KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/வாழ்வின் அர்த்தங்கள்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

வாழ்வின் அர்த்தங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

18.29 தனஞ்ஜயா, இப்பொழுது, முக்குணங்களுக்கேற்பவே புத்திக்கும் மனஉறுதிக்கும் ஏற்படும் மூன்றுவிதமான பாகுபாட்டை முழுமையாகவும் தனித்தனியாகவும் நான் சொல்கிறேன், கேள்.

18.30 பார்த்தா, எந்த புத்தி, கர்மத்தின் பாதையையும் துறவின் பாதையையும், செய்யத்தகுந்ததையும் செய்யத் தகாததையும், பயத்தையும் பயமின்மையையும், பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்மையாக அறிகின்றதோ அந்தப் புத்தி ஸாத்விகமானது.

18.31 பார்த்தா, தர்மம் மற்றும் அதர்மம், செய்யத் தகுந்தவை மற்றும் செய்யத்தகாதவை,இவற்றுக்கிடையே உள்ள வேற்றுமையை வேறுபடுத்திக் காணமுடியாத புத்தி ராஜஸம் எனப்படும்.

18.32 அஜ்ஞான இருளால் கவ்வப்பெற்று, அதர்மத்தை தர்மமாகவும், பொருட்களையெல்லாம் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாகவும் நினைக்கிறதோ, அந்தப் புத்தி தாமஸமானது.

பார்த்தா, தெய்விகத்துடன் இணைவதற்கென, தன் மனம்,
ப்ராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை உறுதியான
தொடர் முயற்சியினால் கட்டுப்படுத்துகிறானோ, அவனுடைய
அந்த உறுதி ஸாத்விகமானது.

ஆனால், ப்ருதையின் மைந்தா, பயனில் விருப்பமுடைய மனிதன்
எந்த உறுதியினால் மிகுந்த பற்றோடு அறம், பொருள், இன்பம்
அடைவதிலேயே உறுதியாக இருக்கிறானோ அந்த உறுதி
ராஜஸமானது.

பார்த்தா, தாமஸ உறுதியில் இருக்கும் ஒருவனால் கனவையும்,
அச்சத்தையும், கவலையையும், மனக்கலக்கத்தையும்,
மயக்கத்தையும் கடக்க முடிவதில்லை.

ஓ பரதக்குல காளையே, மூன்று விதமான இன்பங்களைப்பற்றி
இப்போது என்னிடம் கேட்பாயாக, ஆன்மிகப் பயிற்சிகளிலிருந்து
பெறப்படும் இன்பமானது, எல்லாத் துன்பங்களுக்கும் ஒரு
முற்றுப்புள்ளி வைத்து முடிவுக்குக் கொண்டு வருகிறது. முதலில்
விஷமாகத் தோன்றினாலும், முடிவில் அமுதம்போன்றதாகும்
இவ்வின்பம் ஸாத்விகமாம். ஆன்ம அறிவின் கருணையினால் இது
தோன்றுகிறது.

முதலில் அமுதாகவும், முடிவில் விஷமாக மாறும்
புலனின்பங்கள், உணர்ச்சிகரமான ராஜஸ தன்மையில்
இருக்கின்றன.

முதலிலிருந்து இறுதிவரை மருட்சியைத் தருவதும்,
தூக்கத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், மாயையிலிருந்தும்
தோன்றுவதான இன்பங்கள், அறியாமையின் இயல்புகள் என்று
சொல்லப்படுகின்றன.

பூவுலகிலாகட்டும் அல்லது உயர் உலகங்களில் வாழும்
தேவர்களாகட்டும், ஒருவருமே பொருள்சார்ந்த இம்மூன்று
தன்மைகளிலிருந்து தப்பிக்க முடியாது.

