7. பீனியல் சுரப்பியை தூண்டிவிடுங்கள்.
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு அசிங்கமான குழந்தையை இதுவரை பார்த்திருக்கிறீர்களா...
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழுமிடத்திலிருக்கும் குழந்தை கூட அழகாகவே இருக்கிறது. எளிமையாக இருக்கிறது.
ஆனால், ஒரு அழகான எளிமையான ஆளைப் பார்க்க முடியுமா?
உண்மையான அழகு beauty அல்ல. முகப்பூச்சால் வருவது உண்மையான அழகல்ல.
மழலை குழந்தையின் முகத்திலும், மனம் கடந்த ஞானியின் முகத்திலும் தெரியும் அழகு பொலிவு மிகுந்தது. அது இயற்கையானது. அது beauty அல்ல. அது grace! அது சக்தியின் வெளிப்பாடு.
உண்மையான அழகு (grace) சலிப்பு தட்டாது.
மனதையும் உணர்வுகளையும் அலைக்கழிக்காது.
மனதை சாந்தப்படுத்தக் கூடியது.
beauty எனப்படும் செயற்கை அழகு பொய்யானது. சலிப்பு தட்டக்கூடியது.
குழந்தை மனிதனாகும்போது அதன் அழகு (grace) துடைக்கப்பட்டு விடுகிறது. முகம் இறுகிப்போகிறது.