தொழில் செழிக்க உதவும் தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எந்தத் தொழிலும் செழிக்க உதவும் சூத்திரம்... இதோ உங்களுக்காக. Zen business management என்ற பிரபலமான கட்டுரைத் தொகுப்பில் வரும் மிக இனிய கதை ஒன்று...
புத்தரின் சீடர் ஒருவர் மிகவும் வருத்தத்தோடு ஆஸ்ரமம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சீடரிடம் புத்தர் கேட்டார், "என்னப்பா ஏன் இவ்வளவு சோகமாக வந்து கொண்டு இருக்கிறாய்? என்ன நடந்தது?"
அதற்கு சீடர் சொன்னார், "ஞானத்தை, தியானத்தைப் பற்றி மக்களிடம் சொல்வதற்காகச் சென்றேன். யாருமே நான் சொல்வதைக் கேட்கத் தயாராகவே இல்லை. நல்ல காரியங்களில் எல்லாம் மக்களுக்கு விருப்பமேயில்லை" என்று நொந்து போன குரலில் சீடர் சொன்னார்.
புத்தர் கேட்டார், "எவ்வளவு பேரை நீ சந்தித்து முடித்தாய்?"
சீடர், "மூன்று பேர்" என்றார்.
புத்தர், "நான்காவது ஆளைச் சந்தித்திருந்தால் அவர் நீ சொல்வதைக் கேட்டிருப்பாரே, ஏன் மூன்று பேரோடு நிறுத்திவிட்டாய்?"
சீடர், "நான் தொடர்ந்து சந்தித்த மூன்று பேருமே கேட்கவில்லை. நிச்சயமாக நான்காவது ஆளும் அப்படித்தான் இருப்பார். மூன்று பேருக்கே இவ்வளவு நொந்து போய்விட்டேன். நான்காவதாக ஒருவரும் அப்படிச் சொல்லிவிட்டால் எனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மனதிடமும் போய்விடும்"
புத்தர், "அது சரி, அந்த மூன்று பேரும் எப்படிப்பட்டவர்கள்? படித்தவர்களா? இல்லை பணக்காரர்களா?"
சீடர், "மூன்று பேருமே பிச்சைக்காரர்கள்" என்றார். இவரின் பதிலைக் கேட்டதில் சுற்றியிருந்த அனைவருமே சிரித்துவிட்டார்கள்.

தியானத்தின்
மீதோ, ஞானத்தின்
மீதோ சிறிதும்
விருப்பம் இல்லாத
இவர்களை எப்படி
குருநாதர் தியானம்
செய்ய வைப்பார்?!
புத்தர் மிகவும் கரிசனத்தோடு சீடரிடம் சொன்னார், "சரி அவர்கள் மூன்று பேரையும் இங்கு அழைத்து வா. நான் பார்த்துக் கொள்கிறேன்".
சீடர் அந்த மூன்று பிச்சைக்காரர்களையும் அழைத்து வரச் செல்லும் வழியெல்லாம் யோசித்தார் "நான் எப்படி எப்படியெல்லாம் எடுத்துச் சொல்லிவிட்டேன். குரு சொல்லும் எல்லா போதனைகளையும் சொன்ன பிறகும்கூட அவர்கள் சிறிதும் கேட்கத் தயாராக இல்லை.
தியானத்தின் மீதோ, ஞானத்தின் மீதோ சிறிதும் விருப்பம் இல்லாத இவர்களை எப்படி குருநாதர் தியானம் செய்ய வைப்பார்?! நிச்சயம் இன்று ஏதோவொரு பெரிய அற்புதத்தைத்தான் குரு நிகழ்த்தப் போகிறார்!?" என்றெல்லாம் யோசித்தபடி மூன்று பிச்சைக்காரர்களையும் புத்தரிடம் அழைத்துவந்தார்.
மூன்று பேரையும் தனித்தனியே அழைத்துவரச் சொன்னார்.
அதில் முதல் பிச்சைக்காரரிடம், "நம் ஆஸ்ரமத்தில் தினமும் மதிய உணவு இலவசமாகத் தருகிறோம், அது உங்களுக்குத் தெரியுமா?"
"ஓ! அப்படியா தெரியாதே" என்று சொன்ன அவரிடம் புத்தர், "சரி. உணவு தயாராயிருக்கிறது. உணவு சாப்பிடும் முன்பு ஒரு தியானம் செய்வது நம் வழக்கம். போய் தியானம் செய்துவிட்டு சாப்பிட்டு வாங்க, அப்புறமா நாம் ஆற அமரப் பேசலாம்" என்று அனுப்பிவிட்டார்.