வாழ்க்கைக்கு நோக்கங்கள் கிடையாது, அர்த்தங்களே உண்டு

கிருஷ்ணர், புருஷார்த்த - வாழ்க்கையின் அர்த்தங்களை வரையறுக்கிறார். தர்மம், அர்த, காமம், மோக்ஷம் என்று நான்கு புருஷார்த்தங்கள் உள்ளன. அவற்றை முறையே தர்மம், செல்வம், ஆசை அல்லது காமம் மற்றும் முக்தி என்று மொழிபெயர்க்கலாம். இவை வாழ்க்கையின் நான்கு விதமான அர்த்தங்கள்.

நான் இவற்றை, வாழ்க்கையின் நோக்கங்கள் என்று கூறுவதற்கு விரும்பவில்லை. வாழ்க்கைக்கு நோக்கம் என்று ஒன்று கிடையாது. வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தைத் தீர்மானித்துக் கொண்டால், பிறகு அது, அடையப்பட வேண்டிய ஒரு இலக்காக ஆகிவிடும். விளைவு... வாழ்க்கை, பற்றுகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டதாக ஆகிவிடும்.

> நமக்கு வழிகாட்ட
> வாழ்க்கையை
> அனுமதிக்கும்பொழுது,
> நாம்
> ஒவ்வொரு கணத்தையும்
> மகிழ்ச்சியாகக்
> கொண்டாடுவோம்.

வாழ்க்கை என்பது சென்று சேருமிடம் இல்லாத ஒரு பாதை. சேருமிடம் என்று ஒன்று இருப்பதாக நினைத்தோமென்றால், பின்பு அதை நோக்கி ஓட ஆரம்பிப்போம். எதிர்காலமென்பது மன அழுத்தத்தை உண்டாக்கும் ஒரு காரணியாகிவிடும். இப்போது நாம் சென்னையிலிருந்து டெல்லிக்குப் பிரயாணம் செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நாம் சென்று சேருமிடம் டெல்லி என்று முடிவுசெய்தவுடன், அடுத்து எழும் பிரச்சினை, எப்போது அங்குப் போய்ச்சேருவோம்? என்பதாகத் தான் இருக்கும். அப்போதிருந்து நாம் தொடர்ந்து அதே கேள்வியோடு, கவலைப்பட்டுக்கொண்டிருப்போம்.

ஆனால், நாம் டெல்லி போய், அங்கே உடனடியாக முடிக்க வேண்டிய அலுவல் எதுமில்லை என்பது வேறு விஷயம். அதனால் அவ்வளவு அவசரப்பட்டேயிருக்க வேண்டியதில்லை. ஆனால், ஒருவித அவசரத்தில் இருக்கும்போது, நாம் பயணத்தை அனுபவிப்பதில்லை. இலக்கைச் சென்றடைய வேண்டுமென்று நினைத்த காரணத்தினால், பயணம் எரிச்சல் மிக்கதாகிவிடுகிறது.

வாழ்க்கையில், ஒரு குறிக்கோளையே நிர்ணயிக்காதீர்கள். ஒவ்வொரு பயணமும் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பதே பாதையும், பயணமும் சேர்ந்ததே!

மேலும் மேலும் அதிகம் அடைய வேண்டுமென்ற பேராசை கொள்ளாமல், உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் அனுபவங்கள், வழியில் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் புதிய அனுபவங்கள் என எல்லாவற்றையுமே அனுபவித்து மகிழுங்கள். பயணம் மற்றும் பாதை, இவையிரண்டுமே சந்தோஷமானவையாக இருந்துவிட்டால், நீங்கள் எந்த இடத்திற்கு போய்ச்சேர்ந்தாலும், அதுவே நீங்கள் சேர வேண்டிய சரியான இடமாகும்.

வாழ்க்கையோடு ஒரு நோக்கத்தை இணைத்துக் கொள்ளும் மனிதர்கள், பல்வேறு தொந்தரவுகளுக்கும், இடைஞ்சல்களுக்கும் ஆளாகிறார்கள். வேறு வேலையே இல்லாத இந்தத் தத்துவவாதிகள், வாழ்க்கைக்கு தவறான நோக்கங்களை உருவாக்கிவிடுகிறார்கள்.

