ஜீவன் முக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரே
நாளில்
2,50,000
பிரதிகள் முன்பதிவு
விற்பனை சாதனை
நித்யானந்த தியானபீடம்
வா
ழ்
க்
கை
வா
ழ்
வ
த
ற்
கே!
ஜீவன் முக்தி
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள்
(சுருக்கத் தொகுப்பு)
நித்யானந்த தியானபீடம்
ஜீவன் முக்தி
பரமஹம்ஸ நித்யானந்தரின்
அமுதமொழிகள் (சுருக்கத் தொகுப்பு)
வெளியீடு:
நித்யானந்த தியானபீடம், நித்யானந்தபுரி, மைசூர் சாலை, பிடதி.
பெங்களூரு, 562 109, கர்நாடகா, இந்தியா.
அட்டை வடிவமைப்பு : நித்யானந்த தியானபீடம்,
பக்கங்கள் : 933
தனிப் பிரசுர உரிமை : Copy right © 2011 ® All copy rights reserved
ஏழாம் பதிப்பு : மார்ச், 2011, ஜீவன் முக்த வருடம்
Ebook ISBN: 979-8-88572-349-7
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம்
பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு
கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ
அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது.
தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின்
பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக் கூடிய
நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ
பொறுப்பல்ல.
இந்தப் புத்தக விற்பனை மூலமாக பெறப்படும் நன்கொடை நிதி முழுவதும், நித்யானந்த
தியானபீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்கு சேவையாகச் சென்றடைகிறது.
- நித்யானந்த தியானபீடம்
முக்கிய அறிவிப்பு
தியானங்களுக்குப் பக்கவிளைவுகள் என்பதே கிடையாது. தியானபீடத்தின் பயிற்றுவிக்கப்பட்ட
ஆச்சாரியர்கள்,உங்கள் உடல்நிலை தயாராக இல்லாதபோது, சில ஆயத்த தியானங்கள் சொல்லித்
தந்து ஆழமான தியானங்களைச் செய்வதற்கு உங்களைத் தயார் செய்வார்கள். இதுபோல்
மருத்துவ ரீதியான, உளவியல் ரீதியான சில காரணங்கள் இருப்பதினால், இந்தப் புத்தகத்தில்
இடம் பெற்றுள்ள அனைத்து தியானங்களையும், நித்யானந்த தியானபீடத்தின் தீக்ஷை பெற்ற
ஆச்சாரியரின் நேரடி பார்வையிலும், குடும்ப நல மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகும்
செய்தல் வேண்டும்.
இந்தத் தியானங்களை நீங்கள்ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருக்கும் மருத்துவ உதவிக்கு
மாற்றாகவோ அல்லது ஆலோசனையாகவோ அல்லது பரிந்துரையாகவோ அல்லது
சிகிச்சையாகவோ நினைத்து பயிற்சி செய்தல் கூடாது.
நித்யானந்த தியானபீடத்தின் தியான முகாம்களில் தீக்ஷை அளிக்கப்பட்ட ஆச்சாரியரின் நேரடிப்
பார்வையிலும், இந்தத் தியான நுட்பங்களை முறையாக, முழுமையாகக் கற்றுக் கொண்டு
செய்யாத பட்சத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு அந்தத் தனிநபரே பொறுப்பு.
இந்தப் புத்தக ஆசிரியரோ, நித்யானந்த தியானபீடமோ அதற்கு எந்த ஒரு விதத்திலும்
பொறுப்பல்ல.
முக்தியுரை
பிரபஞ்சம் உங்களை ஆழமாக ரசிக்கிறது!
உங்களின் தங்கை வீட்டிற்கு, உங்களின் தங்க மகளை விடுமுறைக்காக அனுப்பி வைத்துவிட்டு, எப்படி மகளின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பீர்களோ, அப்படி உங்களைப் பூமிக்கு அனுப்பி வைத்து இறைசக்தி ஆவலோடு உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
எங்கோ இருக்கும் பிள்ளையின் ஒரு தொலைபேசி அழைப்பு போதும்... நீங்கள் ஓடோடி வந்துவிடுவீர்கள்.
ஆனால், அது தெரியாமல், அத்தை வீட்டில் விளையாட ஆரம்பித்த குழந்தை தன்னையே சில நாட்களுக்கு மறந்துவிடும்! பூமியில் மனிதன் வாழ்வதும் இதே விருந்தாளி விளையாட்டுத்தான்.
புது உறவு... புது இடம்... புது கூத்து... ஒரு சண்டையோ, சங்கடமோ அங்குவராத வரை எல்லாமே நன்றாகவே போகும். ஒரு சச்சரவு போதும், புதிதெல்லாம் புளித்துப்போகும்; களிப்பெல்லாம் சலிப்பாகிப் போகும்.
அப்போதுதான் நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த இடம் நோக்கி, வந்த மூலம்நோக்கி, நினைவு நமக்குத் திரும்பும்.
"பேசாம அம்மாகிட்டேயே போயிடலாம்... இவங்க யாருமே நம்மைப் புரிந்து கொள்ளமாட்டார்கள்..". என்ற ஏக்கம் வெடிக்க, அம்மாவுக்குத் தொலைபேசி போட்டால், அடுத்த பேருந்திலேயே அப்பா அங்கே வந்து நின்றுவிடுவார்.!
நீங்கள் எப்படியிருந்தாலும் உங்களின் அழகை அப்படியே ரசிக்கும் உங்களின் அன்னை இறைசக்தி.
கண், காது, மூக்கு, நாக்கு என்ற எதுவுமே உருவாகும் முன்பு, அவளின் மடியில்தான் உறங்கிக்கொண்டிருந்தீர்கள்.
இங்குச் சிலகால விடுமுறையாக மட்டுமே வந்திருக்கின்றீர்கள். எங்குப் பிறந்திருந்தாலும், எப்படி வளர்ந்திருந்தாலும், நாம் அனைவரும் அவளுக்கு, அந்த இறைசக்திக்குச் சொந்தமானவர்கள்தான். பூலோக வாழ்வு எனும் 100 வருட விடுமுறை எப்போது வேண்டுமானாலும் முடிந்துவிடும்.
முடிந்த பின்பு, வந்த இடம் நோக்கித்தான் செல்வீர்கள். அங்கே நீங்கள் ஒரு இந்து அல்ல; நீங்கள் ஒரு முகமதியர் அல்ல; நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல. படித்தவரோ படிக்காதவரோ, அல்ல.
நீங்கள் அங்கு ஒரு மனிதர் கூட அல்ல. இன்னும் பெரிய வேடிக்கை என்னவென்றால், அங்கு உங்களுக்கு உடல்கூட கிடையாது.
சரியாகச் சொல்ல வேண்டுமானால், அங்கு நீங்களே கிடையாது. இப்போது 'நீங்கள்' என்று உங்களைச் சொல்லும் எதுவுமே அங்கு கிடையாது.
