KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/தியானம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பேசும் வார்த்தைகளை விட, பேசும் தொனியில் உணர்வு ஒளிந்திருக்கின்றது.

முக பாவனையைவிட, கண்களுக்குள் உணர்வு ஒளிந்திருக்கின்றது.

செய்கைகளைவிட, செயல்களின் நோக்கத்திற்குள் உணர்வு ஒளிந்திருக்கின்றது.

“நானும், மற்றவர்களும் ஆனந்தமாய் இருக்க வேண்டும். அதற்கு என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும்” என்ற நோக்கோடு இன்றிலிருந்து ஒவ்வொரு நிமிடத்திலும் செயல்படுங்கள். நீங்கள் உணர்வுக்காரராக மாற ஆரம்பிப்பீர்கள். உங்களைச் சுற்றி உணர்வுக்காரப் பட்டாளம் உருவாக ஆரம்பிக்கும். நிஜ கும்மாளம் ஆரம்பமாகும்.