KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/விருப்பப்படி வாழ்வைSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

விருப்பப்படி வாழ்வை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வடிவமைக்கலாம்

Nithyananda

“ஒரு பூனை ஏன் பூனையாக இருக்கின்றது?” என்ற கேள்வியை ஜென் ஞானி தன் சீடர்களிடம் கேட்டார்.

யாருக்கும் பதில் தெரியவில்லை. அப்போது குரு சொன்ன பதில், “காரணம், அந்த பூனை பூனையாகவே இருக்க விரும்புகின்றது. அதன் விருப்பம் சிறிது மாறினால்கூட அந்த பூனை உடலுக்குள் அதனால் இருக்க முடியாது.

ஒன்று உடல் வெடித்து விடும். இல்லை அது உடலைவிட்டு வெளியே வந்துவிடும்.”

உங்களின் சின்ன மாற்றத்திற்குக கூட பிரபஞ்சம் ஓடோடி வந்து உதவும் வகையில்தான் தன்னை வடிவமைத்து இயங்குகின்றது.

குவாண்டம் பிஸிக்ஸில் (Quantum physics) ஒரு அருமையான வாக்கியம் உண்டு. “ஒரு எலக்ட்ரான் அதிர்ந்தால் இந்தப்பிரபஞ்சமே அதிர்கின்றது.”

நீங்கள் கேட்பதைத் தருவதற்காகவே பிரபஞ்சம் இயங்குகிறது.

எதை ஒரு ஜீவன் கேட்கின்றதோ அதைச் சிறிதும் காலம் தாழ்த்தாமல், உடனே ஓடிவந்து தந்து கொண்டிருக்கிறது.

இது இந்த நிமிடம் கூட உண்மை!

இந்தச் சத்தியத்தை படித்த உடனே நீங்கள் கேட்கலாம் , "அப்புறம் ஏன் நாங்கள் கேட்பது எல்லாமே கிடைப்பதில்லை. பலவற்றிற்கும் நாங்கள் தவிக்கின்றோமே, ஏன் நாங்கள் தவிக்க வேண்டும்?"

ஒருவேளை இதைவிட ஆழமான கேள்விகளை நீங்கள் கேட்டால் கூட, உண்மையின்படி சொல்கிறோம். "உங்களுக்கு ஓடோடி வந்து உதவ பிரபஞ்சம் காத்துக்கொண்டிருக்கின்றது.

படம்

"உங்களுக்கு ஓடோடி வந்து உதவ பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கின்றது

இதை அழகாய் உணர்த்தும் ஒரு சின்னக் கதை...

மலையடிவாரத்தில் வாழ்ந்த மலைவாசிகளுக்கும், மலையின் உச்சியில் வாழ்ந்த மலைவாசிகளுக்கும் பெரும் சண்டை மூண்டது. சண்டையில் பல பொருட்கள் சூறையாடப்பட்டன.

அதில் மலையடிவாரத்தில் இருந்து கொழுகொழுவென அழகாய், சிவப்பாய் இருந்த குழந்தை ஒன்றையும் மலையுச்சியில் வாழ்ந்த மலைவாசிகள் சூறையாடி எடுத்துச் சென்றுவிட்டனர்.

பொருட்கள் போனதுகூட பெரிய பரபரப்பை உண்டுபண்ணவில்லை. குழந்தையை இழந்த தாய் குமுறிக் கதறியது அங்கிருந்த அனைவரையும் பரபரப்பாக்கியது! எப்படியாவது இழந்த குழந்தையை மீட்டே தீருவது என்று ஒரு குழு வீரர்கள் மலையுச்சி நோக்கிப் புறப்பட்டார்கள்.

அது செங்குத்தான மலை. ஏறுவது வெகு கடினமாய் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த ஏகப்பட்ட முட்புதர்கள் வேறு அவர்கள் மேல்நோக்கி செல்வதைச் சோதித்தன.

மாலை மணி 5 ஆகிவிட்டது.

பாதி தூரம்தான் தாண்டியிருந்தார்கள்.

அப்போது, யாரோ ஒருவர் மேலிருந்து கீழ்நோக்கி வருவதைப் பார்த்து மொத்தக் கூட்டமும் பதுங்கியது.

யார் அது? யார் அது? என்று பரபரப்போடு பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள். காரணம், காணாமல் போன குழந்தையை அடிவயிற்றில் கட்டிக்கொண்டு வேகவேகமாக இறங்கிக் கொண்டிருந்தாள், அந்தக் குழந்தையின் தாய்!

அந்த கூட்டத்தின் தளபதி மிகவும் ஆச்சரியமாய் கேட்டார், "ஏ! பெண்ணே! நாங்கள் வீரர்கள். நாங்களே தடுமாறிவிட்டோம். இவ்வளவு நேரமாகிவிட்டது. அரை நாளில் அரை மலையை தாண்டிவிட்டோமே என ஆச்சரியப்படுகிறோம். நீ எப்படி அதற்குள் குழந்தையை மீட்டு வந்தாய்?"