பிச்சைக்காரர் உற்சாகமாக தியானம் செய்யச் சென்றார்.
இரண்டாவது பிச்சைக்காரரிடம், "உங்களுக்கு இங்கேயே உணவுக்கும், தங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறேன். ஒரு சின்ன வேலை ஏற்பாடு செய்கிறேன். இப்ப நேராகப் போய் தியானம் செய்துவிட்டு, உணவு எடுத்து முடித்தபிறகு வாருங்கள். உங்களோடு பேசுகிறேன்" என்று அனுப்பினார். இரண்டாவது பிச்சைக்காரர் மிக உற்சாகத்தோடு தியான மண்டபம் நோக்கி தியானம் செய்யச் சென்றார்.
மூன்றாவது பிச்சைக்காரரிடம், "பசியின் தொந்தரவிலிருந்து விடுபட்டு வாழ முடியும். அதற்கு வழி இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
பிச்சைக்காரருக்கு புத்தரின் கேள்வி மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது, "அப்படியா! எப்படி அது? என்ன வழி அது?" என்று கேட்டார்.
"புத்தர் அவரிடம்," அதன் பெயர்தான் தியானம். அதோ அந்த மண்டபத்தில் இன்னும் சில நிமிடங்களில் தியானம் ஆரம்பித்துவிடும். தியானத்தை ஆழமாய் செய்து பாருங்கள். உள்ளுக்குள் இருந்து புதுவித சக்தி பொங்க ஆரம்பிக்கும். அந்தச் சக்தியில் ஏற்படும் திருப்திக்குப் பிறகு, உணவு உண்டபின்பு ஏற்படும் திருப்தியுணர்வை விட ஆழமான திருப்தியுணர்வு ஏற்படும். தியானம் செய்துவிட்டு வாருங்கள். மீதி விஷயங்களையெல்லாம் அப்புறமாய் பேசலாம்." என்றார்.
மூன்றாவது பிச்சைக்காரரும் மிக உற்சாகமாக தியானம் செய்யச் சென்றார். சீடர் அங்கு நடக்கும் மொத்தச் சம்பவத்தையும் பார்த்து, வாயடைத்து ஆச்சரியம் பொங்க நின்றார்.
அப்போது புத்தர் சொன்னார், "இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. இது ரொம்ப எளிமையான விஷயம்தான்.
நான் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்களுக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ, அந்த மொழியில் பேசினேன். அவர்களுக்குப் பிடித்ததையோ அல்லது எனக்குப் பிடித்ததையோ மட்டும் பேசியிருந்தால் எனக்கும் இன்று தோல்விதான்.
> "பசியின் தொந்தரவிலிருந்து விடுபட்டு வாழ முடியும். அதற்கு > வழி இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா?" முதலில் அவர்களை இனங்கண்டேன்.
அடுத்து, அவர்களுக்குப் பிடிக்கும் வகையில், புரியும் வகையில் பேசினேன். அவ்வளவு தான். இதற்கு மேல் இப்போது நிகழ்ந்த அதிசயத்திற்குள் ரகசியம் எதுவுமில்லை" என்றார். மேலும் தொடர்ந்து மதிய உணவின்போது அவர்களைப்பற்றி தன் சீடர்களிடம் புத்தர் சொல்லிக் கொண்டிருந்தார்.
"முதல் பிச்சைக்காரர் சோம்பேறி அவருக்குத் தேவை உழைக்காமல் ஏதாவது கிடை

தேவைகள் எனும்
தேனில் தொட்டு,
நம்மிடமிருக்கும்
தீர்வு எனும்
மிட்டாயைத்
தந்தேன். அவர்கள்
தியானம் செய்ய
உற்சாகமாய்
சென்றார்கள்.
க்காதா என்பதுதான். அதனால் உணவும், இருப்பிடமும் உழைக்காமல் கிடைக்கும் என்றாலே அவரை முழுமையாக திருப்திபடுத்தி விடலாம். அதைத்தான் செய்தேன்.
இரண்டாவது பிச்சைக்காரர் உழைப்பாளி வகை அவருக்கு வேலையும், மற்ற அடிப்படை வசதிகளும் கிடைத்தாலே திருப்தியாகிவிடுவார்.
