KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/ஒவ்வொரு குருவின் கடைசி போதனையும், சரணாகதியேSign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

ஒவ்வொரு குருவின் கடைசி போதனையும், சரணாகதியே

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இறுதியில், கிருஷ்ணர் வெகு அழகாகச் சொல்கிறார்: "இதுவே கடைசி நுட்பம். உச்ச நுட்பம். எல்லாத் தர்மங்களையும் விட்டுவிடு. எல்லாக் குழப்பங்களையும் விட்டுவிடு. என் காலடியில் சரணடைந்துவிடு. நான் உன்னைக் காக்கிறேன். நான் உனக்கு முக்தி அளிக்கிறேன்." கீதையின் மொத்த சாரமும் இதுவே.

கீதை, உலக தத்துவங்களின் ஒரு சுருக்கப்படாத, முழுமையான அகராதி. எல்லாத் தத்துவப் போக்குகளின் விதையை... எல்லாச் சம்பிரதாயங்களின் விதையை... எல்லா ஆன்மிக நுட்பங்களின் விதையை... நீங்கள் கீதையினுள் பார்க்கலாம்.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ச்ரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு'ச: // 18.66

இது ஒரு அழகான ஸ்லோகம். திரும்பவும் நான் இதை வார்த்தை, வார்த்தையாக மொழிபெயர்த்துச் சொல்கிறேன். "எல்லா நுட்பங்களையும், எல்லா வழிமுறைகளையும், எல்லாவற்றின் வேர்களையும் அடியோடு விட்டுவிடு."

தர்மம் என்றால் வாழும் முறை என்று பொருள்.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ச்ரணம் வ்ரஜ

"ஒரு துரும்பைக்கூட வைத்துக்கொள்ளாதே.
அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிடு.
உன்னுடைய முழு ஆன்மாவையும்
என்னிடமே ச்ரணாகதி செய்துவிடு."

தர்மம் என்றால் வாழும் முறை என்று பொருள்.

அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு'ச:

"எல்லா இருளையும், எல்லா எதிர்மறைத் தன்மைகளையும், எல்லாப் பாவங்களையும் உன் இருத்தலிலிருந்து நீக்கிவிடுகிறேன். உன்னை விடுதலை செய்கிறேன். இறுதி ஜ்ஞாநத்தை நான் உனக்கு வழங்குகிறேன். வருந்தாதே!"

இதுவே கிருஷ்ணர் கொடுக்கும் கடைசி வார்த்தை. எவராயினும் இந்தக் கடைசி வார்த்தையைத்தான் கொடுக்க முடியும். எல்லாச் சிறந்த குருமார்களுடைய கடைசி வார்த்தையும் இதுவாகத்தான் இருக்கிறது.

ச'ரணாகதி என்பதன் பொருள் என்ன?
ச'ரணாகதி என்ற வார்த்தையைக் கேட்டவுடன்
நாம் நினைப்பது: "ஓ, இதுவே எளிதான
நுட்பம். இதுவே மிகச் சுலபமான
வழிமுறை. சரணடைந்து விட்டால், நாம்
எதுவுமே செய்ய வேண்டியதில்லை."

தியானம், பூஜை, யாகம் என்று எந்தவொரு
நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும், நாம்
ஏதாவது செய்யத்தான் வேண்டும். ஆனால்,
ச'ரணாகதி என்றால் மட்டும் நாம் எதுவுமே
செய்ய வேண்டியதில்லை என்று மக்கள்
நினைத்துக்கொள்கிறார்கள்.

நீங்கள் உண்மையிலேயே சரணடைந்திருந்தால், ஏதாவது நிகழ வேண்டும் என்றோ அல்லது நிகழக்கூடாது என்றோ எதிர்பார்க்கமாட்டீர்கள்.

பலரும் என்னிடம் சொல்வதுண்டு: "ஸ்வாமிஜி, நான் எல்லாவற்றையும் ச'ரணாகதி செய்துவிட்டேன். ஆனாலும், என்னுள் எதுவுமே நிகழவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?"

இந்தக் கூற்றே தவறு. நீங்கள் உண்மையிலேயே சரணடைந்திருந்தால், ஏதாவது நிகழ வேண்டும் என்றோ அல்லது நிகழக்கூடாது என்றோ எதிர்பார்க்கமாட்டீர்கள். எனக்குள் எதுவுமே நிகழவில்லை என்று நீங்கள் சொல்லும்போது, தெளிவாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சரணடையவில்லை.

பெரும்பாலான நேரங்களில் ச'ரணாகதி எனும் வார்த்தையை மக்கள் சுலபமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதன் அர்த்தத்தை

மட்டும் ஒருபோதும் அவர்கள்
புரிந்துகொள்வதில்லை. சரணாகதியின்
இயங்கு முறையை இப்போது பார்க்கலாம்.

உண்மையில் சரணாகதி என்றால்
என்ன? சரணாகதி என்னும் வார்த்தைக்கு
குருமார்கள் சொல்லும் பொருள் என்ன?
சரணாகதி என்ற வார்த்தையை அவர்கள்
பயன்படுத்தும் முறை, சாதாரண மக்கள்
பயன்படுத்தும் முறையிலிருந்து முற்றிலும்
மாறுபட்டிருக்கிறது.

நான் என்பதை சரண்
செய்வதென்றால்,
அஹங்காரம், மனம்,
மனப்பாங்கு ஆகியவற்றை
சரண் செய்வது. இது,
உங்கள் விதிமுறைகளை
சரண் செய்வதைப்
பற்றியது.

சரணாகதியில் மூன்று நிலைகள் உள்ளன. முதலாவது, ‘நான்’ என்பதை சரண் செய்வது. இரண்டாவது, ‘எனது’ என்பதை சரண் செய்வது. மூன்றாவது, ‘நான்’, ‘எனது’ என்ற இந்த இரண்டையும் சரண் செய்வது. இதையும் ஒவ்வொரு நிலையாக விளக்குகிறேன்.

முதலாவது, ‘நான்’ என்பதை சரண் செய்வது: நான் என்பதை சரண் செய்வதென்றால், அஹங்காரம், மனம், மனப்பாங்கு ஆகியவற்றை சரண் செய்வது. இது, உங்கள் விதிமுறைகளை சரண் செய்வதைப் பற்றியது.

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் ஒரு சீடர் கேட்டார்: குருவே, நான் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டேன். நான் எப்படி அதைவிடுவது? குரு: தேவி காளிக்கு அதைச் சமர்ப்பித்துவிடு; நீ தானாகவே அதை விட்டுவிடுவாய்; பின்பு நீ சரியாகிவிடுவாய்! சீடர்: எப்படி காளிதேவிக்கு நான் அதைச் சமர்ப்பிக்க முடியும்? குரு: குடிப்பதற்கு முன், நீ காளியை நினைத்துக்கொள். முதலில் அதை காளிக்கு அர்ப்பணி, பிறகு நீ குடி! இது ஒரு வினோதமான சூழ்நிலை.