அந்த பெண் அழகாய் பதில் சொன்னாள், "காரணம், அந்தக் குழந்தைக்கு நான் தாய். என்னுடைய உயிர் இது. உங்களுக்கு அப்படியா?"

வீரர்களுக்கும் குழந்தையை மீட்பதுதான் முக்கிய பணி. முக்கிய நோக்கம்.

அப்பெண்ணுக்கும் குழந்தையை மீட்பதுதான் முக்கிய பணி. முக்கிய நோக்கம்.

இருவருமே அதே சிந்தனையாகத்தான் இருந்தார்கள். அதற்காகத்தான் முயன்றார்கள். அப்பெண்ணுக்குள் வீரர்களையும் தாண்டிய சக்தி பொங்கியது எப்படி?

வீரர்களின் முயற்சி வெற்றியைத் தழுவவில்லை. அதற்குள் அப்பெண் வெற்றி பெற்றாள். அதே உலகம், அதே மனித உடல், அதே ஜீவன், அதே நேரம்தான்... இப்பெண்ணுக்கும் இருந்தது. இப்பெண்ணுக்கு மட்டும் பிரபஞ்ச சக்தி ஓடோடி வந்து உதவியதா?

இவரின் கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுமளவுக்கு அப்பெண்ணுள் சக்தியைப் பொங்க வைத்ததா? பாரபட்சம் செய்ததா?

ஆழ்ந்து பார்த்தால் பிரபஞ்சம் இருவருக்கும் ஓடோடி வந்துதான் உதவியது.

> "காரணம், அந்த குழந்தைக்கு நான் தாய். என்னுடைய உயிர் இது.

அப்பெண்ணின் உயிர் முழுவதும் குழந்தையை அடைவதாக இருந்தது. ஒவ்வொரு (cell) செல்லும் அதை அடைய ஏங்கியது. அதனால் குழந்தை கிடைத்தது. அதற்கு தேவையான எல்லாமே அப்பெண்ணின் உள்ளேயும், வெளியேயும் நடந்தேறியது.

ஆனால், வீரர்களின் மனதில் மட்டுமே குழந்தையை மீட்க வேண்டும் என்ற வெறி இருந்தது. அதுவும் மனதின் ஒரு பகுதி மட்டுமே அதற்காக இயங்கியது. மனதின் மீதமுள்ள பகுதியில் பசி, வீட்டுப் பிரச்சினை, எதிர்காலம் போன்ற பல குழப்பங்களும் இருந்தன.

Nithyananda

உங்களின் வாழ்வு,
உங்களின்
விருப்பப்படி
தொடர்ந்து
பிரபஞ்சத்தால்
வடிவமைக்கப்பட்டுக்க்
கொண்டிருக்கும்
அற்புத வஸ்து.

வீரர்கள் எந்த அளவிற்கு அக்குழந்தையை அடைய வேண்டும் என்று உள்ளுக்குள் உணர்வு பொங்க ஏங்கினார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் வெற்றியடைந்திருந்தார்கள். பிரபஞ்ச சக்தியின் உதவியால், அரை நாளிலேயே பாதி மலையைத் தாண்டியிருந்தார்கள்!

அந்த அளவிற்கு அவர்கள் சாதித்ததுகூட அவர்களின் விருப்பம் எவ்வளவு முழுமையாக இருந்ததோ, அந்த அளவிற்கு அவர்களுக்குள் வெளியேயும் சக்தி பொங்கியது. சூழ்நிலைகள் மாறியது.

இப்போது நீங்கள் வாழும் வாழ்வு எப்படிப்பட்டதாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் சரி... நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியம் "நம் வாழ்வு நம்முடைய உடல், மன, உயிர் உணர்வு ஆகிய அனைத்தின் மொத்த விருப்பத்தின் கூட்டுத்தொகைதான்."

உங்களின் வாழ்வு, உங்களின் விருப்பப்படி தொடர்ந்து பிரபஞ்சத்தால் வடிவமைக்கப்பட்டுக்க் கொண்டிருக்கும் அற்புத வஸ்து.

இப்போது நினைத்தால் உங்களால் வாழ்வை மாற்றியமைக்க முடியும். வாழ்வை வடிவமைக்க முடியும்.

"என்னாலும் முடியுமா?!" என்று உங்களின் கேள்விக்கான பதில்தான் இந்த ஆத்ம தியானம்.

ஆத்ம தியானம்

Consciousness (மேல் மனம்), Unconsciousness (ஆழ் மனம்) என்ற இரண்டும் ஒவ்வொருவருக்கும் உண்டு.

மொத்த மனதில் மேல் மனம் 10%, ஆழ்மனம் 90%. மேல் மனம் மட்டுமே மனிதனின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. ஆழ்மனம் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாமலே இயங்குகிறது.

