KAILASA Library/பகவத்‌கீதை/அருஞ்சொற் பொருள்Sign in
பகவத்‌கீதை

அருஞ்சொற் பொருள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அக்நி - தீ

அங்குலீ-மால் - நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார்.

அஞ்ஜந - கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிறமை.

அத்வைத - இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத'மும் கருதுகிறது.

அநாஹத - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம்

அப்யாஸ - தொடர்ந்த பயிற்சி

அம்ரு'த - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம்

அண்ணாமலை ஸ்வாமிகள் } - ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர்

அஹிம்ஸ - துன்புறுத்தாமை

அபரிக்ரஹ - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை

அஷ்டவக்ர - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்தியாவின் பழங்கால ஞானி.

அஷ்டாங்கயோக - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.

ஆகாச' - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி.

ஆசார்ய - ஆசிரியர், 'உடன் வருபவர்'

ஆதார - அடிப்படை

ஆத்ம, ஆத்மந்- தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ஷட்கம்- ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகலைக்கொண்ட செய்யுள்
ஆனந்த- நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும்
ஆபரண- அணிகலன்
ஆபஸ்- நீர்
ஆரதி- தீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச்'ரய- உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச்'ரய தோஷ- உண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆசீர்வாத்- ஆசீர்வாதம்
ஆஹார- உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞா- ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இச்சா- ஆசை
இடா- பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
இதிகாள- ராமாயணம், மஹாபாரதம்
உத்தராயண- சூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்- ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல்
க்ரியா- செயல்
க்ரு'ஹஸ்த- கிருஹ - குடும்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கதாயுதம்- தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்
கர்மா- ஆன்மீக விதியின்படி காரண விளைவு
கல்ப- வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி
கல்பநா- கற்பனை
கால- நேரம்
காண்டவ- மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில்
குண்டலினி- மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண- சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்பமேளா- பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு- ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்
குருகுல்- குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
குஷ- வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்ய- விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோபிகைகள்- இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம்

தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள்.

கோபுர - கோயில் கோபுரம்

கோயந் - ஜெயின் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர்.

கோவிந்த பாத - ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் ஞான குரு.

கோச' - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன.

  1. அன்னமய அல்லது உடல் அடுக்கு
  1. பிராணமய அல்லது பிராண அடுக்கு
  1. மனோமய அல்லது எண்ண அடுக்கு
  1. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
  1. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு

சக்ரம் - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்

சண்டாள - தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன்.

சந்தந - சந்தனமரம்

சக்ஷு - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்

சித்த - மனம், மேலும் மனஸ், புத்தி

சித்ரகுப்த - ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாபாத்திரம்

சைதன்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி

டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர்

த்ரி காலம், - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.

த்ரி கால ஜ்ஞானி - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர்

தந்த்ரா - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்

தபஸ் - தீவிர ஆன்மீக முயற்சி.

தமஸ் - மந்தத் தன்மை அல்லது செயலின்கை போன்ற

குணம்
தீர்த-நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸமாதி-சமாதி நிலை, மனமற்ற நிலை
த்ரு'ஷ்டி-பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்யான-ஆழ்ந்த சிந்தனை
தர்ச'ந்-காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தர்ம-நேர்மையான
தக்ஷிணாயன சூரியனின்-ஜூன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம்
தீ-விவேகம்
தீக்ஷை-தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தோஷ-குறைபாடு
நசிகேத-கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நடராஜ-சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள்
நமஸ்கார்-இரண்டு கைகளையும் கூப்பி பரம்பாையாக வரவேற்கும் முறை
நதி-ஆறு
நாக-பாம்பு
நாக ஸாது-ஆடைகள் அணியாத ஒரு வகை துறவியர்கள்
நாடி-நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாதை
நாரீ-பெண்மணி
நாந்த-முடிவில்லாத
நிதித்யாஸநா-வெளிப்படுத்தியவை
நிமித்த-காரணம்
நிமித்த தோஷ-காரணத்தை அடிப்படையாகக்

கொண்டகுறைபாடு

நியம - பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.

நிர்வாண, ஸமாதி - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது

நிஸர்கதத்தமஹராஜ் - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞான குரு செப்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார்

ப்ரத்யாஹார - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.

ப்ராண - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்

ப்ராணாயாம - மூச்சை அடக்குவது

ப்ரு'த்வீ - பூமி சக்தி

பதஞ்சலி - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்

பரமஹம்ஸ - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக்குறிக்கும்

பரமஹம்ஸ யோகாநந்த } - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு.

பரிக்ரம - ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு

பரிவ்ராஜக - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)

பல - பல ச்'ருதி - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்

பாப - பாவம்

பிங்கள - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை

பிரகாச'நந்த ஸரஸ்வதி } - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்கீதையை அடிப்படையாகக் கொண்டவை.

пуன்ய - சிறப்பு, நன்மை செய்தல்

புத்ர - மகன்

புரோஹித் - அர்ச்சகர்

பூர்ண - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.

பூஜா - ஒரு வகையான சடங்கு வழிபாடு.

ப்ர்ஹ்மந் - தெய்விகத்தின் முடிவான ஸத்யம், பிரபஞ்சப் பேராற்றல்

ப்ர்ஹ்ம - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ர்ஹ்மன்

ப்ர்ஹ்மசர்ய - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்

ப்ர்ஹ்மசாரீ - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்

பக்தர் - பக்தன்

பக்தி - உணர்வு வழிபாடு

பகவாந் - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி

பாகவதம் - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்

பாவந - கற்பனை

பிக்பேங் (Bigbang) - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி

பீஜ - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.

புத்த - 'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு

புத்தி - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

புத்து - முட்டாள்

மங்கல - நன்னிமித்தமான

மங்கல ஸூத்ர - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு मंत्र - ஒரு சப்தம், ஒரு ஸ்தோத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை

மந்திர் - கோயில்

மநந - சிந்தித்தல், தியானம்

மநஸ் - மனம் மேலும் புத்தி, சித்தா

மஹரிஷி - மிகப்பெரிய ஞானி

மஹா - மிகப்பெரிய

மஹாவாக்ய - மிகப்பெரிய வேத வாக்கியம்

மாணிக்கவாசகர் - நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய ‘திருவாசகம்’ இயற்றியவர்.

மாயா - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.

மாலா - மாலை

மீமாம்ஸா - பழங்கால இந்திய தத்துவத்தின் ஒழுங்கு முறை

மூலாதார் - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான

மோக்ஷ - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே

யம - நீதி மற்றும் மரணத்தின் கடவுள்

யம - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.

யந்த்ர - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்வக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்

யோக - இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.

யுக - இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன.

  1. ஸத்ய
  1. த்ரேதா
  1. த்வாபர
  1. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)

ரக்த - இரத்தம்

ரஜஸ் - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.

ரமண மஹரிஷி - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையைப் புகழ்ந்து பாடும் ‘அக்ஷரமணமாலை’யை நமக்குத் தந்தவர்.

ராத்ரி - இரவு

இராமகிருஷ்ண பரமஹம்ஸ } - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தகஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு.

ராமாயண - இந்தியாவின் மிகச்சிறந்த இதிகாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.

ராவண - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், இந்தியாவின் இதிகாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்.

ரிஷி - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.

ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை.

லாவோட்ஸ்ீ - ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. ‘மூன்று தூய்மையானவரில் ஒருவர்’ என்று குறிப்பிடப்படுகிறார்.