ஆனாலும் சீடர், தம் குரு சொன்னபடியே செய்தார். குடிக்கும் முன் அதைக் காளிக்குப் படைத்து விட்டு, "ஓ, காளி, இது உனக்கானது என்று பிரார்த்தித்துவிட்டு, அதைப் பிரசாதமாக நினைத்துக் குடித்தார்! மூன்று நாட்களுக்கு பின், அந்தச் சீடர் சொன்னார்: இனி என்னால் குடிக்க முடியாது. இதுபோன்ற விஷயங்களையே முற்றிலுமாக மறந்துவிட்டேன்!

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு இது.

நீங்கள் நேர்மையோடு சரணாகதி செய்யும்போது, உங்களுள் ஒரு ஆழமான உணர்வுமாற்றம் நிச்சயம் நிகழும். மனம் மற்றும் ஜடப்பொருள் நிலையிலிருந்து சக்தி நிலைக்கு மாறும் உணர்வுமாற்றம் உங்களுள் நிகழும்.

கடவுளுக்கு மதுவை அர்ப்பணித்துவிட்டு குடித்ததனாலேயே, ஒருவரால் எப்படி அவருடைய நெடுநாளைய குடிப்பழக்கத்தை விட்டுவிட முடியும் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அப்படி அர்ப்பணிக்கும்போது, அவருடைய இதயம் ஆச்சரியப்பட ஆரம்பித்தது, ‘நான் மிகவும் விரும்பும் காளிதேவிக்கு எப்படி நான் மதுவைக் கொடுப்பது?

அடுத்து, தன்னிடமே கேள்வி கேட்டுக்கொள்கிறார். ‘நான் காளிக்கு இதைத் தர முடியாதென்றால் நான் எப்படி அதைக் குடிக்க முடியும்? அதே கடவுள்தானே, என்னுள்ளும் குடிகொண்டிருக்கிறது. அதனால் நான் எப்படி அதைக் குடிக்க முடியும்?’ இதை உணர்ந்தவுடன், அவருக்குள் இயல்பாகவே ஒரு கேள்வி எழுந்தது. ‘மதுவை எனக்குள் ஊற்றி, என்னுடைய உடல் - மன அமைப்பை எப்படி நானே கெடுத்துக் கொள்வது?’

சரணாகதி, அவருக்கு அந்தப் புத்திசாலித்தனத்தைக் கொடுத்தது, அவருக்கு அந்தப் புரிதலைக் கொடுத்தது. அந்த இயற்கையான புரிதலே, அவர் செய்துகொண்டிருந்த செயலைக் கைவிடச் செய்தது.

இன்னுமொரு விஷயம், நீங்கள் உண்மையாக, ஆழமான சிரத்தையுடன் உங்கள் மன அமைப்பை,

> நீங்கள் நேர்மையோடு
> சரணாகதி செய்யும்போது,
> மனம் மற்றும் ஜடப்பொருள்
> நிலையிலிருந்து சக்தி
> நிலைக்கு மாறும்
> உணர்வுமாற்றம்
> உங்களுள் நிகழும்.

கட்டுறுமனப்பாங்கை குருவின் காலடியிலோ அல்லது கடவுளின் காலடியிலோ சமர்ப்பித்துவிட்டால், அது முற்றிலுமாகக் கரைந்து மறைந்தே போகும்.

நீங்கள்தான் தேர்வுசெய்தீர்கள்...

மனமே ஒரு பழக்கம்தான்! உங்களுடைய 'நான்' என்பது சில பழக்க வழக்கங்களின் தொகுப்பே. உங்களுடைய அஹங்காரம் என்பது சில கட்டுப்பாடுகளின் தொகுப்பே. அதை நீங்கள் குருவின் காலடியில் சமர்ப்பிக்கும்பொழுது, நான் என்பதை நீங்கள் சரணாகதி செய்யும்பொழுது, அது முழுவதும் கரைந்து, மறைந்துவிடுகிறது.

ஒரு சிறு உதாரணம் மூலம் நீங்கள் இதைப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் தினமும் காலையில், பத்து மணியளவில் காபி குடிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தீர்களானால், காலை பத்து மணியானாலே போதும், காபி குடிப்பதைப் பற்றி நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் மனதே, 'இப்போது மணி பத்து ஆகிவிட்டது, காபி கொண்டு வா' என்று தானாகவே சொல்லிவிடும். இது ஒரு பழக்கம். இது ஒரு அடிமைத்தனம்! பழக்கத்தின் காரணமாகவே, மனம் காபியைக் கேட்கிறது.

அதைப்போலத்தான், உங்கள் எண்ணங்கள்கூட ஒரு பழக்கமே. உங்களுடைய மனோநிலைகள்கூட ஒரு கட்டுறு மனப்பாங்கே. உங்கள் மனம்கூட ஒரு பதிவு தான். காபி அருந்துவதை ஒரு பழக்கமாக எப்படிப் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்போலவே கவலைப்படுவதையும் ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள், உணர்ச்சிவசப்படுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் எதிர்ச்செயல் புரிவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் இந்த ஒரு உதாரணத்தைப்
புரிந்துகொண்டீர்களானால்கூட, நான்
என்ன சொல்கிறேன் என்பதைப்
புரிந்துகொள்வீர்கள். உங்களை யாராவது,
ஏதாவது விமர்சித்துவிட்டால் போதும்,

உங்களுடைய 'நான்'
என்பது
சில பழக்க வழக்கங்களின்
தொகுப்பே.
அதை நீங்கள்
குருவின் காலடியில்
சமர்ப்பிக்கும்பொழுது,
அது முழுவதும் கரைந்து,
மறைந்துவிடுகிறது.

உடனே நீங்கள் எதிர்செயல் புரிவீர்கள்.
நீங்கள் ஒருவித பதட்டத்துக்குள்ளாவீர்கள்.
அதற்கு பிறகு, நீங்கள் பதிலுக்கு
அவரைக்க் குறைகூறவும், திட்டவும்
ஆரம்பித்துவிடுவீர்கள்.

யாராவது உங்களைப் புகழ்ந்தால் போதும்,
மிகவும் மன மகிழ்ந்து போவீர்கள்.
அவரைப் பார்த்து ஒரு இனிய புன்னகை
பூப்பீர்கள், உங்களை உயர்வாகவும்
நினைத்துக்கொள்வீர்கள். அவரிடம்
நீங்கள் நேர்மறை முறையாகப் பதில்செயல்
புரிவீர்கள்.