பிலாசபர்கள் மக்களை குழப்புவதற்கே இருக்கிறார்கள். ஆனால், ஞானிகள் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கிறார்கள். மேலும், அவர்கள் புத்திசாலித்தனத்தை விழிப்பிக்கச் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்தையும் கொடுத்து உதவுகிறார்கள்.

நமக்கு வழிகாட்ட வாழ்க்கையை அனுமதிக்கும்பொழுது, வாழ்க்கை நமக்கு எவ்வாறு நிகழ்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும்போது நாம் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம். அப்போது நாம் உண்மையிலேயே ஒரு கடவுளைப்போல நிகழ்காலத்தில் வாழ்கிறோம். நம்முடைய சக்தியை, ஆற்றலை உணர்ந்து கொள்கிறோம்!

புருஷார்த - வாழ்க்கைக்கு நான்கு அர்த்தங்களைக் கொடுக்கிறது.

தர்ம என்பது நன்னடத்தை அல்லது நற்குணங்கள். இதையே புத்தர், ‘மத்யப் பாதை’யென போதித்தார். அர்த என்பது நம் பயணத்தின்பொழுது, பாதையில் கண்டெடுக்கும் ஒரு விஷயம், நாம் வாழத் தேவையான பொருள் சார்ந்த விஷயங்கள்.

காம என்பது நாம் வாழ்க்கைப் பயணத்தில் அனுபவித்து மகிழ்கின்ற புலனின்பங்கள். இவை, நாம் தர்ம வழியில் அடைந்த உடைமைகளும் இன்பமான அனுபவங்களும் ஆகும். இவை உங்களுக்குத் தேவையாயிருப்பதைக் கண்டு நீங்கள் சஞ்சலமடையத் தேவையில்லை. ஆனால், அவற்றில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பாதையில் மேலும் முன்னேறி, பயணத்தை முழுமையாக அனுபவித்து மகிழ மறந்துவிடாதீர்கள்.

மோக்ஷமே வாழ்க்கையின் உச்ச அர்த்தம். எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், பேராசைகள், பயம், பற்றுதல்கள் இவை அனைத்திலிருந்தும் விடுதலையடையும் உச்ச நிலை இதுவே. பற்றற்ற தன்மையும் எதிர்பார்ப்பின்மையும், நம்மை விடுதலையடையச் செய்துவிடும் என்ற புரிதலே நம்மை பேரானந்தத்தில் நிரப்பிவிடும்.

கிருஷ்ணர் இங்கு, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு, அதை நாம் எப்படி வழிநடத்திச்செல்ல வேண்டும் என்பதன் சாரத்தை தருகிறார்: 'நாம் தெய்விகமானவர்கள்' என்னும் ஸத்யத்தை உணர்வதற்கு நமக்கு இரு குணங்கள் தேவை. ஒன்று, சரி - தவறு பற்றிய தெளிவு. மற்றொன்று, நம் பற்றுதல்கள் மற்றும் ஆசைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள உதவும் வகையிலேயே, நம் உடல் மற்றும் மனத்தைக் கொண்டு ஆற்றும் செயல்கள் அனைத்தும் இருக்க வேண்டு மென்ற தெளிவு. இதுவே ஸாத்விகப் பண்பு.

பற்றற்ற தன்மையும்
எதிர்பார்ப்பின்மையும்,
நம்மை விடுதலையடையச்
செய்துவிடும் என்ற புரிதலே
நம்மை பேரானந்தத்தில்
நிரப்பிவிடும்.

