அனுபவமாக்கும். வாழ்வின் பல புது மடல்களை மலர வைக்கும்.

நித்யம்

மனம் என்பது முன்பதிவு செய்யப்பட்ட கேசட்

Mind is a recorded cassette

மனிதனுக்குள் இருக்கிற ஸாஃப்ட்வேர் (மென்பொருள்) முழுவதும் ‘வைரஸாக’ இருக்கிறது. வைரஸ் இருக்கும் வரை, கணினியில் எந்த வேலையும் செய்யமுடியாது. அப்படியே செய்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பிரச்சினை வரும். நம்முடைய ஸாஃப்ட்வேரை சரி செய்தால் மட்டும்தான், நமது வாழ்க்கையில் நிரந்தரமான முன்னேற்றத்திற்கான முதல் அடியையே வைக்க முடியும்.

‘அதென்ன நமக்குள்ளே ஸாப்ட்வேர்?’ (Software) என்று ஆச்சரியமாக நீங்கள் கேட்கலாம்.

ஸாஃப்ட்வேர் (Software) என்றால் வேறொன்றுமில்லை, அது நமது மனம்தான். நாம் நினைப்பதுபோல் நம் மனம், ஒரு சுதந்திரமான விஷயம் கிடையாது. நம்முடைய மனமும் ஸாஃப்ட்வேர் மாதிரியே ப்ரோகிராம் (Programme) செய்யப்பட்ட ஒரு மென்பொருள் போன்றதுதான்.

உண்மையில் மனிதனின் இயற்கையான, இயல்பான சுபாவம் ஆனந்தம்தான். அந்த ஆனந்தத்தைத்தான் நாம் இழந்து விட்டோம். கணினி, வைரசால் பாதிக்கப்பட்டால் செயல் இழந்துவிடுவதுபோல், மனம் எண்ணங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம்;

சுருதி சரியாக
ஏற்றப்பட்டிருந்தால்,
அதிலிருந்து
‘ஆனந்தம் எனும்
கீதம்’ வந்து
கொண்டே இருக்கும்

காலையில் ஏழு மணிக்குக் காபி குடிக்கிற பழக்கமோ, சிகரெட் பிடிக்கிற பழக்கமோ இருந்தால், காலையில் கடிகாரமே பார்க்க வேண்டாம். நமக்குள்ளே இருந்தே சரியாக ‘காபி’ என்று மணி அடிக்கும்.

உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும்தான். நாம் இந்தத் தன்னிச்சையான செயலை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தோம் என்றால் மனத்தின் செயல்பாடு புரியும்.

காலையில் எழுந்த உடனே வீட்டைப்பற்றிக் கவலைப்படுவது, ஒன்பது மணியானால் ஆபீஸைப் பற்றிக் கவலைப் படுவது, மாலை நான்கு மணியானால் பிள்ளைகளுடைய படிப்பைப் பற்றிக் கவலைப் படுவது, எட்டு மணிக்குத் திரும்பவும் வீட்டைப் பற்றிக் கவலைப்படுவது, இப்படி நமக்குள் வழக்கமாக ஒரு பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தால்கூட, காலைப் பத்துமணி ஆனவுடனேயே, ஆபீஸ் கவலைகள் எல்லாம் மனத்திற்குள் வரத் துவங்கிவிடும். கொஞ்சம் உங்களையே கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், இதை உணர்வீர்கள். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கூட, இப்படியேதான் ஒரு பழக்கத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காலையில் பல் துலக்கும் பொழுதே உங்கள் மனத்திற்குள் ஒரே விதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இது பழகிப்போன பின்பு, தினந்தோறும் அதே நேரத்தில், அதே எண்ணம் தோன்றும். குறிப்பிட்ட சம்பவம், குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட இடம் என்று ஒரே விதமாகத் தோன்றும். காலை நேரத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, மேற்கண்ட எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வரத் துவங்கும்.

இதுபோன்று ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான எண்ணங்கள், மனத்திற்குள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டேயிருக்கும். சூழ்நிலை மாறினாலும், வெளியுலகம் மாறினாலும் கூட, உள்ளுலகத்தில் உங்களை அறியாமல் ஒரே மாதிரியான எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். அதனால்தான் சொல்கிறோம், மனம் ஒரு சு தந்திரமான வஸ்து கிடையாது. அது முன்பதிவு செய்யப்பட்ட கேஸட். அவ்வளவுதான்.