> உங்கள் மனம்கூட
> ஒரு பதிவு தான். காபி
> அருந்துவதை ஒரு
> பழக்கமாக எப்படிச்
> கொண்டிருக்கிறீர்களோ,
> அதைப்போலவே
> கவலைப்படுவதையும்
> ஒரு பழக்கமாகக்
> கொண்டிருக்கிறீர்கள்.

எதிர்மறை முறையாக ‘எதிர்ச்செயல்’ புரிவது மற்றும் நேர்மறை முறையாகப் ‘பதில்செயல்’ புரிவதுகூட உங்கள் மனத்தின் தேர்ந்தெடுப்பே.

Tied hands

உங்கள் காபி அடிமைப்பழக்கத்தை
எடுத்துக்கொண்டால்கூட, 10 மணிக்கு
காபி குடிக்க வேண்டும் என ஆரம்பத்தில்
தேர்வுசெய்தது என்னவோ, நீங்கள் தான்.
அப்படிப் பல முறை தேர்வுசெய்ததற்குப்
பின்பு, அப்படி தேர்வுசெய்தது நீங்கள்தான்
என்பதையே மறந்துவிடுவீர்கள். நீங்கள்
அடிமையாகிவிடுவீர்கள்.

அதைப்போலவே, உங்களை யாராவது விமர்சிக்கும்பொழுது, பதட்டத்திற்குள்ளாதல் என்ற செயலை நீங்கள்தான் தேர்வு செய்தீர்கள். அப்படிப் பலமுறை தேர்வுசெய்த பிறகு, நீங்கள்தான் அதைத் தேர்வுசெய்தீர்கள் என்பதையே நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். அதற்குப் பிறகு, மற்றவர்கள் எப்போதெல்லாம் உங்களை விமர்சிக்கிறார்களோ, அப்போது நீங்கள் தானாகவே சங்கடப்படுகிறீர்கள். நீங்கள் நிலைகுலைந்து போகிறீர்கள். கலங்கி மனச்சோர்வடைகிறீர்கள். நீங்கள் அவர்களைத் திட்ட ஆரம்பித்துவிடுகிறீர்கள்.

உங்களின் மன அமைப்பு, உங்கள் மனரீதியான பதில்செயல்கள், உங்கள் அஹங்காரம் இவையெல்லாமே உங்களுடைய தேர்வுகள்தான். இவை அனைத்துமே உங்கள் மனப்பழக்கங்களே.

நீங்கள் நான் என்பதை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் மன அமைப்பை தெய்விகத்திடம் சரணாகதி செய்யும்பொழுது, நீங்கள் தேர்வுசெய்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் உண்மையிலேயே சரணாகதி செய்யும்போது, யாராவது உங்களை விமர்சித்தால்க்கூட, மனம் புண்படுதலையோ, பதட்டத்தையோ, அவரைக் குறைகூறுதலையோ தேர்வுசெய்ய முடியாது.

நீங்கள் எப்போதெல்லாம் உங்களை உங்கள் மன அமைப்புக்குள் கொண்டுவருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்கள் மனப் பழக்கங்களுக்கு தக்கபடி நீங்கள் எதிர்ச்செயல் செய்வீர்கள். அதனால், மனப்பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாக இருக்கும்வரை, நீங்கள் சரணாகதி செய்துவிட்டதாக சொல்வது சரியல்ல.

உண்மையான சரணாகதி, உங்களுடைய வாழ்க்கையையே உணர்வுமாற்றம் பெறச்செய்துவிடும்; அதற்கான வல்லமை அதற்கு உண்டு.

நீங்கள் உண்மையாக சரணாகதி செய்யும்பொழுது, எதையெல்லாம் தேர்வுசெய்கிறீர்களோ, அவை உங்களுடைய தேர்வு அல்ல. நீங்கள் விமர்சனத்தினால் பாதிப்புக்குள்ளாகமாட்டீர்கள். நீங்கள் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டீர்கள் என்பது மட்டுமல்ல நீங்கள் விமர்சிக்கப்பட்டதாகவே உணரமாட்டீர்கள்.

ஏதோவொரு விமர்சனத்திற்கு நீங்கள் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தால், நீங்கள் இதுவரை சரணாகதி செய்யவில்லை என்பதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்,. நீங்கள் சரணாகதி செய்துவிட்டீர்களா இல்லையா என்பதை நீங்களே திரும்பத் திரும்ப சோதனைசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

சரணடையும்பொழுது நீங்கள் மறுபடியும் பிறக்கிறீர்கள்

சரணாகதி என்பது ஒரு அழகான வார்த்தை! அது உங்களை எளிதில் ஏமாற்றிவிடும். நான் கடவுளிடம், என் குருவிடம் எல்லாவற்றையும் சரணாகதி செய்திருக்கிறேன். அவர் என்னை பார்த்துக்கொள்வார் என்று நாம் எப்போதுமே சொல்வோம். ஆனால், நம்முடைய சரணாகதியெல்லாம் வெறும் உதட்டளவில் மட்டுமே இருக்கும். அது, நம் மேல் தோல் அளவிலேயே உள்ளது. உண்மையிலேயே நீங்கள் சரணாகதி செய்திருக்கிறீர்களா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, ஒரு சிறு கீறல் போட்டால் போதும்.

நீங்கள் உண்மையிலேயே உங்களுடைய
'நான்' ஐ சரணாகதி செய்யும்பொழுது,
உங்கள் மன அமைப்பு முற்றிலுமாக
கலைந்துவிடுகிறது. அஹங்காரமயமாக
இருக்கும் மனம் கடவுள்மயமாகிறது.
அஹங்காரமயம் என்றால் திடசித்தமில்லா
விநோத மனப்பாங்குடையதாகிறது.

> உங்களுடைய 'நான்' ஐ
> சரணாகதி செய்யும்பொழுது,
> அஹங்காரமயமாக
> இருக்கும் மனம்
> கடவுள்மயமாகிறது.

கடவுளிடம் உங்கள் 'நான்' ஐ சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் மனத்தை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் சிந்தனை அமைப்பை சரணாகதி செய்யும்பொழுது, உங்களுள் என்றும் நிலையான ஆனந்தம் பொங்கிக் கொண்டேயிருக்கும். ஏனென்றால், கடவுள் என்பது நிலையான ஆனந்தம், நித்ய ஆனந்தம். உங்கள் மன அமைப்பை சரண் செய்யும்பொழுது, உங்களுள், வாழ்வும் உற்சாகமும் ஆனந்தமும் ஊற்றெடுக்கின்றன.