இப்போது,
இந்த நிமிடம்...
கண்களை மூடினால்...
உள்ளே என்ன தெரிகின்றதென்று பாருங்கள்.
இதுதான் உங்களுக்குத் தெரிந்த நீங்கள்.
இதைவிட சூட்சுமமான நிலையில்தான் அப்போது இருப்பீர்கள். அப்போதும் அந்த இறைசக்தி உங்களை அன்போடு கொஞ்சவே செய்யும். எதையுமே உங்களிடமிருந்து எதிர்பார்க்காமல், ஜீவன் முக்தியை நீங்கள் அடைய வேண்டும் என்ற அவளின் ஹிரண்ய கர்ப்பத் துடிப்பால், உங்களைப் பூமியில், உங்களின் விருப்பத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறு உங்களை பிரசவிப்பாள். பூமிக்கு, புது அனுபவத்திற்காக விடுமுறைக்காக அனுப்பி வைப்பாள்.
ஒருவேளை! வந்த இடம் உங்களுக்கு ஒத்து வராவிட்டாலும் சரி, இதற்குமேல் செய்வதற்கு என்ன இருக்கிறது என்ற வெறுமை தோன்றினாலும் சரி, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொலைபேசியை எடுத்தால் போதும்.
தொலைவில் இருப்பதாய் நீங்கள் நினைக்கும் இறைசக்தி, "போதும்ப்பா! என்னைக் காப்பாற்று! என்னை மேலேற்று!" என்று ஒரே ஒரு முறை உங்களுக்குள் டயல் செய்தால் போதும். உங்களின் உணர்வுபேசி, தொலைபேசியை விட துரிதமானது.
உங்களின் இறைத்தாயை ஒரே ஒரு முறை அழைத்தால் போதும், அடுத்த பேருந்தில் அல்ல, அடுத்த யோசனை காலத்திற்குள், உங்களின் தந்தை அங்கு வந்து சேர்ந்து விடுவார். ஏதோ ஒரு உருவில், வடிவில், தாளில், எப்படியோ அவர் வந்து சேர்ந்துவிடுவார்.
உங்களின் தாய்தான் உங்களுக்குள்ளேயே வாழும் இறைசக்தி,
உங்களின் தந்தைதான் உங்களுக்காகவே பிறந்திருக்கும், ஜீவன் முக்த புதல்வர்களுக்காகவே ஒவ்வொரு காலத்திலும் பிறப்பெடுக்கும் உங்களின் சத்குருநாதர்.
தந்தையை நீங்களே தேடலாம்.
அல்லது தாயிடம் வேண்டிய மாத்திரத்தில், தந்தையை உங்களின் வாழ்வில் தோன்றச் செய்யலாம். எளிதில் சந்திக்கலாம்.
எது எப்படியோ?... இது புது இடம்.
வெகு சீக்கிரத்தில் காலி செய்யப்பட வேண்டிய இடம் இது!
வந்த வேலை, எந்த வேலையோ, அந்த வேலையை விட்டுவிட்டு எந்தெந்த வேலைகளிலெல்லாமோ காலத்தைக் கழிப்பது எந்த வகையிலும் பிரயோஜனத்தைத் தருமா?
எந்த வேலையில் நீங்கள் இருந்தாலும், வந்த வேலையில் கருத்தாயிருக்க வேண்டும்.
ஆரியக் கூத்தாடினாலும், வந்த காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.
வந்த வேலை
ஜீவன் முக்தி எனும்
காரியக் கூத்தாடுவதற்கு.
வந்த வேலை
கடவுளாவதற்கு.
மனிதன் எனும் மாயத்திலிருப்பதற்கல்ல.
‘நீங்கள் கடவுள்’
என்பதற்குக் குறையாக
எந்த உணர்வு எழுந்தாலும், அது நீங்களல்ல,
‘நான் கடவுள்’
என்பதற்குக் குறையாக
உங்களைப் பற்றிய எந்தவொரு எண்ணமும்
மாயமே! தாண்டப்பட வேண்டியதே!
ஜீவன் முக்தராவதற்குத் தயாராகுங்கள். நிச்சயம் தாண்டலாம். உருகுங்கள், நிச்சயம் தாண்ட வைப்பார். வாழுங்கள்! ஜீவன் முக்தியை. நீங்கள் தொடும் முன்பே ஜீவன் முக்தி உங்களைத் தொட்டுவிடும்.
ஆனந்தமாக இருங்கள்! பரமஹம்ஸ நித்யானந்தர்
பிரமிப்புரை
இந்தப் புத்தகத்தை நீங்கள் தொட்டதற்காக நன்றி!
"அண்ணாமலையானின் அடியார்தம், அடியார்தம், அடியார்க்கும் நான் அடியேன்" என்று சொல்லும் பண்பும், பணிவும் கொண்ட அவதார புருஷரின் திருப்பாதங்களுக்கு நன்றி. சத்குருவுக்கு நன்றி. பரமஹம்ஸ நித்யானந்தருக்கு நன்றி.
ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன் வாழ்ந்த நேரடி சீடர்களின் அனுபவ தொகுப்புகளை 'கடவுளோடு வாழ்ந்தவர்கள்' எனும் புத்தகமாகத் தருவதற்கு அவர்களுக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டதாம். 'ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்' எனும் புத்தகத்தை உலகிற்குச் சேர்ப்பதற்கு ஏகப்பட்ட ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டதாம். இதையெல்லாம் கேட்ட பின்பும், சற்றும் தளராமல், இரண்டே மாதத்திற்குள் பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுதமொழிகளை புத்தகமாகத் தரும் தெய்வ சேவையைச் செய்வதற்குப் பல்வேறு வழிகளில், பல்வேறு நிலைகளில் உதவிய ஒவ்வொரு பாக்யசாலிகளுக்கும் நன்றி.
ஜனவரி 1, 2009 ஜீவன் முக்தி தீக்ஷையை 10,000 பேருக்கு தந்து, அன்று இரவே ஜீவன் முக்தி எனும் புத்தகத்தை உடனடியாக உலகிற்குத் தரப்போவதைப் பரமஹம்ஸர் சொன்னார். மார்ச் 3ஆம் தேதி அது வெளியிடப்படவேண்டும் என்ற தேதியும் தந்து, அதேபோன்று இரண்டே மாதத்திற்குள் இந்தப் புத்தகத்தை உலகிற்குத் தந்து பிரமிப்பளித்த அவதார சக்திக்கு நன்றி.!
அடுத்து இங்குக் குறிப்பிட விரும்பும் அருமையான ஜென் வாக்கியம் ஒன்று...
"நல்லதெல்லாம் நிகழ்வது இறைவனால் கெட்டதெல்லாம் நிகழ்வது மனித மனத்தால்"
சாப்பிடுவதற்காக நாங்கள் ஒன்றாய்க் கூடியபோது, விளையாட்டாய் ஜீவன் முக்தி புத்தக வெளியீடு பற்றிப் பேசிக்கொண்டோம்.
"ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளை உலகிற்குத் தருவதற்கு அவரின் சீடர்கள் அவ்வளவு வருடங்கள் எடுத்துக்கொண்டார்கள். இரண்டே மாதத்தில் ஜீவன் முக்தி புத்தகத்தைத் தரச்சொன்னால்... எப்படி முடியும்?" என்று சின்னதாய் ஒரு பெருமிதம்.
“56 பக்கங்களே கொண்ட ‘நித்யானந்தம்’ மாத இதழை, வெகு பிரயத்தனப்பட்டு பல வேலைகளுக்கு நடுவே பல அச்சுப்பிழைகளோடு தரும் கைப்பிடி துறவிகள் நாங்கள்! குறைந்தது 700 பக்கங்களுக்கு மேல் வரவேண்டிய இந்த ஜீவன் முக்தி புத்தகத்தை எப்படித் தரமுடியும்? சாத்தியமேயில்லை!” என்று எங்களுக்குள்ளே காரசாரமாகச் சத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது, யாரோ பின்னால் இருந்து கூப்பிடுவதுபோல் தோன்றவே திரும்பினோம். பிரமித்தோம்! ஆச்சரியத்தில் நெஞ்சறைந்து எழுந்தோம்!
எங்களின் காரசாரமான விவாதத்தைச் சிரித்தபடி அங்கு கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தார் பரமஹம்ஸர். எங்களின் பிரமிப்பு உடல் முழுவதும் பரவியது! சிரித்தபடி எங்களைப் பார்த்து... “எப்படித் தரமுடியும்? எப்படித் தர முடியும்? என்று கேட்கிறீர்களே, நீங்களா தரப்போகிறீர்கள்?
நீங்களா புத்தகத்தை எழுதப்போகிறீர்கள்!? ஆனந்தத்தோடு துவங்க வேண்டியதுதானே!
நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் பத்து அடி நம்மை நோக்கி எடுத்து வைப்பார்.
நீங்கள் உங்களின் பங்கை முழுமையாய்ச் செய்யுங்கள். இறைவனின் பங்கை அவர் பார்த்துக் கொள்வார்,” என்று அவர் சொன்ன வரிகள் இதயத்திற்குள் தேனாய் பாய்ந்தது. உற்சாகமாய்ப் பொங்கியது.
இருந்தாலும், இரண்டே மாதத்தில் 700 பக்கங்கள், பெரிய ஆச்சரியக்குறியாகவே இருந்தது. பிரமிப்பாகவே இருந்தது.
ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி வரையிலும், ஒரு நாள்கூட பரமஹம்ஸருக்கு ஓய்வில்லை. ஏதாவதொரு ஒரு ஊரில் கல்பதரு தியானமுகாம் அல்லது கோடிக்கண் தரிசன ரத பாதயாத்திரை பரமஹம்ஸருக்கு இருந்தது. ஊர் விட்டு ஊர் மாறும் பயணத்திற்காக மட்டும் சில நாட்கள் நடுவில் இடைவெளி விடப்பட்டிருந்தது. அந்தச் சில நாட்களைத் தவிர்த்து எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு ஊரில் ஏதாவது ஒரு தியான முகாம் இருந்து கொண்டேயிருந்தது.
ஓய்வேயில்லாதபோது எப்படி இந்தப் புத்தகத்தை குருநாதர் தரப்போகிறார்? எங்களுக்கே அப்போது சவாலாய்தான் தோன்றியது. இதற்கிடையில் இந்தப் புத்தகம் எப்படி வரும்? தடுமாறிப் போனோம்.
“உங்கள்ன் பங்கை முழுமையாகச் செட்யுங்கள்,” என்ற பரமஹம்ஸரின் அமுதவாக்கியம் கொடுத்த ஒரு சக்தியில், எங்களின் வேலைகளை ஆரம்பித்தோம். 100 ரூபாயில் இந்தப் துத்தகத்தைத் தருவதற்கும், பரமஹம்ஸரின் வார்த்தைகளை அச்சில் கொண்டுவருவதற்குமான எல்லா அடித்படை வேலைகளையும் துரிதமாக இரவுப்பகல் பாராமல் பிரம்மச்சாரிகள் செஇயத் துவங்கினார்கள்.
இப்துத்தகத்தில் உள்ள பல பக்கங்கள், பல இரவுகள் தியான முகாமை முடித்த பின்பு, பரமஹம்ஸரே நேரடியாகத் தொலைபேசிில் வந்து சொல்லச் சொல்ல அச்சுக்குச் சென்றவை.
“அவ்வளவு வேலைகளுக்கு நடுவே... ஊர் ஊராக நடக்கும் பாதயாத்திரைகளுக்கு நடுவே எப்படித்தான் இவரால் இவ்வளவும் முடிகிறதோ? என்னதான் அவதார சக்தியாக இருந்தாலும், தங்கியிருப்பது மனித உடலில்தானே! ஓஇவே தேவைப்படாதா இவருக்கு!” என்று ஆச்சரியப்பட்டு ஆச்சரியப்பட்டுப் பூத்துப் போவோம்.
நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் தத்து அடி எடுத்து வைப்பார் என்ற சத்தியத்தை பல வழிகளில் துரியவைத்து, எங்களுக்கு அதை சாத்தியமாக்கிக் காண்பித்த சத்குருநாதருக்கு நன்றி!
அவரின் பேனாவில் ஊறும் மையாக இருக்கும் வாஇப்பு, தொஇயான இந்த உடல்களுக்கும் கிடைத்ததற்கு மெஇயாஇ நன்றி!
அவரின் சொற்களையெல்லாம் சூத்திரங்களாக அச்சிட்டு வடிவமைக்க இராப்பகல் பாராது பக்தி எனும் ஒரு எரிதொருளாலேயே உடலையும், மனத்தையும் இயக்கிய எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி !
நல்லது நிகழ்வதெல்லாம் இறைவனால்... கெட்டது நிகழ்வதெல்லாம் மனித மனத்தால் என்ததை உணர்ந்து உற்சாகமாஇ எழுந்த சேவைதான், துத்தகமாக உங்களின் கையில் அமர்ந்திருக்கிறது.
இந்தப் துத்தகத்தில் இருக்கும் உங்களின் துருவத்தை உயர்த்த வைக்கும் எல்லா நல்ல வார்த்தைகளுக்கும் அவரே பொறுப்து.
எங்களையும் மீறி எங்களின் கவனக்குறைவால் உங்களின் துருவத்தை சுழிக்க வைக்கும் அச்சுப்பிழைகள் இருந்தால் அதற்கு நாங்கள்தான் பொறுப்து. எங்களை மன்னியுங்கள்.
