KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/செயல்களின் அங்கங்கள்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

செயல்களின் அங்கங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

18.18 அறிவு, அறிபவர், அறியப்படும் பொருள் இம் மூன்றும்தான்
செயலைத்தூண்டும் காரணிகள். புலன்கள், செயல், செய்பவர்
இந்த மூன்றும் செயலின் மூன்று பகுதிகளாகும்.

18.19 ஸாங்கிய யோகாவின் குணவிதிகளின்படி, புலன்கள், செயல்,
செய்பவர் - இம்மூன்றிலும் தலா மூன்று வகைகள் உள்ளன.
அவற்றை விவரிக்கிறேன், கேள்.

18.20 எல்லா இருப்புகளுக்குள் இருக்கும் அழிவற்ற ஸத்யத்தை,
பிரிவுகளுக்குள் இருக்கும் பிரிவுபடாத ஒருமைத்துவத்தைக்
காணும் அறிவு ஸத்வ நிலை அறிவு எனப்படுகிறது.

18.21 ஜீவன்களின் வெவ்வேறு இயல்புகளைக் காண்பதன்மூலம்,
அவற்றை ஒன்றினின்று ஒன்றை வெவ்வேறாகப் பிரித்துக்
காண்கிற அறிவு ரஜஸ் நிலை அறிவு எனப்படுகிறது.

ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு, அது மட்டுமே
உண்மையென்று சொல்லிக்கொண்டிருக்கும் பகுத்தறிவுக்கு
ஒவ்வாத, அடித்தளமற்ற, அற்பமான அறிவு தமஸ் நிலை அறிவு
எனப்படுகிறது.

ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கர்மங்களை கர்மபலனில்
பற்றுவைக்காமலும், எந்தவித விருப்பு வெறுப்பின்றியும்
செய்யும்போது, அது ஸாத்விக கர்மமாகிறது.

அஹங்காரத்துடனும், சுயநல நோக்கோடும, பெருமுயற்சியுடனும்
செய்யப்படும் கர்மம் ராஜஸ கர்மம் எனப்படுகிறது.

செயலின் விளைவையும், பிறருக்கு ஏற்படும் துன்பத்தையும்
நஷ்டத்தையும், தம் செயல்திறனையும் எண்ணிப்பாராது,
மயக்கத்தால் எக் கர்மம் செய்யப்படுகிறதோ, அது தாமஸத்திலிருந்து
விளைந்த கர்மம் எனப்படுகிறது.

பற்றற்றவனாகவும், அஹங்காரமற்றவனாகவும், உறுதியும்
ஊக்கமும் உடையவனாகவும், வெற்றிதோல்வியினால்
நிலைமாறாதவனாகவும் இருக்கின்ற அந்த கர்த்தா ஸாத்விகன்
எனப்படுகிறான்.

பற்றுடன் கூடியவனும், செயலின் பயனை விரும்புபவனும்,
பேராசையுள்ளவனும், பிறரைத் துன்புறுத்தும் தன்மை
கொண்டவனும், தூய்மையற்ற நடத்தையுள்ளவனும்,
மகிழ்ச்சியாலும் துயரத்தாலும் பாதிக்கப்படுபவனுமாகிய
இத்தகைய கர்த்தா ராஜஸன் என்று அழைக்கப்படுகிறான்.

ஒழுக்கமற்றவனும், அறிவிலியும், முரட்டுத்தனமுடையோனும்,
கொடூரனும், வஞ்சகனும், பிறருடைய வாழ்க்கையைக்
கெடுப்பவனும், கவலை கொண்டவனும், சோம்பேறியும், காலம்
கடத்துபவனுமான கர்த்தா தாமஸன் என்று சொல்லப்படுகிறான்.

கிருஷ்ணர், இந்த ஸ்லோகங்களில் மனிதனின் இயல்புகளை விளக்குகிறார்.

கிருஷ்ணர் முன்னரே சொல்லியிருக்கிறார். இறுதியாகச் செயல் புரிபவன் நர - மனிதன் அல்ல, நாராயண - இறைவனே! ஆனாலும் மனிதனே செயல்கள் வெளிப்படுவதற்கான ஒரு ஊடகமாக இருக்கிறான்.

மாயைப் புரிந்துகொள்ளும் நிலையே, ஸாத்விகம்!