கிருஷ்ணர் முன்பு, முக்குணங்கள்
நமது பட்டறிவின் மீது ஏற்படுத்தும்
தாக்கத்தைப் பற்றியும், அவை நம்
நடத்தைகளை வரையறுப்பதைப்
பற்றியும் விவரித்திருந்தார். இப்போது,
நமது நடத்தைகளின் விளைவாக, நாம்
எப்படிப் பதில்செயல் புரிகிறோம் என்று
விவரிக்கிறார்

கிருஷ்ணர் சொல்கிறார்: ஸாத்விகத் தன்மையிலான ஆன்மிகப் பயிற்சியானது, ஆரம்ப நிலையில் மிகக் கடினமானதாகவும், விஷம்போலவும் தோன்றினாலும் இறுதியில் ஜீவனளிக்கும் அமுதம்போலாகிவிடும். ரஜஸ் குணத்தினால் பிறக்கும் புலனின்பங்கள், முதலில் அமுதமாகத் தோன்றினாலும் பிறகு, விஷமாக மாறிவிடும். தமஸ் நிலையில் இருக்கும் ஒருவர் தூக்கத்தில், சோம்பலில், மாயத் தோற்றத்தில் இருப்பதுபோல் மருட்சிக்குள்ளாவார்.

ஒவ்வொரு மனிதருமே இந்த மூன்று நிலைகளுள் ஏதோவொரு நிலையில் இருப்பார். மனிதர்கள் மட்டுமல்ல, மேலான நிலைக்கு உயர்ந்த தேவலோகவாசிகளும்கூட இப்படித்தான் இருக்கிறார்கள். இக்குணங்களின் விளைவுகளிலிருந்து ஒருவராலும் தப்பித்துவிட முடியாது.

இழந்த பொக்கிஷங்களை மீண்டும் பெற்றிடுவோம்

ஆன்மிகப் பயிற்சிகளைத் தொடங்குவது என்பது ஒரு எளிதான விஷயமல்ல. வேத கலாச்சாரத்தில், குழந்தைகள் இளம் பிராயத்திலிருந்தே குருகுலப் பள்ளிகளில் ஆன்மிக சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டார்கள். அவர்கள் இளவயதிலேயே, தங்கள் மனம் மற்றும் புலன்களை அடக்கியாள்வதற்கும், 'தன்னை அறிதல்' என்பதின்மீது கவனம் செலுத்துவதற்கும் கற்றார்கள். புலனின்பங்களைக் கடந்த வேறொரு சிறந்த ஆனந்தம் இருக்கிறதென்பதை தங்கள் குருமார்களைக் கண்டே புரிந்துகொண்டார்கள். இது அவர்களுக்குத் துணிச்சலைத் தந்தது. ஊக்கத்தைத் தந்தது.

குருகுலக் கல்வியில் குழந்தைகள் புலனின்பங்களைக் கடந்த வேறொரு சிறந்த ஆனந்தம் இருக்கிறதென்பதை தங்கள் குருமார்களைக் கண்டே புரிந்துகொண்டார்கள்.

இன்றைய கால கட்டத்திலிருக்கும்
கல்விமுறையானது, நடைமுறைக்கு
ஒவ்வாதாக உள்ளது. படையெடுத்து
வந்த முகலாயர்களும், காலனி ஆதிக்கம்
செலுத்திய ஆங்கிலேயர்களும் நம் வேத
கலாச்சாரத்தை, அதிலும் முக்கியமாக
குருகுல பாரம்பரியத்தை முற்றிலும்
அழித்துவிட்டார்கள்.

இது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வோ அல்லது ஒரு விபத்தோ அல்ல;

அது வேண்டுமென்றே வகுக்கப்பட்ட
திட்டம். ஒளரங்கசீப், அவர்களுடைய
வீரர்களுக்கு, இந்துக்களை எல்லாம்
இஸ்லாமுக்கு மதம் மாற்றுமாறும்,
அப்படி மாற மறுப்பவர்களையெல்லாம்
கொன்றுவிடுமாறும் கட்டளையிட்டான்.
மேலும் அவன், முடிந்தவரை மத
மாற்றத்திற்கு முயற்சி செய்யும்படியே
அறிவுறுத்தினான்.