அவசரகதியில் பிரசவமான 'ஜீவன் முக்தி' குழந்தையில் இருக்கும் சின்னச் சின்ன துள்ளிகளுக்காக எங்களை மன்னிக்கும்படி உங்களை வேண்டுகிறோம்.
இந்தப் துத்தகம் உருவாகும்போது நாங்கள் சந்தித்த தடைகளையும் அவைகளைத் தகர்த்த விதத்தையும் தொகுத்தாலே சூடுபறக்கும் விறுவிறுப்பான ஒரு நாவலையே தொகுத்துவிடலாம். அவ்வளவு பிரமிப்புடைய பரவசங்களை இறை சக்தி நடத்தக் கண்டோம்.
ஜீவன் முக்தி என்ற இந்த பொக்கிஷம் பார்ப்பதற்குக் கண்களுக்கு புத்தகமாகத் தெரியலாம். ஆனால், எங்களுக்கு அது புத்தகமல்ல. அது அவரின் உழைப்பு! அவரின் இரத்தம்! அவரின் வியர்வை! அவரின் கருணை!
எங்களுக்கு, இந்தப் புத்தகமே... எங்களின் சத்குருநாதர்தான்!
எங்களின் சத்குருநாதரையே உங்களின் கரங்களில் நீங்கள் இப்போது வைத்திருப்பதால், எங்களின் சத்குருவையே ஏந்தியிருக்கும் உங்களின் பாதங்களைத் தொட்டு நன்றி சொல்கிறோம்.
இந்தப் புத்தகத்தை நீங்கள் தொட்டதற்காகவே நன்றி!
நித்யானந்தத்தில்... நித்யானந்தா பதிப்பகம்
குறிப்புரை
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியிலிருந்து இன்றுவரை உலகிற்குப் பல்வேறு வகையில் உதவிக் கொண்டிருக்கும் எல்லாக் குருமார்களுக்கும் நன்றி.
சிவசூத்திரத்தைத் தந்த சிவபெருமான்... பகவத்கீதையைத் தந்த கிருஷ்ண பரமாத்மா... உபநிடதங்களைத் தந்த ரிஷிமார்கள்... தம்ம பதத்தைத் தந்த புத்த பெருமான்... இவர்கள் எல்லோரின் சாரத்தைப் பிழிந்து தியான முறையாக்கி, ஞானக் கருத்துக்களாக்கி, பக்தி ரசமாக்கி, வாழ்வியல் தீர்வுகளாகவும், தியானங்களாகவும் தந்த எல்லாக் குருமார்களுக்கும் நன்றி.
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியிலிருந்து, ரமண மகரிஷி வரை தியானம், ஞானம், ஆனந்தம் பற்றிப் பேசிய எல்லாக் குருமார்களுக்கும் நன்றி... அவர்களின் வார்த்தைகளால் நிரம்பிய வேதங்களுக்கும், சூத்திரங்களுக்கும், எல்லா ஆன்மீக புத்தகங்களுக்கும் நன்றி.
நித்யானந்தத்தில் நித்யானந்த தியானபீடம்.
பின் குறிப்பு:
முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு 794 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ரூ.100க்குத் தந்தோம். இப்போது 884 பக்கங்கள் மற்றும் 16 பல வண்ண ஆர்ட் பேப்பர் பக்கங்களோடு ரூ.150க்குத் தந்திருக்கிறோம். மேலும் இதே புத்தகத்தை உயர்தர பேப்பர் பதிப்பதில், ஹார்ட் பைண்டிங்கில் ரூ.300க்கும், அதைவிட, உயர்ந்த உலகதரத்திற்கு இணையான அச்சுபதிப்பில் ரூ.500க்கும் கடைகளில் கிடைக்கும்படி செய்திருக்கிறோம்.
ஜீவன் முக்தி புத்தகத்தின் முக்கிய சாராம்சங்களை கொண்ட சிறிய புத்தகங்கள் மக்களுக்குக் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஆனந்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றியுரை
நன்றி! நன்றி!! நன்றி!!!
"பரமஹம்ஸரே நேரடியாக எங்களிடம், இந்தப் புத்தகத்தை சேவையாக மக்களுக்குத் தரவேண்டும். எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை 100 ரூபாய்க்கோ, 150 ரூபாய்க்கு அதிகமாகாமலோ மக்களுக்குத்தர முழு முயற்சி செய்யுங்கள் என்று எங்களுக்குத் தந்த அன்புக் கட்டளையை நிறைவேற்றியிருக்கிறோம்," என்று சொல்லும் நித்யானந்தா பதிப்பகத்தாருக்கு நன்றிகள். நமஸ்காரங்கள்.
புத்தகம் எழுதும் நிபுணர்களிடம்... "ஜீவன் முக்தி எனும் இந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?" என்று கேட்டோம். "ஒரு வருடத்திற்குக் குறைவாக இதை உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை," என்று சொன்னார்கள்.
அச்சகத்தார்களிடம், "இந்தப் புத்தகத்தை அச்சில் கோர்த்து புத்தகமாக்க எவ்வளவு நாட்கள் வேண்டும்?" என்று கேட்டோம். "நாட்களா!? மூன்று மாதத்திற்குக் குறைவாக இதை அச்சில் கோர்க்க இயலாது" என்றார்கள். (DTP, Layout, Designing, Printing, Binding உட்பட).
பதிப்பகத்தார்களிடம் "இந்தப் புத்தகத்தை, குறைந்தது எவ்வளவு ரூபாய்க்கு அச்சிட முடியும்?" என்று கேட்டோம்.
எழுத்தாளருக்கான ஊதியம், உரிமைக்கான தொகை, இந்தப் புத்தகம் வெளிவருவதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த இருபத்தைந்து பேருக்கான ஊக்கத்தொகை என்ற எதையுமே கணக்கில் எடுக்காமல் பார்த்தால்கூட , புத்தகத்தை அச்சிடுவதற்கு மட்டுமே 150 ரூபாய் தேவைப்படும்.
மற்ற செலவுகளையெல்லாம் சேர்த்தால், இந்தப் புத்தகத்தை 200 ரூபாய்க்குக் குறைவாகத் தரமுடியாது.
"உங்களால் 100 ரூபாய்க்கு எப்படித் தரமுடிகிறது?" என்று எங்களையே திருப்பிக் கேட்டுவிட்டார்கள்.
"பலருடைய சேவையாலும், தியானபீடத்தின் நேரடி நன்கொடையாலும்,

பதிப்பகத்தார் முடிந்த அளவிற்கு
எல்லா வகையிலும் செலவுகளைக்
குறைத்ததாலும்தான், யாரையும்
பிரமிக்க வைக்கும் குறைந்த
விலையில் இந்தப் புத்தகத்தை
எங்களால் தர முடிந்தது,"
என்று சொல்லும் நித்யானந்த
தியானபீடத்திற்கு நன்றிகளை
இதயத்தின் ஆழத்திலிருந்து
காணிக்கையாக்குகிறோம்.
