KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/நீ வேறு மனம் வேறு, மாயை!Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

நீ வேறு மனம் வேறு, மாயை!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சீடன்: ⇨ மனதை என்ன செய்ய?

குரு:
⇨ உன் மனதைத் தாலாட்டினால்தான்
மனம் உன்னைத் தாலாட்டும்

பாவம்!
அப்பாவி மனதை
நீதான் தாலாட்ட வேண்டும்.

நீ என்பது மனதுதானே உன்னைத் தாலாட்டும்!

உன்னைத் தாலாட்டத் தாலாட்ட
உனக்கும் மனதுக்கும் உள்ள இடைவெளி
பள்ளத்தாக்கு பாலமாகும்
பாலம் பாதையாகும்
பாதை அடியாகும்
அடி ஜானகி...
உனக்கும் மனதுக்கும்
இடையில் 'வெளி' இல்லாது போகும்.

அப்போது
உன்னால் மனமும்
மனதால் நீயும்
சுகமாயிருப்பீர்கள்.

வித்தியாசமில்லாததால் சுகித்திருப்பீர்கள்.

பின்குறிப்பு :

மனதை உடலும்
உடலை மனதும்
கண்டுகொள்ளாதே - உன்
கஷ்டங்களில் கரு.

முதலில்
உங்களைச்
சீராட்ட, பாராட்டக்
கற்றுக் கொள்ளுங்கள்.