KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/ஒவ்வொரு நிமிடமும் புது வாழ்வுSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

ஒவ்வொரு நிமிடமும் புது வாழ்வு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

மிக அழகிய சிற்பத்தை வடித்து முடித்த சிற்பி திருப்தியோடு அமர்ந்திருந்தார். அந்தச் சிற்பம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததினால் அதை விற்காமல் தன் வீட்டிலேயே வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்திருந்தார்.

அவருடைய முடிவும், திருப்தியும் அடுத்த நாளே அங்கு வந்த அரச ரால் தவிடுபொடியானது.

"தளபதியே, இவ்வளவு அழகான ஒரு சிலையை நான் பார்த்ததே இல்லையே. இதை என் அந்தப்புரத்தில் வைத்துவிடுங்கள்" என்று அரசர் சொல்லிவிட்டுச் செல்லும்பொழுது சிற்பி ஆழ்ந்த துக்கத்தில் விழுந்தார். அவரது திருப்தி க்ஷணத்தில் அதிருப்தியாகிவிட்டது. அந்தத் துக்கத்திலேயே தூங்கிப்போன சிற்பியின் கனவில் கல்பதரு மரத்தின் அடியில் அவர் அமர்ந்திருப்பதாகக் கனவு வந்தது.

"ஒருவேளை இப்படியொரு சிற்பியாக இல்லாமல் நான் ஒரு அரசராக இருந்திருந்தால் என்னை யாரும் அசைக்க முடியாதில்லையா? என் திருப்தியையோ, நிம்மதியையோ யாராலும் அசைக்க முடியாதில்லையா?" என்று கல்பதரு மரத்தினடியில் நினைத்துக்கொண்டிருந்த மாத்திரத்தில் சிற்பி அரசராகிவிட்டார்.

அரசரான சிற்பிக்கு குஷி தாளவில்லை. பத்து குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் தனக்கு ஒரு மாளிகையைக் கட்டிக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிய அரசரான சிற்பி மிகுந்த திருப்தியோடு இருந்தார்.

"இந்த நாட்டுக்கே அரசர் நான். என்னை இனி யாரால்

அசைத்துப்பார்க்க முடியும்? இனி நான் விரும்பியபடியெல்லாம் வாழலாம்” என யோசித்து மிகுந்த திருப்தியோடு தேருக்குள்ளிருந்த பஞ்சு மெத்தையில் உல்லாசமாகப் படுத்தார்.

பஞ்சு மெத்தையில் படுக்கவும், அங்கு உருவான வேகமான காற்றினால் தேரின் கூரை பிய்த்துக்கொள்ளவும் சரியாக இருந்தது. உல்லாச உணர்வோடு இருந்த அரசரின் முகத்தில் உச்சிவெயில் பட்டதும் மிகுந்த கோபத்திற்குள்ளானார்.

portrait

உங்கள்
திருப்தியையும்,
மன நிம்மதியையும்
மற்றவர்கள்
அசைப்பதில்லை,
நீங்கள் அனுமதி
தராத வரை.

அடுத்த நொடியே அரசரின் திருப்தியும், கூரையைப்போலவே அதுவும் பிய்த்துக்கொண்டு எங்கோபோய் மறைந்துவிட்டது.

“என் தேரையே அசைத்துப்பார்க்குமளவிற்கு வலிமை வாய்ந்ததா இந்தக் காற்று? அப்படியென்றால் இந்தக் காற்றாக மாறிவிட்டால், என்னை யாராலும், எதனாலும் எதுவும் செய்ய முடியாதில்லையா?” என்று நினைத்த மாத்திரத்தில் அரசர் காற்றாக மாறிவிட்டார்.

காற்றாக மாறிய அரசருக்கு மீண்டும் குஷி தாளவில்லை. எவ்வளவு பெரிய மாட மாளிகையாக இருந்தாலும், எவ்வளவு உயர மரங்களானாலும், தன்னுடைய ஒரே ஒரு சூறாவளி காற்றாலேயே அவையெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனதைப் பார்த்துக் காற்றாக மாறிய அரசருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.

‘இந்த உலகில் இனி தன்னை எதிர்ப்பதற்கோ, தடுப்பதற்கோ யாருமேயில்லை' என்ற எண்ணம் பிறக்கவும், இன்னும் கொஞ்சம் குஷியாகி காட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு பெரிய மரத்தையும் வேரோடு பிடுங்கிப் பிடுங்கி விளையாடியது காற்றாக மாறிய அரசர்.

விளையாடியது போதும், பாவம் விட்டுவிடலாம், என்ற திருப்தியோடு காட்டைவிட்டு வெளியேறி பக்கத்தில் இருக்கும் மலையை நோக்கி வேகவேகமாகச் சென்ற காற்றால் அங்கிருந்த ஒரு கல்லைக்கூட அசைக்க முடியவில்லை.

