KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/1: உயிரோவியம் கண்ட நாளில்...Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

1: உயிரோவியம் கண்ட நாளில்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நான் குடித்த
சாதாரண நீரைக் குடித்த நீ
‘அமுதம்!’ என்றாய்

நான் உண்ட
சாதாரண உணவை உண்ட நீ
‘அமிர்தம்!’ என்றாய்

கட்டாந்தரையில் வெறுமனேதான் நீ படுத்தாய்! ஆனால்... பார்ப்பதற்கு வெண் பஞ்சால் தடித்த சொகுசுக் கட்டிலில் படுத்துக் கொண்டாற்போல் சுகமாய்ப் படுத்துக் கொண்டாய் நீ

என்ன ஆயிற்று உனக்கு!

காரணமேயில்லாது முகம் மலர்ந்திருக்கிறாய்!

portrait

காரணமேயில்லாமல்
கவலைப்படுவது
சாத்தியமானால்...
காரணமேயில்லாமல்
ஆனந்தப்படுவது
ஏன் முடியாது?
உயிரோவியமானால்
உங்களுக்கும் - இது
சாத்தியமே

என்னைப் போல்தான்
இரண்டு காலால்
நடக்கிறாய்
நீ!

ஆனால்...
என்னவோ ஒரு நயம்
நுழைந்திருக்கிறதே!
உன் நடையில்
எப்படி உனக்குச் சாத்தியமானது இதெல்லாம்?

உன்
குரலைக்
குழலாக்கியது
எது?

உன்
கண்ணைக்
காந்தமாக்கியது
எது?

எல்லாம் சேர்ந்து
என்னை
என்னவோ செய்கிறதே! ஏன்?

மன்னித்துவிடு...
கேள்விகளைத் தொடர்கிறேன்
உன் பதிலுக்கு இடைவெளியில்லாமல்,
என்றார்.

சுவாமி நித்யானந்தா

புத்தரிடம்
புத்தரின் அண்ணன் ஆனந்தன்
முதன் முதலாக
புத்தரைப்
பார்த்த நாளில்

ஐயம் கேட்டவரிடம் புத்தர்
“ஞானமடைந்து விட்டல்
அமிர்தம்
அழகு சொர்க்கம்
ஆதி முதல் தெய்வம்
ஆகிய அனைத்தையும்
காண்பாய்
அனுபவிப்பாய் நீயும்!
என்னிடம்
நீ கண்டதெல்லாம்
முக்தியின் சக்தி!
என்னில் படைத்த
அழகுக் கோலங்கள்

உயிர்நிலை தொட்ட தியானசக்தி
உயிரோவியமாக்கும்
முக்தியடைந்த ஒருவனை

ஏன் நீயும்கூட
உயிரோவியமாகலாம்”
எனக் கூறி முடித்தவரின்
காலில் விழுந்த ஆனந்தன்
‘ஏற்றுக் கொள்ளுங்கள்
என்னைச் சீடனாக’ என்றார்.

பின்னாலில் அவரும் ஓர் உயிரோவியமானார்.

இரு விதமாய்
வாழ
வழியிருக்கு
1. நடைப்பிணமாக!
2. உயிரோவியமாக!
தேர்வு
செய்யுங்கள்...

chapter number 2