KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/ஆனந்த அனுபவம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

ஆனந்த அனுபவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

சேவக், ஆச்சரிய விழிகளோடு கேட்டார், "நீங்கள் ஏன் அங்கே பார்க்க வேண்டும்?"

அது சேவக்கிற்கு மட்டுமல்ல. எனக்கும்கூட ஆச்சரியமாய்தான் இருக்கின்றது.

திருவண்ணாமலையில் துள்ளித் திரிந்த தியான காலங்களை நினைக்கையில், ஆச்சரியமாய்தான் இருக்கின்றது.

சின்ன வயதில் பெரிய சந்நியாசிகளோடு பேசிக் கொண்டிருப்பதும், சிட்டாய் பறக்க வேண்டிய வயதில் சித்தர்களோடு சகவாசம், விளையாட்டுக்குப் பதில் தியானம் என ஒவ்வொன்றும் அன்று சாதாரணமாக இருந்தது.

இன்று நினைக்கையில் இது பெரிய காரியமென பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

அப்போதெல்லாம், "உன் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்?" என யாராவது கேட்கும்போது, வீட்டைச் சுற்றியிருக்கும் உறவினர்களைப் பற்றிய நினைவுகூட முதலில் வராது.

உறவினர்களைப் பற்றி சிந்திக்கையிலெல்லாம், முதலில் மேல் நோக்கிதான் பார்ப்பேன்.

நீல வானில் எங்கோ மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைத்தான் நினைத்துக் கொள்வேன்.

அங்குதான் உறவினர்கள் இருப்பதாய் முதலில் தோன்றும், என சின்ன வயதின் நினைவலைகளை சேவக்கிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் போதுதான், "நீங்க ஏன் அங்கே பார்க்க வேண்டும்?" என்ற கேள்வியைக் கேட்டார்.

அப்போது கேட்டோம், "சேவக், நல்ல பூங்காவிற்குச் சென்றிருக்கிறீர்களா?"

சேவக், "ம்ம்.... மைசூர்... பிருந்தாவன் கார்டன் சென்றிருக்கிறேன்."

portrait

நம்முடைய
வாழ்வின் போக்கே,
நம்முள் ஆழ்ந்து
பதிந்திருக்கும்
அனுபவங்களின்
தன்மையை
பொருத்தது.

"உங்களின் வீட்டுக்கருகில் பூங்காவே இல்லையா?"

"என்ன, இப்படிக் கேட்டுட்டீங்க. எங்க காம்ப்ளக்ஸ்க்குள்ளேயே பிருந்தாவன் கார்டனுக்கு இணையான மினி கார்டன் இருக்கிறது.

சென்றமுறை பாத பூஜைக்காக நீங்கள் என் வீட்டிற்கு வந்தபோது, நல்லா மெய்ன்டெய்ன் செய்கிறார்கள் என்று அந்தப் பூங்காவை சொன்னீர்களே" என்றார்.

"வீட்டுக்கருகிலேயே நல்ல பூங்கா இருந்தும், நல்ல பூங்கா என்று கேட்ட உடன், முதல் நினைவு அங்கே வராமல், எங்கோ இருக்கும் பிருந்தாவன் கார்டனுக்கு ஏன் சென்றது." என்று கேட்டோம்.

அவரும் ஆச்சரியமடைந்தவராய், "ஆமாம், நான் தினமும் பார்க்கும் இந்தப் பூங்கா முதலில் நினைவுக்கு வராதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது."

வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பூங்கா முதலில் ஞாபகத்திற்கு வராததற்குக் காரணம், அந்தப் பூங்காவைப் பற்றிய Conscious Experience (விழிப்பு அனுபவம்) விட மைசூர் பிருந்தாவன் கார்டனுடைய Conscious Experience மிக மிக அதிகம்.

நம்முடைய வாழ்வின் போக்கே, நம்முடைய Inner space-ல் இருக்கும் இதுபோன்ற ஆழ்ந்த அனுபவங்களின் தன்மையைப் பொருத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது.

Conscious Experience என்றால் என்ன?

'நீங்கள் ஏன் அவரோடு முன்போல் பேசுவதேயில்லை?...' என ஒருவரிடம் கேட்கும்போது, கடைசியாய் நிகழ்ந்த கசப்பான அனுபவம் (Painful Experience) தான், காரணம் என்போம்.

'நீங்கள் ஏன் அந்தக் கோயிலுக்கே திரும்பத் திரும்பச் செல்கிறீர்கள்?' எனக் கேட்கும்போது,

'அந்தக் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் கிடைக்கும் மன அமைதிக்காகத் (Peaceful Experience) தான் செல்கிறேன்.'என்போம்.