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருப்பதை அழித்துப் புதிதாக வேறு பதிவு செய்யும் வரை, ஒரே விதமாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கும். இதில் உங்களுக்கு ஒரே ஒரு சுதந்திரம்தான் இருக்கிறது. முன்பே பதிவு செய்துள்ள விஷயங்களை அழித்து, வேறு ஒரு புதிய விஷயத்தைப் பதிவு செய்து கொள்ள முடியும். புதியதோ, பழையதோ மனம் என்றால் அதில் ஏதேனும் சில எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அதில் பழைய பதிவுகளை அழிக்கும் வரை, அதே பழைய எண்ணங்களே ஓடிக் கொண்டிருக்கும். அதனால்தான் பதிவு செய்யப்பட்ட மனத்தைத் தாண்டிய நிலையில் நம்மால் இயங்க முடிவதில்லை. உடலையும், மனத்தையும் தாண்டி இயங்க முடிவதில்லை.

பதிவு செய்யப்பட்ட பழைய எண்ணங்களை அழிக்க வேண்டுமென்றால் துக்க எண்ணங்களை அழிக்கும் உயர்ந்த புது எண்ணங்களைப் பதிவு செய்வதே அதற்குத் தீர்வு தரும்.

தெளிந்த வாழ்க்கைக்குத் தேவையான மன அமைப்பு

The mental setup for a life of clarity

நித்யம் என்றால் என்ன...?

எது சத்தியம்?

எது சத்தியமில்லை?

எது உண்மை?

எது உண்மையில்லை?

இவற்றைப் பற்றி, உங்கள் மனத்திற்குள்ளே நீங்களே ஏற்படுத்திக் கொள்கிற தெளிவுதான் நித்யம்.

உங்கள் மனத்தை, நீங்கள் ப்ரோகிராம் செய்து கொள்கிற சுதந்திரம்தான் நித்யம். இருக்கும் மன அமைப்பை மாற்றி, புதிய மன அமைப்பை உருவாக்கும் முன் எது நித்யம், எது நித்யமில்லை என்பதை, உங்களுக்கு நீங்களே எடுத்துச் சொல்லிக்கொள்ளக்கூடிய தெளிவு முதலில் வர வேண்டும்.

முடிவெடுக்கும் முன்பு தெளிவு பிறக்க வேண்டும். தெளிவு வேண்டு மென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும்? மீண்டும் மீண்டும் நம்முடைய மனத்தைத் தூக்கி நிறுத்திக் கொள்ளக்கூடிய கருத்துகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய தேவைக்கு மட்டும் நாம் பணம் சேர்ப்பதில்லை; பணம் சாம்பாதிப்பதில்லை. அடிப்படை தேவைகள் பூர்த்தியடைந்திருந்தாலும், பணம் சேர்ப்பதில் மட்டும் எவ்வளவு முன்யோசனை செய்கிறோம் என்று சற்று யோசனை செய்து பாருங்கள்.

தலைமுறை தலைமுறைக்கும் வறுமை வரக்கூடாது என்றே யோசிக்கிறோம்; அவர்களின் வறுமை காலத்திற்கும் உதவட்டும் என்று சேர்த்து வைக்கிறோம்.

மனம் ஒரு
சுதந்திரமான
வஸ்து கிடையாது.
அது முன்பதிவு
செய்யப்பட்ட
கேஸட்

வறுமை காலத்திற்கான பணத்தைச் சேர்த்து வைப்பதுபோல், மனத்தின் வறுமை காலத்திற்கென ஞானக் கருத்துகளைச் சேர்த்து வைக்க வேண்டும். மன அழுத்தமும், மன உளைச்சலும் வருகிற காலத்திலே நம்மை நாமே எழுப்பி நிறுத்திக் கொள்வதற்கான ஞானக் கருத்துகளைச் சேர்த்து வைத்தலைத்தான் நித்யம் என்ற வார்த்தையால் சொல்கிறோம்.

