KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/சுக சொர்க்க வண்டி 24Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

சுக சொர்க்க வண்டி 24

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

➦ ஏ மனிதா!
சிங்கம்
நீ!
நீ
சிங்கம்!

ஏ மனிதா!
நீ ராஜா!
நீ!
நீ
ராஜா!

கூஜா தூக்காதே
உன் சோம்பேறித்தனத்திற்கு
காரணம் நரியாகி விடுவாய்!

சிங்கமாக உழை... ராஜாவாக வாழ்...

இல்லாவிட்டால்
வெம்பிப்போகும் மனது
உன் தந்திர குணத்தால்

சைத்தானைப் பார்க்க வேண்டுமா
குடித்தனம் நடத்து
சுறுசுறுப்பாகி விடாதே.

நரகத்தை ருசிக்க வேண்டுமா!
தப்பித் தவறியும்
சுறுசுறுப்பாகி விடாதே.

➦ ஏ மனிதா!
இரண்டே வாய்ப்புகள்தான்
சிங்கமாகு - இல்லை
நரியாகுவாய்.

வாழ்வாய் இல்லை வீழ்வாய்!

சுறுசுறுப்பால் சிங்கமாகாவிடில்
ஏமாற்றுவாய் இல்லை
ஏமாறுவாய்.

ஏ மனிதா!
சுக சொர்க்கத்திற்கு
நீ பிரயாணம் போய் வர
புதுவண்டி ஒன்று
பல காலமாய்க் காத்துக் கொண்டிருக்கிறது.
அவ்வண்டியின் பெயர் தெரியுமா...
‘சுறுசுறுப்பு’.

விறுவிறு எனச்
சுறுசுறுப்பு வண்டிஓட,
சரசரவென வரவேண்டும்
சக்தியெனும்
எரிநெய்!

பிரயாணியும் தயார்!
எரிநெய்யும் தயார்!
வண்டியும் தயார்!

எதிலும் குறையில்லை இருந்தும் பயணமாகவில்லை சொர்க்கம்...

அச்சச்சோ! அது குறையால் அல்ல..
எக்கச்சக்கமாக
சோம்பேறித்தனம்
நிறைந்ததால்,
உறைந்ததால்
அடைத்துக் கொண்டது - உன்
சக்தி ஓட்டப்பாதை.

ஏ மனிதா!
‘ஓ’ வென்று அழாதே.
‘போ’ என்று துரத்து சோம்பலை.
‘வா’வென அழையாமல் வந்து சேரும் சக்தி.

சுக சொர்க்கம்
சென்று சேர்க்கும்
சுறுசுறுப்பாய்.

Nithyananda meditating outdoors
thought bubble with number 25