KAILASA Library/கல்பதரு/இந்தக் கலியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் கடவுள்Sign in
கல்பதரு

இந்தக் கலியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் கடவுள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நான் ஒரு சாப்ட்வேர் எஞ்ஜினியர். எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்னால் எனக்கு டியூபெர்குலோசிஸ் என்கின்ற நோயின் தாக்கம் இருப்பதாகச் சொன்னார்கள். அதற்கான சிகிச்சை எடுப்பதற்காக டாக்டரிடம் சென்றேன். டாக்டர் மருந்து கொடுத்தார்.

அந்த மருந்தோட பக்கவிளைவினால் யூரிக் ஆசிட் சேர்ந்து, மூன்றே மாதங்களில் ஆர்த்ரிடிஸ் வந்தது போல் தோன்றியது. கை கால்களை என்னால் மடக்க முடியவில்லை. மறுபடியும் டாக்டரிடம் சென்று கேட்டேன். "இது இளம் வயதில் வரக்கூடிய ஆர்த்ரிடிஸ் போல் இருக்கிறது," என்று சொன்னார்.

அதன் பிறகு சுவாமிஜியிடம் ஹீலிங் வாங்குவதற்காக வந்தோம். சுவாமிஜி ஒரு விரலைத்தான் பிடித்தார். அப்படிப் பிடித்துக்கொண்டு,"அம்மா. உங்கள் உடல் முழுவதும் நன்றாக சக்தி பாய்கிறது. நீங்கள் சொல்வதுபோல் ஆர்த்ரிடிஸ் எதுவும் இல்லை. ஆனந்தமாக இருங்கள். சரியாகிடும்," என்று சொன்னார்.

அன்று மாலையில் மருத்துவ பரிசோதனை செய்ததற்கான மருத்துவ சான்றிதழைப் பெற்றுக்கொண்டேன். அடுத்த நாள் டாக்டரிடம் அந்த மருத்துவ சான்றிதழைக் கொடுத்தோம். மருத்துவ சான்றிதழைப் பார்த்துவிட்டு, "இது ஒன்றும் இல்லை. அந்த மருந்தின் பக்கவிளைவினால் யூரிக் ஆசிட் சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை. ஆர்த்ரிடிஸ் இல்லை," என்று சொன்னார் .

இரண்டு நாட்கள் அதற்கான மாற்று மருந்து சாப்பிட்டால் சரிசெய்துவிடலாம் என்றார். அதாவது லாக்டிக் ஆசிட் எடுத்துக்கொண்டால் சரி செய்துவிடலாம் என்றார்.

இரண்டே நாட்களில் எல்லாம் சரியாகிவிட்டது. மிக விரைவில் முழுமையாகச் சரியாகிவிட்டது. சுவாமிஜியிடம் வந்தபிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

இதெற்கெல்லாம் எப்படி பகவானுக்கு, சுவாமிஜிக்கு நன்றி சொல்வது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதுதான், பிரத்யக்ஷ பாத பூஜை செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் பகவானுக்கு அருகில், அவருடைய ஸாந்நித்தியத்தில் அமர்ந்து செய்யும்பொழுது கற்ப மந்திரத்திற்குள் சென்று செய்வது போல் இருந்தது. அந்த பாக்கியம் கிடைத்ததற்கு வாழ்க்கையில் பெரிய தவம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நானும், என்னுடைய கணவரும் அதற்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இன்றைக்கு எங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றது. பரமஹம்ஸ நித்யானந்தர் இந்தக் கலியுகத்துல வாழ்ந்துகொண்டு இருக்கின்ற ஒரு கடவுள்.

அலமேலு
சாப்ட்வேர் எஞ்ஜினியர், சென்னை.
08197011220

வாழ்க்கையில் செய்த தவத்தின் பலன் - நாங்கள் குடும்பத்தோடு பாதபூஜை செய்த நாள்

வாழ்க்கையில் செய்த தவத்தின் பலன்

  • நாங்கள் குடும்பத்தோடு பாதபூஜை செய்த நாள்

பிரார்த்தனை நிறைவேறியது...

Mary Barnard

Mary Barnard

நித்யானந்தம்!

எனக்கு உடல் நலம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் எனக்கு இருந்தன. சாமியினுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் பாதபூஜை செய்தேன்.

என்னுடைய கடிதத்தில் அக விழிப்புணர்வு முகாமில் கலந்து கொள்ள ஆசைப்படுவதாகவும், கைலாஷ்க்கு சென்றால் நன்றாக இருக்கும் எனவும் குறிப்பிட்டேன்.

