முன்னுரை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் பகவத் கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.
பகவத் கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துக்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.
பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.
என்றென்றும் வாழும் மஹாபாரதம்
பரமஹம்ஸரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூக்ஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.
சிறந்த ஸத்குருவும் தத்துவஞானியுமான சங்கரர், “கீதையைச் சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்குளிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்,” என்று சொல்கிறார். “நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்,” என்று சொல்கிறார்.
பரமஹம்ஸரின் பகவத்கீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், பரமஹம்ஸரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸத்யத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!
முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
- நித்யானந்தா பதிப்பகம்
பகவத் கீதை
உங்கள் கர்மங்களைக் கரைப்பதற்கான தீர்வு
அத்தியாயம் - 4
தர்க்கம்,
தன்னைத் தானே அறிந்துகொள்வதற்கு
ஒருபோதும் வழிநடத்தாது.
தர்க்கத்தை
முடிவுக்குக் கொண்டு வருதலே
அது நிகழ்வதற்குச் சாத்தியம்.
வினாக்களின் வாசலில்...
✍️ ஸ்வாமிஜி, சமயச் சடங்குமுறைகள் தற்சமயம் பொருத்தமுடையது என்று கருத முடியாது. ஏனென்றால், அதன் ஒழுக்க நியதிகளை நாம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
யோக அறிவியலை நாம் இழந்துவிட்டதாக
கிருஷ்ணர் சொல்லும்போது,
அவரும் இதைப் பற்றித்தான் சொல்கிறாரா?
✍️ கீதையிலிருந்து மேற்கோள்களாகக் காட்டப்படும் ஸ்லோகங்களிலேயே மிக அதிக தடவை மேற்கோளாகக் காட்டப்படுகிற ஸ்லோகம் பரித்ராணாய ஸாதூநாம்... என்கிற இந்த ஸ்லோகம்தான்.
இந்த வரிகள் உண்மையாக இருக்கும் என்றால் கிருஷ்ணர் இந்தப் பூமியில் எப்போதும் எல்லா நேரங்களிலும் இருக்க வேண்டும். இங்கு எந்தத் தீங்கும் இருக்கக் கூடாது. ஆனால் இங்கு அப்படி இல்லையே!
இந்த வரிகள் எதை உணர்த்துகின்றன என்று தயவுசெய்து நீங்கள் மீண்டும் விளக்க முடியுமா?
✍️ எங்குப் பிறக்க வேண்டும், எப்படிப் பிறக்க வேண்டும், யாருக்குப் பிறக்க வேண்டுமென்று நமது மறுபிறப்பை நாம்தான் தீர்மானிக்கிறோம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
அப்படி என்றால்... நம்பிக்கை இழந்து ஏழையாகவும் துக்கமாகவும அதிக மக்கள் ஏன் இருக்கிறார்கள்? அவர்கள் அந்த முறையில் பிறக்க ஏன் விரும்ப வேண்டும்? அது அவர்களுடைய கர்மா என்று மக்கள் சொல்லுகிறார்கள்.
இது என்னால் மிகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கிறது.
✍️ தற்சமயம் இந்தியாவில் உருவாகியுள்ள ஜாதி அமைப்பு, கிருஷ்ணர் நினைத்த ஜாதி அமைப்பு முறை அல்ல. அது ஒரு தீய பழக்கமாக மாறிவிட்டது.
எப்படி ஒருவர் அதனை ஏற்றுக்கொள்ள முடியும்?
அது நீக்கப்பட்டே ஆக வேண்டும் இல்லையா?
✍ ஸ்வாமிஜி, “நமது சக்தி அடுக்குகளில் இறுதி அடுக்காகிய நிர்வாண அடுக்கில், கடவுள், நீங்கள், நான் - இந்த மூன்றும் ஒன்றே! ஒருவர் அங்கே தெய்வீக தன்மை உணருகிறார்,” என்று நீங்கள் சொன்னீர்கள்.
இதனை நீங்கள், நித்யானந்த ஸ்புரண தியான முகாமில் (NSP) மரண அனுபவத்தின் ஒரு பகுதியாகச் சொல்லிக் கொடுத்தீர்கள். ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுதே இந் நிலையை அடைய முடியுமா?
✍ பணக்காரர்கள் சுயநல நோக்கத்தோடு தானம் கொடுக்கலாம். ஆனால் அதன் மூலம் பயனடைபவர்கள், அந்தச் சுயநல நோக்கத்தைப் பார்ப்பதில்லை. அவர்கள் பலனை மட்டுமே பார்க்கிறார்கள்.
தானம் கொடுக்கும்போது உயர்ந்த நோக்கத்தோடுதான் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினோமானால், மிகச் சிலரே தானம் கொடுக்க நேரிடும். இது, தேவை உள்ளவர்களைத்தான் அதிகமாகப் பாதிக்கும். பிறகு என்ன செய்வது?
✍ நம்முடைய உண்மையான தெய்வீக தன்மையை அறியாமல் இருப்பதுதான் நமது முதல் பாவம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால்... இன்றைய நிலையில் நாம் அனைவரும் நம்முடைய உண்மையான இயல்பை மறந்துவிட்டதனால் நாம் அனைவரும் பாவிகள் என்று தானே அர்த்தம்.
அதனால் நம்மைப் பாவிகள் என்று அடையாளம் காட்டும் மதங்கள் அனைத்தும் உண்மையில் சரிதானே? இல்லையா?
✍ ஒருவர் ஞானமடைந்தவரா, இல்லையா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது?

நீங்கள் எந்த உருவமெடுத்தாலும் பிரபஞ்சம் உங்களை அறியும்
நிலையான நீடித்த வாழ்விற்காகவே மனித மனம் ஏங்குகிறது.
நமது அடையாளத்தைத் தொடர்வதும் நிலைநிறுத்துவதும்தான் நமக்கு மிக முக்கியமாக இருக்கிறது.
எவ்வளவு தூரம் பின்னோக்கிச் சென்று நம் பரம்பரையினரைப் பற்றி நாம் ஆராய முடியுமோ, அவ்வளவு தூரம் பின்னோக்கிச் சென்று நம் நினைவுகளையும் செய்திப் பதிவேடுகளையும் ஆராய்கிறோம். பெருமையாகவும் சிறப்பாகவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அங்கு ஏதாவது இருக்கிறதா என்று தொடர்ந்து தேடுகிறோம்.
மேலும் நமது வாரிசுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்படுகின்றார்களா என்பதையும் உறுதி செய்துகொள்கிறோம்.
நமது குடும்பத்தில் இருக்கும் வலிமை அற்றவர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். அவர்களுக்காக நாம் ஏதாவது செய்ய

வேண்டுமென்றும் நினைக்கிறோம். பொதுவாக, நமது பரம்பரை வாரிசுகளுக்காக மட்டுமே நாம் இப்படிக் கவலைப்படுகிறோம்.
அர்ஜுனனும் அதே சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ஒருவர் தம் வாழ்நாளில் செய்யும் செயல்கள், அவரது மூதாதையர்களையும் அவரது சந்ததியினரையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை விவரிக்கும் வரலாற்றுச் சிறப்புடைய நீதி நெறிகளை அர்ஜுனன் இங்குச் சுட்டிக் காட்டுகிறார். தனது சொந்த அடையாளம் பாதிக்கப்படும் என்ற பயத்தை மறைப்பதற்காகவே இதையெல்லாம் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அவர், தம் நிகழ்கால குழப்பங்களுக்கு இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் காரணமாகக் காட்டுகிறார். தம் நிகழ்கால நிலையற்ற தன்மையை இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மாற்றுகிறார்.
மக்கள் என்னிடம் "ஸ்வாமிஜி, இந்தப்
பிரபஞ்சம் எப்போது உருவாக்கப்பட்டது?
எப்படி உருவாக்கப்பட்டது? ஏன்
உருவாக்கப்பட்டது?" என்று கேட்பதுண்டு.
"அடுத்த முறை கடவுள் ஒரு மாநாடு
நடத்தி, அதற்கு நான் அழைக்கப்பட்டால்,
நான் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு
அதற்கான பதிலைப் பெற்று வருகிறேன்,"
என்று அவர்களிடம் சொல்வதுண்டு.
இந்தப் பிரபஞ்சம்
தொடர்ந்து
இருந்துகொண்டே
இருக்கும்.
என்னால் பின் நோக்கி எவ்வளவு காலம் பார்க்க முடியுமோ, அப்போதிருந்து இந்தப் பிரபஞ்சம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ, அவ்வளவு காலம் இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது.
இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு தொடக்கத்தையோ முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை.
இறந்தகாலத்திலும் இந்தப் பிரபஞ்சம் இருந்தது. எதிர்காலத்திலும் இந்தப் பிரபஞ்சம் இருக்கும். இதற்கு முன்பும் எப்போதும் பிரபஞ்சம் இருந்து கொண்டுதான் இருந்தது; இதற்கு பிறகும் எப்போதும் பிரபஞ்சம் இருக்கத்தான் போகிறது. நாம் இப்போது பார்க்கும் இந்த மனித உருவம் மாறலாம். ஆனால் இந்தப் பிரபஞ்சம் மாறாது, தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்.
நமக்கு மிகவும் பழக்கப்பட்ட இந்த உருவமும் உடல் சார்ந்த அடையாளமும் அழியக் கூடியவை; அவை யாவும் பருப்பொருள் (Matter). மற்ற பருப்பொருள் சார்ந்த பொருட்களைப் போலவே இதுவும் படைத்தல், அழித்தல், மீண்டும் உருவாதல் போன்ற நிகழ்வுகளுக்கு உட்பட்டதுதான்.
நிச்சயமாய் உங்களாலும் அதிசயத்தை நிகழ்த்த முடியும்
இந்தப் பிரபஞ்சமே சக்தி வடிவானதுதான். அது, ஒரு உருவமற்ற சக்தி. சரியான தருணத்தில் சக்தி பருப்பொருளாக மாற்றம் அடைந்து, பின் மீண்டும் சக்தியாக மாறுகிறது. இந்தச் சக்தி என்றும் அழியாது.
இதத்தான் கிருஷ்ணர் முன்பு ஒருமுறை அர்ஜுனனுக்கு விளக்கினார். "இந்தச் சக்தியும் அதாவது இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியாக எது இருக்கிறதோ அதுவும் நமக்குள் இருக்கும் சக்தியும் ஒன்றே!"
இந்தச் சக்தி அழிக்கமுடியாதது!
இந்தச் சக்தியை ஆயுதத்தால் அழிக்க முடியாது, நெருப்பால் எரிக்க முடியாது, காற்றால் உலர வைக்க முடியாது, நீரால் ஈரமாக்க முடியாது.
உடல் மன அமைப்பின் அழிவு என்று எதையெல்லாம் பார்க்கிறோமோ, அது உண்மையில், பருப்பொருள் மீண்டும் சக்தியாக மாற்றம் பெறுகிற ஒரு நிகழ்வுதானே தவிர, அது அழிவு அல்ல.
மனிதனுக்குள் இருக்கும் சக்தி, இந்தப்
பிரபஞ்சத்திற்குள் இருக்கும் சக்தி - இவை
இரண்டுமே நிலையானவை, எப்போதும்
இந்த உலகில் தொடர்ந்து இருக்க கூடியவை
என்கிற இந்தக் கொள்கையை அனைத்து
மதங்களுமே ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.
அது நமக்கு முக்கியமல்ல.
மதங்களின் கண்ணோட்டம் மாறும். புதிய
அறிவு எழும்போது, அவை மாறித்தான்
ஆக வேண்டும். பருப்பொருளும் சக்தியும்
ஒன்றுதான்; அவை ஒன்றுக்கொன்று
காலத்தாலும் இடத்தாலும் மாறக்கூடியவை
என்பதை விஞ்ஞானிகள் தற்போது
ஒத்துக்கொள்கிறார்கள்.
அணுவின் சிறு துகள்கள், அவை, எப்போது பார்க்கப்படுகிறது, எப்படிப் பார்க்கப்படுகிறது, யார் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறூ உருவங்களிலும் வடிவங்களிலும் தென்படுகிறது என்று குவாண்டம் இயற்பியல் இன்று மெய்ப்பித்திருக்கிறது.
உதாரணமாக, இங்கு இல்லாத ஒரு பொருளை உருவாக்குவது ஒரு விந்தை, அற்புதம், தந்திரம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது, இவற்றில் ஒன்று கூட இல்லை. அதில் மந்திரமோ, தந்திரமோ, விந்தையோ ஏதுமில்லை. அது, ஒரு எளிமையான விஞ்ஞானம். ஒரு பருப்பொருளைச் சக்தியாக மாற்றி, அதைச் சக்தி வடிவிலேயே நகர்த்தி, அதனை மீண்டும் பருப்பொருளாக மாற்றுவதைப் பற்றியது. புதிய உத்திகளான கிர்லியன் புகைப்படத்தின் உதவி கொண்டு இதனை நாம் நிரூபிக்கலாம்.

இது எவ்வாறு செய்யப்படுகிறது
என்பதனை ஒருமுறை ஆச்ரமவாசிகளுக்குச்
செய்து காண்பித்தேன்.
அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ருத்ராக்ஷ மாலைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கச் சொன்னேன். அதன்பிறகு காற்றிலிருந்து ஒரு மாலையை வரவழைத்து அதை எடுத்து அவர்களிடம் காண்பித்தேன். பிறகு அவர்களை அலமாரியில் உள்ள ருத்ராக்ஷ மாலைகளின் எண்ணிக்கையை மீண்டும் கணக்கிடச் சொன்னேன். ஆச்சரியம்! அலமாரியில் ஒரு மாலை குறைவாக இருந்தது!
யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது, இதை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், அவ்வளவுதான்!

உங்களுக்குள் பிரபஞ்சமே இருக்கிறது
எந்த ஒரு பருப்பொருளையும் எங்கிருந்தும் உருவாக்க முடியாது. அதனை சக்தியிலிருந்து மட்டும்தான் உருவாக்க முடியும்.
அதிர்ஷ்டவசமாக, இந்தச் சக்தியின் ஊற்று பிரபஞ்சத்தில் எல்லையற்றதாக உள்ளது. இந்தப் பிரபஞ்சம் எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதனுடைய அளவு குறித்துச் சொல்லப்படுகிற ஒரு கோட்பாடு என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
முதல் வேத நூலான, ஈசா'வாஸ்யம் உபநிஷத்தில் வரும் முதல் ஸ்லோகமே, "சக்தியிலிருந்தே அனைத்துப் பொருட்களும் உருவாகின்றன," என்கிறது.
ஈசா'வாஸ்யம் இதம் ஸர்வம்
இந்த வரிகளைப் படித்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், "சக்தி பருப்பொருளிலிருந்து உருவாகிறது என்று என்னால் இப்போதுதான் நிரூபிக்க முடிந்தது. ஆனால் இதை ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே இந்த ஞானிகள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இதற்கு மேலும் அறிந்திருக்கிறார்கள்.
பருப்பொருள் சக்தியிலிருந்து உருவாகிறது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் நம்மால் இதை இன்னும் நிரூபிக்க முடியவில்லை. விஞ்ஞானத்தின் கடைசி எல்லைப்பகுதிதான் மெய்ஞானத்தின் வாயிற் படி," என்று சொல்கிறார்.
> எந்த ஒரு
> பருப்பொருளையும்
> எங்கிருந்தும்
> உருவாக்க முடியாது.
> அதனை
> சக்தியிலிருந்து
> மட்டும்தான்
> உருவாக்க முடியும்.
நமக்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளும் இருக்கிற ஒரே நிலையான காரணி இந்த அழிவற்ற சக்திதான் என்பதை நாம் மிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஸத்யத்தைப் புரிந்து கொண்டால், நாமும் இந்தப் பிரபஞ்சமும் வேறு வேறு இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் நம் குழப்பங்கள் அனைத்தும் அடங்கிவிடும். பிறகு மரணபயம் என்ற ஒன்றே இருக்காது. பொருட்களைச் சேர்க்க வேண்டும்; பதுக்க வேண்டுமென்ற பேராசையும் எழாது.
சக்தியாக இருக்கும் நாம் நிலையானவர்கள், எப்போதும் உள்ளவர்கள் என்கிற இந்த ஸத்யத்தைப் புரிந்து ஏற்றுக் கொண்டால், நாம் நிலையான ஆனந்தத்தில், நித்யானந்தத்தில் இருப்போம்.
4.1 பகவான் சொன்னார்,
இந்த அழிவற்ற யோக அறிவியலை நான் சூரியக் கடவுளான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத்தின் தந்தையாகிய மனுவுக்கு உபதேசித்தார். மனு இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்தார்.
4.2 இந்த மிக மேலான யோகம் குரு- சிஷ்ய பாரம்பரிய தொடர்ச்சியின்
மூலம் பெறப்பட்டது. ராஜரிஷிகள் அவ்வழியேதான் இதனை அறிந்து கொண்டார்கள். காலப்போக்கில் இந்தப் பாரம்பரிய சங்கிலி உடைக்கப்பட்டுவிட்டது. அதனால் இந்த யோக அறிவியல் தொலைக்கப்பட்டுவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
4.3 நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருப்பதால், ஜீவன்
முக்தியை அடையும் அந்தப் பழமையான அறிவியல், நித்யானந்தத்தில் நுழையும் அந்தப் பழமையான அறிவியல் இன்று என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது. இந்த அறிவியலின் மேலான புதிர்களை நீ நிச்சயமாகப் புரிந்துகொள்வாய்.

இது புதியதுமல்ல, பழையதுமல்ல என்றும் நிலைத்திருப்பது
முப்பத்திரண்டு வயது நிரம்பி இருந்தபோது கிருஷ்ணர் இந்த அறிக்கையை விடுத்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முப்பத்திரண்டு வயதே நிரம்பியவராக இருந்தார்! அவரது உடலுக்கு வெறும் முப்பத்திரண்டு வயதே நிரம்பி இருந்தது.
ஆனால் அவர் சொல்கிறார், "நான் இந்த அறிவைச் சூரியனுக்குக் கொடுத்தேன்," என்று! நிச்சயமாக இதைப் புரிந்துகொள்வது என்பது மிகவும் கஷ்டம்.
தர்க்க ரீதியாக உங்களால் இந்த
வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாது.
நீங்கள் நடைமுறையில் பயன்படுத்தும் தர்க்க
அறிவைக் கொண்டு இந்த வார்த்தைகளின்
பொருளை அறிந்துகொள்ள முடியாது.
ஆனால் கிருஷ்ணர், மேலும் பலவற்றையும் சொல்லிக்கொண்டே போகிறார்.
அடுத்த வரியில் கிருஷ்ணர் சொல்கிறார், "அறிவியல் எப்படி இருந்ததோ, அப்படி இல்லாமல் அழிந்துவிட்டது போலத் தெரிகிறது."
இந்த இரண்டு வாக்கியங்களை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
'இந்த ஸத்யம் புதியது அல்ல' என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இது முடிவற்றது. இந்த ஸத்யம் புதுமையானதும் இல்லை; பழமையானதும் இல்லை; நிலையானது.
நிலையானது என்றால், அது எப்போதும் இருப்பது. அது ஒருபோதும் பழமை ஆவதும் இல்லை. புதியதாக ஆவதும் இல்லை.
நிலையானது என்றால் காலத்தையும் கடந்து இருப்பது என்று பொருள்.
காலத்தின் அடிப்படையில் விவரிக்கப்படுகிற பொருட்களைத்தான் புதியது அல்லது பழையது என்று சொல்ல முடியும். புதிதான எதுவும் ஒரு நாள் பழையதாக மாறும். இன்று பழையதாக இருக்கும் ஒன்று, ஒரு சமயம் புதிதாக இருந்திருக்கும்.
நிலையானது என்றால் புதியதிற்கும் பழையதிற்கும் அப்பாற்பட்ட ஒன்று. நினைவுக்கு எட்டாத காலம் முதல் அது உள்ளது. ஆனால் அது என்றும் பழமை அடைவதில்லை. 'நிலையானது' என்பதன் பொருள் இதுவே.
இங்கு, ஜீவன் முக்தி அடைவதற்கான இந்த யோக விஞ்ஞானம் நிலையானது, நித்யமானது. அது புதியதும் அல்ல, பழையதும் அல்ல.
இந்தக் கணமே ஜீவன் முக்தியை அடைந்திடலாம்
மூன்றாவது அத்தியாயத்தில் நாம் கற்ற அதே யோகம், மேலும் விரிவாக இங்கே சொல்லப்படுகிறது.
இதன் ‘முதல் துளியை’ இதற்கு முந்தைய அத்தியாயத்தில் கொடுத்துள்ளேன்.
‘முதல் துளி’ என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் அந்த வார்த்தைகளை உங்களுக்குள் ஊடுருவ அனுமதித்தால், அந்த வார்த்தைகளுக்காக உங்களைத் திறந்து வைத்தால், அந்த வார்த்தைகள் ஞானமடைதலின் முதல் துளியை உங்களுக்கு நேரடியாகவே கொடுக்க முடியும். அவை, இறுதி விடுதலையின் முதல் படிக்கு உங்களை அழைத்துச் செல்ல முடியும்.
வாழ்வின் நோக்கமற்ற தன்மையினை உணர்ந்தீர்கள் என்றாலே போதும், உங்கள் உடலில், மனத்தில் உள்ள அழுத்தங்கள், தொல்லைகள், சுமைகள் எல்லாமே உங்கள் இருப்புத் தன்மையிலிருந்தே நீங்கிவிடும். அந்தக் கணமே நீங்கள் விடுதலை அடைவீர்கள்.
நீண்ட காலத்திற்குப் பிறகு பலன் தரக்கூடிய நுட்பங்களையோ, உத்திகளையோ கிருஷ்ணர் இங்கே தரவில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு பலன் தரும் மற்ற உத்திகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றை நீங்கள் எப்போதும் பயிற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும். உங்களது மகனோ, மகளோதான் அதன் பலனைப் பெறக் கூடும்!
கிருஷ்ணர் சொல்கிறார், "இல்லை, இப்பொழுதே, இங்கேயே, இதிலேயே இல்லாவிடில் எங்கும் இல்லை!"
இப்பொழுதே, இங்கேயே பலன் இல்லாவிடில் எங்கும் இல்லை; அவரது இந்த உத்திகள் எல்லாமே உடனடியாக, நேரடியாக அதன் அனுபவத்தைக் கொடுக்கக் கூடியவையாகவே இருக்கின்றன. இந்த நோக்கமற்ற தன்மையினுடைய ஒரு
> வாழ்வின்
> நோக்கமற்ற தன்மையினை
> உணர்ந்தீர்கள் என்றாலே
> போதும்,
> அந்தக் கணத்திலேயே
> நீங்கள்
> விடுதலை அடைவீர்கள்.
கருத்தையோ அல்லது நோக்கமற்ற தன்மையின் அழகினையோ உங்கள் உணர்விற்குள் செல்ல அனுமதித்தீர்கள் என்றால், அந்தக் கணமே ஜீவன் முக்தி என்ற தென்றல் உங்கள் இதயத்தில் நுழைந்துவிடும். அந்தக் கணமே உங்கள் இருப்புத் தன்மை குணமடையத் தொடங்கிவிடும்.
பவ ரோகம் என்கிற உணர்ச்சி நோய்களும் ஸம்ஸார ரோகம் என்கிற பிறப்பு இறப்பு என்னும் நோயும் குணமடையத் தொடங்குகின்றன.

அனுபவமே சிம்மாசனத்தில் அமரச்செய்யும்
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணர் சொல்கிறார், "நான் இந்த யோகத்தை விவஸ்வான் எனப்படும் சூரியனுக்குக் கொடுத்தேன். விவஸ்வான் மனிதகுலத்தின் தந்தையாகிய மனுவுக்கு உபதேசித்தார். மனு இந்த ஞானத்தை இக்ஷ்வாகுவுக்கு அளித்தார்."
இங்கே கிருஷ்ணர், மரபுவழியை அதாவது வம்சாவழியை சீடர்கள் மூலம் கொடுக்கிறார். குரு- சீடர் பரம்பரையை அவர் கொடுக்கிறார்.
"காலப்போக்கில் அந்த யோக விஞ்ஞானம் காணாமல் போய்விட்டது," என்று அவர் சொல்கிறார்.
இந்த விஞ்ஞானம் ஏன் மறைந்து போய்விட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்பொழுதே,
இங்கேயே,
இதிலேயே
இல்லாவிடில்
எங்கும் இல்லை!
நுட்பத்தைக் கேட்கும் சீடர் ச்ரத்தையுடன் இல்லாமலும் தயாராக இல்லாமலும் இருந்தார் என்றால், இயற்கையிலேயே அந்த நுட்பம் ஒரு சடங்காக மாறிவிடும்.
நுட்பத்திற்கும் சடங்கிற்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது, ச்ரத்தை!
ச்ரத்தையோடு செய்தால், சாதாரண சடங்கும் ஒரு பெரிய தியான நுட்பமாக மாறி, உங்களை ஜீவன் முக்திக்கு அழைத்துச் செல்லும். ச்ரத்தையோடு செய்யாமல், சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதை ஒரு நடைமுறை வழக்கமாகச் செய்தால், மிகச் சிறந்த தியான முறையும் ஒரு சடங்காக மாறிவிடும். தியான நுட்பங்களுக்கும் சடங்குக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ச்ரத்தையே!
"காலப்போக்கில் அந்த விஞ்ஞானம் காணாமல் போய்விட்டது," என்று சொல்கிறார். அவர் மேலும், "மிக மேலான யோக விஞ்ஞானம் கற்றுத் தரப்பட்டது, மிக மேலான யோகவிஞ்ஞானம் வழங்கப்பட்டது," என்ற ஒரு அருமையான வாக்கியத்தையும் பயன்படுத்தி இருக்கிறார்.
ஒரே தலைமுறையில் நீங்கள் இந்த உயர்வான விஞ்ஞானத்தை இழக்க முடியாது. ஒரே தலைமுறையில் அதை ஒருபோதும் இழக்க முடியாது. ஒரே ஒரு ஞானமடையாத சீடர் இருந்தால் போதும், காலப்போக்கில் அந்த முழு அறிவியலும் அழிந்துவிடும். சீடர்களின் மரபுவழித் தொடரை உடைக்க, அந்தச் சங்கிலிக் கோர்வையில் உள்ள ஒருவர் போதும்.
பிரச்சினை என்னவென்றால், உங்கள் குரு ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கும்போது, நீங்கள் சரியான தகுதியை அடையாமல் அவருடைய இருக்கையில் அமரும்போது, நீங்கள்தான் மிகவும் அபாயகரமான மனிதராக இருக்கிறீர்கள்.
vம்சாவழியாக மிகவும் எளிதாகச் சிம்மாசனத்தில் அமரும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். அவர்களிடம் ஞானத்தைத் தவிர மற்ற அனைத்தும் இருக்கும்.
ஒரு இயக்கத்தை உருவாக்கும் மனிதர், அதைத் தம்முடைய சக்தியின் மூலமும் ஞானத்தின் மூலமும்தான் உருவாக்குகிறார். அவரிடம் சக்தி இல்லை என்றால், அவரைச் சுற்றி எந்த ஒரு இயக்கத்தையும் உருவாக்க முடியாது.
உருவாக்கியவரைத் தொடர்ந்து அடுத்து வரும் தலைவருக்கு அந்த முழு இயக்கமும் ஒரு பரிசே. ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு அதனை நடத்துவதற்குத் துணைபுரிகிற வகையிலே முழுமையான கட்டமைப்பும் உருவாக்கப்பட்டு, முழு அளவிலே செயலாற்றிக்கொண்டிருக்கும் ஒரு இயக்கம் அவருக்குப் பரிசாகக் கொடுக்கப்படுகிறது.
தான் ஒரு எழுத்தாளர் என்பதினாலேயே ஒருவர் எழுதினாரென்றால், அவர் மிகவும் அபாயகரமானவராகவே இருப்பார். ஆனால் கலப்படமில்லாமல், நேர்மையான முறையில் எழுதுவதற்கு என்று ஏதாவது ஒன்று அவரிடம் இருந்து, அவர் எழுதினாரென்றால்தான் சரியாக இருக்கும். அப்படிப்பட்டவரே எழுத்தாளர் என்று சொல்லப்படுகிறார்.
ஒரு சின்ன கதை:
ஒரு மனிதர் சொன்னார், "நான் எழுதிய ஐந்து புத்தகங்களும் அதிகமாக விற்பனையாகி, புத்தக விற்பனையில் சாதனை அளவை எட்டிய பிறகுதான், எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நான் உணர்ந்தேன்!"

அவரது நண்பர் கேட்டார், "பிறகு நீங்கள் எழுதுவதையே நிறுத்திவிட்டீர்களா?"
அதற்கு அவர், "இல்லை, இல்லை. அதற்குள்
நான் மிகவும் பிரபலமாகிவிட்டேன்.
அதனால் என்னால் எழுதுவதை நிறுத்த
முடியவில்லை," என்றார்.
மற்றவருடைய சிம்மாசனத்தை மரபுவழி வாரிசாகப் பெறும்போது, நீங்கள் அஹங்காரத்தால் நிரம்பியவராக இருப்பீர்கள். பரம்பரையாக வந்தவர்களுக்கு ஞானத்தைத் தவிர மற்றனைத்தும் இருக்கும். பரம்பரையாக வந்தவர்களிடம் செல்லவேண்டாம் என்று எப்போதும் மக்களிடம் சொல்வதுண்டு. ஏனென்றால் அங்கு அனைத்துக் கட்டமைப்புகளும் மற்றவரால் உருவாக்கப்பட்டிருக்கும். பரம்பரையாக வந்தவர் அவரது பிரதிநிதியாக மட்டுமே இருப்பார்.
அவருடைய சொந்த அனுபவம் என்று எதுவும் இருக்காது. அவர்கள் நல்ல நூலகக் காப்பாளராக மட்டுமே இருப்பார், குருவாக இருக்க மாட்டார்.
நூலகக் காப்பாளர், குரு இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நூலகக் காப்பாளர்கள் நல்லவர்களே. அவர்கள் புத்தகங்களைப் பாதுகாப்பார்கள். அவர்களால் புத்தகங்களை மட்டும்தான் பாதுகாக்க முடியும். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. வாரிசாக வந்தவரும் ஒரு நல்ல நூலகக் காப்பாளரே. ஒரு நல்ல கிளிபோல் அவரால் எல்லாவற்றையும் மீண்டும் அப்படியே திருப்பிச் சொல்லமுடியும்.
ஜென் புத்தமதத்திலிருந்து ஒரு சின்ன கதை:
மிகப்பெரிய குருவின் சீடர் ஒருவர், தம் சீடர்களிடம் ஜென் மதத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜ்ஞானகுரு ஒருவர் அவரிடம் வந்து, "நீங்களே ஞானமடையவில்லை. பிறருக்குக் கற்றுத்தர உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?" என்று கேட்டார்.
அஹங்காரத்தினால் பதிலுக்கு அந்தச் சீடர், "நான் ஒரு மிகப்பெரிய குருவின் சீடர் என்று உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.
அந்த ஜென் குரு சிரித்துக்கொண்டே
சொல்கிறார், "தேநீர் வைக்கப்பட்டிருந்த
கோப்பையைச் சுத்தம் செய்த நீர், அந்தத்
தேநீரைப் போன்று சுவைக்குமா?"
தேநீர்க் கோப்பையைக் கழுவிய தண்ணீர்,
தேநீருக்குச் சமமானது என்று உங்களால்
சொல்ல முடியுமா?
இங்கு ஒரு கோப்பையில் தேநீர் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.மற்றொரு கோப்பையில் தேநீர்க் கோப்பையைக் கழுவிய தண்ணீர் உள்ளது.
தேநீர் வைக்கப்பட்டிருந்த கோப்பையைக் கழுவிய தண்ணீருக்கும் தேநீருக்கும் என்ன தொடர்பு இருக்கும்?
ஒரு தொடர்பும் இருக்காது. தேநீரின் மணம் அந்தத் தண்ணீரில் மிக அரிதாகவே இருக்கும்.
அதனால் ஒருவர் வெறும் பரம்பரைவழி
வாரிசாக வந்து, ஞானமடையாதவராக
இருந்தால், அவர் மிகவும்
அபாயகரமானவராகவே இருப்பார். அவர்
பெரும் பாதிப்பையே ஏற்படுத்துவார்.
அவர் வெறுமனே புத்தகத்தைச் சுமந்து செல்வார். அதன் அறிவை அல்ல!
அதனால் தான் ஜென் குருமார்கள், தங்கள்
உடலைவிடும் முன், தங்களுடைய
புத்தகங்களை அழித்துவிடுகிறார்கள்.
"உன் வாழ்க்கையில் ஜென் இருந்தால், நீ ஞானமடைந்து இருந்தால், நீ கற்றுக் கொடுக்க முடியும். இல்லாவிடில் சும்மா இருந்துவிடு. சமுதாயத்தையாவது தொந்தரவு செய்யாமல் இருப்பாய்," என்று அவர்கள் சொல்கிறார்கள்.
ஒருவர் வெறும்
பரம்பரைவழி
வாரிசாக வந்து,
ஞானமடையாதவராக
இருந்தால்,
அவர் மிகவும்
அபாயகரமானவராகவே
இருப்பார்.
நீங்கள், சமுதாயத்தில் மேலும் தொல்லை ஏற்படுத்தாமல் இருப்பீர்கள். அனுபவம் இல்லாத, ஆனால் பரம்பரைவழியாக வாரிசாக மாறுபவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள்.
புத்தகங்கள், ஆலோசனைப் பெட்டகங்களே!
ஒரு சின்ன கதை:
ஒரு சிறுமி, தன் தாய் இரவு உணவுக்காக மீன் சமைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தத் தாய் மீனின் தலைப் பகுதியையும் வால் பகுதியையும் வெட்டி விட்டு, பிறகு அதை வறுக்கும் பாத்திரத்தில் வைத்தார்.
அந்தச் சிறுமி தன் தாயைப் பார்த்து, "அம்மா, மீனின் தலையையும் வால் பகுதியையும் ஏன் வெட்டினீர்கள்," என்று கேட்டாள்.
தாய் சொன்னார், "இப்படித்தான் நான் எப்போதும் செய்வேன். ஏனென்றால் எனது அம்மா இப்படித்தான் செய்தார்கள்."
அந்தச் சிறுமிக்கு இந்தப் பதில் திருப்தியைக் கொடுக்கவில்லை. அச்சிறுமி தன் பாட்டியிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டாள்.
அவரும் "எனக்குத் தெரியாது. எனது தாய் இப்படித்தான் செய்தார்கள்," என்று பதில் சொன்னார்கள். அதனால் அந்தச் சிறுமியும் அவளது கொள்ளுப்பாட்டியைச் சந்தித்து, அதே கேள்வியைக் கேட்டாள்.
சற்று யோசித்தபிறகு அந்தக் கொள்ளுப்பாட்டி சொன்னார், "எனது வறுக்கும் பாத்திரம் மிகவும் சிறியதாக இருந்ததால், அந்த முழு மீனும் அதில்கொள்ளவில்லை. அதனால் நான் அதன் தலையையும் வாலையும் வெட்டினேன்," என்றார்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஞானமடையாதவராக இருந்தீர்களானால், எதைப்பார்த்தாலும் அதை எளிதில் ஏற்றுக்கொள்பவராக இருப்பீர்கள். ஆனால் அதில் உள்ள ஸத்யத்தையும் உண்மைப் பொருளையும் தவற விட்டுவிடுவீர்கள்.
எந்த ஒரு சட்டத்தையாவது அழிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்கள் என்றால், அதில் இருக்கும் உண்மைப் பொருளை விட்டு விட்டு, எழுத்தளவில் அதைப் பின்பற்றிடால் போதும், அது தானாக அழிந்துவிடும். அதை எழுத்தளவில் மட்டும் பின்பற்றி விட்டு, அதில் இருக்கும் உண்மைப் பொருளை மறந்து விட்டால், அந்தச் சட்டத்தின் கருத்துக்கு எதிராகத்தான் செயல்படுவீர்கள். அந்தச் சட்டம் உண்மையில் எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்தக் காரணத்துக்கு எதிராகச் செயல்படுவீர்கள்.
இது போல்தான் காலப்போக்கில், ஞானமடையாத மக்களும் நேர்மை அற்ற மக்களும் இந்தத் துறையில் நுழைந்து, அந்த யோகத்தை நேர்மையற்றதாகச் செய்து விட்டார்கள். அதன் காரணமாக இந்த யோகம் காணாமல் போய்விட்டது.
அதனால்தான் மீண்டும் மீண்டும் நமது
உபநிஷதங்கள் வாழும் ஞானிகளிடம்
செல்லுமாறு வற்புறுத்துகின்றன.
நமது புத்தகங்கள் அனைத்தும் ஆலோசனைப் பெட்டகங்களே! (Manuals).
தங்களால் ஞானத்தைக் கொடுக்கமுடியாது
என்பதையும் தாங்கள் வெறும் ஆலோசனை
நூல்கள் மட்டுமே என்பதையும் தாங்களே
இறுதி லக்ஷியம் அல்ல என்பதையும் மிகவும்
தைரியத்துடன் ஒப்புக்கொண்டு, அதைத்
> உங்கள் வாழ்க்கையில்
> ஜென் (Zen) இருந்தால்
> மட்டுமே,
> நீங்கள் மற்றவர்களுக்குக்
> கற்றுக் கொடுக்க முடியும்.
துணிவுடன் தெளிவாக அறிவிக்கிற ஒரே நூல்கள் வேதங்கள் மட்டுமே!
உங்களுக்கு முடிவான, இறுதியான ஒப்பீடு வேண்டுமென்றால், நீங்கள் ஒரு வாழும் ஞானியிடம்தான் செல்ல வேண்டும்!
மருத்துவ புத்தகங்கள் எல்லாம் இறுதியில் என்ன சொல்கின்றன?
உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்!
இந்த ஒரு வரியுடன் அவை முடிந்துவிடுகின்றன. இவை வெறும் ஆலோசனைப் புத்தகங்களே. மருத்துவ புத்தகத்தைப் படித்துவிட்டு நீங்கள் மருந்தை எடுத்துக்கொள்ள முடியாது. மருத்துவர் அல்லாத ஒருவரிடம் சென்று நீங்கள் மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவில் மருத்துவரின் உதவியாளரைக் ‘கம்பவுண்டர்’ என்று சொல்வார்கள். ஒரு மருந்துகடைக்காரர் நாளடைவில் அந்தத் தொழிலின் இரகசியத்தைக் கற்றுக்கொள்வதைப் போல, கம்பவுண்டர்களும் டாக்டரின் அருகிலேயே இருந்து, அவர் சொல்லும் மருந்துகளை நோயாளிகளுக்கு எடுத்துக் கொடுப்பதன் மூலம், நாளடைவில் தலைவலி என்றால் மஞ்சள் மாத்திரை தரவேண்டும்; வயிற்று வலிக்கு பச்சை மாத்திரை, முதுகு வலிக்கு கருப்பு மாத்திரை என்று பலவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நோய்க்கு என்ன நிற மாத்திரை என்று அறிந்துகொள்கிறார்கள்.
நீங்கள் சென்று அந்தக் கம்பவுண்டரிடம் மாத்திரை வாங்கிக் கொண்டால், சில சமயம் உங்கள் நோய் குணமாகலாம்; ஆனால் அது மிகவும் அபாயகரமானது.
கம்பவுண்டர்களிடமிருந்து மருந்து பெறுவதும் ஞானமடையாத குருமார்களிடமிருந்து கற்பதும் ஒன்றே!
தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், கம்பவுண்டரால் உங்கள் உடல் மட்டும்தான் பாதிப்பு அடையும்.
ஆனால் ஞானமடையாத குருவோ பல ஜென்மங்களுக்கான உங்கள் வாழ்க்கையை அழித்து விடலாம். ஜென்ம,ஜென்மங்களுக்கு உங்களுக்குத் தொல்லைகளைத் தரும் பிரச்சினைகளை உருவாக்கலாம்; துக்கத்தை ஏற்படுத்தலாம்; உங்களைத் தவறாக வழிநடத்தலாம்.
இது ஏனென்றால், முக்கியமான ஒரு கருத்தை நீங்கள் தவறவிட்டாலும் கூட, அது மொத்தமாக எல்லாவற்றையும் அழித்துவிடும்.
வெளியே தேடிமுடித்தால்தான் உள்ளே நுழையமுடியும்
இங்கே கிருஷ்ணர் சொல்கிறார்,
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:|
ஸகாலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப// 4.2
ஒரு முக்கியமான விஷயம் அவர் சொல்கிறார், ராஜர்ஷயோ விது: இந்த யோகம் ராஜரிஷிகளுக்குக் கொடுக்கப்பட்டது, சாதாரண ஞானிகளுக்கு அல்ல.
நீங்கள் நேற்றைய ஸத்சங்கத்தில் பங்கு கொண்டிருந்தால், அந்த அறிவியலைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். கிருஷ்ணர் கற்றுத்தந்தது உயர்ந்த ஆன்மீகம் (Quantum spirituality) என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
குவாண்டம் ஸ்பிரிச்சுவாலிட்டி, அது பொருள் சார்ந்த உலகம் மற்றும் ஆன்மீக உலகம் இரண்டையுமே உங்களுக்குக் கொடுக்கிறது. அதனால்தான் அவர் சொல்கிறார் "இந்த அறிவியல் ராஜரிஷிகளுக்கு வழங்கப்பட்டது."
இது சாதாரண ஞானிகளுக்காக மட்டுமே என்று இருந்தால், அவர்கள் உள் உலகம், உள் தளம் இவற்றை மட்டும் வலியுறுத்தி இருப்பார்கள். இது அரசர்களுக்கு மட்டும் என்று இருந்தால், அவர்கள் வெளி உலகம் செல்வம் இவற்றை மட்டும் வலியுறுத்தி இருப்பார்கள். இங்கே கிருஷ்ணர், "ராஜரிஷிகளுக்காக," என்று சொல்கிறார்.
> கம்பவுண்டர்களிடமிருந்து
> மருந்து பெறுவதும்
> ஞானமடையாத
> குருமார்களிடமிருந்து
> கற்பதும் ஒன்றே!
இந்த யோக விஞ்ஞானம் அரசர்களுக்கு,
அவர்கள் வெறுமனே அரசர்களாக மட்டுமே
இல்லாமல் ஞானமடைந்தவர்களாகவும்
இருந்தால் மட்டுமே வழங்கப்பட்டது;
அதுபோல் ஞானமடைந்த குருமார்களுக்கு,
அவர்கள் வெறுமனே ஞானமடைந்த குருவாக
மட்டுமே இல்லாமல் அரசராகவும் இருந்தால்
மட்டுமே வழங்கப்பட்டது.
மொத்தத்தில் சுருக்கமாகச் சொல்லப்போனால்,
ஞானமடைந்த அரசர்களுக்கு மட்டுமே
இந்த யோக விஞ்ஞானம் வழங்கப்பட்டது.
அவர்களால்தான் இந்த யோகத்தை உள்ளவாறே
பாதுகாக்க முடியும்.
> குவாண்டம்
> ஸ்பிரிச்சுவாலிட்டி,
> அது உங்களுக்குப்
> பொருள் சார்ந்த உலகம்
> மற்றும்
> ஆன்மீக உலகம்
> இரண்டையுமே
> கொடுக்கிறது.
தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஞானமடைந்த ஒருவர், அரசராக இருந்தாலோ அல்லது ஒரு அரசர், ஞானமடைந்தவராக இருந்தாலோ மட்டுமேதான் ஆன்மீகத்தின் பூர்ணதன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
மக்கள் என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்கும் கேள்வி இது: "ஏழைகளுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?"
"உணவும் மருந்தும் அந்த ஏழை மக்களுக்குக் கொடுங்கள். அவர்களுக்குச் சேவை செய்யுங்கள்," என்று நான் அவர்களிடம் சொல்வதுண்டு.
பொருள் சார்ந்த உலகின் செல்வத்தை அனுபவித்த பணக்காரர்களால் மட்டுமே ஆன்மீகத்தின் பொருளையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நேர்மையான ஸத்யத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
வெளி உலக செல்வத்தைப் பார்த்திராத ஏழை மக்களால் மதத்தை மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும். இவர்கள் கடவுள் முன் நின்று ஏதாவது கேட்டுப் பிரார்த்தனைதான் செய்ய முடியும். ஆனால் அவர்களால் முடிவான ஆன்மீகத்தை என்றும் புரிந்துகொள்ள முடியாது.
வெளி உலகத்தை முழுமையாகப் பார்த்தவரால்தான், வெளி உலகத்தில் ஒன்றும் இல்லை என்று புரிந்துகொள்ள முடியும். அவரால்தான் உள் உலகில் நுழைய முடியும். அவர் மட்டும்தான் உள் தளத்திற்குள் நுழைய முடியும்.
உங்களுக்கு வெளி உலகில் எதிர்பார்ப்புகள் இருந்தால், உங்களால் முடிவான ஆன்மீகத்தை அனுபவிக்க முடியாது. இறுதியான ஜீவன் முக்தத் தன்மையைத் தரும் ஆன்மீகத்தை உங்களால் அனுபவிக்க முடியாது.
தெரியுமா உங்களுக்கு, கடவுளுக்கும் புத்தியுண்டு
அரசர் மட்டுமே வெளி உலகில் முழுமையான ஏமாற்றத்தைச் சந்தித்திருக்க முடியும். அதனால் ஞானமடைவதற்கான பாதையில் நுழைவதற்கு அவரே பூரணத் தகுதி உள்ளவராகிறார். ஏனென்றால், வெளி உலகில் இருக்கிற எந்த ஒன்றினாலும் தம்மை நிறைவடையச் செய்ய முடியாது என்று அவருக்குத் தெரியும். அவர் எல்லாவற்றையும் பார்த்து விட்டார். அனைத்து விதமான சௌகரியங்கள், புலன் இன்பங்கள், பிற சுகங்கள் இவற்றை அதன் உச்ச அளவிற்கு அனுபவித்தவர் அவர். நேர்மையுடன், மனப்பூர்வமாக ஆன்மீகத்தில் நுழைவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.
வெற்றியினால் வரும் மனச் சோர்வை அனுபவிக்காதவர் ஆன்மீகத்தில் நுழைந்தால், அவர் கடவுள் முன் நின்று, "கடவுளே எனக்கு இதைக் கொடுங்கள், அதைக் கொடுங்கள்," என்று பிச்சை எடுப்பார். அவர் ஒரு மதவாதியாக இருக்கலாம்.
காலையிலிருந்து இரவுவரை உட்கார்ந்து
அவர் சடங்குகளைச் செய்யலாம். ஆனால்
அவர் எப்போதுமே ஆன்மீகவாதியாக
முடியாது.
சமயவாதிக்கும் ஆன்மீகவாதிக்கும்
இடையே மிகப்பெரிய வித்தியாசம்
இருக்கிறது. நீங்கள் கேட்பதை எல்லாம்
கொடுக்கும் சக்தி (ஆற்றல்) கடவுளிடம்
இருக்கிறது என்பதை நீங்கள் அறியும்போது,
உங்கள் மதம் ஆரம்பமாகிறது.
உங்களுக்கு எப்போது, எதைக் கொடுக்க
> யோக விஞ்ஞானம்
> ஞானமடைந்த
> அரசர்களுக்கு மட்டுமே
> வழங்கப்பட்டது.
> அவர்களால்தான்
> இந்த யோகத்தை
> உள்ளவாறே
> பாதுகாக்க முடியும்.
வேண்டுமென்கிற புத்தி, புத்திசாலித்தனம் கடவுளுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, நீங்கள் ஆன்மீகத்திற்குள் நுழைகிறீர்கள்!
நமக்கு என்ன தேவை என்பதைக் கொடுக்கும் சக்தி கடவுளுக்கு உள்ளது என்று நாம் நம்புகிறோம். ஆனால் சரியான சமயத்தில் அதைக் கொடுக்கும் புத்திசாலித்தனமும் அவருக்கு உள்ளது என்பதை நாம் நம்புவதில்லை!
அதனால்தான், நாம் பிச்சையெடுத்துக்கொண்டே இருக்கிறோம். கடவுளுக்குச் சக்தியும் புத்திசாலித்தனமும் இருக்கிறது என்று நம்பும் ஒருவரால்தான் ஆன்மீகத்தில் நுழைய முடியும். அதுவும் எப்போது கொடுக்க வேண்டும்; என்ன கொடுக்க வேண்டுமென்பது கடவுளுக்குத் தெரியும் என்ற முழுமையான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆன்மீகம் ஒரு முடிவான சொகுசு வாழ்க்கை! வெளி உலக வசதிகளை அனுபவிக்காத ஒரு ஏழை மனிதர், ஒரு மதவாதியாக இருக்க முடியும். இதை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர் கடவுள் முன் நின்று பிச்சை கேட்கலாம், வழிபடலாம்.
ஆனால் வெளி உலகத்தை இறுதிவரை அனுபவமாகப் பார்த்து, அதனால் முழுவதுமாக ஏமாற்றமடைந்து, வெற்றியினால் வரும் மனச்சோர்வை முழுவதுமாக அனுபவித்த ஒரு மனிதரால் மட்டுமே, உள் உலகை நோக்கித் திரும்ப முடியும். அவரால் மட்டுமே குணப்படுத்துபவராக ஆக முடியும்.
வாழ்வின் நோக்கமற்ற தன்மையைப் புரிந்து கொண்டவரால் மட்டுமே தன்னையும் பிறரையும் குணப்படுத்த முடியும் என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. அவரால் மட்டுமே குணப்படுத்துபவராக இருக்க முடியும்.
அப்படிப்பட்டவர்தான் உண்மையான ஆன்மீகவாதியாக இருக்க முடியும். அவரால் மட்டுமே உண்மையான ஆன்மீக இருப்பு நிலை உடையவராக இருக்க முடியும்.
இங்கே கிருஷ்ணர் ராஜரிஷி என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். உள் உலகிலும் வெளி உலகிலும் முழுமையாக வாழ்ந்த ஒருவரால் மட்டுமே பூர்ணத்துவத்தின் ஸத்யத்தை அனுபவிக்க முடியும்.
ஸத்யத்தை உணருவதில் நேர்மையாக இல்லாத ஒருவர், இந்த அமைப்பிற்குள் நுழைந்தால், நிச்சயமாக அவர் அதன் நேர்மையைக் கெடச் செய்வார். அவர் அந்த அமைப்பில் இருத்தலே, அந்த அமைப்பைக் கெடுத்துவிடும்.
அதனால் கிருஷ்ணர் சொல்கிறார், "காலப்போக்கில் அந்த விஞ்ஞானம் அழிந்து, காணாமல் போய்விட்டது."
உங்களை உன்னதத்திற்கு அழைத்துச் செல்லும் சத்தியம்
அடுத்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் சொல்கிறார்,
ஸ ஏவாயம் மயா தேऽத்ய யோக: ப்ரோக்த: புராதன:।
பக்தோऽஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேத்த உத்தமம் ॥ 4.3
"மிகப் பழைய யோகமாகிய, இறுதி ஞானமாகிய நித்ய ஆனந்தத்தில் நுழைவது பற்றித்தான் நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருக்கிற காரணத்தால், இந்த யோகத்தின் மிக உயர்ந்த இரகசியத்தைப் புரிந்துகொள்வாய்," என்று அவர் சொல்கிறார்.
இதை மிக ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்வம் இல்லாத ஒருவரிடம் சென்று இந்த முடிவான ஸத்யத்தைப் பற்றிச் சொல்ல முடியாது.
மீண்டும் சொல்கிறேன், ஆர்வம் இல்லாத ஒருவரிடம் இந்த ஸத்யத்தை வழங்க முடியாது. ஆர்வம் இல்லாத ஒருவரிடம் சொல்லப்படுகிற ஸத்யம் அவருக்கும் பிறருக்கும் ஆபத்தை உருவாக்கும்.
"ஸ்வாமிஜி, தயவுசெய்து உங்களுடைய ஆன்மீக அனுபவத்தைப் பற்றியும் நீங்கள் ஞானமடைந்த வழிமுறையைப் பற்றியும் சொல்லுங்கள்," என்று அனேக தியான முகாம்களில் மக்கள் மீண்டும் மீண்டும் கேட்பதுண்டு.
> வெற்றியினால் வரும் மனச்சோர்வை முழுமையாக அனுபவித்த ஒரு மனிதரால் மட்டுமே, உள் உலகை நோக்கித் திரும்ப முடியும்.