വർണ - வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.

வானப்ரஸ்த - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலட்சியத்தில் கவனம் செலுத்துதல்.

வாயு - காற்று

வாஸந - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.

வித்யா - அறிவு, கல்வி

வால்மீகி - புகழ் பெற்ற இதிகாஹஸமாகிய இராமயணத்தை எழுதியவர்

விதி - சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி

விபூதி - இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு

விவேகாநந்த - இந்தியாவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.

விச்'வரூப - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்

விஷ்ணு - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.

விஷாத- மனச் சோர்வு, தடுமாற்றம்
வைச்'ய- வணிகர்களின் சாதி அல்லது வர்ணம்
வேத- ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச்'ருதி என்பார்கள்.
ஸ்தோத்ர- பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி- ‘எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது’ என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரண- நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி- உருவாக்குதல்
ஸ்வதந்த்ர- சுதந்திரமான
ஸ்வப்ந- கனவு
ஸ்வாதிஷ்டாந- மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ஸங்கல்ப்ப- முடிவு
ஸந்யாஸீ- துறவி
ஸத்ய- ஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ- ஆன்மீக அமைதி
ஸம்ச'ய- சந்தேகம்
ஸம்யம- முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார- கர்மச் சக்ரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்
ஸமாதி- மனம் கடந்த நிலை, ஞான நிலை
ஸஹஸ்ரார- ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம்
ஸஹஸ்ர நாமா- கடவுளின் 1000 நாமங்கள்
ஸாங்க்ய- ஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று
ஸாதனா- பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி
ஸாது- நல்ல மனிதர், கடுந்துறவி, ஸந்யாஸி.
ஸித்தி- ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.
ஸிம்ஹ- சிங்கம்
ஸிம்ஹ ஸ்வப்னா- பயங்கரக் கனவு
ஸுமேரியன் நாகரிகம்- 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம்.
ஸ்வாடிஷ்டானா- ‘இருப்புத் தன்மை’ நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.
ச்'ரவண- கேட்டல்
ச்'ருதி- ‘கேட்டது எதுவோ அது’ என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது.
ச'க்தி- சக்தி, அறிவு சக்தி
ச'ங்கர- கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர்.
சா'ஸ்த்ர- புனித நூல்கள்
சி'வ- மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை.
சி'ஷ்ய- சீடன்.
சூ'த்ர- உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வர்ணம்.
சூ'ந்ய- பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஜ்ஜயோதிஷ- ஜோதிடம்
ஜோதிஸி- ஜோதிடர்
ஜனகராஜா- மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிகாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.
ஐசிங்- மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.
ஜப- தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜராதுஸ்டரா- பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.
ஜாக்ரத்- விழிப்பு நிலை
ஜாதி- பிறப்பு
ஜாதி தோஷ- பிறப்பில் உள்ள குறைபாடு
ஜீவ- வாழ்தல்
ஜீவஸமாதி- ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
ஹடயோக- யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது.
ஹம்மரபி- Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசர் புகழ்பெற்றார்.
ஹோம- அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகασ சக்தியை... வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய- படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம்
க்ஷண- க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்

அத சதுர்தோऽத்யாய:

நான்காவது அத்தியாயம்

ஜ்ஞானகர்மஸந்ந்யாஸயோக:

ஞானகர்மஸந்யாஸ யோகம்

ஸ்ரீபகவாநுவாச

இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம் /
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநூரிக்ஷ்வாகவேऽப்ரவீத் // 4.1

ஸ்ரீபகவாநுவாச - ஸ்ரீ பகவான் சொன்னது ; இமம் - இந்த ; விவஸ்வதேசூரியனுக்கு; யோகம் - யோக அறிவியலை ; ப்ரோக்தவாந் - உபதேசித்தே ன் ; அஹம் - நான் ; அவ்யயம் - அழிவற்ற ; விவஸ்வாந் - சூரியன் ; மநவே - வைவஸ்வத மனுவுக்கு ; ப்ராஹ - சொன்னார் ; மநூ: - மனு; இக்ஷ்வாகவே - இஷ்வாகு மன்னனுக்கு; அப்ரவீத் -சொன்னார்

பகவான் சொன்னது

4.1 இந்த அழிவற்ற யோக அறிவியலை நான் சூரியக் கடவுளான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத்தின் தந்தையாகிய மனுவுக்கு உபதேசித்தார். மனு இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்தார்.

...........................................................................................................................

ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது: /
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப // 4.2

ஏவம் - இவ்விதம் ; பரம்பராப்ராப்தம்- வழிவழியாக வந்த ; இமம் - இந்த யோகத்தை ; ராஜர்ஷய: - ராஜரிஷிகள் ; விது: - அறிந்திருக்கிறார்கள் ; ஸ: - அந்த ; காலேந - காலமாக ; இஹ - இவ்வுலகில் ; மஹதா - வெகு; யோக: - யோகம் ; நஷ்ட: - மறைந்தாற் போல் ஆகிவிட்டது; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே

4.2 இந்த மிக மேலான யோகம் குரு-சிஷ்ய பாரம்பரிய தொடர்ச்சியின் மூலம் பெறப்பட்டது. ராஜரிஷிகள் அவ்வழியேதான் இதனை அறிந்து கொண்டார்கள். காலப்போக்கில் இந்தப் பாரம்பரிய சங்கிலி உடைக்கப்பட்டுவிட்டது. அதனால் இந்த யோக அறிவியல் தொலைக்கப்பட்டுவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

ஸ ஏவாயம் மயா தேऽத்ய யோக: ப்ரோக்த: புராதன: /
பக்தோऽஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் // 4.3

ஸ: ஏவ - அதே ; அயம் - இந்த ; மயா - என்னால்; தே - உனக்கு ; அத்ய - இன்று ; யோக: - யோகம் ; ப்ரோக்த: - சொல்லப்பட்டது ; புராதன: - பழமையான ; பக்த: - பக்தனும் ; அஸி - நீ இருப்பதால்; மே - என்னுடைய ; ஸகா ச - உற்ற நண்பனும் ஆவாய் ; இதி - ஆகவே ; ரஹஸ்யம் - ரஹஸ்யமானது; ஹி - ஏனெனில்; ஏதத் - இந்த யோகம் ; உத்தமம் - மிகச் சிறந்தது

4.3 நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருப்பதால், ஜீவன் புக்தியை அடையும் அந்தப் பழமையான அறிவியல், நித்யானந்தத்தில் நுழையும் அந்தப் பழமையான அறிவியல் இன்று என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது. இந்த அறிவியலின் மேலான புதிர்களை நீ நிச்சயமாகப் புரிந்துகொள்வாய்.

அர்ஜுந உவாச

அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத: /
கதமேதத் விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி // 4.4

அர்ஜூந உவாச - அர்ஜூனன் சொன்னது ; அபரம் - பிற்காலத்தது ; பவதக: - உங்களுடைய ; ஜந்ம - பிறப்பு ; பரம் - வெகு காலத்துக்கு முன்பு ஏற்பட்டது; ஜந்ம - பிறப்பு ; விவஸ்வத: - சூரியனுடைய; கதம் - எவ்வாறு ; ஏதத் - இந்த விஷயத்தை; விஜாநீயாம் - புரிந்துகொள்வது; த்வம் - நீங்கள் ; ஆதௌ - கல்பத்தின் ஆதியில் ; ப்ரோக்தவாந் - உபதேசித்தீர்கள்; இதி - என்ற

அர்ஜூனன் சொன்னது

4.4. கிருஷ்ணா! பிறப்பால் நீங்கள் சூரியக் கடவுளாகிய விவஸ்வானுக்கு இளையவர். ஆனால் கல்ப ஆரம்பத்திலேயே நீங்கள் இந்த யோகத்தை அவருக்கு உபதேசித்தீர்கள் என்பதை நான் எவ்வாறு புரிந்துகொள்வது?