நித்யம் என்றால் என்ன என்பதை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான உதாரணம், இது. நீங்கள் ரொம்பவும் நொந்து போய், துக்கமயமாக, மிகப்பெரிய பிரச்சினையில் இருக்கும்போது, யாராவது ஒரு நம்பிக்கைக்குரிய அன்பர், உங்களுக்குச் சரியான தெளிவைக் கொடுத்து, கருத்துகளைக் கொடுத்து, உங்களை அந்தத் துக்கத்திலிருந்து வெளியில் எடுத்து வந்தார் என்றால், அது எவ்வளவு பெரிய உதவியாக இருக்கும்!

யோசித்துப் பாருங்கள்.. அப்போது நாம் சொல்வோம்..., “கடவுளே நேரில் வந்து சொன்னதுபோல இருந்ததப்பா...,” உண்மையிலேயே அந்த நேரத்தில் அந்த நபர் மூலம் கடவுள்தான் வந்து உதவி செய்கிறார்.

சரியான நேரத்தில் நமக்கு அளிக்கப்படும் ஞானக் கருத்துகள், தெளிந்த கருத்துகள் நம்மை துக்கத்திலிருந்து ஒரு வினாடியாவது நம்மை மேலே எடுத்து வந்து விடும். மனத்தின் காயத்திற்கு ஒரே மருந்து ஞான கருத்துகளே.

தியானம்

நம் வாழ்க்கையில் சேர்த்து வைத்த அனைத்து ஞானக் கருத்துகளையும் அனுபவமாக மாற்றுதலே தியானம். பொதுவாக இந்த ஞானக்கருத்துகளைச் சேர்க்கும்போது அறிவுப்பூர்வமாக நமக்கு இருக்கிற பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து விடுவோம். ஆனால், உணர்வுப்பூர்வமாக இருக்கிற பிரச்சினைகளை, கருத்துகளைத் தெரிந்து கொள்வதால் மட்டும் தீர்க்க முடியாது. அதை அனுபவமாக மாற்ற வேண்டும்.

உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளுக்கான தீர்வு

The solution for consciousness related problems

சிலபேர், "சிகரெட் பிடிப்பது தவறு என்று தெரிகிறது. ஆனால், அதைப் பிடிக்காமல் இருக்க முடியவில்லையே" என்று சொல்வார்கள்.

சிகரெட் பிடிப்பது தவறு என்று தெரிவது அறிவுப்பூர்வமான தெளிவு. அதைவிட முடியவில்லை என்பது, உணர்வுப்பூர்வமாக ஏற்படுகிற ஒத்திசைவு.

உணர்வு ரீதியாகவும் அதை விட்டுவிடக் கூடிய சக்தியை, ஸ்திரத் தன்மையை கொண்டு வருவதுதான் தியானம். அறிவுப்பூர்வமான தெளிவிற்கு வந்து விடுவது நித்யம்.

நித்யம் எது? அநித்யம் எது? என்ற விவேகத்தை ஏற்படுத்திக் கொள்வது நித்யம். அதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கும், ஆழ்ந்த அனுபவமாக மாற்றுவதற்கும் ச க்தியை எடுத்து வரும் வழி தியானம்.

உத்வேக சக்தியைத் திறக்கும் வழி, தியானம்

Meditation is the key to open the inspirational energy of intensity

தியானம் என்றால் என்ன?

இதற்கான அருமையான விளக்கம் இது.

தியானம் என்பது, நமக்குள் என்றும் குறையாத உத்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கக் கூடிய வழிகாட்டி.

நம் வாழ்க்கையில் உத்சாகமும், உத்வேகமும் எப்பொழுது வருகிறதென்று பாருங்கள். எதனால் வருகிறதென்று பாருங்கள். ஒன்று, ஆசையினால் வரும் அல்லது அச்சத்தினால் வரும். ஆசையினாலும், அச்சத்தினாலும் மட்டும்தான் அந்த உத்சாகமே வரும். இல்லை என்றால் வராது.

உங்களுடைய வாழ்க்கையை எப்படி அணுகுகிறீர்கள் என்பதைச் சற்று பொறுமையோடு பார்த்தீர்கள் என்றால் புரியும்.

காலையில் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் தருணத்தைச் சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள்.