குழந்தைகள், குறிப்பாக ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகள் எப்பொழுதும் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், குதித்துக்கொண்டும் இருப்பார்கள். அதுவரை அவர்களுக்கு, 'மனம்' என்று நாம் அழைக்கும் ஒரு விஷயம் இருப்பதில்லை. அதற்குப்பிறகே, சமுதாயக் கட்டுறு மனப்பாங்குகள் அவர்களுக்குள் 'மனம்' என்பதை உருவாக்குகின்றன.

நீங்கள் எப்பொழுதாவது அழகில்லாத குழந்தையைப்

பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க
மாட்டீர்கள். எல்லாச் சம்பிரதாயங்களிலும்,
எல்லாக் கலாச்சாரங்களிலும்
அழகில்லாத குழந்தை என்று ஒன்றை
நீங்கள் பார்க்க முடியாது. போர்களும்,
ஏழ்மையும் மிகுந்த எதியோப்பியா
போன்ற நாடுகளில்கூட குழந்தைகள்
சத்தற்றவர்களாகவும் மெலிந்தவர்களாகவும்
இருக்கலாம். ஆனால், அவர்கள்
அசிங்கமாக இருப்பதில்லை. எப்போதும்
குழந்தைகளிடம் ஒரு அழகு மிளிரும்.

நீங்கள்
உங்கள் குருவின்
அல்லது
கடவுளின் காலடியில்
சரணடையும்பொழுது
இரண்டாவது பிறப்பை
எடுக்கிறீர்கள்.

அதேபோல் அழகாக உள்ள ஒரு மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால், மனம் என்பது உள்ளே புகுந்துவிடுகிறது.

நாம் கட்டுறுப்படாத வரை, நமக்கு மனம் என்ற ஒன்று இருப்பதில்லை. நமக்கு अहங்காரம் என்ற ஒன்று இருப்பதில்லை. நம்மைச் சுற்றிலும் ஒரு தனிப்பட்ட அழகு மிளிரும். நாம் மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொண்டிருப்போம். நம்மிடம் கள்ளம் கபடமற்ற தன்மையும் எளிமையும் குடிகொண்டிருக்கும். சரணடைந்துவிட்ட ஒரு மனிதர், மறுபடியும் ஒரு குழந்தையாகிவிடுகிறார். அதனால் தான், ஸம்ஸ்க்ரு த்தில், ஒரு அழகான சொல் இருக்கிறது, த்விஜ - மீண்டும் பிறந்தவர்.

நம்முடைய முதல் பிறப்பு, தாய் தந்தையரிடமிருந்து நிகழ்கிறது. நமது இரண்டாவது பிறப்பு, நமது குருவிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் நிகழ்கிறது.

நீங்கள் உடல் ரீதியாகப் பிறப்பதை, நீங்கள் தூல உடலில் நுழைவதை முதல் பிறப்பு என்று சொல்கிறோம். நீங்கள் உங்கள் குருவின் அல்லது கடவுளின் காலடியில் சரணடையும்பொழுது இரண்டாவது பிறப்பை எடுக்கிறீர்கள். பின்பு நீங்கள் த்விஜ என்றழைக்கப்படுகிறீர்கள்.

நீங்கள், 'நான்' எனும் மன அமைப்பை சரணாகதி செய்யும்பொழுது, அளவில்லாத இன்பத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை உணர்கிறீர்கள். இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம் இவை வேறு வேறு அடுக்குகள். பொருள்களைத் தொட்டு, நுகர்ந்து, ருசித்து அனுபவிப்பதால் நிகழ்வது இன்பம்.

ஒரு அழகான மலை, பனிப்பொழிவு, சமுத்திரம் அல்லது காடுபோன்ற இயற்கைக் காட்சிகளைப் பார்க்கும்பொழுது ஏற்படுவது மகிழ்ச்சி.

காரணமே இல்லாமல் பெருகுவது ஆனந்தம். இது உங்கள், உள் இருப்பிலிருந்து நிகழ்வது!

நீங்கள் உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்யும்போது, உங்கள் மனம் உயிர்ப்படனும், தன்னிச்சையான மகிழ்ச்சியுடனும் திகழ்கிறது.

இப்பொழுது நீங்கள் ஒவ்வொரு கணமும், அன்றைய நாளை வாழ்வதற்கான திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பெரிய, பெரிய பட்டியல்களைப் போடுகிறீர்கள்; பெரிய, பெரிய அட்டவணைகளைத் தயார்செய்கிறீர்கள்.

உங்கள் நண்பரைச் சந்திக்கச் சென்றால்கூட, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் நண்பரிடத்தில் நீங்கள் என்ன பேச வேண்டும், அவரிடத்தில் உங்களை இப்படிக் காட்டிக்கொள்ள வேண்டும் என, உங்கள் மனதளவில் உங்களைத் தயார்செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தயார் செய்யாத ஒரு விஷயத்தைப் பற்றிய கேள்வி கேட்கப்படும்பொழுது, நீங்கள் மொத்த விஷயத்தையும் குழப்பிவிட்டு விடுகிறீர்கள். அதனால் தான், நீங்கள் ஒரு எதிர்பாராத சூழ்நிலையைச் சந்திக்க திராணியற்றவர்களாக இருக்கிறீர்கள்.

வசனங்களை எழுதித் தயாராக
வைத்துக்கொள்கிறீர்கள். அதையே
பேசி நடித்துவிட்டு வருகிறீர்கள். தயார்
செய்யப்பட்ட வசனங்களைக் கேடயமாகப்
பயன்படுத்தி சூழ்நிலைகளிலிருந்தும்,
யதார்த்த நிலைகளிலிருந்தும் உங்களைப்
பாதுகாத்துக்கொள்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் சரணடையும்பொழுது,
எந்தவித குறிப்பையும் வைத்துக்
கொள்ளாமலேயே செல்கிறீர்கள். நீங்கள்

காரணமே இல்லாமல் பெருகுவது ஆனந்தம். இது உங்கள் உள் இருத்தலிலிருந்து நிகழ்வது!

எப்போது அப்படிப்பட்ட எளிமையான வழியில் செல்கிறீர்களோ, அப்போது அசாத்தியமான தைரியமும் நம்பிக்கையும் உங்களுள் குடி கொள்கிறது.

நாம் எப்போதுமே நமது சொந்த இயல்பை நம்புவதில்லை

ஒரு சின்ன கதை:

ஒரு சமயம், அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த அரசரின் முகத்தின்மீது, அங்குப் புகுந்த எலி ஒன்று குதித்தோடியது. அதனால் அதிர்ச்சிக்குள்ளான அரசர், அலறியடித்துக்கொண்டு, அறையைவிட்டு வெளியே ஓடிவந்தார். அதைக் கேட்டு ஓடிவந்த தம் படைத்தலைவரிடம், அந்த எலியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்.