ஸ்ரீபகவானுவாச

பஹூனி மே வ்யதீதானி ஜன்மானி தவ சார்ஜுன /
தான்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப // 4.5

ஸ்ரீபகவானுவாச - ஸ்ரீ பகவான் சொன்னது ; பஹூனி - பல ; மே - எனக்கும் ; வ்யதீதானி - கழிந்து விட்டன ; ஜன்மானி - பிறவிகள் ; தவ ச - உனக்கும் ; அர்ஜுன - அர்ஜூனா ; தானி - அவற்றை; அஹம் - நான் ; வேத - அறிவேன்; ஸர்வாணி - எல்லாவற்றையும் ; த்வம் - நீ ; ந வேத்த - அறியமாட்டாய் ; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே

பகவான் சொன்னது

4.5 ஓ பரந்தப! நீயும் நானும் நிறைய பிறப்புகளைக் கடந்து இருக்கிறோம். அவை எல்லாவற்றையும் என்னால் நினைவில் வைக்க முடியும். ஆனால்உன்னால் முடியாது!

அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதானாமீஶ்வரோऽபி ஸந் / ப்ரக்ரு'திம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா // 4.6

அஜ: - பிறப்பற்றவனாகவும் ; அபி - இருந்தும் ; ஸந் - கூட ; அவ்யயாத்மா - அழிவற்றவனாகவும்; பூதானாம் எல்லா உயிரினங்களுக்கும்; ஈஶ்வர: - ஈசுவரனாக ; அபி - இருந்தும்; ஸந் - கூட; ப்ரக்ரு'திம் - பிரகிருதியை ; ஸ்வாம்- என்னுடைய ; அதிஷ்டாய - வசப்படுத்திக் கொண்டு ; ஸம்பவாமி - வெளிப்படுகிறேன் ; ஆத்மமாயயா - என்னுடைய யோக மாயையினால்

4.6 நான் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் கடவுளாகவும் பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருந்தாலும் கூட, என் இயல்பை ஆண்டுகொண்டு என் மாயா ஶக்தியினால் மீண்டும் அவதரிக்கிறேன்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத /
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரு'ஜாம்யஹம் // 4.7

யதா யதா - எப்பொழுதெல்லாம் ; ஹி - எல்லாம் ; தர்மஸ்ய - தர்மத்திற்கு ; க்லானி: - குறைவும் ; பவதி - ஏற்படுகின்றனவோ ; பாரத - பரதக்குலத் தோன்றலே ; அப்யுத்தானம் - ஓங்குதலும் ; அதர்மஸ்ய - அதர்மத்தின்; ததா - அப்போது; ஆத்மானம் - என்னை ; ஸ்ரு'ஜாமி - தோற்றுவித்து க்கொள்கிறேன்; அஹம் - நான்

4.7 கூட்டு நேர்மறை உணர்வு நிலை குறைந்து, கூட்டு எதிர்மறை உணர்வு நிலை அதிகரிக்கும் சமயங்களில் நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறேன்.

பரித்ராணாய ஸாதூநாம் விநாசா'ய ச துஷ்க்ரு'தாம் /
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே // 4.8

பரித்ராணாய - கடைத்தேற்றுவதற்காகவும்; ஸாதூநாம் - ஸாதுகளை ; விநாசா'ய ச - அழிப்பதற்காகவும் ; துஷ்க்ரு'தாம் - பாவச் செயல்களைச் செய்பவர்களை ; தர்மஸம்ஸ்தாபநார்தாய - தர்மத்தை நன்கு நிலை நாட் டுவதற்காகவும் ; ஸம்பவாமி - வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்; யுகே யுகே - யுகந்தோறும்

4.8 பக்தி உடையவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் நேர்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் நான் காலங்காலமாக, மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்.

ஜன்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்தவத: /
த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோயர்ஜுந // 4.9

ஜன்ம - பிறப்பும் ; கர்ம ச - செயலும் ; மே - என்னுடைய ; திவ்யம் - தெய்வீகமானவை ; ஏவம் - இவ்விதம் ; ய: - எவன் ; வேத்தி - அறிந்துகொள்கிறானோ; தத்தவத: - தத்வ ரீதியாக ; த்யக்த்வா - துறந்து ; தேஹம் - உடலை ; புந: - மீண்டும் ; ஜன்ம - பிறவியை ; ந ஏதி - அடைவதில்லை ; மாம் - என்னையே ; ஏதி - அடைந்துவிடுகிறான்; ஸ: - அவன் ; அர்ஜுந - அர்ஜூனா 4.9 எனது தெய்வீக தோற்றம் மற்றும் செயல்களைப் பற்றி அறிந்தவர்களும், அதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களும் உடலை விட்ட பிறகு, இந்தப் பொருள் சார்ந்த உலகில் மீண்டும் பிறப்பதில்லை.

ஆனால் என்னை அடைகிறார்கள் அர்ஜூனா!

வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாச்'ரிதா: /
பஹவோ ஜ்ஞானதபஸா பூதா மத்பாவமாகதா: // 4.10

வீதராகபயக்ரோதா: - விருப்பம் பயம் கோபம் இவை அறவேயற்றவர்களும் ; மந்மயா - வேறெதிலும் நாட்டமில்லாமல் என்னிடமே பிரேமையுடன் ஒன்றியவர்களும் ; மாம் உபாச்'ரிதா:- என்னையே புகலாகக் கொண்டவர்களுமான; பஹவ: - பலரும்; ஜ்ஞானதபஸா - ஞானம் என்னும் தவத்தினால் ; பூதா: - தூயவர்களாகி; மத்பாவம் - என் ஸ்வரூபத்தை ; ஆகதா: - அடைந்திருக்கிறார்கள்

4.10 பந்தம், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவர்களாய், என்னையே நினைத்துக் கொண்டிருப்பவர்களாய், என்னையே அடைக்கலம் அடைந்தவர்களாய் இருந்த பலர், என்னை அறிந்ததனாலும் உணர்ந்ததனாலும் புனிதமடைந்து என்னையே அடைந்தார்கள்.

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் /
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வச': // 4.11

யே - எந்த பக்தர்கள் ; யதா- எவ்விதம் ; மாம் - என்னை ; ப்ரபத்யந்தே

  • வழிபடுகின்றார்களோ ; தாந் - அவர்களை ; ததா ஏவ - அதற்கேற்பவே ; பஜாமி - அணுகுகிறேன். அஹம் - நானும் ; மம - என்னுடைய ; வர்த்ம
  • வழியை ; அநுவர்தந்தே- பின்பற்றுகிறார்கள்; மனுஷ்யா: - எல்லா மனிதர்களும் ; பார்த - பார்த்தா ; ஸர்வச': - எல்லா விதங்களிலும்

4.11 ஓ பார்த்தா! என்னைச் சரண் அடைபவர்களின் இயல்பைப் பொறுத்து, அவர்கள் எந்த வழியில் என்னிடம் பக்தியாக இருக்கின்றார்களோ, அந்த வழியில் நான் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிகிறேன். என்னையே நான் அவர்களுக்கு வெளிக்படுத்திக் காட்டுகிறேன்.

காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா: /
க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா // 4.12

காங்க்ஷந்த: - விரும்புகிறவர்கள் ; கர்மணாம் - கர்மங்களின்; ஸித்திம் - வெற்றி ; யஜந்தே - வழிபடுவார்கள் ; இஹ - இந்த உலகில் ; தேவதா: - தேவதைகளை; க்ஷிப்ரம் - விரைவில்; ஹி - அதன் காரணமாக; மானுஷே லோகே - மானிட உலகில் ; ஸித்தி: - வெற்றி ; பவதி - கிடைத்துவிடுகிறது; கர்மஜா: - கர்மங்களினால் விளையும்

4.12 இந்த உலகில் உள்ள மனிதர்கள் செயல்கள் மூலம் வெற்றியையே பெற விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் கடவுளை வழிபடுகிறார்கள்.

அவர்கள் இந்த உலகத்தில் ஊக்கமுள்ள செயலைச்செய்து உடனடியாகப் பலனைப் பெறுகிறார்கள்.

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ரு'ஷ்டம் குணகர்மவிபாகச' : /
தஸ்ய கர்தாரமபி மாம் வித்யாகர்தாரமவ்யயம் // 4.13

சாதுர்வர்ண்யம் - நான்கு வர்ணங்கள் கொண்ட சமுதாயம்; மயா - என்னால் ; ஸ்ரு'ஷ்டம் - படைக்கப்பட்டது ; குணகர்மவிபாகச : - குணங்களையும் கர்மங்களையும் ஒட்டிய பிரிவுகளாக ; தஸ்ய - அந்த ; கர்தாரம் அபி - கர்த்தாவாக இருந்த போதிலும் ; மாம் - என்னை ; வித்தி - அறிவாயாக ; அகர்தாரம் - கர்த்தா அல்லன் என்றே ; அவ்யயம் - அழிவற்ற

4.13 மூன்று இயல்புகள் அல்லது குணங்கள், செயல்கள் இவற்றின் பங்கீட்டைப் பொறுத்து, நான் நான்கு ஜாதிகளை உருவாக்கி உள்ளேன். இருப்பினும் நான் செயலைச் செய்யாதவன், மாறாதவன்.

ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ரு'ஹா /
இதி மாம் யோऽபிஜானாதி கர்மபிர்ந ஸ பத்யதே // 4.14

ந - இல்லை; மாம் என்னை ; கர்மாணி - கர்மங்கள்; லிம்பந்தி - ஒட்டுவது ; ந - இல்லை; மே - எனக்கு ; கர்மபலே - கர்மங்களின் பயன்களில் ; ஸ்ப்ரு’ஹா - ஆசை; இதி - இவ்விதம் ; மாம் -என்னை ; ய: - எந்த மனிதன் ; அபிஜானாதி - அறிந்துகொள்கிறானோ ; கர்மபிஃ - கர்மங்களால் ; ந - இல்லை; ஸ: - அவனும்; பத்யதே - கட்டப்படுவது

4.14 எந்தச் செயலாலும் நான் பாதிக்கப்படுவதில்லை. அந்தச் செயல்களின் பலன்களில் எனக்கு ஆசையும் இல்லை.

என்னைப் பற்றிய இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள், செயலின் பிணைப்பில் பந்தப்படுவதில்லை.

.......................................................................................................

ஏவம் ஜ்ஞாத்வா க்ரு’தம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபிஃ/
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ரு’தம்// 4.15

ஏவம் - இவ்விதம் ; ஜ்ஞாத்வா- அறிந்து; க்ரு’தம் - செய்யப்பட்டது ; கர்ம - கர்மம் ; பூர்வை: - முற்காலத்திலிருந்த ; அபி - கூட; முமுக்ஷுபிஃ : - மோஷத்தில் நாட்டமுடையவர்கள் ; குரு - செய்வாயாக; கர்ம ஏவ

  • கர்மங்களையே ; தஸ்மாத் - ஆகவே ; த்வம் - நீயும் ; பூர்வை: - முன்னோர்களால் ; பூர்வதரம் - தொன்றுதொட்டு; க்ரு’தம்- செய்யப்பட்டு வருகிற

4.15 முந்தைய காலத்தில் வாழ்ந்த ஞானமடைந்த, விடுதலை அடைந்த ஆன்மாக்கள், இந்தப் புரிதலுடன் செயல்பட்டு விடுதலை அடைந்தார்கள்.

இந்தப் புரிதலுடன், முன்னோர்கள் செய்தது போல், உன் கடமையைச் செய்வாயாக!

.......................................................................................................

கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா: /
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா
மோக்ஷ்யஸேऽசு’பாத் // 4.16

கிம் - என்ன; கர்ம - கர்மம் ; கிம் - என்ன ; அகர்மம் - அகர்மம் ; இதி - என்று ; கவய: அபி - அறிவாளிகள் கூட; அத்ர - தீர்மானிப்பதில் ; மோஹிதா: - திகைக்கிறார்கள் ; தத் - அந்த ; தே - உனக்கு ; கர்ம

  • கர்மத்தின் தத்துவத்தை ; ப்ரவக்ஷ்யாமி - சொல்லப் போகிறேன்; யத் - எதை ; ஜ்ஞாத்வா - அறிந்து கொண்டபின்னர் ; மோக்ஷ்யஸே - விடுெடுவாயோ ; அஸுபாக் - அமங்கலத்திலிருந்து

4.16 எது கர்மா, எது அகர்மா என்பதில் அறிவுடையவர்கள் கூட குழப்பமடைகிறார்கள்.

எதைத் தெரிந்து கொண்டால் நீ அனைத்து தீமைகளிலிருந்தும் விடுதலையடைவாயோ, அந்தக் கர்மத்தின் தத்துவம் குறித்து நான் உனக்கு விளக்குகிறேன்.

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண: /
அகர்மணச்'ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி: // 4.17

கர்மண: - கர்மத்தின் ; ஹி - ஏனென்றால் ; அபி - கூட; போத்தவ்யம்

  • அறியப்பட வேண்டும்; போத்தவ்யம் - அறியப்பட வேண்டும் ; ச - மேலும் ; விகர்மண: - தவறான செயல்கள் ; அகர்மண: - செயலற்ற தன்மை ;ச - அவ்விதமே ; போத்தவ்யம் - அறியப்படவேண்டும் ; கஹநா
  • ஆழமானது; கர்மண: - கர்மத்தின்; ததி: - போக்கு

4.17 கர்மத்தின் போக்கைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம். தவறான செயலின் இயல்பையும் செயலற்ற தன்மையையும் புரிந்துகொள்வதின் மூலம் கர்மத்தின் இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்வாயாக!

கர்மண்யகர்ம ய: பச்'யேதகர்மணி ச கர்ம ய: /
ஸ புத்திமாந் மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ரு'த்ஸ்நகர்மக்ரு'த் //
4.18

கர்மணி - செயலில் ; அகர்ம - செயலற்ற தன்மை ; ய: - எந்த மனிதன் ; பச்'யேத் - பார்க்கிறானோ ; அகர்மணி - செயலற்ற தன்மையில் ; ச

  • மேலும் ; கர்ம - கர்மத்தை ; ய: - எவன் ; ஸ: -அவன் ; புத்திமாந் - புத்திமான் ; மநுஷ்யேஷு - மனிதர்களில்; ஸ: - அந்த ; யுக்த: - யோகி ; க்ரு'த்ஸ்நகர்மக்ரு'த் - அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன்

4.18 அனைத்து செயல்களில் ஈடுபட்டாலும், எவர் ஒருவர் செயலில் செயலற்ற தன்மையும் செயலற்ற தன்மையில் செயலையும்

பார்க்கிறாரோ அவரே ஞானி, அவரே யோகி.