கனவில் இருந்து வெளியில் வந்து கண்விழித்துப் பார்த்த பின்னும் படுத்த நிலையிலேயே இருப்போம். மந்தமாகப் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருப்போம். ஏதாவது உறுதியான ஆசை வந்த பிறகுதான், படுக்கையில் இருந்தே எழுந்து கொள்வோம்.

உதாரணத்திற்கு, யாரேயேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையோ, வேலைக்கு போயே ஆக வேண்டும் என்ற அச்சமோ உச்சத்திற்கு வந்தால்தான் படுக்கையிலிருந்து எழுவோம். உண்மையில் இந்த மன அமைப்பால் நம்முடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டது.

காலையில் கண்விழிக்கும்போது உற்சாகத்தோடு எழுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

> உற்சாகச்
> சக்தியை
> நமக்குள்ளே
> திறந்து
> வைப்பதுதான்
> தியானம்.

ஆனால், யாரையோ பார்க்க வேண்டுமென்றோ, எதையோ செய்ய வேண்டும் என் றா, இல்லை இந்த வேலையைச் செய்யவில்லை என்றால், நம் வேலையேபோய் விடும் என்றோ, நாம் எதையோ இழந்து விடுவோம் என்ற ஏதாவது ஒரு அச்சம் வந்தால் மட்டும்தான் படுக்கையை விட்டே எழுகிறோம்.

ஆசையோ, அச்சமோதான் நமக்கு உத்வேகத்தையே அளிக்கிறது. இது இரண்டும் இல்லை என்றால், படுக்கையிலேயே புரண்டு கொண்டிருப்போம். கண் விழித்தபிறகும் படுக்கையில் புரள்கிற ஒரே மிருகம் மனிதன்தான்.

மாடாக இருந்தால், காலையில் அது செய்கிற முதல் வேலை, கட்டி வைத்திருந்தால் கூட கட்டி வைக்கப் பட்டிருக்கும் அந்தக் கோலை ஒரு முறையாவது சுற்றிச் வரும்.

பூனையாக இருந்தால், தன் உடலையே முறுக்கிக் கொண்டு, தனக்குதானே சுறுசுறுப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

ஒரு நாயாக இருந்தால், காலையில் எழுந்தவுடன், தனது எல்லையை ஒரு முறை சுற்றி பார்த்து வரும்.

எந்த ஒரு மிருகமுமே எழுந்தவுடனேயே, உற்சாகத்தோடு உடலை இயக்கும். ஆனால், தூக்கம் கலைந்த பின்னும் மந்தமாகப் புரண்டு கொண்டிருக்கும் ஒரே மிருகம் மனிதன்தான்.

இயற்கைக்கும், நமக்கும் அதிகமான இடைவெளி வந்து விட்டது. நமது வாழ்க்கையில் எந்த ஆசையும், அச்சமும் இல்லாதிருந்தால், எந்த உத்வேக சக்தியும் நம்முள் எழுவதே இல்லை. ஆசையோ அச்சமோ இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை இயங்கும் நிலை இன்று இருக்கிறது.

எப்படி வண்டிக்கு எரிபொருள் தேவையோ, அதுபோல் ஆசையும், அச்சமும்தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.

ஆசை, அச்சம் என்கிற இந்த இரண்டு சக்தி மட்டும் நம்மை இயக்காமல், மூன்றாவது ச க்தியான உத்சாகச் சக்தியை நமக்குள்ளே திறந்து வைப்பதுதான் தியானம்.

இப்பொழுது, இந்த நிமிடம் நமது உடல் இயங்க வேண்டுமென்றால் கூட அதற்கு ஒரே வழி, நமக்கு ஆசை வர வேண்டும். இல்லை என்றால், அச்சம் வர வேண்டும். இல்லையென்றால், உடல் இயங்காது.

எந்தச் செயல், ஆசை அச்சமில்லாமல் நமக்குள்ளேயே இயங்குகிற உத்சாகத்தை, உத்வேகத்தைத் தருகிறதோ, அதுவே தியானம். தியானத்தின் விளக்கம் இதுதான். ஆசை அச்சத்தை உருவாக்காமல், உற்சாகத்தைத் தரக்கூடிய எல்லாச் செ யல்களுமே தியானம்தான்.