நாம் கொண்டுள்ள அனைத்து குணங்களும், நம் இயல்பிலேயே பதிந்துள்ளன. இவையே நம்முடைய நடத்தையை வரையறுக்கின்றன, நம் எண்ணங்களை, வார்த்தைகளை, செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.

ஒருவர் எல்லா நேரங்களிலும், பிறந்ததிலிருந்து இறக்கும்வரை ஒரே குணத்தில், ஒரே பண்பில் இருப்பதில்லை.

குணங்கள் எனப்படுபவை மூன்று வகைப்படும்: ஸத்வ, ரஜஸ், தமஸ். ஸத்வ என்பது அமைதி, நிம்மதி, ஆன்மிகம், நன்மை போன்ற நல்ல குணங்களாக வரையறுக்கப்படுகிறது. பொதுவாக, இப் பண்புகள், ஆன்மிகத்தில் முன்னேறும் மக்களிடம் காணப்படும்.

ரஜஸ் என்பது ஆவேசம், உணர்ச்சி வசப்படுவது, சுறுசுறுப்பு போன்ற குணங்களாக வரையறுக்கப்படுகிறது. அரசர்களுக்கும் போர்வீரர்களுக்கும் வியாபாரிகளுக்கும், இதுவே முதன்மை குணமாக இருக்கும்.

தமஸ் என்பது சோம்பல், அறியாமை, மந்தத்தன்மை. சில சமயங்களில், நாம் எல்லோருமே, நமக்குள் இதை, ‘செயலற்ற அம்சமாக’ உணருகிறோம். ஆனால், சாப்பிடுவது, தூங்குவது மட்டுமே வாழ்க்கை என்று இருக்கக் கூடியவர்களுக்கு, இது, ஊக்கத்துடன் ‘செயல்புரியும் அம்சமாக’ இருக்கிறது!

இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர், இம்மூக்குணங்களின் தன்மைகளையும், அவை நம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மிக அழகாக வரையறுத்துக் கூறுகிறார். அவர், இப்படி விளக்குவதற்கான நோக்கம்: நமக்குள்ளே என்ன நிகழ்கிறது என்பதை நமக்கு உணர்த்துவதற்கே.

பெரும்பாலான சமயங்களில், நாம் எதிர்செயல்களைச் செய்துவிட்டு, எதற்காக அப்படிச் செய்தோம் என்பதை அறியாமலேயே இருக்கிறோம். குரு இந்த வார்த்தைகளால் விளக்கியபடி, நம்முடைய எதிர்செயல்களைப் பற்றி நாம் புரிந்துகொண்டு விட்டோமானால், நாம் புரிதலின் அடுத்த நிலைக்கு நகர முடியும், ஒரு மேன்மையான பண்புக்கு உயர முடியும்.

ஆம், சில நேரங்களில் செயல்களைச் செய்து முடிக்க, நாமெல்லாருமே ரஜஸில் இருந்தாக வேண்டியுள்ளது. அவ்வாறு ரஜஸில் இருந்தாலும், நம்மைப் பாதிக்கும் கோபம், பேராசை, அச்சம் மற்றும் பற்றுதல் போன்ற உணர்ச்சிகளுக்காட்படாமல், உத்வேகத்துடன் செயலாற்ற முடிந்தால், நாம் ஸாத்விக நிலையில்தான் இருக்கிறோம், மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, நாம் ரஜஸில் இருப்பதாக தெரிந்தாலும்கூட, நாம் ஸாத்விக நிலையில்தான் இருக்கிறோம்.

தனித்தனி ஜீவன்களிலும் கூட்டு விழிப்புணர்வை, முழுப் பிரபஞ்சத்தைக் காண்பவரே ஒரு ஸாத்விக மனிதர் என்று கிருஷ்ணர் வரையறுக்கிறார். அவர், தாம் ஒரு தனி ஆள் அல்ல. தாம் ஒரு தீவு அல்ல. மாறாக இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொருவரோடும், ஒவ்வொன்றோடுமே தாம் பிணைக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்கிறார், பிரபஞ்ச சக்தியுடனான தம் தொடர்பைப் புரிந்துகொள்கிறார்.