அவர்கள் எனக்குத் தெரிந்தவர்களாகவோ,
அல்லது குறைந்தது ஆறுமாதம் என்னுடன்
தொடர்புடையவர்களாகவோ இருந்தால்
தவிர, நான் எனது சொந்த அனுபவத்தைப்
பற்றியோ, ஆன்மீக அனுபவத்தைப்
பற்றியோ அவர்களிடம் பேசுவதில்லை.
நான் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருப்பேன்.
"ஸ்வாமிஜி, ஏன் நீங்கள் இதைப் பற்றி எங்களிடம் பேசுவதில்லை? ஏன் நீங்கள் உங்கள் ஆன்மீக அனுபவத்தைப் பற்றி எங்களுக்குச் சொல்வதில்லை ?" என்று மக்கள் கேட்பார்கள்.
என் உள்ளார்ந்த இரகசியமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் நீங்கள் இல்லையென்றால், நீங்கள் எப்போதும் அதைப் பற்றிய சந்தேகத்திலேயே குழம்பிக் கொண்டிருப்பீர்கள்; உங்களுக்கு நீங்களே கெடுதலை விளைவித்துக்கொள்வீர்கள்; முழுக் காரியத்தையும் வீணாக்கிவிடுவீர்கள்.
இதற்கு இரண்டு கோணங்கள் உண்டு. ஒன்று, உங்களுக்குத் தைரியம் இருந்தால், அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும்பொழுதே, நேரடியாகவே அதை எதிர்த்துக் கேள்வி கேட்பீர்கள்.
"இது வெறுமனே ஒரு பொய். இது ஒரு கட்டுக் கதை. நீங்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? இது உண்மையாக இருக்க முடியாது," என்று நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் நேரடியாகவே எதிர்ப்பீர்கள்.
ஆர்வம் இல்லாத
ஒருவரிடம்
ஸத்யத்தைப் பற்றிச்
சொல்ல முடியாது.
மற்றொரு கோணத்தில், உங்களுக்கு அந்த
அளவிற்குத் தைரியம் இல்லை என்றால், "சரி,
இது மேலும் ஒரு கதையே! நான் ஓராயிரம்
கதைகள் கேட்டிருக்கிறேன். இங்கு மேலும்
ஒரு கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
விடுவிடு! எப்படியாயினும் இது இலவசம்
sதானே!" என்று நீங்கள் நினைப்பீர்கள்.
இரண்டில் ஏதாவது ஒன்றுதான் நடக்கும்.
இதைத் தவிர, மூன்றாவதாக ஒரு கோணம்
இருக்கிறது. அது நான் ஏற்கனவே சொன்ன
‘சந்தேகம்’ என்கிற கோணம். இது பொய்யாக
இருக்குமோ? அல்லது நிஜமாகத்தான்
இருக்குமா? என்று சந்தேகக் கண்ணோடு
பார்க்கிற கோணம். இது எல்லாவற்றையுமே
வீணாக்கிவிடும். அதனால் ஆன்மீக
அனுபவங்களைப் பக்குவம்
இல்லாதவர்களிடம் பகிர்ந்துகொள்ள
முடியாது. ஒன்றுமில்லாத காரியத்திற்காக
அதை வெளியிடமுடியாது.
> குரு, தமது
> இரகசிய அனுபவங்களைப்
> பகிர்ந்துகொள்ள
> வேண்டுமென்றால்,
> சீடர் போதிய மனப்பக்குவம்
> உடையவராக ஆக
> வேண்டியது அவசியம்.
அதைப் பகிர்ந்து கொண்டால், அந்த அனுபவம் உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டி, உங்கள் வாழ்வையே மாற்றி அமைக்கும் ஆற்றலாக மாறவேண்டும். அப்படியென்றால்தான் பகிர்ந்துகொள்தல் பயனுடையதாக இருக்கும்.
ஆன்மீக அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதனால், அது உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து, உங்களை அதே தளத்திற்குள் (Space) நுழைய வைத்தால், அதே முயற்சியை நீங்களும் எடுக்க உங்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தால், அந்தப் பகிர்ந்துகொள்தல் தகுதி உடையதாகிறது.
"நானும் அதே மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்; நானும் அதே ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும்; கண்டிப்பாக நான் அதைத் தள்ளி போடக் கூடாது!" என்று நீங்கள் நினைத்தீர்களானால், அது உங்களுக்கு உத்வேகம் கொடுக்கும் சக்தியாக மாறுமானால், பகிர்ந்துகொள்தல் பயனுடையதாகிறது. இல்லாவிட்டால் பகிர்ந்துகொள்தல் பயனில்லாததாகிறது.
எனக்கும் அவருக்கும் உள்ள காதல் இது
தென்னிந்தியாவில் ஒரு சிறந்த ஞானி இருந்தார். சிவனின் மீது அவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பாடும் பாடல்களை எழுதி வைத்துப் பாடுவதில்லை. அவர் பக்தியில் கரைந்து உருகிப் பாடுவார். அதனால் அவர் பாடிய பாடல்கள் எழுத்தில் எதுவும் பதிவாகவில்லை.
அவரைச் சுற்றி இருந்த அவரது நெருங்கிய சீடர்கள் அவற்றைப் புத்தகமாக வெளியிட வேண்டும் அல்லது அவற்றை எழுதியாவது வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது இந்தச் சமுதாயத்திற்கு உபயோகமாக இருக்கும் என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.
அதற்கு அவர் "இல்லை அவை என் கடவுளுக்கு நான் எழுதிய நெருக்கமான காதல் கடிதங்கள்.
எப்படி நான் இதைப் பொது மக்களுக்காக வெளியிட முடியும்? இது எனது நெருங்கிய உறவின் வெளிப்பாடு. இது எனது தனிப்பட்ட உறவு. இதை எப்படி நான் வெளியிட முடியும்? எப்படி நான் அதை பொதுமக்கள்ளுக்காக வெளியில் கொண்டு வரமுடியும்?'' என்று சொல்லி அதை எழுதி, வெளியிட மறுத்து விட்டார்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒருவரை
முதன்மைறயாக அப்போதுதான்
பார்க்கிறீர்கள். உடனே அவர் நேரடியாகவே
உங்களிடம் உங்கள் தனிப்பட்ட
விஷயங்களைப் பற்றிய கேள்விகளைக்
கேட்க ஆரம்பித்தால், உங்களுக்கு எப்படி
இருக்கும்? அது பண்பற்ற முறையாக
இருக்காதா?
அது மிகவும் பண்பற்றது!
இந்தியர்கள் மட்டும்தான் இந்தத் தவற்றைச் செய்கிறார்கள். அது மிகவும் முரட்டுத்தனமானது; பண்பற்றது. தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வதைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் புரிந்துகொள்வதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவர்களின் போக்கு எதிர்பாராததாக உள்ளது.
ஒரு மனிதரிடம் உங்களைப் பற்றி நீங்கள் அறிமுகம் கூட செய்துகொள்ளாமல், நேரடியாக அவருடைய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய கேள்விகளை அவரிடம் கேட்க ஆரம்பித்தீர்கள் என்றால், அந்த மனிதர் எப்படி மனம் வருந்துவார்!
இந்தச் சமுதாய நன்னடத்தையைப் புரிந்துகொள்ள சிறிதளவு புத்திசாலித்தனமே போதும். நீங்கள் நேரடியாக எதையும் பேசமுடியாது, எதையும் கேட்க முடியாது. அது மிகவும் பண்பாடு அற்ற செயல். உங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை நேரடியாக யாருடனும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது மிகவும் கடினமானது.
அதே போல் குரு சொல்கிறார், “யாராவது வந்து உங்களிடம் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார்கள் என்றால், உங்களால் அதைப் பகிர்ந்து கொள்ள முடியாது. நீங்கள் அவருடன் நெருக்கமாகப் பழகும்போதுதான் வெளியிட முடியும்.”
அதன் பிறகுதான் உரையாடல் நடைபெறும். உரையாடல் நிகழ்வதற்கு ஓரளவு நெருக்கம் தேவை. இருவருமே, அவரவர்களுடைய கருத்துகளாலும் வாதங்களாலும் நிரம்பப் பெற்றிருந்தார்களேயானால், அங்கு உரையாடல் நிகழவே முடியாது.
இருவருமே தவறான அபிப்ராயம்
கொண்டவர்களாகவும்
பாரபட்சமான கருத்துகளைக்
கொண்டவர்களாகவும் முழுமையாகப்
புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருந்தால்,
உரையாடல் நிகழவே முடியாது.
நான் எப்போதும் மக்களுக்குச் சொல்லும் ஒரு கருத்து : திருமணத்திற்குப் பின், முதல் வருடம் கணவன் பேசுவார். மனைவி கேட்பார். இரண்டாவது வருடம் மனைவி பேசுவார், கணவன் கேட்பார். மூன்றாவது ஆண்டுக்குப் பிறகு இருவருமே பேசுவார்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேட்பார்கள்! அங்கு உரையாடல் நிகழ்வதே இல்லை! வாதம் மட்டுமே நடக்கும்!
வாதம் செய்யும் மன நிலையில் அடுத்தவர் இருக்கும்வரை ஸத்யத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது. ஸத்யத்தை வெளியிட முடியாது.
“இது என்னுடைய தனிப்பட்ட உறவு. கடவுளிடம் எனக்கு உள்ள நெருக்கமான உறவு. அதைப் பொதுமக்களிடம் எவ்வாறு நான் பகிர்ந்துகொள்ள முடியும்? என்னால் முடியாது,” என்று குரு சொல்கிறார்.
“ஏன்? நீங்கள் எங்களிடம் இப்போது பகிர்ந்துகொள்கிறீர்களே! எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இதை ஏன் நீங்கள் உலகத்துடன் பகிர்ந்துகொள்ள முடியாது?” என்று தம்மைப் புத்திசாலி என்று கருதிய ஒரு சீடர் கேட்டார். அதற்கு அந்த குரு சொல்கிறார், “சீடராக மாறியதால் நீ எனது பாகமாக மாறிவிட்டாய். நான் இந்தப் பாடல்களை, எனது பாகமாக மாறிவிட்ட ஒருவரிடம்தான் பகிர்ந்துகொள்ள முடியும்; அவருடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.
உடல் ரீதியாக வேறொரு உடலாக இருந்தாலும் மனத்தால் என்னுடன் இசைந்து இருக்கிறாய். என்னை உள் வாங்குவதற்கு, நீ முழுமையாகத் தயாராக இருக்கிறாய்.
தெய்வீக ஆற்றலைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிற கருவப்பையைப் போன்று இருக்கிறாய். இந்தக் காரணத்தினால்தான் நான் என் அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்கிறேன்.”
தெய்வீக உறவு மலரத் தேவையான உள் உலக ஆயத்தங்கள்
நீங்கள் ஆழ்ந்து உள்வாங்கும் மன நிலையில் இல்லாவிட்டால், முழுமையான, பூர்ணமான, களங்கமற்ற மனிதராக ஆகாவிட்டால், இந்த முடிவான ஸத்யத்தை உங்களால் உள்வாங்க முடியாது.
தயவுசெய்து தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், இறுதி ஸத்யம் என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.
நீங்கள் ஸத்யத்தைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கும்போது, அது எப்போதும் தர்க்கத்தில்தான் ஆரம்பமாகிறது.
கேட்பவர் வாதம் செய்யும் மன நிலையில் இருக்கும்வரை ஸத்யத்தைப் பகிர்ந்துகொள்ளவும் முடியாது, வெளியிடவும் முடியாது.
உங்களுடைய தர்க்கம்தான் முதலில் பேசப்படுகிறது. வார்த்தைகள் தர்க்க ரீதியாகவே செல்கின்றன. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, நீங்கள் தர்க்கத்தை விட்டு விட வேண்டும். இல்லையென்றால், உங்களால் தெய்வீகத்தை அடைய முடியாது.
தர்க்க மனப்பான்மை கொண்டவராக நீங்கள் இருந்தீர்களானால், உங்களால் கடவுளிடம் பேசமுடியாது. உரைநடையின் மூலமாக உங்களால் அவரிடம்
தொடர்புகொள்ளமுடியாது. செய்யுள்
மூலமாகத்தான் நீங்கள் கடவுளிடம்
தொடர்புகொள்ள முடியும். அதனால்தான்,
உலகம் முழுவதும் கடவுளிடம் பிரார்த்தனை
என்று வரும்போது, அது பாடல்கள்
மூலமாகவும் செய்யுட்கள் மூலமாகவும்தான்
செய்யப்படுகிறது.
இறுதி ஸத்யம்,
அது தர்க்கத்திற்கு
அப்பாற்பட்டது.
கீழைநாட்டுக்கலாச்சாரம் மேலைநாட்டுக்கலாச்சாரம் என எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் சரி; இந்து மதம், புத்தமதம், யூத மதம், ஜைனமதம், கிறிஸ்துவமதம் என இவை எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலுமே கடவுளிடம் தொடர்புகொள்ளும்போது, எப்போதும் செய்யுள் மூலமாகவே தொடர்புகொள்ளப்படுகிறது. ஏனென்றால் தர்க்கத்தின் மூலம் தெய்வீகத்திடம் தொடர்புகொள்ள முடியாது.
தெய்வீகத்திடம் தொடர்புகொள்ளும்போது, உரைநடை ஒருபோதும் பயன்படுவதில்லை.
உங்களுக்குள் தெய்வீக உறவு மலர வேண்டுமானால், நீங்கள் அன்புடையவராக இருக்க வேண்டும். நீங்கள் கவிதை மொழியில் பேசுபவராக இருக்க வேண்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளும் ஒருவரால்தான், குருவின் ஒரு பகுதியாக மாறிய ஒருவரால்தான், குருவின் அனுபவங்களை உள்வாங்க முடியும்.
அதனால்தான் குரு சொல்கிறார், “என் பாடல்களை உன்னிடம் பகிர்ந்துகொள்கிறேன். ஏனென்றால், நீ நானாக மாறிவிட்டாய். ஆனால் என்னால் இதைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.”
தென்இந்தியாவில்உள்ளதமிழ்நாட்டில், மாணிக்கவாசகர்என்றசிறந்தஞானி இருந்தார். அவர் வாழ்நாள் முழுவதும் சிவனைப் பற்றிப் பலபாடல்கள் பாடினார். ஆனால் அவர் எந்தப் பாடலையும் எழுதிவைக்கவில்லை. அவர் எந்தச் செய்யுளையும் எழுதி பதிவுசெய்யவில்லை. அவர் எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார். அவ்வளவுதான்.
ஒரு சமயம் சிவபெருமானே ஒரு வயதானவர் போல் கீழிறங்கி வந்து,

"நீங்கள் சிவனைப் பற்றி மிக அழகாகப் பாடல்களைப் பாடுவீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன். எனக்காக, நீங்கள் ஏன் அவற்றைப் பாடக்கூடாது? நான் உங்கள் சீடர்," என்று சொன்னார்.
மாணிக்கவாசகர் மகிழ்ச்சிப் பரவச நிலையில் இருந்தார். அந்த மகிழ்ச்சிப் பரவசத்தில் அவர் அனைத்துப் பாடல்களையும் பாட ஆரம்பித்தார். சிவபெருமானே அந்தப் பாடல்கள் அனைத்தையும் எழுதிப்பதிவுசெய்தார்.
பதிவுசெய்த பிறகு, அந்தப் பனை ஓலைச் சுவடியில், 'பாடியது மாணிக்கவாசகர், எழுதியது அம்பலவாணன்' என்று சிவபெருமானே கையொப்பம் இட்டுச் சென்றார்.
அவர் அந்த ஓலைச் சுவடிகளைக் கோயிலின் நுழைவாயிலில் வைத்துவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலை சமய குருமார்கள், அந்த ஓலைச் சுவடிகளைப் பார்த்தார்கள். அந்தக்க கையொப்பம்தான் அவர்களுக்கு நடந்த லீலையை உணர்த்தியது. "மாணிக்கவாசகர் பாடினார், நானே அதைப் பதிவுசெய்தேன்," என்று சிவனே கையொப்பம் இட்டுள்ளார் என்பதனைத் தெரிந்து கொண்டார்கள்.
மாணிக்கவாசகர் கடைசிவரை அவர் தமது உடலைவிடும்வரை தம்முடைய பாடல்களைப் பதிவுசெய்யவே இல்லை.
> உங்களுக்குள்
> தெய்வீக உறவு
> மலர வேண்டுமானால்,
> நீங்கள்
> கவிதை மொழியில்
> பேசுபவராக
> இருக்க வேண்டும்.
ஒரு நாள் அவரது சீடர்கள் அனைவரும்
அவரிடம் சென்று, "குருவே, தயவுசெய்து
இந்தப் பாடல்களின் பொருளை எங்களுக்குச்
சொல்லுங்கள். அனைத்துப் பாடல்களின்
பொருளை எங்களுக்கு விளக்கிச்
சொல்லுங்கள்," என்று கேட்டார்கள்.
மாணிக்க வாசகர் நேராகக் கோயிலுக்குள்
நடந்து சென்று, "இந்த அனைத்துப்
பாடல்களுக்கும் அவர்தான் பொருள்," என்று
சொன்னார்.
அவர் இறைவனைச் சுட்டிக் காட்டி, "இவர்தான் அதன் பொருள்," என்று சொல்லிக்கொண்டே கர்பக்ரஹத்திற்குள் நடந்து சென்று, சிலைக்குள்ளே மறைந்து விட்டார்; கடவுளிடமே சங்கமமாகி விட்டார்.
இந்தக் கதை குரு-சிஷ்ய உறவின் மேன்மையை
எடுத்துக் காட்டுகிற ஓர் அழகான
அடையாள உருவகமாக இருக்கிறது. அவர்
தெய்வீகத்தோடு ஒன்றாகக் கரைந்தார். அவர்
கடைசிவரை அவரது பாடல்களை எழுதி
வைக்கவே இல்லை. அந்தப் பாடல்கள்
அனைத்தும் மிக அழகாக இருந்ததால்
கடவுளே கீழேயிறங்கி வந்து எழுதி வைத்தார்.
> பாடலில்
> பக்தி இருந்தால்போதும்,
> கடவுளே
> நேரில் வந்து
> அதனைப்
> பதிவுசெய்வார்.
நீங்கள், உங்கள் குருவின் பகுதியாக மாறாவிட்டால், அவருடைய செய்திகளைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம். அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார், "அர்ஜுனா, நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருப்பதால், நிலையான பேரானந்தத்தில் நுழைவதற்கான இந்த மேலான யோகத்தின் நுட்பம் இன்று என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. அதனால் மனித அறிவைக் கடந்த, உள்ளுணர்வைச் சார்ந்த இந்த யோக விஞ்ஞானத்தின் இரகசியத்தை நீ புரிந்துகொள்ள முடியும்."

## நமது உடனடி தேவை பக்தியே!
ஆர்வம் இல்லாத ஒருவரிடம் இதைச் சொல்ல முடியாது. மேலும் ஒரு விஷயம். ஆர்வமில்லாத ஒருவரிடம் நீங்கள் இறுதி ஸத்யத்தைப் பற்றிப் பேசுவது கூட பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.
அவர் அதைப் புரிந்துகொள்ளாதது மட்டுமல்ல, அதைத் தவறாகப் புரிந்து கொண்டு, பிறருக்கும் பிரச்சினையை உருவாக்க ஆரம்பித்துவிடுகிறார்.
சரியான மனிதரிடம் குரு பொய்யே சொன்னால் கூட, அது அந்த மனிதருக்கும் சமுதாயத்திற்கும் நல்லதே செய்யும். ஆனால் தவறான மனிதரிடம் சொல்லப்படும் ஸத்யமே கூட, அந்த மனிதருக்கும் சமுதாயத்திற்கும் தீமையையே விளைவிக்கும்.
சொல்லப்படுவது ஸத்யமா, பொய்யா என்பதை விட, அது யாரிடம் சொல்லப்படுகிறது என்பதுதான் முக்கியம்.
தவறான மனிதரிடம் அத்வைத கருத்தான 'நீங்கள் கடவுள்' என்கிற மிகப்பெரிய ஸத்யம் சொல்லப்பட்டால் கூட, அவர் தம்மையே கடவுள் என்று நினைத்துக் கொண்டு முட்டாள்தனமான செயல்களைச் செய்ய ஆரம்பித்துவிடுவார். தவறான மனிதரிடம் சொல்லப்படும் மிகப்பெரிய ஸத்யமும் தவறான செய்கைக்கே வழிவகுக்கும்.
நீங்கள்,
உங்கள் குருவின்
பகுதியாக மாறிவிட்டால்,
அவருடைய செய்திகளைப்
புரிந்துகொள்வது
மிகவும் எளிதாகிவிடுகிறது.
மேலும் ஒரு விஷயம்: கிருஷ்ணரால்
சொல்லப்படும் ஸத்யத்தை ஒரு தவறான
மனிதரால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே
முடியாது.
உதாரணமாக: ''நான் கடவுள். அனைத்தும் நானே, என்னிடம் சரணடையுங்கள்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஒரு மனிதர் கிருஷ்ணரிடம் முழுமையான ஈடுபாடுடன் இல்லாவிட்டால், கிருஷ்ணரின் மனப்பாங்குடன் இயைந்து இல்லாவிட்டால், கிருஷ்ணரைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் இருந்தால், அவர் இதைப்பற்றி என்ன நினைப்பார்?
''என்ன ஒரு அஹங்காரமான மனிதர் இவர்! என்னை அவரிடம் சரணடையச் சொல்வதற்கு அவருக்கு என்ன துணிச்சல்?''
இயற்கையாகவே, அந்த மனிதர் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக கிருஷ்ணருக்கு அதிகப் பிரச்சினையை விளைவிப்பார்.
இங்கே ஸத்யத்தை உள்வாங்குவதற்கான ஒரே தகுதி பக்திக்தான்.
இப்போது நேரம் வந்துவிட்டது
கீதையின் மற்ற மூன்று அத்தியாயத்தில் நான் சொல்லிலிருக்கும் கருத்துகளை நீங்கள் கேட்டிருந்தால், நல்லதுதான். ஏனென்றால் அது தர்க்க ரீதியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துவரை என்னால் தர்க்கத்தையும் ஆன்மீகத்தையும் ஒன்றாகக் கொண்டுவர முடிந்தது. இப்போது, நேரம் வந்துவிட்டது. நான் தூய ஸத்யத்தை, ஸத்யமாகவே வழங்க வேண்டும். தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உயர்ந்த கருத்துகளை, ஸத்யங்களைத் தர்க்கத்தின் மூலம் வெளியிட முடியாது. ஏனென்றால் தர்க்கம் அந்த அளவுக்குக் கூர்மையானது அல்ல! இறுதி ஸத்யத்தை வெளியிட, தர்க்கம் அவ்வளவு கூர்மையானது அல்ல.
"கடவுளை நீங்கள் ஏன் தர்க்க ரீதியாக நிரூபிக்கக் கூடாது?" என்று யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார்.
"என்னால் கடவுளைத் தர்க்க ரீதியாக நிரூபிக்க முடிந்தால், பிறகு தர்க்கம் கடவுளாக மாறிவிடும்!" என்று சொன்னேன்.
தர்க்கம் கடவுளைவிட சக்தி மிக்கதாக ஆகிவிடும். கடவுள் சக்திமிக்கவர். தர்க்கத்தால் அவரை நிரூபிக்க முடியாது. அவர் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவர்.
கிருஷ்ணர் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றைப் பற்றி, இங்குப் பேசப்போகிறார். இங்கேதான், நீங்கள் தர்க்கத்தைப் பின்னே விட்டு விட்டு, முழுமையாகத் திறந்த தன்மையோடு, எதிர்ப்பு தெரிவிக்காத முழுமையான மன நிலையில், உங்கள் இருப்புத் தன்மையைத் திறந்து வைத்து உள் வாங்குவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தர்க்கத்தைப் பொறுத்தமட்டில், ஒன்று, தர்க்கத்தின் மூலம் நீங்கள் எல்லாவற்றையும் அறிந்துகொள்வீர்கள். இல்லாவிட்டால் எதையுமே அறிந்துகொள்ள மாட்டீர்கள். அவ்வளவுதான். அதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆழமான போதனைகளுக்குப் போகும்போது, ஒன்று, நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள் அல்லது நீங்கள் தவறாகப் புரிந்துகொள்வீர்கள்.
கிருஷ்ணர், இப்போது வழங்கப் போகும் உபதேசங்கள் அனைத்தும் மிக ஆழமானவை. கடந்த மூன்று அத்தியாயங்களில் வழங்கப்பட்ட போதனைகளைவிட இவை மிகவும் ஆழமானவை.
அதனால்தான் அவர், "நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருப்பதாலும் மிகவும் நெருங்கியவனாக இருப்பதாலும் இப்போது நான் உனக்கு இந்த இரகசியங்களைச்
குரு,
ஒரு சரியான மனிதரிடம்
ஒரு பொய்யே
சொன்னால் கூட,
அது அந்த மனிதருக்கும்
சமுதாயத்திற்கும்
நல்லதே செய்யும்.
சொல்கிறேன். நீ என்னைச் சேர்ந்தவன்," என்று சொல்கிறார்.
அந்தக் காரணத்தினால்தான் அவர்
பக்தோஸி என்கிற வார்த்தையை
உபயோகப்படுத்துகிறார். "நீ எனது பக்தன்,
நீ எனது நண்பன்," என்று சொல்கிறார். ஸகா
என்றால் நண்பன் என்று அர்த்தம்.
கடவுள் சக்திமிக்கவர்.
தர்க்கத்தால்
அவரை நிரூபிக்க முடியாது.
அவர் தர்க்கத்துக்கு
அப்பாற்பட்டவர்.
கிருஷ்ணரின் மனப்பாங்குடன் இயைந்து செல்லாத ஒருவரால், குருவை நம்பத் தயாராக இல்லாத ஒருவரால் இந்தச் செய்தியை உள்வாங்க முடியாது. அவரால் அதனைப் புரிந்துகொள்ளவும் முடியாது. அவர் புரிந்துகொள்ளாதது மட்டுமல்லாமல், தவறாகவே புரிந்துகொள்வார். தவறான புரிந்துகொள்ளுதல் எப்போதும் குழப்பத்தையே உண்டாக்கும்.
இப்போது, கிருஷ்ணர் ஆழ்நிலை ஸத்யங்களுக்குள் நுழைகிறார். நீங்கள் உங்கள் பட்டறிவு தன்மையிலிருந்து கீழிறங்கி இதயத்துக்கு வரவேண்டும். உங்கள் முழு இருப்புத் தன்மையில் அமர்ந்து ஸத்யங்களைக் கேட்க வேண்டும்.
நீங்கள் தயாரா
இரகசியத்தை அறிந்திட...!
இங்கே கிருஷ்ணர் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறார். ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்
"அர்ஜூனா, நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருப்பதால் அறிவுக் கெட்டாத யோகமாகிய, இறுதி ஸத்யத்தை தெளிவாக அறிந்துகொள்வதன் இரகசியங்களை உனக்கு வழங்குகிறேன்."
நாம் இப்போது கிருஷ்ணர் போதித்த யோகவிஞ்ஞானத்துக்குள் நுழைவோம். கிருஷ்ணரிடம் ஒரு பிரார்த்தனை செய்து நாம் தொடங்குவோம்.
வஸுதேவஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம்|
தேவகீ பரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்||
வேதாந்தம் எப்போதும் ச்ரவணம், மனனம், நிதித்யாஸனம் என்று மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ச்ரவணம் என்பதன் பொருள் கவனித்தல்; மனனம் என்றால் தியானித்தல், ஆழ்ந்து சிந்தித்தல்; நிதித்யாஸனம் என்றால் உங்கள் வாழ்வில் அதை அப்படியே வெளிப்படுத்துதல் அல்லது உங்கள் வாழ்வில் அதை அனுபவித்தல்.
ஆனால் கிருஷ்ணர் சொல்லும் இந்த ஸத்யங்களுக்கு, இந்த மூன்று படிகளும் தேவையில்லை. அப்படியே கவனித்தால் போதுமானது. அனுபவமாக மாறுவதற்கு அப்படியே கேட்டால் போதும்.
ச்ரவணம் இருந்தால் போதுமானது. சரியான ச்ரவணம் நிதித்யாஸனமாக மாறுகிறது. வேறொன்றும் செய்யத் தேவையில்லை.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் முழுமையான திறந்த இருப்பு தன்மையுடனும் முழுமையான திறந்த மனத்துடனும் முழுமையான தளர்ந்த மன நிலையுடனும் அமர வேண்டும்.
இந்த வார்த்தைகள் அனைத்தும் குருவின்பொருட்டு அல்லாமல், உங்களின் பொருட்டு சொல்லப்பட்டது.
அதனால், நாம் சிறிது நேரம் மிக உயர்ந்த ஜ்ஞானகுருவாகிய கிருஷ்ணர் மீது த்யானம் செய்வோம். அவரது வார்த்தைகள், நம்முடைய இருப்புத் தன்மையை ஊடுருவிச் செல்ல அனுமதிக்குமாறு அவரை வேண்டி க்கொள்வோம். அவர் நமது உணர்வு நிலையில் தங்கி இருக்கட்டும். அவர் நம்மை இறுதி பேரானந்தத்திற்கு அழைத்துச் செல்லட்டும்.
ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அவரை ஆழ்ந்து தியானியுங்கள், பிரார்த்தியுங்கள்: “குருவே, எங்களை அனுபவத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். எங்களுக்குச் சரியான புரிதலைக் கொடுங்கள்.”

அவரது ஸாந்நித்யம் நமது உள் தளத்தை
உயர்த்தட்டும். அவர் நமது உள்வெளியில்
இருந்து கொண்டு நம்முடைய உணர்வு
நிலைக்கு ஒளியூட்டட்டும்.
கேள்வி: ஸ்வாமிஜி, சடங்கு முறைகள்
பொருத்தமுடையது என்று தற்சமயம்
கருத முடியாது, ஏனென்றால் நாம் அதன்
சட்டத்தொகுப்பைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். யோக அறிவியலை இழந்து விட்டோம் என்று கிருஷ்ணர் சொல்லும்போது, அவரும் அதைப்பற்றித்தான் பேசுகிறாரா?
நீங்கள் சொல்வது சரி, அதைப் பற்றித்தான் கிருஷ்ணர் பேசுகிறார்.
மிகப்பெரிய குருமார்கள், அவதாரங்கள் உட்பட, தங்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்த, அது சொற்களின் வடிவத்தில் இருந்தாலும் சரி அல்லது அது சொற்களற்ற வடிவத்தில் இருந்தாலும் சரி, அது எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இது ஏனென்றால், முதல் காரணம் அந்த அனுபவங்களுக்குப் பின்னால் உள்ள கருத்து அனைவருக்கும் பொருத்தம் உடையதாக இல்லை.
இரண்டாவது, தாங்கள் உணர்ந்ததை மற்றவர்களும் தங்களுக்குள் உணர வேண்டும்; மற்றவர்களையும் அதை உணரச் செய்ய வேண்டுமென்பது மட்டுமே அந்த மிகச் சிறந்த குருமார்களின் நோக்கமாக இருந்ததால், அதனைப் பெறுபவர்களைத் தயார் செய்வதுதான் முதல் அவசியமாக இருந்தது.
இந்த இரண்டு காரணங்கள்தான் இந்த ஸத்யங்களையும் அனுபவங்களையும் பெறும் மனிதர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. சீடர்கள், போதிய பயிற்சிகள் மூலம் தகுதியுடையவர்களாகும்போது, குருவிடம் தொடர்புகொள்ள அங்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை.
அவர்களால் மௌனத்தின் மூலமே தொடர்புகொள்ள முடிந்தது. இது குரு, சீடர் இடையே நிகழும் சக்தி பரிமாற்றம். இது ஒரு மிகவும் ஆற்றல் மிக்க, மிகவும் பயனுள்ள வழி. இந்தப் பரிமாற்றம் நடைபெறுவதற்கு, சீடர்கள் குரு இருக்கும் அதே உயர்ந்த சக்தி நிலையில் இருக்க வேண்டும்; குரு நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கும்போது, குரு இருக்கும் அதே உயர் சக்தி நிலையில் சீடரும் இருப்பது மிகவும் அவசியம் ஆகிறது.
இது சாத்தியம் என்பது எனது சீடர்களுக்குத் தெரியும். குரு, சீடர்களுக்குத் தீக்ஷை கொடுத்து, தம்முடைய சக்தி நிலையில்
இருக்க அவர்களுக்குப் பயிற்சி கொடு
க்க முடியும். அப்போதுதான், அவர்கள்
அவருடைய செய்திகளை நன்றாகக்
கிரகித்துக்கொள்ளமுடியும்.
ஆரம்பக் காலங்களில் மட்டுமல்ல, அதற்கு
பிறகும் கூட சில நேரங்களில் குருமார்கள்
வார்த்தைகளை உபயோகப்படுத்தி
இருக்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தைகள்
வெவ்வேறு சக்தி நிலையில், வெவ்வேறு
பொருள் கொண்டிருப்பதாக இருக்கிறது.
பெரும்பாலான நேரங்களில் அவை
உருவகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவை சடங்குகளாகவும் வடிமைத்துக்
காட்டப்பட்டிருக்கின்றன.
ஸத்யத்தை அனுபவமாக
உணர
நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்,
முழுமையான
திறந்த மனத்துடன்
இங்கு அமர வேண்டும்.
தாம் கொடுத்த ரொட்டி தமது உடல்தான் என்றும், தாம் கொடுத்த திராட்சை ரசம் தம்முடைய இரத்தம்தான் என்றும் இயேசு சொன்னபோது, தம்முடைய தேர்ந்தெடுத்த சீடர்கள் சிலர் மனித மாமிசத்தை உண்பவர்களாக மாற வேண்டுமென்ற கருத்தில் அவர் அதைச் சொல்லவில்லை. தம் சீடர்களிடம் தமது ஆற்றலைப் பகிர்ந்துகொள்ளுதலைப் பற்றிய ஒரு உருவகமே அது!
காலப்போக்கில் இது ஒரு சடங்காக மாற்றப்பட்டுவிட்டது. இந்தச் சடங்கைப் பின்பற்றுபவர்கள், இவற்றை ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தவரை அந்தச் சடங்கு அர்த்தமுள்ளதாக இருந்தது. அது ஒரு வழக்கமாக மாறிய பிறகு, அதன் உண்மைப் பொருளும் அதற்குரிய ஆற்றலும் மறைந்து விட்டது.
இந்த ஸத்யங்கள் மிக்க சக்தி வாய்ந்தவை என்ற காரணத்தினால்தான், குருமார்கள் இந்த ஸத்யங்களை மிக இரகசியமாகவே வைத்திருந்து, தங்கள் தகுதி வாய்ந்த சீடர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டார்கள்.
அந்த ஸத்யங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால், அவற்றின் சக்தியும் தவறாகவே பயன்படுத்தப்படும். அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கைகள் இருந்தும் அவை அவ்வப்போது தவறாகப் பயன் படுத்தப்பட்டும் இருக்கின்றன.
தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஸத்யங்களின் ஆற்றல், ஆரம்ப நிலையில், அதைப் பயன்படுத்துபவருக்கு மட்டுமே துக்கத்தை விளைவிக்கக் கூடியனவாக இருக்கின்றன. ஆனால் அடுத்த அடுத்த நிலைகளில், பிறருக்கும் துக்கத்தை விளைவிக்க, அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள கூடிய வகையிலே அவை இருக்கின்றன. அவ்வகை சக்திகளை உபயோகப்படுத்த புத்திசாலித்தனம் வேண்டும்.
உதாரணமாக, உங்களுடைய மூன்றாவது கண் மையம் திறக்கப்பட்டு, சக்தியூட்டப்படும்போது, எதை வேண்டுமானாலும் நிகழ்த்தும் திறமையை நீங்கள் பெறுகிறீர்கள். மூன்றாவது கண் மையம் ஆஜ்ஞா சக்ரம். இது இரட்டை இதழுடைய தாமரை வடிவில் குறிப்பிடப்படுகிறது.
ஒரு இதழ் சக்தியைக் குறிப்பிடுகிறது, மற்றொன்று ஞானத்தை, புத்தியைக் குறிப்பிடுகிறது. இந்தச் சக்ரம், இந்த சக்திமையம் ஆற்றலூட்டப்படும்போது,
ஒருவர் எதை வேண்டுமானாலும்
செய்யும் திறமையையும் அந்தத் திறனை
உபயோகப்படுத்தும் புத்திசாலித்தனத்தையும்
ஞானத்தையும் பெறுகிறார்கள்.
உங்களுடைய கனவுகள் அனைத்தும்
உண்மையாக முடியும். அதே சமயம் நீங்கள்
உணர்கிற அனைத்தும் கனவு என்பதுகூட
உங்களுக்குத் தெரியும்.
குருமார்கள் உணர்ந்த அனுபவங்களின்
இரகசியங்கள், ஆஜ்ஞா விழிப்படைந்த
சீடர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது.
மூன்றாவது கண்ணைத் திறப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்பது அதனை முயற்சி செய்தவர்களுக்குத் தெரியும்.
மனம் - உடல் - ஆன்ம அமைப்பில், அனைத்து ஆற்றலையும் கட்டுப்படுத்தும் மையமாக இது உள்ளது. அந்த ஆஜ்ஞா விழிப்படைய உங்களுடைய முழு அமைப்பும் சரியாகச் சக்தியூட்டப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, இதற்கு குருவின் வழிகாட்டுதலும் கருணையும் தேவை.
மிகச் சிறந்த ஞான குருவாகிய ரமணமகரிஷி, பெரும்பாலும் மௌனத்தின் மூலமே உபதேசித்தார். அவருடைய போதனைகள் மிகவும் எளிமையாகவே இருந்தன. "நான் யார்? நான் யார்? என்று உனக்குள் கேட்டுக்கொண்டே இரு, நீ ஸத்யத்தை உணர்வாய்," என்று சொல்வார்.
நான் சிறுவனாக இருந்தபோது, பகவான் ரமணரின் நேரடி சீடரிடமிருந்து இந்த உத்தியைப் பெற்றேன். ‘சுயவிசாரணை’ என்று அழைக்கப்படும் இந்த முறையைப் பின்பற்றினேன். அதன் விளைவாக எனக்குள் ஆழ்ந்த ஆன்மீக அனுபவம் விரிந்து மலர்ந்தது.
குரு - சிஷ்ய பாரம்பரியம் மிகவும் புனிதமானது. இந்தப் பூமியில் அது தொடர்ந்து இருக்கும்வரை விழிப்பு உணர்வு நிலையும் தொடர்ந்து இருக்கும்; அது உடையும்போது, இருள் கீழிறங்குகிறது.

யுகந்தோறும் மீண்டும் மீண்டும் பிறப்பேன்

4.4. அர்ஜுனன் சொன்னார், “கிருஷ்ணா! பிறப்பால் நீங்கள் சூரியக் கடவுளாகிய விவஸ்வானுக்கு இளையவர்.
ஆனால் கல்ப ஆரம்பத்திலேயே நீங்கள் இந்த யோகத்தை அவருக்கு உபதேசித்தீர்கள் என்பதை நான் எவ்வாறு புரிந்துகொள்வது?”
4.5 பகவான் சொன்னார்,
ஓ பரந்தப! நீயும் நானும் நிறைய பிறப்புகளைக் கடந்து இருக்கின்றோம். அவை எல்லாவற்றையும் நினைவில் வைக்க என்னால் முடியும். ஆனால்உன்னால் முடியாது!
4.6 நான் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் கடவுளாகவும் பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருந்தாலும் கூட, என் இயல்பை ஆண்டுகொண்டு என் மாயா சஃக்தியினால் மீண்டும் அவதரிக்கின்றேன்.

