உடல் பலம், மனோ பலம்,
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆன்ம பலம் பெறலாம்...
ஒரே நேரத்தில்

உட ல் சுத்தம்
நீங்கள் எவ்வளவுதான் வேண்டாமென்று சொன்னாலும் இப்போது நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் உடலை விட்டுவிட்டு எங்கும் ஓடிவிட முடியாது.
எங்குச் சென்றாலும் உடன் வரும் உடலில் தங்கும் நீங்கள், அதைத் தங்கும் மாளிகையாக்குவது பற்றி சிந்தித்திருக்கின்றீர்களா?
உடல் மாளிகையானால், நீங்கள் சக்கரவர்த்தியாவீர்கள். உடல் சுத்தமானால், உயிரே சுகந்தமாகும்.
மன ஆரோக்கியம்
எந்த ஒரு கருவியையும் உபயோகப்படுத்தாமல் வைத்திருந்தால் அது உபயோகமற்றதாக மாறிவிடும்.
ஆனால், உங்களின் உடலுக்குள் உள்ள மனம் எனும் கருவியை மட்டும் உபயோகப்படுத்தாமல் விட்டு வைத்தால், அது உபயோகமுடையதாக மாறிவிடும். அதோடல்லாமல் உங்களையும் திடகாத்தரமானவராகவும், உறுதியானவராகவும் மாற்றிவிடும்.
உயிரோட்டம்
"Jobless mind is devil's workshop.'
‘வேலையற்ற மனம் சைத்தானின் தொழிற்சாலை’ என்று சொல்வார்கள்.
‘நீங்களோ மனத்தைச் சும்மாயிருக்க வைக்கச் சொல்கின்றீர்கள். சும்மாயிருக்கும் மனம் பேயாகிவிடாதா?’ என பக்தரொருவர் தியான முகாமில் கேட்டபோது.
“சும்மாயிருக்கும் மனம் பேய் தங்கும் சூலையாகாது. அது தெய்வம் தங்கும் ஆலயமாகும்.

உங்கள் உடலுக்கு வேலையில்லாது போகும்போதுதான் மனம் பேய்போல் செயல்பட ஆரம்பிக்கும்.
ஆனால் உங்களின் மனதுக்கே வேலையில்லாது போகச்செய்தால், உங்களின் ஆன்ம சக்தி விழித்துக்கொள்ளும். மனம் தெய்வ மணம் வீசும். உயிரோட்டம் பாய்ந்து பரவும். இவையெல்லாம் நிகழும் நொடியில் மிக உயர்ந்த ஜீவனாயிருப்பீர்கள்” என பதிலளித்தேன்.
“உடல் சுத்தம்
மன ஆரோக்கியம்
உயிரோட்டம்”
ஆகிய மூன்றையும் ஒருவர் பெற்றுவிட்டால், இதற்குமேல் இந்தப் பூமியில் அவர் அடைவதென்று எதுவுமில்லை. இந்தப் பூமியில் அனுபவிக்க வேண்டிய எல்லாவற்றையும் அனுபவித்தவரின் உணர்வைவிட, திருப்தியைவிட ஆழமான திருப்தியுணர்வில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.
உடல் பலம், மனோ பலம், ஆன்ம பலம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் உங்களால் அதிகரித்துவிட முடியும்” என ஆரோக்கிய யோகம் வகுப்பில் சொன்னேன்,
“அதெப்படி ஒரே நேரத்தில் சாத்தியமாகும்?” என யோகி ஒருவர் கேட்டபோது,
“உடற்பயிற்சி மூலமாக உடலை ஆரோக்கியமாக்கலாம். உடல் சுத்தமாயிருப்பதால் மனம் கொஞ்சம் சுறுசுறுப்பாயிருக்கும். அவ்வளவுதான்.
அறிவாற்றலையும், தத்துவார்த்தங்களையும் பெருக்குவதின் மூலமாக மனம் ஆரோக்கியமாகலாம். மனத் தொந்தரவுகள் குறைவாய் இருப்பதினால், உடல் சோர்வு இல்லாமல் இருக்கலாம். அதற்கு மேல் பெரியதாய் எதுவும் நிகழ்ந்துவிட முடியாது.
ஆனால் ஆன்ம பலத்தை அதிகரித்தால் மட்டும்தான் உயிரோட்டம் பெருகும். உடலும், மனமும் கொண்டாட்டத்திலும், குதூகலத்திலும் இருக்கும். உடலும், மனமும் ஆரோக்கியத்தின் உச்சியைத் தாண்டி ஆனந்தத்தில் இருக்கும்.
"ஆன்ம பலத்தை அதிகரிப்பது தான்,
எந்தத் துறையிலும் இருப்பவர்களுக்கும்,
எந்த மதத்தில் இருப்பவர்களுக்கும்,
எந்த நாட்டில் இருப்பவர்களுக்குமான
இறுதியான இனிமையான தீர்வு",
என்று சொல்லி முடித்து அவர்களுக்கு அன்று தந்த தியானத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.
ஆத்ம தியானம்
ஆன்ம பலத்தை அதிகரிப்பதற்கான இனிய சக்திவாய்ந்த எளிய தியானம்....