ஒரு ஸாத்விக மனிதர், தன்னைப் பற்றி மாத்திரமே கவனம் கொண்டிருப்பதில்லை. அவர் தம்முடைய வாழ்வு மற்றும் உடைமைகள்

  • நான் மற்றும் எனது என்பனவெல்லாம் அர்த்தமற்றவை என்று உணர்ந்துகொள்கிறார். அவர் தன்னலமில்லாமல், பாராட்டையோ பரிசையோ எதிர்பாராமல், செயல்முறை மீதோ, இறுதிப்பலன் மீதோ பற்றில்லாமலும் செயல்புரிகிறார். அவர், தமது செயல்களை, நான் மற்றும் எனது என்ற உணர்ச்சிகளோடு இணைக்காமல் செய்வதால், வெற்றி தோல்விபோல் தோற்றமளிக்கும் அவற்றின் விளைவுகளாலும் பாதிக்கப்படுவதில்லை.

ஸாத்விக நிலைக்கு உயர்வது என்பது
அப்படியொன்றும் கடினமான ஒரு காரியம்
அல்ல. ஆம், எல்லா நேரமும் நீங்கள்
ஸாத்விக நிலையிலேயே இருக்க முடியாது

என்பது உண்மையே. ஆனால், இந்த நிலை
நீங்கள் விடுதலைபெற உதவுகிறது என்பதை
அறிந்துகொண்டீர்களானால், நீங்கள் அந்த
நிலையிலேயே இருப்பதற்குதான் மேலும்,
மேலும் முயற்சி செய்வீர்கள்.

ஒரு ஸாத்விக மனிதர், தம்மு
டைய வாழ்வு
மற்றும் உடைமைகள்
– நான் மற்றும் எனது
என்பனவெல்லாம்
அர்த்தமற்றவை என்று
உணர்ந்துகொள்கிறார்.

ஸாத்விக நிலையிலேயே நிலைத்திருப்பதற்கு, கடந்தகாலமும் எதிர்காலமும் வெறும் மாயையே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றுக்கு இருப்பு இல்லை. கடந்தகாலம் என்பது ஏற்கனவே முடிந்துவிட்டது. மறுபடியும் திரும்பி வரப்போவதில்லை. அப்புறம் ஏன் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டும்? எதிர்காலம் என்பது வெறும் கானல் நீர். அது இன்னும் நடக்கவேயில்லை. அதற்குள் அதை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும்?

அதனால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நிகழ்காலத்தை மட்டும் உயிர்ப்போடு செயல்படுத்துவதுதான். அதை மட்டுமே உங்களால் செய்ய முடியும்.

நிகழ்காலமே உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. நிகழ்காலத்தில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால், உங்களின் விழிப்புணர்வு பல மடங்கு அதிகரிக்கும். மேலும், உங்களின் எதிர்பார்ப்புகளையும் பற்றுகளையும் விட்டுவிடுவீர்கள். எதைச் செய்ய வேண்டுமோ, அதை மட்டும் செய்வீர்கள். நீங்கள், யதார்த்த நிலைக்கேற்ப செயல்புரிவீர்கள்; நிகழ்காலத்திற்கேற்ப செயல்புரிவீர்கள். நீங்கள் ஸாத்விக நிலையிலிருப்பீர்கள்.

ஆன்மாவைத் தின்றுவிடும் ரஜஸ்

நீ - நான் என்றும், இது - அது என்றும் நீங்கள் வேறுபடுத்தி பார்க்கத் துவங்கும்பொழுது நீங்கள் ரஜஸில் விழுந்துவிடுகிறீர்கள். அப்படியெதும் வேறுபாடேயில்லை. இந்த வேறுபாடுகளை உங்கள் மனமே, உங்கள் அஹங்காரமே உருவாக்குகிறது. உங்களுடைய ஸம்ஸ்காரங்களே உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் க்கொண்டுவருகிறது.

ரஜோ குணமுடைய மனிதர், எந்தவொரு செயலையும் ஒரு பாராட்டை எதிர்பார்த்தே செய்வார். அவர் சுயநலம் மிக்கவராயும், எதையும் எதிர்ப்பவராயும் பொறுமையற்றவராயும் இருப்பார். அவர் விரும்பியது கிடைக்கவில்லையென்றால், அவர் நிலைகுலைந்து போவார். தோல்வி என்பது அவருடைய அஹங்காரத்திற்கு ஒரு மிகப் பெரிய சம்மட்டி அடியாக இருக்கும்.