கூட்டு நேர்மறை உணர்வு நிலை குறைந்து, கூட்டு எதிர்மறை
உணர்வு நிலை அதிகரித்தால், அந்தச் சமயங்களில் நான் மீண்டும்
மீண்டும் பிறப்பெடுக்கிறேன்.
பக்தி உடையவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும்
நேர்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் நான் காலங்காலமாக,
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்.
மனித வேடத்தில் நம்மோடு கடவுள்
கிருஷ்ணர் தனது செய்தியைத் தொடங்குகிறார்.
இங்கு அர்ஜுனனின் கேள்விக்கு அவர் பதில் சொல்கிறார். அர்ஜுனனின் கேள்விக்கு மறுமொழியாக, கிருஷ்ணர் இந்தச் செய்தியை வழங்குகிறார்.
அர்ஜுனனுக்கு இன்னும் முதிர்ச்சி தேவைப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.
"சூரியக் கடவுள் பிறப்பால் உங்களை விட மூத்தவர் அவர் உங்களை விட வயதில் மிகவும் மூத்தவர்.
வயதில் இளையவரான நீங்கள் ஆரம்பத்திலேயே இந்த யோகத்தை அவருக்கு உபதேசித்தீர்கள் என்பதை எப்படி நான் புரிந்துகொள்ள முடியும்," என்று கேட்கிறார்.
அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒரே
வயதுடையவர்கள். ஆனால் இப்போது
கிருஷ்ணர் திடீரென்று ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்பே அவர் இந்த
யோகத்தைச் சூரியக் கடவுளுக்குக் கொடுத்ததா
கச் சொல்கிறார்.
இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். மேலும் அர்ஜுனன் கிருஷ்ணருடன் நீண்ட காலம் வாழ்ந்தவர். கிருஷ்ணரை அவர் மனிதராக அறிந்திருந்தார். மேலும் அவர் கிருஷ்ணரின் அனைத்து லீலைகளையும் அனைத்து நாடகங்களையும் மன நிலைகளையும் பார்த்திருக்கிறார். கிருஷ்ணரை மனிதராகத்தான் அர்ஜுனன் அதிகம் பார்த்திருக்கிறார். அதனால் இப்போது அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின் வார்த்தைகளை நம்புவது மிகவும் கஷ்டமாக உள்ளது.
இதே கஷ்டத்தைத்தான் அனைத்து சீடர்களும் அனுபவிக்கிறார்கள். ஞானகுருமார்களைச் சுற்றி வாழும் சீடர்கள் இதே கஷ்டத்தைத்தான் அனுபவிக்கிறார்கள்.
நம்மைக் கரை சேர்க்கத் தரையிறங்கிய தெய்வீகம்
தெய்வீகம் கீழிறங்கி, இந்தப் பூமியில் மனித உருவத்தில் நடமாடுவதைப் புரிந்துகொள்வது மிகக் கடினம்.
அர்ஜுனன் புரிந்துகொள்வதற்குத் திணறுகிறார். அர்ஜுனனால் தொடர்பு படுத்திக்கொள்ள முடியவில்லை. எவ்வாறு தெய்வீகம் கீழிறங்க முடியும்? இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது?
"ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நான் இந்த யோகத்தைச் சூரியனுக்கு வழங்கினேன்," என்று கிருஷ்ணர் எவ்வாறு அறிவிக்க முடியும்? இதனைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம்.
உதாரணமாக, திடீரென்று "ஒரு நூறு வருடங்களுக்கு முன் நான்தான் இந்த யோகங்களை எல்லாம் சில ஞான குருமார்களுக்கு உபதேசித்தேன்," என்று நான் சொன்னால், நீங்கள் எவ்வாறு உணர்வீர்கள்? அதனைப் புரிந்துகொள்ளவும் கிரகித்துக்கொள்ளவும் மிகவும் கஷ்டமாக இருக்கும் இல்லையா?
> தெய்வீகம் கீழிறங்கி, இந்தப் பூமியில் மனித உருவத்தில் நடமாடுவதைப் புரிந்துகொள்வது மிகக் கடினம்.
திடீரென்று, "ஒரு நூறு வருடங்களுக்கு முன், இந்த யோகங்களை எல்லாம் அப்போதிருந்த குருமார்களுக்கு நான்தான் உபதேசித்தேன்," என்று நான் அறிவித்தால், அதனை நம்புவது மிகவும் கஷ்டம். இயற்கையாகவே கேள்விகள் எழத்தான் செய்யும்.
இங்கும் அதே செயல்தான் நடக்கிறது. "இதை எப்படி இவர் சொல்ல முடியும்? என்னால் இதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?" என்று அர்ஜுனன் நினைக்கிறார்.
ஆனால் நிச்சயமாக அவர் சிறிது பணிவாக
இருந்தார். அதனால்தான், "இதை எப்படி
நான் புரிந்துகொள்ள முடியும்?" என்று
மட்டும் கேட்டு விட்டு, பணிவாக இருந்து
விட்டார்.
"நீங்கள் எப்படி இதைச் சொல்லலாம்?" என்று அவர் சொல்லவில்லை.
இரண்டாவது அத்தியாயத்தில், "அர்ஜூனா, எழுந்து போர் செய்," என்று கிருஷ்ணர் சொல்லும்போது, "நீங்கள் எவ்வாறு இதை சொல்ல முடியும்? எப்படி நீங்கள் என்னைப் பாவம் செய்யச் சொல்லலாம்?" என்று அர்ஜூனன் கேட்கிறார். ஆனால் இப்போது அவர் மிகவும் பணிவாக மாறிவிட்டார். ஸத்யத்தின் ஒரு துளியை அவர் அறிந்து கொண்டார். அவர் சிறிது அறிவாளியாக மாறிவிட்டார். "நான் இதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? தயவுசெய்து எனக்குப் புரியும் படியாகச் சொல்லுங்கள்," என்று அவர் கேட்கிறார்.
அவர் நம்பத் தயாராக இருக்கிறார். ஆனால் அவருக்குச் சிறிது விளக்கம் தேவைப்படுகிறது. இது சரி. ஆனால் பாரபட்சம் பார்க்கும் சில மக்கள் இருக்கிறார்கள், "இல்லை. எங்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. நாங்கள் அதை நம்பமாட்டோம். எங்களுக்கு அது தேவை இல்லை," என்று அவர்கள் சொல்வார்கள். இது போன்றவர்கள் விஷயத்தில், ஒன்றும் செய்ய முடியாது.
இங்கு அர்ஜூனன், "நான் நம்பத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் அதை எப்படிப் புரிந்துகொள்வது?
தயவுசெய்து எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
சரியான விஷயத்தை, தயவுசெய்து எனக்குக் காண்பியுங்கள்," என்று அர்ஜூனன் சொல்கிறார்.
ஞான குருமார்கள் இந்தப் பூமிக்கு கீழிறங்கி வரும் பொழுதெல்லாம் இதே கஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் அதே கஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள்.
"இராமராகவும் கிருஷ்ணராகவும் வந்த அதே சக்திதான் இப்போது கீழிறங்கி இராமகிருஷ்ணர் என்ற உருவத்தில் வந்திருக்கிறேன்,'' என்று இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அறிவித்தபோது, அவரைப் பைத்தியம் என்று அழைத்தார்கள்!
மக்கள் அவரை வரவேற்கவில்லை மக்கள் அவரை மதிக்கவில்லை. ஆனால் சரியான மனப்பக்குவமும் தகுதியும் உடைய சில மக்கள் அவருடைய வார்த்தைகளை ஏற்று தங்கள் வாழ்க்கையை உருமாற்றிக் கொண்டார்கள். அவர்கள், அவர் உபதேசங்களில் சொல்லப்பட்ட ஸத்யத்தை நிலைநாட்டினார்கள்.
நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பாருங்கள், அனைத்து இயக்கங்களும் இரண்டு வகையில்தான் தொடங்க முடியும். ஒன்று மிகப்பெரிய கூட்டத்துடனும் மிகப்பெரிய எண்ணிக்கையில் பின்பற்றுபவர்களுடன் தொடங்குகிறது.
கூட்டத்தில் அதிக எண்ணிக்கை இருப்பதாலும் வருபவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் அந்த இயக்கத்தை வழிநடத்தும் மனிதர், தம்மை மிக சக்தி உடையவராக நினைத்து, எல்லா அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் கொடுக்க ஆரம்பிக்கிறார். இந்த இயக்கங்கள் அதிக அளவு மக்கள் எண்ணிக்கையுடன் ஆரம்பிக்கிறது.
ஆனால் காலப்போக்கில் அவை தரத்திலும் அளவிலும் மெதுவாகக் குறைய ஆரம்பிக்கிறது. அந்த இயக்கத்தை நிறுவியவர் மரணம் அடைந்தவுடன், அந்த இயக்கமும் மரணம் அடைந்துவிடுகிறது.
ஞான குருமார்கள்
இந்தப் பூமிக்குக்
கீழிறங்கி வரும்
போதெல்லாம்
மக்கள்
அவர்களைப்
புரிந்துகொள்வதில்லை.
இரண்டாவது வகையான இயக்கம்
சமயச் சார்பான குழு. குருமார்கள்,
ஸத்யத்தை வெளியிடும்போது, அதைப்ப்
பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகம்
இல்லாவிட்டாலும் அவர்களின் குணம்
மேம்பட்டதாக இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பட்ட சில
மனிதர்கள் மட்டுமே அந்த ஸத்யங்களையும்
உபதேசங்களையும் கேட்பார்கள்.
"யார் இராமராகவும் கிருஷ்ணராகவும் கீழிறங்கி வந்தாரோ, அவரேதான் இங்கு,
இந்த உடலில் இராமகிருஷ்ணராக
அவதரித்துள்ளார்," என்று இராமகிருஷ்ணர்
அறிவித்தபோது, உண்மையில் அரிதாகச்
சிலரே அவரைப் பின்பற்றினார்கள்.
ஒரு சிலரே அவரை நம்பத் தயாராக
இருந்தார்கள். எண்ணிக்கை அவ்வளவாக
இல்லாவிட்டாலும் அங்கு நிச்சயமாக தரம்
இருந்தது. அந்தச் சிலர், அவர்களது வாழ்வை
உணர்வுமாற்றம் செய்து கொண்டார்கள்.
சிறியதாக, மிக மெதுவாக ஆரம்பித்தது,
இன்று விரிந்து உலக நாடுகள் முழுவதும்
தழைத்திருக்கும் சமயக்குழுவாகவும் ஆன்மீக
இயக்கமாகவும் உருவெடுத்திருக்கிறது.
> குருமார்கள்,
> ஸத்யத்தை
> வெளியிடும்போது,
> அதைப் பின்பற்றுபவர்களின்
> எண்ணிக்கை அதிகம்
> இல்லாவிட்டாலும்
> அவர்களின் குணம்
> மேம்பட்டதாக இருக்கும்.
ஆரம்பித்தபோது, பதினாறு சீடர்களே இருந்தார்கள். இராமகிருஷ்ணருக்குப் பதினாறு சீடர்களே இருந்தார்கள். இன்று லட்சக்கணக்கான மக்கள் அவரைக் கடவுளாக வணங்குகிறார்கள்.
லட்சக்கணக்கான மக்கள், அவர் உதிர்த்த உபதேசங்களின் ஸத்யத்தை உணர்ந்திருக்கிறார்கள். இந்த ஆன்மீக சமயக்குழுக்கள் மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கிறது. ஆனால் வேகமாக விரிந்து, வெடிக்கிறது.
அரசியல் இயக்கங்கள் மிகப்பெரிய அளவில் ஆரம்பிக்கப்படுகிறது, ஆனால் மெதுவாக இறந்துவிடுகிறது. அதை நிறுவியர் இறந்தவுடன் அந்த நிறுவனமும் அழிந்துவிடுகிறது.
ஆனால் ஆன்மீகக் குழுக்களில், அதை நிறுவியவர் இறந்தவுடன் செயல்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. அது பெருக ஆரம்பிக்கிறது.
அரசியல் சொற்பொழிவுக்கு எண்ணிக்கை தேவை. அதிக எண்ணிக்கையில் மக்கள் இருந்தால், சொற்பொழிவும் வலிமை உடையதாக இருக்கும்.
ஆனால் ஆன்மீக ஸத்ஸங்கங்களுக்குச் சிறப்புப் பண்புகளே தேவை. எந்த அளவுக்கு ஆழமான தேடுதல் உள்ள மனிதர்கள் இருக்கின்றார்களோ, அந்த அளவிற்கு ஆழ்ந்த ஸத்யங்கள் வெளிப்படும்.
ஒரு அரசியல்வாதிக்கு எண்ணிக்கைதான் ஊக்கமாக இருக்கும். தொலைக்காட்சியில் அது எப்படிப் காண்பிக்கப்பட்டது? எத்தனை செய்தித்தாள்களில் தம்முடைய அறிக்கைகள் வந்துள்ளன? தம்முடைய செய்திகள் வெளிவந்திருக்கும் பத்திரிகைகளின் பக்கங்களை வெட்டி, எத்தனை செய்தித் துண்டுகளைச் சேகரிக்க முடியும்? போன்ற விபரங்களே அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
ஆனால் ஆன்மீகவாதிக்கு, அவரால் எத்தனை அஹங்கார வெட்டுகளைச் செய்ய முடியும்; எத்தனை மக்களின் அஹங்காரத்தை வெட்டி உடைத்து அவர்களை விடுதலை செய்யமுடியும் என்பதுதான் முக்கியமாக இருக்கும்.
அரசியல்வாதிக்கு வெட்டி எடுக்கப்பட்ட செய்தி்த்தாள் துண்டுகள் மிக முக்கியம்; ஆன்மீகவாதிக்கு அஹங்கார வெட்டுக்கள் மிக முக்கியம்.
ஆன்மீகச் சொற்பொழிவின்போது, வந்திருக்கும் மக்களில் எத்தனை பேர் தீவிரமான தேடுதல் உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதும் அவர்களின் இயல்பும் முக்கிய வாய்ந்ததாக இருக்கிறது. வந்திருப்பவர்கள் எந்த அளவுக்கு தீவிரமான தேடுதல் உடையவர்களாக இருக்கின்றார்களோ, அந்த அளவுக்கு உயர்ந்த நிலை ஸத்யங்கள் வெளிப்படும்.
“எனது சிறந்த சொற்பொழிவுகள், எப்போதும்
குறைந்த எண்ணிக்கையாலான நெருங்கிய
பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது,”
என்று எப்போதும் நான் மக்களுக்குச்
சொல்வதுண்டு. மிகச் சிறந்த ஸத்யங்கள்,
சிறிய, நெருங்கிய வட்டத்திற்குள் மட்டுமே
பேசப்படுகிறது.
ஏனென்றால், நெருங்கிய பழக்கமுடைய குழுவிடம் ஸத்யத்தைப் பேசும்போது மட்டுமே அது ஒளிவு மறைவில்லாமல், கலப்படமில்லாமல், நேர்மையான முறையில் சொல்லப்படுகிறது. அது உங்கள் முழு இருப்பு நிலையையே அசைத்துவிடும். உங்களுடைய முழு வாழ்க்கையையும் உருமாற்றம் செய்துவிடும்.
இதனை உள் வாங்குவதற்குத் தயாராக இல்லாதவர்கள் இதனைப் பெற முடியாது.
அதனால்தான், இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆழ்ந்த ஸத்யங்களைப் பேசும் பொழுதெல்லாம் கதவுகளை மூடிவிட்டு, தம் நெருங்கிய சீடர்களை அழைத்து அவர்களிடம் மட்டும் பேசுவார். பொதுமக்களிடம் அதை அவர் பேசமாட்டார்.
நம்மைக் கடவுளாக்கிட வந்த கடவுளின் இரகசியம்
இந்த மொத்தக் கீதையுமே ஒரே ஒரு மனிதருக்குத்தான் வழங்கப்பட்டது. கிருஷ்ணர் கீதையை வழங்கும்போது ஒரே ஒரு மனிதர்தான் அதைக் கேட்டார். ஆனால் இன்று இலட்சக்கணக்கில் கூட இல்லை, கோடி க்கணக்கான மக்கள் படித்து, அதன்படி செயல்படுகிறார்கள். அதனைப் பின்பற்றி வாழ்கிறார்கள்.
எல்லா இந்துக்களுக்கும் இது ஒரு அடிப்படை நூல். நூறு கோடி இந்துக்களுக்கு இதுதான் அடிப்படை திருமறைநூல். ஒரே ஒரு மனிதர்தான் கிருஷ்ணர் சொல்வதைக் கேட்டார். இன்று இந்த உலகம் முழுவதும் அதை உபயோகப்படுத்துகிறது. அதனால் ஸத்யத்தை வெளிப்படுத்த, அதனைக் கேட்கும் மனிதரின் இயல்புதான் முக்கியமே தவிர, மக்களின் எண்ணிக்கை அல்ல.
இப்போது கிருஷ்ணர் இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கத் தொடங்குகிறார்,
இந்த அழகான ஸ்லோகத்தை நான் மீண்டும் சொல்கிறேன்.
பஹூநி மே வ்யதீதானி ஜந்மானி தவ சார்ஜுந |
தான்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப || 4.5
பகவான் சொல்கிறார், "அர்ஜூனா,
நிறைய நிறைய பிறப்புகள் நீயும் நானும்
கடந்திருக்கிறோம். என்னால் அவற்றை
எல்லாம் நினைவிகொள்ள முடியும்.
ஆனால் உன்னால் முடியாது."
கிருஷ்ணர் முதலில் சொல்கிறார், "நாம்
இருவரும் நிறைய பிறப்புகளைக் கடந்து
வந்திருக்கிறோம். அவற்றையெல்லாம்
என்னால் நினைவிகொள்ள முடியும்.
ஆனால் உன்னால் முடியாது."
பிறகு அவர் சொல்கிறார், "நான்
> ஸத்யம்,
> ஒளிவு மறைவில்லாமல்
> நேர்மையான முறையில்
> சொல்லப்படும்போது,
> அது
> உங்களுடைய
> மொத்த
> இருப்புநிலையையும்
> அசைத்துவிடும்.
பிறப்பற்றவன், அழிவற்றவன், அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளாக இருந்தும் கூட, என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியால் மீண்டும் அவதாரம் எடுக்கிறேன்."
அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஶ்வரோऽபி ஸந் |
ப்ரக்ரு' திம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா //4.6
இப்போதுதான் அவர் அர்ஜுனனிடம் தம் தெய்வத் தன்மையை முதன் முறையாக அறிவிக்கிறார் என்று நான் நினைக்கிறேன்! கிருஷ்ணர் இதுநாள்வரை அர்ஜுனனுக்குப் பட்டறிவுப்பூர்வமாக ஸத்யங்களை அறிவுறுத்தியும் பட்டறிவை அவருக்குக் கொடுத்தும் ஆச்சாரியாரின் பாத்திரத்தைத்தான் நடித்துக் கொண்டிருந்தார்.
> பட்டறிவுப்பூர்வமாக
> ஸத்யங்களை
> அறிவுறுத்திக்
> கொண்டிருப்பவர்,
> வெறும் ஆச்சாரியார்
> மட்டுமே!
முதன் முறையாக அவர் தன்னைத் திறக்கிறார்.
அவருடைய இயல்பை பற்றிய உண்மையை
அறிவிக்கிறார். அவரது இயல்பின் தெய்வீக
தன்மையைக் காட்டுகிறார்.
இந்தத் தருணத்தில்தான் கிருஷ்ணர்
இறுதி ஸத்யத்தை உள்ளவாறே பேசத்
தொடங்குகிறார் என்று நினைக்கிறேன்.
அதுவரை அர்ஜுனனிடம் தம் உணர்வைத்
திறந்து வைக்க சிறிது தயங்கினார் என்று
நினைக்கிறேன்.
ஒரு சீடர் தயாராக இல்லாதபோது, குரு தன்னைத் திறந்து வைக்க முடியாது, நீங்கள் ஸத்யத்தைச் சொல்ல முடியாது. இப்போது அந்தச் சீடர் தயாராக இருக்கிறார். உடனே கிருஷ்ணர் தம்முடைய இயல்பை, தன்மையை வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.
நான் பிறப்பற்றவனாக இருந்தாலும் தெய்வீக தன்மை வாய்ந்த என் உடல் அழிவற்றதாக இருந்தாலும் அனைத்து வாழும் உயிரினங்களுக்கு நான் கடவுளாக இருந்தாலும்க்கூட, நான் யுகந்தோறும் என் இயல்பான தெய்வீக தன்மை வாய்ந்த உருவத்தில் அவதரிக்கிறேன்.
மூன்று விஷயங்களை நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்.
முதலில் அவர் சொல்கிறார், "நான் பிறப்பற்றவன்; நான் பிறப்பு எடுப்பதில்லை. நான் முடிவான பரப்ரம்மம்," என்று கிருஷ்ணர் தெளிவாகத் தம்முடைய தன்மைகளை அறிவிக்கிறார். இவ்வளவு தெளிவாக எவரும் இதுவரை அறிவித்ததில்லை என்று நான் நினைக்கிறேன்.
"நான் கடவுளின் புதல்வன்," என்றுதான் ஏசு சொல்கிறார். ஆனால் இங்கே கிருஷ்ணர் நேரடியாகவே ஸத்யத்தை அறிவிக்கிறார். "நான் கடவுள்," என்று அவர் சொல்கிறார்.
கட்டாயமாக, ஏசு கடவுள் அல்ல என்பது இதன் பொருள் அல்ல. ஒரு தருணத்தில், அவர் சில நெருங்கிய சீடர்களுக்கு, "தந்தையும் மகனும் ஒன்றே," என்று சொல்கிறார்.
தயவுசெய்து தெளிவாக இருங்கள், சீடர்
முதிர்ச்சி அடையும்போதுதான், அவர் தம்
குருவை அறிந்துகொள்கிறார்.
இங்கே கிருஷ்ணர் நேரடியாகவே, "நான் அஜோஸி - பிறப்பற்றவன், நிலையான விழிப்பு, நிலையான ஆனந்தம், தெய்வத் தன்மை வாய்ந்த என் உடல் என்றும் அழிவதில்லை, நீங்கள் எப்போதும் என்னுடன் தொடர்புகொள்ளலாம்; நான் இறப்பதும் இல்லை; நான் பிறப்பதும் இல்லை," என்று அறிவிக்கிறார்.
பிறப்பெடுக்காத ஒன்று
என்றும் இறப்பதில்லை.
பிறப்பெடுப்பவைதான்
இறக்கின்றன.
நாம்
பிறப்பதும் இல்லை,
இறப்பதும் இல்லை
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இது: பிறப்பெடுக்காத ஒன்று என்றும் இறப்பதில்லை; பிறப்பெடுப்பவைதான் இறக்கும்!

"நான் பிறப்பதும் இல்லை, இறப்பதும்
இல்லை அனைத்து உயிரினங்களுக்கும்
நான் கடவுள்!" என்று கிருஷ்ணர் இங்கு
அர்ஜூனனிடம் அறிவிக்கிறார்.
"ஸ்வாமிஜி, உடலை விட்டுவிட்ட குருமார்கள்
நமக்குப் போதிக்க முடியுமா? உடலை
விட்டுவிட்ட குருமார்களாகிய பரமஹம்ஸ
யோகானந்தர், மஹா அவதார் பாபாஜி
இவர்களுடன் நாம் தொடர்புகொள்ள
முடியுமா?" என்று ஒருவர் என்னிடம்
கேட்டார்.
அதே போன்ற கேள்வியை மற்றொருவரும்
கேட்டார். அவர், "நான் அவர்களை
வழிபட்டால், அவர்கள் எனக்கு வழிகாட்ட
முடியுமா? அவர்கள் எனக்கு ஸாந்நித்யத்தைக்
காட்ட முடியுமா?" என்று கேட்டார்.
நான் அவரிடம் "தெளிவாக இருங்கள். உடலை விட்டுவிட்ட குருமார்கள், நீங்கள் நினைப்பது போல் இறந்துவிடவில்லை. அவர்கள் இறக்கவில்லை. அந்த குருமார்கள் உயிருடன் இருந்தபோது, அவர்களுடைய ஸாந்நித்யத்திற்கு ஒரு உடல் இருந்தது, அவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய ஸாந்நித்யத்திற்கு ஒரு உடல் இல்லை அவ்வளவுதான்," என்று சொன்னேன்.
உடல் இருப்பதாலோ, உடல் இல்லாததாலோ அவர்களுடைய ஸாந்நித்யத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. உடலை விட்டுவிட்ட குருமார்கள், எப்போதும் உங்களுக்குக் கிடைக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களை நோக்கித் திரும்ப வேண்டும், அவ்வளவுதான். அவர்கள் நிலையானவர்களாக இருப்பதால், நமக்கு எப்போதும் கிடைக்கக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் ஸ்தூல சரீரத்தில் இருக்கும்போது, அவர்களுடைய ஸாந்நித்யத்திற்கு ஒரு ஸ்தூல உடல் இருக்கும்.
அவர்கள் இல்லாதபோது, அவர்கள் ஸாந்நித்யத்திற்கு உடல் இருக்காது. அவ்வளவுதான். ஆனால் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் உயிரோடிருக்கிறார்கள்.
சாதாரண மனிதன் இறக்கும்போது, அவனது ஆன்மா உடலை விட்டுவிடுகிறது. குருமார்களைப் பொறுத்தவரை அவர்கள் உடலை விட்டுவிடுகிறார்கள். இந்த வார்த்தையே வித்தியாசமானது. சாதாரண மனிதனுக்கு உடலை விட்டு ஆன்மா பிரிகிறது, நாம் அதை, "ஆன்மா சென்றுவிட்டது, அவர் உயிர் பிரிந்துவிட்டது," என்று சொல்கிறோம்.
ஆனால் குருமார்களைப் பொறுத்தமட்டிலும் அவர்கள்தான் உடலைவிடுகிறார்கள். அதனால், அவர்களுடைய உடல் இருப்பதற்கும் இல்லாததற்கும் அவர்களுடைய ஸாந்நித்யத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர்கள் இந்தப் பூமியில் எப்போதும் இருப்பார்கள். மனித சமுதாயம் முழுவதுக்கும் அவர்கள் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்.
மனிதன் எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாத பொக்கிஷம்
"குருமார்களைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம்," என்று எப்போதும் நான் மக்களிடம் சொல்வதுண்டு. ஏனென்றால் அவர்களுக்கு உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுடைய ஸாந்நித்யம் மாறுவதில்லை.
தீவிரமான ச்ரத்தையோடு நீங்கள் முயற்சி செய்தால், அவர்கள் உடலோடு இல்லாவிட்டாலும் அவர்களிடம் நீங்கள் தொடர்புகொள்ள முடியும். அவர்களுடைய செய்தியைப் பெற முடியும்! உங்களால் அவர்களிடம் பேச முடியும்! அவர்களிடம் தொடர்புகொள்ள முடியும்!
உங்களிடம் தீரமும் ச்ரத்தையும் இல்லாதபோது, வாழும் குருமார்களையும் நீங்கள் தவறவிடுவீர்கள்.
இறந்த குருமார்களிடம் கூட, நீங்கள் ச்ரத்தையாக முயற்சி செய்தால், ஸத்யத்தைப் பெற முடியும்; அடைய முடியும்; ச்ரத்தை இல்லாவிட்டால், வாழும் குருவைக் கூட நீங்கள் இழப்பீர்கள்.
புரிந்துகொள்ளுங்கள், "அனைத்து
உயிரினங்களுக்கும் நானே கடவுள்.
ஆனாலும் நான் யுகந்தோறும் என் இயல்பான
தெய்வத் தன்மை வாய்ந்த உருவில் எனது
மாயா சக்தியை உபயோகித்து மீண்டும்
மீண்டும் அவதரிப்பேன்," என்று அவர்
சொல்கிறார்.
சாதாரண மனிதனுக்கு
உடலை விட்டு
ஆன்மா பிரிகிறது,
குருமார்களைப்
பொறுத்தமட்டிலும்
அவர்கள்தான்
உடலைவிடுகிறார்கள்.
"எனது மாயையின் காரணமாக நான் உடல் எடுத்துக் கொண்டு கீழே வருகிறேன். என்னை நானே பிறப்பித்துக் கொள்கிறேன், நானே அவதரித்துக்கொள்கிறேன்," என்று சொல்கிறார்.
மக்களை வழிநடத்துவதற்காக, அவர் இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் பல்வேறு உருவங்களில் தோன்றுகிறார் என்பதை அவர் உணர்த்துகிறார்.
சாதாரண மக்கள் மாயையின் பிடியில் உள்ளதால், அதன் பொருட்டு அவர்கள் பிறவி எடுக்கிறார்கள். ஆனால் மாயை கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர் அவருடைய விருப்பத்தினால் மட்டுமே பிறவி எடுக்கிறார்!
உங்களிடம்
தீரமும் ச்ரத்தையும்
இல்லாதபோது,
வாழும் குருமார்களையும்
நீங்கள்
தவறவிடுவீர்கள்.
ஆனால் மீண்டும் மீண்டும் நாம்தான் அவரைத் தவற விட்டுவிடுகிறோம்.
நாம் அனைவரும் புத்தரை
வென்றோம் (Conquer), கிருஷ்ணரை
வென்றோம் இராமகிருஷ்ணரை
வென்றோம். அதனால்தான், நாம்
மீண்டும் மீண்டும் இங்கு, இந்தப் பூமியில்
இருக்கிறோம்!
தயவுசெய்து மிகவும் தெளிவாக இருங்கள், நாம் அவர்களை தவறவிட்டுவிடுகி றோம். நாம் இரமண மகரிஷியைத் தவறவிட்டுவிட்டோம் இராமகிருஷ்ணரைத் தவறவிட்டுவிட்டோம். அவர்களும் நமக்கு ஒன்றும் செய்ய முடியாது.
அதனால்தான் நாம் மீண்டும் மீண்டும் இங்கு இருக்கிறோம். மீண்டும் மீண்டும் ஞானிகள் கீழே வர நேரிடுகிறது. நம்மை உயர்த்தவும் நமக்கு வழிகாட்டவும் நம்மை வழிநடத்தவும் கீழிறங்கி இந்தப் பூமிக்கு அவர்கள் மீண்டும் மீண்டும் வர நேரிடுகிறது.

யுகம்யுகமாய் நமக்காகவே வருபவர்
கிருஷ்ணரின் அடுத்த உபதேசம் இதுதான் என்று அடுத்து வரும் இந்த இரண்டு ஸ்லோகங்களைச் சொல்லலாம். அவற்றைப் புரிந்து கொண்டால், பிறகு கீதை முழுவதும் மட்டுமின்றி, அனைத்து ஆன்மீக திருமறை நூல்களையும் உணர்ந்து, புரிந்துகொள்ள முடியும்.
இங்கு அவர் அறிவிக்கிறார்:
எப்போதெல்லாம் தனிப்பட்ட மனிதனின் விழிப்புணர்வு குறைகிறதோ, எப்போதெல்லாம் கூட்டு விழிப்புணர்வு அற்ற நிலை அதிகரிக்கிறதோ, அப்போது எல்லாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய தர்மத்தை நிலைநாட்டுவதற்கு, ஸம்பவாமியேுகே யுகே - நான் யுகம் தோறும் அவதரிப்பேன்.
கிருஷ்ணரைப் போன்ற குருவால்தான் இவ்வளவு தெளிவாக ஸத்யத்தைச் சொல்ல முடியும்.
இங்கே கிருஷ்ணர் அறிவிக்கிறார், "தவற்றைத் திருத்துவதற்காக நான் மீண்டும் மீண்டும் கீழே வருகிறேன்." எதிர்காலத்திற்காக அவர் அனைத்தையும் திறந்து வைக்கிறார்.
எதிர்காலத்திற்காக ஞான குருமார்களின் தலைமுறையைத் திறந்து வைக்கிறார். எதிர்காலத்தில் ஞானமடைதலின் சாத்தியத்தைத் திறந்து வைக்கிறார். முழு யோக அறிவியலையும் எதிர்காலத்திற்காக திறந்து வைக்கிறார்.
கிருஷ்ணரைப் போல் துணிச்சல் உள்ள ஒருவரால்தான் இந்த ஸத்யத்தை வெளியிடமுடியும்.
"ஸ்வாமிஜி, இந்தப் பூமியில் ஞானமடைந்த குருமார்கள் அதிகம் இருக்கின்றார்களா?" என்று மக்கள் வந்து என்னிடம் கேட்கிறார்கள்.
அவர்களிடம் நான், "நிச்சயமாக நூற்றுக்கணக்கான ஞானகுருமார்கள் இருக்கிறார்கள். நான் மட்டும்தான் என்று நினைக்காதீர்கள்.
இந்தப் பூமியில் நூற்றுக்கணக்கான, இல்லை, இல்லை ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள்.
நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கானவர்கள் என்று கூட
சொல்லலாம். ஆயிரக்கணக்கான குருமார்கள்
இருக்கிறார்கள்," என்று சொல்வதுண்டு.
கிருஷ்ணரைப் போல் துணிச்சல் உள்ள ஒருவரால்தான் ஸத்யத்தை உள்ளவாறே வெளியிட முடியும். நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், உங்களுடைய கடை போன்றே வேறு பல கடைகளும் அந்த நகரத்தில் இருக்கிறது என்பதை உங்களால் உங்கள் வாடிக்கையாளரிடம் ஒத்துக்கொள்ள முடியாது. நீங்கள் ஏதாவது வியாபாரம் செய்தீர்கள் என்றால், அந்த ஊரில் அதே வியாபாரம் செய்பவரின் விலாசத்தைக் கொடுக்க மாட்டீர்கள். நீங்கள் நேர்மையானவராக இருந்தால்தான், உங்களால், "ஆமாம், அங்கே இது தவிர மற்ற பொருட்களும் நிறைய கிடைக்கும்," என்று சொல்லமுடியும்.
மக்கள் என்னிடம் வந்து, "ஸ்வாமிஜி, நான் உங்களிடம் தீக்ஷை பெற்றுக் கொண்டால், மற்றொரு குருவிடம் நான் போகமுடியுமா?" என்று மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு.
நீங்கள் போகலாம் மற்ற குருமார்களிடமும் நீங்கள் போக முடியும் என்று சொல்வது மட்டுமல்ல; நீங்கள் கண்டிப்பாகப் போக வேண்டுமென்றும் உங்களை ஊக்குவிக்கிறேன்.
அனைத்து அழகான தோட்டங்களிலிருந்தும் மலர்களைப் பறித்து, அதை உங்களுக்கே உரிய அழகான மலர் மாலையாகத் தொடுத்துக்கொள்ளுங்கள்.
மனித அஹங்காரம் எப்படிப்பட்டதென்றால், அது ஒன்றுக்கு மேற்பட்டவரிடம் உதை வாங்கினால்தான் அழியும். அதனால் எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சென்று சிறந்தவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள்.
எல்லாத் தோட்டங்களிலிருந்தும் பூக்களைப் பறித்து, உங்களுக்கே உரிய ஒரு மலர்மாலையை நீங்களே தொடுத்துக்கொள்ளுங்கள்.
கிருஷ்ணரைப் போன்று துணிச்சல் உள்ளவர்தான் இந்த ஸத்யத்தை வெளியிட முடியும். ஸம்பவாமியாுகே யுகே - என்றால் அவர் அடுத்த தலைமுறைக்கும் வாய்ப்புகளைத் திறந்து வைக்கிறார். இந்தப் பூமியில் வாழும் மொத்த மனிதகுலத்திற்குமே ஞானமடைவதற்கான சாத்தியத்தைத் திறந்து வைக்கிறார்.
இந்த ஒரு கருத்தை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டால், நேரடியாகவே அது உங்களை ஞானமடையச் செய்துவிடும்.
இந்த ஸ்லோகம் ஒரு வாக்குறுதி: இது அனைத்து மனித இனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தில் 'என்ட்ராஃபி' (Entropy) என்ற கோட்பாடு, 'இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளின் சக்தி நிலையும் காலப்போக்கில் குறைந்துகொண்டே வருகிறது; அது மட்டுமல்ல, பிரபஞ்சத்தின் சக்தி நிலையும் காலப்போக்கில் குறைகிறது' என்று சொல்கிறது.
அதனால், அது விழிப்புணர்வுடன்தான் உள்ளது. காலப்போக்கில் தனி மனிதர்கள் அவர்களுடைய நேர்மறை விழிப்புணர்வை இழக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் கூட்டு எதிர்மறை உணர்வுகள் சிறிது சிறிதாக பெருக ஆரம்பிக்கிறது.
ஒவ்வொரு தனி மனிதரும் தீய நோக்கம் உடையவராக மாறுகிறார்கள் என்பது இதற்கு அர்த்தமில்லை. ஆனால் காலப்போக்கில் தனிமனிதர்களுடைய ஆன்மீக விழிப்புணர்வு, தர்மம் இவை சராசரியாக அதனுடைய சிறப்புப் பண்புகளைப் படிப்படியாக இழந்துவிடுகிறது.
விழிப்புணர்வு எப்போதும் தனிமனிதனைச் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பூமியில் வாழும் மொத்த மனிதகுலத்திற்குமே ஞானமடைவதற்கான சாத்தியத்தைத் திறந்து வைக்கிறார்.
ஒருவர் விழிப்புணர்வு உடையவராக ஆகும்போது, அவர் அனைத்து மனித குலத்தையும் தன்னைப் போலவே விழிப்புணர்வு உடையதாகவே ஏற்றுக்கொள்ளுகிறார். இருந்தாலும் ஒவ்வொரு தனி மனிதரும் தம்முடைய விழிப்புணர்வைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
மற்றொரு பக்கம், எதிர்மறை அல்லது விழிப்புணர்வு அற்ற நிலை கூட, கூட்டாகவும் மொத்தமாகவும் இருக்கலாம்.
ஒரு முழு தேசமே கூட்டாக விழிப்புணர்வு அற்று இருக்கலாம் ஹிட்லருக்குக் கீழ் இருந்த ஜெர்மனியைப் போல!
ஜெர்மனியைப் பின் தொடர்ந்த இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளையும் இதற்கு உதாரணங்களாகச் சொல்லாம்.
சரித்திரத்தில், பல்லாயிரம் வருடங்களாக, ஒவ்வொரு முறையும் இதைப்போல கூட்டு விழிப்புணர்வற்ற நிலை சிறிது சிறிதாக பெருகுவதும் அதற்குப்பின் அதிலிருந்து மீள்வதும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
நேர்மறை எதிர்மறை, மேலே கீழே என்ற சுழற்சி இருந்துகொண்டே இருக்கிறது.
விஞ்ஞானத்தில் வேண்டுமானால் ‘சக்தி குறையும்’ எனும் கோட்பாடு இருக்கலாம். ஆனால் ஆன்மீகத்தில் அப்படி ஏதும் இல்லை. எப்போதுமே தர்மம் மீண்டும் நிலை நாட்டப்படுகிறது என்று கிருஷ்ணர் உறுதியளிக்கிறார்.
கேள்வி: கீதையிலிருந்து மேற்கோள்களாகக் காட்டப்படும் ஸ்லோகங்களிலேயே மிக அதிக தடவை மேற்கோளாகக் காட்டப்படுகிற ஸ்லோகம் பரித்ராணாய ஸாதூநாம்... என்கிற ஸ்லோகம்தான். இந்த வரிகள் உண்மையாக இருக்கும் என்றால் கிருஷ்ணர் இந்தப் பூமியில் எப்போதும் எல்லா நேரங்களிலும் இருக்க வேண்டும். இங்கு எந்தத் தீங்கும் இருக்கக் கூடாது. ஆனால் இங்கு அப்படி இல்லை! தயவுசெய்து, இந்த வரிகள் எதை உணர்த்துகின்றன என்று நீங்கள் மீண்டும் விளக்க முடியுமா?
கிருஷ்ணர், “தீய சக்தியே இருக்காது,” என்று சொல்லவில்லை; “கூட்டு விழிப்புணர்வு அற்ற நிலையைக் குறைப்பதற்கும் தீயதை அழிப்பதற்கும் நான் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுப்பேன்,” என்று சொல்கிறார்.
மனித இனம் இந்தப் பூமியில் வாழும்வரை நன்மை, தீமை இரண்டும் இருக்கும்; நன்மை, தீமை இவை இரண்டும் ஒன்றாகவே இருக்கும் ஆனால் நன்மையைக் காட்டிலும் தீமை அதிகமாகும் நிலையைப் பற்றித்தான் இங்கே கிருஷ்ணர் பேசுகிறார்.

கிருஷ்ணரின் கண்ணோட்டத்திலிருந்து,
ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், நன்மையோ
தீமையோ அங்கு இல்லை. ஆன்மீகத்தின்படி
பேசும்போது தீமை என்ற ஒன்று கிடையாது.
நம்மால் பார்க்கப்படும் இம் முரண்பாடுகள்
அனைத்தும் இயற்கையில் ஒருங்கே
இருக்கும் தன்மையுடையவை.
கிருஷ்ணர், அர்ஜுனனுக்குச்
சொல்வதெல்லாம் மனிதகுலத்தின்
பயனுக்காகவே.
நன்மை, தீமை இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள் எல்லாம் மனித குலம் உருவாக்கியவையே. அதன் அடிப்படையில்தான் நாம் ஒருவரின் ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆன்மீகத்தில் நன்மை அல்லது தீமை என்ற ஒன்றே கிடையாது அல்லது ஒரு ஞானமடைந்த குருவிற்கு இதைப் போல் வித்தியாசம் கிடையாது என்று சொல்லும்போது, உங்களுடைய முதல் மறுமொழி என்னவாக இருக்கும்?
"நன்மை, தீமை என்ற வித்தியாசம் ஆன்மீகத்தில் இல்லை என்று இந்த குரு சொன்னதால், நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; கொலையும் செய்யலாம். இதுவரை தீயவை என்று நான் ஒதுக்கி வைத்த செயல்களை எல்லாம் இனி செய்யலாம். ஆன்மீக ரீதியாக என்னைப் பாதிக்கும் என்று நினைத்து, இதுவரை செய்யாமல் ஒதுக்கி வைத்த செயல்களைக்கூட இனி நான் செய்யலாம்," என்று நீங்கள் நினைப்பீர்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் இவ்வாறு நினைக்கும்போதும்கூட, இந்த நிலையிலும்கூட 'எது நன்மை, எது தீமை' என்ற பொருள் சார்ந்த வித்தியாசத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களின் கட்டுறு மனப்பாங்கு அந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
நீங்கள் கட்டுறு மனப்பாங்கிலிருந்து, ஸம்ஸ்காரங்களிலிருந்து முழுமையாக விடுதலை பெறும்போது, கட்டுறு மனப்பாங்கை மறையச் செய்த அந்த ஆழ்ந்த விழிப்பு உணர்வு நிலையே நன்மை, தீமை என்ற வேறுபாடு இல்லாமல், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்ற திசையைக் காண்பிக்கும். மேலும் சமுதாயம், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகச் சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்குகிறது.
சமயம் கட்டளைகளை உருவாக்குகிறது. இவையாவும் நன்னடத்தைக்கான சட்டத்தொகுப்புகளே தவிர, இவை ஆன்மீகம் இல்லை. இவை மனச்சாட்சியிலிருந்து எழுவதுதானே தவிர, விழிப்புணர்விலிருந்து அல்ல!
நீங்கள் உங்களுடன் இசைவோடு இருக்கும்போது, நீங்கள் "நான் யார்?" என்பதனை உணர்ந்தவராக இருக்கும்போது, நீங்கள் உங்கள் எல்லையை விட்டுவிடுவீர்கள்.
நீங்கள், உங்கள் உடல் என்கிற எல்லையால் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவோ, உங்கள் உடலால் பந்தப்பட்ட ஆன்மாவோ அல்ல; நீங்கள் இந்தப் பேரண்டத்தில் ஒன்றாகிய பேரண்ட ஆன்மா.
எனக்கு ஆழ்ந்த ஆன்மீக அனுபவம்
கிடைத்தபோது, அதுதான் எனக்குள் எழுந்த
முதல் உணர்வாக இருந்தது. என்னுடன் நானே
தொடர்புகொள்வது போன்று என்னைச்
சுற்றி இருந்த எல்லாவற்றுடனும் என்னால்
தொடர்புகொள்ள முடிந்தது. எதனுடனும்
எனக்குப் பிரிவு இருக்கவில்லை.
பிரிவு இல்லாதபோது, நீங்கள் எவரையும் துன்புறுத்த வேண்டுமென்று நினைக்க முடியாது. ஏனென்றால் உங்களையே நீங்கள் துன்புறுத்திக்கொள்வீர்கள்! இந்த விழிப்புணர்வுடன் நீங்கள் நன்மையோ, தீமையோ செய்வதைப் பற்றி எப்போதும் கவலைப்படத் தேவையில்லை. உங்களுடைய விழிப்புணர்வு உங்களை நேரான, சரியான பாதையிலேயேதான் வழி நடத்திச் செல்லும்; அது உங்களுக்கும் பிறருக்கும் பொருத்தமான பாதையாகவே இருக்கும்.
ஒருவருக்குள் இந்த விழிப்புணர்வை உருவாக்குவது பற்றியும் ஒருவருடைய உணர்வு நிலையை விழிப்படையச் செய்வது பற்றியும்தான் கிருஷ்ணர் முதலில் பேசுகிறார்.
நன்மை, தீமை என்ற அடிப்படையில்தான் மனிதன் இதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதனால்தான், அவர் நன்மையையும்

பாதுகாக்கவும் தீமையை அழிக்கவும் மீண்டும்
மீண்டும் வருவேன் என்று விரிவாகச்
சொல்கிறார்.
தீயவர்களை அழிப்பது, ஒரே ஒருமுறை மட்டுமே செய்யக்கூடிய வேலை அன்று! இல்லாவிட்டால் ஏன் கிருஷ்ணர் ‘நான் மீண்டும் மீண்டும் வருவேன்’ என்று வாக்குறுதி கொடுக்க வேண்டும்?
பிரபஞ்ச இருப்புத் தன்மை அதன் இயல்பின் படி, பல்வேறு உருவங்களில் இருக்கிறது. அதில் சிலவற்றை நாம் நன்மை என்றும் சிலவற்றை தீயவை என்றும் புரிந்துகொள்கிறோம். இயல்பாகவே அங்கு வேற்றுமை என்பதே இல்லை.
இந்த விழிப்பு நிலையைத்தான் ‘தன்னை உணர்தல்’ என்கிறோம். இந்த விழிப்பு நிலைதான் ஒருவர் தம்முடைய உண்மையான இயல்பு நிலையை உணரும் நிலையாக இருக்கிறது. நாம் இந்த நிலைக்கு உரியவர்கள். கிருஷ்ணர் இறுதியான குரு; அவரது எல்லையற்ற கருணையினால், அந்த நிலையை நாமும் அடைய வேண்டுமென்று விரும்புகிறார்.
இந்த வாக்குறுதி, நம் நிலையை உயர்த்த வேண்டுமென்ற அவரது கருணையின் வெளிப்பாட்டால் எழுகிறதே தவிர, தீமையை அழிக்க வேண்டுமென்ற கோபத்தின் வெளிப்பாட்டால் அல்ல.

நீங்கள் என்னை அறிவது விடுதலை அடைவதற்கே!

4.9 எனது தெய்வீக தோற்றம் மற்றும் செயல்களைப் பற்றி அறிந்தவர்களும், அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களும் உடலை விட்ட பிறகு, இந்தப் பொருள் சார்ந்த உலகில் மீண்டும் பிறப்பதில்லை.
ஆனால் என்னை அடைகிறார்கள் அர்ஜுனா!
4.10 பந்தம், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவர்களாய், என்னையே நினைத்துக் கொண்டிருப்பவர்களாய், என்னையே அடைக்கலம் அடைந்தவர்களாய் இருந்த பலர், என்னை அறிந்ததனாலும் உணர்ந்ததனாலும் புனிதமடைந்து என்னையே அடைந்தார்கள்.
4.11 ஓ பார்த்தா! என்னைச் சரண் அடைபவர்களின் இயல்பைப் பொறுத்து, அவர்கள் எந்த வழியில் என்னிடம் பக்தியாக இருக்கின்றார்களோ, அந்த வழியில் நான் அவர்கள்

அனைவருக்கும் அருள்புரிகிறேன். என்னையே நான் அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறேன்.
4.12 இந்த உலகில் உள்ள மனிதர்கள் செயல்கள் மூலம் வெற்றியையே பெற விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் கடவுளை வழிபடுகிறார்கள்.
அவர்கள் இந்த உலகத்தில் ஊக்கமுள்ள செயலைச் செய்து உடனடியாகப் பலனைப் பெறுகிறார்கள்.

அவரை அறிந்தவர் இதுவரை எவருமில்லை
இது ஒரு விந்தையான அறிக்கை.
"எனது தோற்றம் செயல்கள் இவற்றின் இயல்பைப் புரிந்து கொண்டவர்கள் பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்."
இது எப்படிச் சாத்தியம்?
"பிறப்பு இறப்பு அற்ற தெய்வத் தன்மையான எனது இயல்பைப் புரிந்துகொள்ளுங்கள்," என்று சொல்கிறார்.
அஜோபி என்றால் நான் பிறப்பற்றவன் என்று பொருள்.
இப்போதுதான் அவர், அஜோபி ஸந்நவ்யாத்மா பூதாநாம் ஈச்வரோபி ஸந், "நான் பிறப்பும் அற்றவன், இறப்பும் அற்றவன்," என்று சொன்னார்.
உடனே "தெய்வத் தன்மையான எனது தோற்றம், செயல்கள் இவற்றில் உள்ள ஸத்யத்தைநீ புரிந்து கொண்டாயானால், நீ உடலை விட்ட உடனே, மற்ற சாதாரண மனிதர்களைப் போன்று பிறப்பும் இறப்பும் எடுக்க மாட்டாய்; தெய்வத் தன்மையான எனது இயல்பைப் புரிந்துகொள்ளும்போது, நீயும் அதே தெய்வத் தன்மையைப் பெறுவாய்," என்று சொல்கிறார்.
'நான் உடலை எடுப்பதில்லை' என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், நீங்களும் உடலை எடுக்க மாட்டீர்கள். 'நான் சுதந்திரமானவன்' என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், நீங்களும் சுதந்திரமானவர்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இது எப்படிச் சாத்தியம்?
பகவான் இரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி மூலம் நாம் இதை விளக்குவோம். இரமண மகரிஷி இந்தியாவில், வாழ்ந்த ஒரு ஞானி. தினமும் இரமண மகரிஷியின் முன்னிலையில் சீடர்கள் சில பாடல்களைப் பாடுவார்கள்.
‘ஞானகுருவாகிய இரமணரே’ என்று இரமண மகரிஷியைப் போற்றிப் புகழ்ந்து பாடும் ரமண ஸத்குரு என்ற பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடலைப் பாடும்போதும் இரமணரும் மற்ற பக்தர்களுடன் சேர்ந்து பாடுவார்.
அவர் அமர்ந்து கேட்டு மகிழ்வதோடு அல்லாமல், அவரும் அந்தப் பக்தர்களுடன் சேர்ந்து பாடுவார்!
ஒரு ஞானியின் உடலை,
நீங்கள் எப்படி
ஒரு தூரத்திலிருந்து
பார்க்கிறீர்களோ,
அதே போல்தான்
அந்த ஞானியும்
தம்முடைய உடலைப்
பார்க்கிறார்.
"என்ன இது? நீங்கள் ஞானமடைந்த ஒருவர். நீங்களே உங்களின் பெயரைப் பாடிக்கொள்கிறீர்கள். நீங்களும் ரமண ஸத்குரு ரமண ஸத்குரு என்று பாடுகிறீர்கள். இதற்கு என்ன பொருள்?" என்று ஒருவர் அவரிடம் கேட்டார்.
அப்போது, "முட்டாளே! நீ ஏன் இரமணரை இந்த ஆறடி உடலுக்குள் சுருக்கிவிடுகிறாய்?" என்று பகவான் கேட்டார்.
இந்தப் பதில் ஆழமான, மிக நுட்பமான ஒன்று.
இதைத் தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்வது
கஷ்டம்.
"நீங்கள் அனைவரும் ஒரு தூரத்திலிருந்து இந்த உடலைப் பார்ப்பது போல், நானும் இந்த உடலைப் பார்க்கிறேன். உங்களுக்கு எப்படி இரமணர் என்பவர் யாரோ ஒருவரோ, அதேபோல் எனக்கும் இரமணர் யாரோ ஒருவர்நான்! நான் இந்தப் பெயருடனும் உருவத்துடனும் என்னைத் தொடர்பு படுத்திக்கொள்வதில்லை.
அதனால்தான் நீங்கள் அனைவரும் இரமணர் பெயரைப் பாடி மகிழும்போது நானும் மகிழ்ந்தேன். ஏனென்றால் நான் என்னை இந்த உருவத்துடன் தொடர்பு படுத்திக்கொள்ளவில்லை," என்று விளக்கம் அளித்தார்.
உண்மையில், அஹங்கார உணர்வுடைய மனிதர், பொதுமக்களிடம் தன்னைப் புகழ்ச்சிக்கு மகிழ்பவராகக் காட்டிக்கொள்ள மாட்டார். ஏனெனில், 'அவர் அஹங்கார உணர்வுடையவர்' என்பதைப் பொதுமக்கள் பார்த்துவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
ஒரு அஹங்கார உணர்வுடைய மனிதர், மற்றவர்களைக் கொண்டு அவரைப் பற்றிப் புகழ வைப்பார். அவர் ஒருபோதும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்.
இங்கு இரமண மகரிஷி முற்றிலும் வெளிப்படையாகக் காட்டுகிறார். அவர் நேர்மையானவர். "நீங்கள் அனைவரும் மகிழ்வது போல் நானும் இந்த பெயரையும் உருவத்தையும் நினைத்து மகிழ்கிறேன். ஏனென்றால் இதை நானாக நான் நினைப்பதில்லை," என்று அவர் விளக்குகிறார்.
நான், என்னை என் பெயருடனும் உருவத்துடனும் தொடர்புபடுத்திக்கொள்வதில்லை. அந்தப் பெயர் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. அவ்வளவுதான்.
அஹங்கார உணர்வுடைய மனிதர், பொதுமக்களிடம் தன்னைப் புகழ்ச்சிக்கு மகிழ்பவராகக் காட்டிக்கொள்ள மாட்டார்.
மற்றொரு நிகழ்ச்சி: இரமணரின் ஒரு சீடர் முருகனார் இரமண புராணம் என்ற செய்யுளை எழுதினார். இது இரமணரைப் பற்றிய துதிப்பாடல். அவர் சில வரிகள் எழுதினார். ஆனால் அவரால் ஏனோ மேலும் எழுத முடியவில்லை. அவற்றை எடுத்து வந்து குருவின் காலடிகளில் வைத்து விட்டு, "என்னால் இதற்கு மேல் எழுத முடியவில்லை," என்று சொன்னார்.
"சரி நீ போ, அதனை நாம் நாளை பார்ப்போம்," என்று இரமண மகரிஷி சொல்கிறார். அடுத்த நாள் அந்தச் சீடர் திரும்பி வந்தபோது அந்தச் செய்யுள் முடிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்.
இரமண மகரிஷியே அதை எழுதி முடித்து இருந்தார். அவர் முன்னூறு வரிகள் எழுதி அந்த முழுப்பாடலையும் முடித்தார்.
அந்தச் சீடர் ஆச்சரியம் அடைந்தார். பகவான் தானே தன்னைப்பற்றி எழுதி இருந்தார், அவரது துதியை அவரே எழுதியிருந்தார்!
பிறகு, அந்தச் சீடர் அதைப் புத்தகமாக வெளியிடும்போது, பகவான்
எழுதிய முதல் வரிக்கு அருகில், 'இந்த
வரியிலிருந்து இந்தப் பாடல் பகவானாலேயே
எழுதப்பட்டது' என்ற அடிக்குறிப்பை எழுதி
வெளியிட்டார். அப்படியென்றால்்தான், அந்த
வரிகள் பகவானின் சொந்த வார்த்தைகள்
என்பதை பக்தர்கள் அறிந்துகொள்வார்கள்
என்பதற்காக அவர் அப்படி எழுதியிருந்தார்.
அந்தப் புத்தகத்தின் முதல் பிரதி ரமண
மகரிஷியிடம் எடுத்துச் செல்லப்பட்டது.
அவர் அந்தப் புத்தகத்தையும் அந்த
அடிக்குறிப்பையும் பார்த்தார். 'இந்த
வரியிலிருந்து இந்தப் பாடல்
பகவானாலேயே எழுதப்பட்டது' என்று
அச்சிடப்பட்டிருந்தது.
அவர் அந்தச் சீடரைப் பார்த்து "ஓ! மற்ற வரிகள் எல்லாம் உன்னால் எழுதப்பட்டதா?" என்று கேட்டார்.
புரிந்துகொள்ளுங்கள் "ஓ! மற்ற வரிகள் எல்லாம் உன்னால் எழுதப்பட்டது என்று அர்த்தமா?"
பகவான் மேலும் சொல்கிறார், "நீ அந்தப் பாடல்களை எழுதும் போது, அந்த அனைத்துப் பாடல்களையும் நான்தான் உன் மூலமாக எழுதினேன். என்னைப் பற்றி உள்ளபடியே உன்னால் நினைக்க முடியாது. என்னைப் பற்றி உன்னால் எழுத முடியாது. என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?
என்னைப் பற்றி நானே உனக்கு உணர்த்தினால் தவிர, நீ எதுவும் தெரிந்துகொள்ள முடியாது."
யார் ஒருவர் அந்தத் தெய்வீக விழிப்புணர்வுக்குள் முழுவதுமாகக் கரைந்துவிடுகிறாரோ, அவரால் மட்டுமே அவருடைய பாடல்களை எழுத முடியும்.