பாத பூஜையின் முடிவில் நான் IA க்கு வருவேன் என்றும் கைலாஷ்க்கும் வருவேன் என்றும் குறிப்பிட்டார். இதைக் கேட்டபோது நான் சிறிது அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் இந்த இரண்டிற்குமே என்னிடம் பணம் இல்லை.

கைலாஷ் யாத்திரைக்கான விருப்பப்படிவத்தைப் பூர்த்திச்செய்து அனுப்பினேன். உடனடியாக ஒர் அதிசயம் நடந்தது. என்ன நடக்கிறதென்று நான் புரிந்துகொள்வதற்கு முன்பே, நான் IA விற்கும் கைலாஷ்யாத்திரைக்கும் இந்தியாவில் இருந்தேன். நன்றி! நித்யானந்தம்!!

Joint pain மற்றும் Sinus போன்றவற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தேன்...

நான் B.com., படித்திருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் சுவாமியைப் பார்த்தேன். எனக்கு ஏதாவது ஒரு Health problem இருந்துகொண்டே இருந்தது. Joint pain மற்றும் Sinus இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்சினை நிறைய வந்துகொண்டே இருந்தது.

கல்பதரு தியான முகாமில் சுவாமியிடம் தீக்ஷை வாங்கிய பிறகு Nky என்கின்ற நான்கு நாள் தியான முகாமில் கலந்து கொண்டேன். அதற்குப்பிறகு என்னுடைய உடல்நிலை முழுவதுமாகக் குணம் அடைந்துவிட்டது.

நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity improve) அதிகமாகிவிட்டது. அதோடு இந்த இரண்டு வருடத்தில் டாக்டரை போய்ப் பார்த்ததே கிடையாது. எந்த மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டதே கிடையாது. எனக்கு இப்பொழுது உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்த அளவிற்கு நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

அதேபோல், மனதளவில் என் குடும்பத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் எல்லாம் விலகி, என்னுடைய மகன் சுவாமியோட குருகுலத்தில் படிக்கின்றான். அவனும் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கிறான்.

என்னுடைய குடும்பமே சுவாமியிடம் வந்தபிறகு நன்றாகவும் ஆரோக்கியமாகவும் சந்தோஷ மாகவும் இருக்கின்றோம். சுவாமிக்கு எங்களுடைய ஆயுள் முழுவதும், ஜன்ம ஜன்மத்துக்கும் கடமைப்பட்டிருக்கின்றோம்.

சத்யபாமா - கோயமுத்தூர்.

நானா இப்படி...

- மா நித்ய ஞானாத்மானந்தா சுவாமி

மா நித்ய ஞானாத்மானந்தா சுவாமி

என் பெயர் மா நித்ய ஞானாத்மானந்தா. நான் நித்யானந்த தியானபீடத்தில் சன்யாசியாக இருக்கின்றேன். நம் வாழ்க்கையை எந்த மாதிரி வாழவேண்டும் என்று நினைக்கின்றோமோ அந்த வாழ்க்கைதான் சன்யாசம்.

நமக்குள் இருக்கின்ற எல்லாப் பரிமாணங்களையும் உணரக்கூடிய வாழ்க்கை முறைதான் சன்யாசம்

ஆசிரமத்தில் பார்த்தீர்களென்றால் காலையில் யோகம் செய்வது, சுவாமியின் சத்சங்கம் கேட்பது, அதை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்திப் பார்ப்பது, தியானம் செய்வது, ஒரு Administrative responsibility எடுத்து அதில் வேலைசெய்வது என எல்லாப் பரிமாணங்களிலும் என்னால் சிறப்பாகச் செயல்பட முடிகிறது. இவற்றையெல்லாம் என்னால் செய்ய முடியுமா? என்று நானே தினம் தினம் வியப்பதுண்டு.

அதுவும் சுவாமிஜி கொடுக்கின்ற ஒரு உயர்ந்த சுதந்திரம். உயர்ந்த ஆசீர்வாதம்.. உயர்ந்த வாழ்க்கை முறை இந்த சன்யாசம்.

எந்த ஒரு வெளி விஷயங்களும் இல்லாமல்.. every thing just inspired by yourself... it is an amazing life style. All of you should experience this lifestyle before you take any major decision in your life. Don't miss the glimpse of this life style. Just come and stay 1 year in the Ashram and experience this beautiful life style.

சுவாமிஜி