ஆசனம் : இதற்கென்று தனி ஆசனம் ஏதும் இல்லை.
மந்திரம் : எந்த மந்திரமும், எந்த ஜெபமும் அதற்குத் தேவைப்படாது.
நுட்பம் : எதுவுமில்லை. சும்மாயிருப்பதுதான் நுட்பம்.
கண்களை மூடிச் சும்மாயிருக்க முயற்சி செய்யுங்கள். சும்மாயிருங்கள். இதுவே மாபெரும் தியானம். அருணகிரிநாதரை ஞானியாக்கிய தியானம்.
உள்ளேயிருந்து வரும் எண்ணங்களோடு விளையாடிக் கொண்டிருப்பதற்கு மட்டும் முற்றுப்புள்ளி வையுங்கள். மனம் ஓய்ந்தாலே ஆன்ம சக்தி பொங்க ஆரம்பித்துவிடும். பொங்கும் ஆன்ம சக்தி, ஒவ்வொரு செயலையும் சுகமாக்கும்.
வரும் எண்ணங்கள் வரட்டும்,
ஓடும் எண்ணங்கள் ஓயட்டும்.
உங்களின் உள்ளேயும், வெளியேயும் நிகழும் மாற்றங்களை முழுமையாய் நிகழ அனுமதியுங்கள்.
உடலிலோ, மனத்திலோ ஒருவித சுக உணர்வு ஏற்பட்டால் அதைத் தடுக்கவோ தொடரவோ முயற்சி செய்யாமல் சாட்சியாகப் பாருங்கள்.
அதேபோல உடலில் வலியோ, மனத்தில் கஷ்டமோ ஏற்பட்டால் சலிப்பிற்குள்ளாகி தியானத்தை நிறுத்திவிடாதீர்கள். உங்களுக்குள் உள்ள குப்பைதான் வெளிவருகின்றது.
எவ்வளவு காலம்தான் குப்பைகளை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது? அவையெல்லாம் வெளியேற சரியாக வாய்ப்பளியுங்கள்.
ஒரு முக்கியமான உண்மையை இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
தியானம் ஒருவருக்குள் ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் மட்டுமே உண்டாக்கும்.
ஆனந்தத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் குறைவான எந்த ஒரு செயலையும் தியானத்தால் செய்ய முடியாது.
காரணம், தியானம் ஒருவருடைய ஆன்ம சக்தியைத்தான் அதிகரிக்கின்றது. அது எல்லாம் வல்ல இறைசக்தியின் ஒரு தொடர்ச்சி. இந்தச் சக்தியால் மங்கலம் மட்டுமே நிகழும்.
ஒரு சிலர் என்னிடம் இப்படிச் சொல்வதுண்டு.
“தியானத்தில் அமர்ந்த பத்து நிமிடத்திற்கெல்லாம் கால் மரத்துப்போகின்றது”.
அப்போது இப்படிக் கேட்பதுண்டு. “மூன்று மணி நேரம் அசையாமல் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து முழுத் திரைப்படத்தையும் பார்க்கும்போது ஏற்படாத வலி இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது. இன்னும் சொல்லப்போனால், எதையாவது ஆழ்ந்து பார்க்கும்போதும், படிக்கும்போதும் தியானத்தில் அமர்ந்திருப்பது போலத்தான் அசையாமல் அமர்ந்திருக்கின்றீர்கள்.
ஆனால், கால் மரத்துப்போவதில்லை.
உங்களைப்போன்றே ஒரு சிலருக்கு மட்டும் அப்படி நிகழ்வதேன்?
காரணம், உள்ளேயிருந்த மந்த சக்தி வெளியேற ஆரம்பித்து விடுவதுதான். தியானம் செய்பவருக்குள் ஆரோக்கியக் கேட்டை உருவாக்கும் எந்த ஒரு சக்தியோ, நஞ்சோ, ஹார்மோனோ உங்களுக்குள் தொடர்ந்து இருக்க முடியாது.
தியானம் மிகவும் சக்தி வாய்ந்தது.
அதனால்தான் தியானம் செய்ய ஆரம்பித்த பத்தே நிமிடத்தில் உங்களால் உடலும், மனத்தில் ஏற்படும் மனத்திலும் உள்ள எல்லா கெட்ட அம்சங்களையும் எரிக்க ஆரம்பித்துவிடும்.
எனவே, தியானத்தால் ஆரோக்கியத்திற்கும், ஆனந்தத்திற்கும் குறைவான எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.
தியானத்தினால் அதிகரிக்கும் ஆன்ம பலமானது, உடல்பலத்தையும், மனோ பலத்தையும் அதிகரிக்கும் துவக்க நிகழ்வுகளைத்தான் சில நேரங்களில் வெவ்வேறு பெயர் வைத்து மனிதர்கள் குறிப்பிடுவார்கள்.
இதுவரை 12 லட்சம் பேரோடு உலகம் முழுவதும் பல நூறு தியானங்களைப் பரிசோதித்திருக்கின்றேன்.
அந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். தியானம் நல்லதை மட்டும் செய்யும்.
அத்தோடல்லாமல், அது உங்களை முழுமையானவராகவும், பலம் வாய்ந்தவராகவும் மாற்றும்" என்று சொல்லி முடித்தேன்.