நம்மைக் கரைசேர்க்க வந்தவரைக் கண்டுபிடியுங்கள்
கீதையில் இப்போது பூதாநாம் ஈச்வரோऽபி என்று சொல்வதைப் போல், கிருஷ்ணர் பாகவதத்திலும் "நான் கடவுள்," என்று பாடுகிறார்.
பூதாநாம் ஈச்வரோऽபி என்ற வார்த்தைகள் மிகவும் அழகானவை; “அனைத்து ஜீவராசிகளுக்கும் நானே கடவுள்,” என்பதுதான் அதன் பொருள்.
பிருந்தாவனத்திலிருந்த ஒரு சாதாரண மாடு மேய்க்கும் சிறுவன் இதைச் சொல்கிறார்!
நீங்கள் இன்றைய கண்ணோட்டத்தில் கிருஷ்ணரைப் பார்க்கக் கூடாது. அந்த முழுக் காட்சியையும் நடந்தவாறே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்; குருக்ஷேத்ர யுத்தக்களத்தில் கிருஷ்ணர் இதைச் சொல்கிறார்.
இப்போது, இந்தக் காலத்தில், நாம் கிருஷ்ணரைக் கடவுளாக ஏற்றுக்கொண்டோம். ஆனால் அவர் உயிருடன் இருந்தபோது, இது சொல்லப்பட்டது. அவர் உயிருடன் இருந்தபோது மக்களால் அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரிதாகச் சிலரே அவரைக் கடவுள் என்று உணர்ந்தார்கள்.
இராமர் இந்தப் பூமியில் நடந்து கொண்டிருந்தபோது, ஸப்தரிஷிகள் மட்டுமே அவர் ஒரு அவதாரம் என்று அறிந்திருந்தார்கள். வேறு ஒருவருக்கும் தெரியாது.
அதே போல், கிருஷ்ணர் உயிருடன் இருந்தபோது, மிகச் சிலரே அவர் யார் என்பதை அறிந்து கொண்டார்கள்.
இராமராவது, கட்டுப்பாடுடைய வாழ்க்கையை வாழ்ந்தார். அவரை மக்கள் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் கிருஷ்ணரோ, கொண்டாட்டங்கள் நிறைந்த களிப்பு மிகுந்த தன்னிச்சையான வாழ்வை வாழ்ந்தவர். அவர் யார் என்பதை உணர்வது மிகவும் கடினம்!
அவதாரங்கள் இந்தப் பூமியில் நடமாடும்போது, அவர்களைக் கடவுளாக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
சமுதாயப் பட்டறிவோடு இருக்கும் மனிதருக்கும் அல்லது பெயரளவில் சமயவாதி என்று சொல்லிக்கொள்பவர்க்கும் கிருஷ்ணரை உணர்ந்துகொள்வதும் புரிந்துகொள்வதும் மிகவும் கஷ்டம். ஆனால் அவர் சொல்கிறார், “பூதாநாம் ஈச்வரோ ரமபி, அனைத்து உயிரினங்களுக்கும் நான் கடவுள்.”
இயல்பாகவே, மக்களுக்கு இதைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம். யாரோ ஒருவர் இரமணரைப் பார்த்து, “நீங்கள் ஏன் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் உங்கள் புகழை வெளிப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டார்.
> சமுதாயப்
> பட்டறிவாளர்களும்
> பெயரளவில்
> சமயவாதிகளாக
> உள்ளவர்களும்
> கிருஷ்ணரைப்
> புரிந்துகொள்ள முடியாது.
“நான் என்னைப் பற்றிப் பேசாவிட்டால், நீங்கள் எப்போதும் என்னைப் புரிந்துகொள்ள முடியாது. நானே வெளிப்படுத்தினால் தவிர, உங்களால் என்னை உணர்ந்துகொள்ள முடியாது.
நான் என்னை வெளிப்படுத்தினால் தவிர, உங்களால் எப்போதும் புரிந்துகொள்ள முடியாது. உங்கள் அனைவரிடமும் எனக்குள்ள கருணையினால்தான் ஸத்யத்தை வெளிப்படுத்துகிறேன். என்னை நானே வெளிப்படுத்துகிறேன்,” என்று சொன்னார்.
இது எப்படி உள்ளதென்றால், நீங்கள் எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்கள், அங்குச் சாலையில் போக்குவரத்து நெரிசலைப் பார்க்கிறீர்கள்.
அதே சாலையில், உங்களுடைய நண்பர் ஒருவர், உங்களுக்கு முன்னால் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்.
நீங்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, “அந்த இடத்தில் எப்படி இருக்கிறது. அங்கும் போக்குவரத்து நெரிசல் உள்ளதா? நான் அதே சாலையில் பயணம் செய்யலாமா? அல்லது வேறு சாலையில் பயணம் செய்வதா?” என்று கேட்பீர்கள். உங்களுக்கு வழிகாட்டும் எளிய நற்பண்பு, எளிய அன்புகூட அவரிடம் இருக்காதா? அவரிடம் நிச்சயமாக அந்த அன்பு இருக்கும்; அந்த அடிப்படை நற்பண்பு இருக்கும்.
“இல்லை, இந்த வழி நன்றாக உள்ளது, நீங்கள் வாருங்கள். பத்து நிமிடங்களில் அனைத்தும் சரியாகிவிடும். இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லை," என்று சொல்லி, அவர் உங்களிடம் சில தகவல்களை வழங்குவார். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.
அதே அடிப்படை நற்பண்பில், அன்பில்தான் கிருஷ்ணர் அவருடைய ஸத்யத்தை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர் அவருடைய ஸத்யத்தை நம் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார். இதுவும் உடன் பயணிப்பவர்களுக்கு உதவுவதைப் போன்ற ஒரு எளிமையான அன்பின் வெளிப்பாடே!
என்னால் முடியும்போது உங்களால் ஏன் முடியாது
இங்கு அவர், "நான் கடவுள், நான் முடிவானவன்," என்று சொல்லும்போது, "நான் முயன்று பெறும்போது, ஏன் உங்களால் முடியாது?" என்கிற சாத்திய நிலையைப் பற்றிச் சொல்கிறார்.
அவர் சாத்தியத்தைக் காட்டுகிறார். அவர் நமக்குத் தைரியத்தைக் கொடுக்கிறார். அவர் நம்மை ஊக்குவிக்கிறார். "நான் முயன்று பெறும்போது, உங்களாலும் அதை ஏன் பெற முடியாது?" என்று அவர் கேட்கிறார்.
இது, ஒரு விதை வெடித்து மரமாவதற்கு, எப்போதும் பயந்துகொண்டே இருப்பதைப் போன்றது.
"நான் வெடித்து, அந்த மரம் வரவில்லை
என்றால் என்ன ஆகும்? நான் மரணம்
அடைந்துவிடுவேனே," என்றுதான் அந்த
விதை எப்போதும் நினைக்கிறது.
ஆனால் அந்த மரம் விதையைப் பார்த்து, "நீ
வெடித்தால் அன்றி நான் வளரமுடியாது?"
என்று சொல்கிறது.
விதை வெடித்தால் அன்றி மரம் வளரமுடியாது.
அந்த விதை "இல்லை, இல்லை, முதலில் நீ
> குரு,
> தம்மைப் பற்றி
> வெளிப்படுத்தாவிட்டால்,
> உங்களால்
> அவரைப் புரிந்துகொள்ள
> முடியாது.
வளர்ந்து வா, பிறகு நான் வெடிக்கிறேன்,"
என்று சொன்னது. ஆனால் அந்த மரம்
"இல்லை இல்லை முதலில் நீதான் வெடி
க்க வேண்டும். அதற்குப் பிறகுதான் நான்
வளரமுடியும்," என்று மீண்டும் சொன்னது.
அந்த விதைக்கும் மரத்துக்கும் இடையே
இந்தப் பிரச்சினை முடிவில்லாமல்
தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
யாராவது ஒருவர், அந்த விதைக்குச் சிறிது தைரியம் கொடுக்க வேண்டும். விதையாக இருந்து, இப்போது மரமாக ஆகியுள்ள ஒரு மரம் அந்த விதைக்கு அந்தக் தைரியத்தைக் கொடுக்கலாம்.
விதை
வெடித்தால் அன்றி
மரம் வளரமுடியாது.
"தைரியசாலியாக இரு. கவலைப்படாதே, நீ என்றும் அழிய மாட்டாய், வெடித்துவிடு, என்னைப் போல் நீயும் ஒரு பெரிய மரம் ஆவாய்!" என்று அந்த மரம் விதைக்குத் தைரியம் கொடுப்பது போல்தான் கிருஷ்ணர் நமக்குத் தைரியம் கொடுக்கிறார், "நீங்களும் என்னைப் போல் கடவுளாக ஆகலாம். என்னைப் போல் நீங்களும் உண்மையை, ஸத்யத்தை உணரலாம்.

மனிதனாய் வந்தாலும் ஆறடிக்குள் அவரில்லை
"நானே இறுதியானவன்," என்று அவர் சொல்லும்போது, அவர் ஸத்யத்தை வெளிப்படுத்துகிறார். அவர் நமக்கு ஸத்யத்தைக் காண்பிக்கிறார். மீண்டும் மீண்டும் அவர் நமக்கு, நம்முடைய திறனை ஞாபகப்படுத்துகிறார்.
அதே விழிப்புணர்வு நிலைக்குள் நாமும் நுழைவதற்கு உரிய உத்வேகத்தை அவர் அளிக்கிறார். அதே ஆனந்தத்தை அனுபவிக்க நம்மை ஊக்குவிக்கிறார். நாம் உணரவேண்டிய ஸத்யத்தின் பாதையை நமக்கு அவர் காண்பிக்கிறார்.
மிகத் தெளிவாக இருங்கள், கிருஷ்ணர் இந்த ஸத்யத்தை வெளியிடும்போது, கிருஷ்ணர் அஹங்காரத்துடன் இல்லை. உடன் பயணிப்பவர்களுக்குக் காட்டும் அடிப்படை அன்பின் காரணமாக, அவர் தம் உண்மை இயல்பை வெளிப்படுத்துகிறார்.
மூத்த மரம் இளைய விதையிடம் "பயப்படாமல் உன்னைத் திறந்து

மரமாக,” என உத்வேகப் படுத்துகிறது.
மேலும் அந்த மரம் விதைக்கு உறுதி
அளிக்கிறது. “கவலைப்படாதே, நான் மரமாக
ஆகிவிட்டேன். நீயும் என்னைப் போல்
ஆகலாம். நீ மறைந்துவிடுவாய் என்று நீ
நினைக்க வேண்டாம்,” என்று அது சொல்கிறது.
இது ஒரு வாக்குறுதி.
அதனால்தான், மீண்டும் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன், அவர் நம்மிடம் “நான் கடவுள்,” என்று சொல்லும்போது, ‘நீங்களும் கடவுள்’ என்பதை உணர்த்துகிறார். உங்களுக்குத் தைரியமூட்டுகிறார். அதே உணர்வுக்குள் நீங்கள் நுழைவதற்காக, அவர் உங்களை உத்வேகப்படுத்துகிறார்.
நாம் மற்றொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். ‘நீங்கள் ஏன் ரமணரை ஆறடி உடலுக்குள் சுருக்குகிறீர்கள்?’ என்று ரமணரே சொல்கிறபோது, ரமணர் தனது ஆறடி உடலை விட மிக மிக உயர்ந்தவர், மிக மிக ஆற்றல் மிக்கவர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஞானகுருமார்கள் “நான்,” என்று சொல்லும்போது, அவர்களுடைய அந்த ‘நான்’ என்பதற்குப் பின்னால் எந்த அர்த்தமும் இல்லை. தெய்வீகம்தான் பேசுகிறது.
ஒரு சாதாரண மனிதருக்கு, உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்குக் ‘கடவுள்’ என்ற வார்த்தை ஒரு சாதாரண வார்த்தை. அதற்குப் பின்னால் எந்த ஒரு அர்த்தமும் இல்லை.
மிஞ்சி மிஞ்சிப் போனால், கடவுளைப்
பற்றி நீங்கள் ஏதாவது கற்பனை செய்து
வைத்திருப்பீர்கள், அவ்வளவுதான்.
நீங்கள் அந்த வார்த்தையை
உபயோகிக்கும்போது, அதற்குப் பின்னால்
எந்த திரண்ட பொருளும் இல்லை.
அனுபவமும் இல்லை.
> ‘நான் இறுதியானவன்’
> என்று
> கிருஷ்ணர் சொல்வது
> அஹங்காரத்தினால் அல்ல.
> உடன்
> பயணிப்பவர்களுக்குக்
> காட்டும்
> அடிப்படை
> அன்பினால்தான்.
ஆனால் நீங்கள் 'நான்' என்று சொல்லும்போது,
நீங்கள் அதற்கு ஒரு திடமான அர்த்தத்தைக்
கொடுக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு திடமான,
ஸ்தூலமான அடையாளம் உள்ளது.
நீங்கள் எதை உணர்த்துகிறீர்கள் என்று
உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள்,
"கடவுள்," என்று சொல்லும்போது, நீங்கள்
என்ன சொல்கிறீர்கள் என்று உங்களுக்குத்
தெரியாது. அந்த உணர்ச்சியையும்
புரிந்துகொள்ளுதலையும் வலுவாக்க எந்த
அனுபவமும் இல்லை. அந்த வார்த்தையை
வலுவூட்ட எந்த ஒரு உணர்ச்சித் தெளிவோ,
அனுபவமோ இல்லை.
> சாதாரண மனிதருக்கு
> 'கடவுள்' என்ற சொல்,
> வெறும் வார்த்தை மட்டுமே.
> ஆனால் ஒரு ஞானிக்கு,
> அது ஒரு திடமான
> அனுபவம்.
ஆனால் ஞானமடைந்தவர்கள், 'கடவுள்', என்று சொன்னால், அது ஒரு திடமான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் 'நான்' என்று சொல்லும்போது, அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. உபயோகத்தின் பொருட்டு மட்டுமே, அவர்கள் அந்த 'நான்' என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். அது, அவர்களுக்கு ஒரு காலியான வார்த்தை.
ஏனென்றால், வேறு எந்த வார்த்தையையும் உபயோகப்படுத்த முடியாது. அதனால் அவர்கள் 'நான்' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியாக வேண்டும், வேறு வழியில்லை. அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் 'நான்' என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்கள்.
பேசுவது தெய்வீகமே!
நிஸர்கதத்தா மஹராஜ் என்ற ஒரு ஜ்ஞானகுரு இந்தியாவில் வாழ்ந்தார். ஒருநாள் அவரிடம் அன்பர் ஒருவர் சென்று, "குருவே, நீங்கள் ஞானமடைந்தவர்களுக்குக் கர்மா கிடையாது என்று சொல்கிறீர்கள். உங்களுக்குக் கர்மா இல்லை என்றால், எப்படி நீங்கள் உங்கள் செயல்களைச் செய்ய முடியும்? உங்களால் எப்படிப் பேச முடியும்?" என்று கேட்டார்
"இப்போது நான் ஒன்றும் செய்யவில்லையே!" என்று அவர் சொன்னார்.
"இல்லை, நீங்கள் என்னுடன் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்குக் கர்மா இல்லை என்றால், நீங்கள் என்னிடம் எப்படிப் பேசமுடியும்?" என்று அந்தச் சீடர் கேட்டார்.
"நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை," என்று நிஸர்கதத்தா நேரடியாகவே சொன்னார்.
அவர் வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு இருந்தார், ஆனாலும் "நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை," என்று சொன்னார். அதைப் புரிந்துகொள்வது கஷ்டம்.
மேலும் அவர் தொடர்கிறார், "நான் பேச வேண்டுமென்று நீ விரும்பியதால், பேசுதல் இந்த உடலின் மூலம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. உள்ளே யாரும் இல்லை," என்று சொன்னார்.
அவர் உள்ளீடற்ற மூங்கிலைப் போன்று இருந்தார். அந்த உள்ளீடற்ற மூங்கிலில் காற்று நுழையும்போது அது இசையாக வெளிவருகிறது. அதனுள் ஒருவரும் இல்லை, வெறும் உள்ளீடற்ற மூங்கில். அதனால்தான், எது உள்ளே சென்றாலும் இசையாக வெளிவருகிறது.
நீங்கள் உள்ளீடற்ற மூங்கிலாக மாறும்போது உங்கள் வாயிலிருந்து எந்த வார்த்தை வந்தாலும் அது மந்த்ரமாக மாறுகிறது. உங்களுடைய உருவம் யந்த்ரமாக மாறுகிறது, அது விடுதலைக்கு ஒரு கருவியாகிறது. உங்களுடைய முழு வாழ்க்கையும் தந்த்ரமாக மாறுகிறது, அது விடுதலைக்கு ஒரு உத்தியாக மாறுகிறது.
உங்களுடைய வார்த்தைகள் சாஸ்த்ரங்கள்; உங்களுடைய உருவம் ஸ்தோத்ரத்தின் மையம்; உங்களுடைய வாழ்க்கை ஸூத்ரம். உங்களுடைய வாழ்வே ஒரு உத்தியாக, தியான நுட்பமாக இருக்கிறது.
இங்கேயும் கிருஷ்ணர், "நான்," என்று சொல்லும்போது, அங்கு அவர் உள்ளே ஒருவரும் இல்லை. பேசுவது அந்த தெய்வீகமே! பேசுவது அந்த வெற்றிடமே!
பிறகு அந்தச் சீடர் நிஸர்கதத்தா மஹாராஜைக் கேட்கிறார், "பிறகு, நான் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை என்று எப்படி நீங்கள் சொல்கிறீர்கள். 'நான்' என்ற வார்த்தையின் மூலம் எதை உணர்த்துகிறீர்கள்?"
மஹாராஜ் சொல்கிறார், "வேறு எந்த வார்த்தையும் இல்லாததால்தான், 'நான்'

என்ற வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டி உள்ளது. ஆனால் இந்த ‘நான்’ என்ற வார்த்தைக்கு நீங்கள் சொல்லும் ‘நான்’ என்ற வார்த்தையைப் போல் அர்த்தம் இல்லை. உங்களுடைய ‘நான்’ என்பது அனுபவத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது.
நீங்கள் ‘கடவுள்’ என்ற வார்த்தையை சொல்லும்போது அது ஒரு வெற்று வார்த்தை. அனுபவத்தின் ஆதரவு அதற்கு இல்லை,” என்று சொல்லி முடித்தார்.
நீங்கள் ‘நான்’ என்ற வார்த்தையைச் சொல்லும்போது திடமான அனுபவத்தின் ஆதரவு அதற்கு உள்ளது என்பது உங்களுக்கும் தெரியும். அதை நீங்கள் உணர்கிறீர்கள். யாராவது உங்களைப் பார்த்து “நீங்கள் பைத்தியமா?” என்று கேட்டால், நீங்கள் அவரைப் பார்த்துக் கூச்சல் போட்டு, அதனை நிரூபிப்பீர்கள்.
யாராவது, “நீ ஒரு நாயா?” என்று கேட்டால், நீங்கள் அவரைப் பார்த்துக் குரைத்து, அதனை நிரூபிப்பீர்கள். உங்களிடம் உள்ள அந்த ‘நான்’ திடமான ஒன்று என்று உங்களுக்குத் தெரியும். அதற்குப் பொருள் உள்ளது.
ஆனால் நீங்கள் ‘கடவுள்’ என்ற வார்த்தையை பேசும்போது, அதற்கு எந்தப் பொருளும் இல்லை. அது மேம்போக்கானது. அது நீங்கள் படித்த சில புத்தகங்கள் மூலம் நீங்கள் உருவாக்கிய ஒரு கற்பனை.
ஏதோ விரிவுரையில் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட ஒன்று, நீங்கள் சிறு வயதினராக இருந்தபோது கேட்ட ஒன்று, அவ்வளவுதான்!
> நீங்கள்
> உள்ளீடற்ற மூங்கிலாக
> மாறும்போது
> உங்கள் வாயிலிருந்து
> எந்த வார்த்தை வந்தாலும்
> அது
> மந்திரமாக மாறுகிறது.
ஆனால் ‘ஞானமடைந்தவர்கள்’ இந்த ‘நான்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தும்போது, அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. ‘கடவுள்’ என்ற வார்த்தை உங்களுக்கு எப்படி வெறும் வார்த்தையாக உள்ளதோ, அதே போல் அவர்களுக்கு ‘நான்’ என்ற வார்த்தை ஒரு வெறும் வார்த்தை. அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. ஆனால் அவர்கள் ‘கடவுள்’ என்ற வார்த்தையை சொல்லும்போது, அந்த வார்த்தைக்குப்பின் அவர்களுக்கு ஒரு திடமான அனுபவம் இருக்கிறது.
இங்கே கிருஷ்ணர் ‘நான்’ என்று சொல்லும்போது, உள்ளே ஒருவரும் இல்லை. அது ஒரு உண்மையான வெற்றிடம். தெய்வீகம் அவர் மூலமாகப் பேசுகிறது. தூய்மையான பிரபஞ்ச இருப்புத் தன்மை அவர் மூலம் பேசுகிறது. அவர் ஒரு காலியான மூங்கிலாக மாறிவிட்டார்.அவர் தூய்மையான ஆற்றலாக மாறிவிட்டார். அதனால்தான் அவர் துணிச்சலுடன் யுத்தக்களத்தில் அறிவிக்க முடிந்தது; பூதாநாம் ஈச்வரோபி. அனைத்து ஜீவராசிகளுக்கும் நான் கடவுள்.
ஞானமடைந்தவர்கள், ‘நான்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தும்போது, அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது.
அனைத்து விதமான பாதுகாப்பு, அனைத்து விதமான காப்பீடுகளுடன் நிம்மதியாக வீட்டில் அமர்ந்து கொண்டு, ‘நான் கடவுள்,’ என்று அறிவிப்பது மிகவும் எளிது. ஏனென்றால் அபாயம் ஏற்படுத்துவதற்கு அங்கு ஒன்றும் இல்லை. இப்படிச் சொல்வதற்கு நீங்கள் எந்தவிதமான கஷ்டமும் பட வேண்டியதில்லை.
நீங்கள் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை. அப்படியே ஒரு அறிக்கையை மட்டுமேவிடுங்கள், அதில் என்ன இருக்கிறது? எப்படி என்றாலும் அது இலவசம்தானே! நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ சொல்லுங்கள்.
ஆனால் கிருஷ்ணர் எங்கே நிரூபிக்க வேண்டுமோ அங்கே இந்த அறிக்கையை விடுக்குகிறார். அவர் அந்த அறிக்கையை, ஆபத்து நிறைந்த, அவரது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய யுத்தக்களத்தில் விடுக்கிறார்.
அவருடைய உடலை மரணமடையச் செய்ய ஒரு அம்பு போதும். அவர் மரணமடைந்துவிடுவார், ஆனால் அவர் இந்த அறிக்கையை அந்த இடத்தில் விடுக்கிறார். அந்த யுத்தக்களத்தில், ‘நான் கடவுள்,’ என்று அறிவிக்கிறார்.
அவருடைய வார்த்தைகளுக்குப் பின்னால் என்ன துணிச்சலும் ஆற்றலும் இருந்திருக்க வேண்டும்! அது ஒரு திடமான, ஆழ்ந்த விழிப்புணர்வுடன் கூடிய அனுபவத்திலிருந்து மட்டும்தான் வரமுடியும்.
இதற்கு முன் நான் அலெக்ஸாண்டர்
பற்றிய கதையைச் சொன்னேன். அவர்,
ஒரு ஜ்ஞானகுருவிடம் தம் வாள் கொண்டு
மிரட்டினார். அந்த குரு அலெக்ஸாண்டரைப்
பார்த்துச் சிரித்துக்கொண்டே, “முட்டாளே,
நீ எதை அழிப்பாய்? என்னுள் இருப்பது
அழிக்கமுடியாதது!” என்று சொன்னார்.
ஒரு ஜ்ஞானகுருவால் மட்டுமே ஒரு வாளின் முன் சிரிக்க முடியும்.
அலெக்ஸாண்டர் உருவிய வாளுடன் நின்று கொண்டிருக்கிறார், அந்த குரு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர் கவலைப்படவில்லை. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், சாலையில் யாரோ ஒருவர், உங்களை நோக்கி துப்பாக்கியைக் காண்பித்து, உங்களுடைய பணப்பையைக் கேட்டால், உங்களால் சிரிக்க முடியுமா? முடியவே முடியாது!
ஆனால் இங்கு, இந்த மனிதர் அலெக்ஸாண்டரின் வாள் முன் சிரிக்க முடிகிறது. அது ஸத்யத்திலிருந்து வரும் துணிச்சல்; திடமான அனுபவத்தின் மூலம் வரும் துணிச்சல்.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வேதாந்த நூல்கள் மட்டுமே நமக்கு இந்த துணிச்சலைக் கொடுக்க முடியும்; வாழ்வதற்கான துணிச்சலைத் தர முடியும்; வாழ்வையும் சாவையும் எதிர்கொள்வதற்கான துணிச்சலைத் தர முடியும்; முழு இருப்பு நிலையை எதிர்கொள்வதற்கான துணிச்சலைத் தர முடியும்.

உங்களைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி
விவேகானந்தரின் மிகச் சிறந்த சீடராகிய சகோதரி நிவேதிதா, விவேகானந்தரை முதன்முதலில் சந்தித்தபோது "ஸ்வாமிஜி, நான் உங்களுடன் வந்தால், நீங்கள் எனக்கு என்ன கற்றுக் கொடுப்பீர்கள்?" என்று அவரைக் கேட்டார்.
"நான் உனக்கு மரணத்தை எதிர்கொள்வது எப்படி என்பதைக் கற்றுத் தருவேன்!" என்று விவேகானந்தர் சொன்னார். அது மட்டுமே முடிவான உபதேசமாக இருக்க முடியும். இங்கே கிருஷ்ணர் அந்த முடிவான உபதேசத்தைக் கொடுக்கிறார்.'
இந்த இரண்டு ஸ்லோகங்களில் அவர் சொல்கிறார்,
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத |
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் || 4. 7
பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || 4.8
கிருஷ்ணரின் அடுத்த அறிக்கை மிகவும் வினோதமாக உள்ளது.
ஜன்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்தவத: |
த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந || 4.9
அதன் பொருள், "என்னுடைய பிறப்பு, இறப்பின் இரகசியத்தை நீ புரிந்து கொண்டால், உனது பிறப்பு, இறப்பிலிருந்து நீ விடுதலை பெறுவாய் அர்ஜூனா," என்பதே!
எப்படி? இப்போது நாம் கிருஷ்ணரின்
பிறப்பு, இறப்பின் இரகசியத்தையும், நாம்
எவ்வாறு பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியில்
செல்கிறோம் என்பதையும் பார்ப்போம்.
"நான் இதை உனக்குச் சொல்கிறேன். ஏனென்றால், நீ எனது பக்தனும் நண்பனும்
வேதாந்த நூல்கள் மட்டுமே வாழ்வையும் சாவையும் எதிர்கொள்வதற்கான துணிச்சலைத் தர முடியும். ஆவாய்,” என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விடுத்த அறிக்கையைப் போல், இப்போது நானும் அதே அறிக்கையை உங்கள் அனைவருக்கும் விடுக்க வேண்டும்.
இங்கு நான் தர்க்கத்தைத் தாண்டிய விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். அது உண்மையான அனுபவம்.
உங்களுடன் பேசுவதற்கு முன் நான் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறேன்.
நான் பேசுவது எல்லாம் ஸத்யம்.
எப்பொழுதெல்லாம் முடிவான ஸத்யம் பேசப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நாம் அதை முழுமையாகப் பெற்றுக்கொள்வதில்லை.
தயவுசெய்து தெளிவாக இருங்கள். மௌனமாகக்கேட்பவர் எப்போதும் வேறு எதையோ நினைத்துக் கொண்டிருப்பார்! மௌனமாகக்கேட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் எப்போதும் வேறு எதையோ பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பவராகத்தான் இருக்கிறார். எப்பொழுதெல்லாம் தர்க்கத்தைத் தாண்டிய விஷயம் சொல்லப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதை நாம் முழுமையாகக் கேட்டுக்கொள்வதில்லை.
நாம் துணிச்சல் உடையவராக இருந்தால், ஒன்று, சண்டையிடுவோம், கேள்வி கேட்போம், வாதிடுவோம் அல்லது நமக்கு அந்த அளவிற்குத் துணிச்சல் இல்லை என்றால் நாம் அந்த வார்த்தை நம்முள் நுழைய அனுமதிக்கமாட்டோம்.
உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்கிறேன், 'நாம் யாரையும் நம்புவதில்லை' என்பதே அது!

தயவுசெய்து தெளிவாக இருங்கள், நாம் யாரையும் நம்புவதில்லை. இது எப்போதும் வாதமாகவே இருக்கிறது.
சில சமயம் இந்த வாதம் வெளிப்படையாகவும் மற்ற சமயங்களில் நமது மனத்திலும் நடக்கிறது.
நம்மால் வெளிப்படையாகச் சொல்ல
முடியவில்லை என்றால், நாம் அதே
வார்த்தைகளை இடைவிடாமல் மனத்தில்
சொல்லிக்கொண்டே இருப்போம்.
அதனால்தான் அந்த ஸத்யத்திற்குள்
நுழைவதற்கு முன், “நான் சொல்வதெல்லாம்
ஸத்யம்,” என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
உங்களால் அதை, ஸத்யத்தை உள்வாங்க முடிந்தால், உணர்வுருமாற்றம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் நான் இங்கு அனுபவத்தால் மட்டுமே உணர்ந்த ஸத்யத்தைப் பேசுகிறேன்; அது தர்க்கத்தின் படி உண்மையாக இருக்க முடியாது.
தர்க்கத்தைத் தாண்டிய
விஷயங்களை
நாம் நம்புவதே இல்லை.
NDE (Near Death Experience) மரணத்தின் நெருங்கிய அனுபவம் என்ற இணையதளம் உள்ளது. (http:// www.nderf.org) உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அந்த இணையதளத்தைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். ஒரு மருத்துவர் 30 வருடங்கள், மரணத்தின் வாசலைத் தொட்டுவிட்டுத் திரும்பியவர்களின் அனுபவத்தைக் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்.
முதலில் NDE என்றால் என்ன என்பது பற்றி விவரிக்கிறேன். மருத்துவ ரீதியாக மரணம் அடைந்து விட்டார்கள் என்று அறிவிக்கப்பட்ட சில மக்கள், நான்கு அல்லது ஐந்து மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர் பிழைத்து எழுந்து வந்து, அப்போது தங்களுக்கு நடந்த அனுபவங்களைப்

பகிர்ந்துகொள்வதைத்தான்
NDE அதாவது ‘மரணத்தின்
அருகில் சென்ற அனுபவம்’
என்று குறிப்பிடுகிறோம்.
இந்த இணையதளத்தை உருவாக்கிய மருத்துவர்கள் உலகம் முழுவதும் சென்று, இந்த ஆராய்ச்சி யை மேற்கொண்டார்கள். மருத்துவர்களால் இறந்து விட்டார்கள் என்று மருத்துவ ரீதியாக அறிவிக்கப்பட்டு, நான்கு அல்லது ஐந்து மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்தார்கள். குறிப்பாக, இறந்து விட்டார்கள் என்று மருத்துவர்களே அறிவித்த பிறகு, மீண்டும் உயிர்பெற்ற மக்கள் மேல் மட்டும் ஆர்வம் கொண்டார்கள்.
அவர்கள் பல ஆயிரக்கணக்கானவர்களைச் சந்தித்தார்கள். அவர்களுடைய பழைய நினைவுகளைச் சேகரித்து இதில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்.
உங்களுக்கு நேரம் கிடைத்தால் அந்த இணையதளத்தைப் பாருங்கள். அவர்கள் பல்வேறு மக்களிடம் - பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் - என்று பல்வேறு மக்களிடமிருந்து பல்வேறுவிதமான அனுபவங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
மரணத்தைப் பற்றிப் பல்வேறு மதங்கள் பல்வேறு வழிகளில் விவரிக்கின்றன.
சில மதங்கள், “நீங்கள் புண்ணியம் அல்லது நன்மை செய்தவர்களாக இருந்தால், நீங்கள் சொர்க்கம் என்ற இடத்தை அடைவீர்கள். அங்கு உங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வார்கள்.
நீங்கள் பாவம் செய்வதாக இருந்தால், உங்களை முடிவற்ற நரகத்திற்குக் கொண்டு செல்வார்கள்,” என்று சொல்கின்றன. ஒவ்வொருவரும் அவர்களது சொந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள்.
சிலர், “சொர்க்கம் நரகம் என்று இரண்டு பிரிவு அங்குக் கிடையாது. நீங்கள் எல்லோரும் நேரடியாக சொர்க்கத்திற்குத்தான் செல்வீர்கள்,” என்று சொல்கிறார்கள்.

சிலர், “இந்திரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட புஷ்பகவிமானம் அங்கு இருக்கும். மேனகை, ரம்பை போன்றவர்கள் உங்களுக்குச் சேவை செய்வார்கள்; இந்திரலோகத்திற்கு நீங்கள் நேரடியாக அழைத்துச் செல்லப்படுவீர்கள்,” என்று சொல்கிறார்கள்.
மரணத்தின்போது என்ன நடக்கிறது, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது குறித்து பல்வேறுவிதமான விவரங்கள், பல்வேறுவிதமாகச் சொல்லப்படுகின்றன.
கடோபநிஷத்தில், இதயகுகையில் இருக்கும் ஸூக்ஷ்மமான அங்குஷ்ட மாத்ர புருஷ அந்தராத்மா, கட்டைவிரல் அளவில் உள்ள ஜோதிஸ்வரூபமாகிய உங்கள் ஆன்மாவை நீங்கள் காண்பீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மா உடலை விட்டுப்போகும்போது நீங்கள் அந்த ஜோதியைக் காண்பீர்கள். என்றும், மேலும் எவ்வாறு மரணம் நிகழ்கிறது, எவ்வாறு அந்த ஆன்மா அடுத்த உடலில் நுழைகிறது என்பதைப் பற்றிய நிறைய விளக்கங்களும் பல்வேறுவிதமான விவரங்களும் அதில் இருக்கின்றன.
மரணத்தைப் பற்றி பல்வேறு மதங்கள் பல்வேறு வழிகளில் விவரிக்கின்றன.
இந்த ஆய்வாளர் அனைத்தையும் தெளிவாகப் பிரித்து, விளக்கி இருக்கிறார். முடிவில், பல ஆண்டுகள் ஆய்வு செய்தபிறகு ஒரு முக்கியமான அறிக்கையை விடுக்கிறார் :
"நான் பல மரண அனுபவங்களை ஆராய்ச்சி செய்து இருக்கிறேன். நான் இப்போது ஒரு விஷயம் சொல்ல முடியும். மக்கள் வாழும்போதுதான் அவர்கள் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தவர்கள் என்று பல சமயங்களைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இறக்கும்போது, அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அனைவரும் ஒரே அனுபவத்தைத்தான் அனுபவிக்கிறார்கள்."
"அவர்கள் அனைவரும் ஒரே அனுபவத்தைத்தான் அனுபவிக்கிறார்கள்," என்று அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார். கடோபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போன்றுதான் அந்த அனுபவம் இருக்கிறது.

பிறப்பும் இறப்பும் உங்களின் வரம்பிற்குட்பட்ட உரிமைகளே
இங்கே கிருஷ்ணர் இதை மிக அழகாக விளக்குகிறார்.
புருஷோத்தம யோகம் என்ற அத்தியாயத்தில், அவர் இதை மிகவும் ஆழமாக விளக்குகிறார். அந்த அத்தியாயத்திற்கு வரும்போது அந்தப் பொருள் பற்றி நாம் பார்க்கலாம். பிறகு அதைப் படிக்கலாம்.
இப்போது உங்களுக்கு ஒரு முன்னுரை கொடுக்க விரும்புகிறேன்.
மக்கள் வாழும்போதுதான் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்.
ஆனால் மரணமடையும்போது எல்லோரும் ஒரே அனுபவத்தைத்தான் அனுபவிக்கிறார்கள்.
நாம் நுழைந்து கொண்டிருக்கும் அறிவியலைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.
மக்கள் உயிருடன் இருக்கும்போதுதான் அவர்கள் பல சமயங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர் சொல்கிறார். அவர்கள் இறக்கும்போது கடோபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பாதையைத்தான் பின்பற்றுகிறார்கள்.
உடலைவிடும்போது துல்லியமாக என்ன நிகழ்கிறது?
நீங்கள் உடலைவிடும்போது, அந்தக் கணமே ஸ்தூல உடல் மரணம் அடைந்து ஓய்வு பெறுகிறது. “இதற்கு மேல் ஆன்மாவை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. நான் சோர்வடைந்து விட்டேன்,” என்று உடல் சொன்ன அந்தக் கணமே, ஆன்மா உடலை விட்டுச் செல்கிறது.
அந்த சமயம் நீங்கள் வாழ்ந்த 70-80 வருட வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் வாழ்வில் மிக உயர்ந்த இன்பம் என்று எதை நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை நினைக்கிறீர்கள்.
நீங்கள் சாப்பிடுவது மிக உயர்ந்த இன்பம் என்று நினைத்தீர்களானால், இயல்பாகவே உங்கள் முழு வாழ்வையும் சாப்பிடுவதில் கழித்திருப்பீர்கள். பிறகு உடலைவிடும்போதும் இயல்பாகவே சாப்பிடுவதைத்தான் மிக உயர்ந்த இன்பம் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும். "நான் இடைவிடாது சாப்பிடுவதற்கு ஏற்ற உடலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு எது மிகச் சிறந்த உடல்,'' என்று நீங்கள் நினைப்பீர்கள். சாப்பிடுவதற்கே உரிய உடல் எது என்பதற்கான எல்லாச் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்த பிறகு, "ஒரு பன்றியின் உடல்தான் மிகச் சிறந்தது. நான் அந்த வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறேன்,'' என்று நீங்கள் முடிவெடுப்பீர்கள்.
உங்கள் வாழ்வில், தூங்குவதுதான் மிக உயர்ந்த, மிக சந்தோஷமான, மிக மகிழ்ச்சியான அனுபவம் என்று நீங்கள் நினைத்திருந்தீர்களானால், தூங்கியே, வேலைசெய்யாமல், உங்கள் முழுவாழ்வையும் வாழ்ந்திருந்தீர்களானால், பிறகு "தூங்குவதுதான் மிகச் சிறந்த அனுபவம் என்று நான் நினைக்கிறேன்.
எருமையின் உடலை நான் ஏன் எடுக்கக் கூடாது? அப்படியென்றால்தான் வாழ்நாள் முழுவதும் நான் தூங்கிக்கொண்டே இருக்க முடியும்,'' என்று நீங்கள் நினைப்பீர்கள்.
உங்கள் வாழ்வில், மிக உயர்ந்த அனுபவம் என்று எதை நினைத்தாலும் எந்தப் புலனில் நீங்கள் உங்கள் முழுச் சக்தியையும் உச்ச நேரத்தையும் உள் வெற்றிடத்தின் உச்சப் பகுதியையும் செலவழித்திருக்கிறீர்களோ, அந்த விருப்பத்தின் அடிப்படையில்தான், அந்தக் கருத்தின் அடிப்படையில்தான் நீங்கள் உங்கள் அடுத்த பிறவியைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
> உங்கள் பிறப்பை
> நீங்கள்தான்
> முடிவு செய்கிறீர்கள்.

தயவுசெய்து மிகத் தெளிவாக இருங்கள், வேறுயாரும் உங்கள் பிறப்பை முடிவு செய்வதில்லை. நீங்கள்தான் அதை முடிவு செய்கிறீர்கள். நீங்களேதான் தேர்ந்தெடுக்கிறீர்கள். அது உங்கள் தனிப்பட்ட ஆன்மாவின் மிகத்தெளிவான, உணர்வுப்பூர்வமான முடிவு.
வாழ்வே ஒரு வரப்பிரசாதம்
உங்களுடைய எந்தக் கேள்விகளுக்கும் விடை அளிக்கத் தயாராக இருக்கிறேன். இயல்பாகவே இது ஒரு முரண்பாடான விஷயம். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான கருத்தும்கூட! நிச்சயம் இதற்குப் பிறகு நீங்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் நான் பதில் அளிப்பேன். ஆனால் நீங்கள் பிறப்பு, இறப்பு இவற்றின் அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டும். பிறப்பு, இறப்பு இவற்றிற்குப் பின்னால் உள்ள இரகசியம், புதிர் இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கே கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார், "இங்கு நான் விஷயங்களின் இரகசியத்தைச் சொல்கிறேன். ரஹஸ்யம் ஹேத்ததுத்தம், புதிர் நிறைந்த முடிவான யோக விஞ்ஞானத்தை நான் உனக்குச் சொல்கிறேன், என் அருமை பக்தனே, என் நண்பனே!" என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் , நாம் எப்படிப் பிறப்பு எடுக்கிறோம்?
நாம் இந்தக் கருத்தைக் கேள்வி, பதில் மூலம் ஆராய்ச்சி செய்வோம். நான் இப்போது சொன்ன சில கருத்துகளைப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் உங்கள் விருப்பத்தின்படியும் ஆசைகளின்படியும், மேலும் கடந்த பிறவியில் எப்படி வாழ்ந்தீர்கள் என்பதன் அடிப்படையிலும்தான் நீங்கள் பிறப்பு எடுக்கிறீர்கள். பிறப்பு, இறப்பு என்பவை நீங்கள் விழிப்புணர்வோடு எடுத்த முடிவுகள். இந்தக் கருத்துகள்தான் நான் முன்பு சொல்லியவை.
இந்தக் கருத்துகளை நாம் கேள்வி, பதில் மூலம் ஆராய்ச்சி செய்வோம். அப்போது நீங்கள் எளிதாக அவற்றை உள்வாங்க முடியும்.
> நம் பிறப்பு, இறப்பின் இரகசியம் புரிந்த அந்தக் கணமே, வாழ்க்கையே ஒரு வரப்பிரசாதம்தான் என்பதை உணர்வீர்கள்.
நீங்கள் அந்த வார்த்தைகளை அப்படியே கேட்டுவிட்டு சென்று விட்டீர்களானால், அவை உங்களுக்குள் நுழையாது.
நான் எப்போதும் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கிறேன். ஏனென்றால், நீங்கள் கேள்வி கேட்டால்தான் உங்களால் அந்தக் கருத்துடன் தொடர்புகொள்ள முடியும். கேள்வி கேட்பதனால் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் உங்களைப் பார்ப்பார்கள்; நீங்கள் ஒரு முட்டாள்போல் தோன்றுவீர்கள் என்று எப்போதும் நினைக்காதீர்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்டீர்கள் என்றால், நீங்கள் ஒரு முட்டாளைப் போன்று தோன்றலாம். ஆனால் நீங்கள் கேள்வி கேட்கவில்லையென்றால் எப்போதும் முட்டாளாகவே இருந்துவிடுவீர்கள்! முட்டாளாக இருப்பதை விட, முட்டாளாகத் தோன்றுவதே மேல்!
> ஏழ்மை,
> உங்களின்மேல்
> திணிக்கப்பட்டது என்று
> நினைக்காதீர்கள்.
> அதுவும்கூட,
> உங்களது முடிவே!
இதன் முழுக் கருத்தையும் கிருஷ்ணர் வழங்கிய புதிரான யோக அறிவியலையும் பிறப்பு இறப்பு இவற்றின் இரசியத்தையும் கேள்வி பதில்கள் மூலம் நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
பிறகு உங்களால் ஸத்யத்தை உள்வாங்க முடியும். ஸத்யம் புரிந்த அந்தக் கணமே, உங்களுடைய வாழ்க்கையே ஒரு வரப்பிரசாதம்தான் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
இந்த வாழ்க்கை, ‘உங்களின் முடிவு’தான் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக இருங்கள்.
ஏழ்மைத்தனம் கூட, உங்களின் முடிவுதான். ஏழ்மை, உங்களின் மேல் திணிக்கப்பட்டது என்று நினைக்காதீர்கள். அதுவும் கூட, உங்களது முடிவே!
நாம் பிறக்கும்போது, இந்த உடலை எடுக்கும்போது நம்முடைய ஆசை அச்சத்தின் அடிப்படையில் பிறப்பு எடுக்கிறோம்.
"நான் ஒரு அரசனின் மகனாக ஆகவேண்டும், நான் ஒரு பணக்காரரின் மகனாகப் பிறக்க வேண்டும்," என்று ஒரு பக்கம் நம் ஆசை நம்மைத் தள்ளுகிறது. ஆனால் நமது அச்சம், "இல்லை, இல்லை என்னால் அந்த அளவுக்குப் பொறுப்பெடுக்க முடியாது," என்று சொல்லி ஒரு பக்கம் நம்மைப் பிடித்து இழுக்கிறது.
பணத்துடன் சேர்ந்து அதைப் பாதுகாக்கும் பெரிய பொறுப்பும் இருக்கிறது. அதனால்தான் லஷ்மி, பாதுகாப்பவராகிய விஷ்ணு பகவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். செல்வத்தின் கடவுளாகிய லஷ்மி, உருவாக்குபவராகிய பிரம்மாவுடனும் இல்லை, அழிப்பவராகிய சிவனுடனும் இல்லை.காப்பவராகிய விஷ்ணுவிடம்தான் அவர் இருக்கிறார்.
செல்வத்தைக் குறிக்கும் லஷ்மியுடன்,
அவரைப் பாதுகாக்கும் பொறுப்பும்
கூடவே வருகிறது. அநேக சமயங்களில்
நாம் பொறுப்பெடுக்க விரும்புவதில்லை.
நாம் மகிழ்ச்சியாக இருக்க மட்டும்தான்
விரும்புகிறோம்.
மகிழ்ச்சி மட்டும்தான் நமக்குத் தேவைப்படுகிறது, ஆனால் நாம் பொறுப்பெடுக்க விரும்புவதில்லை. அங்கேதான் துன்பம் ஆரம்பிக்கிறது. பொறுப்பையும் மகிழ்ச்சியையும் எடுக்கத் தயாராக இருப்பவர் எதையும் தவறவிடுவதும் இல்லை, இழப்பதும் இல்லை.
இந்த இரகசியத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டால், இந்தக் கணமே உங்களுடைய வாழ்க்கை ஒரு வரப்பிரசாதமே தவிர சாபம் அல்ல என்று நினைப்பீர்கள். நாம் எப்போதும் வாழ்க்கையைச் சாபக்கேடாகவே நினைத்து, அதைச் சபித்துக்கொண்டே இருக்கிறோம்.
நீங்கள் அழைக்கும்வரை காத்திருக்கவில்லை நானே வந்துவிட்டேன்
“எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் இந்த உலகை இப்போது இருப்பதைவிட, மிகச் சிறப்பாக நான் செய்துவிடுவேன்,” என்று நாம் சொல்வோம்!
தற்போது உள்ள படைப்பை நம்மால் இன்னும் சிறப்பாக மேம்படச் செய்துவிட முடியும் என்று நாம் எப்போதும் நினைக்கிறோம்.
மிகத் தெளிவாக இருங்கள், கடவுள் நம்மைவிட நிச்சயமாக மிக அதிக அறிவுடையவர். உங்களுடைய வாழ்க்கையையும் இந்தப் பிரபஞ்சத் தையும் எவ்வளவு சிறப்பாகப் படைக்க முடியுமோ அந்த அளவுக்கு அதைச் சிறப்பாகப் படைத்துள்ளார்.
நமது தீர்மானங்களுக்குப் பின்னே உள்ள இரகசியத்தை, புதிரை நாம் புரிந்துகொள்ளாததால், நாம் இடைவிடாது இந்த வாழ்வையும் இந்த வாழ்வைக் கொடுத்தவரையும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
ஒரு சிறிய நிகழ்ச்சியை உங்களுக்கு விவரிக்கிறேன். இது உண்மையாகவே நிகழ்ந்த நிகழ்ச்சி. இது அமெரிக்காவில் நிகழ்ந்தது. ஒரு சிறுவனுக்கு ஆடிசம் (Autism) என்ற நோய் இருந்தது. அவன் ஏழு அல்லது எட்டு வயது நிரம்பிய சின்னப் பையன்.
என்னிடம் தியான சிகிச்சை பெறுவதற்காக அவன் அழைத்து வரப்பட்டான். அந்தத் தாயும் தந்தையும் "ஸ்வாமிஜி, தயவுசெய்து அவனைக் குணப்படுத்தி அவன் நன்றாக ஆவதற்கு உதவுங்கள்," என்று வேண்டிக் கொண்டார்கள். அவனைக் குணப்படுத்துவதற்காக நான் என்னுடைய கையை அவன் தலைமேல் வைத்தேன்.
உடனே அந்தப் பையன் தமிழில் பேச ஆரம்பித்தான். அந்தக் குடும்பத்தினருக்குத் தமிழ் தெரியாது. அந்தச் சிறுவனுக்கு ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாது.
அந்தப் பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். "அவன் எப்படித் தமிழில் பேசுகிறான் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எங்களுக்குத் தமிழ் தெரியாது. மேலும் அவன் பொதுவாக, ஆங்கிலத்திலேயே கூட சரளமாகப் பேச மாட்டான், ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளாகத்தான் பேசுவான்," என்றும் பிறகு சொன்னார்கள்.
ஆனால் அன்று அவன் நேரடியாகவே என்னிடம் தமிழில் பேச ஆரம்பித்தான். "குணப்படுத்துவதை நிறுத்து," என்று சொன்னான். ஆமாம், கொச்சைத் தமிழில், மரியாதை இல்லாமல், முரட்டுத்தனமாக, "குணப்படுத்துவதை நிறுத்து," என்று சொன்னான்.
அவன் தமிழ் வார்த்தைகளில்
"குணப்படுத்துவதை நிறுத்து," என மிகத்
தெளிவாகவும் முரட்டுத்தனமாகவும்
பேசியத்தைக் கேட்டவுடன் ஆச்சரியம்
அடைந்தேன்.
அதன் பிறகு அந்தச் சிறுவனிடம் "ஏன்
என்னைக் குணப்படுத்துவதை நிறுத்தச்
சொல்கிறாய்? நீயார்? நீ ஏன் என்னை
> பொறுப்பையும்
> மகிழ்ச்சியையும்
> எடுக்கத் தயாராக
> இருக்கும் ஒருவர்
> எதையும்
> தவறவிடுவதும் இல்லை,
> இழப்பதும் இல்லை.
நிறுத்தச் சொல்கிறாய்?” என்று கேட்டேன்.
பிறகு அவன், “நான் இந்த உடலுக்குச் சொந்தக்காரன். நான் தெரிந்துதான் சுய நினைவுடன்தான் இந்த முடிவை எடுத்தேன். வழக்கமான வாழ்வை வாழ்வதற்கான பொறுப்பை எடுக்க எனக்கு விருப்பம் இல்லை.
பள்ளி செல்ல, பணம் சம்பாதிக்க, வழக்கமான வாழ்க்கையை வாழத் தேவையான பொறுப்பெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் நான் இந்தத் துன்பத்தை ஏற்றுக்கொண்டேன். தெளிவான மன நிலையோடுதான் இந்த ஆட்டிசம் நோய் கொண்ட உடலைத் தேர்ந்தெடுத்தேன்,” என்று சொன்னான்.
> வாழ் வில்
> பொறுப்பெடுக்க
> விரும்பாதவர்கள்
> உடல் ஊனத்துடன்
> பிறக்கிறார்கள்.
அவன் அனைத்தையும் தமிழில் பேசினான்.
நீங்கள் எப்படி இதை நம்புவீர்கள் என்று
தெரியவில்லை. இது தனிப்பட்ட
மனிதருடைய விஷயமாக இருப்பதால்,
அவன் பெயரையும் தகவல் குறிப்பையும்
கொடுக்க முடியவில்லை.
நேரடியாகவே அவன் என்னைப் பார்த்து பேச ஆரம்பித்தான், “வாழ்வின் பொறுப்பை எடுக்க எனக்கு விருப்பம் இல்லை. பள்ளிக்குப் போவது, வேலைக்குப் போவது மாதிரியான வழக்கமான செயல்களைச் செய்ய எனக்கு விருப்பம் இல்லை.
அதனால்தான் நான் இந்த உடலைத் தேர்ந்தெடுத்தேன். யாராவது ஒருவர் என்னைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். நான் எதுவுமே செய்யாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று விரும்பினேன்.”
பிறகு நான் அவனைக் கேட்டேன். “அது சரிதான். ஆனால் இவ்வளவு நல்லவர்களுக்கு போய் நீ ஏன் பிறந்தாய்? அவர்களுக்கு மகனாக நீ ஏன் வந்தாய்?”
அதற்கு அவன், “அவர்கள் நல்லவர்களாக இருந்ததால்தான் நான் அவர்கள் குடும்பத்தில் பிறந்தேன். அவர்கள் என்னைக் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் என்னைக் கைவிட்டுவிட மாட்டார்கள். வேறு யாராவதாக இருந்தால் அவர்கள் என்னைக் கைவிட்டு இருப்பார்கள், என்னைக் கவனித்திருக்கமாட்டார்கள். அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் குடும்பத்தில் பிறந்தேன்,"' என்று சொன்னான்.
இதுவரை அவன் தமிழில் என்னுடன் பேசினான். அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கடைசியில் அவன் பலவந்தமாக என் கையை அவன் தலையிலிருந்து எடுத்தான்.
பிறகு அவனிடம் சொன்னேன், "தனிப்பட்ட மனிதன் முடிவில் நான் குறுக்கீடு செய்ய முடியாது. எவருடைய வாழ்விலும் நான் குறுக்கீடு செய்யமுடியாது."
கடவுளின் பெருந்தன்மை என்னவென்றால், நாம் பந்தத்தில் இருக்கவும் நமக்குச் சுதந்திரம் கொடுக்கிறார். கடவுள் நமக்கு எல்லையில்லாச் சுதந்திரம் அளித்திருக்கிறார். அவர் நமக்குக் கொடுத்திருக்கிற இறுதி சுதந்திரம் என்னவென்றால், நாம் எப்படி இருக்க விரும்புகிறோமோ, அப்படியே நம்மை வாழவிடுவதுதான்!
எதையும் உங்கள் மேல் நிர்ப்பந்தமாக
திணிப்பது இல்லை. பந்தத்தில் இருப்பது
உங்களுடைய தேர்வாக இருந்தால்,
அவர் அதற்கும் முழு சுதந்திரம்
அளிக்கிறார். கடைசியாக, நான் அவனைக்
குணப்படுத்தவில்லை.
உங்களின் பிறப்பு முழுவதும் உங்களின் அச்சம் ஆசையின் அடிப்படையில் இருக்கிறது. ஆனால் ஞானகுருவினுடைய பிறப்பு அன்பு, கருணையின் அடிப்படையில் உள்ளது.
அதன் முழு இரகசியமும் இதுதான். சாதாரண மனிதன் அச்சம் ஆசையின் அடிப்படையில் பிறக்கிறான். அதனால்தான் அவனுடைய முழு வாழ்வும் அச்சம் ஆசை இவற்றிற்கு உட்பட்டு இயங்குகிறது. அவனுடைய முழு வாழ்வும் அச்சம் ஆசை இவற்றில் செல்கிறது.
ஞானகுருமார்கள், அன்பு, கருணையின் காரணமாக உடல் எடுக்கிறார்கள்.
அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார், ஆத்ம மாயயா, என்னுடைய சஃக்தியால் நான் பிறக்கிறேன். என்னுடைய சஃக்தியினாலும் எனது அன்பு, கருணையினாலும் நான் இந்தப் பூமியை வந்தடைகிறேன்.
இதனை அடுத்து பின் தொடரும் கேள்வி இது:
இந்த ஸத்யத்தைத் தெரிந்துகொள்வதன் மூலம் நாம் எப்படி விடுதலை அடைய முடியும்? இது, நம் வாழ்வில் நேரடியாக எந்த முறையில் பயன்பட போகிறது? அதற்கான பதில்தான் அடுத்த பகுதி...