இவையெல்லாவற்றையும் தாண்டி.... தமிழில் புலமையோ, உரைநடையில் அனுபவ உரமோ, புத்தகத் துறையில் முன் அனுபவமோ இல்லாத, முப்பது வயதுக்கும் குறைவான கைப்பிடி பிரம்மச்சாரிகளை வைத்து பரமஹம்ஸரின் அமுதமொழிகளை நமக்களித்த சத்குருநாதருக்கு நன்றிகள் ஆயிரம். நமஸ்காரங்கள் கோடி.
புலவர்களே செய்யத் தடுமாறும் அரும் பணியை இரண்டே மாதத்தில் செய்துமுடித்த பரமஹம்ஸரின் தவப்புதல்வர்களுக்கு மட்டும் நன்றிகள் சொல்ல மாட்டோம். ஏனென்றால் யாருக்கும் கிடைக்காத பெரும்பாக்கியத்தைத் தட்டிச்சென்ற அதிர்ஷ்டக்காரர்கள் இவர்கள். எங்களின் நன்றிகள் மட்டுமல்ல, ஜீவன் முக்தி புத்தகத்தைத் தொடும் ஒவ்வொருவரின் உணர்வுகளே போதும், இவர்களின் ஏழேழு ஜென்மத்திற்கும் புண்ணியங்களைத் தரும்.
"இதையெல்லாம் தாண்டி எப்படி இந்தப் புத்தகம் நமக்குக் கிடைத்தது?" என்ற கதையை அவர்களிடம் கேட்டபோது, எங்களின் கண்கள் குளமாகிவிட்டன.
அதை அப்படியே சொல்லவேண்டுமானால் ஒரு தனி புத்தகம்தான் எழுத வேண்டும். இருந்தாலும், உங்களோடு நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில சம்பவங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
ஒரே மாதத்தில் முதல் புத்தகம் உருவாகிவிட்டது. 2009 ஜனவரி 1 அன்று, ஜீவன் முக்தி புத்தகத்தை வெளியிடுவதைப் பற்றிப் பரமஹம்ஸர் சொன்னதிலிருந்து, உற்சாகத்தோடு பெங்களூர் பிடதி ஆஸ்ரமத்தில் இருந்தபடியே வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விட்டோம். பல ஆண்டுகள் செய்ய வேண்டிய வேலையை, இரண்டு மாதம் மற்றும் மூன்றே நாட்களில் செய்ய முடியுமா? என்று முதலில் முணுமுணுத்தோம். உண்மைதான்.
அப்படி முணுமுணுத்த எங்களின் பக்தி ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து, ஒரே மாதத்தில் பரமஹம்ஸர், 5200 மணி நேரங்கள் பேசி வைத்திருந்த சொற்பொழிவுகளில் உள்ள எல்லா முக்கிய கருத்துகளையும் தேர்வு செய்து, அவற்றை முறையாக்கி எழுத்து வடிவில் கொண்டுவந்து, அப்புறம் அதைப் புத்தகமாக்குவது எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு எப்படிச் சாத்தியம் என்று நாங்கள் முணுமுணுத்தது உண்மைதான். தொலைபேசியில் பேசி, இ-மெயிலில் கட்டுரைகளைச் சரிபார்த்து, படிப்படியாக ஒரே மாதத்தில் புத்தகத்தின் மொத்தப் பணியையும் முடித்துவிட வைத்து விட்டார்.
புத்தகம் இவ்வளவு சீக்கிரம் முடிந்ததால் எங்களுக்குக் குஷி தாளவில்லை.
"இதோ இன்று முடிந்துவிட்டது....பரமஹம்ஸரிடம் காட்டிவிடலாம்," என்று ஆவலோடு அன்று இரவு நாங்கள் தயாராகி கொண்டிருக்க, எங்களின் இதயமே வெடிக்கும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
எதிர்பாராமல் சட்டென்று ஏற்பட்ட மின்சார விபத்தில், புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களும், பதிவுகளும் இருக்கக்கூடிய இரண்டு கம்ப்யூட்டர்களும் பாழாகிவிட்டன. நிபுணர்கள் "இந்தக் கம்ப்யூட்டரில் இருக்கும் எந்தச் செய்தியையும் இனி எடுக்க முடியாது. அந்த அளவிற்கு மெமரி பைல் பாழாகி விட்டது,"என்று சொல்லிவிட்டார்கள்.
கண்கள் கலங்க, இந்தச் செய்தியை பரமஹம்ஸரிடம் சொன்னோம், அவர் சிறிதும் மாற்றமில்லாமல், "இப்போது அந்தக் கம்ப்யூட்டரை இயக்கச் சொல்லுங்கள்," என்றார்.
தொலைபேசியில் பரமஹம்ஸர் சொன்னதைக் கேட்டு கம்ப்யூட்டரின் மெயின் ஸ்விட்சை அழுத்தினோம்.
அந்த ஆச்சரியம், எங்களின் கலியுக விஞ்ஞான கண்களையே கலங்கடித்துவிட்டது! "இதுவரை இந்தக் கம்ப்யூட்டருக்கு எந்தப் பிரச்சனையுமே நிகழவில்லை," என்பதுபோல அந்தக் கம்ப்யூட்டர் உயிர்பெற்று இயங்க ஆரம்பித்துவிட்டது. புத்தகத்தைத் தொகுக்கும் சேவையில் ஈடுபட்டிருந்த பிரம்மச்சாரிகளில் இருவர் இன்ஜினியர்கள், ஒருவர் மருத்துவர்... எங்களின்
கண்ணெதிரேதான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. எங்களாலேயே நடந்ததை நம்ப முடியவில்லை என்று கண்கள் பணிக்க பகிர்ந்து கொண்டார்கள்.
உடனே அடுத்த மூன்று மணி நேரத்திற்குள், கோடிக்கண்தரிசன ரதபாதயாத்திரை முடித்து வந்திருந்த பரமஹம்சரிடம் இ-மெயில் மூலமாக ஜீவன் முக்தி புத்தகம் சேர்ந்தது.
இரண்டாவது புத்தகம் பத்தே நாட்களில் தயாரானது.
மொத்தப் புத்தகத்தையும் பார்த்து முடித்த பரமஹம்ஸர், "இன்னும் ஆழமாக நம்மால் தரமுடியும்," என்று சொன்னார்.
புத்தகத்திற்குள் இன்னும் ஆழமான பல கருத்துக்களை சேர்ப்பது பற்றியும், எதை எப்படிச் செய்வது என்பது பற்றியும், நேரடியாக தொலைபேசியிலேயே சொல்லி முடித்தார்.