மூன்றாவது பிச்சைக்காரர் கொஞ்சம் தவம், அதிசயம், அற்புதம் பற்றித் தெரிந்து வைத்திருந்தார். அவருக்கு ஆச்சரியமாய் இருக்கும் எதுவும் திருப்தியைத் தந்துவிடும்.
மூன்று பேரின் தேவைகள் எனும் தேனில் தொட்டு, நம்மிடமிருக்கும் தீர்வு எனும் மிட்டாயைத் தந்தேன். அவர்கள் தியானம் செய்ய உற்சாகமாய்ச் சென்றார்கள். பொறுத்திருந்து பாருங்கள். என்ன நடக்கிறதென்று" என்று சொன்னார்.
மூவரும் தியானம் தந்த அனுபவத்திற்குப் பிறகு, "இவ்வளவு நல்லாயிருக்கிறதே! நாம் இங்கேயே இருந்தாலென்ன" என்று யோசித்தார்கள். தொடர்ந்து, தியானத்தை உற்சாகத்தோடு செய்ததில் அவர்களுக்குள் பொங்கிய சக்தி தந்த அனுபவத்தால், அடுத்த சில நாட்களுக்குள், அவர்களாலும் வேறொரு உயர்ந்த வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
அவர்கள் மூவருமே பிற்காலத்தில் ஒரே நேரத்தில் ஊர் ஊராகச் சென்று மக்களை உயர்ந்த வாழ்வு நோக்கி அழைத்துச் செல்லும் சிறந்த சன்யாசிகள் ஆனார்கள். புத்த பிட்சுக்களானார்கள். பிச்சைக்காரர்கள்கூட கோடீஸ்வரர்களுக்கு வழிகாட்டும் ஆச்சாரியர்களானார்கள்.
உங்களின் உள்ளுலக வாழ்வு செழிக்க மேலுள்ள கதையைப் பிடித்துக் கொள்வதே போதுமானது. வெளியுலக வாழ்க்கை செழிக்க, தொழில் செழிக்க இக்கதையிலிருந்து சில சூத்திரங்கள் உங்களுக்காய்..
சூத்திரம் 1 : உங்களுக்குப் பிடித்ததையோ மற்றவர்களுக்குப் பிடித்ததையோ மட்டும் பேசாதீர்கள். மற்றவர்களுக்குப் புரியும் வகையில், பிடிக்கும் வகையில் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். - இது ஞானம்!.
சூத்திரம் 2 : பழகப் போகும் மனிதர்கள், வர இருக்கும் வாடிக்கையாளர்களை இனங்காணுங்கள். அவர்களின் தேவைகளை இனங்காணுங்கள். அதைப் பூர்த்தி செய்ய உங்களை மாற்றிக்கொள்ள தயாராகுங்கள். - இது தியானம்!.
சூத்திரம் 3 : சூத்திரம் இரண்டைச் செய்து, பின் சூத்திரம் ஒன்றைச் செய்யுங்கள்.
நீங்கள் செய்ய நினைத்ததை வெற்றிகரமாய் செய்துவிடுவீர்கள். இந்த மூன்று சூத்திரங்கள் எந்தத் தொழிலையும் செழிப்படைய வைத்துவிடும் சக்திபெற்றவை.
தியானம் ஒரே நேரத்தில் உள்ளுலக வெற்றியையும் வெளியுலக வெற்றியையும் தரவல்லது என்ற ஞானக்கருத்தோடு வெற்றி நோக்கி முன்னேறுங்கள்.
ஆத்ம தியானம்
ஜென் ஞானி ஒருவரை பெரிய பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள் அவரின் பக்தர்கள்.
பொருட்காட்சி முடிந்து வந்த பக்தர்கள் ஆர்வத்தோடு அவரிடம் "பொருட்காட்சி எப்படியிருந்தது?" என்று கேட்டதற்கு,
“என் வாழ்க்கைக்கு அவசியமில்லாத பொருட்கள் இவ்வளவு இருக்கிறதா? என்று தெரிந்து ஆச்சரியப்பட்டேன்” என்றாராம்!
வாழ்க்கையை எல்லோரையும் போன்று வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. ‘உங்களின் வாழ்க்கை எது?’என்று கண்டுபிடிக்கத் தான் ஞானம் தேவை. அதை வாழத்தான் ஞானம் தேவை.
முதலில் உங்களை இனங்காணுங்கள். உங்களின் தேவைகளைக் கண்டுபிடியுங்கள். அதைப்ப்ள பூர்த்தி செய்யும் சக்தியைத் தியானம் உங்களுக்குத் தரும்.