நீங்கள் ஒரு அவதாரமாவீர்கள்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நான் இறப்பு பிறப்பு என்ற வார்த்தைகளைச் சொல்லும்போது, நம் வாழ்வின் இறுதியில் நாம் மரணம் அடைவதைப் பற்றி சொல்லவில்லை. ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கி எழும் இறப்பு பிறப்பைப் பற்றிச் சொல்கிறேன்.
ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கச் செல்லும்போது, நீங்கள் இறக்கிறீர்கள்! நீங்கள் மறுநாள் எழுந்துவரும்போது, மீண்டும் இன்னொரு முறை நீங்கள் பிறக்கிறீர்கள்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் உடலை எடுக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் உடலைவிடுகிறீர்கள்.
நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் காரண சஃரீரத்திற்குள் செல்லும்போது, நீங்கள் உண்மையாகவே மரணம் அடைகிறீர்கள்.

ஒரு ஜ்ஞானகுருவினுடைய பிறப்பு, கருணையின் அடிப்படையில் உள்ளது.
பிறகு மீண்டும் வருகிறீர்கள். நீங்கள் தினமும் மீண்டும் வரும்போது, நீங்கள் புதியவராக இருக்கிறீர்கள்.
இன்றுவரை தினமும் காலையில் எப்படி
நாம் உயிர் பெற்றோம்? எப்படி நாம் இந்த
உடலை எடுத்தோம்? என்பதை அப்படியே
ஆழமாகப் பாருங்கள். நீங்கள் படுக்கையை
விட்டு எழுந்திருக்கும்போது என்ன
நடக்கிறது?
வழக்கம் போல் நீங்கள் விழித்து விட்டீர்கள் என்று உணர்ந்த அந்தக் கணமே, உங்களுக்குள் முதலில் ஆசையின் அடிப்படையிலோ அல்லது அச்சத்தின் அடிப்படையிலோ ஒரு எண்ணம் உதிக்கிறது.
நீங்கள் யாரையாவது சந்திக்க விரும்பலாம் எதையாவது பெறுவதற்கு ஏதாவது செய்ய விரும்பலாம்; இவை யாவும் ஆசையில் எழுந்த எண்ணமே.
நீங்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என நினைப்பது யாவும் அச்சத்தில் எழும் எண்ணங்களே.
இறப்பு பிறப்பு என்ற வார்த்தைகளை நான் சொல்லும்போது, ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கி எழும் இறப்பு பிறப்பைப் பற்றித்தான் சொல்கிறேன்.
ஆசையாலோ அச்சத்தாலோ எழுந்த ஏதோ ஒரு எண்ணம்தான், உங்களுக்குள் முதலில் எழும். உடனே நீங்கள் உங்கள் படுக்கையை விட்டுக் குதித்து எழுகிறீர்கள். நான் சொல்வது சரிதானே?
தினந்தோறும் காலையில் நீங்கள் எப்படி எழுகிறீர்கள். தினமும் இந்த உடலை எப்படி எடுக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தோமானால், ஆசையோ அல்லது அச்சமோ சம்பந்தப்பட்ட எண்ணம் எழுகிற அந்தக் கணம்தான், நீங்கள் உண்மையில் உங்கள் பிறப்பை எடுக்கிறீர்கள்.
மிகவும் தெளிவாக இருங்கள், நீங்கள் உடலை எடுக்கும் அந்த நேரம்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவை அனைத்தும் முழு விழிப்புணர்வு நிலையையும் மாற்றி அமைக்கக்கூடிய, மிக நுட்பமான, புதிர் நிறைந்த அடிப்படை இரகசியங்கள்.
விடியற்காலை, எந்த எண்ணத்தில் நீங்கள் உங்கள் உடலில் நுழைகிறீர்களோ, எந்த எண்ணம் உங்களை உடல் எடுக்கச் செய்கிறதோ, அந்த எண்ணம்தான் உங்களின் முழு விழிப்புணர்வு நிலையில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த முதல் எண்ணம் அந்த நாள் முழுவதும் உங்கள் விழிப்புணர்வு நிலையில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆனால் ஞானகுருமார்கள் அன்பினாலும் கருணையினாலும் உடலை எடுக்கிறார்கள். அவருடைய கருணையை வெளியே பொழியவும் தம்மை இந்த முழு உலகத்துடன் பங்கிட்டுக்கொள்ளவும் அவர் திரும்பி வருகிறார். “அவர் திரும்பி வருகிறார்,” என்று நான் சொல்லும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலையும் புதிதாக அவர் திரும்பி வருவதைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
நீங்கள் இதை ஒருமுறை புரிந்து கொண்டு, காலையில் கண் விழிக்கும்போது எழுகிற உங்கள் முதல் எண்ணத்தை மாற்றி அமைத்தீர்களானால், உங்களுடைய முழு விழிப்புணர்வு நிலையையும் மாற்றி அமைத்துவிடமுடியும். உங்கள் விழிப்புணர்வு நிலையின் தரத்தையே, இயல்பையே மாற்றி அமைத்து விடலாம்.
இது ஒரு ஒளிபடக் கருவியைப் (Camera) போல வேலை செய்கிறது. லென்ஸைத் திறந்தவுடன், அந்தக் கணத்தில் ஒளிக்கருவியின் லென்சுக்கு முன் உள்ள காட்சி அந்த ஒளிப்படச் சுருளில் பதிவாகிறது. அந்தக் காட்சி எப்போதும் நிரந்தரமாக இருக்கும்.
அதே போல், ஸ்தூல உடலை எடுக்கும்போது, அந்த உடலில் நுழையும்போது எந்த எண்ணம் உள்ளதோ, அந்த எண்ணம்தான் உங்கள் விழிப்புணர்வு நிலையில், அந்த நாள் முழுவதும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நீங்கள் படுக்கையை விட்டு எழும்போது, உங்கள் முதல் எண்ணம் அன்பு, கருணை இவற்றுடன் தொடர்புடையதாக இருக்கட்டும்! ஆழ்ந்த, தெய்வீக, ஆன்மீக எண்ணத்துடன் தொடர்புடையதாக இருக்கட்டும்!
உங்கள் வாழ்வில் ஆனந்தத்தை வெளிப்படுத்த மட்டுமே எழுந்திருங்கள்.

மகிழ்ச்சியால் மட்டுமே எழுந்திருங்கள். நீங்கள் உணர்வு நிலைக்கு வந்த கணமே, உங்களை உணர்ந்த அந்தக் கணமே, “இறைவா இது மிக அழகாக உள்ளது. நீங்கள் எனக்கு இன்னும் ஒரு நாளைக் கொடுத்து இருக்கிறீர்கள். உங்களது பிரபஞ்ச இருப்பு நிலையைப் பார்ப்பதற்காக, நான் மீண்டும் ஒருமுறை உயிர் பெற்றுள்ளேன். எனக்கு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு கொடுத்து இருக்கிறீர்கள். அதனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்,” என்று நன்றி சொல்லுங்கள்.
தயவுசெய்து, மிகவும் தெளிவாக இருங்கள்.
இந்த நீட்டிப்பைப் பெறுவதற்கு உங்களுக்கு
எந்த உரிமையும் இல்லை. வாழ்வு உங்களது
பிறப்பு உரிமை என்று நினைக்காதீர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் மிக எளிதாகவும்
சாதாரணமாவும் எடுத்துக்கொள்ளும் அநேக
மக்களைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும்
இறைவனின் ஆசீர்வாதமே!
ஒவ்வொரு நாளும்
ஒரு நீட்டிப்புத்தான்!
அவர்கள் தங்களுக்கு வேலை கிடைப்பதற்கு முன், "எனக்கு மாதம் 10,000 ரூபாய் சம்பளம் கிடைத்தால், நான் நிம்மதியாக இருப்பேன். நான் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக நினைத்து க்கொள்வேன்," என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் வேலை கிடைத்த உடனே ஒரு மாதத்திற்குள், அது அவர்களது பிறப்புரிமை என்று நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
பிறப்பே உங்கள் உரிமை கிடையாது.
பிறகு எப்படி நீங்கள் எதையோ உங்கள் பிறப்புரிமை என்று சொல்ல முடியும்?
பிறப்புரிமை என்ற வார்த்தை முற்றிலும் தவறு. பிறப்பே உங்கள் உரிமை அல்ல. உங்களுடைய பிறப்புக்கு, உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அது உண்மையான பரிசு.
உங்களுடையது என்று நினைத்து ஒரு மூச்சுக்காற்றைக் கூட நீங்கள் செலவழிக்க முடியாது. அந்தப் பிரபஞ்ச சக்தி, உங்களுக்கு நீட்டிப்பு கொடுத்தால் தவிர, அந்தத் தெய்வீகம் உங்களுக்கு அனுமதி கொடுத்தால் தவிர, உங்களால் ஒரு கணம் கூட மூச்சை உள்ளே இழுக்கவோ, வெளியே விடவோ முடியாது.
அதனால் ஒவ்வொரு நாளும் இறைவனின் ஆசீர்வாதமே! ஒவ்வொரு நாளும் ஒரு நீட்டிப்புத்தான்! படுக்கையை விட்டு எழும்போது இந்த உடலை எடுக்கும்போதும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!
உங்கள் முழு விழிப்புணர்வு நிலையின் தன்மையே மாறிவிடும். அதன்பின் நீங்கள் ஒரு அவதாரமாவீர்கள். இங்கு, நீங்கள் கிருஷ்ணராக மாறுவது எப்படி, கிருஷ்ணரின் விழிப்புணர்வு நிலைக்குள் நுழைவது எப்படி, ஒரு அவதாரமாவது எப்படி என்ற உத்தியை, நுட்பத்தை உங்களுக்கு நேரடியாகக் கொடுக்கிறேன்.
அன்பினாலும் கருணையினாலும் உடலை எடுப்பவர் அவதாரமாகிறார்.
ஆசையினாலும் அச்சத்தினாலும் உடலை எடுப்பவர் மனிதனாகிறார்.
நீங்கள் அன்பினாலும் கருணையினாலும் உடலை எடுத்தீர்களானால், நீங்கள் ஒரு அவதாரமாகிறீர்கள், நீங்கள் தெய்வமாகிறீர்கள். ஆசையினாலும் அச்சத்தினாலும் உடலை எடுத்தீர்களானால், நீங்கள் மனிதராகிறீர்கள். நீங்கள் அவதாரமாகும்போது உங்கள் முழு வாழ்வும் முடிவற்ற உண்மையான ஆனந்தமாக மாறும். உங்கள் முழு வாழ்வும் வேறு உணர்வு நிலையில் நடைபெறும்.

துன்பங்கள் மறைந்துவிடும் என்னோடு கரைந்துவிட்டால்
நான் பிறப்பு, இறப்பு இவற்றின் இரகசியங்களை விளக்கிக் கொண்டிருக்கிறேன். அவற்றை எப்படி நாம் கடந்து செல்கிறோம்? நாம் விழிப்புணர்வுடன் எடுக்கும் தீர்மானமாக அது எப்படி உள்ளது, நம்முடைய தேர்வாக அது எப்படி உள்ளது என்பதை எல்லாம் பற்றித்தான் விளக்கிக் கொண்டிருக்கிறேன்.
te தயவுசெய்து மிகத் தெளிவாக இருங்கள். உங்களுடைய முழு வாழ்வும் உங்களுடைய பொறுப்புதான். உங்கள் மேல் யாரும் எதையும் வற்புறுத்தித் திணிக்கவில்லை!
உங்கள்
முதல் எண்ணம்,
அன்பு, கருணை
இவற்றுடன்
தொடர்புடையதாக
இருக்கட்டும்!
உடனே மக்கள், “ஸ்வாமிஜி, பிறகு ஏன் நமக்கு விபத்து நேரிடுகிறது?” என்று கேட்கிறார்கள்.
நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்,
எல்லாமே, நம்முடைய தேர்வுதான். இதில்
விபத்து உட்பட! இதைப் பற்றி நாளை
விரிவாக விளக்குகிறேன். அப்போது
இந்த ஸத்யத்தை இன்னும் ஆழமாகப்
புரிந்துகொள்வீர்கள்.
இங்குக் கிருஷ்ணர் அவரை அடைவதற்கான
உத்தியைக் கொடுக்கிறார். கோபம் அச்சம்
இவற்றினால் ஏற்படும் பந்தத்திலிருந்து
விடுதலை பெற்ற வாழ்வை நாம் வாழ
முடிந்தால், அவரில் நாம் கரைந்து
விடமுடியும்; அவரை அடைந்து விட
முடியும்.
> ஆசையினாலும்
> அச்சத்தினாலும்
> உடலை எடுத்தால்
> நீங்கள் ஒரு மனிதர்;
> அன்பினாலும்
> கருணையினாலும்
> உடலை எடுத்தால்
> நீங்கள் ஒரு அவதாரம்!
ஒவ்வொரு செயலும் அதற்கு எதிர்ச் செயலை உருவாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஒரு விதையை விதைக்கும்போது, அந்தச் செயல் ஒரு முழுமையான செயலாகத் தோன்றினாலும் உண்மையில் அது முழுமையான செயல் அல்ல. ஒரு இயக்கத்தில், ஒரு இயங்கு முறையில் நாம் ஒரு சுழற்சியை, ஒரு சங்கிலித் தொடர் நிகழ்ச்சியை இணைக்கிறோம். அந்த விதை முளைத்து ஒரு செடியாகவோ, மரமாகவோ ஆகிறது.
பிரபஞ்ச இருப்பு நிலையிலும் கூட, ஒவ்வொரு செயலும் அல்லது ஒவ்வொரு காரணமும் அதற்கான எதிர்ச் செயலை அல்லது விளைவைக் கொண்டுள்ளது. அதனால், செயல் எதிர்ச்செயல், காரணம் விளைவு என்பவற்றின் பிடிப்பின் சுழற்சியிலிருந்து தப்பித்துக்கொள்வது மிகவும் கஷ்டம்.
இங்குக் கிருஷ்ணர் கர்ம பந்தத்தை அறுத்து, அதிலிருந்து தப்பிப்பதற்கும் உண்மையை உணர்வதற்கும் ஒரு நுட்பத்தை வழங்குகிறார்.
அச்சம் கோபம் இவற்றிலிருந்து விடுபட்ட செயல்கள், பந்தத்தை ஏற்படுத்துவதில்லை. அவை நம்மை உயர்ந்த விழிப்பு நிலைக்கு அழைத்துச் செல்லும். ஆசையின் காரணமாக எழும் அச்சம் கோபம் இவை இரண்டும் மிகவும் எரிச்சலைத் தூண்டும் உணர்ச்சிகள். அவை செயல்களை உருவாக்கி பந்தத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
பந்தங்கள், நமது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் ஏற்பட்ட எதிர்கால பிணைப்புக்கள். இன்னும் நிறைவேறாத, ஆனாலும் என்றாவது அவை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஏராளமான ஆசைகளை நாம் கொண்டுள்ளோம்.
நாம் பலனை எதிர்பார்க்கிறோம். பலன்கள் என்கிற சாத்திய நிலையுடன் நாம் பிணைக்கப்படுகிறோம். அந்தப் பலன்கள் நாம் விரும்பியவாறு நிகழ்ந்தால், ஒரு தற்காலிகமான மன நிறைவு ஏற்படுகிறது. பிறகு மேலும் அநேக விருப்பங்கள் எழுகின்றன. அநேக பிணைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.
> பந்தங்கள், நமது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் ஏற்பட்ட எதிர்காலப் பிணைப்புக்களே.
ஆனால் நாம் விரும்பியவாறு நிகழ்ச்சிகள் நிகழவில்லை என்றால், நாம் துக்கப்பட்டு மனச்சோர்வடைகிறோம். நாம் மீண்டும் முயற்சிக்கிறோம்.
இருவழிகளும் இறுதியில் துக்கத்தைத்தான் கொண்டு வருகின்றன. அது ஒருபோதும் முடிவு பெறாத சுழற்சியாக இருக்கிறது. நாம் பந்தத்திலிருந்து விடுபட்டு, நமது செயல்களை எதிர்பார்ப்பின்றி செய்தால், நாம் செயல்படும் பாதையில் மட்டுமே, செயல் புரிவதில் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறோம். பந்தம் இல்லாததால், என்ன நிகழவேண்டுமென்பதைக் குறித்து எந்தவித மன அழுத்தமும் இருப்பதில்லை.
இதிலிருந்து விடுபடுவதற்கான வழியை கிருஷ்ணர் வழங்குகிறார். அவர், “என்னில் மூழ்கி இருங்கள், உங்களுக்குக் கோபம் இருக்காது, பயம் இருக்காது. அனைத்து செயல்களும் பிணைப்பின்றி இருக்கும். இந்த முறையில் நீங்கள் என்னை உணரலாம்,” என்று சொல்கிறார்.
இந்தப் பாதையைப் பின்பற்றி அநேக மக்கள் கடந்தகாலத்தில் ஜீவன் முக்தி நிலையை அடைந்திருக்கிறார்கள் என்ற வாக்குறுதியையும் உறுதியான சான்றையும் தருகிறார்.
நீங்கள் இதைச் செய்தால், ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம் என்று அவர் நமக்குச் சொல்லவில்லை. அவர் நேரடியாகவே நேர்மறை வாக்குறுதியைக் கொடுக்கிறார். “இதைக் செய்யுங்கள், நீங்கள் அடைவீர்கள், ஒருவர் இருவர் அல்ல. அநேக மக்கள் அவ்வாறு செய்து என்னை உணர்ந்திருக்கிறார்கள்!” என்கிறார்.
உங்களுக்காக மட்டுமே சொல்லப்படுகிறது, மற்றவருக்கல்ல
குருமார்கள் கண்ணாடியைப் போன்றவர்கள். அவர்கள் நமது உண்மையான பிரதிபலிப்பு. பக்தர்கள் எது கேட்டாலும், அது அவர்களுக்குக் கிடைக்கும். அந்தப் பக்தர் செல்வத்திற்காக வழிபாடு செய்தால், அவருக்கு அது கிடைக்கிறது.
அவர் தம்முடைய உடல், மன நலத்தை விரும்பினால் அவருக்கு அது வழங்கப்படுகிறது.
"கடவுளே, எனக்கு உங்களுடைய உண்மை தன்மை பற்றிய அறிவு தவிர வேறு ஏதும் வேண்டாம்," என்று சொல்கிற பக்தர்களுக்கு கடவுள் அதை வழங்குகிறார். இறுதி உண்மையை அடைவதற்கான வழியை அவர் காட்டுகிறார்.
நீங்கள் எங்களுடைய ஆச்ரமத்தைப் பார்க்க வந்தால், 'ஒவ்வொருவருக்கும் அங்கு ஏதோ ஒன்று இருக்கிறது' என்பதை நீங்கள் காண்பீர்கள்.
எவரும் வெறும் கையுடன் திரும்பிச் செல்வதில்லை. அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற வழிபாடு, அக்னி சடங்குமுறைகள், பக்திப் பாடல்கள், யோகம், தியானம், சேவை என்று அவரவர்களுக்குத் தேவையானவை எல்லாமே எங்களிடம் இருக்கிறது. எல்லா வகை வாழ்க்கைத் தரப்பினருக்கும் பலவகைப்பட்ட சமுதாயப் பிரிவிலிருந்து வரும் மக்களுக்கும் வெவ்வேறு பொருளாதார நிலையிலிருந்து வரும் மக்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.
வழிபாட்டில் நம்பிக்கை உள்ள பக்தருக்கு, அவர் வழிபடவும் இங்குக் கோயில்கள் இருக்கின்றன.
யோகத்தின் மூலம் ஞானம் அடைய விரும்பும் பக்தருக்கு, பல்வேறு வகையான யோக நிகழ்ச்சிகள் இருக்கின்றன. மெய்வழிப் பாதையில் செல்பவர்களுக்கும் வேண்டிய அளவிற்கு மேல் அதிக தியான நிகழ்ச்சிகளும் தியான நுட்பங்களும் இருக்கின்றன. இந்த விதத்தில்தான் நாம் சமுதாயத்தின்
> பந்தத்திலிருந்து விடுபட்டு,
> நமது செயல்களை
> எதிர்பார்ப்பின்றி செய்தால்,
> நாம்
> செயல்படும் பாதையில்
> மட்டுமே,
> மகிழ்ச்சி அடைகிறோம்.
விழிப்புணர்வு நிலையை உயர்த்த முடியும்.
எந்த ஒரு பெரிய இயக்கத்தின் மூலமாகவும் சமுதாய உணர்வுருமாற்றம் நிகழ்ந்து விட முடியாது என்று நான் எப்போதுமே சொல்வதுண்டு. தனி மனித உணர்வுருமாற்றத்தின் மூலம்தான் சமுதாய உணர்வுருமாற்றம் நிகழமுடியும்.
av்வாறு உணர்வுருமாற்றம் அடைந்த தனி மனிதர்களைக் கொண்டுதான், பெரிய இயக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட மக்கள் ஒன்றாகச் சேர்ந்து இயங்கும்போது, லேசர் ஒளிக்கற்றைகளால் ஆன ஒளித்தூணிற்கு எவ்வளவு ஆற்றல் இருக்குமோ, அதே ஆற்றல் அந்த இயக்கத்திற்கும் இருக்கும்.
> குருமார்கள்
> கண்ணாடியைப்
> போன்றவர்கள்.
> அவர்கள்
> நமது உண்மையான
> பிரதிபலிப்பு.
ஒவ்வொரு பக்தரும் ஒவ்வொரு சீடனும் தனித் தன்மை வாய்ந்தவர் என்று நான் எப்போதுமே சொல்வதுண்டு. ஒவ்வொருவரையும் நாம் கையாளும் முறையும் தனித் தன்மையானதாகவே இருக்கும்.
நான் ஒருவருக்குச் சொல்வது மற்றவருக்குப் பொருந்தாது. நான் உங்களுக்கு வழங்கிய அறிவுரையின் அடிப்படையில் நீங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்காதீர்கள் என்று சீடர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை செய்கிறேன். இது மேலும் குழப்பத்தையே விளைவிக்கும்.
ஒருமுறை விவேகானந்தர், இராமகிருஷ்ணரின் இன்னொரு சீடரிடம் 'பக்திப்பூர்வமான நம்பிக்கைகள் பகுத்தறிவற்றது' என்று சொல்லி, அதனைக் காரண காரியங்களுடன் விளக்கி, அவருடைய பக்திப் பொருளற்றது என்று அவரை நம்ப வைத்தார்.
விவேகானந்தருடைய தனி மனிதப் பண்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அவர் அந்தச் சீடரை, இராமகிருஷ்ணர் அவருக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பக்தி மார்க்கத்திற்குப் பதிலாகத் தாம் ஏற்று பின்பற்றும் அத்வைத வழியை (ஒருமைத் தன்மை ) ஏற்குமாறு செய்தார்.
இதப்பற்றி இராமகிருஷ்ணரிடம் யாரும் எதுவும் சொல்லாமலேயே, அவருக்கு நடந்தது அத்தனையும் தெரிந்துவிட்டது. இராமகிருஷ்ணர் உடனே விவேகானந்தரை அழைத்தார்.
அவர் மிக வருத்தத்துடன் விவேகானந்தரைப் பார்த்துச் சொன்னார், “எனது இந்தச் சீடனுக்கு நீ என்ன செய்தாய்? அவனது இயல்பு, இருப்புத் தன்மையின் நிலை இவற்றின் அடிப்படையில் நான் அவனுக்கு உபதேசித்துக் கொண்டு இருக்கிறேன்.
இப்போது உன்னுடைய வார்த்தைகளால் அவரது ஆன்மீக முன்னேற்றத் தில் பின்னடைவு செய்துவிட்டாய். அவரை மீண்டும் அந்தப் பாதைக்குக் கொண்டு வர எனக்குப் பல வருடங்கள் ஆகும்,” என்று சொன்னார்.
இங்கே கிருஷ்ணர், “என்னுடைய ஒவ்வொரு பக்தருடைய தேவையையும் நானே கவனித்துக் கொள்கிறேன்,” என்று சொல்வதன் மூலம், இதற்குமுன்தான் சொன்னவற்றை மீண்டும் உறுதி செய்து வாக்குறுதி அளிக்கிறார்.
மிக மிக கருணை உள்ள ஒருவரால்தான், மிக மிக கருணையுடன் எல்லோரிடத்தும் கவனம் செலுத்தும் ஒருவரால்தான், இந்த வாக்குறுதியை அளிக்க முடியும். இப்போதும் ஒவ்வொரு சீடரும் தனது ஞானம் புத்திசாலித்தனம் இவற்றைக் கொண்டு, அவர் குருவிடம் எந்த நோக்கத்திற்காகச் செல்ல வேண்டுமென்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
ஒவ்வொரு சீடரும்
ஒவ்வொரு பக்தரும்
தனித் தன்மை
வாய்ந்தவர்களே!
பற்றில்லாமல் இருப்பது நமக்குக் கடினமானதொரு செயலாகவே இருக்கிறது. அது ஏன்? என்பதை கிருஷ்ணர் இங்கு விளக்குகிறார். நாம் எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெற நினைப்பது நம் இயல்பு. தோல்வி அடைய வேண்டுமென்று எந்த ஒரு செயலையும் தொடங்குவது என்பது இயலாத ஒன்று.
ஒரு செயலின் முடிவில் வெற்றியை எதிர்பார்ப்பது தவறு இல்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால், ஒரு தர்க்கமற்ற பந்தம் அந்த வெற்றியின் எதிர்பார்ப்போடு இணைந்து இருப்பதால்தான் துன்பம் உருவாகிறது.
நாம் நமது விருப்பத்தில் கருத்தூன்றி இருப்பதால், எதிர்பார்ப்புகள் நம்மை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.
ஐந்தாயிரம் ஆண்டுகள் கழித்தும் நமது மன
நிலை, மனித இயல்பு இவை மாறவில்லை
என்பது கிருஷ்ணர் சொல்வதிலிருந்து
தெரிகிறது.
அப்போதும் கூட அவர்கள் உலகம் சார்ந்த
வெற்றிகளை எதிர்பார்த்தார்கள்; உடனடி
பலன்களை எதிர்பார்த்தார்கள்.
அவர்கள் கடவுளை வழிபட்டபோது, பொருள்
சார்ந்த வெற்றிகளைப் பெற வேண்டுமென்ற
எதிர்பார்ப்புகளை நிறைவேறுவதற்காகவே
வழிபட்டார்கள்.
> தனி மனித
> உணர்வுருமாற்றத்தின்
> மூலம்மட்டுமே,
> சமுதாய
> உணர்வுருமாற்றம்
> நிகழமுடியும்.
இதுவரை வாழ்ந்த உளவியல் நிபுணர்களிலேயே, கிருஷ்ணர்தான் மிகச் சிறந்த உளவியல் நிபுணர் என்று சொல்ல வேண்டும். அவர் மனிதனின் இயல்பை மிகத் துல்லியமாக அளந்து வைத்திருக்கிறார். நமக்கு வேண்டியதெல்லாம் பலன்கள், பொருள் சார்ந்த, உண்மையான உடனடிப் பலன்கள்.
ஆன்மீகத்தில் பாவம் புண்ணியம் என்பதே இல்லை
கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில், ஸம்ஸ்காரங்கள் மிகக் குறைவாக இருந்தபோது, மூளையைச் சார்ந்த களங்கம் மிகக் குறைவாக இருந்தபோது, இந்த 'உடனடி' என்ற வார்த்தையே மிக அரிதாகத்தான் பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
ஏனென்றால் 'காலம்' என்பது பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்து, இப்போது 'காலம்' என்பது பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்தைக் காட்டிலும் வேறுபட்டதாகவே இருந்தது. பலனை அடையவேண்டுமென்பதில் அவர்கள் அவசரப்படவோ, மூர்க்கத்தனமான வேகம் காட்டவோ இல்லை. அதில் மிகக் குறைந்த வேகமும் மிகக் குறைந்த மூர்க்கத்தனமுமே இருந்தது.
இருந்தாலும் குரு, க்ஷிப்ரம் 'உடனே' என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்துகிறார். அந்த குரு மனித இயல்பைப் பற்றிப் பேசுகிறார். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று முக்காலத்திற்கும் பொருந்துகிற வகையில், எல்லா வகையான மனிதர்களின் இயல்பைப் பற்றியும் பேசுகிறார்.
பொதுவாகவே, நீங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்காகவோ, ஆன்மீக பயனுக்காகவோ கடவுளை வணங்குவதில்லை. ஆனால் இன்னும் நிறைவேறாத பொருள் சார்ந்த விருப்பங்களை அடைவதற்காகவே கடவுளை வணங்குகிறீர்கள் என்று அவர் சொல்கிறார்.
அதிகமான பணம், ஒரு அழகான வாழ்க்கைத் துணை, அன்பான குழந்தைகள், நல்ல வேலை, சந்தோஷம் கொடுக்கக் கூடிய விஷயங்கள் இவை அனைத்தும் கிடைப்பதற்காக நீங்கள் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள விக்ரஹத்தை வழிபடுகிறீர்கள்.
உங்களுடைய அனைத்து செயல்களும் பொருள் சார்ந்த வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்த மாதிரியான செயல்கள் உடனடியாகப் பலன்களைக் கொடுக்கக்கூடியனவாகவே இருக்கும்.
teதயவுசெய்து இதை ஆழமாக உள்வாங்கிக்கொள்ளுங்கள், 'வெளி உலகைச் சார்ந்த செயல்கள் உடனடிப் பலன்களைக் கொடுக்கக் கூடியனவாகத்தான் இருக்கும்.' நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களோ இல்லையோ, இம்மாதிரியான வழிபாடுகளும் செயல்களும் உடனடியான பலனைத்தான் உருவாக்கும்.
நீங்கள் கடவுளிடம் எதை வேண்டினாலும் அது அவரால் உடனடியாக வழங்கப்படுகிறது என்று இதற்குப் பொருள்படுத்திக்கொள்ளக்கூடாது. 'எந்தக் கடவுளிடம் எது வேண்டினாலும் உடனே கிடைத்துவிடும்' என்ற பொருளில் இது சொல்லப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக கடவுளுக்கு நம்மைவிட அதிக ஞானம் உள்ளது.
கடவுள் அவருடைய புத்தியைப் பயன்படுத்தி நமக்கு எது சரியான தேவை என்பதை அறிந்து வழங்குகிறார்.
பிரார்த்தனையின் பலன் உடனடியானதா, இல்லையோ, ஆனால் உங்களுடைய செயலின் பலன் உடனடியானதுதான். கர்மபலன் உடனடியாக இருக்கிறது. சமயங்கள் கர்மா (செயல்) கர்மபலன் (பலன்)
> இதுவரை வாழ்ந்த உளவியல் நிபுணர்களிலேயே, கிருஷ்ணர்தான் மிகச் சிறந்த உளவியல் நிபுணர்.
இவற்றைப் பற்றிப் பேசும்போது, பாவம்
புண்ணியம் இவற்றின் அடிப்படையில்தான்
பேசுகிறது. "நீங்கள் பாவங்களைச் செய்தால்
நரகத்திற்கும் புண்ணியங்களைச் செய்தால்
சொர்க்கத்திற்கும் போவீர்கள்," என்று
அவர்கள் சொல்கிறார்கள்.
உங்களைக் கட்டுப்படுத்தவே அவர்கள் இந்தக் கருத்தைப் பயன்படுத்துகிறார்கள். அச்சத்தின் மூலமும் ஆசையின் மூலமும் அவர்கள் உங்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்.
உங்களுடைய
பிரார்த்தனை
உங்களுடைய
நன்றி உணர்வை
வெளிப்படுத்துவதற்காக
மட்டுமே இருக்கட்டும்!
நரகத்தின் மூலம் அச்சத்தையும் சொர்க்கத்தின் மூலம் ஆசையையும் காட்டி உங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.
ஆன்மீக அடிப்படையில் பார்த்தால் பாபம் புண்ணியம் என்று எதுவும் கிடையாது. சித்திர குப்தனோ அல்லது புனித பீட்டரோ இவற்றைக் கணக்கெடுத்து சேகரித்து வைத்துக் கொண்டு, முத்தினால் ஆன வாயிலில் நமக்காக நின்று கொண்டு, நம் முன் அதை அறிக்கையாகச் சமர்ப்பிக்கப் போவதில்லை.
நரகம் சொர்க்கம் என்று ஒன்றும் இல்லை. நரகம் சொர்க்கம் இவை இரண்டும் நமது மனத்தின் நிலைகளே தவிர, அவை எங்கோ ஏதோ தொலைதூர எதிர்காலத்தில், கடவுளின் உலகத்தில் உள்ள இடங்கள் இல்லை.
நீங்கள் நல்ல எண்ணங்களை நினைக்கும்போதும் நீங்கள் நல்ல செயல்களைச் செய்யும்போதும் நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போதும் நீங்கள் சொர்க்கத்தில் சந்தோஷமாக இருக்கிறீர்கள்.
நீங்கள் தீயதை நினைக்கும்போதும் தீய செயல்களைச் செய்யும்போதும்

நீங்கள் துக்கமாக இருக்கும்போதும் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். அவ்வளவுதான். அவ்வளவுதான் கர்மத்திற்குப் பலன் உள்ளது. இதுதான் பேரண்டத்தின் காரண - காரிய தத்துவம்.
உங்களின் நோக்கம் என்னவோ, அதுதான் நீங்கள். உங்கள் நோக்கம் என்னவோ அதுவாகவே நீங்கள் ஆகிவிடுகிறீர்கள்.
கர்மம் உடனடியாகச் செயல்படுகிறது. அது இங்கேயே இப்போதே இருக்கிறது. இது மிக மெதுவாகச் செயல்படும் கடவுளின் சக்கரம் இல்லை.
நீங்கள் எதை நினைக்கவும் செய்யவும் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதைப் பொறுத்து பாவியின் வேதனையான மன அமைப்பில் வாழ்கிறீர்கள் அல்லது ஞானியின் ஆனந்தமான மன அமைப்பில் வாழ்கிறீர்கள். அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் செயல்களுக்கான பழியை, உங்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தத்துவமாகிய கர் மாவின் மேல் சுமத்தாதீர்கள்.
கர்மம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
நீங்கள் ஒரு சுதந்திரமான ஆன்மா.
உங்களுக்கென்று சுரந்திரமான விருப்பம்
இருக்கிறது, சுதந்திரமான எண்ணம் செயல்
இருக்கிறது.
தேசிய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டும்
இதற்கு உத்திரவாதம் கொடுக்கவில்லை,
கடவுளின் சொந்த அரசியல் அமைப்புச்
சட்டமும் இதற்கு உறுதி கொடுக்கிறது.
நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதை த்தான் அறுவடை செய்வீர்கள்.
> நீங்கள்
> நல்ல எண்ணங்களை
> நினைக்கும்போதும்
> நல்ல செயல்களைச்
> செய்யும்போதும்
> சந்தோஷமாக
> இருக்கும்போதும்
> சொர்க்கத்தில்
> இருக்கிறீர்கள்.
கேள்வி: ஸ்வாமிஜி, நாம்தான் நமது மறுபிறப்பைப் பற்றி, நாம் யாருக்கு பிறக்கவேண்டும்? எப்போது பிறக்க வேண்டுமென்று நாம்தான் முடிவு செய்கிறோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஏன் பலபேர், நம்பிக்கையற்ற ஏழைகளாக, துக்கமுறும் மக்களாக இருக்கிறார்கள்? ஏன் அவர்கள் அப்படி பிறக்க விரும்ப வேண்டும்? அது அவர்களின் கர்மவினை என்று மக்கள் சொல்கிறார்கள் அதுதான் என்னால் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக உள்ளது.
ஆமாம். நாம்தான் நமது மறுபிறப்பை முடிவு செய்கிறோம். உங்களுடைய பூர்வ ஜென்ம மனஅமைப்பின் படி உங்களின் மறுபிறப்பு முடிவாகிறது. நீங்கள் பூர்வ ஜென்மத்தில் சேமித்து வைத்த, ஸம்ஸ்காரங்களின் பலனே அது!
உங்கள் உயிர், உடல் - மன அமைப்பை விட்டு செல்லும்போது, இந்த ஸம்ஸ்காரங்கள் அதில் நுட்பமான அடிச்சுவடை ஏற்படுத்துகிறது. இது வாஸனா என்று அழைக்கப்படுகிறது.
வாஸனா என்பது விதை என்றால், ஸம்ஸ்காரங்கள் சிறிது வளர்ந்த செடி, கர்மா முழுமையாக வளர்ந்த மரம். இவை எல்லாம் உங்கள் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டவை.
நீங்கள் விருப்பங்களை விட்டு வெளிவராவிட்டால் வாஸனா, ஸம்ஸ்காரங்கள், கர்மா இவை எல்லாம் உங்களைப் பிணைக்கும். கர்மா, நீங்கள் நினைப்பது போல் காரண- காரியம் இல்லை.
உங்கள் சமயமோ அல்லது சமுதாயமோ தீயவை என்று அடையாளப்

படுத்தியவற்றை நீங்கள் செய்தீர்களானால், நீங்கள் ஒரு பன்றியாக பிறப்பீர்கள் அல்லது நீங்கள் நல்லவற்றையே செய்தீர்களானால், நீங்கள் சொர்க்கத்திற்குப் போவீர்கள் என்பது போல் எதுவும் கிடையாது.
சொர்க்கம் என்றோ, நரகம் என்றோ ஒன்றும் கிடையாது. இவை எல்லாம் நீங்கள் உங்கள் மனத்தில் உருவாக்கிய ஒன்றுதான். உங்களுக்குத் தீய மன அமைப்பு இருந்தால், நீங்கள் வாழ்நாள் முழுவதும் நரகத்தில் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் சந்தோஷமாகவும் கவலையற்றும் இருந்தால், நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்.
கிருஷ்ணர் வேறு ஒரு இடத்தில் சொல்கிறார், உங்களுடைய கடைசி எண்ணம் எதுவோ அதன் அடிப்படையில்தான் நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாஸனா அல்லது மனஅமைப்பின் அடிப்படையில்தான் மீண்டும் பிறக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துகிறார்.
நீங்கள், "சரி, அது மிக நல்லது. நான் இறக்கும்போது நல்ல எண்ணங்களை நினைப்பேன். நான் வசதிகளோடு மீண்டும் பிறப்பேன்," என்று நினைக்கலாம்.
நீங்கள் அனைவருடனும் வாழ்நாள் முழுவதும் சண்டையிட்டு, இழிவான வாழ்க்கையை வாழ்ந்து இருந்தீர்கள் என்றால், உங்களுடைய இறுதி எண்ணம் அதற்கு மாறுபட்டு இருக்க முடியாது. எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் மரணத்தைக் கடைசி நிமிடத்தில் திட்டம்போடமுடியாது, நீங்கள் இறக்கப் போகிறீர்கள் என்பதற்காக வேறுவிதமாக உங்களால் எண்ண முடியாது.
நீங்கள் கருமியாக இருந்தால், உங்களுடைய கடைசி எண்ணம் பணத்தைப் பற்றித்தான் இருக்கும். அது நேர்மறையான எண்ணமாக இருக்காது. பணத்தைப் பதுக்கி வைப்பதான எண்ணமாகத்தான் இருக்கும்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ப்ளேபாயாக இருந்தால்... உங்களுடைய கடைசி எண்ணம் புலனின்பத்தைப் பற்றித்தான் இருக்கும். எந்த வகையிலும் நீங்கள் அதைத் தவிர்க்க முடியாது.

இப்போது உங்களுடைய கேள்வி, "ஏன் ஒருவன் பிச்சைக்காரனாகப் பிறக்க விரும்ப வேண்டும்?" என்பதுதான். நான் இதற்குமுன் சொன்ன 'ஆடிஸ்டிக்' பையனைப் பற்றி ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏன் அவன் 'ஆடிஸ்டிக்'காகப் பிறக்க வேண்டும்?
அவனுடைய பூர்வ ஜென்மத்தில் அவனுக்கு மிக அதிகப் பொறுப்புகள் இருந்ததால், அவனுடைய மறுபிறப்பில், வாழ்வில் எந்தவித பொறுப்பும் எடுக்க அவனுடைய ஆன்மா விரும்பவில்லை.
மறுபிறவியிலாவது, பொறுப்பு ஏதும் இல்லாமல் இருக்க விரும்பினான். பெற்றோர்களால் கவனிக்கப்பட்டான்.
ஒரு செல்வந்தர், தனது பூர்வ ஜென்மத்தில் ஏகப்பட்ட சுமைகளும் துன்பங்களும் அனுபவித்து இருந்தாரானால், அவருடைய ஆன்மா அடுத்த உடலில் அதையே மீண்டும் செய்ய விரும்புவதில்லை. ஒருவேளை, செல்வத்தைச் சேமித்து வைத்தற்காக அவர் அப்போது வருந்தி இருக்கலாம். அவருக்குப் பணம் இருந்திருக்கலாம்; ஆனால் அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை ஒதுக்கி வைத்திருக்கலாம். அதனால் அவர் மிகவும் வேதனை அடைந்திருக்கலாம். அவர் மீண்டும் செல்வந்தராக இருக்க விரும்பவில்லை. அதனால் மிகத் தெளிவாக முடிவு செய்தே ஏழையாகப் பிறக்கிறார்.
ஏழையாகப் பிறந்தால் அவர்கள் சந்தோஷம் இல்லாமல் இருப்பார்கள் என்று நீங்கள் ஏன் கற்பனை செய்கிறீர்கள்?
அது நிச்சயமாக உண்மை இல்லை. பணக்காரர்களாக இருந்தும் மனத்தளவில் ஏழைகளாக இருக்கும் ஏராளமான பணக்கார ஏழைகளை நாம் பார்த்திருக்கிறேன்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த வேளை சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று கூட தெரியாது. இருந்தும் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சந்தோஷம் என்பது நமது மன அமைப்பைப் பொறுத்த விஷயம்தான்.
பொருள் சார்ந்த செல்வம் நமக்குச் சந்தோஷத்தை உத்திரவாதம் செய்யாது. உங்களுடைய சந்தோஷத்தின் நிலை, நீங்கள் செல்வத்தையும் ஏழ்மையையும் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.
“சரி, ஒருவர் ஏழையாகப் பிறப்பதற்கான காரணம் வேண்டுமென்றால், நீங்கள் சொல்கிற கொள்கைப்படி இருக்கலாம். ஆனால் பயங்கரமான ஆரோக்கியமற்ற, வலிமிகுந்த நோய்களுடன் ஏன் ஒருவர் பிறக்க விரும்ப வேண்டும்? நிச்சயமாக இது விருப்பத்தினால் ஏற்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது,'' என்று நீங்கள் சொல்லலாம்.
என்னைச் சுற்றி வாழ்பவர்களிடம்தான் நீங்கள் இதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். அநேகம் பேர், வாழ்வை அச்சுறுத்தும், நீண்ட நாட்கட்ட நோய்களுடன் என்னிடம் வந்திருக்கிறார்கள்.
குணமாகாத நோய்களை, ஒரு குரு மட்டுமே குணப்படுத்த முடியும்.
சிலர், என்னைச் சந்திப்பதற்குச் சில தினங்களுக்கு முன், அவர்கள் இறக்கப் போகிறார்கள் என்று மருத்துவர்களால் சொல்லப்பட்டவர்கள். ஆனால் இதிலிருந்து மீண்டு,ன்றும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.
அவர்களைப் பார்த்தே, அவர்கள் உண்மையான தேடுதல் உடையவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். அவர்கள் அனைவரும் ‘தன்னை உணர்தல்’ என்ற ஒரு தேடுதலுடன் இருக்கிறார்கள் அவர்களுடைய பூர்வ ஜென்மத்தில், அவர்கள் அந்த அனுபவத்தைத் தவறவிட்டு இருப்பார்கள்.
ஏதோ ஒரு காரணத்திற்காக, ஒரு குருவைச் சுற்றி வாழ முடியாதவர்களாக இருந்திருப்பார்கள். அப்படி வாழ்ந்திருந்தால், அது அவர்களுடைய ஆன்மீகப் பாதையில் உதவியாக இருந்திருக்கும். ஆனால் அப்போது அது முடியாமல் போயிருந்திருக்கலாம்.
அந்த மாதிரியான அநேக தோல்விகளுக்குப் பிறகு, 'ஒரு குருவிடம் அழைத்துச் செல்லக் கூடிய, பெரும் தேவைக்குட்பட்ட சூழலில் பிறக்க வேண்டும்' என்று இவர்களுடைய ஆன்மா முடிவு செய்திருக்கும்.
அதனால்தான் குணமாகாத நோய்களுடன் பிறந்து, அது குணமடைய வேண்டுமென்பதற்காக ஒரு ஞானியை நாடிச் செல்கிறார்கள். அவரைப் பார்த்தவுடன் அவர்தான் தங்களுடைய குரு என்பதனை உணர்ந்துகொள்கின்றனர். அவருடைய நோய்களும் குணப்படுத்தப்படுகின்றன.குணமாகாத நோய்களை ஒரு குரு மட்டுமே குணப்படுத்த முடியும். வேறு எது குணப்படுத்த முடியும்? நோய்கள்கூட நம்முடைய தேர்வுதான் என்று அதனால்தான் சொல்கிறேன்.
அதனால், உங்களின் மறுபிறப்பை, என்ன, எப்படி, எங்கு, யாருக்கு என்பதன் அடிப்படையில் நீங்கள்தான் தீர்மானம் செய்கிறீர்கள்.
நம்முடைய இரண்டாவது நிலை த்யான வகுப்பான நித்யானந்த ஸ்புரண த்யான முகாமில் പങ്കுகொள்ளும் த்யான அன்பர்களை, மரணம் அடையும்போது உயிர் கடந்து செல்லும் ஆற்றல் அடுக்குகளின் வழியாக அழைத்து செல்கிறேன். இந்த நிகழ்ச்சி, ஒருவகையில் ஒருவருடைய மரணத்தை மீண்டும் உருவாக்குவது போன்றது. அதன்பிறகு பங்கேற்பாளர்கள் மீண்டும் பிறந்ததைப் போல உணர்கிறார்கள்.
இந்த த்யான வகுப்பின் ஒரு பகுதியாக, அவர்களுடைய மனத்தில் அந்தக் கணத்தில் தோன்றும் ஆசைகளை எழுதச் சொல்வேன். அந்த ஆசைகளைப் பற்றி ஆராயச் சொல்வேன். அதன்பிறகு ஆசை சம்பந்தப்பட்ட சக்தி அடுக்குிற்குள் எடுத்துச் செல்லும் ஒருவகை தியானநுட்பத்தைச் செய்யும்போது, அவர்களுடைய விருப்பம் என்று இதுவரை அவர்கள் நினைத்திருந்த அநேக விருப்பங்கள் உண்மையானவை இல்லை என்று அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் இவ்வுலகில் பிறக்கக் காரணமாக இருந்த தங்களுடைய வாஸனா மற்றும் ப்ராரப்த கர்மம் என்ற உண்மையான விருப்பங்களை உணர்கிறார்கள்.
புரிந்துகொள்ளுங்கள், செயலாால் பாதிக்கப்படாமல் இருங்கள்

மூன்று இயல்புகள் அல்லது குணங்கள், செயல்கள் அவற்றின் பங்கீட்டைப் பொறுத்து, நான் நான்கு ஜாதிகளை உருவாக்கி உள்ளேன். இருப்பினும் நான் செயலைச் செய்யாதவன், மாறாதவன்.
எந்தச் செயலாலும் நான் பாதிக்கப்படுவதில்லை. அந்தச் செயல்களின் பலன்களில் எனக்கு ஆசையும் இல்லை.
என்னைப் பற்றிய இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள், செயலின் பிணைப்பில் பந்தப்படுவதில்லை.
முந்தைய காலத்தில் வாழ்ந்த ஞானமடைந்த, விடுதலை அடைந்த ஆன்மாக்கள் இந்தப் புரிதலுடன் செயல்பட்டு விடுதலை அடைந்தார்கள்.
இந்தப் புரிதலுடன், முன்னோர்கள் செய்ததுபோல், உன் கடமையைச் செய்வாயாக!

4.16 எது கர்மா, எது அகர்மா என்பதில் அறிவுடையவர்கள் கூட குழப்பமடைகிறார்கள்.
எதைத் தெரிந்து கொண்டால் நீ அனைத்து தீமைகளிலிருந்தும் விடுதலையடைவாயோ, அந்தக் கர்மத்தின் தத்துவம் குறித்து நான் உனக்கு விளக்குகிறேன்.

## தெய்வீகமே உங்கள் குணம்
இப்போது, நாம் ஜாதி அமைப்பு என்று அழைக்கப்படும் மிகவும் முரண்பாடான தலைப்புக்கு வந்துள்ளோம். இப்போது கிருஷ்ணர் சொல்கிறார், "மூன்று குணங்களின் பங்கீட்டைப் பொறுத்து, நான் நான்கு ஜாதிகளை உருவாக்கியுள்ளேன்."
அடிப்படையாக குணங்கள் மூன்று இருக்கின்றன. அவை: ஸத்வம் - தூய்மை, ரஜஸ் - செயல், தமஸ் - செயல் இன்மை. எல்லா மக்களுக்கும் இந்த மூன்று குணங்களும் சேர்ந்தே இருக்கும் அல்லது ஏதாவது ஒரு குணம் அதிகமாகவும் மற்ற இரு குணங்கள் குறைவாகவும் இருக்கும்.
குணம் என்கிற வார்த்தையைப் பற்றி நாம் சிறிது தெரிந்துகொள்ள வேண்டும். குணம் என்ற வார்த்தையை நாம் பிறக்கும் போதே நம்மோடு ஒட்டிக் கொண்டு வரும் 'தன்மை' அல்லது 'இயல்பு' என்று பொருள்பட மொழிபெயர்க்கலாம்.
இதுவே நமது மனத்தின் நிலை; மற்றும் ப்ராரப்த கர்மம், வாஸனை இவற்றின் பிரதிபலிப்பும் கூட! இந்த மன அமைப்பின் அடிப்படையில்தான், நாம் இந்த உலகில் பிறக்கிறோம்.
பெரும்பாலான மக்கள், இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாத இந்த ஒரு ஸ்லோகத்தை நீண்ட காலமாக மேற்கோள் காட்டி வருகிறார்கள்.
ஜாதி அமைப்பை மேலும் வலுப்படுத்த, எப்பொழுதெல்லாம் சமயத்தின் ஆதரவு வேண்டுமோ அப்போதெல்லாம் இந்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்.
அவர்கள், "கிருஷ்ணரே இதற்கு அனுமதி வழங்கி இருக்கிறார். இந்த அமைப்பு அவதார புருஷரான கிருஷ்ணராலேயே கொடுக்கப்பட்டுள்ளது," என்று சொல்கிறார்கள்.
கிருஷ்ணர் உண்மையிலேயே என்ன
பொருளில் இந்த வார்த்தைகளைப்
பயன்படுத்துகிறார் என்று நாம் ஆராய்ந்து
பார்க்க முயற்சி செய்ய வேண்டும்.
கிருஷ்ணரின் வார்த்தைகளை நாம்
சிறிது ஆழ்ந்து பார்த்தால், அவர், "மூன்று
குணங்களின் பங்கைச் சார்ந்தது," என்றுதான்
சொல்கிறார். அவர், "பிறப்பைச் சார்ந்தது,"
என்று சொல்லவில்லை.
வர்ணம் என்கிற ஜாதி
மூன்று குணங்களின்
பங்கைச் சார்ந்ததுதானே
தவிர,
பிறப்பைச் சார்ந்தது
அல்ல!
இதோ உண்மை என்று சொல்வதைவிட ஸத்யம் என்றே நான் சொல்வேன். உண்மைக்கும் ஸத்யத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இந்தப் பூமியில் எந்த இரண்டு மனிதரும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.
அதே போல்தான் ஒவ்வொரு மனிதரும் தனித் தன்மை வாய்ந்தவராகவும் வெவ்வேறு விகிதாசாரத்தில் கலந்திருக்கும் முக்குணங்களை உடையவராகவும் இருக்கிறார்.