அப்போது கல்பதரு தியான முகாம்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடைபெற்றதால், மொத்தக் குழுவும் சேலம் தியானபீடத்திற்கு மாற்றப்பட்டது. பலமுறை பல தவறுகளை, பக்கத்திற்குப் பக்கம் பொறுமையோடு பரமஹம்ஸர் சுட்டிக் காட்டியதை, புலமையோடு எளிதாய்ச் செய்து முடிக்கும் புலவர்களாக இல்லாவிட்டாலும், தவப்புதல்வர்களாக இருந்ததால், தங்களின் மொத்தச் சக்தியையும் போட்டு எப்பேர்பட்டாவது உடனுக்குடனே சரிசெய்து அனுப்பினார்கள்.
பரமஹம்ஸர், பிழைகள் பல இருப்பதை மீண்டும் மீண்டும் கருணையோடு சுட்டிக்காட்டியபடியே தம் பணிகளைத் தொடர்ந்தார்.
எல்லாத் திருத்தங்களையும் செய்து முடித்து புத்தகத்தை வெளியிட இப்போது ஒருமாதம் மட்டுமே மீதம் இருந்தது.
அப்போது பரமஹம்ஸரிடமிருந்து செய்தி வந்தது. "நீங்கள் சேலத்திலிருந்து வேலை செய்யுமளவிற்குக் கால அவகாசம் நம்மிடமில்லை. நேரடியாகப் பதிப்பகத்தார் இருக்குமிடத்திற்கே கிளம்பிவிடுங்கள். அதுதான் சரியாக இருக்கும்."
உடனே மொத்தக் குழுவும் சென்னைக்குப் புறப்பட்டது.
ஹோட்டல் சாப்பாடு, சென்னை சூடு. இதற்கெல்லாம் தாக்குப்படிக்காமல் சிலருக்கு உடல் உபாதைகளும் ஏற்பட்டுவிட்டன. சின்ன அறைக்குள்
பதிப்பகத்தின் குடௌனிலேயே 10X20 அறைக்குள்ளும், இன்னொரு ஐந்து கம்ப்யூட்டர்களோடு வேலைகளைத் தொடர ஆரம்பித்துவிட்டோம்.
25 பிரம்மசாரிகளும், பக்தர்களும் வேலைகளை உற்சாகமாக ஆரம்பித்தார்கள். கால்நீட்டி உட்காரக்கூட அங்கு இடமில்லாமல், ஜீவன் முக்தி புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கான அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.
தவம் செய்து, மரத்தடியில் படுத்துறங்கி, பிக்ஷை எடுத்து, தனி நபராக இருந்து தியானபீடத்தை உருவாக்கி, இன்று உலகை வலம் வரும் பரமஹம்ஸரை பார்த்துப் பார்த்து வளர்ந்த எங்களுக்கு மேற்சொன்ன எதுவுமே கஷ்டமாகத் தெரியவில்லை.
அவசர அவசரமாக அசுரவேகத்தில் அடுத்த பத்தே நாட்களில், இரண்டாவது புத்தகமும் தயாராகிவிட்டது.
ஆனால், இந்த இரண்டாவது புத்தகமும் அச்சுக்குச் செல்லவில்லை. அடுத்த சோதனை இன்னும் ஆழமாயிருந்தது.
மூன்றாவது புத்தகம் ஏழே நாளில் தயாரானது
உற்சாகத்தோடு ஜீவன் முக்தி புத்தக வெளியீட்டுவிழாவிற்கான பணிகளில் இறங்கியிருந்த மொத்தக் கூட்டத்திற்கும் வந்தது அடுத்த பக்தி சோதனை!
சென்னையில் பதிப்பகத்தாருக்கு அருகே தங்கி பணிகளை ஆரம்பித்த இரண்டாவது நாள் இரவு ஒன்றரை மணிக்குப் பரமஹம்ஸர் தொலைபேசியில் அழைத்தார்.
எங்களின் நலம் விசாரித்து, மிகவும் கனிவான குரலில் பரமஹம்ஸர் பேசி னார். கடைசியாக பேசி முடிக்கும் முன்பு, “ஜீவன் முக்தி புத்தகத்தின் பாதிக்கும் மேற்பட்ட அத்யாயங்களை சுட்டிக்காட்டி, இவற்றை இன்னும் சுருக்கி, இந்த சில அத்யாயங்களை எப்படியாவது சேர்த்துவிட முடியுமா? கொஞ்சம் முயற்சித்து பாருங்கப்பா...,” என்று கனிவான குரலில் எங்களிடம் பரமஹம்ஸரே கேட்டுவிட்டார்.
மொத்தக் குழுவும் இந்த ஒரு கேள்வியில் ஆடிப் போய்விட்டது.
"நாம் கடவுளிடம் வரம் கேட்போம். கடவுளே நம்மிடம் வரம்கேட்டால் என்ன ஆவது!" என்று உருகிவிட்டோம். "எப்படிப் பார்த்தாலும், 10 நாட்களுக்குக் குறைவாக அச்சிட ஆரம்பிக்கும் பட்சத்தில், முன்பதிவு விற்பனையாகியிருக்கும் இரண்டரை இலட்சம்
புத்தகங்களை பல அச்சகங்களின் உதவியோடு முயற்சித்தால்கூட, அதில் பாதியை தருவதே எங்களுக்குச் சாத்தியமில்லை, என்று திட்டவட்டமாகப் பதிப்பகத்தார்கள் சொல்லிவிட்டார்கள்.
இப்போது என்ன செய்வது? மீதம் இருப்பது 13 நாட்கள்தான்.
"கரணம் தப்பினால் மரணம்!" என்பார்களே அது இதுதான்.
"பரமஹம்ஸர் கேட்டதைச் செய்யவேண்டுமானால்... 200 பக்கங்களை டைப் (DTP) செய்து அதற்கு பின் புது வரிசையில் 800 பக்கங்களையும் வடிவமைத்து கடைசி சில நாட்களில் மொத்தப் புத்தகத்தையும் முடித்தாக வேண்டுமல்லவா? முடியுமா நம்மால்?" என்று குழுவிலிருந்த ஒருவர் கேட்டார்.
பதிப்பக பிரம்மச்சாரி சொன்னார் "இது இன்னொரு புது புத்தகம் செய்கின்ற வேலை. கொஞ்சம் பிசகினால்கூட புத்தக வெளியீட்டு விழாவை, ஜீவன் முக்தி அட்டையை வைத்துத்தான் நடத்த வேண்டியிருக்கும். தேவையா இந்த விஷப்பரீட்சை?"
கடைசியில் எல்லோரும் சேர்ந்து முடிவுசெய்தோம். "சொன்னது பரமஹம்ஸர். அவர் சொன்னாலே நடந்துவிடும். இப்போது சொல்லவில்லை. கேட்கிறார். இல்லை என்று சொல்ல நாம் யார்? செய்வதைச் செய்வோம், மீதமெல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார்,"என்று மொத்தக் கூட்டமும் இலங்கையை நோக்கி பாலம் கட்ட உற்சாகமாய் எழுந்த ஹனுமார் கூட்டமாய் எழுந்தது.