'நீங்கள் ஏன் தியானம் செய்கிறீர்கள்?' எனக் கேட்கும்போது,

தொடர்ந்து தியானம் செய்பவர்கள், தியானம் செய்தபின் நமக்குள் உருவாகும் ஆனந்தமயமான உணர்வுக்காகத்தான் (Blissful Experience) எனச் சொல்கிறார்கள்.

விரோதம், பக்தி, ஆனந்தம் ஆகிய மூன்றும் காமம், புத்தி, நிம்மதி போன்ற வெவ்வேறு அனுபவங்களே.

நிம்மதியை அதிகமாய் தன் வாழ்வில் அனுபவித்தவரின் முகம்கூட எப்போதும் நிம்மதியாய், சாந்தமாய் இருக்கும். அதேபோல் விரோதத்தை அதிகமாய் அனுபவித்தவரின் முகம், நிம்மதியாய் இருக்க வேண்டிய தருணங்களில்கூட இறுக்கத்தையும், வெறுப்பையும் கொப்பளிக்கும் முகச் சுருக்கத்தோடேயேதான் இருக்கும்.

இதுவரை உங்களுடைய வாழ்வில் நீங்கள் அனுபவித்த வெவ்வேறு அனுபவங்களின் கூட்டு வெளிப்பாடாகவே நடை, உடை, பாவனை ஆகிய அனைத்தும் அமைகிறது.

> இதுவரை உங்களுடைய வாழ்வில் நீங்கள் அனுபவித்த வெவ்வேறு அனுபவங்களின் கூட்டு வெளிப்பாடாகவே நடை, உடை, பாவனை ஆகிய அனைத்தும் அமைகிறது.

"அப்படியென்றால் நல்ல அனுபவங்களின் அளவை அதிகரித்தாலே வாழ்வு வளமாகி விடுமா?"

நல்ல, கெட்ட அனுபவங்களைத் தாண்டி அனுபவங்களின் செறிவு, அதாவது "Conscious Experience" அதிகரிக்க வேண்டும்.

வீட்டுக்கு அருகேயிருக்கும் பூங்காவினால் கிடைத்த அனுபவத்தின் செறிவைவிட, பிருந்தாவன் கார்டனில் உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தின் செறிவு மிக மிக அதிகம். அது ஒரு ஆழமான அனுபவம். அதனால்தான் அந்த நினைவு உங்களின் முதல் நினைவாய் வந்தது.

அதேபோல் தான் என்னுடைய வாழ்விலும் நிகழ்ந்தது.

உடல் என்ற சிறு பொம்மையைச் சுற்றி இருக்கும் உறவினர்கள், நண்பர்களோடு மிக நல்ல முறையில் பழகியிருந்தாலும், என்னுடைய 12-ஆம் வயதில் கிடைத்த முதல் ஞான அனுபவத்தின் செறிவு (First spritual experience) மிக மிக அதிகம்.

அந்த ஞான அனுபவத்தின்போது, உடலைத் தாண்டிய, உலகைத் தாண்டிய பரந்து விரிந்த ஏகாந்த நிலையை உணர்ந்துவிட்டதால் நட்சத்திரங்கள், விண்மீன்கள்கூட மிக நெருங்கிய உறவினர்களாய் தெரிகிறார்கள்.

வாழுமிடம் என்பது வீடு என்ற சிறு வரையறையைத் தாண்டிவிட்டதால், பிரபஞ்சம்கூட பிரமிப்பாய் தெரியாது. நம்மால் உணர்ந்து கொள்ளக் கூடிய புதிர்களற்ற, மர்மங்களற்ற சாதாரண ஒரு அம்சமாகத் தெரியும். புரியும்.

Conscious Experience-ன் செறிவை அதிகமாக்கிவிட்டால், நீங்கள் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டீர்கள்.

உங்களின் ஒரு பகுதியாக இருக்கும்.

Sadhguru Jaggi Vasudev

Conscious
Experience-ன்
செறிவை
அதிகமாக்கிவிட்டால்,
நீங்கள் பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியாக இருக்க
மாட்டீர்கள்.
உங்களின் ஒரு
பகுதியாக இருக்கும்.

ஏனென்றால், இதுதான் பிரபஞ்சம் என மனிதன் கண்டுபிடித்திருக்கும் மாபெரும் பிரபஞ்சத்தைத் தாண்டியது நிஜ பிரபஞ்சம் (Real Experience).

“இப்போதுதான் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன்” என்றார் ஞானி. “அதென்ன புது உண்மை?” என ஆவலாய் கேட்ட சீடர்களிடம்,

“எனக்கு எதுவும் தெரியாது என்ற உண்மையை அறிந்து கொண்டேன்” எனச் சொன்னார்.

spritual experience (ஞான அனுபவம்) கிடைத்தபின், பலதரப்பட்ட அனுபவங்களின் தொகுப்பான இந்த நிலையும் (எதுவும் தெரியாது) தாண்டிய உண்மைக்குள் நுழைந்து விடுவீர்கள்.