“அட! என்ன இது? ஒரு காட்டையே ஒரு புல்லைப் பிடுங்குவது போல் பிடுங்கியெறிந்த என்னால் ஒரு கல்லைக்கூட அசைக்க முடியவில்லையே? நான் என்ன செய்தாலும் எவ்வளவு வேகமாக மோதினாலும் அதையெல்லாம்

ஒரு பொருட்டாகவே கருதாமல் எப்படி இந்த மலையால் இப்படி ஒய்யாரமாக உட்கார்ந்திருக்க முடிகின்றது? ஒருவேளை இந்த மலையாக நான் மாறிவிட்டால் இந்த உலகில் யாராலும், எதனாலும் எதுவுமே செய்ய முடியாது போலல்லவா தெரிகிறது?" என்று நினைத்த மாத்திரத்தில் காற்று மலையாகிப்போனது.

காற்று மலையானதும், அதன் மீது புயல் காற்றால்கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அடைமழை, உச்சிவெயில், கடுங்குளிர் என்று எதனாலும் தன்னை எதுவுமே செய்ய முடியவில்லை என்று திருப்தியாக வாழ ஆரம்பித்தது அந்த மலை.

அடுத்த சில நாட்கள் கழித்து அரசரின் அந்தப்புரத்தில் அதேபோல் இன்னொரு சிலை வேண்டுமென்பதற்காக நல்ல கல்லை தேடிப்புறப்பட்டிருந்த சிற்பி இந்த மலையைக் கண்டுபிடித்து பெரிய உளியை வைத்து செதுக்க ஆரம்பித்தார்.

'நங், நங்' என்று உளியின் ஒவ்வொரு அடியும் விழவிழ... "ஐய்யோ! அம்மா! வேண்டாம் விட்டுருங்க," என்று வாய் திறந்து கூட பேசமுடியவில்லையே என்ன பிழைப்பு இது?

யாராலும் எதுவும் செய்ய முடியாத என்னை, தன் இஷ்டத்திற்கு உடைக்க முடிகின்றது என்றால் நிச்சயம் இந்தச் சிற்பிதான் உலகத்திலேயே மிகப்பெரிய சக்தி படைத்தவராக இருக்கமுடியும்," என்று நினைத்த மாத்திரத்தில் சிற்பியாக மாறிப்போனார்.

"அடடே! மீண்டும் சிற்பியாக மாறிப்போனேனே" என்று உணர்ந்ததும் வாய்விட்டு சிரிக்கத்துவங்கினார்.

"இதைவிடப் பெரிய நல்லது வேண்டும், இதைவிடப் பெரிய நல்லது வேண்டும்." என்று விரும்பியபடியெல்லாம் மாறியபிறகு கடைசியில் ஆரம்பித்த இடத்திற்கே வந்தபிறகுதான் ஏற்கனவே இருந்த நிலையின் மகத்துவம் புரிந்தது சிற்பிக்கு.

பழைய சிற்பி இப்பொழுது முழுமையாக மாறிவிட்டார். அதன் பிறகு

> உங்கள் திருப்தியையும், மன நிம்மதியையும் நீங்கள்தான் > நிர்ணயிக்கின்றீர்கள். சிற்பியாகவே அவரது வாழ்க்கை தொடர்ந்தாலும், பழைய துக்கம் அவரிடம் இல்லை. ஒவ்வொரு நிலையிலும் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் அவரை அடியோடு மாற்றிவிட்டன.

வாழ்க்கை அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருப்பதுதான் Ego (அகங்காரம்). வாழ்க்கையிடமிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டால் வளர்ச்சி என்பது ஒரு நிமிடத்தில் நிகழும் அற்புதமாகிவிடும்.

ஏற்கனவே, தான் மிகவும் நல்ல நிலையில்தான் இருந்து கொண்டிருக்கின்றோம் என்ற ஒரு அனுபவ உணர்வே அவருக்குள் பூரணத் திருப்தியை ஒரே நிமிடத்தில் மலரவைத்தது. சிற்பியின் மனம் சிற்பமானது.

'நீங்கள் இருக்கும் இன்றைய நிலை ஏற்கனவே நல்ல நிலைதான்' என்பதை உணர்ந்துவிட்டால் யாராலும் எதனாலும் அசைக்க முடியாது.

ஆத்ம தியானம்

எல்லோருமே நமது கடந்த காலத்தின் ஏதோ ஒரு பகுதியை எடுத்து, "அப்போதெல்லாம் ரொம்ப நல்லா இருந்தேன், என்னுடைய இளமைக்காலம் மாதிரி வருமா? அது ஒரு பொற்காலம் என்று சொல்வோம்."

ஆனால் எதையெல்லாம் பொற்காலங்கள் என்று குறிப்பிடுகின்றோமோ அந்தக் காலங்களில் அப்படி நாம் உணர்வதேயில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

என்றோ நல்லது பிறக்கும் என்று ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றவர்களுக்கு இந்த உண்மை ஏனோ புரியவில்லை. இப்பொழுது நிகழ்வது எல்லாமே மிகவும் நல்ல விஷயங்கள்தான்.

ஒவ்வொரு நிமிடமும் 'புதுவாழ்வு! நல்வாழ்வு!' என்ற வகையில் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதைத் தியானித்து இதை உங்களின் அனுபவமாக மாற்றிக் கொண்டால் நீங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையே மிகவும் நல்ல நிலைதான் என்ற திருப்தியை பெற்று வாழ்க்கையை எதிர்கொள்வீர்கள்.

துக்கம் இல்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் தாண்டும் மஹா பண்பை பெறுவீர்கள்.