மனிதர் என ஒருவர் தன்னை நம்புவதும், யோசிப்பதும், பேசுவதும், செயல்படுவதும், தன்னைப் பற்றிய மொத்தக் கருத்தை அவர் வைத்து பதிவு செய்து வைத்திருப்பதும் இந்த மேல் மனதில்தான்.

ஆழ்மனதில்தான் அவருக்கே தெரியாத அவரின் பல உணர்வுகள், உணர்ச்சிகள், பயங்கள், ஆசைகள், ஏக்கங்கள் பதிந்திருக்கின்றன.

ஒருவரின் நிஜமான விருப்பம், ஏக்கம் என்பது இந்த இரண்டு மனங்களின் கூட் டுத்தொகைதான்.

பெரும்பாலான நேரங்களில் மனிதனின் விருப்பம் இந்தக் கதையில் வரும் வீரர்களின் விருப்பத்தைப் போல வெறும் மேல் மனதில் ஏற்படும் கிளர்ச்சியாகவோ, வெறியாகவோ, சூடாகவோ இருந்துவிடுகின்றது.

பிரபஞ்ச சக்தி முழுமையாக உதவினாலும்கூட, வெறும் 10% மேல் மனதிற்கு மட்டுமே அதனால் சக்தி தர முடியாது. காரணம் ஆழ் மனம், அதாவது 90% மனம் எப்போதும் வேறு ஏதோ குழப்பத்திலோ, வெறுமைத்தன்மையிலோ, விழிப்பற்ற நிலையிலோ இருந்து விடுகின்றது. இந்தத் தன்மைதான், உங்களின் 90% வாழ்வாக மாறுகிறது.

பிரபஞ்ச சக்தி உங்களின் நிஜ விருப்பத்திற்கும், முழு ஏக்கத்திற்கும் சக்தியைத் தருகின்றது. உங்களின் நிஜ ஏக்கத்தில் 90% எப்போதுமே உங்களின் விழிப்பற்ற, உணர்வற்ற பகுதியில் இருப்பதால்தான் நீங்கள் கேட்பது எல்லாமே நிகழ்வதில்லை என்பது போலத் தெரிகின்றது. ஆனால் மொத்தமாக நீங்கள் கேட்பதுதான் இன்றும் இந்த வினாடியும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இதிலிருந்து விடுபட, நம் விருப்பப்படி வாழ்வை வடிவமைக்க, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

வெறும் 10% ஆக இருக்கும் விழிப்புணர்வுமிக்க மேல்மனத்தில் இருக்கும், விழிப்புணர்வு, மீதமுள்ள 90% மனதிலும் பாய்ச்ச வேண்டும்.

உங்களின் விழிப்புணர்வு சக்தியின் எல்லையை அதிகரிக்க வேண்டும்.

ஆழ்மனதிற்குள்ளும் விழிப்புணர்வை பாய்ச்சும் நுட்பத்தைத்தான் தேடுதல் என்று சொல்கிறோம்.

அப்பெண்ணின் வாழ்வில் நடந்தது போல உயிரே ஏங்கினால், ஏங்குவதை அடைவதற்கான எல்லாமே உங்களைச் சுற்றி உருவாகிவிடும்.

தேடுதலை ஆழப்படுத்தினாலே, அதற்கான சக்தி பொங்க ஆரம்பித்து விடும்.

ஐஸ்கிரீம் வேண்டும் என்று குழந்தை அழுவதும், நான் விரும்பிய பொருளை, நபரை அடைய வேண்டும் என்று பித்துபிடித்துக் கதறுவதும்கூட மேல் மனத்தின் சூடுதான்.

விழிப்புணர்வு அதிகமானால் உங்களின் ஏக்கம்கூட உயர்ந்ததாகிவிடும்.

உங்களை அழிக்கக் கூடிய, அல்லது நேரடியாக உங்களின் வாழ்வை உயர்த்தப்போகாத விருப்பங்களை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள்.

உங்களை முழுமையாக்கக் கூடிய, உங்களின் வாழ்வை ஆனந்தமயமாய் வடிவமைக்கக் கூடிய உயர்ந்த ஏக்கங்களை மட்டுமே மேல் எடுத்து வருவீர்கள். அதை மட்டுமே ஆழ்ந்த தேடுதலாக்குவீர்கள்.

உயர்ந்த தேடுதல் உன்னதமான தியானம்.

ஏக்கங்கள் உயர்ந்துவிட்டால், வாழ்வே உயர்ந்துவிடும் என்பது ஆழமான சத்தியம்.

நிரந்தரமில்லாதவற்றிக்காக ஏங்காமல், நிரந்தரமானவைகளுக்காக ஏங்கினாலே ஜீவன் முக்த வாழ்வு பொங்க ஆரம்பித்துவிடும். வாழ்வை வடிவமைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.