ரஜோகுணமுள்ள ஒருவர் ஒருபோதும் சந்தோஷமாக இருக்க முடியாது. புரிந்துகொள்ளுங்கள், அனேகமாக உங்களில் எல்லோருமே ரஜஸால்தான் ஆளப்படுகிறீர்கள். இந்த நவீன யுகத்தில் இந்த குணம்தான் மிகவும் மேலோங்கியிருக்கிறது. செல்வந்தரோ ஏழையோ, அறிவாளியோ, முட்டாளோ, படித்தவரோ, படிக்காதவரோ, பெரும்பாலும் ஒவ்வொருவரும் தம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் வைத்திருப்பவை தமக்கும் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.

நீங்கள் ஆசைகளால் ஆளப்படும்வரை,
உங்களிடம் இருப்பதை வைத்து நீங்கள்
திருப்தியடையாதவரை, நீங்கள் ரஜஸில்
இருக்கிறீர்கள். ரஜஸ் உங்களை அரித்து
விடுகிறது. அது உங்கள் ஆன்மாவைத்
தின்றுவிடுகிறது. ஆசை மற்றும் பயத்திற்கு
எல்லையே இல்லை. இவையே ரஜோ
குணத்தை இயக்கும் முக்கிய சக்திகள்.

ரஜஸின் தன்மையாவன: உங்களிடம் எது இல்லையோ, அதை அடைய முயற்சிசெய்வது, உங்களிடம் எது இருக்கிறதோ அதைக் கொண்டு திருப்தியடையாமல் இருப்பது, நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மகிழ்ச்சியில்லாமல் இருப்பது.

ரஜஸ் என்பது எப்போதுமே கற்பனை உலகில் வாழ்வது. ஒன்று, நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையில் இருந்துகொண்டிருப்பீர்கள். அதாவது இனி நீங்கள் என்னவாக ஆக வேண்டும், உங்களுக்கு என்னென்ன வேண்டுமென்பதைப் பற்றிய கற்பனையில் மிதந்து கொண்டிருப்பீர்கள். இல்லையேல், கடந்தகாலத்தில் இருப்பீர்கள், முடிந்துவிட்ட ஒரு செயலைக் குறித்துச் சிந்தித்து, அதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும், வாழ்வை இன்னும் சிறப்பாக வாழ்ந்திருக்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டிருப்பீர்கள்.

இயற்கையின் விதிகளை மதிக்காமல் இருப்பதே தமஸ்

தமஸில் இருக்கும் ஒருவர், முழுவதுமாக மாயையில், அறியாமையில் மூழ்கிக்கிடக்கிறார். தனக்குள் பதிந்திருக்கும் நம்பிக்கைகள், கட்டுப்பாடுகள் அல்லது தான் சேகரித்து வைத்திருக்கும் அறிவு இவற்றை - அவை சரியா, தவறா, தீங்கு விளைவிக்கக்கூடியனவா இல்லையா என்று ஆராய்ந்தறிய முயலாமல் - கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவராக இருப்பார்.

மதவெறியர்களும், கொலை கொள்ளை புரிபவர்களும் தமஸில் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை, அவர்களுடைய நோக்கத்தைத் தவிர! இருவருமே சுயநலவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் ஆணவம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய நோக்கத்தை அடைய எந்த வழிமுறையையும் - கடுமையான குற்றச் செயல்களைப் பின்பற்றவும் தயங்க மாட்டார்கள்.

தமஸ் என்றால் சும்மா இருப்பது, சோம்பேறித்தனம், எந்தக் காரியத்தையும் தள்ளிப்போட்டுக் கொண்டேநிருப்பது மட்டுமல்ல, தாம் அந்த முழுமையின் ஒரு சிறுபகுதியே என்பதை உணர்ந்துகொள்ளாமல் புரியும் இரக்கமற்ற செயலும் அதில் அடக்கம்! அவர்களுடைய அஹங்காரம், அதுவே அனைத்தும் என்று நம்பும் அளவுக்கு பெருத்துப் போயிருக்கிறது. அதற்கு, முக்கியத்துவமானது என்று எதுவுமே கிடையாது. மற்றவர்கள் எதற்குமே பிரயோஜனமற்றவர்கள் என்று நம்புகிறது. மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்று எண்ணி, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஹிட்லர், தமஸ் குணத்தில்தான் மிக ஆழமாக நிலைகொண்டிருந்தான். இயற்கையின் விதிகளை மதிக்காமல், மிகக் கீழ்நிலையிலிருக்கும் தமஸ் ஒரு மோசமான மிருகமே. அவர்களை ஒரு மிருகம் என்றுகூட கூற முடியாது! ஏனெனில், மனிதர்கள் மட்டுமே தமஸில் இருக்க முடியும். மிருகங்கள் ஒருபோதும் தமஸில் இருக்க முடியாது. ஏனெனில், இயற்கையின் புத்திசாலித்தனத்தால் அவை வழிநடத்தப்படுகின்றன!

நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்களா?

கேள்வி: நான் ஒரு நித்ய தியான சிகிச்சையாளர். நான் தினமும் நித்ய தியானம் செய்து வருகிறேன். என்னுள், பற்றற்ற தன்மையோடுகூடவே, எச்செயலைச் செய்வதற்கும் விருப்பமற்ற தன்மையும் இருந்து வருவதைக் காண்கிறேன். நான் சோம்பேறித்தனத்தில் விழுந்து கொண்டிருக்கிறேனோ என்று பயமாயிருக்கிறது. நடந்து கொண்டிருப்பது என்ன?

பதில்: நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்கள். கவலை வேண்டாம். என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

அரசியல், மத இயக்கங்கள் மற்றும் பிற இயக்கங்கள் வடிவில், பயம் மற்றும் பேராசை மூலமாக உங்களைக் கட்டுப்படுத்த, சமுதாயம் முயற்சிசெய்து கொண்டிருக்கிறது.

பயமும் பேராசையும், உங்கள் நிறைவுத்தன்மையை வெளியுலகில் தேடுமாறு செய்கின்றன.

இந்த இயக்கங்கள், நீங்கள் பயத்தாலும்
ஆசைகளாலும் தூண்டப்படாவிட்டால்,
நீங்கள் பயனுள்ளவராகவும் செயல்திறன்
உடையவராகவும், உபயோகமிக்கவராகவும்
இருக்கமாட்டீர்களென்று நம்புகின்றன.
நீங்கள் யாருக்காக பயன், செயல்திறன்
மற்றும் மதிப்பும் உடையவராக இருக்க
வேண்டும்? இது நிச்சயமாக, உங்கள்
சொந்த ஆத்மாவுக்கு நன்மை செய்யாது. இந்த
இயக்கங்களே இதனால் பயன்பெறுகின்றன.

எண்ணங்களின்
அடிப்படையில்
செயல்படுவதையும்,
அவற்றுக்கு அர்த்தங்களை
தேடிக் கொண்டிருப்பதையும்
உடனே நிறுத்துங்கள்.
எண்ணங்களின்
மூலத்தைத்
தேடிக் கண்டுபிடியுங்கள்.

பயமும் பேராசையும், உங்கள்
நிறைவுத்தன்மையை வெளியுலகில்
தேடுமாறு செய்கின்றன. நீங்களும் உங்கள்
எண்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும்
ஏற்ப செயல்படவே விரும்புகிறீர்கள்.
ஆனால், ஒருபோதும் இவற்றை
திருப்திசெய்ய முடியாது. நீங்கள் இதற்கு
முன், அந்த ஆசைகளையும் பயங்களையும்
எத்தனை முறை அனுபவித்திருக்கிறீர்கள்
என்பது ஒரு பொருட்டே அல்ல, அதே
ஆசைகளும் பயங்களும் உங்களுக்குள்
திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டேதான்
இருக்கும்.

நீங்கள் உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும்போது, ரஜஸில் இருக்கிறீர்கள். மக்கள் கேட்பதுண்டு “என் எண்ணங்களுக்கு ஏற்ப நான் செயலாற்றாமலிருந்தால், நான் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? என் செலவுகளுக்கு யார் பணம் தருவார்கள்?”

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சாப்பிடும் உணவையெல்லாம் இரத்தமாக மாற்றிக்கொள்ளக் கூடிய ஒரு தானியங்கி அமைப்பை கொடுத்திருக்கிற இயற்கை சக்தியானது, உங்களுக்கு உணவு கிடைப்பதற்கும் அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிடுமா?

நீங்கள் உயிர்வாழத் தேவையான மிக அத்தியாவசியமான விஷயங்கள் எதையும், இயற்கை உங்கள் பொறுப்பில் விட்டு வைக்கவில்லை. அதனால்தான் மிக அத்தியாவசியமான நிகழ்வுகளான சுவாசம், உடல் வளர்ச்சி, ஜீரணம் போன்றவை உங்கள் தலையீடு இல்லாமலேயே தானாகவே நிகழ்கின்றன!

