யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!
செதுக்க வா மனதை!?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சிற்பி நெருங்காத வரை
சும்மா கிடக்கும்
ஒவ்வொரு பாறைக்குள்ளும்
அழகிய சிற்பங்கள்
ஒளிந்து கொண்டிருக்கிறது.
சும்மாயிருக்கும்
மனிதனின் மனம்
சும்மாயிருக்கும் பாறை!
பாறையிலிருந்து
பரவசச் சிலையைப்
பிரசவிக்கும் சிற்பியின் உளி போன்றது
மனித விழிப்புணர்வு.
உணர்வென்னும்
உளியினால்
உருவாக்கிவிடலாம்
ஆரோக்கிய மனதை!
பாறையைப் போன்றே
மனதையும் செதுக்கி
வடிவமைக்க முடியும்
உணர்வெனும் உளியால்.
