KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/உங்கள்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

உங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வம்சத்திற்கான சொத்துக் குவிப்பு

Swamiji

இந்த உலகத்தில் 650 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருந்தும், அவர்கள் பூமிக்கு, கூட்டு விழிப்புணர்வுக்கு அதாவது collective consciousness க்கு என்ன செய்தார்கள் என்று பார்த்தோம் என்றால், ஒன்றுமில்லை.

0.1% அளவிற்கு அவர்கள் நேர்மறைக்கூட்டுவிழிப்புணர்வை, collective positivity ஐ அதிகப்படுத்தியிருந்தால் ஆச்சரியம்.

ஒருகைப்பிடி அளவு ஞானிகள் மட்டுமே மொத்த உலகவரலாற்றையும், அடுத்தடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

இதுவரை பூமியில் தோன்றிய ஜீவன் முக்தர்களின் எண்ணிக்கையை எடுத்தால், அது 0.001% கூட கிடையாது .

ஆனால் அவர்கள் பூமியில், இயற்கை சீர்வளத்திற்காக, நேர்மறைக்கூட்டு விழிப்புணர்விற்காக, கலாச்சார முதிர்ச்சிக்காக மனவள மேம்பாட்டிற்காகச் செய்ததுதான் 99.99% உலக வரலாற்றை உருவாக்கியிருக்கிறது.

உடனடியாக ஓராயிரம் ஜீவன் முக்தர்களாவது உருவாகாவிட்டால், பூமிப்பந்து, சூரிய குடும்பத்தில் சுற்றும். ஆனால் அதில் சுற்ற ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நீங்கள் உயிரோடு சென்று, உயிரோடு திரும்பி வரலாம். இதே நிலை, எதிர்மறைக்கூட்டு விழிப்புணர்வு (collective negativity) அதிகமாகிக் கொண்டே சென்றால், உங்களின் பிள்ளைகள் அலுவலகத்திற்குச் செல்ல ஆரம்பிக்கும்போது உங்கள் வீடு இருக்கும், அவர்கள் செல்கின்ற அலுவலகமும் இருக்கும். ஆனால், மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்கு, காலையில் அலுவலகத்திற்குச் சென்ற ரோடு இருக்காது.

தீவிரவாதம் தலைக்கு மேல் சென்று விட்டது. இதே நிலையில் சென்றால் 20, 30 வருடங்கள் கழித்து உங்களின் பேரக் குழந்தைகள் பிறக்கும் பூமி, 24 மணி நேர திகில் திரைப்படமாக இருக்கும்.

Nithyananda

ஓராயிரம் ஜீவன்
முக்தர்களாவது
உடனடியாக
பூமியின் மீது
உலாவ
வேண்டும்.

அதனால் பூமியைக் காப்பாற்ற உடனடித் தேவை, ஓராயிரம் ஜீவன் முக்தர்களாவது உடனடியாக பூமியின் மீது உலாவ வேண்டும்.

இன்னும் கொஞ்சம் காலத்திற்குள் 10,000 ஜீவன் முக்தர்கள் உருவானால் மட்டுமே பூமியைக் காப்பாற்றுவது பற்றி யோசிக்கலாம்.

ஜீவன் முக்தியை அடைவதற்காக முயற்சி செய்பவர்கள் ஒரு 1,00,000 பேர், அதாவது ஜீவன் முக்தியை வாழ ஆரம்பித்தவர்கள் இருந்தால்கூட போதும். பூமியைக் காப்பாற்றி விடலாம்.

போர்க்கால அடிப்படையில் உங்களின் பேரக்குழந்தைகள், உங்களின் செல்ல வாரிசுகள், இந்தப் பூமியில் அவர்கள் நிம்மதியான வாழ்வை வாழ்வதற்கான இடத்தைக் காப்பாற்றி வைப்பது, நம் ஒவ்வொருவரின் தலைக்குமேல் இருக்கும் பொறுப்பு.

உங்களின் செல்ல பேரக்குழந்தைகளாக செவ்வாய் கிரகத்திலிருந்து யாரோ வந்து பிறப்பார்கள் என்று நினைக்காதீர்கள். இன்னும் 40, 50 வருடங்கழித்து உங்களின் உடலை விட்ட பிறகு, புது உடல் எடுத்து உங்களின் பேரக் குழந்தைகளாகப் பிறக்கப் போவது நீங்கள்தான்.

தாத்தா நட்டு வைத்த மாமரத்திலிருந்து பேரன் வந்து மாம்பழத்தைச் சாப்பிடுவார் என்பது பொய்.

தாத்தா என்ற உடலிலிருந்து மாமரத்தை நட்டு வைத்து, பேரன் என்ற உடலில் வந்து மாம்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

மீண்டும் நாம் இந்தப் பூமிக்கு வரும்போது, பூமி பூமியாக இருப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இப்பொழுதே செய்துவிட்டால் தப்பித்தோம்.

இல்லையென்றால் தொலைந்தோம்.

Either global peace or global sucide is the future

ஆத்ம தியானம்

தயவுசெய்து உங்களை மிரட்டுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.

கல்யாண வீட்டுப் பந்தலில் அணுகுண்டு இருக்கிறது என்ற செய்தியைத் தெரிந்த ஒருவர் தன்னையும், மற்றவர்களையும் காப்பாற்றிக் கொள்ள, இன்னொரு நல்லெண்ணமுடையவரிடம் பகிர்ந்து கொள்ளும் செய்திதான் இது.

நீங்கள் ஜீவன் முக்தராவது, உங்கள் வாழ்வின் இலட்சியம். நீங்கள் ஜீவன் முக்தராவது எங்கள் வாழ்வின் இலட்சியம். நீங்கள் ஜீவன் முக்தராவது இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும், பிரபஞ்ச சக்தியின் லட்சியம்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும் இதைத் தாண்டி எளிமையான சத்தியமான, நேரடியான தீர்வு இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை

மனம் கடந்த நிலையில், துரிய நிலையில், ஜீவன் முக்த நிலையில், வாழும் பத்தாயிரம் கடவுள்களைப் பிரபஞ்ச சக்தி யாசகமாய்க் கேட்கின்றது.

நீங்கள் அதில் ஒருவராவது, கரும்பு தின்னக்கூலி அல்ல. கரும்பைச் சாப்பிட்டதற்காகக் கரும்பு தொழிற்சாலைக்கே முதலாளியான கதை போன்றது.

லட்சியத்தை நோக்கி மொத்த வாழ்வையும் திருப்புங்கள். திருப்பியபின் நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பார்ட்னராக இருக்கலாம். ஆனால், வாழ்வின் இலட்சியம் நோக்கி திரும்பிய வினாடியிலிருந்து கடவுள் உங்களின் பார்ட்னர்.

வீறு கொண்டு எழுங்கள்!

மார் தட்டி நிமிர்ந்து நிற்போம்!

ஜீவன் முக்தியை வாழ்வதற்கு, நம் பூமியைக் காப்பாற்றுவதற்கு...!