யஸ்ய ஸர்வே ஸமாரம்பாஃ காமஸங்கல்பவர்ஜிதா: /
ஜ்ஞானாக்னிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா: // 4.19

யஸ்ய - எவனுடைய ; ஸர்வே - அனைத்து ; ஸமாரம்பா: - எல்லா சூழ்நிலைகளிலும்; காமஸங்கல்பவர்ஜிதா: - ஆசையையும் ஸங்கல்பத்தையும் துறந்து செய்யப்படுகின்றனவோ ; ஜ்ஞான அக்னிதக்த கர்மாணம் - எவனுடைய கர்மங்கள் அனைத்தும் ஞானம் என்ற தீயில் எரிந்து சாம்பலாகி விட்டனவோ ; தம் - அந்த மாமனிதனை ; ஆஹு: - அழைக்கிறார்கள்; பண்டிதம்- பண்டிதன் என்று ; புதா: - ஞானிகளும் கூட

4.19 யார் ஒருவர் உறுதி உடையவராகவும், அனைத்து கர்மங்களையும் ஆசையின் வசப்படாமல் செய்கிறாரோ, அவரே முழுமையான அறிவு பெற்றவராக இருக்கிறார். எவருடைய கர்மங்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டுவிட்டனவோ, அவரை ஞானிகள் அறிவுடையவர்கள் என்று அறிவிக்கிறார்கள்.

த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராச்ரய: /
கர்மண்யபிரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ://
4.20

த்யக்த்வா - துறந்து ; கர்மபலாஸங்கம் - எல்லா செயல்களின் பலன்கள் மேல் உள்ள பற்று ; நித்யத்ருப்த: - எப்போதும் திருப்தி உள்ளவனாகவும் ;நிராச்ரய: - உலகியல் சார்பு இல்லாதவனாகவும் ; கர்மணி - கர்மத்தில் ;அபிரவ்ருத்த: அபி - நன்கு ஈடுபட்டாலும் கூட; ந - இல்லை; ஏவ - கூட; கிஞ்சித் - சிறிதளவு ; கரோதி - செய்வது; ஸ: - அவன்

4.20 கர்ம பலன்களின் மேல் உள்ள பிணைப்பை விட்டுவிட்டதால், திருப்தியடனும் சுதந்திரமாகவும் இருக்கிற அறிவுடைய மனிதர், எல்லாவிதமான கர்மங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர் கர்மம் செய்வதில்லை.

நிராசீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிகிரஹ: /
சாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் //4.21

நிராஶீ: - எதையும் விரும்பாமல் இருப்பவன் ; யதசித்தஆத்மா - மனம் மற்றும் விழிப்புணர்வைக் கட்டுப்படுத்தி; த்யக்த ஸர்வபரிகிரஹ: - ஸகல பொருட்களின் மேல் உள்ள உடைமை உணர்வைத் துறந்து ; சாரீரம் - உடல்; கேவலம் - மட்டும்; கர்ம- செயல் ; குர்வந் - செய்து கொண்டிருந்தாலும் கூட ; ந ஆப்நோதி - அடைவதில்லை. கில்பிஷம் - பாவத்தை

4.21 யார் ஒருவர், பலனை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்கிறாரோ, தம் மனத்தினை விழிப்புணர்வுடன் கட்டுப்படுத்தி, தனது உடைமைகள் மற்றும் உடல் மீதுள்ள உடைமை உணர்வை உதறித் தள்ளி விட்டு, செயலை மட்டும் செய்கிறாரோ, அவர் பாவத்திற்கு ஆளாவதில்லை.

...........................................................................................................

யத்ரு'ச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர: /
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ரு'த்வாபி ந நிபத்யதே // 4.22

யத்ரு'ச்சாலாபஸந்துஷ்ட: - தானாகவே கிடைத்ததில் ஸந்தோஷம் உள்ளவனாகவும் ; த்வந்த்வாதீத: - மகிழ்ச்சி துயரம் முதலிய இரட்டைகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவனாகவும்; விமத்ஸர:- பொறாமை அறவே அற்றவனாகவும் ; ஸம: - ஸமபாவனையுடன் ; ஸித்தௌ - வெற்றியிலும்; அஸித்தௌ ச - தோல்வியிலும் ; க்ரு'த்வா அபி - செய்தாலும் ; ந நிபத்யதே - கட்டப்படுவதில்லை

4.22 யார் ஒருவர் தற்செயலாகவும் தானாகவும் கிடைத்தவற்றைக் கொண்டு திருப்தி அடைபவராகவும் இருமையைக் கடந்தவராகவும் பொறாமையிலிருந்து விடுபட்டவராகவும் வெற்றியிலும் தோல்வியிலும் சம நிலையோடு இருப்பவராகவும் இருக்கிறாரோ, அவர் செயலாற்றிக் கொண்டிருந்தாலும்கூட, அதனால் அவர் கட்டுப்பட மாட்டார்.

...........................................................................................................

கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ: /
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே // 4.23

கதஸங்கஸ்ய - எவர் உலகப்பற்றை அறவே ஒழித்து ; முக்தஸ்ய - விடுதலையடைந்தவராய்; ஜ்ஞாநாவஸ்திதசேதஸ : - பரமாத்ம ஞானத் தில் மனத்தை நிலைநிறுத்தி ; யஜ்ஞாய - யக்ஞத்திற்காகவே ; ஆசரத: - செய்கிறானோ ; கர்ம - செயல் ; ஸமக்ரம் - அனைத்தையும்; ப்ரவிலீயதே

  • கரைந்து போய்விடுகிறது

4.23 யார் ஒருவர் பொருள் சார்ந்த உலகியல் செயல்களில் பற்று வைக்காமல், அவற்றிலிருந்து விடுபட்டு, பரமாத்ம ஞானத்தில் மனத்தை நிலைநிறுத்தி, யாகத்திற்காகவே கர்மங்களைச் செய்கிறாரோ, அவருடைய கர்மங்கள் அனைத்தும் கரைந்து போய்விடுகின்றன.

ப்்ரஹ்மார்பணம் ப்்ரஹ்ம ஹவிர்ப்்ரஹ்மாக்நௌ
ப்்ரஹ்மணா ஹூதம்/
ப்்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்்ரஹ்மகர்மஸமாதினா // 4.24

ப்்ரஹ்ம - பிரஹ்மம் ; அர்பணம் -சமர்ப்பித்தல் ; ப்்ரஹ்ம - பிரஹ்மம்; ஹவி: - ஹோமம் செய்யப்படும் திரவியமும் ; ப்்ரஹ்மாக்நௌ- பிரஹ்மம் ஆகிய அக்னியில் ; ப்்ரஹ்மணா - பிரஹ்மமேயான கர்த்தா மூலம் ; ஹூதம் - ஆஹூதிசெய்வது என்ற செயலும் ; ப்்ரஹ்ம ஏவ - பிரஹ்மமேதான்; தேந - அவரால் ; கந்தவ்யம் - அடையப்படுகிற பயனும் ; ப்்ரஹ்மகர்ம ஸமாதினா - பிரஹ்மம் ஆகிய செயலில் ஊன்றி நிற்கிற

4.24 ப்்ரஹ்மமாகிய அக்னியில், ப்்ரஹ்மமேயான திரவியங்களும் நெய்யும் ப்்ரஹ்மத்தினாலேயே ப்்ரஹ்மத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. யார் ஒருவர் தம்மை முழுவதுமாக செயலில் ஆழ்ந்து ஈடுபடுத்திக்கொள்கிறாரோ, அவரால் நிச்சயமாக ப்்ரஹ்மத்தை அடைந்து விட முடியும்.

தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே /
ப்்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி //
4.25

தைவம் - தெய்வங்கள் ; ஏவ - மட்டும்; அபரே - மற்றும் சில ; யஜ்ஞம் - யாகத்தை ; யோகிந: - யோகியர் ;பர்யுபாஸதே - வழிபடுகிறார்கள்; ப்்ரஹ்மாக்நௌ- பரமாத்மா வடிவான அக்னியில் ; அபரே - மற்றும் சில யோகியர் ; யஜ்ஞம் - யாகத்தை ; யஜ்ஞேந - யாகத்தின் மூலம் ; ஏவ - மட்டும்; உபஜுஹ்வதி - ஹோமம் செய்கிறார்கள்

4.25 சில யோகிகள் கடவுளை பல்வேறு வகையான யாகங்களைச் செய்து வழிபடுகிறார்கள்.வேறு சிலர் ப்ரஹ்மமாகிய அக்னியில் யாகங்களையே அர்ப்பணம் செய்து வழிபடுகிறார்கள்.

.................................................................................................................

ச்'ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி /
ச்'ப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாாக்நிஷு ஜுஹ்வதி // 4.26

ச்'ரோத்ராதீநி - காது முதலிய ; இந்த்ரியாணி - எல்லாப்புலன்களையும் ; அந்யே - வேறு சில யோகிகள் ; ஸம்யமாக்நிஷு - மன அமைதி என்னும் அக்னிகளில்; ஜுஹ்வதி - ஹோமம் செய்கிறார்கள் ; ச்'ப்தாதீந் - ஒலி முதலிய ; விஷயாந் - எல்லாப் புலன்நுகர் பொருட்களையும் ; அந்யே - மற்றும் சில யோகிகள்; இந்த்ரியாாக்நிஷு - புலன்கள் என்னும் அக்னியில் ; ஜுஹ்வதி - ஹோமம் செய்கிறார்கள்

4.26 வேறு சில யோகிகள், காது முதலிய எல்லாப் புலன்களையும் மன அமைதி என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். மற்றும் சில யோகிகள், ஒலி முதலிய எல்லாப் புலன்நுகர் பொருட்களையும் புலன்கள் என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்.

.................................................................................................................

ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே /
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே//
4.27

ஸர்வாணி இந்த்ரியகர்மாணி- புலன்களில் செயல்கள் அனைத்தையும் ; ப்ராணகர்மாணி ச- பிராணன்களின் செயல்கள் அனைத்தையும் ; அபரே - வேறு யோகிகள் ; ஆத்ம ஸம்யம யோக அக்நௌ - ஆத்மஸம்யமயோகம் என்னும் அக்னியில் ; ஜுஹ்வதி - ஹோமம் செய்கிறார்கள்; ஜ்ஞாநதீபிதே

  • ஞானத்தினால் ஒளிபெற்ற

4.27 ஆத்ம ஞானத்தில் விருப்பமுடைய வேறு சில யோகிகள், புலன்கள் மற்றும் பிராணன்களின் செயல்கள் அனைத்தையும் யோகம் என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். அவர்கள், மனஅமைதி என்னும் யோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

.................................................................................................................

த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே / ஸ்வாத்யாயஜ்ஞானயஜ்ஞாச்'ச யதய: ஸம்சி'த்வ்ரதா: // 4.28

த்ரவ்யயஜ்ஞா: - திரவியங்களைக் கொண்டு யாகம் செய்பவர்கள் ; தபோயஜ்ஞா: - தவம் என்னும் யாகம் செய்பவர்கள் ; யோகயஜ்ஞா: - அஷ்டாங்க யோக வடிவான யாகம் செய்பவர்கள் ; ததா - அவ்வாறே ; அபரே - வேறு சிலர் ; ஸ்வாத்யாய ஜ்ஞானயஜ்ஞா: - தன்னைப் பற்றிய ஞானத்தைக் கற்றுக்கொள்ளுதலாகிய யக்ஞத்தைச் செய்பவர்கள் ஆவர்; ச- மேலும் ; யதய: - முயற்சி செய்பவர்கள் ; ஸம்சி'த்வ்ரதா: - அஹிம்சை முதலிய தீவிரக் கொள்கையோடு கூடி

4.28 வேறு சிலர், திரவியங்களைக் கொண்டு யாகம் செய்கிறார்கள் ; சிலர், தவம் என்னும் யாகத்தையும், சிலர் அஷ்டாங்க யோக வடிவான யாகத்தையும், மேலும் சிலர், அஹிம்சை முதலிய தீவிரக் கொள்கையோடு கூடிய தன்னைப் பற்றிய அறிவைக் கற்றுக்கொள்ளுதலாகிய ‘ஞான யக்ஞ’த்தைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

..........................................................................................................................

அபாநே ஜூஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததாபரே /
ப்ராணாபாந கதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா: // 4.29

அபாநே - வெளியே செல்லும் சுவாசத்தில் ; ஜூஹ்வதி - ஹோமம் செய்கிறார்கள்; ப்ராணம் - உயிர்ச் சக்தியாகிய பிராணன் ; ப்ராணே - உயிர்ச் சக்தியில் ; அபாநம் - வெளிச் செல்லும் சுவாசம்; ததா - அதே போன்று ; அபரே -மற்றும் சில யோகிகள் ; ப்ராணாபாநகதீ - உள் சுவாசம் வெளிசுவாசம் இவற்றின் போக்கை; ருத்த்வா - கட்டுப்படுத்தி; ப்ராணாயாம பராயணா: - பிராணாயாமத்தில் ஈடுபட்டவர்களாக

4.29 மற்றும் சிலர் உள்இழுக்கும் சுவாசமாகவும் வெளிவிடும் சுவாசமாகவும் இருக்கிற உயிர்ச்சக்தியான பிராணனை ஹோமம் செய்கிறார்கள். உள்சுவாசம் வெளிசுவாசம் இவற்றின் போக்கைக் கவனிப்பதன் மூலம் சுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

..........................................................................................................................

அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷூ ஜூஹ்வதி /
ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா: // 4.30

அபரே - மற்றும் சிலர்; நியதாஹாரா - முறையாக உணவு உண்பவர்களாக ; ப்ராணாந் - உயிர்ச் சக்தியை ; ப்ராணேஷு - உயிர்ச் சக்தியிலேயே ; ஜூஹ்வதி - ஹோமம் செய்கிறார்கள் ; ஸர்வே அபி - அனைவரும் கூட ; ஏதே- இந்த ; யஜ்ஞவித: - யக்ஞங்களை அறிந்தவர்கள்; யஜ்ஞக்ஷபிதகல்மஷா: - யாகத்தினால் பாவங்களை அழித்தவர்கள்

4.30 வேறு சிலர் முறையாக உண்பவர்களாக உயிர்ச் சக்தியை உயிர்ச் சக்தியிலேயே ஹோமம் செய்கிறார்கள். இந்த சாதகர்கள் யக்ஞங்களின் பொருளை அறிந்தவர்கள், யாகத்தின் மூலம் பாவங்கள் அல்லது கர்மங்கள் நீக்கப்பட்டு, அவர்கள் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள்.