அந்தப் படைத்தலைவரும் எலியைத் தேடி அரசரின் படுக்கை அறையினுள் நுழைந்தார். மறுபடியும் தற்செயலாக, அந்த எலி, அந்தப் படைத்தலைவரின் முகத்திலேயே எகிறி குதித்து ஓடி மறைந்துவிட்டது.

உடனே அந்தப் படைத்தலைவர், "ஓ, இந்த எலி மிகப் பெரியதாக இருக்கிறது!" என்று கத்திக்கொண்டே வெளியே ஓடி வந்தார். இப்போது, படைத்தலைவருக்கு தம் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமை. அதனால் அவர், மன்னரின் அறையில் சக்தி வாய்ந்த மிகப்பெரிய எலி ஒன்று இருக்கிறது என்ற ஒரு செய்தியைப் பரப்பிவிட்டார்! அரண்மனையில் ஒரு பெரிய எலி இருக்கிறது. அதை யாராலும் கொல்ல முடியவில்லை என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த செய்தி அரண்மனை பூனையையும் எட்டியது.

அதே சமயம், அரசர், அரண்மனை
பாதுகாவலருக்கு ஒரு கட்டளையிட்டார்.
அரண்மனை பூனையை அழைத்துச் சென்று,
அந்த எலியைக் கொல்ல வேண்டும்
என்பதே அது.

அரண்மனை பாதுகாவலரும், அரசரின் அறைக்குள் இருக்கும் எலியைக் கொல்லுமாறு அரண்மனை பூனைக்குக் கட்டளையிட்டார். அந்த எலியை அரசராலோ, படைத்தலைவராலோகூட கொல்ல முடியவில்லை என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அந்தச் செய்தியால் மூளைச்சலவை செய்யப்பட்டு பீதியடைந்திருந்த அரண்மனை பூனையும், பயந்துகொண்டே அறைக்குள் நுழைந்தது. மறுபடியும் எலி குதித்தோடியது, இந்த முறை பூனையின் முகத்தில்! இதனால் அதிர்ச்சியடைந்த பூனை, பயந்து நடுங்கி, அந்த அறையை விட்டு வெளியே ஓடிவந்தது.

தன்னுடைய அந்தஸ்தைக் காப்பாற்றிக்கொள்ள, அதுவும் தன் பங்குக்கு எலியைப் பற்றிப் பலவிதமாகத் திரித்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டது. "அது ஒரு சாதாரண எலியே அல்ல. என்னைப்போல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கிறது, அதைக் கொல்ல முடியாது," என்று பலவித கதைகளைச் சொல்லி, நிலைமையைப் பூதாகாரமாக்கியது.

இப்போது இந்தச் செய்தி இன்னும்
வேகமாகப் பரவியதால், அந்த முழு
நாடும் அந்த எலியை நினைத்து பயந்தது.
கடைசியில், அந்த அரசரும், அந்த
எலியைக் கொல்பவருக்கு தகுந்த ச
ன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார்.
அரசரின் செய்தி நாடு முழுவதும் பரவியது.

நம் மனம்தான்
எல்லாவற்றையும்
பெரிதாக்குகிறது.

இதை அறிந்த ஒரு ஏழை விவசாயி, தம் பூனையிடம், "நீ போய் அந்த எலியை கொன்றால், உனக்கு ஒரு நாள் உணவாவது கிடைக்கும். உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை! அதனால் நீ போய் ஏன் அதற்கு முயற்சிசெய்யக்கூடாது?" என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பூனையும், "தாராளமாகச் செய்யலாமே, இப்போதே புறப்படுவோம்," என்று புறப்பட்டுவிட்டது. மற்ற பூனைகளெல்லாம் அதனை எச்சரித்தன, "போகாதே. கொழுத்த அரண்மனை பூனையாலேயே அந்த எலியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அரண்மனை பூனைக்கு எலிகளைக் கொல்வதற்கென்றே பிரத்யேகப்பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும். அத்தனை வழிமுறைகளும், நுட்பங்களுமே அதற்கு உதவவில்லை. நீ போய் மடத்தனமாக மாட்டிக் கொள்ளாதே!” என்றன. ஆனால், அந்தப் பூனையோ, “அங்கே என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுகிறேன்,” என தைரியமாகச் சொன்னது.

அந்தப் பூனையை அழைத்துக் கொண்டு அந்த விவசாயி அரண்மனைக்குச் சென்றார். அந்தப் பூனையை அரசரின் அறைக்குள் விட்டதுமே, அது வெகு சாதாரண மாக உள்ளே போய், அந்த எலியைக் கொன்று விட்டு வெளியே வந்தது. உடனே அரசரும் அந்தப் பூனைக்கு ஒரு பெரிய விருந்தளித்து, பரிசுகளை வழங்கி, தகுந்த மரியாதை செய்து வழியனுப்பி வைத்தார்.

நீங்கள் உண்மையையே
பேசுவதாயிருந்தால்,
எதையுமே நீங்கள்
நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டிய
அவசியமேயில்லை.

சிலர், அந்தப் பூனையிடம் நேர்காணலுக்காகச்
(Interview) சென்றனர். “நீ எப்படி
அந்த பெரிய எலியைக் கொன்றாய்?
அரசராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை,
படைத்தலைவராலும் ஒன்றும் செய்ய
முடியவில்லை, அரண்மனை பூனையாலும்
ஒன்றும் செய்ய முடியவில்லை. உன்னால்
எப்படி இதைச் சாதிக்க முடிந்தது?” எனக்
கேட்டனர்.

அந்தப் பூனை, தெளிவாகப் பதிலளித்தது:
“என்ன, நான் சாதித்தேனா?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான்
ஒரு பூனை. எலிகளைக் கொல்வது என்
சுபாவம்?”

அவ்வளவுதான்! ஒரே வார்த்தை! 'நான் ஒரு பூனை. என்னுடைய சுபாவம் எலிகளைக் கொல்வது. இதற்கிடையில் எதுவும் இல்லை.'

நம் மனம்தான் எல்லாவற்றையும் பெரிதாக்குகிறது. ஒரு எளிமையான கூற்று. 'நான் ஒரு பூனை. எலிகளைக் கொல்வது என்னுடைய சுபாவம். இதில் அதிசயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!' இந்தக் கூற்றே எல்லாவற்றையுமே சொல்லிவிட்டது! எலியைக் கொன்றதிலே என்ன அதிசயம் இருக்கிறது? அதுதான் இயற்கை.

