காற்றின்
கடவுளின் காதல்மொழி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

- அன்பெனும் மலர் இதயத்தில் மலராதவரை, பாசமும், வெறுப்பும் இருந்து கொண்டேயிருக்கும் சம அளவில்.
- பாசம் காதல் நட்பு மனிதனின் உணர்வுமொழிகள்.
- கடவுளின் காதல் மொழி அன்பென்னும் உணர்வு !
- மலரட்டும் அன்பெனும் மலர்.
அப்போது...
கடவுளே
காதலனாகுவான்.
நீ
வாழும் காலமெல்லாம்
தேன்நிலவாகும்
கடவுளின்
காதலியானவுடனே


நிறைய விஷயங்களை
தெரிந்திருக்கவா
அறிவு !
அதற்கு
குண்டுஊசி அளவு
போதுமே !
வாழ்க்கைக்கு
அவசியப்படும்
சில விஷயங்களை மட்டும்
தேர்ந்தெடுப்பதற்குதானே
அறிவு அவசியம்.
படித்துக் கொண்டே போவதால் என்ன பயன் ?