கிருஷ்ணர் எதையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்பதை நாம் நினைவிகொள்ள வேண்டும். இந்த ஜாதி உயர்ந்தது, அந்த ஜாதி தாழ்ந்தது என்று அவர் சொல்லவில்லை.
"அடிப்படையாக நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள். எந்தக் குணத்தின் ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் இருக்கிறதோ, அந்த ஆதிக்க குணத்தின் அடிப்படையில்தான் ஒருவருடைய பண்பு அமையும்," என்று மாத்திரமே கிருஷ்ணர் சொல்கிறார்.
அதே போல், குணம் பிறப்பால் வருவது கிடையாது. வர்ணம் கூட பிறப்பினால் ஏற்படுவதில்லை. ஒருவரின் குணம் அதாவது மனத்தின் இயல்பானது, அவருக்குள் இயற்கையாய் அமைந்திருக்கிற அவரது உள்ளார்ந்த பண்புகளைப் பொறுத்தே இருக்கிறது. பூர்வ ஜென்ம வாஸனாக்களின் அடிப்படையில்தான் ஒருவரின் குணம் அமைகிறது. "ஒருவர் எந்தக் குணத்துடன் பிறந்திருக்கிறாரோ அதன் அடிப்படையில் அவருடைய வர்ணத்தை - ஜாதியை நான் முடிவு செய்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
பாரம்பரியமிக்க வேத முறையிலான இந்து மத கல்வி அமைப்பில் குருவின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர், குழந்தைகளைச் சிறு வயதிலேயே தம்முடைய பொறுப்பில் ஏற்றுக்கொண்டு, அவர்களைச் சிறப்பான முறையில் பயிற்றுவிப்பார்.
குருகுலம்என்று அழைக்கப்படும் அந்த அமைப்பில், அவர் குழந்தைகளுக்கு அறிவைப் புகட்டுவது மட்டும் அல்லாமல், அந்தக் குழந்தைகளின் தொழில், எதிர்காலம் இவற்றை முடிவு செய்பவராகவும் இருப்பார்.
குரு, தம் பாதுகாப்பில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் திறமையையும் அந்தக் குழந்தையின் மனப் போக்கு, இயல்பு, குணம் இவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்தார். பிறகு அந்தக் குழந்தை மேற்கொள்ள வேண்டிய தொழிலை முடிவுசெய்தார்.
இது, குழந்தையின் மனப்போக்கு, திறமை, விருப்பு, வெறுப்பு இவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவதாகவும் ஜோதிடக் கலையின் உதவியால் தீர்மானிக்கப்படுகிற ஒரு விஞ்ஞானப்பூர்வமான செயல்முறையாகவுமே இருந்தது.
வர்ண அமைப்பில் நான்கு பிரிவுகள் இருந்தன.
அறிஞர்கள், சமய குருமார்கள், பட்டறிவு உடையவர்கள் அனைவரும் ப்ராஹ்மணர்கள்.
வீரம், பேராசை மற்றும் உடல் பலத்தைக் கொண்ட படைவீரர்கள், பிரபுக்கள், அரசர்கள், தாக்கும் மற்றும் சண்டைபோடும் மனப்பான்மை உடையவர்கள் க்ஷத்ரியர்கள்.
வணிகம் செய்யும் சமுதாயத்தினர், வியாபாரிகள், வலுவான தொழில் திறமை உடையவர்கள் யாவரும் வைச்யர்கள்.
உடல் ரீதியாகச் செயல் திறன், செயல் ஆற்றல் உடையவர்கள் யாவரும் தொழிலாளிகள் அதாவது சூத்ரர்கள்.
இந்தத் திறன் அமைப்பின் அடிப்படையில்தான் குழந்தைகள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். பிறப்பின்

அடிப்படையில் இல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் தான் அவர்களுடைய தொழிலுக்காகப் பயிற்சி கொடுக்கப்பட்டார்கள். இது, குழந்தைகளின் திறமையை மதிப்பீடு செய்து, பிறகு அதற்கேற்ப அவர்களுக்கு வழிகாட்டுவதற்குச் சமம். வழிகாட்டுதல் என்ற பெயரில் இன்று நடைபெறுவதை விட, இது மிகவும் சிறப்பானது மட்டுமல்ல விஞ்ஞானப்பூர்வமானதும்கூட.
இன்று
நடைமுறையில் உள்ள
இந்த ஜாதி அமைப்பை
கிருஷ்ணர் என்றுமே
ஏற்றுக்கொண்டதும்
இல்லை;
ஆதரித்ததும் இல்லை.
வழக்கமாக நடைபெறுவது போல், காலப்போக்கில், இந்த அமைப்பு தவறாகக் கையாளப்பட்டது. தாங்கள் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்தவர்கள், அதைத் தங்கள் மரபுவழி உரிமையாகப் பாவித்து, அதைத் தங்கள் பிறப்பு உரிமையாக்கிக் கொள்ளவேண்டுமென்று தீர்மானம் செய்தார்கள். இது ஒரு சமுதாயக் கொடுமை, இது ஒரு அரசியல் கொடுமை, அதிகார துஷ்பிரயோகம்.
முன்பு, இந்த அமைப்புப் படி, ஒரு ப்ராஹ்மணரின் மகன் அவருக்குரிய தகுதியான கல்வியையோ, பேராசையற்ற மனப்பான்மையைப் பெறாதவராகவோ இருந்தால், அவரைச் சமய குருவாகப் பணிபுரிய சமுதாயம் அனுமதிக்கவில்லை. அதே போன்று, ஒரு க்ஷத்ரியனின் மகன் அவருக்குரிய தகுதியான தர்மத்தைக் காக்கவும் நாட்டு மக்களைக் காக்கவும் துணிந்து செயல்படாமல், போர்புரியத் தயங்குபவராகவும் தர்மத்தின் வழி நடக்காதவராகவும் இருந்தால், அவர் போர்வீரராக முடியாது.
ஆனால் காலப்போக்கில், அதிகார துஷ்பிரயோகத்தினால் ஜாதி பிறப்புரிமையாகிவிட்டது. இது போன்ற செயல்கள் நடக்க ஆரம்பித்தன.
இன்று உள்ள இந்த அமைப்பைக் கிருஷ்ணர் என்றுமே ஏற்றுக்கொள்ளவில்லை.
மூன்று குணங்களையும் கடந்த ஒருவரால் மட்டுமே தம்முடைய நிலையை அடைய முடியும் விழிப்புணர்வின் உயர்ந்த நிலைகளை அடையமுடியும் என்றும் கிருஷ்ணர் மிகத் தெளிவாக அறிவிக்கிறார். கிருஷ்ணரை அடைவதற்கு ஒருவர் த்ரிகுணரஹித, மூன்று குணங்களையும் கடந்தவராக இருக்கவேண்டும். பிறகு அவர் செயல்களைச் செய்யாதவராகவும் ஜாதி அற்றவராகவும் குறிப்பிட்ட தன்மையற்றவராகவும் ஆகிறார்.
கர்மங்களிலிருந்தே விடுதலை அடைவீர்கள்
அடுத்த ஸ்லோகத்தில் இந்தப் பொருளை விரிவாகச் சொல்கிறார்.
ஒரு ஆசை முழுமையாக நிறைவேறிவிட்டால், அது நம் மனத்தில் சிற்றலைகளை ஏற்படுத்துவதில்லை. நாம் பிறக்கும்போதே வாஸனா, ப்ராரப்த கர்மா மூலம் நம்முடன் கொண்டு வந்த ஆசைகள்தான், ஒருமுறை அவை நிறைவேற்றப்பட்டவுடன், நம்மனத்தில் எவ்விதப் பதிவுகளையும் சிற்றலைகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் நிறைவேற்றப்பட்ட பின்னரும் நம் மனத்தில் சிற்றலைகளை ஏற்படுத்துகிற மற்ற ஆசைகள் எல்லாமே, நாம் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பெற்றவைகளே! இவை யாவும் நம்முடைய பேராசையே அன்றி, அடிப்படைத் தேவைகள் அல்ல. பிரபஞ்ச இருப்புத் தன்மை , இவ்வகையான ஆசைகளை நிறைவேற்றுவதில்லை.
இரமண மகரிஷி மிக அழகாகச் சொல்கிறார் "இந்தப் பேரண்டத்தால், அதில் வசிப்பவர்களின் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். ஆனால் இந்தப் பேரண்டத்தால் ஒருவருடைய ஆசைகளை, ஒரே ஒருவருடைய ஆசைகளை மட்டுமே கூட முழுமையாகப் பூர்த்தி செய்ய முடிவதில்லை.
ஆசைகளுக்கு எப்போதும் முடிவென்பதே இல்லை. அவை பெருகிக்கொண்டே இருக்கும். ஆசையும் பேராசையும் நாம் இறந்தால்தான் முடியும்.
அப்போதும் கூட, அவை வாஸனா ரூபமாக மாறி, அடுத்த பிறவிக்கு நம்முடன் கொண்டு செல்லப்படும் நம்முடைய மனத்தின் இயல்பாகமாறி, நம்மைப் பின் தொடர்கின்றன.
ஒருவர் தனது அடிப்படைத் தேவையை மட்டும் நிறைவேற்றும்போது, அதனால் அவருக்கு கர்மவினைகள் ஏற்படுவதில்லை. ஏனென்றால் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டுவிடும்; அவை மீண்டும் மனத்தில் எழாது.
ஒரே ஒரு ஜோடி காலணிகளுடன் இருக்கும் ஒரு ஏழை மனிதரைப் பாருங்கள்.
அவர், தாம் வெறும் கால்களுடன் செல்ல வேண்டியது இல்லை என்பதற்காகச் சந்தோஷமாக இருப்பார். அந்தக் காலணி அறுந்து போகும்வரை அவருக்கு வேறொரு காலணி வாங்க வேண்டிய தேவை இல்லை.
ஆனால் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து டஜன் கணக்கில் நிறைய காலணிகளை வாங்கி வைக்கிறோம். அவற்றில் பலவற்றை நாம் மிகவும் அரிதாகவே எப்போதாவதுதான் பயன்படுத்துகிறோம். நமது ஆசையின் காரணமாகவே இவற்றை வாங்குறோம்.
> நம்
> அடிப்படைத் தேவைகளை
> மட்டுமே
> நிறைவேற்றிக்
> கொள்ளும்போது,
> நமக்குக் கர்மவினை
> ஏற்படுவதில்லை.
அவ்வகை ஆசைகள் என்றுமே நிறைவேற்றப்பட முடியாதனவாகவே இருக்கின்றன. அவற்றை வைத்திருப்பதனால் நாம் எந்தவித மகிழ்ச்சியும் அடையப் போவதில்லை. வாங்கிய பிறகு, நம் மனத்தில் அவற்றிற்கு நாம் கொடுத்துக் கொண்டிளுக்கும் முக்கியத்துவமும் மதிப்பும் குறைந்துவிடுகிறது, பிறகு வேறு ஒன்றைப் பெற விரும்புகிறோம். இந்தச் சுழற்சி சென்றுகொண்டே இருக்கும்.
கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழைத் தொழிலாளி தம் வீட்டில் சமைத்த எளிய உணவை மகிழ்ந்து உண்ணுவது போல், ஒரு செல்வந்தர் ஐந்து நட்சத்திரவிடுதியில் உட்கார்ந்து கொண்டு மகிழ்ந்து உண்ணுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
அந்தப் பணக்கார மனிதர், அவருக்கு இருக்கும் பல்வேறு நோய்களைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். அவர் எதிரே உள்ள உணவின் இயல்பைப் பற்றி நினைக்காமல், அவர் எதை எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்.
விழிப்புணர்வு நிலையில் பிறப்பு எடுத்தவர்தான், விழிப்பு மிகு ஜனனம் எடுத்தவர் மட்டும்தான் தம் ப்ராரப்த கர்மத்தைப் பற்றி, தேவைகளின் பட்டியலைப்பற்றி அறிந்திருப்பார். இந்தப் பட்டியலைப் பூர்த்திச்செய்து தம் ப்ராரப்த கர்மத்தைத் தீர்க்கிறார். அப்படிப்பட்ட மனிதருக்கு அவருடைய தேவைகளுடன் பிணைப்பு இருக்காது அல்லது தேவைகளைப் பூர்த்திச் செய்வதனால் விளையும் பலனின் மேல் பிணைப்பு இருக்காது.
இந்தத் தேவைகள் தங்களுடைய ஆற்றலைக்கொண்டே தங்களைத் தாங்களே நிறைவேற்றிக்கொள்கின்றன. நிறைவேற்றப்பட்டவுடன், அந்தத் தேவைகள் கர்மா சம்பந்தப்பட்ட எந்தவித அடையாளத்தையும் சிற்றலையையும் விட்டுச் செல்வதில்லை.
எல்லாவற்றையும் கடந்த இறுதி குருவாகிய கிருஷ்ணர் எப்போதும் விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார். அவருக்கு நிச்சயமாகக் கர்மா கிடையாது.
நிறைவேறாத ஆசைகள் கிடையாது.
பிணைப்பும் கிடையாது. அதேபோல
ஒவ்வொரு ஞான குருவுக்கும் கர்மா என்பது
கிடையாது.
அவர்களுடைய ஆசைகள் என்று
சொல்லப்படுபவை யாவும் அவை எழுந்த
உடனே பூர்த்திச் செய்யப்பட்டுவிடுகின்றன.
நான் உணவை விரும்பும்போது, அது கிடைத்துவிடுகிறது. தூங்கவேண்டுமென்று நினைக்கும்போது நான் ஓய்வு எடுக்கிறேன். எனது விருப்பத்திற்கும் அதை நிறைவேறுதலுக்கும் இடையே இடைவெளி என்பதே இல்லை. அந்த விருப்பம் நிறைவேறிய பின் அதன் சுவடு இருப்பதில்லை.
நிறைவேறுதல் முழுமையாக இருக்கிறது. பிணைப்பு சூன்யமாக இருக்கிறது. அதனால் அங்குக் கர்மா இல்லை.
இந்தப் பாடத்தைத்தான் ஒவ்வொரு குருவும் தம் சீடருக்கு உபதேசிக்க முயற்சிக்கிறார்.
உங்கள் தேவையைச் செயல்படுத்துங்கள்; உங்கள் ஆசைகளை அல்ல. எதனடனும் உங்களைப் பிணைத்துக்கொள்ளாமல் செயல்படுங்கள். கர்மா உங்களை வந்து சேராது. நீங்கள் விடுதலையடைவீர்கள்.
கிருஷ்ணர் உருவாக்கிய ஜாதி அமைப்பு முறை இதுவல்ல
கேள்வி: ஸ்வாமிஜி, தற்சமயம் இந்தியாவில் உருவாகியுள்ள ஜாதி அமைப்பு கிருஷ்ணர் உருவாக்கிய முறையில் அமையாமல், அது ஒரு தீய பழக்கமாகி விட்டது. எப்படி ஒருவர் அதை ஏற்றுக்கொள்ள முடியும்? அது நீக்கப்பட வேண்டும் இல்லையா?
நீங்கள் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் பதிலை எதிர்பார்த்தால், இது என்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி அல்ல.
அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் பதிலை எதிர்பார்த்தால், என்னால் உங்களைத் திருப்தி படுத்த முடியாது.
நீங்கள் ஸத்யத்தை எதிர்பார்த்தால், அந்த ஸத்யம் இதுதான்:
நாம் ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்கள். நம் எல்லோருக்கும் வெவ்வேறான வலிமைகள் மட்டுமல்லாமல், வெவ்வேறான பலவீனங்களும் இருக்கின்றன.
எல்லாச் சமுதாயங்களும் இந்தத் தனித் தன்மையை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அதனால்தான் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு அரசியல் அமைப்பிலும் ஒவ்வொரு சமய நிறுவனத்திலும் தீர்மானங்கள் எடுப்பதற்கும் அவற்றை செயல்படுத்துவதற்கும் ஒரு தலைவர் இருக்கிறார்.
> நாம் ஒவ்வொருவருமே
> தனித் தன்மை
> வாய்ந்தவர்கள்தான்.
> நம் எல்லோருக்கும்
> வெவ்வேறான வலிமைகள்
> மட்டுமல்லாமல்,
> வெவ்வேறான
> பலவீனங்களும்
> இருக்கின்றன.
நாம் ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாழ்வை நடத்தி, மற்றவர்களிடமிருந்து முற்றிலும் தனிமையாக வாழ்ந்து, மலைகளிலும் காடுகளிலும் வசித்தால், அவ்வகையான அமைப்புகள் ஏதும் தேவையில்லை. அப்படி வாழும்போது, இவை தொடர்ந்து வாழாது.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத்துவங்கி ஒரு குடும்பத்தை அமைத்த அந்தக் கணமே, குடும்ப அமைப்பை, பல்வேறு படி நிலைகளுடன் கூடிய
அமைப்பாக, ஒருவகை அதிகாரம் கொண்ட
மனப்பான்மையுடன், சமத்துவமே இல்லாத
ஒரு அமைப்பாக நிறுவ ஆரம்பிக்கிறீர்கள்.
ஒவ்வொரு சமுதாயத்திலும், அதன்
தலைவர்கள் எவ்வாறு செயல்பட
வேண்டுமென்பதற்கான விதிமுறைகள்
உள்ளன.
நீங்கள் சொல்லும் மக்களாட்சி கூட,
சமத்துவம் இல்லாதது. ஏனென்றால் அதில்
கூட ஆள்பவர்கள், ஆளப்படுபவர்கள்
இருக்கிறார்கள்.
ஆளப்படுபவர்கள் வேண்டுமானால் நாம்தான் ஆள்பவர்களைத் தேர்வு செய்தோம் என்ற மாயையில் வாழலாம். ஆனால் அவர்கள் சமமானவர்கள் கிடையாது. ஒரே சட்டங்கள் இருவருக்கும் பொருந்தாது.

கம்யூனிசத்திலும் கூட ஆள்பவர்,
ஆளப்படுபவர்களுக்கு இடையே
என்றுமே சமத்துவம் இருந்ததில்லை.
ஆளப்படுபவர்களிடையே பலவந்தம்
செய்யப்பட்ட சமத்துவம்தான்
இருந்தது. ஆள்பவர்கள்
சர்வாதிகாரர்களாகத்தான் இருந்தனர்.
உங்களுடையது மக்களாட்சி. அதனால் அனைவரும் சமம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சில மக்கள் மற்றவர்களைவிட அதிக சமமாக இருக்கிறார்கள்! அங்குப் பணக்காரர், ஏழை இவர்களிடையே பல்வேறு வகையான ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன.
அதனால் உங்களுடைய சமுதாயம் பணத்தின் பலத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. வேறு ஒரு நாடு நிலஉரிமையாளர்களின் பலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். மற்றொரு நாடு தொடர்பு ஆற்றலையோ அல்லது கல்வியின் ஆற்றலையோ அடிப்படையாகக் கொண்டிருக்கும். அங்கு எப்போதும் ஒரு மனிதரை மற்றவருடன் வேறுபடுத்த அடிப்படையான ஆதாரம் இருக்கிறது. இந்த வேற்றுமை இல்லாமல், எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயமும் இயங்குவதில்லை.
பழங்கால இந்தியாவில் வழக்கிலிருந்த வேத கலாச்சாரத்தில், இந்த வேறுபாடு, திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
அக்கால கல்விக் கூடங்களாக விளங்கிய குருகுல கல்வி முறையில், மிகச்சி றிய வயதிலேயே குழந்தைகளின் தன்மை அறியப்பட்டு, அதற்கு ஏற்ற பயிற்சி கொடுக்கப்பட்டது. நான் முன்பே சொல்லிய படி, அது பிறப்பின் அடிப்படையில் இல்லாமல், திறமையின் அடிப்படையில் இருந்தது.
பிறப்பு, பெற்றோர்களின் செல்வம் மற்றும் குடும்பத் தொடர்புகள் இவற்றின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் ஜாதி அமைப்பு முறையை விட, எனக்குத் தெரிந்த வரையில், இந்த குருகுல முறை மிகவும் சிறந்த முறையாக இருக்கிறது.
இந்த ஜாதி அமைப்பால்தான், இன்று உள்ள நிலையிலும் கூட, இந்தியாவில் இந்த வேத கலாச்சாரம் இன்றுவரை உயிருடன் இருக்கிறது.
இந்த வேத கலாச்சாரத்தை அழியாமல் பாதுகாத்தவர்கள் ப்ராஹ்மணர்கள்தான். இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்த ப்ராஹ்மணர்கள் தங்கள் உயிருக்கே பாதுகாப்பு அற்ற நிலையிலும் கூட, தங்கள் உயிரையும் பணயம் வைத்து வேத கலாச்சாரத்தைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் அதனை வளர்த்தும் வந்தார்கள். இந்த ஞானத்தை, அதன் இயல்புத் தன்மையை, அதன் இயற்கைப் பண்புகளோடு காப்பாற்றி வைத்தார்கள்.
ஜாதி அமைப்பு முறை பிறப்பின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதைவிட, அக்கால குருகுல முறையே மிகவும் சிறந்த முறையாக இருக்கிறது.
தென் இந்தியாவில் சிதம்பரமும் வட இந்தியாவில் வாரணாசியும் வேத கலாச்சாரத்தின் கருவூலங்களாகத் திகழ்கின்றன. இங்குள்ள ப்ராஹ்மண சமுதாயத்தினர், 'வேத கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதே அவர்களுடைய தலையாய, உண்மையான கடமையெனக் கற்பிக்கப்பட்டார்கள்'. அவர்களும் அதனையே பின்பற்றியதால் மட்டுமே, வேத கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டது.
அன்று அவர்கள் செய்த பங்களிப்பை இன்று மக்கள் நினைத்துப் பார்ப்பார்களா?
வேத கலாச்சாரத்தைப் பேணிக்காக்க, ஜாதி
அமைப்பு செய்த பங்களிப்பை அவர்கள்
ஒப்புக்கொள்வார்களா?
தென் இந்தியாவில்
சிதம்பரமும்
வட இந்தியாவில்
வாரணாசியும்
வேத கலாச்சாரத்தின்
கருவூலங்களாகத்
திகழ்கின்றன.
இந்த வேத கலாச்சாரம்தான் இந்தியாவை உலக
அளவில் வேறுபடுத்திக் காட்டுவதாகவும்
இந்தியாவின் வெற்றிக்கு காரணியாகவும்
இப்போதும் இருக்கிறது, எதிர்காலத்திலும்
இருக்கும் என்று அவர்கள் உணர்வார்களா?
சுமார் இருநூறு ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்து அரசியின் சார்பாக இந்தியாவிற்கு வந்த லார்ட் மெக்காலே, நாடு முழுவதும் பயணம் செய்த பிறகு, “ஒரு பிச்சைக்காரனையோதிருடனையோ என்னால் பார்க்கமுடியவில்லை,” என்று அறிவித்தார்.
அதோடு மட்டுமல்லாமல், “இந்தியாவை வெல்ல வேண்டுமென்றால், அதன் கலாச்சாரத்தையும் கல்வி அமைப்பையும் ஆங்கிலேயர் அழிக்க வேண்டும்,” என்றும் அவர் ஆங்கிலேயர்களுக்குப் பரிந்துரை செய்தார்.
அப்படியானால் மட்டுமே இந்தியர்கள் அவர்களுடைய சுயமரியாதையை இழந்து, ஆங்கிலக் கலாச்சாரம்தான் உயர்ந்தது என்று நினைக்கத் துவங்கி, தங்களை ஆள்வதற்கு நம்மை அனுமதிப்பார்கள் என்றும் அவர் சொன்னார்.
இந்த நிகழ்ச்சி உண்மையோ, பொய்யோ தெரியாது; இந்த மனிதர் ஒரு தீர்க்கதரிசிதான்! அவர் சொன்னவாறே நிகழ்ந்தது!
இதற்கு முன் முகலாயர்கள் இந்தியக் கலாச்சாரத்தை அழித்ததை விட, ஆங்கிலேயர்கள் இந்தியக் கலாச்சாரத்தின் ஆதாரத்தை வேரோடு அழித்தார்கள்.
தாங்கள் ஆட்சிசெய்ய வேண்டுமென்பதற்காக, ஆங்கிலேயர்கள் ஜாதி அமைப்பைக் குறித்த காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி, ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை வெறுப்புடன் பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கினார்கள்; பிரித்தாள்வதற்கான விதையை விதைத்தார்கள். ‘படித்த’ இந்தியர்கள் மகிழ்ச்சியுடன் இதைப் பின்பற்றினார்கள்!
தனிப்பட்ட ஆர்வம் உடையவர்களின் தூண்டுதலின் விளைவாக ஏற்பட்ட இந்தப் பாரபட்சமான அரசியல், சமுதாய அமைப்பின் அடிப்படையில், நாம் நம்முடைய வேத கால ஜாதி அமைப்பினை மதிப்பீடு செய்ய வேண்டாம்.
எல்லா விதமான சமுதாய அமைப்பிலும் பிரதிகூலமான சூழ்நிலையில் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய இணக்கமற்ற சூழ்நிலைக்குக் காரணம் இந்தச் சமுதாயம்தான் என்று வீண்பழி சுமத்துகிறார்கள். தங்களுடைய சூழ்நிலைக்குக் காரணமாக சமுதாயத்தில் நிலவும் ஏதாவது ஒரு அமைப்பினைச் சொல்ல வேண்டுமென்பதற்காகவே, ஜாதி அமைப்பினைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
உதாரணமாக, அமெரிக்காவில் பொருள் சம்பாதித்து, சேர்த்து வைப்பதைத் தடுக்க முடியாது. ஏனென்றால் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அந்தச் சமுதாயம் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் செல்வம் சேர்ப்பதைத் தடுக்க முடியுமா? அதற்காக அனைவருமே செல்வந்தராக இருக்க முடியுமா? ஆனால் அதைத்தான் ரஷ்யாவும் சைனாவும் பல வருடங்களாக முயற்சி செய்தது. அதனுடைய பலன் இப்போது நமக்கே தெரியும்.
ஜாதி அமைப்பை நீக்குவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று நான் நினைக்கவில்லை. ஜாதி அமைப்பில் சேர்க்கப்பட்ட சுயநல நோக்கைக் நீக்குவது மட்டுமே ஒரு தீர்வாக உள்ளது.
வேத பாரம்பரியத்தின் அடிப்படையில், நமது கல்விமுறையை அமைப்பது மற்றொரு தீர்வு. வேத கலாச்சாரம் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு யாரையும் ஊக்குவிப்பதில்லை.
அது ஒருவருடைய திறமையை உயர்த்தி, சமுதாயத்திற்கு கடமையாற்ற உதவியிருக்கிறது.
இந்தத் திட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக, அதைச் சரியாகப் புரிந்து கொண்டால், நமது சமுதாயம் பலன் அடையலாம்.
நீங்கள் இதை நீக்கினாலும் வேறு வகையான பாகுபாடு புகுந்துவிடும். அந்தப் பாகுபாடு, அந்த அமைப்பு இதை விட நல்லதாகவோ, சிறப்பானதாகவோ நிச்சயம் இருக்காது.
செயலற்ற தன்மையில் செயல்...
செயலில் செயலற்ற தன்மை...

4.17 கர்மத்தின் போக்கைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம். தவறான செயலின் இயல்பையும் செயலற்ற தன்மையையும் புரிந்துகொள்வதின் மூலம் கர்மத்தின் இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்வாயாக!
4.18 அனைத்து செயல்களில் ஈடுபட்டாலும், எவர் ஒருவர் செயலில் செயலற்ற தன்மையும் செயலற்ற தன்மையில் செயலையும் பார்க்கிறாரோ அவரே ஞானி, அவரே யோகி.
4.19 யார் ஒருவர் உறுதி உடையவராகவும், அனைத்து கர்மங்களையும் ஆசையின் வசப்படாமல் செய்கிறாரோ, அவரே முழுமையான அறிவு பெற்றவராக இருக்கிறார். எவருடைய கர்மங்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டுவிட்டனவோ, அவரை ஞானிகள் அறிவுடையவர்கள் என்று அறிவிக்கிறார்கள்.
4.20 கர்ம பலன்களின் மேல் உள்ள பிணைப்பை விட்டுவிட்டதால்,

திருப்தியுடனும் சுதந்திரமாகவும் இருக்கிற அறிவுடைய மனிதர் எல்லாவிதமான கர்மங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர் கர்மம் செய்வதில்லை.
நீங்கள் சுதந்திரம் அடைவதற்கான யுக்தி
இங்கே கிருஷ்ணர், செயலில் செயலற்ற தன்மையையும் செயலற்ற தன்மையில் செயலையும் பார்க்கும் ஒருவர் மிக மேம்பட்ட நிலையை அடைந்துவிடுகிறார் என்று சொல்கிறார்.
உங்களுக்குள் இருக்கும் 'நான்' செயல்களைச் செய்வதில்லை, 'புலன்கள்'தான் அவற்றின் இயல்புப்படி செயல்களைச் செய்கின்றன என்பதையும், மனம்தான் உங்களைச் செயலோடு சேர்த்துப் பிணைத்து ஒரு போலியான அடையாளத்தை உருவாக்குகிறது என்பதையும் நீங்கள் உணர்கிறபோதுதான், நீங்கள் உங்களையே உணர்ந்து கொண்டவராகிறீர்கள்; நீங்கள் மேம்பட்ட உணர்வு நிலையை அடைந்து விட்டவராகிறீர்கள். ஏனென்றால் அதற்கு மேலும் நீங்கள் மனத்தின் பிடியில் இருப்பதில்லை.
மனம்தான், ஏதோ ஒன்றுடன் நம்மை பிணைக்கிறது; வேறு சிலவற்றிடமிருந்து நம்மை விலக்கி வைக்கிறது.
நீங்கள் மனத்தின் பிடியில் இல்லாவிட்டால் நீங்கள் சுதந்திரமானவர்களே. அதற்குப் பிறகும் நீங்கள் செயல்களைச் செய்கிறீர்கள்; ஏனென்றால், புலன்கள் அவற்றின் இயல்பின்படி செயல்களைச் செய்தாக வேண்டும்.
உதாரணத்திற்கு, கண்கள் பார்க்கும்; காதுகள் கேட்கும்; நாக்கு சுவைக்கும்; மூக்கு நுகரும்; தோல் உணரும்; இவ்வாறு புலன்கள் தத்தம் செயல்களைச் செய்து கொண்டு இருந்தாலும் செயலின் பிணைப்பிலிருந்து நீங்கள் விடுபட்டு இருக்கிறீர்கள்.
ஏனென்றால் செயலுடன் பிணைக்கும் எந்தவித அடையாளமும் உங்களுக்கு இல்லை. உங்களுக்கு எதனிடமும் உணர்ச்சி ரீதியான பிணைப்பு இல்லை. அதனால், இயல்பாகவே நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள்.
நீங்கள் விடுதலை அடைகிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதை மிக அழகாக, எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் அல்லது செயலின் பலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யலாம்.
அன்கிளட்ச் என்பதற்கு இதுதான் அர்த்தம். அன்கிளட்ச் என்பது நீங்கள் கட்டுப்பாடற்று, சுதந்திரமாக விடுதலையாக இருக்கும் ஒருநிலை.
அன்கிளட்சிங் என்ற வார்த்தைக்கான பொருள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
உங்கள் மனத்தைக் கூர்ந்து கவனித்தால், நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கோர்த்துக் கோர்த்துப் பார்த்து, உங்கள் மனத்தில் ஒரு தொடர்பைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் என்பதை நீங்களே பார்க்கலாம்.
உதாரணமாக, பத்து வருடங்களுக்கு முன் ஏற்பட்ட தலைவலி, ஐந்து வருடங்களுக்கு முன் ஏற்பட்ட தலைவலி, மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட தலைவலி, நேற்று ஏற்பட்ட தலைவலி அவையாவும் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த தனித்தனி அனுபவங்கள்.
உங்கள் மனத்தில் உள்ள இந்த அனைத்து அனுபவங்களையும் ஒருவகைப்படுத்தி, அதைத் 'தலைவலி' என்ற ஒரே பிரிவின் கீழ்ப் பதிவுசெய்கிறீர்கள். எளிதாக ஒப்பீடு செய்து பார்ப்பதற்கு உதவுகிற வகையிலும் நடைமுறையில் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத் திற்காகவும் மட்டுமே இவ்வாறு பதிவுசெய்யப்படுகிறது.
இது நம் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளைப் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தி, பல கோப்புகளில் கோப்பு செய்வது போன்றது.
ஆனால் என்ன நிகழ்கிறது?

காலப்போக்கில் மெது மெதுவாக இந்த
எல்லா அனுபவங்களும் ஒன்றுக்கொன்று
தொடர்புடையது என்று நீங்கள் நம்பத்
தொடங்குவீர்கள்.
பத்து வருடங்களுக்கு முன் ஏற்பட்ட
துன்பம் வேறு ஒரு காரணத்திற்காக, வேறு
ஒரு இடத்தில் ஏற்பட்டது. அது முற்றிலும்
தனிப்பட்ட அனுபவம். ஐந்து வருடங்களுக்கு
முன் நிகழ்ந்த துக்கம், முழுவதுமாக
வேறு ஒரு காரணத்திற்காக நடந்தது. அது
முழுவதும் மாறுபட்ட அனுபவம். மூன்று
ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட துக்கம், வேறு
ஒரு காரணத்திற்காக ஏற்பட்டது.
ஆரம்பத்தில், நீங்கள் இவற்றையெல்லாம் எளிதான முறையில் ஒப்பீடு செய்வதற்கு ஏற்ற வகையில், ஒரே இடத்தில் பதிவுசெய்து வைக்கிறீர்கள். பிறகு மெது மெதுவாக இவையாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நம்பத் தொடங்குகிறீர்கள்.
நம்முள் இருக்கும்
‘நான்’
செயல்களைச்
செய்வதில்லை.
புலன்கள்தான்
அவற்றின் இயல்புப்படி
செயல்களைச்
செய்கின்றன.
இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நீங்கள் நம்ப துவங்கிய உடன், நீங்கள் ஒரு தண்டை (Shaft) உருவாக்குகிறீர்கள்.
நீங்கள் துக்கமான எண்ணங்கள் அனைத்தையும் கோர்த்துக் கோர்த்துப் பார்த்து ஒன்று சேர்த்தீர்களானால், நீங்கள் ஒரு துன்பத் தண்டை உருவாக்கி, "என் வாழ்வு துன்பமானது, என் வாழ்வு துக்கமானது," என்று முடிவு செய்வீர்கள்.

உங்களுடைய முழு வாழ்வும் துன்பங்களின் தொகுப்புதான் என்றும், துன்பங்களால் கோர்க்கப்பட்ட சங்கிலிதான் என்றும், நீங்கள் நினைக்க ஆரம்பிக்கிறீர்கள்.
உங்களுடைய முழு வாழ்வும் துக்ககரமானது என்று நீங்கள் நம்பும்போது, நீங்கள் ஒரு துக்கத் தண்டை உருவாக்குகிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் துக்கமான நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் அப்போது மட்டுமே நீங்கள் அந்தத் தண்டை நீட்டிக்க முடியும்.
மேலும் ஒன்றை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதைத்தான் உங்களுக்குள்ளும் நீங்கள் வளர்த்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எதையாவது நம்பினீர்களானால் மீண்டும் மீண்டும் அதையே உங்கள் வாழ்வில் பார்ப்பீர்கள்.
உங்களின் விருப்பப்படியே எல்லாம் நடக்கும்
அதனால்தான் வேத கால ரிஷிகள், “நீங்கள் ஆசைப்படுவதைதான் நீங்கள் உருவாக்குகிறீர்கள். நீங்கள் விரும்புவதைத்தான் நீங்கள் உருவாக்குகிறீர்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதைத்தான் உருவாக்கிக்கொள்கிறீர்கள்; அதையே வளர்த்துக்கொள்கிறீர்கள்,” என்று சொல்லியிருக்கிறார்கள்.
உங்கள் வாழ்வு துக்ககரமானது என்று நீங்கள் நம்ப ஆரம்பித்து விட்டாலே போதும், உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவும் அந்தத் தீர்ப்புக்களை வலுப்படுத்தவும் உங்களை அறியாமலேயே துக்ககரமான சம்பவத்திற்காகக் காத்திருப்பீர்கள்.
எப்போதுமே நாம் தீர்ப்புகளுக்காக வாதம் புரிவதில்லை. அதாவது வாதம் செய்து அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை; தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை. முதலில் தீர்ப்பை எழுதிவிட்டு, பிறகு நமது தீர்ப்பை வலுப்படுத்துவதற்காகவே வாதங்களைச் சேகரிக்கிறோம்.
தீர்ப்பு தயாராக இருக்கிறது. நாம் வாதங்களை மட்டும் சேகரித்து அதை வலுப்படுத்துகிறோம். ‘உங்கள் வாழ்க்கையே ஒரு துக்கத் தண்டுதான், துக்கங்களால் கோர்க்கப்பட்ட சங்கிலித் தொடர்தான்’ என்று, உங்கள் வாழ்க்கையைக் குறித்த தெளிவான முடிவுடன் நீங்கள் இருக்கும்போது, அந்த நம்பிக்கையை வலுப்படுத்த, துக்ககரமான சம்பவங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
முதலில் தீர்ப்பை எழுதிவிட்டு,
பிறகு நமது தீர்ப்பை
வலுப்படுத்துவதற்காகவே
வாதங்களைச்
சேகரிக்கிறோம்.
இரண்டாவதாக, எப்பொழுதெல்லாம் நீங்கள் விழிப்புணர்வற்ற நிலையில் துக்கமான நிகழ்ச்சிகளைச் சேர்க்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் அந்தத் துக்கத் தண்டை நீட்டித்துக்கொள்கிறீர்கள். அதன்பிறகு நீங்கள் விழிப்புணர்வுடன் அந்தத் தண்டை உடைத்துத் துக்கத்தை முடிக்க விரும்பினாலும் அது முடிவதில்லை. தொடர்ந்து அந்தத் தண்டை நீட்டித்துக்கொண்டேயிருப்பீர்கள்.
மிக அரிதாகவே, நமது வாழ்வு முழுவதும் மகிழ்ச்சியான அனுபவங்களால் கோர்க்கப்பட்ட சங்கிலித் தொடர்தான் என்றும் நமது வாழ்வே மகிழ்ச்சித் தண்டுதான் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்.
அப்படியே நம்பினாலும் இந்த மகிழ்ச்சி
தொடருமா என்ற பயம் உங்களுக்குள்
நிலையாக நீடித்து இருக்கிறது. "இதே
போல், இது எப்போதும் தொடருமா?" என்ற
ஐயத்திலேயே நீங்கள் இருப்பீர்கள்.
வாழ்வு ஒரு துக்கத் தண்டு என்று நீங்கள்
நினைத்தால், நீங்கள் இரண்டு விஷயங்களைச்
செய்கிறீர்கள்!
ஒன்று, விழிப்புணர்வற் ற நிலையில் மேலும் மேலும் நிகழ்ச்சிகளைச் சேகரித்து, உங்கள் வாழ்வே துக்ககரமானதுதான் என்ற நம்பிக்கையை உங்களுக்குள் வலுப்படுத்துகிறீர்கள். அதே சமயம் விழிப்புணர்வுடன் அந்தத் துக்கத் தண்டை உடைக்கவும் முயற்சி செய்கிறீர்கள்!
அதே போல் வாழ்வு மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளின் சங்கிலி என்று நீங்கள் நம்பினீர்கள் என்றாலும் இரண்டு விஷயங்களைச் செய்கிறீர்கள்! ஒன்று விழிப்புணர்வு அற்ற நிலையில் கூட அந்த மகிழ்ச்சி முடிந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பீர்கள். அதே சமயம் விழிப்புணர்வுடன் அதனை நீட்டிக்க முயற்சி செய்வீர்கள்.
இவை இரண்டுமே, நம்மிடம் நாமே தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிற மிகப்பெரிய நாடகங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் புரிந்துகொள்வதற்கே கடினமான, மிகப்பெரிய, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தண்டை உடைக்கவோ அல்லது நீட்டிக்கவோ முடியாது என்பதை நாம் மறந்துவிடுவதுதான். ஏனென்றால் உண்மையில் அங்குத் தண்டே இல்லை. அந்தத் தண்டே உங்களுடைய கற்பனைதான். அதை நீங்கள் உடைக்கவும் முடியாது; நீட்டிக்கவும் முடியாது.
சுலபமாக ஒப்பீடு செய்யும் நோக்கத்திற்காக நீங்கள் இந்த நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்ய ஆரம்பிக்கிற பொழுதே, மெது மெதுவாக இவை யாவும் உண்மையிலேயே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இருக்கின்றன என்று நம்பவும் ஆரம்பிக்கிறீர்கள். அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இருக்கின்றன என்று நீங்கள் நம்பத் தொடங்கும்போது, உங்கள் வாழ்வு ஒரு துக்கத் தண்டு அல்லது ஒரு இன்பத் தண்டு என்று நம்புகிறீர்கள். உங்கள் வாழ்வு ஒரு துக்கத்தண்டு என்று நீங்கள் நம்ப ஆரம்பிக்கும்போது, நீங்கள் அதை உடைக்க முயற்சி செய்கிறீர்கள்.
அதை இன்பத்தண்டு என்று நம்பும்போது, அதனை நீட்டிக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் முக்கியமான ஒன்றை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்.
நீங்கள் அதை உடைக்கவோ, நீட்டிக்கவோ முடியாது, ஏனென்றால் அந்தத் தண்டே உண்மையில் அங்கு இல்லை.
நீங்கள் உங்களை ஆராய்வதே மிகப்பெரிய தியானம்
இந்தச் சோதனையைச் செய்து பாருங்கள்: ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு பத்து நிமிடம் உட்காருங்கள். இப்போது உங்கள் மனத்தில் தோன்றும் எண்ணங்களை அப்படியே அந்தப் பேப்பரில் எழுதிவையுங்கள். அவற்றை வெட்டி, ஒட்டி என்று எடிட்டிங் செய்யாமல், அவை எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறே எழுதுங்கள்.
உங்களை நீங்கள் மதிப்பிடாதீர்கள். உங்கள் மனத்தில் தோன்றுபவற்றைக் கட்டுப்படுத்தாதீர்கள். நீங்கள் மதிப்பிட ஆரம்பித்தீர்கள் என்றால், நீங்கள் உங்களிடமே போலியான ஆட்டம் ஆடுகிறீர்கள், அவ்வளவுதான். என்ன வருகிறதோ அதை அப்படியே எழுதுங்கள்.
> உங்களை நீங்களே மதிப்பிடாதீர்கள். நீங்கள் மதிப்பிட ஆரம்பித்தீர்கள் என்றால், நீங்கள் உங்களிடமே போலியான ஆட்டம் ஆடுகிறீர்கள்.
இப்போது, நீங்கள் எதையெல்லாம் எழுதி இருக்கிறீர்களோ அதைப் படியுங்கள். உங்களுடைய எண்ணங்கள், எவ்வாறு தொடர்பற்றும் தர்க்கமற்றும் இருக்கிறது என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!
நீங்கள் இங்கு வீட்டில் உட்கார்ந்து கொண்டு, "நான், நாளை எனது அலுவலகத்திற்குக் கட்டாயம் போயே ஆக வேண்டுமென்று நினைக்கிறேன்," என்று நினைப்பீர்கள். பிறகு அடுத்த நிமிடம் "இல்லை இல்லை,
நாளை காலை எழுந்த பிறகுதான் இதைப்
பற்றி முடிவு செய்ய வேண்டும்," என்று
நினைப்பீர்கள். அதற்கு பிறகு, "இன்றைய
இரவு உணவுக்கு நான் என்ன செய்ய
வேண்டும்?" என்று நினைப்பீர்கள்.
நீங்கள் மீன் தொட்டியைப் பார்த்திருக்கிறீர்களா?
அந்த மீன் தொட்டியில் நீர்க்குமிழிகள் எப்படி எழுகிறது என்று நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
எண்ணங்கள்
ஒவ்வொன்றும்
தர்க்க ரீதியாகப்
புரிந்துகொள்ள
முடியாதவை என்பதைப்
புரிந்துகொள்வதுதான்
அன்க்ளட்ச்.
ஒரு കുമിழிக்கும் மற்றொரு குமிழிக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. ஆனால் அந்த இடைவெளி மிகச்சிறியதாக இருப்பதால், அது ஒரு தொடர்ச்சியான நீரோட்டமாகத் தோன்றுகிறது.
மீன் தொட்டியில் நீர்க்குமிழிகள் எழுவதைப் போன்றுதான், நம் மனத்திலும் எண்ணங்கள் எழுகின்றன. நம் மனத்திலும் ஒரு எண்ணத் திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் இடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் சிறிது ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால் நீர்க்குமிழியைப் போன்றே உங்கள் எண்ணங்களும் தனித்தனியானவை என்பதை உணர்வீர்கள். உங்களுடைய எண்ணங்கள் அவற்றின் இயல்புப்படி தனித்தனியானவைதான்.
உதாரணமாக, நீங்கள் தெருவில் ஒரு நாயைப் பார்க்கும்போது, உடனே நீங்கள் குழந்தையாய் இருந்தபோது உங்களோடு விளையாடிய செல்லப்பிராணியை நினைப்பீர்கள்.
பிறகு நீங்கள் சிறுவனாய் இருந்தபோது, உங்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியரை நினைப்பீர்கள். பிறகு அந்த ஆசிரியர் வசித்த இடத்தைப் பற்றி நினைப்பீர்கள்.
தர்க்க ரீதியாகப் பார்த்தீர்களானால், இப்போது தெருவில் பார்க்கும் நாய்க்கும் அந்த ஆசிரியருக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை. தர்க்க ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் உங்கள் மனம் அப்படித்தான் ஓடுகிறது. நீங்கள் சிறிது ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால் உங்களுடைய எண்ணங்கள் தர்க்கமற்றது, தனித் தன்மை வாய்ந்தது, கோர்க்கப்படாதது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
உங்கள் மனம் தர்க்கமுடையது என்று நீங்கள் நம்பும்போதுதான், அதாவது உங்களுடைய மனத்திற்கே உரிய தர்க்கம் ஒன்று உள்ளது என்று நீங்கள் நம்பும்போதுதான், நீங்கள் உண்மையில் ‘முதல் பாவத்தை’ உருவாக்கிக்கொள்கிறீர்கள். அதுதான் உண்மையான பாவம். உங்களுடைய மனம் தர்க்க ரீதியானது என்று நீங்கள் நம்புவதுதான் ‘முதல் பாவம்’.
நீங்கள் உங்கள் ஸ்வபாவத்தின்படி அன்கிளட்ச் ஆனவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய ஸ்வபாவத்தின்படி நீங்கள் எண்ணங்களால் கோர்க்கப்படாதவர்கள்.
எண்ணங்களைக் கோர்த்துக் கோர்த்துப் பார்ப்பது என்றால், உங்களுடைய கடிதங்களைக் குப்பைக் கூடையில் போட்டு விட்டு, பிறகு அதிலிருந்து சிலவற்றை எடுத்து மீண்டும் படிப்பது போன்றது.
குப்பையில் போடும் கடிதங்கள் என்று
சொல்லும்போது, ஏற்கனவே உங்களை
விட்டுச்சென்ற எண்ணங்களைத்தான்
குறிப்பிடுகிறேன்.
உங்களுடைய ஸ்வபாவத்தின்படி ஒவ்வொரு
கணமும் நீங்கள் உங்கள் எண்ணத்தைத்
துறந்துகொண்டே இருக்கிறீர்கள்.
ஒரு எண்ணத்தைத் துறந்தால் மட்டுமே மனத்தில் மற்றொரு எண்ணம் எழ முடியும். பழைய எண்ணத்தைக் கைவிட்ட பிறகுதான் மனத்தில் புதிய எண்ணம் தோன்ற முடியும். ஆனால் எண்ணங்களைத் துறந்த பிறகும் அந்தத் துறந்த எண்ணங்களை மீண்டும் குப்பைக் கூடையிலிருந்து பொறுக்கி எடுத்து, அவற்றைக் கொண்டு ஒரு தண்டையே உருவாக்க முயற்சி செய்கிறீர்கள்.
மதிப்புள்ள எண்ணங்களைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டோம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். பிறகு அந்த எண்ணங்களிலிருந்து சிலவற்றை இங்கும் அங்கும் பொறுக்கி எடுக்கிறீர்கள். குப்பைக் கூடையிலிருந்து பொறுக்கி எடுத்த அந்த எண்ணங்களை உங்கள் படுக்கை கக்கு அருகில் வைத்து, அவற்றின் மீது வாசனைத் திரவியங்களைத் தெளித்து அவற்றை மிக நன்றாகவும் அழகாகவும் வைத்துக்கொள்கிறீர்கள்!
நீங்கள் நினைக்கிற ‘நீங்கள்’ ஒருபோதும் உங்களுக்கு உதவாது
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சில விஷயங்களே! உங்களுக்குள் நீங்களே ஒரு துக்கத் தண்டையோ அல்லது இன்பத் தண்டையோ உருவாக்கிக்கொண்டு, அதை நீட்டிக்கவோ அல்லது உடைக்கவோ முயற்சி செய்து அதனுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
இரண்டாவதாக, நீங்கள் தண்டிலிருந்து உங்களை விடுபடுத்துக்கொள்ளத் தேவையில்லை; ஏனென்றால், அந்தத் தண்டே ஒரு கற்பனைதான்.
தண்டை உருவாக்குவதை நிறுத்திவிட்டால், நீங்கள் உங்களுடைய ஸ்வபாவத்தினாலேயே அன்கிளட்சில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் தனியாக அன்கிளட்ச் செய்யத் தேவையில்லை.
உடனே மக்கள், "நான் அன்கிளட்ச் செய்தால் என் வேலையை எப்படி நான் செய்வேன்? என் பொருட்களை எப்படி நான் பாதுகாப்பேன். நான் வெறுமனே படுக்கையில் படுத்து என் வாழ்வை வீணாக்க மாட்டேனா? நான் அன்கிளட்ச் ஆகிவிட்டால் ஏன் நான் வேலைக்குப் போக வேண்டும்," என்று கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
"ஏன் நீங்கள் வேலைக்குப் போகக் கூடாது?" என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.
நீங்கள் வேலைக்குப் போக மாட்டேன் என்று சொன்ன அந்தக் கணமே, உங்கள் வேலையின் மீது உங்களுக்குச் சிறிது வெறுப்போ, சிறிது காழ்ப்புணர்ச்சியோ இருக்கிறது என்பதைத்தான் அந்த வார்த்தைகள் குறிக்கின்றன. அதனால்தான் ஏதாவது ஒரு சாக்கு போக்கு கிடைத்தவுடன், உடனே உங்கள் வேலையிலிருந்து தப்பிக்க விரும்புகிறீர்கள்!
இவை அனைத்தையும் சொல்வதனால், உங்கள் வழக்கமான வாழ்க்கைக்கு எதிராக நீங்கள் உங்கள் கோபத்தையும் வன்முறையையும்
> ஒரு எண்ணத்தைத் துறந்தால் மட்டுமே மனத்தில் மற்றொரு எண்ணம் எழ முடியும். பழைய எண்ணத்தைக் கைவிட்ட பிறகுதான் மனத்தில் புதிய எண்ணம் தோன்ற முடியும். வெளிப்படுத்துகிறீர்கள். வேறு ஒன்றும் இல்லை.
எப்போதும் நான் மக்களுக்குச் சொல்வதுண்டு, "நல்லது, நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் அப்படியே அன்கிளட்ச்சிலேயே இருங்கள்." எத்தனை நாட்களுக்கு நீங்கள் உங்கள் படுக்கையில் படுத்து இருப்பீர்கள்? பத்து நாட்களுக்குப் படுத்துக்கிடப்பீர்களா? உங்களுடைய செயலற்ற தன்மை, தமஸ் தீரும்வரை படுத்திருப்பீர்கள்.
உங்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவு தமஸ் இருக்கிறது. மூன்று வகை இயல்புகளாகிய, தூய்மை, செயல், செயலற்ற தன்மை இவற்றில் தமஸும் ஒன்று.
உங்களுடைய தமஸ் தீரும்வரை நீங்கள் உங்கள் படுக்கையில் படுத்து இருப்பீர்கள். ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? இயல்பாகவே, நீங்கள் வேலை செய்யவும் நகரவும் ஆரம்பிப்பீர்கள்!
அதனால் பயப்பட வேண்டாம். நீங்கள் அன்கிளட்ச் செய்தால், உங்களுடைய தினசரி வேலைகளைச் செய்ய மாட்டீர்கள் என்று பயப்பட வேண்டாம்.
அதைத்தான் கிருஷ்ணர், செயல்படுதல், செயல்படாமல் இருத்தல் என்று சொல்லும்போது குறிக்கிறார்.
உங்கள் ஸ்வபாவத்தின்படி நீங்கள் செயல்படாமல் இருக்க முடியாது. ஒன்றும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்து கொண்டு இருந்தீர்கள் என்றால், நீங்கள் பகல் கனவாவது கண்டு கொண்டிருப்பீர்கள்! கற்பனைகளில் பிடிபட்டு இருப்பீர்கள்.
> கடந்தகாலம் எதிர்காலம் இவற்றுடன் எந்த பிணைப்பும் இல்லாமல், நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, உங்களுக்குள் ஆற்றல் நிரம்பி இருப்பதை உணருவீர்கள்.
உண்மையிலிருந்து தப்பிக்க முயற்சிசெய்து, நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள்வீர்கள். ஏனென்றால் உங்கள் மனம் மிருதுவான, சுலபமான கனவுத் தண்டில் பிடிபட்டு உள்ளது.
நீங்கள் அன்கிளட்ச் செய்யும்போது, கடந்தகாலம், எதிர்காலம் இவற்றுடன் எந்தப் பிணைப்பும் இல்லாமல், நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, உங்களுக்குள் நிரம்பி இருக்கும் ஆற்றலை
உணருவீர்கள், உங்களுக்குள் ஆற்றல் நிரம்பி
இருப்பதை உணருவீர்கள். உங்களால் சும்மா
இருக்க முடியாது. நீங்கள் ஏதாவது செய்தாக
வேண்டும்.
அந்த 'ஏதாவது' என்பது எது
என்று உங்களுடைய நிகழ்கால
விழிப்புணர்வினாலேயே
சுட்டிக்காட்டப்பட்டுவிடும்; கற்பனையினால்
அல்ல. நான் சொல்கிறேன், உங்களுடைய
அன்றாட வாழ்வை நடத்துவதற்கு, 'நீங்கள்'
என்று நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அது
தேவையில்லை. இது ஒரு அடிப்படை ஸத்யம்.
> எண்ணங்களைக்
> கோர்ப்பதை நிறுத்தினால்,
> திடீரென்று ஒரு ஆழ்ந்த
> 'இன்னர் ஹீலிங்'-
> ஒரு ஆழ்ந்த அமைதி
> உங்களுக்குள் நிகழும்.
நீங்கள், 'நீங்கள்' என்று எதை நினைக்கிறீர்களோ, அது உங்கள் அன்றாட வாழ்வை நடத்தத் தேவைப்படாது. இந்த ஸத்யம் நம்மைக் காயப்படுத்துகிறது.
உங்களையே நீங்கள் ஆழ்ந்து கவனித்தீர்கள் என்றால், யாராவது உங்களை விட்டுத் தனித்து சந்தோஷமாக இருந்தால், உங்களால் அதைப் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை என்ற ஸத்யத்தை உணர முடியும்.