அந்தப் பூனை, தன்னுடைய இயல்பைப் புரிந்துகொண்டு அதற்கு மதிப்பளித்தது. அதனுடைய இயல்பினாலேயே அதனைச் செய்ய முடிந்தது. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? நம் நண்பரை சந்திக்கச் செல்லும்போதுகூட, ஒரு குறிப்பைத் தயார்செய்கிறோம். நம்முடைய இயல்பை நாமே நம்புவதில்லை. நாம் ஆன்மிகவாதிகள், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நாம் நம்புவதில்லை.

உங்களுடைய இயல்பே, உங்களை ஆனந்தத்திலேயே வாழச்செய்யும்

நாம் எப்போதுமே நமது சொந்த இயல்பை நம்புவதில்லை. எதையும் சந்திப்பதில் நாம் நம்பிக்கையே வைப்பதில்லை. அந்தப் பூனை சொன்னதைக் கவனித்தீர்களா? 'நான் ஒரு பூனை, என் இயல்பே எலிகளைக் கொல்வது! அவ்வளவுதான். சிறப்பாக ஏதோவொன்று தேவையில்லை. எந்தவொரு நுட்பத்துக்கும் அவசியமில்லை. எந்தவொரு பயிற்சிக்கும் அவசியமில்லை. என்னுடைய இயல்பு எலிகளைக் கொல்வதே. அதுபோதுமே எனக்கு!'

அதைப்போலவே, உங்களுடைய இயல்பே,
உங்களை ஆனந்தத்திலேயே வாழச்செய்ய
முடியும். உங்களுடைய இயல்பே அந்த
இறைசக்தியிடம், தெய்விகத்திடம் சரணாகதி
செய்யவைத்துவிடும்.

ஆனால், உங்களுடைய கட்டுறுமன அமைப்பும், செயலாற்றும் முறையும் எல்லாவற்றையும் சிக்கலாக்கிவிடுகிறது. சிக்கலாக்கிக் கொள்ளும் கலையில் கைதேர்ந்தவர்களாகி விடுகிறீர்கள். உங்களுடைய மனைவியிடம் பேசுவதென்றால்க்கூட, அவரிடம் என்னென்ன பேச வேண்டும் என்பதற்கான வார்த்தைகளையும் வசனங்களையும் அலுவலகத்திலிருந்து செல்லும்போதுதே தயார்செய்து கொள்கிறீர்கள்.

இன்னொரு அழகான விஷயம்: நீங்கள் உண்மையைப் பேச வேண்டுமென்றால், எதையுமே நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நீங்கள் எப்போதுமே உண்மையே பேசுவதாயிருந்தால், உங்களுக்கு எந்த பிரச்சினைகளும் இருக்காது.

பலரும் என்னைக் கேட்பதுண்டு: ஸ்வாமிஜி, என்னுடைய ஞாபக சக்தியை அதிகரிக்க தாங்கள் உதவ முடியுமா? மக்கள் ஏன் அதிக ஞாபக சக்தியை விரும்புகிறார்கள்?

இது எதற்காக என்று நாம் ஆழ்ந்து பார்த்தோமானால், சென்ற முறை நாம் என்னென்ன பொய்களைப் பேசினோமோ அவற்றையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவே, நாம் ஞாபக சக்தியை விரும்புகிறோம்!

உண்மையையே பேசினோமானால், நமக்கு அதிக ஞாபக சக்தி தேவைப்படாது. நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான ஞாபக சக்தியை, ஏற்கனவே கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், நம் பொய்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவே, அதிக ஞாபக சக்தி தேவை என்று நினைக்கிறோம்!

நாம் தொடர்ந்து பொய்களையே சொல்வதாயிருந்தால், எல்லாப் பொய்களையும் - எங்கு, எப்போது, யாரிடம் எந்த பொய்யைச் சொன்னோம் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டே ஆக வேண்டும். நமக்கு ஞாபக சக்தியே அவசியமில்லை. நாம் ஸத்யத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தோமென்றால், நம் வாழ்க்கையை வாழ்வதற்கு குறிப்பு எதுவும் அவசியமேயில்லை.

'எனது' என்னும் கருத்தே 'நான்' என்னும் கருத்தை உருவாக்குகிறது

இரண்டாவது, 'எனது' என்பதைச் சரண் செய்வது

இங்குதான், மிகப்பெரிய பிரச்சினை வருகிறது. 'எனது' என்றால் உடைமைத்தன்மை. நம்மிடமிருப்பதை 'எனது' என்று சொந்தம் கொண்டாடும் தன்மையையே உடைமைத்தன்மை (possessiveness) என்கிறோம்.

நம்மால், நம் மனத்தைக்கூட சரணாகதி செய்துவிட முடியும், ஆனால், நம் உடைமைத்தன்மையை அவ்வாறு செய்துவிட முடிவதில்லை. நம் அஹங்காரத்திலிருந்தே உடைமைத்தன்மை தோன்றியதாக நாம் நினைக்கிறோம். ஆனால், அதற்கு மாறாக தந்த்ர சாஸ்த்ரம் சொல்கிறது: உங்களுடைய உடைமைகளை அடிப்படையாகக்கொண்டே, உங்கள் அஹங்காரம் அமைகிறது!

Money Tree

இது ஒரு புதுமையான அறிவிக்கை. ஆனால் நான் அதைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தேன். ஆம், அது உண்மைதான்! ‘எனது’ என்பதின் பக்கப் பொருளே (byproduct) அஹங்காரம். நீங்கள், ‘எனது என்று எதையெல்லாம் நினைக்கிறீர்களோ, அதிலிருந்தே உங்களுடைய ‘நான்’ என்னும் அடையாளம் பிறக்கிறது. ‘எனது’ என்னும் கருத்துதான் ‘நான்’ என்னும் கருத்தையே உருவாக்குகிறது.

அஹங்காரத்தை மரத்திற்கு ஒப்பிட்டால், ‘எனது’ என்பதை வேர்களுக்கு ஒப்பிடலாம். ‘எனது’ என்னும் வேரிலிருந்தே அஹங்காரம் என்னும் மரம் வளர்த்துவங்குகிறது. உங்கள் ‘எனது என்பது வளரும்போது, அதாவது உங்கள் உடைமைகள் பெருகும்போது, நீங்களும் விரிவடைவதாக உணர்கிறீர்கள், நீங்கள் திடமாகிவிடுகிறீர்கள், நீங்கள் வேறொருவராக மாறிவிடுகிறீர்கள். நீங்கள் சுதந்திரமடைந்துவிட்டதாக உணர்கிறீர்கள்.

ஆனால், இச்சுதந்திரம் உங்களுடைய துயரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமே தவிர, இன்ப - துன்பம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் அல்ல.