...........................................................................................................

யஜ்ஞசி'ஷ்டாம்ரு'தபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸனாதநம் /
நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோந்ய: குருஸத்தம //
4.31

யஜ்ஞ சி'ஷ்ட அம்ரு'தபுஜ: - யக்ஞத்தில் எஞ்சிய அமுதத்தை பருகுகிற ; யாந்தி- அடைகிறார்கள் ; ப்ரஹ்ம - பரமாத்மாவை; ஸநாதநம் - சாஸ்வதமான ; ந - இல்லை; அயம் - இந்த; லோக: - உலகமே ; அஸ்தி - இல்லை ; அயஜ்ஞஸ்ய - யக்ஞம் செய்யாதவருக்கு; குத: - எப்படி; அந்ைய:

  • பரலோகம் ; குருஸத்தம - குருவம்சத்தில் சிறந்தவனான அர்ஜூனா

4.31 குரு வம்சத்தில் சிறந்தவனான அர்ஜூனா! யக்ஞத்தில் எஞ்சிய அமுதத்தைப் பருகுகிற யோகிகள் சாச்'வதமான மேலான பரமாத்மாவை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவருக்கு இவ்வுலகமே இல்லை. அப்படியிருக்கப் பரலோகம் எது?

...........................................................................................................

ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே /
கர்மஜான்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே//
4.32

ஏவம் - இவ்விதம் ; பஹுவிதா :- அநேகவிதமான ; யஜ்ஞா: - யக்ஞங்கள் ; விததா - விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன; ப்ரஹ்மண: முகே- வேதங்களில் ; கர்மஜாந் - மனம் புலன்கள், உடல் ஆகியவற்றில் செய்து நிறைவேற்றப்பட வேண்டியவை என்று ; வித்தி - அறிந்துகொள் ; தாந் ஸர்வாந் - அவை எல்லாவற்றையும்; ஏவம் ஜ்ஞாத்வா - இவ்வாறு அறிந்து கொண்ட பிறகு; விமோக்ஷ்யஸே - விடுதலை பெறுவாய்

4.32 இவ்வாறு, செயல்களிலிருந்து பிறக்கும் பல வகை யக்ஞங்களைப் பற்றி வேதங்களில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்வதின் மூலம் ஒருவர் விடுதலை அடைகிறார்.

.........................................................................................................

ச்'ரேயாம்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞானயஜ்ஞ: பரம்தப /
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞானே பரிஸமாப்யதே // 4.33

ச்'ரேயான் - மிகவும் சிறந்தது ; த்ரவ்யமயாத் - த்ரவியங்களால் நிறைவேற்றக்கூடிய ; யஜ்ஞாத் - யக்ஞத்தைவிட ; ஜ்ஞானயஜ்ஞ: - ஞான யக்ஞத்தில் ; பரம்தப - எதிரிகளை வாட்டுபவனே! ; ஸர்வம் - அனைத்தும் ; கர்ம - செயல்கள்; அகிலம் - எல்லாவற்றிலும் ; பார்த - பார்த்தனே; ஜ்ஞானே - ஞானத்தில் ; பரிஸமாப்யதே - நிறைவு பெறுகின்றன

4.33 ஓ எதிரிகளை வெல்பவனே! திரவியங்களால் செய்யப்படும் யக்ஞத்தைக் காட்டிலும் ஞான யக்ஞமே மிகவும் மேலானது.

ஓ ப்ரீதாவின் மகனே! கர்மங்கள் அனைத்துமே ஞானத்திலேயே வந்து முடிவு பெறுகின்றன.

.........................................................................................................

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்'நேந ஸேவயா /
உபதேஷ்யம்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிநஸ்தத்த்வதர்சி'ந: // 4.34

தத் - அந்த ஞானத்தை ; வித்தி - அறிந்துகொள் ; ப்ரணிபாதேந - ஆன்மீக குருவை அணுகுவதன் மூலம் ; பரிப்ரச்'நேந - நேர்மையாகக் கேள்வி கேட்பதாலும் ; ஸேவயா- சேவை செய்வதாலும் ; உபதேஷ்யம்தி - உபதேசிப்பார்கள்; தே - உனக்கு ; ஜ்ஞானம் - தத்வ ஞானத்தை ; ஜ்ஞானிந:

  • மஹாத்மாக்களான ஞானிகள் ; தத்த்வதர்சி'ந: - பரமாத்ம தத்துவத்தை நன்கு அறிந்துள்ள

4.34 ஒரு ஞான குருவை அணுகி கேள்விகள் கேட்டும் தொண்டுகள் செய்தும் இந்த ஸத்யங்களைப் புரிந்துகொள்.

ஒரு ஜ்ஞானகுரு ஸத்யத்தை உணர்ந்து இருப்பதால், அவர் உனக்குத் தீட்சை அளித்து ஞானத்தை உபதேசிக்க முடியும்.

.........................................................................................................

யஜ்ஜ்ஞாத்வா ந புனர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ /
யேந பூதான்யசே'ஷேண த்ரக்ஷ்யஸ்யாத்மன்யதோ மயி //

4.35

யத் - எதை ; ஜ்ஞாத்வா - அறிந்து கொண்ட பின்னர் ; ந - இல்லை; புந: - மீண்டும்; மோஹம் - குழப்பத்தை ; ஏவம் - இவ்விதமான ; யாஸ்யஸி - அடைதல் ; பாண்டவ - பாண்டுவின் மைந்தனே ; யேந - அந்த ; பூதாநி - சராசரங்கள் அனைத்தையும் ; அஸே’ஷேண - முழுவதுமாக ; த்ரக்ஷ்யஸி - காண்பாய்; ஆத்மநி - தன்னிடமும் ; அதோ - பிறகு ; மயி - ஸச்சித் ஆனந்தமயமான என்னிடமும்

4.35 ஓ பாண்டவா, இதைத் தெரிந்து கொண்டால் ஆசையினாலோ அல்லது மாயையினாலோ வேதனைப்படமாட்டாய்.

இதன் மூலம் உயிர்கள் அனைத்தும் மகோன்னதமான என்னிடத்தில் இருப்பதை நீ அறிந்துகொள்வாய்.

..........................................................................................................

அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ரு’த்தம: /
ஸர்வம் ஜ்ஞானப்லவேநைவ வ்ரு’ஜிநம் ஸந்தரிஷ்யஸி // 4.36

அபி - கூட; சேத் - ஒருகால் இருந்தாலும் கூட ; அஸி - நீ; பாபேப்ய: - பாவம் செய்தவர்கள் ; ஸர்வேப்ய: - மற்ற எல்லா ; பாபக்ரு’த்தம: - அதிகமான பாவத்தை செய்தவனாக ; ஸர்வம்- முழுவதையும் ; ஜ்ஞானப்லவேந - ஞானம் என்னும் படகினால் ; ஏவ - மட்டுமே ; வ்ரு’ஜிநம் - துன்பக்கடல்; ஸந்தரிஷ்யஸி - நன்கு கடந்துவிடுவாய்

4.36 நீ பாவிகளுக்குள்ளேயே அதிக பாவம் செய்தவனாக இருந்தாலும் ஞானம் என்னும் படகினால், நிச்சயமாக நீ துன்பம் என்னும் கடலை முழுமையாகக் கடந்துவிடுவாய்.

..........................................................................................................