உங்கள் எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுவதை உடனே நிறுத்துங்கள். அவற்றுக்கு அர்த்தங்களை தேடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். அதற்குப் பதிலாக எண்ணங்களின் மூலத்தைத் தேடிக் கண்டுபிடியுங்கள். உதாரணத்திற்கு, உங்களுக்குப் பசி எடுத்தால், அந்த எண்ணத்தை உதாசீனம் செய்துவிடுங்கள். உங்களுடைய உடல் தாங்க முடியாத பசியை உணரும்போது, அது அந்த உணவை, தானாகவே தன் தேவைக்கேற்றபடி தேடிக் கொள்ளும். நீங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தை வைத்து செயல்படுவதை நிறுத்தும்போது, நீங்கள் தமஸ் என்னும் மந்தத்தன்மையில், செயலற்ற தன்மையில் விழுவீர்கள். நீங்கள் குறிப்பிடும் பயம் இதுவே. இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் பரபரப்புத்தன்மை மற்றும் பேராசைமேல் ஏற்பட்ட வெறுப்பை, பகுத்தாராய்ந்து அகற்றும்வரை, நீங்கள் அந்த செயலற்ற மனோ நிலையில் இருப்பீர்கள். அப்படி ஒருமுறை நிகழ்ந்துவிட்டால் போதும், தமஸ் என்னும் மந்தத் தன்மையிலிருந்து வெளியே வந்துவிடுவீர்கள். தமஸ் தூய்மையாக்கப் பட்டுவிடும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நினைப்பதுபோல தமஸிலிருந்து

நீங்கள் மையத்தில் நிலை கொள்ளும்போது, நீங்கள் சிவமாக இருக்கிறீர்கள்.

ரஜஸுக்கும், பிறகு ரஜஸிலிருந்து ஸத்வத்திற்கும் நகருவதில்லை. நீங்கள் மந்தத் தன்மையிலிருந்து பரபரப்புத்தன்மைக்கும், அதற்குப் பிறகு அமைதிக்கும் நகருவதில்லை.

நீங்கள் ஆரம்பிப்பதே ரஜஸிலிருந்துதான்.
‘இச்செயலுக்கான கர்த்தா நானே’ என்னும்
மனநிலையிலிருந்து உங்கள் தினசரி
நடவடிக்கைகளை மேற்கொள்வது,
உங்களின் எண்ணங்கள் மற்றும்
வார்த்தைகளுக்கான அர்த்தங்களை
நிறைவேற்ற விரும்புவது - என்று நீங்கள்
ரஜஸிருந்தே ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்கள் அர்த்தத்தைத் தேடுவதை நிறுத்தும்பொழுது, உங்கள் எண்ணங்களின் மூலத்தைத் தேடும் ஸாத்விக நிலைக்கு நகர மாட்டீர்கள். அதற்குமுன், நீங்கள் தமஸ் என்னும் மந்தத் தன்மையில் விழுவீர்கள். பொதுவாக இது, ஒரு மிகக் குறுகிய காலத்திற்குத்தான் இருக்கும். அப்பொழுது நீங்கள் உங்களின் உள்மனம் குணமாவதின் விளைவை உணர்வீர்கள். பிரபஞ்சம் உங்களை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் இருப்பு, என்றென்றும் மையத்தில்தான் நிலைகொண்டுள்ளது. உங்கள் மனம், என்றென்றும் வெளி விளிம்பில்தான் நிற்கிறது. உங்கள் மனம், புலன்களால் வழிநடத்தப்பட்டு, தொடர்ந்து வெளியிலேயே தேடிக்கொண்டிருக்கிறது. உங்கள் இருப்பு, உங்களை உள்நோக்கி இழுக்கிறது. இப்படி நீங்கள் மையத்துக்கும், விளிம்புக்குமாக முன்னும் பின்னுமாக தொடர்ந்து அலைகழிக்கப்படுகிறீர்கள். நீங்கள் விளிம்பில் இருக்கும்போது, உண்மையிலேயே நீங்கள் ஒரு பைத்தியமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் பயத்தாலும் பேராசையாலும் பாதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் காமத்தாலும், அதிகாரம் மற்றும் செல்வம் மீதான ஆசையாலும் மூழ்கடிக்கப்படுகிறீர்கள்.

நீங்கள் மையத்தில் நிலை கொள்ளும்போது, நீங்கள் சிவமாக இருக்கிறீர்கள். நீங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வில் இருக்கிறீர்கள்.

சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த
இரண்டிற்கும் இடைப்பட்ட ஏதோவொரு
இடத்தில் இருப்பதற்கான திறமையை
வளர்த்துக்கொள்கிறீர்கள். இதைத்தவிர
உங்களுக்கு வேறுவழியும் இல்லை;
வாய்ப்பும் இல்லை.

நீங்கள் இதுபோன்ற அரைப் பைத்திய நிலையையே தேர்ந்தெடுத்தாக வேண்டும். ஏனெனில், உங்கள் மனம் உங்களை மையத்தில் நிலைகொள்ள அனுமதிப்பதில்லை. மையத்திலுள்ள ஆனந்தத்திற்கும், வெளி எல்லையிலுள்ள மாயை மயக்கங்களுக்குமாக, முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருக்கும், ஒருவித விசித்திர தன்மையுடையவர்களாக ஆகிவிடுகிறீர்கள்.

நீங்கள் வெளிவிளிம்பில் இருக்கும்பொழுது, உங்கள் புலன்கள், உங்களை மகிழ்ச்சியுடையவராக ஆக்குகின்றன. நீங்கள் புத்திசாலியாக இருந்தால், ஏதோவொரு சமயத்தில், நீங்கள் எதையும் சென்றடையவே இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் புலன்கள், உங்களை எங்கெல்லாம் இழுத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் சென்று, அங்குக் கிடைக்கின்ற விஷயங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள். சிறிது காலம் சென்ற பின்பு, அந்த மகிழ்ச்சி குறைகிறது. உங்களுக்கு மேலும் மேலும் அதிக அளவு மகிழ்ச்சியே தேவைப்படுகிறது, ஆனால், உங்கள் மகிழ்ச்சியின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. அதற்கே அடிமையாகிவிடும் நிலைக்கு வந்துவிட்டீர்கள். அப்போது உங்களுக்குள் இருக்கும் ஒரு சிறிதளவு புத்திசாலித்தனம், உங்களை உடனே இந்த மாயையிலிருந்து வெளியேற்றிவிட எச்சரிக்கை செய்கிறது.

அப்பொழுது நீங்கள், விளிம்பிலிருந்து நகர்ந்து, ஒருசில கணங்களுக்கேனும் மேலான அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்ற மையத்தை நோக்கி நகர முயற்சி செய்வீர்கள். ஆனால், உங்கள் விழிப்புணர்வு அதிக நேரம் நீடிப்பதில்லை. உங்கள் மனம் அமைதியற்று நிலைகொள்ளாமல் பழைய வழிகளுக்கே திரும்பிவிடுகிறது. நீங்கள் மீண்டும் விளிம்புக்கே திரும்பிச் செல்கிறீர்கள்.

புரிந்துகொள்ளுங்கள். வெளி விளிம்பில் இருக்கும்பொழுது, நீங்கள் உயிர் வாழவேண்டுமென்ற கட்டாயத்தின் பிடியிலும், உடைமைகளை மேலும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தின் பிடியிலும் சிக்கிக்கொள்கிறீர்கள். அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் மற்றும் உடைமைகளைச் சேகரித்துக்கொள்ளும் பேராசை - இந்த இரண்டு பலமான கயிறுகளே உங்களை வெளி விளிம்பை நோக்கி இழுக்கின்றன.

மற்றவர்களோடு உங்களுக்குள்ள தொடர்பை அறிந்துகொள்ளும் பொழுது, உங்களின் அஹங்காரம் குறைகிறது. அவர்களோடு போட்டிபோட்டுக் கொண்டிருப்பதைவிட, சேர்ந்து ஒத்துழைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். மேலும், மேலும் உடைமைகளைச் சேர்த்துக்கொண்டே செல்வதற்குப் பதிலாக, உங்களிடம் இருப்பதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டுமென்ற தெளிவை வளர்த்துக் கொள்ளும்போது, உடைமைகளைச் சேர்க்க வேண்டுமென்ற உங்கள் ஆசை குறைந்து போகிறது.

விசித்திரமானவராக இருப்பதை விட்டுவிட்டு மையத்தில் நீண்ட நேரம் நிலைகொள்பவராக ஆகும்பொழுது, நீங்கள் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் விட்டுவிட்டு நிகழ்காலத்திற்குள் நுழைகிறீர்கள். நீங்கள் துன்பங்களிலிருந்து விலகி ஆனந்தத்திற்குள் நுழைகிறீர்கள்.

hands playing flute