மனித வாழ்வில் கிடைக்கும் வெவ்வேறு அனுபவங்கள் அவரை மனிதனாக்கும் இல்லை மிருகமாக்கும்.

ஆனால், மனித வாழ்வில் கிடைக்கும் ஒரேயொரு ஞான அனுபவம் அம்மனிதர்களை கடவுளாகவே மாற்றி விடும்...

என்ற ஞானக் கருத்தை ஆனந்த ஸ்புரணா தியான முகாமில்(ASP) சொல்லிக் கொண்டிருக்கும்போது, குடும்பஸ்தர் ஒருவர் கேட்டார், “எங்களுடைய அனுபவங்களின் செறிவை அதிகப்படுத்தினாலே வாழ்க்கை வளமாகிவிடுமா?” எனக் கேட்டார்.

“நிச்சயமாக வளமாகும்” என்றோம்.

“எப்படி அதைச் செய்வது?” எனக் கேட்டார்.

“இனி வரும் அனுபவம், எந்த அனுபவமாக இருந்தாலும் அதனோடு விழிப்புணர்வைச் சேருங்கள். கோபப்பட்டால்கூட விழிப்புணர்வோடு

விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க, மனிதன் எனும் வரையறையைத் தாண்ட ஆரம்பிப்பீர்கள். நுழைந்து வெளியேறுங்கள். சிரித்தால்கூட விழிப்புணர்வோடு சிரியுங்கள்.

விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க,

மனிதன் எனும் வரையறையைத் தாண்ட ஆரம்பிப்பீர்கள். கஷ்டங்கள் எனும் கரையையே கடக்க ஆரம்பிப்பீர்கள்.

வேதனைகள் எனும் சோதனைகளையே சாதனைகளாக்க ஆரம்பிப்பீர்கள்.

விழிப்புணர்வு உச்சத்தைத் தொட, ஆத்மாவைத் திற... ஆனந்தம் பெருகட்டும்"

ஆத்ம தியானம்

எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட்டைத் தொட்டபோது, "என்னிடம் எதுவுமில்லை" என்றாராம்.

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தபோது, "பூமி ரொம்ப சிறுசு" என்றாராம்.

அதேபோல் நீங்கள் உள்ளுக்குள் நுழையும் போது, "என்னிடம் எதுவுமில்லை, பூமி ரொம்ப சிறுசு" எனச் சொல்வீர்கள்.

உங்களின் உள்ளுலகம் நீங்கள் காணும் வெளியுலகைவிட விசாலமானது. ஆச்சரியமானது.

ஆனந்தமயமானது.

இந்த எல்லையில்லா ஆனந்த உணர்வை அடைவதுதான் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரின் இலக்கு. தேடுதல். நோக்கம் என்ற எல்லாமே.

இதை உணர்ந்து தேட ஆரம்பியுங்கள். பூமியே சிறுசாகும். துக்கமெல்லாம் தூளாகும்.

எல்லோரும் இதைச் செய்தால் நாடே நலமாகும், சில நிமிடங்களில்...!

ஆனந்தத்தை ஒருமுறை அனுபவிப்பதே மது உண்ட வண்டைப் போல உங்களை தெய்வ சுகத்தில் ஆழ்த்திவிடும்.

தெய்வ சுகம் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது.

ஒருமுறை பக்தர் ஒருவர் சொன்னார். "நீங்கள் மிகவும் கண்டிப்பான சந்நியாசி. துறவறத்தை இப்படிக் கடைப்பிடிக்கிறீர்களே... இது ரொம்பப் பெரிய விஷயம்.'' என்றார்.

அப்போது சொன்னோம், "வெளியிலிருந்து ஒரு சுகம் தேவை எனும் நிலைக்கு அவசியமே இல்லாத அளவுக்கு, தெய்வ சுகத்தில் ஞானிகள் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு சங்கரருக்கோ, ஒரு புத்தருக்கோ துறவறம் என்பது கடைப்பிடிக்கப்படும் ஒன்றல்ல. அது அவர்களின் தெய்வீக நிலையின் வெளிப்பாடு.

ஞானிகளுக்கு துறவறம் கட்டுப்பாடல்ல. அது ஆனந்தக் களிப்பு!

இந்தச் சுகத்தைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கான வழி தியானம்.

தெய்வ சுகம் உங்களுக்கும் சாத்தியம்தான் என்பதை ஆத்மாவைத் திறந்து ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனந்தம் பெருக ஆரம்பிக்கும்.

Portrait of Swami Nithyananda