KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/சக்தியோட்டம் சீராகும்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

சக்தியோட்டம் சீராகும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

சின்ன இரகசியம்...

உடம்போடு நீங்கள் சரியாக வாழவில்லை என்பதற்காக உடல் உங்களுக்குத் தரும் Divorce notice தான் நோய்.

சொந்த உடலை இன்று கவனிக்காமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் கோர்ட் படிக்கட்டுக்கு அடிக்கடி ஏறி இறங்குவது போல, மருத்துவமனைக்கு ஏறி இறங்க வேண்டியிருக்கும். உஷார்!

லாஸ் ஏன்ஜலீஸ் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் இலவச கருத்தாலோசனை நேரத்தில் என்னிடம் பேசிய போது...

"என்னுடைய முதுகெலும்பின் நுனிப் பகுதியில் வந்திருக்கும் கட்டி ரொம்பப் பெரிதாக வளர்ந்துவிட்டது.

அதனால், உடனடியாக அக்கட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

வருகின்ற செவ்வாய்க்கிழமை அதற்குத் தேதி குறித்திருக்கிறார்கள். தியான சிகிச்சையால் பலர் கேன்சரிலிருந்துகூட குணமடைந்திருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். என்னை உங்களால் காப்பாற்றமுடியுமா?" என்று கேட்டார்.

அப்போது அவரிடம் "உங்களை நீங்கள் காப்பாற்றத் தயாரா?" என்று கேட்டேன். ஆழ்ந்து யோசித்து "ம்...தயார்" என்றார்.

“இது போதும், உங்களுடைய வேதனையிலிருந்து பூரணமாக விடுதலை பெற்றுவிடுவீர்கள்” என்று சொல்லிவிட்டு, அப்பெண்மணியைப் பற்றி விசாரித்தபோது அவரின் இளவயது அனுபவங்களைப் பற்றிய வருந்தத்தக்க நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.

அவரின் சொந்த உறவினர் ஒருவரே, அவரின் சிறுவயதில் அவரிடம் மிகவும் தவறாக நடந்து கொண்டதினால், அவருக்கு ஆண்களின் மீதே வெறுப்பு வந்துவிட்டது.

சுவாமி பரமஹம்ச நித்யானந்தா

“வெறுப்பிற்கு
தனிப்பட்ட
சக்தி ஏதுமில்லை.
ஆனால், உங்களின்
வெறுப்பிற்கு
உங்களின்
சக்தியோட்டத்தை
திசை திருப்பிவிடும்
சக்தியுண்டு”

அதுமட்டுமில்லாமல், எப்பொழுதெல்லாம் அந்தக் கொடூரமான சம்பவம் நினைவுக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் குற்றஉணர்வில் மூழ்கிப்போவாராம்.

‘இந்தக் குற்றஉணர்விலிருந்து வெளிவருவது எப்படி? இதிலிருந்து சுதந்திரம் பெறுவது எப்படி?’ என்பதைப் பற்றி சிந்திக்காமல் அவருக்கு அவரே தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிட்டதுதான் கொடுமை! பரிதாபத்திற்குரியது. தேவையற்றது.

அவர் அவருக்கே தந்த முதல் தண்டனை, ‘தான் ஒரு புனிதமற்றவர்’ என்ற முடிவுக்கு வந்ததுதான். அடுத்து, தன்னுடைய உடலையே கண்டனப்படுத்த உள்ளுக்குள்ளேயே புழுங்க ஆரம்பித்தது.

விளைவு, உடல் முழுவதும் நதிபோல ஓடிப்பரவ வேண்டிய சக்தி, அவருடைய உடலை அவரே வெறுத்ததினாலும். அருவருக்க ஆரம்பித்ததினாலும், இடுப்புப்பகுதிக்கு இயற்கையாகப் பாய்ந்து கொண்டிருக்கும் சக்தி தடுக்கப்பட்டு விட்டது. இதன் எதிரொலிதான் கட்டியாக வந்திருக்கின்றது, என நான் சொன்னதைக் கேட்ட பெண்மணி அதிர்ந்தே போனார்.

“என்ன சொல்றீங்க? என்னுடைய வெறுப்பிற்கு அவ்வளவு சக்தியா இருக்கிறது?” எனக் கேட்டார்.