ஏனென்றால், மதம் மாற்றம் மட்டுமே தன்னுடைய மதத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதையும், கொல்வது என்பது இந்து மதத்தினரின் எண்ணிக்கையை மட்டுமே குறைக்கும் என்பதையும் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.

நமது இந்தியாவின்
அதிபுத்திசாலித்தனத்துக்கு
முக்கிய காரணமாக
விளங்கியது
குருகுலக் கல்வி முறையே!

ஆங்கிலேய ஆட்சியாளர்களும், நமது இந்தியாவின் அதிபுத்திசாலித்தனத்துக்கு முக்கிய காரணமாக குருகுலக் கல்வி முறையே விளங்குகிறது என்பதையும், குருகுலக் கல்வி அழிந்தால் மட்டுமே தங்களால் ஆள முடியும் என்பதையும் கண்டறிந்து கொண்டு, அதைக் குறிவைத்து முற்றிலும் அழித்தேவிட்டார்கள்.

இன்று நம்மிடையே இருப்பது - படித்த, ஆனால், புரிந்துணர்தல் இல்லாத ஒரு இந்தியர்களின் கூட்டமே! அவர்களுக்கு நம் வேத கலாச்சாரத்தின் சிறந்த பாரம்பரியத்தைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. சடங்கு சம்பிரதாயங்களுக்கு அர்த்தமே இல்லையென்று எண்ணுகிறார்கள். அதைப் போன்றே, இந்து தத்துவவாதிகளும் படித்த மேதைகளும்கூட, நமது கலாச்சாரத்தைப் பற்றி அறியாதவர்களாய் இருக்கிறார்கள்; அதனால், அவர்களும் இப்படிப்பட்ட போக்கையே ஆதரிக்கிறார்கள்.

An illustration showing a traditional Indian Gurukula setting with a teacher and students under trees

ஆன்மிகத்திற்கும், இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய அறிவை நாம் இழந்துவிட்டோம்.

அர்த்தங்கள் புரிந்துகொண்டு செய்யப்படும் சடங்குகளே ஆன்மிகத்தின் அடித்தளமாகும்.

நாம் ரஜஸ் மனோ நிலையிலிருக்கும்பொழுது, உடலைச் சார்ந்த புலனின்பங்கள் மட்டுமே நமக்கு ஒருபொருட்டாகத் தெரியும். புலனுறுப்புக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவையே, நம் வெளி உலகத்திற்கான சாளரங்கள் (ஜன்னல்கள்). அவை, வலியிலிருந்து விலகி ஓடுவதற்கும், இன்பங்களைத் தேடித் துரத்தி ஓடுவதற்கும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நாம் தமஸ் மனநிலையில் இருக்கும்பொழுது, நாம் அறியாமையின் ஆழத்திலிருக்கிறோம் என்பதைக்கூட அறியமாட்டோம். கிருஷ்ணர், தமஸ் மனநிலை மனிதரைப் பற்றி மிக நுணுக்கமாக விவரிக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதரின் நிலையை விவரிக்கும்பொழுது, விஷம் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. தமஸ் மனிதர், போதைக்கு அடிமையானவர்போல இருப்பார் என்றே சொல்கிறார்.

ரஜஸ் மனிதராவது இன்பங்களை அனுபவிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். பின்னர்தான் துக்கப்படுகிறார்.

ஆனால், தமஸ் மனிதருக்கு மகிழ்ச்சி என்பது ஒருபோதும் இருக்காது. அவர் தாம் துன்பப்படுகிறோம் என்பதுகூட தெரியாமலேயே துன்பப்பட்டுக்க கொண்டிருப்பார். அவருடைய மதிமயக்கம் மிக ஆழமானது. அதனால்தான் அவர், தம்முடைய துக்கங்களை மற்றவர்களுக்கும் எந்தவித மனச் சஞ்சலமுமின்றி கொடுக்கிறார். இப்படித்தான் அறியாமையில் இருக்கும் பலரும் தலைவர்களாக ஆகிறார்கள்.

Flute with hands