KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/பிரபஞ்சத்தையே மாற்றியமைக்கலாம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

பிரபஞ்சத்தையே மாற்றியமைக்கலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களைப் பழிவாங்குவதற்காக பிரபஞ்ச சக்தி உங்களை பூமிக்கு அனுப்பவில்லை.

இந்த பூமியைப் பிரபஞ்சம் உருவாக்கியதே நீங்கள் ஜீவன் முக்தராக மலரவேண்டும், கொண்டாட வேண்டும், ஆனந்தக் கூத்தாட வேண்டும் என்பதற்காகத்தான்!

கோழி முட்டைக்குள் இருக்கும் குஞ்சு அதன்நிலையை நினைத்து அஞ்சலாம்! ஒரு படி மேலே சென்று "இறைவா! என்னை இந்தக் கூண்டிலிருந்து காப்பாற்றிவிடு" என்று கெஞ்சலாம்.

இன்னும் ஒரு படி மேலே சென்று "என்ன வாழ்கை இது! இப்படி மாட்டிகொண்டு முழிக்கின்றேனே... இப்படியொரு திடமான இரும்பு கூண்டுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறேனே. என்ன கருணையில்லாத கடவுள்? இப்படியா வாழ்க்கையைத் தருவது?" என மிஞ்சலாம்.

அஞ்சினாலும், கெஞ்சினாலும், மிஞ்சினாலும் குஞ்சு செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

அதன் மூக்கால் ஒரே ஒருமுறை அதைச் சுற்றியிருக்கும் கூட்டில் கொத்தினால் போதும். அது திறந்து கொள்ளும்.

கொத்திய வினாடியே குஞ்சுக்குச் சுதந்திரம் கிடைக்கும் வகையில்தான் பிரபஞ்சம் வாழ்வை பிரசவிக்கிறது.

எங்கும் நிரம்பியிருக்கும் பிரபஞ்ச உணர்வுதான், பிரபஞ்ச சக்தியாக மாறி இந்த உலகமாகவும், மலையாகவும், மரமாகவும், நதியாகவும், உயிரினங்களாகவும் பூக்கின்றது. தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது.

பிரபஞ்ச சக்தி எந்த ஒரு இடத்திலும் தவறு செய்வதே இல்லை. யார் ஒருவருக்கும் அது தண்டனையளிப்பதே இல்லை.

எப்போதும் தன்னுடைய கருணையை ஒவ்வொரு அணுவின் மீதும் அது பொழிந்து கொண்டிருக்கிறது.

Nithyananda smiling

பிரபஞ்ச சக்தி
எந்த ஒரு இடத்திலும்
தவறு செய்வதே
இல்லை. யார்
ஒருவருக்கும் அது
தண்டனையளிப்பதே
இல்லை.

ஒரேயொரு கொத்தலால், பொத்தலாகும் கோழி முட்டைக்குள் இருக்கும் குஞ்சுதான் நீங்கள்.

மெல்லிய முட்டையோட்டை இரும்புச் சுவராய் நினைத்து அஞ்சும் குஞ்சு போலத்தான் பக்குவமடையாத மனித மனம், அஞ்சும். சில நேரங்களில் கெஞ்சும். பல நேரங்களில் அது மிஞ்சக் கூட செய்யும்.

முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சு அதன் வாழ்வை எதிர்க்கும் வரையில், அதனை எதிராளியாக நினைக்கும் வரையில் முட்டைக்குள்ளேயே சிறையிருக்கும்.

எதிர்த்தால் சிறை.

எதிர்க்காவிட்டால் அதுவே வாழும் அறை.

எதிர்க்கும் குணம் மறைந்தாலே, அதைவிட்டு வெளிவரும் ஞானம் பிறந்துவிடும்.

சின்ன கதை...

ஒரே மலையின் இரு குன்றுகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் பேசிக்கொண்டன.

ஒரு கல் தெய்வ விக்ரகமாக மக்களின் வழிபாட்டிற்குரிய கல்லாக இருந்தது.

இன்னொரு கல், அந்த தெய்வவிக்ரகத்தைத் தொட்டுக் கும்பிடுவதற்காக மக்கள் ஏறி நிற்கும் படிக்கல்லாக இருந்தது.

படிக்கல், தெய்வத்திடம் கேட்டது, "இருவருமே ஒரே மலையில்தான் வாழ்ந்தோம். உன்னைப் பார், எல்லோரும் வணங்குகிறார்கள். வழிபடுகிறார்கள்.

என்னைப்பார். எல்லோரும் ஏறி மிதிக்கிறார்கள்.

ஏன் எனக்கு இப்படி நிகழ்ந்தது? என்னால் இதிலிருந்து விடுபட முடியுமா? நீ தான் இங்கு வருபவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைக்கின்றாயே... எனக்கும் வழி சொல்லேன்.

தெய்வத்திடமிருந்து அழகாய் பதில் வந்தது...

"இந்தத் தெய்வ விக்ரகத்திற்குள் வாசம் செய்யும் கடவுள் பேசுகிறேன்...

உன்னைச் செதுக்கியபோது நீ எதிர்த்தாய்.