நீங்கள் இல்லாமலேயே, உங்களை
விட்டுவிட்டு அவர்கள் மகிழ்ச்சியாக
இருப்பது, உங்களுக்குப்
பொறுக்க முடியாத விஷயமாக
இருக்கிறது. மற்றவர்களுக்குக்
'தேவைப்படுபவர்களாகவே'
நாம் இருக்க வேண்டுமென்று
நினைக்க வேண்டிய 'தேவையில்'
தான் நாம் எப்போதுமே
இருக்கிறோம்.
அதனால்தான், மக்கள் அவர்களுடைய துக்கங்களை நம்மிடம் வெளிப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். நாமும் நம்முடைய துக்கங்களை அவர்களிடம் வெளிப்படுத்துகிறோம். அப்படியென்றால்தான், நம்மை 'முக்கியத்துவம்' வாய்ந்தவர்களாக உணர்கிறோம்.
நீங்கள் நினைக்கிற 'நீங்கள்' உங்கள் அன்றாட வாழ்வை நடத்தத் தேவையில்லை.
செயல்படுத்தத் தொடங்குங்கள். அனைத்தும் எளிமையாகிவிடும்
மக்கள் என்னிடம் “ஸ்வாமிஜி, நான் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டுமென்ற நேர்மறை உறுதியை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன், ஆனாலும் அதனால் பலன் இல்லை. ஏன்?” என்று கேட்கிறார்கள்.
இந்த எல்லா உருவாக்கப்பட்ட காட்சிகளும் மேலும் மேலும் துக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் அந்த வார்த்தைகளிலே ‘நான் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று உள்ளது.
‘நான் நிறுத்த வேண்டும்’ என்ற வார்த்தைகளுக்கு முரணாகவே ‘புகைபிடிப்பதை’ என்ற வார்த்தை இருக்கிறது.
‘நான் நிறுத்த வேண்டும்’ என்ற வார்த்தைகளுக்கு எவ்வாறு சக்தியூட்டுகிறீர்களோ, அவ்வாறே ‘புகைபிடிப்பதை’ என்ற வார்த்தைக்கும் சக்தியூட்டுகிறீர்கள். ஒரே அளவு சக்தியைத்தான் நேர்மறை, எதிர்மறை ஆகிய இரு எண்ணங்களுக்குமே அளிக்கிறீர்கள்.
அதற்குப் பதிலாக நீங்கள் “எனக்கு ஆரோக்கியமான பழக்கங்களே இருக்கட்டும்,” என்று சொல்ல வேண்டும். அல்லது வேறு ஏதாவது முழுவதும் நேர்மறையான வார்த்தைகளாகவே இருக்கவேண்டும். ‘புகைபிடிப்பது’ என்ற வார்த்தை அதில் வராமல் இருக்க வேண்டும்.
அதே போல், உங்களுக்குத் தலைவலி இருந்தால், தலைவலி என்ற எண்ணத்திற்கு சக்தியூட்டாமல், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நீங்கள் வேறு ஏதாவது ஒரு எளிமையான செயலைச் செய்ய முடிவு செய்யலாம். உதாரணத்திற்கு, ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க முடிவு செய்யலாம்.
ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க நினைத்த அந்தக் கணமே, அது ஒரு புதிய எண்ணமாக மாறுகிறது. இப்போது பழைய எண்ணமாகிய தலைவலி மறைந்தே ஆக வேண்டும். ஏனென்றால் புதிய எண்ணமாகிய தண்ணீர் குடிப்பது நடந்ததாக வேண்டும் இல்லையா?

உங்கள் அன்றாட வாழ்வை நடத்த நீங்கள் நினைக்கிற ‘நீங்கள்’ தேவையில்லை.
இவ்வாறு எண்ணங்களை மாற்றி அமைக்க
ஆரம்பித்தீர்கள் என்றாலே போதும்,
தலைவலியை ஆதாரமாகக் கொண்ட எண்ண
அமைப்பிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.
இதன் பயனாக இறுதியில் தலைவலி
தானாகவே உங்களுடைய அமைப்பிலிருந்து
விலகிவிடும்.
நீங்கள் கேட்கலாம் "இது எப்படி அவ்வளவு எளிதாக இருக்க முடியும் ஸ்வாமிஜி!"
அது மிகவும் எளிது.
மீண்டும் மீண்டும்
அவற்றையே
நினைப்பதன் மூலம்
எதிர்மறை
எண்ணங்களுக்குச்
சக்தியூட்டாதீர்கள்.
ஆனால் இதுவரை 'இது எளிதல்ல' என்றே உங்களுக்கு இடைவிடாது கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எளிமையானது. நீங்கள் உண்மையாகவே புரிந்து கொண்டால், இது மிகவும் எளிது.
ஆனால் தண்ணீர் குடித்தவுடன் உடன் தலைவலியை பற்றிய எண்ணம் மீண்டும் வரலாம்; பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்?
புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்கு அதில் உள்ள நம்பிக்கைதான் அதைத் திரும்பி வரச் செய்கிறது. இதுதான் அடிப்படை பிரச்சினை.
'தலைவலி' என்ற எண்ணத்தில் நீங்கள் அவ்வளவு நம்பிக்கையுடன் இருப்பதால், நீங்களே அதனைக் கட்டாயப்படுத்தி இழுத்து மீண்டும் உங்கள் அமைப்பிற்குள், உங்களுக்குள் கொண்டு வருகிறீர்கள். குப்பையில் போட்ட ஃபைலை நீங்கள் மீண்டும் கொண்டு வருகிறீர்கள். அவ்வளவுதான்.
இந்த முறையிலும் இதனை நினைத்துப் பாருங்கள். ஒருமுறை உங்களை விட்டுச் சென்ற தலைவலி மீண்டும் வந்தால், அது மீண்டும் உங்களை விட்டுச் செல்ல முடியும் அல்லவா? அது உங்களை விட்டு சென்ற அந்தக் கணங்களை ஏன் நீங்கள் கொண்டாடக் கூடாது? ஏன் நீங்கள் இடைவிடாது அது திரும்பி வரும் கணங்களையே நினைக்கிறீர்கள்?
மக்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள், "நான் அன்கிளட்ச் செய்ய முயற்சிக்கும்போது நான் தோல்வி அடைகிறேன் ஸ்வாமிஜி." அவர்களிடம் கேட்டேன், "நீங்கள் ஏன் கடந்தகாலத் தோல்வியை நிகழ்காலத் தோல்வியுடன் கோர்த்துப் பார்க்கிறீர்கள்?"
கடந்தகாலத் தோல்வியை நிகழ்காலத் தோல்வியுடன் கோர்த்துப் பார்க்காதீர்கள்.
நீங்கள் கடந்தகாலத் தோல்விகளைக் கோர்த்துப் பார்க்கும்போது, நீங்கள் மேலும் ஒரு தண்டை, 'தோல்வி' என்ற தண்டை உருவாக்குகிறீர்கள்.
ஒன்பது வருடங்களுக்கு முன் நடந்த தோல்வி, எட்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த தோல்வி, நேற்று நடந்த தோல்வி இவையாவும் தனித்தனி நிகழ்ச்சிகள்.
நீங்கள் ஏன் அவை அனைத்தையும் கோர்த்துப் பார்த்து அடுத்த அனுபவமும் தோல்வியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
அப்படியே உங்களைத் தளர்வாக்கிக் கொண்டு, கோர்ப்பதை நிறுத்துங்கள், திடீரென்று ஒரு ஆழ்ந்த 'இன்னர் ஹீலிங்' உங்களுக்குள் நிகழ்வதை நீங்கள் பார்ப்பீர்கள். ஒரு ஆழ்ந்த அமைதி உங்களுக்குள் நிகழும்.
திடீரென்று, நீங்கள் சண்டை, இடைவிடாத ஓட்டம் இவற்றிலிருந்து விலகியதைப் பார்ப்பீர்கள். அப்படியே தளர்வாக இருங்கள்.
இந்த ஓட்டத்திலிருந்து விலகும்போது, இந்தச் சண்டையிலிருந்து விலகும்போது, இந்த முழு விளையாட்டிலிருந்து விலகும்போது, அந்த முழு நிகழ்ச்சியும் ஒரு மனோ நாடகம் என்பதை நீங்கள் திடீரென்று உணர்வீர்கள். நீங்கள் இடைவிடாது ஆதரிப்பதால் மட்டுமே, இந்தத் தண்டுகளை ஏற்படுத்துகிறீர்கள்!
இந்த எளிய தியானத்தை முயற்சி செய்யுங்கள். கண்களை மூடி அமரவும். எந்த வார்த்தைகள் உங்களுக்குள் எழுந்தாலும் அனுமதியுங்கள். அவற்றை வேறு ஒரு எண்ணத்துடன் கோர்க்காதீர்கள். அவ்வளவுதான். அப்படியே தண்டை உருவாக்காதீர்கள்; அன்கிளட்ச் செய்யுங்கள்.
உங்களுக்கு இது சலிப்பூட்டுவதாக இருந்தால் அல்லது உங்கள் மனம் என்ன செய்வது என்று கேட்டால், அந்த எண்ணத்திலிருந்தும் அன்கிளட்ச் செய்யுங்கள். அந்த எண்ணத்துடன் கூட உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளாதீர்கள். அப்படியே உட்கார்ந்து அன்கிளட்ச் செய்யுங்கள். உங்கள் மனம் ஒரு எண்ணத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளும்போதும் அதனை அன்கிளட்ச் செய்யுங்கள். எதையும் உருவாக்காதீர்கள். எதையும் காப்பாற்றாதீர்கள், எந்த எண்ணத்தையும் அழிக்காதீர்கள்.
இதனைச் சில நிமிடங்கள் முயற்சி செய்யுங்கள் நீங்களே அதன் விளைவைப் பார்ப்பீர்கள்.
அபரிதமான சக்தி உங்களுக்குள் பொங்கிவீழும்
கிருஷ்ணர் சொல்கிறார், 'செயல்' என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 'செயலின்மை' என்றால் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொண்டேயாக வேண்டும். நம்முடைய தியான நிகழ்ச்சிகளில் அதைத்தான் நாம் மக்களுக்குச் சொல்கிறோம்.
தியானம் என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ள, தியானம் அல்லாதது என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டு நாள் தியான முகாமில், தியானம் அல்லாதது என்ன என்பதை விளக்க, ஒன்றைரை நாள் எடுத்துக்கொள்வேன், தியானம் என்றால் என்ன என்பதை விளக்க அரை நாளுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்வேன்.
ஹீலிங் வகுப்பிலும் அதேதான் நடக்கும். இரண்டு முழு நாட்களுக்கு நடைபெறும் ஹீலிங் வகுப்பிலும் அதேதான் நடக்கிறது. இரண்டு முழு நாட்களுக்கு ஹீலிங் அல்லாதது எது என்பது பற்றி, விரிவான கையேட்டைக் கொண்டு சொல்லிக் கொடுக்கப்படும். அதற்குப் பிறகுதான் ஹீலர்களுக்கான தீக்ஷை அளிப்பேன். இதற்கு அரைமணி நேரம் தான் ஆகும்!
நீங்களும் அன்கிளட்ச் செய்யும்போது,
நீங்கள் செயலற்று இருப்பது போல்
வெளிப்பார்வைக்குத் தோன்றுகிறது.
ஆனால் அப்போது உங்களுக்குள் இருக்கும்
துக்கம், சந்தோஷம், கற்பனைகள் போன்ற
தண்டுகள் அகற்றப்படுகின்றன. தடைகள்
அகற்றப்பட்டவுடன் அபரிமிதமான சக்தி
உங்களுக்குள் வெளிப்படுவதால், நீங்கள்
> அன்கிளட்ச் செய்வது சலிப்பூட்டுவதாக இருந்தால், அந்த எண்ணத்திலிருந்தும் அன்கிளட்ச் செய்யுங்கள்.
இப்போது செயல்திறனுடன் கூடிய செயலற்ற தன்மையில் இருக்கிறீர்கள்.
நீங்கள் செயலாற்றல் மிக்க சக்தியின் உச்சத்திலிருக்கிறீர்கள். அந்தச் சக்தியை அந்தக் கணத்தில் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டுமென்று முடிவு செய்கிறீர்களோ, அந்த நோக்கத்திற்காக வெளியிடத் தயாராக இருக்கிறீர்கள்.
அதற்குப் பதிலாக, நீங்கள் பகற்கனவு கண்டு கொண்டு, கற்பனை, சந்தோஷம் இவற்றுடன் கலந்த கவலை, துக்கம் இவற்றின் தண்டில் பிடிபட்டு இருந்தீர்கள் என்றால், நீங்கள் வெளிப்பார்வைக்குச் சுறுசுறுப்பாக, செயலாற்றும் திறனுடையவராகத் தோற்றம் அளித்தாலும், இது முற்றிலும் உபயோகமில்லாத சுறுசுறுப்பு. நீங்கள் எதிரிடையான பலன் அளிக்கக்கூடிய செயலில் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள். அதனால் உங்களை நீங்களே மேலும் துக்கத்தில் ஆழமாகத் தள்ளிக்கொள்கிறீர்கள்.
அன்க்ளட்சிங் செயல்முறையில் நீங்கள் செயல்படுதல், செயல்படாமல் இருத்தல் இவை இரண்டையும் கடந்து செல்கிறீர்கள். எண்ணங்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறது என்ற போலியான கருத்தை நீங்கள் வெற்றிகரமாக அழித்து, நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள்; மனமில்லா நிலையில் இருக்கிறீர்கள்; எண்ணங்களைத் துறந்து விட்ட நிலையில் இருக்கிறீர்கள்
இந்த அன்க்ளட்சிங் நிலையில் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் இருந்தாலும் செயலுடன் பிணைக்கப்படாமல் இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் 'கிருஷ்ண உணர்வில்' இருக்கிறீர்கள்.

எல்லாமே நீங்கள்தான்
உங்களையே அனுபவியுங்கள்
நாம், புலன்களுடனும் மனத்துடனும் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்வதால்தான் அனைத்து துக்கங்களும் வலிகளும் ஏற்படுகிறது.
நம்முள் இருக்கும் உண்மையான 'நான்' என்பது அழிவற்றது காலமற்றது, மாற்றம் இல்லாதது. இது இப்படித்தான் உள்ளது: மேகக் கூட்டங்கள் தெளிவான வானத்தில் மிதந்து செல்வதைப் பார்க்கிறீர்கள். அப்போது வானம் உண்மையிலேயே மாறிக்கொண்டே இருக்கிறதா? இல்லை!
அந்த வானம் ஒரு திரைசீலையைப் போன்றது. அதன் மேல் பல உருவங்களிலும் வடிவங்களிலும் மேகங்கள் மிதந்து, சில நேரங்களில் அதற்கு பின்னே உள்ள வானத்தை முழுவதுமாக மறைத்தும் சில நேரங்களில் கொஞ்சம் நகர்ந்து அதன் பின் உள்ள வானத்தை வெளிக்காட் டவும் செய்கின்றன.
நீங்கள் புகைவண்டியில் பயணம் செய்யும்போது, ஜன்னல் வழியாக வெளியே பார்த்திருப்பீர்கள் இல்லையா, அப்போது என்ன நடக்கிறது? வெளியே உள்ள அனைத்துப் பொருட்களும் - மரம், பாறை, கட்டிடங்கள் அனைத்தும் நகர்வது போலத் தோன்றும்.
இந்தத் தொடர்ச்சியான இயக்கம் (ஓட்டம்), நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நகர்வது போன்ற விளைவைக் கொடுக்கிறது. மாயையும் அதே போலத்தான். இந்த மாயத்தோற்றத்தினால்தான், 'நான்' என்பது உணர்ச்சிகளாலும் புலனுணர்வுகளாலும் பாதிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
தெளிவான நீல வானத்தில் மேகங்கள் நகர்ந்து செல்லும்போது, எப்படிப் பல விதமான உருவங்களையும் நிறங்களையும் உடைய மேகங்களால் அந்த வானமே மூடப்பட்டதைப் போல் தோன்றுகிறதோ, அதே போல்தான் ‘நான்’ என்ற தெளிவான வானத்தின் மேல் பலவிதமான உணர்ச்சி கள் என்ற மேகங்கள் நகர்ந்து செல்கின்றன.
> அன்க்ளட்சிங்
> செயல்முறையில்,
> நீங்கள் செயல்படுதல்,
> செயல்படாமல் இருத்தல்
> இந்த இரண்டையுமே கடந்து
> செல்கிறீர்கள்.
நீங்கள் உங்களை ஒரு தெளிந்த ஏரியில் அல்லது கண்ணாடியில் பார்க்கும்போது, அதில் உங்கள் பிரதிபிம்பத்தைத்தான் பார்ப்பீர்கள். ஏரி அல்லது கண்ணாடியின் அருகில் எது வைக்கப்படுகிறதோ அதன் பிரதிபிம்பத்தைத்தான் அதில் நீங்கள் பார்ப்பீர்கள், இல்லையா? அதே போல்தான் 'நான்' என்ற ஏரியில், 'இருப்புத் தன்மை' என்ற ஏரியில் எவ்வகையான இயல்புகள் வெளிப்படுத்தப்படுகிறதோ, அதைத்தான் அந்த ஏரியில் நீங்கள் பிரதிபலிப்பாகப் பார்ப்பீர்கள்.
அதனால், அந்த ஏரி அசுத்தம் அடைந்து விட்டது என்று அர்த்தமா? இல்லை. ஏனென்றால் அந்தப் பிரதிபலிப்புக்கு உண்மையான, திடமான இருப்பு இல்லை.
உண்மையில், 'நான்' நிரந்தரமானது. உங்களிடம் இருக்கும் 'நான்', என்னிடம் உள்ள 'நான்', உங்களுக்கு அருகில் உள்ளவரிடம் இருக்கும் 'நான்' இவையாவும் ஒன்றே. எல்லாமே நீங்களாக இருக்கும்போது அங்குப் பயப்பட என்ன இருக்கிறது? முரண்பாடு, பொறாமை, பயம் அல்லது ஆசை இவற்றைப் பற்றிய கேள்விக்கு இடம் ஏது?
எல்லாமே நீங்கள்தான். இந்த உலகின் பல்வேறு உருவங்களையும் வெளிப்பாடுகளையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். இந்த எல்லா உருவங்களையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். எப்படியானாலும் பந்தத்தின் பிணைப்பில் பிடிபடாமல் மகிழுங்கள்.
நமது புலன்கள் ஏமாற்றுபவை. அவை அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தி நம்மை அதில் மூழ்கடித்துவிடும். பொருட்களை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க அதை அனுபவிக்கும் திறன் குறைந்துவிடுகிறது. இருந்தாலும்
அனைத்து துக்கங்களும்
நாம் நம்மை
புலன்களுடனும்
மனத்துடனும்
தொடர்புபடுத்திக்
கொள்வதால்தான்
ஏற்படுகிறது.
பொருட்களைச் சேர்க்காமல் நம்மால் இருக்கமுடிவதில்லை. மேலும் மேலும் பொருட்களைச் சேர்ப்பதில்தான் நம் கவனத்தைச் செலுத்துகிறோம்.
புலன்கள் சொல்வதைக் கேட்காமல், அதன்படி நடக்காமல் இருப்பதே உண்மையான அறிவு. ஏனென்றால் புலன்கள் எப்போதும் உண்மையைச் சொல்வதில்லை.
பொருட்களை விற்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறீர்களா? உதாரணத்திற்கு ஓவியம் விற்கும் மனிதரை நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா? அந்த வியாபாரி
தமக்கு நல்ல இலாபம் கிடைக்க
வேண்டுமென்பதற்காக, மக்களை
அதை ஏற்கும்படிசெய்யும் முயற்சியில்
உத்வேகமுள்ளவராக இருப்பதை நீங்கள்
பார்க்கலாம்.
ஆனால் பாருங்கள், இந்த முழுக் காட்சி
யையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டு,
அந்த ஓவியத்தை வாங்குவதிலோ,
விற்பதிலோ ஆர்வம் இல்லாதவராக, அங்கு
நின்று கொண்டிருக்கும் யாரோ ஒருவர்தான்
ஓவியத்தை முழுமையாக மகிழ்ந்து
அனுபவிக்கமுடியும்!
எல்லாமே நீங்கள்தான்.
இந்த உலகின்
பல்வேறு உருவங்களையும்
வெளிப்பாடுகளையும்
மகிழ்ச்சியுடன்
அனுபவியுங்கள்.
இந்த உலகமே ஒரு பெரிய கவிஞரால் இயற்றப்பட்ட ஒரு கவிதைதான்; அந்தக் கவிதையில் உள்ளவை எல்லாமே முடிவில்லாத ஆனந்த வரிகள்!
வாழ்வே ஒரு கொண்டாட்டக் களம்
ஒரு చిన్న கதை:
ஒரு கலைமான் தனது குட்டியுடன், ஒரு ஏரியின் முன் நின்று கொண்டிருந்தது. அந்தக் கலைமான் அந்த ஏரியின் நீரில் தெரியும் தனது பிரதிபலிப்பைப் பார்த்து, தன் குட்டியிடம் "மகனே நாம் எவ்வளவு பலசாலிகள்! நீண்ட கொம்புகள், வலுவான கால்கள், கூர்மையான கண்கள் என இயற்கையிலேயே நமக்கு என்னவெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன என்று பார். நாம் உண்மையில் பலசாலிகள்!" என்று சொல்லிக் கொண்டிருந்தது.

இப்படி அந்த மான் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு நாய் அந்த மானின் முன் குதித்தது. அடுத்து அரைநொடியில், தன்னுடைய இயல்பான பய உணர்வால் உந்தப்பெற்று அந்த மான் தாவி ஓட ஆரம்பித்துவிட்டது.
பிறகு அந்த மான் குட்டி தன் தந்தையைப் பார்த்துக் கேட்டது, "அப்பா, நாம் ஒரு நாயைப் பார்த்து ஓடவேண்டுமானால், நாம் பலசாலியாக இருந்து என்ன பலன்,"
சோதனை மிகுந்த சூழ்நிலையை நாம்
சந்திக்கும்போது, தத்துவமாக நமக்கு
நாமே கற்றுக் கொடுத்துக் கொண்ட அந்த
ஸத்யங்களை மறந்துவிடுகிறோம்.
இந்த உலகம்
ஒரு பெரிய கவிஞரால்
இயற்றப்பட்ட
ஒரு கவிதை.
அந்தக் கவிதையில்
உள்ளவை எல்லாம்
முடிவில்லாத
ஆனந்த வரிகள்.
இப்போதும் நாம் ஸத்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அதற்கு அர்த்தம் இல்லை. அதனை அனுபவிக்க நமக்குப் போதுமான பலம் இல்லை என்று நாம் எண்ணுவதனால்தான், சோதனை மிகுந்த சூழ்நிலையில் நாம் ஸத்யத்தைக் கடைபிடிப்பதில்லை.
உயர்ந்த எண்ணங்களாலும் உயர்ந்த ஸத்யங்களாலும் நம் மனத்தை நிரப்ப வேண்டும். அதற்கு விடா முயற்சி தேவை. பிறகு அவை நமது வாழ்வில் அனுபவப்பூர்வமான உண்மைகளாக மாறும்.
சரியான நோக்கம் இல்லாவிட்டாலும் நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடையலாம் ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகும்.
ஆனால் உங்களுக்குச் சரியான நோக்கம் இருந்தால், நீங்கள் ஸத்யத்தை மிக விரைவில் அடைவீர்கள்.
ஸத்யத்தை உணர்ந்தவர்களின் உதவியை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, அவர்கள் பரிந்துரைக்கும் உத்திகளை சோதனை செய்வதுதான் மிகவும் புத்திசாலித்தனம்.
"நாம் பலவீனமானவர்கள், பாவிகள்," என்று கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் வேத கால ஞானிகள் மீண்டும் மீண்டும் "நாம் அழியாத் தன்மையின் குழந்தைகள்," என்று அறிவித்தார்கள்.
இடைவிடாது எதிர்மறையான, தோல்வி எண்ணங்களை நமக்கு நாமே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதை விட, நேர்மறையான, உறுதியான எண்ணங்களை வரவேற்போம். நேர்மறை எண்ணங்கள் வெறும் அறிக்கைகள் இல்லை. இந்த உயர்ந்த ஸத்யங்கள் நமது ஞானிகளால் உணரப்பட்டது. அவர்கள் அதை நமக்கு அறிவித்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அவற்றைச் சோதித்துப் பார்க்கவும் அனுபவிக்கவும் அவர்கள் நம்மை உற்சாகப்படுத்துகிறார்கள்.
அவை, ஏதோ ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட வெறும் வார்த்தைகள் அல்ல. அவற்றுடன் சக்தியும் அனுபவத்தின் திறனும் கூடவே வருகிறது; அது நம் ஒவ்வொருவருக்குமே சாத்தியமான ஒன்றுதான்.
நாம் ஆனந்தமாக இருக்கும்போதும் நம்முள் நாம் மையம் கொண்டிருக்கும்போதும் அமைதியைக் குலைக்கும் எதையும் நாம் வெளியில் பார்ப்பதில்லை. ஆனால் வயது வந்தவர்கள் பந்தங்களிலும் ஆசைகளிலும் கட்டுண்டு இருப்பதினால் விஷயங்களை வேறு கோண த்தில் பார்க்கிறார்கள்.
அதைத்தான் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார். தன்னிச்சையாகவும் உங்களுக்குள் முழுத் திருப்தியுடனும் பற்றண்ணாமலும் செயலில் முழுமையாக ஈடுபடுங்கள். பிறகு நீங்கள் அழகாகச் செயல் புரியமுடியும். தன்னிச்சையாக எல்லாவற்றையும் கடந்த இறுதி சக்தியாகிய பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு ஒருங்கிணைந்து பாய முடியும். பிறகு வாழ்வே ஒரு கொண்டாட்டமாகிவிடும்.
நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு மகிழ்ச்சிகரமான செயலாக, நம்முள் இருக்கும் அன்பின் வெளிப்பாடாகவே இருக்கும்.

உங்களின் மகிழ்ச்சி, உங்களையும் உங்கள்
செயலைப் பற்றியும் சமுதாயம் சொல்வதை
அல்லது நினைப்பதைப் பொறுத்து
இனிமேல் இருக்காது. ஏனென்றால்
நீங்கள் முழுமையாக உங்களுக்குள் மையம்
கொண்டு இருக்கிறீர்கள்.
உயர்ந்த
எண்ணங்களாலும்
உயர்ந்த ஸத்யங்களாலும்
நம் மனத்தை
நிரப்ப வேண்டும்.
அதற்கு
விடாமுயற்சி தேவை.
உங்களைப் பற்றி உங்களுக்குே தெரியவில்லை
நாம் எதைச் செய்தாலும் எதை நினைத்தாலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் நமது உள் மனத்திலிருந்து சில நுட்பமான வழிகளில் எதிர்பார்க்கிறோம். நாம் அனைவரிடமும் நற்பெயரைச் சம்பாதிப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறோம்.
இதனை நீங்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால், நீங்கள், உங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் பாராட்டுதல்களும் அங்கீகாரமும் இல்லாமல் அமைதி அடைவதில்லை.
சமுதாயத்தில் ஒரு பெயர் வாங்குவதற்காக, உங்கள் மதிப்பு தொடர வேண்டுமென்பதற்காக, ஒரு நாளில் நீங்கள் எத்தனை செயல்களைச் செய்ய வேண்டி இருக்கிறது என்று உட்கார்ந்து குறிப்பெடுத்தீர்கள் என்றால், நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் உணருவீர்கள்.
இது ஒரு கையெழுத்து வேட்டையைப் போன்றது! நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இதில்தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது எல்லாச் செயல்களும் எல்லா முயற்சிகளும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் கையெழுத்தைப் பெறுவதற்காகவே அமைகிறது.
ஒரு பெரிய பதிவேட்டில் 'நல்ல தந்தை' என்று ஒரு பத்தியை (Column) உருவாக்கிக்கொண்டு, அதன் கீழ் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எழுதி வைத்துக்கொண்டு, அவர்கள் அதில் அங்கீகாரக் கையெழுத்துப் போடவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
வேத கால ஞானிகள்,
'நாம் அழியாத் தன்மையின்
குழந்தைகள்' என்று
மீண்டும் மீண்டும்
அறிவித்தார்கள்.
பிறகு உங்கள் மனைவியிடமும் மேலதிகாரியிடமும் நண்பர்களிடமும் செல்கிறீர்கள். 'நல்ல கணவன்', 'நல்ல ஊழியர்', 'நல்ல நண்பன்' என்றெல்லாம் பொருத்தமான தலைப்புகளிட்டு, அவர்கள் எதிர்பார்க்கும் செயல்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டு, அவர்களது கையெழுத்திற்காகக் காத்திருக்கிறீர்கள்.
அதேபோல் மற்ற அனைவரும்
உங்களுக்கென்று அவர்கள் உருவாக்கி
வைத்திருக்கும் பத்தியின் கீழ் உங்களைக்
கையெழுத்து இடும்படிக் கேட்டு, உங்கள்
கையெழுத்திற்காக உங்களிடம் வருகிறார்கள்!
நம்மைப் பற்றிய மற்றவர்களின்
அபிப்பிராயத்திற்காக நாம் ஏன் இத்தனை
கஷ்டப்பட வேண்டும்?
மற்றவர்களிடமிருந்து சக்தியைப்
பெறுவதற்காக நாம் ஏன் எல்லா நேரங்களிலும்
முயற்சி செய்கிறோம்?
தன்னிச்சையாகவும்
முழுத் திருப்தியுடனும்
பற்றில்லாமலும்
செயலில்
முழுமையாக ஈடுபடுங்கள்.
பிறகு நீங்கள்
அழகாகச்
செயல் புரியமுடியும்.
இவற்றிற்கெல்லாம் காரணம் நம்மைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாததே! மற்றவர்களின் அபிப்பிராயங்களின் மூலம்தான் நாம் நம்மைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம்.
இரண்டாவது, மற்றவர்கள் நமக்கு அங்கீகாரத்தையும் கவனத்தையும் தரும்போது, உண்மையில் அவர்கள் நமக்குச் சக்தியைத் தருகிறார்கள். அங்கீகாரமும் கவனமும்தான் நமக்குச் சக்தியாக இருக்கிறது!
தெளிவாக இருங்கள், இவ்வாறு வெளியிலிருந்து வரும் சக்தியைச் சார்ந்து நீங்கள் இருக்கிறீர்கள் என்றாலே, நீங்கள் உளவியல் ரீதியான குறைபாட்டுடன் இருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.
உங்களுக்கு உடல் ரீதியான உதவி தேவை என்றால், நீங்கள் உடல் ரீதியான குறைபாடுள்ளவர்கள். உங்களுக்கு உளவியல் ரீதியான உதவி தேவை என்றால், நீங்கள் மனக்குறைபாடுள்ளவர், அவ்வளவுதான்!
உடல் குறைபாடுள்ள பட்சத்தில், உங்களுக்கு நீங்கள் ஒரு உடல் ரீதியான குறைபாடுள்ளவர் என்பது தெரியும். ஏனென்றால் நீங்கள் அதைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
ஆனால் மனக்குறைபாடுள்ள பட்சத்தில், நீங்கள் மனக்குறைபாடுள்ளவர் என்பது கூட உங்களுக்குத் தெரியாது.
நீங்கள் குழந்தைகள் விளையாடும்போது, சீட்டுக் கட்டுகளை வைத்து கோட்டைகள் கட்டி விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சீட்டு களை ஒரு மாதிரியான கோணத்தில் வைத்து, ஒருவிதமான அமைப்பில் பல அடுக்குகளை அமைத்து ஒரு பிரமிடு வடிவத்தில் அதைக் கட்டுவார்கள்.
அவர்கள் அந்தப் பிரமிடை சந்தோஷமாகக் கட்டி, பிறகு அதே சந்தோஷத்துடன் அதிலிருந்து ஒரு சீட்டை உருவி, அந்தக் கோட்டை முழுவதும் தகர்வதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் கட்டுவதில் எவ்வளவு சந்தோஷம் கொள்கின்றார்களோ, அதே போல் அந்தக் கோட்டை தகர்வதைப் பார்த்தும் சந்தோஷம்கொள்கிறார்கள்.
அதுபோல்தான் நம்மைப் பற்றிய மற்றவர்களின் அபிப்ராயத்திலிருந்து, நம்மைப் பற்றி நாமே உருவாக்கிக் கொண்ட சுய-கருத்துருவப் படிவங்களான கோட்டையைக் கட்டுகிறோம்.
நீங்கள் வெளியிலிருந்து வரும் சக்தியைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்றாலே, நீங்கள் உளவியல் ரீதியான குறைபாட்டுடன் இருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.
இந்த நற்சான்றிதழ்கள், கையெழுத்துகளைக் கொண்டு, நாம் சுய-கருத்துருவம் என்னும் கோட்டையைக் கட்டி இருக்கிறோம்.
யாராவது ஒருவர் தனது நற்சான்றிதழைத் திரும்ப பெற்றுக்கொள்ளும்வரை அந்தக் கோட்டை மிகவும் அழகாக உள்ளது. திரும்பப் பெற்றுக் கொண்ட பிறகு என்ன நடக்கிறது? அந்தக்கோட்டை தகர்கிறது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? குழந்தைகள் தங்கள் கோட்டை தகரும்போது சந்தோஷப்படுவது போல் சந்தோஷப்படாமல் துக்கம் அடைகிறோம்.
குழந்தைகளாவது கோட்டையை அவர்கள் சொந்த சீட்டுக்கட்டில் கட்டுகிறார்கள். ஆனால் நாமோ, நமது கோட்டையை மற்றவர்களின் சீட்டு க்களையும் சான்றிதழ்களையும் வைத்துக் கட்டுகிறோம்.
அதனால் நாம் என்ன செய்வோம்? நமது கோட்டையைப் பாதுகாக்க மிகவும் கடுமையாக உழைக்கிறோம். மக்கள் தங்கள் கையெழுத்தையும் சான்றிதழ்களையும் திரும்ப எடுத்துக்கொள்ளாத வகையில் நடந்துகொள்ளத் தொடங்குகிறோம். அப்போதுதான் மக்கள் நம்மைப் பற்றி நல்ல விதமாக நினைப்பார்கள் என்று எண்ணுகிறோம். இப்படித்தான் நாம் மற்றவர்களுக்கு அடிமைகளாகிறோம்.
உங்களுக்கு உங்களைப் பற்றி தெரியாததால், அதற்கான விடைக்காக நீங்கள் சமுதாயத்தை நோக்கித் திரும்புகிறீர்கள். சமுதாயமும் மிகவும் சந்தோஷத்துடன் அதன் அடையாளச் சீட்டை உங்கள் மேல் குத்துகிறது. "நீ அழகாக இருக்கிறாய், நீ தோல்வியுடையவன்," என்று இதைப் போன்று பல விமர்சனங்கள் செய்கிறது. இது, சரியாக விலாசம் எழுதப்படாத 'பார்சல்' இடத்திற்கு இடம் மாற்றி மாற்றி அனுப்பப்படுவதைப் போன்றது.
நாம் சுற்றி அலைந்து, சமுதாயம் நமக்குக் கொடுக்கும் அடையாளச் சீட்டை பெறுகிறோம்.
நாம் நமது உண்மை இயல்பை மறந்துவிடுகிறோம். உண்மை என்னவென்றால், நாம் அந்த அடையாளச் சீட்டு இல்லை. அந்தப் பார்சலின் உள்ளே இருக்கும் பொருள்தான் நாம்.
> குழந்தைகளாவது
> கோட்டையை
> அவர்களின்
> சொந்த சீட்டுக்கட்டில்
> கட்டுகிறார்கள்.
> ஆனால் நாமோ,
> நமது கோட்டையை
> மற்றவர்களின்
> சான்றிதழ்களை வைத்துக்
> கட்டுகிறோம்.
இதைப் பற்றி ஞானி அஷ்டவக்ரர், நம் மனம் எதற்காகவாவது ஏங்கும்போது, எதைப் பற்றியாவது வருத்தப்படும்போது, எதையாவது மறுக்கும்போது, எதையாவது பற்றிக்கொள்ளும்போது, எதைப்பற்றியாவது சந்தோஷப்படும்போது, எதைப்பற்றியாவது வருத்தப்படும்போது, பந்தம் ஏற்படுகிறது.
மனம் எதற்காகவும் ஏங்காதபோது, எதற்காகவும் வருந்தாதபோது, எதையுமே மறுக்காதபோது, எதையாவது பற்றிக்கொள்ளாதபோது, எதைப் பற்றியாவது சந்தோஷப்படாதபோது, எதைப்பற்றியாவது கவலைப்படாதபோது, சுதந்திரம் பெறுகிறோம்.
மனம் ஏதாவது புலனில் சிக்கிக்கொள்ளும்போது, பந்தம் ஏற்படுகிறது.
மனம் எந்தப் புலனிலும் சிக்காதபோது விடுதலை ஏற்படுகிறது.
'எனது' இல்லாதபோது, அங்கு விடுதலை ஏற்படுகிறது; 'எனது' உள்ளபோது, அங்கு பந்தம் இருக்கிறது. இதைக் கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள். எதையும் பற்றிக்கொள்ளாதீர்கள், எதையும் மறுக்காதீர்கள்," என்று அழகாகச் சொல்கிறார்.
கடந்தகாலத்தோடும் எதிர்காலத்தோடும் தொடர்புகொள்வதை நிறுத்துங்கள்
கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நாங்கள் ஏற்றுக் கொண்டாலும் பின்பற்றுவது கடினமாக இருக்கிறது. உதாரணமாக, எனக்கு இப்போது காயம் ஏற்பட்டு, அதனால் வலியை உணர்கிறேனென்றால், இந்த நிகழ்காலக் கணத்தில் அது எனக்கு உண்மையானதுதான். கடந்தகால அனுபவங்களோடு அதனைத் தொடர்பு படுத்த வேண்டியது இல்லை. அதனால் வலியின் தொடர்பிலிருந்து எப்படி நான் வெளிவருவேன்’?
நிகழ்கால வலியை, இங்கு, இப்போது ஏற்பட்ட வலியாகக் கருதுங்கள். கடந்தகால வலியோடு அதனைத் தொடர்பு படுத்தாதீர்கள். அன்று ஏற்பட்ட துக்கத்தோடு தொடர்பு படுத்தாதீர்கள். நிகழ்கால வலியுடன் அதற்கு எந்தத் தொடர்பும் கிடையாது.
இன்றைய இயற்பியல் கொள்கையாளர்கள் (Quantum physics), “காலத்தாலும் இடத்தாலும் பிரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை நடப்பு நிகழ்ச்சியோடு ஒன்று சேர்த்து, எல்லா நிகழ்ச்சிகளையும் சேர்த்து குழப்பிக்கொள்கிறோம்,” என்று சொல்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தனித்தனி நிகழ்ச்சிகள். அவை வரிசை முறைப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் எப்படியோ தர்க்க ரீதியான தொடர்பை உங்கள் மனத்தில் ஏற்படுத்துகின்றன.
நீங்கள் வலியை உணரும்போது,ாதாரணமாக அந்த வலி உங்களை

விட்டுப்போக வேண்டுமென்று விரும்புகிறீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் “எனக்கு இந்த வலி வேண்டாம்,” என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது பலன் தராது.
ஏனென்றால் உங்கள் மனம் ‘வலி’ என்ற வார்த்தையில் சிக்கிக் கொண்டு உள்ளது. மனம் அதை விடுவதில்லை. அதனால்தான் வலியும் போவதில்லை.
வலி நீங்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், உங்கள் மனத்தை உடல் நலத்தைப் பற்றிய எண்ணங்களில் ஒருநிலைப்படுத்த வேண்டும். ‘வலி’ என்ற வார்த்தையுடன் உங்கள் அனுபவத்தைத் தொடர்பு படுத்தாதீர்கள். ஏனென்றால் அந்த வார்த்தைக்கு எதிர்மறை குறிப்புதான் உங்கள் மனத்தில் இருக்கிறது. அதற்குப் பதிலாக உடல் ஆரோக்கியத்தை நினையுங்கள்.
மனம் எதற்காகவும்
ஏங்காதபோதும்
எதையுமே
மறுக்காதபோதும்
எதையாவது
பற்றிக்கொள்ளாதபோதும்
சுதந்திரம்
பெறுகிறோம்.
இன்னும் சொல்லப்போனால், உங்கள் முழுக் கவனத்தையும் வலியின் மேல் செலுத்துங்கள். ஆழ்ந்து வலியைப் பாருங்கள். ஆனால் ‘வலி’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமலும் ‘வலி’ என்றாலே துக்கம்தான் என்று நினைத்து, வலியோடு துக்கத்தைத் தொடர்புபடுத்தி இணைக்காமலும் இருக்க வேண்டும். இவ்வாறு, மொத்தக் கவனத்தையும் ‘வலி’ உள்ள இடத்தில் செலுத்தும்போது, முதலில் வலி அதிகரிப்பது போல் தோன்றும். ஆனால் அது சிறிது நேரத்திற்குள் மறைந்து போகும்.
அடுத்த முறை உங்களுக்கு வலி இருக்கும்போது, இந்தத் தியான நுட்பத்தை முயற்சிசெய்து பாருங்கள்.
உங்கள் உடல் - மன அமைப்புக்கு நீங்கள் சரியான கவனம் செலுத்தாததனால்தான் வலி ஏற்படுகிறது.
உங்களுடைய உடல் - மன அமைப்பு, “தனக்குக் கவனம் தேவை,” என்று உங்களிடம் சொல்கிறது. கவனம் செலுத்துங்கள்.

நெருக்கமான உணர்வுடன் கவனம் செலுத்துங்கள்.
அது நலமாக உணரும். வலி மறைந்துவிடும்.
மற்றொரு விஷயம் வலியும் துன்பமும்
வேறு வேறு விஷயங்கள். வலி, உங்கள்
உடலைப் பாதிக்கும்; துன்பம், உங்கள்
மனத்தைப் பாதிக்கும்.
உங்கள் உடலில் வலி இருந்தாலும் மனத்தில் துக்கமில்லாமல் இருக்க முடியும்! உடல் வலியைத் தவிர்க்க முடியாது. ஆனால் துக்கம் உங்களுடைய சொந்த படைப்பு.
நீங்கள் அன்கிளட்ச் செய்யும்போது, அதாவது கடந்தகாலத்தோடும் எதிர்காலத்தோடும் தொடர்புகொள்வதை நிறுத்தும்போது, நம் துக்கம் மறைந்துவிடுகிறது; ஒவ்வொரு அனுபவமும் கடந்தகாலத்தோடும் எதிர்காலத்தோடும் தொடர்புபடுத்தப்படாமல் தனித் தனியாகப் பார்க்கப்படுகிறது. இதைச் செய்வது அவ்வளவு கடினம் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்களுக்குக் கொஞ்சம் பயிற்சி தேவை, அவ்வளவுதான்.

வெற்றியிலும் தோல்வியிலும் சம நிலையோடு இருத்தல்

யார் ஒருவர், பலனை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்கிறாரோ, தம் மனத்தினை விழிப்புணர்வுடன் கட்டுப்படுத்தி, தனது உடைமைகள் மற்றும் உடல் மீதமுள்ள உடைமை உணர்வை உதறித் தள்ளி விட்டு, செயலை மட்டும் செய்கிறாரோ, அவர் பாவத்திற்கு ஆளாவதில்லை.
யார் ஒருவர் தற்செயலாகவும் தானாகவும் கிடைத்தவற்றைக் கொண்டு திருப்தி அடைபவராகவும் இருமையைக் கடந்தவராகவும் பொறாமையிலிருந்து விடுபட்டவராகவும் வெற்றியிலும் தோல்வியிலும் சம நிலையோடு இருப்பவராகவும் இருக்கிறாரோ, அவர் செயலாற்றிக் கொண்டிருந்தாலும் கூட, அதனால் அவர் கட்டுப்பட மாட்டார்.
யார் ஒருவர் பொருள் சார்ந்த உலகியல் செயல்களில் பற்று வைக்காமல், அவற்றிலிருந்து விடுபட்டு, பரமாத்ம ஞானத்தில் மனத்தை நிலைநிறுத்தி, யாகத்திற்காகவே கர்மங்களைச்

செய்கிறாரோ, அவருடைய கர்மங்கள் அனைத்தும் கரைந்து போய்விடுகின்றன.
4.24 ப்ரஹ்மமாகிய அக்னியில், ப்ரஹ்மமயான திரவியங்களும் நெய்யும் ப்ரஹ்மத்தினாலேயே ப்ரஹ்மத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. யார் ஒருவர் தம்மை முழுவதுமாகச் செயலில் ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவரால் நிச்சயமாக ப்ரஹ்மத்தை அடைந்து விட முடியும்.
4.25 சில யோகிகள் கடவுளை பல்வேறு வகையான யாகங்களைச் செய்து வழிபடுகிறார்கள். வேறு சிலர் ப்ரஹ்மமாகிய அக்னியில் யாகங்களையே அர்ப்பணம் செய்து வழிபடுகிறார்கள்.

