KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/நாட்டையே ஆரோக்கியமாக்கலாம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

நாட்டையே ஆரோக்கியமாக்கலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேசவின் மனைவி மரணப்படுக்கையில் இருந்தார். அப்போது நிகழ்ந்த சம்பாஷணை.

"ஏங்க, நான் இறந்தபிறகு இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா?"

"நிச்சயமாய் செய்து கொள்ள மாட்டேன்மா."

"நிஜமாகவா சொல்றீங்க?"

"நிஜமாகவே இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன்."

"என்மேல் சத்தியமா?"

"இன்னொரு முறையும் அதே தவறைச் செய்து வசமா மாட்டிகிகிற அளவு முட்டாள் இல்லைம்மா உன் கணவன்" என்றார் அவர்.

இந்தத் தம்பதியர் எதையோ நினைத்து வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால், அது எதிலோ போய் முடிந்துவிட்டது. கேசவ் விளையாட்டாய்ச் சொன்னாலும், அது தன் வாழ்க்கையை முழுமையாய் வாழாத தன்மையின் வெளிப்பாடுதான்.

360 டிகிரியில் பல பரிமாணத்தில் தன் வாழ்வை அனுபவிக்க வேண்டிய மனிதர்கள், 30 டிகிரி அளவில்கூட அனுபவிப்பதில்லை.

அதை விடுங்கள்.

உங்களால் 300 வருடங்கள் வாழ முடியும் என்பது தெரியுமா?

செல்களைப் பற்றிய அறிவியல் படிப்பான 'செல் பயாலஜி'யின்படி, "ஒரு மனிதன் பிறக்கும்போது அவனிடம் இருக்கும் செல்களை எடுத்து ஆராய்ந்து பார்த்ததில், செல்களின் தன்மைப்படி, ஒவ்வொரு மனிதனாலும் குறைந்தது 300 வருடங்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால், ஏனோ மனிதன் 60 வயதிலேயே முதிர்ச்சியைத் தொட்டுவிடுகிறான்" என வெளியிட்டிருக்கிறது.

Nithyananda

உங்களால் 300

வருடங்கள் வாழ

முடியும் என்பது

தெரியுமா?

நிஜமாகவே மனிதரால் 300 வருடம் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில் காணும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை ...

ஒரு விளையாட்டில் சச்சரவு ஏற்பட்டுவிட்டால், மூன்று மணி நேரம் இனிமையாய்ச் சென்றிருக்க வேண்டிய விளையாட்டு எப்படி ஐந்தாறு நிமிடங்களில் சட்டென்று, சப் என்று முடிந்துவிடுமோ, அப்படித்தான் மனிதனின் வாழ்வென்னும் விளையாட்டும் முடிந்து விடுகிறது.

சிறு சச்சரவும் மூன்று மணி நேர கொண்டாட்ட சக்தியை ஐந்தாறு நிமிடங்களில் அழித்துவிடுவது போலத்தான், 300 வருடம் வரை தேவையான ஆரோக்கிய சக்தியை சிறுசிறு மனச்சச்சரவுகள், மன அழுத்தங்கள் (depressions) ஐம்பது வருடங்களிலேயே அழித்து விடுகிறது.

இதுபற்றி ஆராய்ச்சி ஒன்று செய்யப்பட்டது.

இரண்டு விதமான எலி கூண்டுகளைச் செய்தார்கள். முதல் கூண்டு இயற்கையான முறையில் செய்யப்பட்டிருந்தது. அந்தசக் கூண்டுக்குள் ஒரு குட்டி வனத்தையே செய்து வைத்திருந்தார்கள்.

இரண்டாவது கூண்டை செயற்கையான முறையில் செய்திருந்தார்கள். இந்தக் கூட்டுக்குள் ஒரு குட்டி ஷாப்பிங் காம்ப்ளக்ஸைச் (Shopping complex) செய்திருந்தார்கள். ஸ்டீரியோ சவுண்ட் ஸ்பீக்கர்களையும்(Stereo sound speaker), ஹாலோஜன் பல்புகளையும், எதிர்பாராத நேரத்தில் நம் கண்ணில் வந்து விழும் எதிர்வரும் வாகனங்களின் ஹெட்லைட்களைப் போலவே பளிச் பளிச்சென வெளிச்சத்தைத் தரும் பிளாஷ் லைட்டுகளைக் (Flash light) கொண்டு அந்தக் கூண்டைச் செய்திருந்தார்கள்.

மூன்று மாதங்கள் இந்த இரண்டு கூண்டுகளிலும் வாழ்ந்த எலிகளிடமிருந்து செல்களை எடுத்து தனித்தனியாக ஆய்வு செய்து பார்த்தார்கள்.

முதல் கூண்டில் இயற்கையாய் வாழ்ந்த எலிகளின் செல்கள் ஆரோக்கியமாக இருந்தன.

ஆனால், இரண்டாவது கூண்டில் வாழ்ந்த எலிகளும் அதே இளம்வயதைச் சேர்ந்த எலிகளாக இருந்தாலும், அவற்றின் செல்கள் இளமையாக இல்லை. கிழ செல்களாக மாறிவிட்டன.