நம்மால், நம்
மனத்தைக்கூட
சரணாகதி செய்துவிட
முடியும், ஆனால், நம்
உடைமைத்தன்மையை
அவ்வாறு செய்துவிட
முடிவதில்லை.

ஆம், உங்களுக்கு சுதந்திரம்
இருக்கிறது உண்மைதான். உங்களிடம்
பணமிருந்தால், நீங்கள் உயர்தரமான
கார், வீடு என பலவற்றைச் சொந்தமாக
வைத்துக்கொள்ளலாம். உங்களுக்குத்
தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் நிறைய
உள்ளன. ஆனால், அவையெல்லாம்
துயரத்துக்கும், துயரத்துக்கும் இடையே
ஆன வாய்ப்பே தவிர, துயரத்திற்கும்,
மகிழ்ச்சிக்கும் இடையேயான வாய்ப்பு
அல்ல; அதாவது இந்தத் ‘துயரம்’ வேண்டுமா

அல்லது அந்தத் 'துயரம்' வேண்டுமா என்று வேண்டுமானால் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமே தவிர, இந்தத் 'துயரம்' வேண்டுமா அல்லது அந்த 'மகிழ்ச்சி' வேண்டுமா என்று தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அல்ல.

'நான்' - 'எனது'களை விடுவதன் மூலமே, நாம், 'துயரம்' வேண்டுமா அல்லது 'மகிழ்ச்சி' வேண்டுமா என தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தைப் பெற முடியும். 'எனது' என்னும் உடைமை குணத்திலிருந்து அது நிகழ்வதில்லை. உங்களுடைய உடைமைகளை நீங்கள் இன்பமாக அனுபவிக்கும்பொழுதுகூட, அந்த இன்பத்தின் அடி ஆழத்தில், 'இவற்றை நான் இழந்துவிடுவேனோ' என்கிற ஒரு பயம் இருக்கவே செய்கிறது. இந்த பய உணர்வு, அவற்றை இன்பமாக அனுபவிக்க உங்களை அனுமதிப்பதில்லை.

உடைமைக்குணம் அற்ற ஒருவர், தம்முடைய உடைமைகளை இன்னும் ஆழமாக இரசிப்பதையும் அனுபவிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். ஏனெனில், அவரிடம் 'இவற்றை நான் இழந்துவிடுவேனோ' என்கிற பயம் இருப்பதில்லை.

செல்வம், இரண்டுவித அம்சங்கள் கொண்டதாக இருக்கிறது. ஒன்று, 'எனது' என்பதை அடிப்படையாகக் கொண்ட செல்வம். இதற்கு, அதிபதி குபேரன். குபேரன் என்றால் பொருளுக்கு உடைமையாளர். ஆனால், அதை ஒருபோதும் அனுபவிக்காதவர் என்று பொருள்.

உதாரணத்திற்கு, சம்பிரதாய முறைகளில் வாழ்கின்ற முதியவர்கள், தங்களிடம் எல்லாவகை செல்வங்களும் இருந்தாலும், அவற்றை அனுபவிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்னுடைய கிராமத்திலேயே நடந்திருக்கிறது. நானே பார்த்திருக்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு சில
வீடுகள் தள்ளி ஒரு வயதான பாட்டி
வசித்து வந்தார். அவர், சிறுவனான என்னை
அழைத்து, அத்தெருக்கோடியில் இருக்கும்
பெட்டிக் கடையில் கொஞ்சம் புகையிலை
மட்டையை வாங்கிவரச்சொல்வார்.

ஆனால் அவர், அதற்கான பணத்தைத்
தந்ததில்லை, என் தந்தையிடமே பணம்
பெற்றுக்கொள்ளுமாறு சொல்லிவிடுவார்.
நானும் அதேபோல் அப்பாவிடம்
பணம் பெற்று, புகையிலையை வாங்கிப்
பாட்டியிடம் கொடுத்துவிட்டு வருவேன்.
நானும், ‘அந்தப் பாட்டி ஒரு ஏழை’ என்றே
நினைத்துக்கொண்டேன்.

அவர் வசித்த வீட்டில் ஒரு பெரிய கிணறு இருந்தது. கிராமத்திலுள்ள மற்ற கிணறுகளிலெல்லாம் நீர் வற்றி வறண்டுபோனாலும், அவருடைய வீட்டு கிணற்றில் மட்டும் நீர் இருக்கும். ஆனாலும், வேறு எவரையும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க விடமாட்டார், அவர் அந்தளவுக்கு எனது என்னும் குணம் கொண்டவராக இருந்தார்.

ஒருமுறை, கிராமத்து வைத்தியருக்கு ஒரு அவசர கால வைத்தியத்திற்காக, கொஞ்சம் கிணற்றுத் தண்ணீர் தேவைப்பட்டது. அதற்கும்கூட அந்தப்பாட்டி தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை.

திடீரென ஒரு நாள் அந்தப் பாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதே வைத்தியர்தான், வைத்தியம் பார்க்க வந்திருந்தார். அப்பொழுது பாட்டியிடம் அவர், “நீங்கள் அன்று, ஒரு அவசரத் தேவைக்காகக்கூட தண்ணீர் கொடுக்கவில்லை. இப்போது அந்தத் தண்ணீரை உங்களுடன் எடுத்துக்கொண்டு போக முடியுமா?” என்று கேட்டார். அந்த சமயத்திலும்கூட அவர் தம்முடைய தவறை உணரவேயில்லை. அவர், தம் உடைமைத்தனத்தை, ‘தவறு’ என்றே உணரவில்லை, வருந்தவுமில்லை.

அன்றே அவர் இறந்தும்கிட்டார். இறுதி சடங்குகளுக்குப் பிறகு, அவர் படுத்திருந்த கட்டிலுக்குக் கீழே ஒரு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெட்டி நிறைய தங்கமும், பணமும் கொட்டிக்கிடந்தன. அவற்றை அவர் ஒருபோதும் அனுபவித்ததில்லை.

அப்படிப்பட்ட மக்கள் செல்வத்தைச் சேர்த்துவைத்துக் கொள்வதில்தான் திருப்தியடைகிறார்கள். அவற்றைத் தங்களிடம்

வைத்திருக்கும்பொழுது, தங்களை
யாரோவாக நினைத்துக்கொள்கின்றனர்.
அதைத் தங்களுக்கான பாதுகாப்பாக
உணருகிறார்கள்.

இரண்டாவது, உடைமை உணர்வற்ற செல்வம். இதன் அதிபதி இலட்சுமிதேவி. 'இலட்சுமி' என்றால் 'அபரிமிதம்'; இங்கு, செல்வம் இருக்கும், ஆனால், உடைமைத்தனம் இருக்காது. அப்படியிருக்கும்பொழுதுதான், நீங்கள் ஒன்றை வைத்திருக்கவும் செய்வீர்கள்; மேலும் அதை மிகுந்த சந்தோஷத்துடன் அனுபவிக்கவும செய்வீர்கள்! உண்மையிலேயே, உங்கள் வாழ்க்கையை வாழ்வீர்கள்.