முதல் மாதம் இரண்டு, மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கிய புத்தக குழுவிற்கு, சென்னைக்கு வந்த பிறகு இரண்டு நாளைக்கு ஒருமுறை மட்டுமே தூங்க நேரம் இருந்தது.
அப்போது ஏற்பட்ட பக்தி சோதனைகள் வர்ணிக்க இயலாது.
பரமஹம்ஸரிடம் வேண்டிக் கொண்ட மாத்திரத்தில் மக்கள் வரங்களைப் பெற்றுச் செல்கிறார்கள். எங்களுக்கோ அங்கு ஒவ்வொரு படியிலும் ஒரு சோதனை காத்திருந்தது.
இரவு பகல் அயராது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததால்,ஏற்கெனவே அங்கு வேலை செய்தவர்கள் பலர் ஓடிப்போய்விட்டார்கள். இன்னும் சிலர் வந்து சில மணி நேரங்கள் மட்டுமே இருந்தார்கள்.
கடைசியில் ஆஸ்ரமவாசிகள் மட்டுமே புத்தகத்தை வடிவமைக்கும் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம். புதிதாய் இந்தப் புத்தக அச்சு நுட்பங்களை கற்றுக்கொண்டிருந்ததால், அவர்களாலும் ஓரளவு வேகத்திற்கு மேல் துரிதமாகச் செய்ய முடியவில்லை. இது ஒரு பக்கம்.
பதிப்பகத்தார் இன்னொருபக்கம் எங்களை அவசரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். “எங்களின் எல்லை தாண்டிவிட்டது. இன்றைய தேதி பிப்ரவரி 22. இதற்கு மேல் அதிகரிக்கும் ஒவ்வொரு நாளுக்கும், நாம் தரவேண்டிய இரண்டரை இலட்சம் புத்தகங்களில் இருந்து, ஒவ்வொருநாள் தாமதத்திற்கும் 10,000 புத்தகங்கள் குறையும்,” என்று சொல்லிவிட்டார்கள்.
“புத்தகத்தில் ஒப்புதல் வாங்கப்பட்ட பக்கங்களை மட்டும் முதலில் அச்சுக்கு அனுப்புவோம்,” என்று முடிவுசெய்து, 194 ஆவது பக்கத்திலிருந்து அடுத்த 300 பக்கங்களை அச்சுக்கு அனுப்பினோம். அதற்கு முன்னும், பின்னும் இருந்த அத்யாயங்களில்தான் நிறைய புது அத்யாயங்கள் சேர்க்க வேண்டியிருந்தது.
ஒருபுறம் புத்தகம் அச்சாகிக்கொண்டே இருந்தது.
இன்னொருபுறம் அடுத்தடுத்த பக்கங்களை எடுத்து வைத்து, புத்தகமாக்கி பக்தி சிரத்தையோடு எங்களின் அச்சுக்கோர்ப்புப் பணி தொடர்ந்து கொண்டேயிருந்தது. புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் தயாராகத் தயாராக, உடனுக்குடன் தொடர்ந்து அச்சுக்குச் சென்று கொண்டிருந்தது.
லீலை உச்சத்தை எட்டியது! அன்று பிப்ரவரி 26, சாயங்காலம்.
26 இரவு அன்று பல பிரச்சனைகள் ஒன்றாய் முளைத்துக்கொண்டது. அன்று அச்சுக்கு அனுப்ப வேண்டிய புத்தகத்தின் முதல் நூறு பக்கங்கள் மற்றும் புத்தகத்தின் கடைசி பக்கங்கள், அதாவது இருநூறு பக்கங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பைல்கள் மொத்தமாகச் செயல் இழந்துவிட்டது. corrupt ஆகிவிட்டது.
மீதமுள்ள இருநூறு பக்கங்களை அச்சுக்கு அனுப்ப அதுதான் கடைசி நாள். அப்படி அனுப்பாவிட்டால்... அடுத்த நாளே ஆரம்பித்தாகவேண்டிய புத்தக பைண்டிங் வேலை நடக்காது,. என்பது எங்கள் எல்லோருக்குமே தெரியும்.
இப்போது, கடைசி இருநூறு பக்கங்களின் சேமிப்பு உட்பட எல்லாமே அழிந்துவிட்டது. இனி ஒரே இரவில் இருநூறு பக்கங்களை வேலை செய்து முடிக்க வேலையாட்கள்கூட இல்லை.ஏற்கெனவே பல பேரை அழைத்துவிட்டோம். யாரும் வருவதாக தெரியவில்லை. அப்படியே வந்தாலும் வேலை முடிய இரண்டு நாட்களாகும்.
“என்ன செய்வது? புரியவில்லையே... புத்தக வெளியீட்டுக்கு ஒரு புத்தகம்கூட தர முடியாதா? உலகம் முழுவதும் 123 இடங்களில் புத்தகவெளியீடு. மகேசா! குருநாதா! நாங்கள் கெடுத்துவிட்டோமே,” என்று யோசிக்க யோசிக்க இதயமே வெடித்தது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.
யாராலும் யாரோடும் பேச முடியவில்லை. யாராலும், யாரையும் பார்க்கவும் முடியவில்லை. “அங்கோ, பரமஹம்ஸர் குதூகலத்தோடு இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பார்ப்பவர்களிடமெல்லாம் பேசி க்கொண்டிருக்கின்றார். இங்கோ, அந்த புத்தகம் கருவிலேயே கலைந்துவிடும் போலிருக்கிறதே,” என்றெல்லாம் யோசித்து யோசி த்துக் கலங்கினோம். கதறினோம்.
அந்த நேரத்தில் பரமஹம்ஸர் தொலைபேசியில் வந்தார். தொலைபேசியின் இந்த முனையில் பதில் பேச வேண்டிய பிரம்மச்சாரியால், பேசவே முடியவில்லை. விசும்பல்கள் மட்டுமே அடுத்தடுத்து பரமஹம்ஸருக்குப் பதிலாய்க் கேட்டது.
பரமஹம்ஸர் மட்டும் தொடர்ந்து பேசினார்... “என்னப்பா...” “அழறியா? நீயா?” “அப்பனே சொல்லப்பா...” “ஏ! பேசப்பா..” “நீ என் பிரம்மச்சாரி. எதற்குமே கலங்காத நீயா அழுகிறாய்?”
ஐந்து நிமிடம் கழித்துதான், பேசுமளவிற்கு சக்தி பெற்ற அந்தப் பிரம்மச்சாரி, விஷயம் தங்களுடைய எல்லையை மீறி போய்விட்டதை விவரித்தார். பரமஹம்ஸர் நடந்ததைக் கேட்டு ஆறுதல் படுத்தினார்.
பரமஹம்ஸர் அடுத்த முனையில் கடைசியாக பேசி முடிக்கும்போது, “கவலையேப்படாமல் போய் நிம்மதியாக வேலையை தொடருங்கள்.