யதைதாம்ஸி ஸமித்தோऽக்நிர்பஸ்மஸாத்குருதேऽர்ஜுந /
ஜ்ஞானாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா // 4.37

யதா - எப்படி ; ஏதாம்ஸி - விறகுகளை ; ஸமித்த: - கொழுந்து விட்டெரியும்; அக்நி: - நெருப்பு ; பஸ்மஸாத் - சாம்பலாக; குருதே - செய்கிறதோ ; ஓ அர்ஜுந - ஓ அர்ஜூனா ; ஜ்ஞானாக்நி: - ஞானம் என்னும் நெருப்பு ; ஸர்வகர்மாணி - எல்லாக் கர்மங்களையும்; பஸ்மஸாத் - சாம்பலாக ; குருதே - செய்கிறது; ததா - அதேபோன்று

4.37 அர்ஜூனா! கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது விறகை எரித்துச் சாம்பாலாக்குவது போல, ஞானமாகிய நெருப்பு எல்லாக் கர்மாக்களையும் எரித்து சாம்பாலாக்குகிறது.

.........................................................................................................

ந ஹி ஜ்ஞானேந ஸத்ரு'ஸ'ம் பவித்ரமிஹ வித்யதே /
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்: காலேநாத்மநி விந்ததி // 4.38

ந - இல்லை; ஹி - சந்தேகமன்றி ; ஜ்ஞானேந - ஞானத்திற்கு ; ஸத்ரு'ஸ'ம் - நிகராக; பவித்ரம் - பரிசுத்தம் செய்யக்கூடியது ; இஹ - இவ்வுலகில் ; வித்யதே - இருக்கிற ; தத் - அந்த ; ஸ்வயம் - தமக்குத் தானே ; யோகஸம்ஸித்: - கர்மயோகத்தின் மூலம் உள்ளத் தூய்மையடைந்த மனிதன் ; காலேந - காலக்கிரமத்தில்; ஆத்மநி - தன்னிடத்திலேயே ; விந்ததி - எய்தப் பெறுகிறான்

4.38 உண்மையில், ஞானத்தைவிடத் தூய்மையான பொருள் இந்த உலகில் வேறு ஏதும் இல்லை. அதை அறிந்த பக்குவமடைந்த மனிதர், காலக்கிரமத்தில் தன்னிடத்திலேயே ஆனந்தத்தை அனுபவிக்கிறார்.

.........................................................................................................

ச்'ரத்தாவாந்லபதே ஜ்ஞானம் தத்பர: ஸம்யதேந்த்ரிய: /
ஜ்ஞானம் லப்த்வா பராம் சா'ந்திமசிரேணாதிகச்சதி // 4.39

ச்'ரத்தாவாந் - சிரத்தை உடைய மனிதன் ; லபதே - பெறுகிறான் ; ஜ்ஞானம் - ஞானம்; தத்பர: - சாதனையிலேயே ஒன்றிய ; ஸம்யதேந்த்ரிய: - புலன்களை அடக்கி வெற்றி கொண்ட ; ஜ்ஞானம் - ஞானத்தை; லப்த்வா - பெற்று ; பராம்பசா'ந்திம் - பரமசாந்தியை; அசிரேண - தாமதமின்றி அதே கணத்தில் ; அதிகச்சதி - பெறுகிறான்

4.39 சிரத்தையோடு (துணிவுடன் கூடிய நம்பிக்கை) இருக்கும் ஒருவர் ஞானத்தை அடைகிறார். அவருக்கு, புலன்கள் மீது கட்டுப்பாடு இருக்கிறது.

இந்த ஞானத்தை அடைபவர் தாமதமின்றி அந்தக் கணமே மேலான அமைதியைப் பெறுகிறார்.

.........................................................................................................

அஜ்ஞச்'சாச்'ரத்ததாநச்'ச ஸம்ச்'யாத்மா விநச்'யதி /
நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ச்'யாத்மந: //
4.40

அஜ்ஞ: - விவேகமற்றவன் ; அச்'ரத்ததாந: - சிரத்தை இல்லாதவனுமான ; ஸம்ச்'யாத்மா - சந்தேகமுடையவன் ; விநச்'யதி- வீணாக அழிவான் ; ந - இல்லை; அயம்லோக: - இவ்வுலகம்; அஸ்தி - இருக்கிறது; ந - இல்லை; பர: - பரலோகம் ; ந - இல்லை; ஸுகம் - சுகம்; ஸம்ச்'யாத்மந: - சந்தேகமுடையவனுக்கு

4.40 ஞானமற்றவர்களும் நம்பிக்கை அற்றவர்களும் எப்போதும் சந்தேகத் தன்மையோடு இருப்பவர்களும் அழிக்கப்படுகிறார்கள்.

இந்த உலகத்திலோ, அடுத்த உலகத்திலோ அவர்களுக்கு இன்பம் கிடையாது.

...........................................................................................................................

யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞானஸஞ்சிந்நஸம்ச்'யம் /
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய // 4.41

யோகஸந்ந்யஸ்தகர்மாணம் - கர்மயோக முறைப்படி கர்மங்கள் அனைத்தையும் பரமாத்மாவிடம் அர்ப்பணம் செய்து ; ஜ்ஞானஸஞ்சிந்நஸம்ச்'யம் - விவேக ஞானத்தினால் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டு ; ஆத்மவந்தம் - மனத்தைத் தன்வசமாக்கிக் கொண்டு விட்டவனை ; ந - இல்லை; கர்மாணி - கர்மங்கள் ; நிபத்நந்தி - கட்டுப்படுத்துவது; தநஞ்ஜய - தனஞ்ஜயனே

4.41 யார் ஒருவர் தம் செயல்களினால் விளையும் பலன்களைத் துறந்து விட்டாரோ, யாருடைய சந்தேகங்கள் அழிக்கப்பட்டு விட்டனவோ, யார் ஒருவர் தன்னுள் உறுதியாக நிலைகொண்டிருக்கிறாரோ, அவர், அவருடைய செயல்களால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.

...........................................................................................................................

தஸ்மாதஜ்ஞானஸம்பூதம் ஹ்ரு'த்தஸ்தம் ஜ்ஞானாஸிநாத்மந: /
சித்தவைநம் ஸம்ச்'யம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத //
4.42

தஸ்மாத் - ஆகவே ; அஜ்ஞான ஸம்பூதம் - அஞ்ஞானத்தில் உண்டான ; ஹ்ரு'த்ஸ்தம் - உள்ளத்தில் இருக்கும் ; ஜ்ஞானஸினா - விவேக ஞானம் என்ற வாளினால் ; ஆத்மந: - உன்னுடைய ; சித்வா - சிதைத்து ; ஏநம் ஸம்ச'யம்- இந்தச் சந்தேகத்தை ; யோகம் - ஸமத்வயோகம் என்ற கர்மயோகத்தில் ; ஆதிஷ்ட - நிலைத்து நில் ; உத்திஷ்ட - எழுந்திரு; பாரத - பரதக்குலத்தோன்றலே

4.42 பரதனின் வழிவந்தவனே, அதனால் எழுந்து நில்! யோகத்தில் உன்னை நிலைநிறுத்து. உன் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அறியாமையால் தோன்றிய சந்தேகங்களை ஞானம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்திவிடு.

...........................................................................................................

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸூ
ப்ரஹ்மவித்யாயாம்
யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஜ்ஞானகர்மஸந்நியாஸயோகோ நாம சதுர்தோऽத்யாய: //

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஞானகர்மஸந்யாஸயோகம் எனப் பெயர் படைத்த நான்காவது அத்தியாயம்.