KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/பொய்களைத் தின்று வாழும் மனம்Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

பொய்களைத் தின்று வாழும் மனம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நிattribute: நிட்டிராஜன் கேட்டது:

என்னைத் தவறுகளோடு
ஏற்றுக்கொள்ளுங்கள்
கெஞ்சுகிறான் மனிதன் ஏன்?

அகங்காரம் சொன்னது:

பொய்களைப்
பறிக்காதீர்கள்
நான் செத்து விடுவேன்

நிட்டிராஜன் கேட்டது:

அடுத்தவர் தவறுகள் மட்டும் பளிச்செனத் தெரிகிறதே ஏன்?

ஆத்மா சொன்னது:

நிஜமாய்த்
தெரிவது எல்லாமே
பொய்கள்

நிட்டிராஜன் கேட்டது:

ஞானிகள் சொல்வதில்லை. உண்மைகள் எப்போதும். ஏன்?

புத்தி சொன்னது:

உண்மை பேசுபவனுக்கு...

மறுஉலகில் இடமுண்டு

ஆனால் இவ்வுலகில்

சிலுவையில்தான் இடமுண்டு

கண்டவர்
விண்டதில்லை
இது பொய்.

கண்டவர்
விண்டால்
விண்டு போவாய்....

அடுத்து
விண்டவரைக்
கொன்றுவிடுவாய்...

அதனால்தான்
கண்டவர்
விண்டதில்லை
இது மெய்.

அஷ்டவக்ர கீதை
குடும்பஸ்தரால்
படிக்கப்படக் கூடாது
என்பது சதியல்ல
அது மதி.
‘அவ்வளவு
பெரிய உண்மைகளைப்
பெற
என்ன செய்ய வேண்டும்
உயிரையா?
உடலையா?
எதைவிட வேண்டும்?’
எனப்
பயம் துறந்த
துறவிக்கு மட்டுமே
அந்தக் கீதைப் பாதை சொந்தம்
உண்மை அறிய
உண்மையில்
உன் மையம்
வலுப்பெற வேண்டும்.