KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/உள்ளிருக்கும்Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

உள்ளிருக்கும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பெண்

'எப்போதும்
ஆண் பெண்ணையே
பெண் ஆணையே
அடையத் துடிப்பது
இயற்கையா? செயற்கையா?'

வெட்கம் மீறி
வெட்டவெளியில்
துணிந்து விட்டான்! கேட்டுவிட்டான்!
சீடன்.

'துடிப்பு
இயற்கையுமல்ல.
செயற்கையுமல்ல.
அது இயல்பு.

ஆணுக்குள்ளிருக்கும்
பெண் - வெளிப் பெண்ணையும்,
பெண்ணுக்குள்ளிருக்கும்
ஆண் - வெளி ஆணையும்
அடையத் துடிப்பது இயல்பு.

காரணம் ஒவ்வொரு
ஆணுக்குள்ளும் ஓர் பெண்ணும்
பெண்ணுக்குள் ஓர் ஆணும்
ஒளிந்து கொண்டிருப்பது உண்மையென்ற
இயற்கையைச்
செயற்கையாக நீ மறந்து விட்டதுதான்

  • இயல்பாகக் கூறினார் குரு.
Photograph of Paramahamsa Nithyananda