“வெறுப்பிற்கு தனிப்பட்ட சக்தி ஏதுமில்லை. ஆனால், உங்களின் வெறுப்பிற்கு உங்களின் சக்தியோட்டத்தை திசை திருப்பிவிடும் சக்தியுண்டு” எனச் சொன்னேன்.

"என் நிலை எல்லை மீறி சென்றுவிட்டதே. இப்போது ஏதாவது செய்ய முடியுமா?" என அவர் கேட்டதும் ஒரு ஆழமான தியானமொன்றைக் கற்றுத்தந்தேன்.

அதற்கப்புறம் அவரைப் பற்றி நானும் மறந்து விட்டேன். அவரையும் நான் பார்க்கவில்லை.

சில மாதங்கள் கழித்து, மீண்டும் அமெரிக்காவிற்குத் தியான சொற்பொழிவாற்ற சென்றிருந்தபோது...

கண்கள் கலங்கி இரு கைகளிலும் இரண்டு எக்ஸ்ரே படிவங்களைப் பிடித்தபடி நன்றியுணர்ச்சி ததும்ப வரவேற்பதற்காகக் காத்திருந்த பக்தர்களின் நடுவேயிருந்து ஓடிவந்து அவர் சொன்ன இந்த வரிகளைக் கேட்டு நானும் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தேன்.

அவர் "ஆப்ரேஷன் செய்யாமலேயே அந்தக் கட்டியை மறைய வைத்த தியான சிகிச்சைக்கு நன்றி" எனச் சொல்லி, அவருடைய முதுகெலும்பின் நுனியில் கட்டி இருந்ததற்கான பழைய எக்ஸ்ரேயையும், இப்போது அங்கே எதுவுமே இல்லை என்பதற்கான எக்ஸ்ரேயையும் ஆனந்தத்தோடு காண்பித்தார்.

அதைப் பார்க்க எனக்கும் பெரிய ஆனந்தமாயிருந்தது.

இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

ரோகத்தைப்போக்கி ஆரோக்கியத்தை தந்த தியானம்தான் இந்த ஆத்ம தியானம்.

"ஆப்ரேஷன் செய்யாமலேயே அந்தக் கட்டியை மறைய வைத்த தியான சிகிச்சைக்கு நன்றி"

ஆத்ம தியானம்

icon

"என் நிலை எல்லை மீறிச் சென்றுவிட்டதே!" என அப்பெண் கேட்டபோது சொன்னேன், "கவலைப்படாதீங்கம்மா! இப்போது சொல்லப் போகிற தியானத்தை முழு சிரத்தையோடு செய்யுங்கள். அது உங்களை மேலே எடுத்து வந்துவிடும்.

உடையக்கூடிய பொருட்களை அறையை விட்டு அப்புறப்படுத்திவிட்டு, அறைக் கதவை தாழ்ப்பாளிட்டு...

யாரை நினைக்கும் போதெல்லாம் வெறுப்பும், கோபமும் பொங்குகிறதோ, எதை மீண்டும் மீண்டும் மறக்க முயற்சி செய்கின்றீர்களோ... அந்த நினைவுகளை விழிப்புணர்வோடு மேலே வர அனுமதியுங்கள்.

தலையணையை அல்லது மெத்தையை உங்களைப் பாதித்தவராக பாவித்து... அந்த நிமிடத்திலிருந்து இன்றுவரை அவர் மேல் உங்களுக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் எல்லா கோபங்களையும் வெளிப்படுத்துங்கள்.

தினமும் காலையும், மாலையும் 21 நிமிடங்கள் முழுவேகத்தோடு செய்துவிட்டு 10 நிமிடங்களாவது ஓய்வாக அமர்ந்திருங்கள்.

அந்த 10 நிமிடங்களில் உங்களை இதுவரை பாழாக்கிய சம்ஸ்காரங்கள் உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும். வெறுப்புகளும், அருவருப்புகளும் கரைய ஆரம்பிக்க சக்தியோட்டம் சரியாய் பரவ ஆரம்பிக்கும். ஆரோக்கியம் மலர்ந்துவிடும்."

இது கேட்பதற்கு மிக எளிமையான தியானமாகத் தெரியும். செய்துபாருங்கள், பெரிய கட்டியையே கரைத்துவிட்ட இந்தத் தியானத்தின் மகத்துவம் புரியும்.