நான் பார்த்துக்கொள்கிறேன்.'' என்று சொல்லி தொலைபேசியை வைத்தார்.
பரமஹம்ஸர் பேசி முடிக்க முடிக்க, எதிர்பாராத ஆச்சரியமாக, இரண்டு அச்சுபதிப்பு நிபுணர்கள் அங்கு வந்தார்கள்.
"இரண்டு பேர் வந்திருந்தாலும் அடுத்தநாள் காலைக்குள் இருநூறு பக்கங்களையும் தந்துவிடமுடியுமா?" என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகத்தான் இருந்தது.
எப்படிப் பார்த்தாலும் சாத்தியமேயில்லை என்ற எல்லையை தொட்டதால் குழுவில் பாதிபேர் துவண்டுபோய் விட்டார்கள்.
மீதிபேர் கடைசி துளி சக்தியைக் கொண்டு, குருபக்தியோடு, உற்சாகத்தோடு வேலையைத் தொடர ஆரம்பித்தார்கள். அன்று இரவு முழுவதும் அசுர கதியில் வேலை நடந்தது.
அப்போது பரமஹம்ஸர் மீகுகானும் 4 நாள் தியான முகாம் எடுத்துக் கொண்டிருந்தார். அன்றைய காலை வகுப்பினுடைய தியான பகுதி நடந்துகொண்டிருந்தது.
அப்போது கிடைத்த இடைவேளையில், "பாவம் நம்ம பசங்க தடுமாறிப்போயிட்டாங்க,'' என்று அங்கிருந்த பிரம்மச்சாரிகளிடம் சொல்லிவிட்டு, பரமஹம்ஸர் தொலைபேசியில் எங்களிடம் வந்தார். ஆறுதலான குரலில், "என்னப்பா ஆச்சு?" என்று பரமஹம்ஸர் கேட்க, "சாமீமீமீ முடிஞ்சிடுச்சு!" என்று தொலைபேசியில் ஆனந்த கூச்சலிட்டோம்...
பரமஹம்ஸரின் தொலைபேசிக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் எப்படி ஒரே இரவுக்குள் முடித்தோம் என்பது இப்போதும் அதிசயமாகவே இருக்கிறது!
பரமஹம்ஸரும், பிரம்மச்சாரிகளும் இரண்டு புறமும் குதித்துச் சிரித்து நடனமாடி அந்த ஆனந்தத்தைக் கொண்டாடினர். "அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட ஆனந்தப் பெருக்கை வார்த்தைகளால் சொல்லி மாளாது.'' என்று பிரம்மச்சாரிகள் பகிர்ந்துகொண்டார்கள்.
அங்கு தன் சிம்மாசனத்திலிருந்தபடியே இந்தப் புத்தகம் தயாராகிவிட்டதை சொல்லி, பரமஹம்ஸர் கொண்டாடிய விதத்தை எங்களால் வார்த்தைகளால் விளக்க முடியாது. ஜீவன்முக்தி புத்தகத்தை இப்போது சென்று சேர்க்க வேண்டும். வெளியிடப்பட்ட ஒவ்வொரு மண்டபத்திற்கும், சில ஆயிரம் புத்தகங்களையாவது சேர்த்து விட வேண்டும் என்று இரண்டாம் தேதி வேண்டிய பணியில் இரவுக்குள், தியானபீடத்தின் பிரம்மச்சாரிகளும், ஆனந்த சேவகர்களும் சேர்த்து விட்டார்கள்.
இந்தக் கட்டுரையைப் படிக்கும்வரை ஜீவன்முக்தி புத்தக வெளியீட்டுக்கு முன் நடந்து முடிந்த இந்த லீலைகள் பலருக்கும் தெரியாது.
புத்தக வெளியீடு முடிந்த பின், ஒரு நாள் பரமஹம்சரிடமே நாங்கள் கேட்டோம், “தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏன் இவ்வளவு பெரிய லீலை? இவ்வளவு ஆழமான சோதனைகளை, ஒரே ஒரு ஆசீர்வாதத்தால் உங்களால் மாற்றியிருக்க முடியும்.
இவ்வளவு தூரம் இந்தக் குழு ஆட்டுவிக்கப்பட நீங்கள் அனுமதித்தது ஏன்? பாவம், கலங்கிப் போய் விட்டார்கள்,” என்று கேட்டதற்கு, பரமஹம்ஸர் மிக அழகாகச் சொன்னார்,..
“குளத்திலிருந்து மீன் எழுந்தாலே குளம் கலங்கும். குளத்திலிருந்து திமிங்கலம் எழுந்தால் என்ன ஆகும்? இங்கு நடந்தது அதுதான்.
பிரம்மச்சாரிகளை வைத்து ஜீவன் முக்தி புத்தகத்தை மட்டும் பிரசவிக்க விரும்பவில்லை. ஜீவன் முக்தி புத்தகத்தை வைத்து, பிரம்மச்சாரிகளுக்குள் ஜீவன் முக்தியை பிரசவிக்க விரும்பனோம். அது நடந்துவிட்டது,” என்றார் மிக எளிமையான குரலில்.
உலகத்திற்கே ஜீவன் முக்தியை தந்த இந்தப் புத்தகம், உருவாகும் போதே சில ஜீவன் முக்தர்களை உருவாக்கிவிட்டுத்தான் பிறந்திருக்கிறது.
அந்தப் புத்தகம்தான் நம் கையில் இப்போது இருக்கிறது என்பதை நினைக்கும்போது உடல் முழுவதும் பரவசம் பாய்கிறது.
சேவையின் மூலமாகவே ஜீவன் முக்தியை அடைந்துவிட முடியும்.
பக்தியின் மூலமாகவே ஜீவன் முக்தியை அடைந்துவிட முடியும்... என்று கேள்விபட்டிருக்கிறோம்.
ஆனால் இப்போது அதை நாங்கள் நேரடியாகவே பார்த்துவிட்டோம். எல்லா லீலைகளையும் இனிமையாய்ச் செய்து அருமையாய் முடிப்பது இறைச க்தியின் குணம். சில லீலைகள், முதலில் பார்ப்பதற்குக் கடுமையாகத் தோன்றினாலும், அவற்றின் மூலமாக ஜீவன் முக்தியை நோக்கியே நம்
வாழ்வை ஒவ்வொரு படியாக நகர்த்திக் கொண்டிருக்கும் இறைச க்திக்கு நன்றி என்று சொல்ல நமக்குத் தகுதியில்லை.
இறைசக்தியின் ஆழ்ந்த விருப்பமான ஜீவன் முக்தியை நம்முள்ளும் பிரசிவிப்பதுதான். நம்மால் அந்த இறைசக்திக்கு தரமுடிந்ததற்கு நிஜமான நன்றி.
நன்றி! நன்றி!! நன்றி!!!
இப்படிக்கு
நித்யானந்தத்தில்...
நித்யானந்தா மிஷன் ஆர்டர்