உடல் ரீதியாகவே அந்த எலிகள் கிழ எலிகளாக மாறியது எப்படி என்பதுதான் பரிசோதனையின் மாபெரும் திருப்புமுனை.

உடலில் கிழட்டுத் தன்மையைச் சேர்த்தது வேறெதுவும் அல்ல. அது மன அழுத்தத்தைத் (Depressions) தூண்டும் வாழ்க்கை முறைதான்.

நம் இந்தியாவின் ஆரோக்கியம் மிக்க வேத கலாச்சாரத்திற்கு நேர் எதிரான, மேற்கத்திய கலாச்சாரம்தான் மனித உடலைப் பாதிக்கிறது. வாழ்நாளையே குறைக்கிறது.

300 வருடங்கள் கழித்து ஓய்வெடுக்க வேண்டிய உடலை 60 வருடங்களிலேயே ஓய வைக்கும் மேற்கத்திய கலாசாரத்திலிருந்து ஒருவர் விடுபடாதவரை ஆரோக்கியம் அவருக்குச் சொந்தமானதல்ல.

> உடலில் கிழட்டுத் தன்மையைச் சேர்த்தது வேறெதுவும் அல்ல. > அது மன அழுத்தத்தைத் (Depressions) தூண்டும் வாழ்க்கை > முறைதான்.

இதே பூமியில் இப்போதுகூட நம் வேத கலாச்சாரம் வாழ்வு முறைப்படி வாழும் மக்கள் கூட்டம் இருக்கிறது.

இமயமலையிலும், திபெத்திலும் 200 வயதிற்கு மேல் வாழும் சந்நியாசிகளும், பிட்சுகளும் இருக்கிறார்கள்.

எப்படி இங்கு மட்டும் மனிதர்கள் இவ்வளவு நாட்கள் வாழ்கிறார்கள்? என்று ஆராய்ச்சி செய்தேன்.

Portrait

வேத
கலாச்சாரத்தின்
சாரங்களில்
ஒன்றுதான்
தியானம்.

ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதல் விஷயம் : எதனாலும் களங்கப்படுத்தப்படாத உயர்ந்த வேத கலாச்சார வாழ்க்கை முறை.

இரண்டாவது : இங்கு இருப்பவர்கள் எப்படி நாற்பது வயதைக் கடந்தவுடன் அவரை நடுத்தர வயதுக்காரர் எனச் சொல்கிறார்களோ, அப்படி அங்கு இருப்பவர்கள் 150 வயதை ஒருவர் கடக்கும்போதுதான், அவரை நடுத்தர வயதுக்காரர் என ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள்.

மூன்றாவது : கேசவைப் போல் அதிருப்தியோடு தொடரும் வாழ்க்கை அல்லது அவருடைய மனைவியை போல் பற்றுக் கலந்த பயம் மிகுந்த வாழ்க்கை அங்கே இல்லை. அவர்கள் இதுபோன்ற மனச் சச்சரவுகள் இல்லாத நிலையில் வாழ்கிறார்கள்.

அவர்களைப் போல நாமும் மாற முடியும். அது மட்டுமல்லாமல் இந்தியாவை நோய்களற்ற, ஆரோக்கியம் நிறைந்த நாடாக மாற்ற முடியும். இதற்கு வேத கலாச்சாரத்திற்கு உயிர் கொடுத்தால் போதும்.

வேத கலாச்சாரத்தின் சாரங்களில் ஒன்றுதான் தியானம்.

தியானம் வீட்டையும், நாட்டையும் ஆரோக்கியமயமாக்கும் சக்தி பெற்றது.

தியானம் செய்யுங்கள்.

நாடு ரோகம் நீங்கி, ஆரோக்கியம் பெறட்டும்.

ஆத்ம தியானம்

தெய்வச் சிலை முன் கண்களை மூடி அமர்ந்தால், அது தெய்வச் சிலையின் முன் செய்யப்படும் தியானம்.

புனித மெக்காவின் முன் கண்களை மூடி அமர்ந்தால், அது புனித மெக்காவின் முன் செய்யப்படும் தியானம்.

கண்களை மூடி சிலுவை முன் அமர்ந்தால், அது சிலுவையின் முன் செய்யப்படும் தியானம்.

எல்லா மதங்களின் சடங்காச்சாரங்களை மக்களுக்கு தந்தவர்கள் ஞானிகள். நீங்கள் செய்யும் சடங்கு எதுவாக இருந்தாலும் சரி... அது மன அழுத்தத்தையும், மனச் சச்சரவையும் குறைக்கிறதா? ஆம் என்றால், அது தியானம்தான்.

நீங்கள் சரியாகச் செய்கிறீர்கள். தொடர்ந்து ஆழ்ந்து சிரத்தையுடன் செய்யுங்கள். அடுத்த 21 நாட்களுக்குள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்து ஞானமடைந்து விடுவீர்கள்.

சிரத்தையோடு செய்தும் ஞானம் கிடைக்கவில்லை என்றால், உடனே ஒரு தியான முகாமிற்குச் சென்று தியான சூட்சுமங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வு சுபிட்சமாகும்.