அதையும் மீறி சிற்பி மூலமாக, வெகு கவனத்தோடு செதுக்க முயற்சித்தபோது நீ சின்னச் சின்னதாக உடைந்தாய். உன்னை செதுக்க விடவேயில்லை. அதனால்தான் படிக்கல்லானாய்.

ஆனால், இந்தக்கல் முழுமையாக செதுக்க அனுமதித்தது.

இதன் கழுத்தில் உளியை வைத்து செதுக்கியபோதுகூட தன்னைக் கொலை செய்வதாக இது நினைக்கவில்லை.

எந்த எதிர்ப்பும் இல்லாமல் இது அனுமதித்ததால் இன்று தெய்வ விக்ரகமாகியிருக்கின்றது. எல்லோராலும் இது வணங்கப்படுகின்றது!" என்றார் கடவுள்.

> "எந்த எதிர்ப்பும் இல்லாமல் இது அனுமதித்ததால் இன்று தெய்வ > விக்ரகமாகியிருக்கின்றது. எல்லோராலும் இது வணங்கப்படுகின்றது."

இதைக் கேட்ட படிக்கல் மீண்டும் வருத்தத்தில் ஆழ்ந்தது. "அப்போ எனக்கு விடிவு காலமே இல்லையா? என் கதி அவ்வளவுதானா?!" என்று கேட்டதற்கு, கருணை மிக்க கடவுள் சொன்னார்...

"செதுக்குவதற்கு நீ ஒத்துழைக்காவிட்டால் கூட உன்னை என்னுடைய கர்ப்பகிரகத்திலேயேதான் வைத்திருக்கிறேன்.

நன்றாக யோசித்துப்பார்.

portrait

உனக்குள்ளும்
நான்தான் வாசம்
செய்கிறேன் என்பதை
நீ நம்பாவிட்டால்
கூட, மக்கள் அதை
உணர்கிறார்கள்.
அதனால்தான்
அவர்கள் தொட்டுக்
கும்பிடுகிறார்கள்.

தெய்வ விக்ரகத்தைத் தொட்டுக்கும்பிடும் முன், முதலில் உன்னைத் தொட்டு கும்பிட்டுவிட்டுதான் மக்கள் உள்ளுக்குள்ளேயே வருகின்றார்கள்.

உனக்குள்ளும் நான் தான் வாசம் செய்கிறேன் என்பதை நீ நம்பாவிட்டால் கூட, மக்கள் அதை உணர்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தொட்டுக் கும்பிடுகிறார்கள்.

இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டாயே!

அப்போதும் வாழ்வை எதிர்த்தாய்.

இப்போதும் வாழ்வை எதிர்க்கிறாய்.

எப்போதும் வாழ்வை எதிர்க்காமல்,

மறுப்பேதும் வாழ்வில் நுழைக்காமலிரு.

என்னைப் போலவே நீயும் ஆனந்தமாக இருப்பாய்'' எனத் தெய்வ விக்ரகம் சொல்லி முடித்ததில் இருந்த உண்மை புரிந்தது. கல்லும் கரைந்தது! என அந்த இனிய கதை முடிகின்றது.

கருத்தாழம் மிக்க கதையிது!

எதிர்க்காமல் வாழ்வையும், நம்மையும் மறுக்காமல் அதனோடு இணைந்து வாழ ஆரம்பித்தால்... பூமி கிரகத்தைக் கடவுள் உருவாக்கியது எதற்கு? அதில் நாம் தோன்றியது எதற்கு? எனும் உண்மைகள் அனுபவமாகும். வாழ்வு ஆனந்த கூத்து நிறைந்த ஜீவன் முக்த வாழ்வாகும்.

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிரபஞ்சம் அந்த வினாடியே உங்களை நோக்கிய தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளும்.

ஆத்ம தியானம்

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார்,

""கடவுள் தண்டிப்பாரா?"

""தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார்,

"அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்கு தண்டனைகளே கிடையாதா? எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவருக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சொன்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன் தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடுவே எறும்பு போல தான் இருப்பதைப் பார்த்து பிரமித்தான்!

கீழிருக்கும் தன் நண்பனை அழைக்க “வாடா” என்றான். சப்தமாய் மலையிலிருந்து “வாடா” என்ற சப்தம் எதிரொலித்தது. தன்னையார் “வாடா” என்று கூப்பிட்டது என்பதைத் தெரிந்துகொள்ள, “யாரது?” என்றான். “யாரது?” என்று மலையும் திரும்பக் கேட்டது.

கொஞ்சம் பயத்தோடு “நீங்க யாரு?” என்றான், உடனே மலையும், அதே கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து ஓடி குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

“இதுதான் இயற்கை. இதுதான் வாழ்க்கை”

“நீ என்ன செய்கிறாயோ, அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால் வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தால், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்” என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை வாழ்வுத் தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேபோலத்தான்,

கெடுதல்கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்.

வாழ்வு அவரை எதிர்க்கும்.

வாழ்வை வரவேற்றால், அவரை

வாழ்வும் வரவேற்கும்.

எனவே, இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள். வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை. நாம்தான் நம்மையே தண்டித்துக்கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகு முறையைத்தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள். இனிமையாய் அணுகுங்கள். இனிமையாய் எல்லாம் அமையும். இது வாக்கல்ல, என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

Portrait