குபேரர், செல்வச் செழுமையைக் குறிப்பவர். 'செல்வச் செழுமை' என்றால், உங்களுக்குச் சொந்தமாகப் பல பொருட்கள் இருக்கும். ஆனால், அதை அனுபவிக்க மாட்டீர்கள் என்பதுதான் பொருள்.

இப்போது நாம், குபேரத்தன்மையில் இருக்கின்றோமா அல்லது இலட்சுமித்தன்மையில் இருக்கின்றோமா என்பதை ஆராய்ந்தறிந்து கொள்ளலாம்.

ஒரு சின்ன கதை

இரயிலில் பயணம்செய்துகொண்டிருந்த ஒரு பயணி, தம்முடைய பெட்டிகளைத் தலைமேல் வைத்துச் சுமந்துகொண்டிருந்தார்.

சகபயணி ஒருவர் அவரிடம், "அதை ஏன் தலைமேல் சுமந்துகொண்டிருக்கிறீர்கள்! கீழிறக்கி வைத்துக்கொள்ளக்கூடாதா?" என்று கேட்டார்.

அதற்கு அவர், "இல்லை, அது இரயிலுக்குப் பாரமாகிவிடும்!" என்றார்!

எப்படியாயினும், அவருடன் சேர்த்து, அவருடைய பெட்டிகளையும் இரயில்தான் சுமக்கிறது என்பதை அம்மனிதர் புரிந்துகொள்ளவில்லை. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய மொத்த 'நான்' - 'எனது'களைத் தெய்வீகமே கவனித்துக்கொள்கிறது. அது, அதனுடைய வழியில் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறது. ஆனால், நாம்தான் நம் அஹங்காரத்தின் காரணமாக, எல்லாத் தலைவலிகளையும், எல்லாச் சுமைகளையும், நம் தலைமீது சுமந்துகொண்டிருக்கிறோம்.

ரமண மகரிஷி, அழகாகச் சொல்வதுண்டு, ''ரயிலில் ஓடிக்கொண்டிருக்கிறது, நீங்கள் அதில் உட்கார்ந்திருக்கிறீர்கள். பின் ஏன் சுமையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக இளைப்பாறக்கூடாது? உறங்கவாவது நேரம் கிடைக்குமல்லவா? உங்களுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும்.''

எப்படியோ, ரயிலில் தன்னுடைய இலக்கைச் சென்றடைந்துவிடும். உங்கள் பெட்டி படுக்கைகளை நீங்கள் சுமந்துகொண்டிருந்தாலும், அவற்றைக் கீழே இறக்கி வைத்திருந்தாலும், அது, தான் எந்த நேரத்திற்குப் போய்ச்சேர வேண்டுமோ, அந்த நேரத்திற்குத்தான் போய்ச் சேரும், அது அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளத்தான் போகிறது.

ஜென் கூற்று ஒன்று இதை அழகாக விளக்குகிறது. 'நீங்கள் எதையாவது மெதுவாகச் செய்ய வேண்டுமென விரும்பினாலோ அல்லது செய்யவே வேண்டாமென விரும்பினாலோ, நீங்கள் அதை எவ்வளவு அவசரமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு அவசரப்பட்டு செய்யுங்கள்.

அவசரப்படுவதனால், நீங்கள் தவறுகளை செய்ய மாட்டீர்கள்; ஆம், அது உண்மையே, ஆனால் மடத்தனமான செயல்களைச் செய்துகொண்டிருப்பீர்கள்!

நீங்கள் தளர்வான மனநிலையுடன்
இருக்கும்போது, தெய்வீகத்தின் காலடியில்
சரணாகதி செய்யும்போது, உங்களுடைய
99% சக்தியைச் சிறந்தமுறையில் ஆக்கப்
பூர்வமாகச் செலவிடுவீர்கள், அதுவரை
உங்களுடைய 99% சக்தியையும்
தேவையற்ற கவலைகளிலேயே
வீணாக்கிக்கொண்டிருப்பீர்கள்.

உங்களுடைய மொத்த
'நான்' - 'எனது'களை
தெய்வீகமே
கவனித்துக்கொள்கிறது

ஒருமுறை நான், 'கடவுளை அறிவது எப்படி' என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதன் ஆசிரியர் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் தகவல் இதுவே: “எந்தவொரு நீதிமன்ற சட்டமும் ‘கடவுள் இருக்கிறார்’ என்பதை நிரூபிக்க முடியாது. இருந்தாலும்கூட, 99% மக்கள் ‘கடவுள் இருக்கிறார்’ என்று நம்புகிறார்கள். அதன் விளைவாக அவர்களுடைய ‘படைப்பாற்றல்’ பிரமிக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைகிறது. அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சிமிக்கதாகவும் ஆனந்தமயமாகவும் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை இயல்பாகச் செல்கிறது. எப்படி? ஏனெனில், அவர்கள் கவலைப்படுவதில் தங்கள் சக்தியை செலவழிப்பதை நிறுத்திவிட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள்.”

99% கவலைகள் நிஜமாவதே இல்லை. அவை நிகழ்வதே இல்லை. நிகழும் அந்த 1%கூட உங்களுக்கு நன்மையையளிப்பதாகவே அமைகிறது.

ஆம், தொடர் - கவலைகள் உங்கள்
வாழ்க்கையில் மன அழுத்தங்களைத்தான்
உருவாக்கும். நீங்கள் சரணடையும்பொழுது,
தெய்விகத்தினிடம் நம்பிக்கை கொண்டு,
தளர்வாக நிம்மதியாக இருக்கும்பொழுது,
நீங்கள் கவலைப்பட்டு வீணாக்கிக்
கொண்டிருக்கும் சக்தியெல்லாம்,
நேர்மறைச் செயல்கள் மற்றும் புதிது
புதிதாகப் படைக்கும் திறனை நோக்கித்
திரும்பிவிடுகிறது.

99% கவலைகள் நிஜமாவதே இல்லை. அவை நிகழ்வதே இல்லை. நிகழும் அந்த 1%கூட உங்களுக்கு நன்மையையளிப்பதாகவே அமைகிறது.

நீங்கள் 'நான் என்பதை சரணாகதி செய்யும்பொழுது, உங்களுடைய துன்பங்களெல்லாம் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் மாற்றம் பெறுகின்றன.

நீங்கள் 'எனது' என்பதை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் செல்வச்செழிப்பு, செல்வமாகிவிடுகிறது.