மூச்சுக்காற்றுகூட உங்களுக்குச் சொந்தம் கிடையாது
உடைமைகளைச் சொந்தம் கொண்டாடுவதும் உடலைச் சொந்தம் கொண்டாடுவதும் ஒன்றே.
உங்களுடைய உடைமைகள் என்று எதைச் சொல்லமுடியும்? நீங்கள் ஒன்றும் இல்லாமல்தான் இந்த உலகிற்கு வந்தீர்கள்.
"நான் இந்த இந்தப் பொருட்களுடன் பிறந்தேன். அதனால் இவையெல்லாம் என்னுடைய சொந்த பொருட்கள்," என்று எதையாவது நீங்கள் சொல்ல முடியுமா? அதே போல் நீங்கள் இந்த உலகை விட்டுப் போகும்போதும் வெறும் கையடன்தான் போகப் போகிறீர்கள்.
நீங்கள் இறக்கும்போது உங்களுடைய உடைமைகள், செல்வம், சுகபோகம் இவை அனைத்தும் உங்களுடன் வரும் என்று யாராவது சொல்ல முடியுமா? இல்லை!
மக்கள் "ஸ்வாமிஜி, நீங்கள் ஏன் ஷெர்வாணியை உடுத்துகிறீர்கள்? நகை அணிகிறீர்கள்?" என்று கேட்கிறார்கள்.
சாதாரணமாக நான் காவி உடையையும் ருத்ராக்ஷ கொட்டைகளையும்தான் அணிகிறேன். ஆனால் நான் சில சொற்பொழிவுகளுக்குப் போகும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு ஷெர்வாணி அணிகிறேன்.
அப்போது அவர்களிடம் "இந்த உடலே
எனக்கு ஒரு மறைப்பு, ஒரு துணியைப்
போல! அப்படி இருக்க இந்த இரண்டாவது
மறைப்பாகிய துணி ஒரு பெரிய விஷயம்
இல்லை," என்று நான் சொல்வதுண்டு.
உங்களுடைய வாழ்வே,
பிரபஞ்ச
இருப்பு நிலையிலிருந்து
கிடைத்த
ஒரு மிகப்பெரிய
நன்கொடைதான்.
இந்த ப்ராணன், மூச்சுக்காற்றின் மூலம்
உள்ளே செல்லும் இந்த உயிர்ச்சக்தி
உங்களுடைய சொத்து அல்ல. அது பிரபஞ்ச
இருப்புத் தன்மையின் சொத்து.
உங்களுடைய வாழ்வே, பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து கிடைத்த ஒரு மிகப்பெரிய நன்கொடை. இதை நீங்கள் உணர்ந்தவுடன், இந்தக் கோபங்கள், கவலைகள், ஆசைகள் இவை எல்லாம் அர்த்தமற்றவை என்பதை உணர்வீர்கள்.
உங்களுடையது என்று நினைத்து எதன் பின்னோ நீங்கள் ஓடுகிறீர்கள். ஆனால் உண்மையில் உங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
உங்களுடைய வாழ்வே ஒரு நன்கொடைதான் என்று இருக்கும்போது, மற்றவற்றை உங்களுடைய உடைமை என்று எப்படி உரிமை கொண்டாட முடியும்?
உங்கள் எண்ணம் பிரபஞ்சத்தையே மாற்றிவிடும்
மேலும் ஒரு விஷயம்...
உண்மையான அறிவு, அனுபவத்தின் மூலம்தான் வருகிறது. வார்த்தைகள் மூலமோ, அதைப்பற்றிப் பேசுவது மூலமோ வருவதில்லை.
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்:
ஸத்யத்தின் ஒரே ஒரு பகுதியை மட்டுமே கூட நீங்கள் உள்வாங்கிய அந்தக் கணமே அல்லது எந்த வகையிலாவது ஸத்யத்தின் ஏதாவது ஒரு பரிமாண த்தை உள்வாங்கிய அந்தக் கணமே உங்களுக்குள் பல அதிசயங்கள் நிகழும். அதாவது ஸத்யத்தின் ஒரே ஒரு கருத்தை மட்டுமே கூட நேர்மையாகவும் உண்மையாகவும் உள்வாங்கிணீர்கள் என்றாலே போதுமானது; அது பல அதிசயங்களை நிகழ்த்தும்.
"இந்த உலகில் உள்ள எல்லா நூலகங்களில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் நீங்கள் மனப்பாடம் செய்தாலும், அது, 'இந்த உலகிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் நான் படித்துள்ளேன்' என்ற உங்களது அகங்காரத்தை அதிகரிக்க உதவுமே தவிர, வேறு எந்த வகையிலும் உங்களுக்கு உதவாது.
முழு நூலகத்தையும் உங்கள் தலையில் வைத்துக்கொள்வதற்குப் பதிலாக ஐந்து கருத்துகளை உங்கள் இதயத்தில் உணருங்கள்,” என்று விவேகானந்தர் அழகாகச் சொல்கிறார்.
ஒரே ஒரு கருத்தை உள்வாங்கி அதை உங்கள் இருப்புத் தன்மையில் கிரஹித்துக்கொள்ள முயற்சிசெய்து, அதை உங்கள் வாழ்வின் அனுபவமாக்குங்கள்.
உங்கள் வாழ்வே இந்த ஒரு கருத்தினால் உணர்வுரூமாற்றம் அடையும். வெறும் இந்த ஒரு கருத்தே போதுமானது.
தென் இந்தியாவில், தமிழ்நாட்டில், ஒரு புத்தகத்தில் 63 ஞானமடைந்த நாயன்மார்கள் வாழ்க்கையை மிக அழகாக விவரித்து இருக்கிறார்கள்.
பெரியபுராணம் என்பது அந்தப் புத்தகத்தின் பெயர்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்த குருமார்களின் வாழ்க்கையை நீங்கள் படித்தீர்கள் என்றால், உண்மையில் சில குருமார்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
அவர்கள் பூக்களைப் பறித்து, அதைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார்கள். அவ்வளவுதான். அதனால் அவர்கள் ஞானமடைந்தார்கள்.
'நீங்கள் என்ன செய்கிறீர்கள்' என்பது முக்கியம் இல்லை; 'எவ்வளவு நேர்மையாகச் செய்கிறீர்கள்' என்பதுதான் முக்கியம். பூக்களை அர்ப்பணிக்கும் செயலை செய்யும்போது, அந்தச் செயலில் அவர்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தார்கள்.
உடனே நீங்கள், "நாங்களும்தான் தினமும் பூக்களை அர்ப்பணிக்கிறோம். மற்ற இயன்ற செயல்களைச் செய்கிறோம். ஆனால் நாங்கள் ஞானமடையவில்லை; தோட்டத்தைப் பராமரிக்கும் செலவு அல்லது பூக்களை வாங்கும் செலவு என பணம் விரயமாவதாகுதான் நடக்கிறது," என்று சொல்லலாம்.
இங்குப் பிரச்சினை என்னவென்றால், நாம் நேர்மையாக நடந்துகொள்வதில்லை.
உங்கள் வாழ்வு உணர்வுமாற்றம் அடைய, வெறும் ஒரு கருத்தே போதுமானது.
நாயன்மார்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க பூக்களைப் பறிக்கும்போது, அவர்கள் யாருக்குப் பூக்களை அர்ப்பணிக்கப் போகின்றார்களோ அவரையே நினைத்தார்கள்.
இந்த குருமார்கள் முழுமையாகக் கடவுளைப் பற்றிய எண்ணத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். அவர்களின் எண்ணங்களைத் திசை திருப்ப வேறு ஏதும் இல்லை.
நமக்கு மிகவும் பிடித்த கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்காகவே இருந்தாலும், நாம் பூக்களைப் பறிக்கும்போது, நாம் வேறு எதையோ, வேறு யாரைப் பற்றியோ நினைத்துக் கொண்டு இருக்கிறோம். தினந்தோறும் ஒரு நாள் கூட விடாமல் சடங்குகளைச் செய்யும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் சடங்குகளைச் செய்யும்போது, வேறு எதையோ நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.
அவர்களுடைய எண்ணங்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாமம் இவற்றில் உள்ள ஆயிரம் கடவுளின் நாமங்களை அவர்கள் வழக்கமாகச் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஜெபிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, அவர்கள் இதுவரை எத்தனை நாமங்களைச் சொல்லி முடித்திருக்கிறோம் என்று நாமங்களின் எண்ணிக்கையைப் பார்ப்பார்கள். இதுவரை எவ்வளவு படித்திருக்கிறோம், இன்னும் படிக்க எவ்வளவு உள்ளது என்பதை அறிய மிகவும் ஆவலாக இருப்பார்கள்.
ஒரு செயலின் பின்னே உள்ள மனப்போக்கு, நோக்கம் எண்ணங்கள் இவைதான் அந்த செயலின் பின்னே உள்ள சக்தியை நிர்ணயிக்கின்றன. எண்ணங்களின் ஆற்றல் அளவிடமுடியாதது.
‘தொடர்ந்து வார்த்தைகளைச் சொல்லுவதாலும் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதாலும் நமது மரபணுக்களை (DNA) மாற்றி அமைக்கவும் அதன்படி இயக்கவும் முடியும்’ என நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

நன்றாக ஆராய்ந்தபின் கண்டறியப்பட்ட உண்மையென்னவென்றால், பெரும்பாலான மக்கள் கிறிஸ்துமஸ் சமயத்திலோ அல்லது உலகக் கோப்பை கால் பந்தாட்ட சமயத்திலோ, அவர்களுடைய எண்ணங்களை ஒரே மாதிரியான ஏதோ ஒன்றின் மேல் ஒருங்கிணைக்கும்போது, கணினியில் உள்ள தொடர்பற்ற எண்களை உருவாக்கும் ஜெனே ரட்டர் கூட (Random number Generator), ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட முறையில் எண்களை வழங்க ஆரம்பித்துவிடுகிறது.
இயற்கைச் சீற்றங்கள் என்று சொல்லப்படுவன யாவையும் உலகிலுள்ள கூட்டு எதிர்மறை எண்ணங்களின் (Collective Negativity) விளைவே அன்றி வேறு ஏதும் இல்லை. உங்களுடைய எண்ணங்களும் ஆற்றலும் நேரடியாகவே உங்கள் உடல், உங்கள் செல் அமைப்பு, உங்களுடைய தீர்மானங்கள், அவற்றை நிறைவேற்றும் திறன், வெளி உலக நிகழ்வுகள், விபத்துகள் இவற்றை தீர்மானிக்கக் கூடியனவாக இருக்கின்றன. அதே மாதிரியான நிகழ்வுகளை உருவாக்கவும் ஈர்க்கவும் கூடிய மன அமைப்பை நீங்கள் உருவாக்குகிறீர்கள்.
ஆசை, அச்சம் அடிப்படையில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் மன அமைப்பை, ஆனந்தத்தின் அடிப்படையில் இயங்கும் மன அமைப்பாக மாற்ற முடிந்தால், அந்தக் கணமே உங்களுக்குள் சக்தி பொங்க ஆரம்பித்துவிடும். அப்போது உங்களுடைய எண்ணங்கள் மிகத் தெளிவாகவும் அநேகமாக நிகழ்காலத்திலும் இருக்கும்.
உங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளி குறைந்துவிடும்
நீங்கள் இதனைச் செய்யும்போது, வெளி உலக நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஏனென்றால் உங்களுக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் சக்தி நிலையில் மிக ஆழ்ந்த பிணைப்பு உள்ளது.
நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போதும் உங்களுடைய மனஅமைப்பு கவலை, அச்சம், ஆசை இவற்றுடன் இல்லாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடனும் இருக்கும்போதும் நீங்கள் தானாகவே எல்லா நல்லவற்றையும் உங்களிடம் ஈர்ப்பீர்கள்.
> நம் அனைவருடைய மனங்களும் அந்தப்பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரிக்கப்பட்ட தனித்தனி பாகங்கள்தான்.
மேலும் ஒரு விஷயம்; நம் அனைவருடைய மனங்களும் அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரிக்கப்பட்ட தனித்தனி பாகங்கள்தான்.
அவை யாவையும் ஒன்றே. நம்முடைய மனங்கள் யாவையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது மட்டுமல்லாமல், நேரடியாகவே அவை ஒன்றை மற்றொன்று பாதிக்கக் கூடியதாகவே இருக்கின்றன.
இதெத்தான் நாம் 'கூட்டு விழிப்புணர்வு' என்று அழைக்கிறோம்.
ஒவ்வொருவரும் விழிப்புணர்வில் தனித்தனியாக இருந்தாலும், ஒருவர் அவருடைய உண்மையான இயல்பில் விழிப்புடன் இருக்கும்போது, தாம் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் என்பதை உணர்கிறார்.
ஒவ்வொருடைய எண்ணங்களும் சுற்றியுள்ள மற்றவர்களையும் பாதிக்கக்கூடியனவாக இருக்கின்றன. ஜலதோஷத்தை விடவும் உங்களுடைய எண்ணங்கள் அதீத நோய்த் தொற்றுடையது. உங்களுக்கு யார் மூலமாவது ஜலதோஷம் பிடித்தால், உடல் ரீதியாக ஒரு சில தினங்களே வருந்துவீர்கள், பிறகு சரியாகிவிடும். ஆனால் மற்றவர்களிடமிருந்து எண்ணங்களை நீங்கள் பிடித்தால், மன ரீதியாக அப்போது துன்புறுவது மட்டும் அல்லாமல், எப்போதும் துக்கப்படுவீர்கள்.
உங்களைச் சுற்றி வாழ்பவர்கள் மட்டும் உங்கள் எண்ணங்களால் தொடப்படுவதில்லை, இந்தப் பூமியில் வாழ்பவர்கள் எல்லோருமே உங்கள் எண்ணங்களால் தொடப்படுகிறார்கள்.
அடுத்த ஸத்யம்: நீங்கள் மன ரீதியாக மட்டுமல்லாமல், ஆழ்ந்த விழிப்புணர்வு நிலையிலும் நீங்கள் மற்ற எல்லா உயிரினங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
உங்கள் உடல் வெறுமனே ஒரு உடல் இல்லை. உண்மையில் அங்கு ஏழு அடுக்குகளாக அதாவது ஏழு உடல்கள் இருக்கின்றன.
முதல் அடுக்கு நமது ஸ்தூல சரீரம் இரண்டாவது ப்ராண சரீரம். இவ்வாறு ஏழு உடல்கள் இருக்கின்றன. ஒரு பொது மையத்தைச் சுற்றியுள்ள வட்டங்கள் மூலம், இந்த ஏழு உடல்களை (ஆற்றல் அடுக்குகளை) உருவப்படுத்தலாம்.
ஸ்தூல சரீரம் முதல் வெளிவட்டமாகவும் ஏழாவது அடுக்காக உள்வட்டத் தில் நிர்வாண சரீரமும் இருக்கின்றன.
ஏழு சரீரங்களின் படம்

நித்யானந்த ஸ்புரண நிகழ்ச்சியில், (NSP) நமது இரண்டாவது நிலை தியான நிகழ்ச்சியில் (ஏழு அடுக்குகள்) ஏழு உடல்களைப் பற்றி விரிவாக நாம் பார்க்கலாம்.
நீங்கள், கடவுள், நான், இந்த மூன்றையும் வெளி வட்டமாக உள்ள ஸ்தூல சரீர வட்டத்தில் மூன்று வெவ்வேறு புள்ளிகளாகக் குறிக்கலாம்.
ஸ்தூல சரீர நிலையில், இந்தப் புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகமாக உள்ளது. நீங்கள் சிறிது உள்ளே ப்ராண சரீரத்திற்கு வந்தால் இந்தத் தூரம் சிறிது குறைகிறது. நீங்கள் இன்னும் சற்று ஆழமாக, மன சரீரத்திற்கு வந்தால் உங்களுக்கும் எனக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளி மேலும் குறைகிறது.
> உங்களுடைய
> எண்ணங்களால்
> உங்களைச் சுற்றி
> வாழ்பவர்கள் மட்டுமல்ல,
> இந்தப்ப பூமியில்
> வாழ்பவர்கள் எல்லோருமே
> தொடப்படுகிறார்கள்.
நீங்கள் இன்னும் ஆழமாகச் செல்லச் செல்ல, இறுதியில் உள் அடுக்காகிய நிர்வாண சரீரத்தில் இந்த மூன்றும் ஒன்றாகக் கரையும்.
தயவுசெய்து மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உள் அடுக்காகிய நிர்வாண சரீரத்தில், இந்தக் கடவுள், நீங்கள், நான் அனைத்தும் ஒன்றே. இவை மூன்றுக்கும் இடையே இடைவெளி இல்லை.
திரண்ட விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நீங்கள் என்பதை அறிந்து கொண்டீர்களானால், உங்களுக்கென்று தனிப்பட்ட அடையாளம் கிடையாது என்பதை உணர்ந்து கொண்டீர்களானால், உங்களுக்கென்று தனியான அஹங்காரம் கிடையாது என்பதையும் உணர்வீர்கள்.
இப்போது நீங்கள் உங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளம் உள்ளது என்று நினைக்கிறீர்கள்.
ஆனால் உண்மையில், பிரபஞ்ச இருப்புத் தன்மையில் பிரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட அடையாளம் என்று ஒன்றும் கிடையாது. இதை நீங்கள் உணர்ந்த அந்தக் கணமே வலி, துக்கம், மனச்சோர்வு, வியாதிகள் இவற்றைத் தாண்டிச் செல்வீர்கள்.
இதәп புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் தனிப்பட்ட அடையாளத்துடனும் ‘நான் தனியானவன்’ என்ற உணர்வுடன் உள்ளவரை நீங்கள் தொடர்ந்து துக்கப்படுவீர்கள். நீங்கள் ஏன் தொடர்ந்து இயற்கையை எதிர்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்? இயற்கை எதை வழங்கினாலும் அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள்.
ஒரு அழகான பழமொழி இருக்கிறது:
பொதுவாக மனம் என்பதே முட்டாள் தனமான ஒன்றுதான். அது சூடாக இருக்கும்போது, குளிர்ச்சியைக் கேட்கும். அது குளிர்ச்சியாக இருக்கும்போது, சூட்டைக் கேட்கும். அது எது இல்லையோ, அதையே எப்போதுமே கேட்கும்.
குளிர்ச்சியாக இருக்கும்போது நீங்கள் எதிர்க்கிறீர்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மையிலிருந்து நீங்கள் மாறுபட்டவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இமயமலையில் குளிரிலும் பனியிலும் ஏறக்குறைய ஆடையின்றி வாழும் ஸந்யாஸிகளையும் நான் பார்த்திருக்கிறேன். நானும் அந்தச் சூழலில் வாழ்ந்துள்ளேன். ஆனால் உடல் எதனாலும் பாதிக்கப்படவில்லை, எந்தவிதமான தொந்தரவும் இருந்ததில்லை.
> ஆழ்ந்த விழிப்புணர்வு
> நிலையிலும் கூட,
> நீங்கள்
> மற்ற எல்லா
> உயிரினங்களுடனும்
> இணைக்கப்
> பட்டிருக்கிறீர்கள்.
“இந்தச் சுற்றுச் சூழலிருந்து நான் வேறுபட்டவன்,” என்று நான் என்றுமே நினைத்ததில்லை. “இயற்கையிலிருந்து நான் பிரிந்து உள்ளேன்,” என்ற பிரிக்கப்பட்ட எண்ணம் எனக்குள் என்றுமே இருந்தது இல்லை.

அஹங்காரத்தை விட்டுவிட்டால் காற்றிலும் மிதக்கலாம்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், காற்று மண்டலத்திலிருந்தும் உங்களைச் சுற்றியுள்ள காற்றிலிருந்தும் நீங்கள் வேறுபட்டவர் என்று நீங்கள் நினைக்க ஆரம்பிக்கும் போதே, நீங்கள் அதை எதிர்க்கத் தொடங்கிவிடுகிறீர்கள்.
நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து, உயிர் தப்பிய ஒருவர், தாம் தப்பிய விதத்தைப் பற்றி விவரித்திருந்த மிகச் சுவையான பேட்டியைப் பத்திரிகை ஒன்றில் படித்தேன். நீங்கள் நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தீர்கள் என்றால், அதில் குதித்த ஒருவர் உயிர் தப்பி உள்ளார் என்பதை நம்பவே முடியாது. அந்த நீர்வீழ்ச்சியில் குதித்தபின் ஒருவர் உயிரோடு இருக்க முடியும் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
ஆனால் அவர், "நான் குதித்தபோது, நான் அதன் ஒரு பகுதியாகவே மாறிவிட்டேன். நீர் வீழ்ச்சியின் ஒரு பகுதியாகவே என்னை உணர்ந்தேன். அந்த நீர்வீழ்ச்சியிலிருந்து நான் வேறுபட்டவன் என்று ஒரு நொடிகூட உணரவில்லை," என்று தெளிவாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார்.
திரண்ட விழிப்புணர்வுடன் நீங்கள் ஒருங்கிணைந்து இருக்கும்போது, திரண்ட விழிப்புணர்வின் ஒரு அங்கமாகவே நீங்கள் மாறிவிடும்போது, இயற்கை உங்களுடனேயே இருக்கும். இயற்கை உங்களின் நண்பனாகிவிடும்; அது உங்களைப் பாதுகாக்கும்; அது உங்களுக்குத் தீங்கு செய்யாது.
> திரண்ட விழிப்புணர்வுடன் ஒருங்கிணைந்து வாழும்போது, இயற்கை உங்களைப் பாதுகாக்கும்; இயற்கை உங்கள் பாதுகாவலனாகிவிடும்.
நீங்கள் உங்களை, தனிப்பட்ட விழிப்புணர்வு என்றும், இயற்கையிலிருந்து வேறுபட்டவர் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும்வரை இயற்கை உங்களை எதிர்க்கும். திரண்ட விழிப்புணர்வுடன் நீங்கள் ஒருங்கிணைந்து வாழும்போது, இயற்கை உங்களைப் பாதுகாக்கும்; இயற்கை உங்கள் பாதுகாவலனாகிவிடும்.
ஒரு எளிமையான விஷயம். அதை நீங்கள் இப்பொழுதே பயிற்சி செய்யலாம்.
குளிர்ச்சியாக நீங்கள் உணர்ந்தால்,
அப்படியே தளர்வடையுங்கள். குளிர்ச்சியாக
உணரும் பகுதியை அடையாளம் கண்டு,
அந்தப் பகுதியை கூர்ந்து பாருங்கள்.
அந்தப் பகுதியின் சூழ்நிலையை எதிர்க்காதீர்கள், காற்றை எதிர்க்காதீர்கள். தட்ப வெப்ப நிலையை எதிர்க்காதீர்கள், இயற்கையை எதிர்க்காதீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையை எதிர்க்காதீர்கள்.
> சூழ்நிலையை
> எதிர்க்காதீர்கள்,
> இயற்கையை
> எதிர்க்காதீர்கள்.
> அப்போது மட்டுமே
> நீங்கள்
> மனநிறைவுடையவராக
> ஆக முடியும்.
உங்களிடமே சொல்லிக்கொள்ளுங்கள், "நான் இயற்கையை எதிர்க்கப் போவதில்லை, நான் வெப்ப நிலையை எதிர்க்கப் போவதில்லை, நான் பிரபஞ்ச இருப்புத் தன்மையை எதிர்க்கப் போவதில்லை. நான் தளர்வடைகிறேன்," என்று விழிப்பு நிலையிலிருந்து முடிவு எடுங்கள்.
இத்துடன், உடல் தளர்வடைவதையும் அந்தப் பகுதியிலிருந்து குளிர்ச்சி என்ற கருத்து மறைவதையும் நீங்கள் முழுவதும் துக்கம் நீங்கியவராக, மன நிறைவுடையவராக மாறுவதையும் நீங்களே பார்க்கலாம்.
இயற்கையிலிருந்து நீங்கள் வேறுபட்டவர் என்று நீங்கள் எண்ணுகிற போதெல்லாம் இயற்கையால் நீங்கள் துக்கமடைகிறீர்கள்.
இந்த முழுப் பிரபஞ்சமுமே ஒரு ஹோலோகிராம்தான் (Hologram). அதில் நீங்கள் ஒரு பகுதி. எவ்வாறு ஹோலோகிராமின் ஒவ்வொரு சிறு பகுதியும் அதைப் பிளந்தாலும் அந்த முழுமையைப் பிரதிபலிக்குதோ, அதேபோல் நீங்களும் இந்தப் பிரபஞ்சத்தின் முழுமையைப் பிரதிபலிக்கிறீர்கள்.
மற்றும் ஓர் உதாரணம், ஒருவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டால், அவருடைய இறந்த உடல் மிதக்கிறது. இறந்த உடல்ீரைவிட கனமானது, ஆனாலும் அது மிதக்கிறது.
ஆனால் உயிருடன் இருக்கும் உடல் லேசாக இருந்தாலும்கூட நீரில் மிதப்பது இல்லை.
ஏன் அப்படி நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உயிருடன் இருக்கும்வரை உங்களால் நீருடன் தொடர்புகொள்ள முடிவதில்லை. உங்களுடைய அஹங்காரம் அதைத் தடுக்கிறது. உங்களுடைய மனம் அதைத் தடுக்கிறது. ஆனால் இறந்த உடலில் மனமும் இல்லை, அஹங்காரமும் இல்லை. அதனால் அது மிதக்கிறது.
எப்போதெல்லாம் நீங்கள் வெற்றி அடையவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அது சமுதாய ரீதியான வெற்றியாக இருந்தாலும் சரி அல்லது பொருளாதார ரீதியான வெற்றியாக இருந்தாலும் சரி முழுக்குழுவுடனும் ஒருங்கிணைந்து இருந்தால்தான், அந்தத் திரண்ட விழிப்புணர்வுடன் ஒருங்கிணைந்து இருந்தால்தான், நீங்கள் எதை அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை அடைய முடியும்.
நீங்கள் தனிப்பட்டவர் என்று உணர்கிறவரை நீங்கள் யாரோ ஒருவர் என்ற கருத்து உங்களிடம் உள்ளவரை தெளிவாக இருங்கள், நீங்கள் எதிர்க்கப்படுவீர்கள்; நீங்களும் எதிர்த்துக்கொண்டே இருப்பீர்கள்.
அது வீடாக இருந்தாலும் சரி அல்லது
அலுவலகம் அல்லது வேலை செய்யும் இடம்
அல்லது தொழிற்சாலை என்று எதுவாக
இருந்தாலும் சரி இது நிகழும்.
நீங்கள் திரண்ட விழிப்புணர்வில் கரைந்தீர்கள் என்றால், நீங்கள் மீண்டும் மீண்டும் பாதுகாக்கப்படுவீர்கள், கவனிக்கப்படுவீர்கள்.
வாழ்க்கை
என்னும் நதியோடு
ஒருங்கிணைந்து
செல்லும்போது,
உங்களுக்குள்
ஆனந்தம்
பொங்கத் தொடங்கிவிடும்.
சமுதாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முழு வெற்றியை அடைவதோடு மட்டும் அல்லாமல் ஆழ்ந்த நிறைவுத் தன்மையை உணர்வீர்கள்.
நீங்கள் நீரோட்டத்தை எதிர்க்கும்வரை நீங்கள் திரண்ட விழிப்புணர்வில் கரையாதவரை அது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் இல்லம் அல்லது உங்களுடைய நிறுவனம் அல்லது எந்த இடமாக இருந்தாலும் சரி, நீங்கள் தொடர்ந்து உங்களுக்கும் மற்றவர்களுக்கும் துக்கத்தை உருவாக்குவீர்கள்.

பிரபஞ்சத்தின் பகுதியே நீங்கள்
உங்களுடைய ஸ்தூல அடுக்கிலும் நீங்கள் தனிப்பட்டவர் என்று நினைத்தீர்கள் என்றால், தெளிவாக இருங்கள் நீங்கள் நோயை வரவேற்பீர்கள். மேலும் ஒரு விஷயம், மன அடுக்கில், நீங்கள் தனிப்பட்டவர் என்றும் நீங்கள் தன்னிச்சையானவர் என்றும் நினைத்தீர்கள் என்றால், மீண்டும் மீண்டும் வன்முறையின் விதையை நீங்கள் விதைப்பீர்கள்.
நீங்கள் தன்னிச்சையாளர் என்று நினைக்கும்போது, வன்முறையின் விதைகள் உருவாக்கப்படும். திரண்ட விழிப்புணர்வின் ஒரு பகுதியாக நீங்கள் இருந்தாலும் அதை நீங்கள் உணர்ந்துகொள்ளாததால், தன்னிச்சையான விழிப்புணர்வில் நிகழ்வுகளையும் பொருட்களையும் நீங்கள் கூறுபோடுகிறீர்கள், வெட்டி துண்டுகள் ஆக்குகிறீர்கள்.
தர்க்கம் எப்போதும் உடைக்கிறது, உள்ளுணர்வு எப்போதும் ஒன்று சேர்க்கிறது.
உங்கள் ஆன்ம நிலையில் நீங்கள் தன்னிச்சையானவர் என்று நினைத்தீர்கள் என்றால், ஆன்ம வளர்ச்சிக்கு அங்குச் சாத்தியமே இல்லை.
முதலாவதாக, உடல் ரீதியாகக்கூட நீங்கள் தன்னிச்சையானவர் அல்ல. உங்களுடைய உடலுக்கும் சூரியனுடைய உடலுக்கும் நேரடியான தொடர்பு உள்ளது.
சூரியனின் உடலில் எந்த ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உங்கள் உடலிலும் மாற்றம் ஏற்படும். உங்கள் உடலில் எந்த ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் சந்திரனின் உடலில் மாற்றம் ஏற்படும். தர்க்க ரீதியாக இதனைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாவிட்டாலும், இது உண்மை.
உங்கள் மன அடுக்கிலும் கூட நீங்கள் தனியாக இல்லை. யாரோ ஒருவர் தலையில் உதித்த எண்ணம் உங்களிடம் வந்து உங்களைத் தொடுகிறது. உங்கள் மனத்தில் உருவாகும் எண்ணம் சென்று, வேறு ஒருவரைத் தொடுகிறது. யாரோ ஒருவரால் விதைக்கப்பட்ட ஏதோ ஒரு எண்ணம் உங்களைத் தொடமுடியும்; உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்த முடியும். இது ஏரியில் உருவாக்கப்பட்ட சிற்றலைகள் போல்.
நீங்கள் ஒரு வலுவான எண்ணத்தை ஏற்படுத்தினீர்கள் என்றால், உங்கள் எண்ணத்தால் ஒரு அடையாளத்தை உருவாக்குவீர்கள்.
உங்கள் எண்ணத்தால் மற்றவர்களை வழிநடத்தி, உத்வேகப்படுத்துவீர்கள்.
உங்களுடைய எண்ணங்கள் திடமாக இல்லையென்றால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் உங்களை நிச்சயம் பாதிக்கும்.
ஒன்று, நீங்கள் தலைவராக வாழ்வீர்கள் அல்லது தொண்டனாக வாழ்வீர்கள். இவற்றுக்கு இடையில் இல்லை.
நீங்கள், "நான் தலைவனாக இருக்க மாட்டேன். என்னால் அவ்வளவு செய்ய முடியாது. நான் தொண்டனாகவும் இருக்க மாட்டேன். என்னுடைய இயல்பு நிலையில் இருக்கப் போகிறேன்," என்றுதான் எப்போதும் நினைக்கிறீர்கள். ஆனால் இது நடைமுறைக்கு ஏற்றதல்ல. 'என் இயல்பு நிலை' என்ற ஒருநிலை என்றுமே இருந்ததில்லை. நீங்கள் வழி நடத்துங்கள் அல்லது தொடருங்கள்.
மன நிலையிலும் கூட, மீண்டும் மீண்டும் நீங்கள் தன்னிச்சையானவர் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் எதிர்க்கப்படுவீர்கள்.
நீங்கள் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதி என்று புரிந்து கொண்ட அந்தக் கணமே, நீங்கள் எதிர்க்கப்பட மாட்டீர்கள். உண்மையில் வரவேற்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்.
இறுதியில், ஆன்மீக நிலையில், 'நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு ஆழமாக இணைக்கப்பட்டவர், முழுமையாக இணைக்கப்பட்டவர், தீவிரமாக இணைக்கப்பட்டவர்' என்று புரிந்து கொண்ட அந்தக் கணமே, நீங்கள் ஆனந்தத்தை அனுபவிப்பதோடு மட்டும் அல்லாமல், நீங்கள் உண்மையாக வாழவும் ஆரம்பிப்பீர்கள், உங்கள் இருப்புத் தன்மையின் பல பரிமாணங்களையும் திறந்து வைப்பீர்கள்.
> ஒன்று,
> நீங்கள் தலைவராக
> வாழ்வீர்கள்
> அல்லது
> தொண்டனாக வாழ்வீர்கள்.
> இவற்றுக்கு இடையில்
> இல்லை.
இந்த ஒரு உடலுடன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் நினைக்க முடியும்; ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அனுபவித்து மகிழ முடியும். ஆனால் நீங்கள் கூட்டு விழிப்புணர்வில் கரைந்தால், நீங்கள் பல பரிமாணங்களையும் பல சாத்தியக் கூறுகளையும் உணர்வீர்கள். அதை இப்போது உங்களால் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாது!
நீங்கள் கூட்டு விழிப்புணர்வில் கரைந்தால், பல பரிமாணங்களையும் பல சாத்தியக்கூறுகளையும் உணர்வீர்கள்.
இப்போது உங்களுக்கு ஒரு உடல் இருப்பதனால், நீங்கள் இந்த அளவு மகிழ்ச்சி கொள்கிறீர்கள். உங்களுக்கு இரண்டு உடல்கள் இருந்தால், நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
உங்களுக்குப் பல உடல்கள் இருந்தால், நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். மூன்று வெவ்வேறு உடல்கள், வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு கலாச்சாரத்தை மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
அதே போல் பலமடங்கு உடல்கள் அதிகரித்தால், மகிழ்ச்சியும் ஆனந்தமும் கூட பல மடங்கு அதிகரிக்கும். நீங்கள் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இருக்கும்போது, நீங்கள் இதையேதான் அனுபவிப்பீர்கள்.

குருவின் ஸாந்நித்யத்தில் கடவுளையே உணரலாம்
இந்திய பண்டிகையான ஹோலி என்றழைக்கப்படும் ராஸ பூர்ணிமா சமயத்தில், ராதையும் கோபிகைகளும் கிருஷ்ணரின் கூட்டு விழிப்புணர்வை அனுபவித்தார்கள். கூட்டு விழிப்புணர்வை கிருஷ்ணர் அவர்களுக்குக் கொடுத்த நிகழ்வைத்தான் ராஸலீலா என்று சொல்வார்கள்.
நமக்குள் ராஸலீலாவைப் பற்றித் தவறான கருத்து இருக்கிறது. கிருஷ்ணர் ஏதோ பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த அந்த நிகழ்வைத்தான் ராஸலீலா என்ற சொல் குறிப்பதாக நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான விளக்கம். அப்போது கிருஷ்ணருக்கு வயது வெறும் பத்து மட்டுமே என்பதை மறந்துவிடுகிறோம்.
நாம் உண்மையான வேத நூல்களைப் படிப்பது இல்லை.
மேம்போக்கான ஆதாரமற்ற நூல்களைப்
படித்துவிட்டு, நாம் நம்முடைய சொந்த
முடிவுக்கு வந்துவிடுகிறோம். நமக்குத்
தேவையானவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து,
அதை ஆதரிக்கிறோம்.
நமக்கு சில வேத நூல்களிலிருந்தும் சில குருமார்களிடமிருந்தும் ஆதரவு தேவைப்படுகிறது. அப்படியிருந்தால்தான், வேத நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியோ, குருமார்களின் வாழ்விலிருந்து சில நிகழ்வுகளை எடுத்துச் சொல்லியோ, அதாவது அவற்றைக் காரணம் காட்டி நாம் ஏதாவது ஒன்றைச் செய்யமுடியும். நாம் அப்படித்தான், கிருஷ்ணரைக் குறைசொல்ல ஆரம்பிக்கிறோம்.
உண்மையாக நடந்தது என்னவென்றால், அந்தக் கூட்டு விழிப்புணர்வின் அனுபவத்தை அவர் அந்த கோபிகைகளின் கூட்டத்திற்கும் ராதைக்கும் கொடுத்தார். இந்தக் கூட்டு விழிப்புணர்வைத்தான் 'கடவுள்' என்று அழைக்கிறோம்.
இரண்டாவது நிலை தியான வகுப்பான நித்யானந்த ஸ்புரண த்யான முகாமில் நடக்கும் தியான பயிற்சிகளின் மூலம் நீங்கள் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதி என்பதை உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள் அதன் ஒரு பகுதி மட்டும் அல்ல, அந்தக்கூட்டு விழிப்புணர்வே நீங்கள்தான் என்பதையும் உணர்வீர்கள்.
நீங்கள் நினைப்பது போல் நீங்கள் தனிப்பட்ட விழிப்புணர்வு இல்லை. அடுக்குக்குப் பின் அடுக்காக, நீங்கள் ஆழமாக செல்லச் செல்ல நீங்கள் அனைத்துடனும் ஒன்று பட்டவர் என்பதை உணர்ந்துகொள்வீர்கள். அதனால், நோய்கள் தானாகவே மறைந்து போகும்.
நீங்கள், மன அடுக்கிலும் பிராண அடுக்கிலும் ஆன்ம அடுக்கிலும் ஸ்தூல அடுக்கிலும் மற்ற அடுக்குகளிலும் நலமாக இருப்பதை உணர ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் ஒரு வெங்காயத்தைப் போன்றவர்கள்தான்! வெங்காயத்தை

அடுக்கு அடுக்காகப் பிரித்தால் உள்ளே என்ன
இருக்கும்? வெறுமைதான் இருக்கும். அந்த
வெங்காயம் தமக்குள் திடமான ஏதோ ஒன்று
உள்ளது என்று நினைக்கும்; ஆனால் அதை
ஒவ்வொரு அடுக்காகத் திறந்து பார்த்தால்
உள்ளே ஒன்றும் இருக்காது.
அதேபோல் நீங்களும் நீங்கள் தனிப்பட்ட விழிப்புணர்வு உடையவர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அந்தத் தனிப்பட்ட அடுக்கை உரித்துப்பார்த்தால், நீங்கள் பேரண்ட உணர்வு நிலை, கூட்டு விழிப்புணர்வு நிலை என்பதை அனுபவிப்பீர்கள்.
NSP வகுப்பில் நாங்கள், உங்கள் மனத்தை திறக்கச் செய்கிறோம். உங்களுடைய வலிகள், விருப்பங்கள், குற்ற உணர்ச்சி, சந்தோஷம் இவற்றை எழுதச் சொல்கிறோம்.
நீங்கள் உங்கள் குறிப்புகளை வேறு ஒருவருக்கும் காண்பிக்க மாட்டீர்கள். “ஏற்கெனவே எங்களைப் பற்றி எங்களுக்கு தெரிந்திருக்கும்போது, அவற்றைப்பற்றி எங்களை ஏன் எழுதச் சொல்கிறீர்கள்,” என்று மக்கள் என்னைக் கேட்பதுண்டு. அவற்றை எழுதுவதால், என் முன் அவர்களுடைய மனத்தைத் திறந்து வைக்கிறார்கள். அவர்கள் தங்களது மனத்தை என் முன்னால் திறந்து வைக்கும்போது, என்னால் அவர்களைக் குணப்படுத்த முடிகிறது.
முதலில், அவர்களை நான் குணப்படுத்துவதில்லை; நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், என்னுடைய இருப்பு குணப்படுத்துகிறது.
நீங்கள் நினைப்பது போல்
'நீங்கள்'
ஒரு தனிப்பட்ட
விழிப்புணர்வு இல்லை;
அனைத்துடனும்
ஒன்றுபட்டவர்தான்
நீங்கள்!
சூரியன் உதிக்கும்போது தாமரை தானாகவே
மலர்கிறது. சூரியன் சென்று தாமரையின்
இதழ்களை விரிக்க வேண்டிய தேவை
இல்லை. அதேபோல் குருவின் ஸாந்நித்யத்தால்
குணப்படுத்துதல் நடைபெறுகிறது.
குணப்படுத்துதல் செய்யப்படுவதில்லை;
அது தானே நிகழ்வது. உங்கள் உடல்,
என்னுடைய ஸாந்நித்யத்தில் இருக்கும்போது,
என்னால் அதனைக் குணப்படுத்த முடிகிறது.
அதே போல், நீங்கள் உங்கள் மனதைத் திறந்து வைத்தால், அதையும் குணப்படுத்த முடியும்.
நீங்கள் திறந்து வைத்தால், சூரியன் அதைக் குணப்படுத்த முடியும்; அந்தச் சக்தி அனைத்து காயங்களையும் குணப்படுத்துகிறது. நித்யானந்த ஸ்பூரண த்யான முகாமில் உங்கள் ஆற்றல் அடுக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்படுகின்றன.
உங்களுடைய வலி, சந்தோஷம், குற்ற உணர்ச்சி, விருப்பங்கள் அனைத்தும் திறந்து வைக்கப்படுகின்றன.
அவை திறக்கப்படும்போது, நீங்கள் கடவுளை உணர்கிறீர்கள். நீங்கள் கடவுளைத் தேடுவது மட்டும் அல்லாமல், கடவுளை உணர்கிறீர்கள். தூய மனம்தான் கடவுள்! தூய மனத்தைக் காட்டிலும் வேறு ஏதோ ஒன்று அல்ல கடவுள்.
வாழ்க்கையின் நிஜமான லட்சியம்
‘வாழ்க்கைக்கு என்று ஒரு நோக்கம் இருக்கிறது’ என்றே நாம் அனைவரும் சிறுவயது முதல் கற்பிக்கப்பட்டு வருகிறோம். நாம் அனைவரும் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைவதற்காகவே வழிநடத்தப்படுகிறோம். ஆனால் அவை யாவும் எப்போதும் பொருள் சார்ந்த இலட்சியங்களாகவே உள்ளன.
நமது பெற்றோர்கள், பிறகு நமது ஆசிரியர்கள், அதன் பிறகு வாழ்க்கைத் துணை, கடைசியில் நமது குழந்தைகள் இவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பதான் நாம் வாழவேண்டுமென்று அவர்களால் நாம் எதிர்பார்க்கப்படுகிறோம்.
தூய மனத்தைக் காட்டிலும் வேறு ஏதோ ஒன்று அல்ல ‘கடவுள்’.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ‘வாழ்வதை’த் தவிர வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சியுடன் இருத்தல்தான். ‘நாம் அடைய வேண்டிய இலக்குகள்’ என்று நம்மால் பட்டியல் இடப்பட்ட இலக்குகளின் எண்ணிக்கையால், நம் பை நிரம்பிவழிகிறது. பை நிறைய உள்ள இலட்சியங்கள், நம்மை நம் கடமைகள்,
பொறுப்புகள் இவற்றுடன் பிணைத்தால்,
எப்படி நாம் வாழ்க்கையை மகிழ்ந்து
அனுபவிக்க முடியும்?
மற்றவர்களுடைய எதிர்பார்ப்புகளால்
நாம் அழுத்தப்படுவதால், நாம் செய்யும்
செயல்களை, மகிழ்ச்சியோடு அனுபவித்து
செய்ய நமக்கு நேரம் இல்லை.
வாழ்க்கை, குறிக்கோளைப் பற்றியதும்
அல்ல; வாழ்க்கை, இலட்சியங்களைப்
பற்றியதும் அல்ல; வாழ்க்கை, வாழும்
வாழ்க்கைமுறையைப் பற்றியதும் அல்ல.

நாம் எவ்வளவு செல்வந்தராக இருக்கிறோம்; எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறோம்; எவ்வளவு அழகாக இருக்கிறோம்; எவ்வளவு திறமைசாலியாக இருக்கிறோம் என்பதைப் பற்றி மற்றவர்களுடைய மனத்தில் பதியவைப்பது அல்ல வாழ்க்கை!
வாழ்க்கை என்பது வாழ்க்கையின் பயணத்தை மகிழ்ந்து அனுபவிப்பது. சேரும் இடத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அழுத்தம் அல்ல.
பாதை சரியாக இருக்கும்போது, நீங்கள் பாதையை மகிழ்ந்து அனுபவிக்கும்போது, சேரும் இடமும் சரியானதாகவே இருக்கும். அது எப்போதும் மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கும்.
வாழ்வின் குறிக்கோள் இன்மையை உணர்ந்த ஒருவரால்தான், எந்த ஒரு செயலையும் செய்துவிட்டு, அந்தச் செயலிலிருந்து தானாகவே வரும் எந்த ஒரு பலனையும் மனநிறைவோடு ஏற்றுக்கொள்ள முடியும். புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கைக்குக் குறிக்கோள் இல்லை. ஆனால் அதற்குப் பொருள் உண்டு.
எல்லாக் காலங்களிலும் 'வாழ்க்கைக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கிறது, ஒரு நோக்கம் இருக்கிறது,' என்றுதான் நாம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளோம்.
நாம் பல இலட்சியங்களின் பின் ஓடி, அதன் மூலம் வாழ்வில் மனம் நிறைவடையலாம் என்று நம்புகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு இலட்சியம் கிடையாது. வாழ்வே இலட்சியம்தான், அதன் பாதையே இலட்சியம்தான். இதனை நீங்கள் உணரும்போது, நிகழ்காலத்தில் வெற்றி, தோல்வி உங்களைப் பாதிப்பது இல்லை.
வாழ்க்கைக்கென்று ஒரு இலட்சியம் இருக்கிறது என்று நீங்கள் எண்ணும்போதுதான் பொறாமையும் வருகிறது. வேறு யாரோ அவர்களுடைய வாழ்வின் இலட்சியத்தை அடைந்துவிட்டார்கள்; ஆனால் நீங்கள் உங்கள் வாழ்வின் இலட்சியத்தை அடையவில்லை என்று எண்ணுகிறீர்கள்.
நீங்கள் தனித் தன்மை வாய்ந்தவர் என்பதையும் உங்களுடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவு செய்வதற்குத் தேவையானவற்றை எல்லாம் பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களுக்குக் கொடுத்து இருக்கிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளும்போது மட்டுமே, நீங்கள் உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையை வாழமுடியும்.
‘வாழ்வதை’த் தவிர
வாழ்க்கைக்கு எந்த
நோக்கமும் இல்லை.
வாழ்க்கையின் நோக்கமே
மகிழ்ச்சியுடன்
இருத்தல்தான்.
இல்லையென்றால் நீங்கள் ஏடாவது ஒரு இலட்சியத்தின் பின் ஓடிக்கொண்டேதான் இருப்பீர்கள். நீங்கள் ஓடிக்கொண்டிருக்கும் இலட்சியத்திற்கு மிக அருகேதான் ‘இவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள்’ என்று நீங்கள் யாரையாரையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களை எல்லாம் பார்த்துப் பொறாமைப் படுவீர்கள். இந்த ரோலர் கோஸ்டரின் வெற்றி, தோல்வியில் சிக்கிக்கொள்வீர்கள்.
வாழ்வின் இலட்சியம், கானல் நீரைப் போன்றதுதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், அது உண்மையில் இருப்பது இல்லை. ஆனால் அது இடைவிடாது இருப்பதைப் போன்ற மாயையை உருவாக்குகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தத்தில் வாழுங்கள். கணத்திற் குக் கணம் அதனை மகிழ்ந்து அனுபவியுங்கள். அது உங்கள் வாழ்வின் தன்மையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதை நீங்கள் பார்க்கலாம்.

திறந்த மனதோடு இருப்பதே ஞானமடையச் செய்யும்
ஒரு சின்ன கதை:
புராணக் கதைகளின் படி, ஆன்மீகத்தின் நரம்பு மையம் என்றழைக்கப்படும் எனது சொந்த ஊராகிய திருவண்ணாமலையில் இது நிகழ்ந்தது. அந்த இடம் ஒரு ஆன்மீக இன்குபேட்டர்.
குறைமாத குழந்தைக்குக் காற்று மற்றும் மற்ற அத்தியாவசியத் தேவைகளைக் கொடுக்க எவ்வாறு இன்குபேட்டர் அவசியப்படுகிறதோ, அதைப்போல ஞானமடைந்த மக்கள் இந்தப் பூமியில் அவதரிக்கும்போது அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் ஒரு இன்குபேட்டர் தேவைப்படுகிறது.

ஒருமுறை சிவபெருமான், படைக்கும் கடவுளாகிய பிரம்மனுக்கும் காக்கும் கடவுளாகிய விஷ்ணுவுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக முடிவில்லாத ஜோதி ஸ்தம்பதமாக தோன்றினார்.
சிவனின் உத்தரவின் படி, பிரம்மா சிவனின் தலையைக் கண்டுபிடிக்க வேண்டும்; காக்கும் கடவுளாகிய விஷ்ணு சிவனின் பாதத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ, அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அந்தக் கதை மிகவும் அழகான கதை.
பிரம்மா என்பவர் யார்? அறிவின் கடவுளாகிய சரஸ்வதியின் கணவர். விஷ்ணு என்பவர் யார்? செல்வத்தின் கடவுளாகிய லஷ்மியின் கணவர். பிரம்மா தலையைக் கண்டு பிடிப்பதற்காகவும் விஷ்ணு பாதத்தைக் கண்டு பிடிப்பதற்காகவும் செல்லத் தொடங்கினார்கள்.
சில நேரத்திற்குப் பின் விஷ்ணு திரும்பிவந்து, "என்னால் பாதங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இந்தச் செயலை என்னால் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்," என்று தம் தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மனும் தம்மால் தலையைக் கண்டுபிடிக்க முடியாது என்பதை உணர்ந்தார். ஆனால் உண்மையை ஒத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஏமாற்ற முடிவுசெய்தார். அவர் சிவனின் தலையைத் தொட்டு விட்டதாகவும் அதற்குச் சாட்சியாக அங்கிருந்து தாழம் பூவைக் கொண்டு வந்ததாகவும் சொன்னார்.

நீங்கள் இந்தக் கதையை நன்கு
புரிந்துகொள்ளவேண்டும்.
விஷ்ணு செல்வத்தின் அதிபதி.
பிரம்மா அறிவின் அதிபதி.
செல்வத்தின் மூலமோ, அறிவின்
மூலமோ ஞானத்தை அடைய
முடியாது என்பதுதான் இந்தக்
கதையின் கருத்து. செல்வத்
தின் மூலமாகவோ, அறிவின்
மூலமாகவோ ஞானம் அடைய
முடியாது.
மேலும் ஒரு முக்கியமான விஷயம்: செல்வத்தின் பாதையில் நீங்கள் சென்றீர்கள் என்றால், நிச்சயம் ஒருநாள் நீங்கள் மனச்சோர்வை அடைந்தே தீருவீர்கள், பிறகு வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வை சந்திப்பீர்கள். இதெப் புரிந்துகொள்வதால் நீங்கள் பணிவுள்ளவராக மாறிவிடுவீர்கள். நீங்கள் கீழே விழுவீர்கள்; தோல்வி அடைவீர்கள்; உண்மையைப் புரிந்துகொள்வீர்கள். விஷ்ணு சரணடைவதன் மூலமாக இந்தக் கருத்துதான் விளக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் அறிவின் பாதையில் சென்றால், உங்கள் தோல்வியை என்றும் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். 'பிரம்மா பொய் சாட்சியைக் கொண்டு வந்து தம் தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்ததுபோல், நீங்களும் முயற்சி செய்வீர்கள் என்ற கருத்துதான் பிரம்மாவின் செய்கையின் மூலமாக விளக்கப்பட்டுள்ளது.
வெளி உலகை நோக்கியே கவனம்
செலுத்தப்படும் அஹங்காரப் பாதையில்
நீங்கள் பயணம் செய்தாலோ, வெளி உலகப்
பொருள் சார்ந்த வெற்றியின் பாதையில்
நீங்கள் பயணம் செய்தாலோ, ஒரு தருணத்தில்
நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்கள்.
> வாழ்க்கையின்
> ஒவ்வொரு கணத்தையும்
> ஆனந்தத்தில் வாழுங்கள்.
> உங்கள் வாழ்வின்
> இயல்பில் மிகப்பெரிய
> வித்தியாசத்தைப்
> நீங்கள் பார்க்கலாம்.
வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
"போதும்! நான் ஓய்வெடுத்துக்கொள்கிறேன்.
இந்தப் பாதையில் ஞானத்தை அடைய
முடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன்,"
என்று நீங்கள் சொல்லிவிடுவீர்கள்.
செல்வத்தின் மூலமோ,
அறிவின் மூலமோ
ஞானத்தை அடைய
முடியாது.
ஆனால் அஹங்காரப் பாதையில் பயணம்
செய்பவராலும் அறிவின் பாதையில்
செல்பவராலும் ஞானத்தை ஒருபோதும்
அடையமுடியாது என்பது மட்டுமல்லாமல்,
தன்னால் அடையமுடியாது என்பதை
அவரால் உணரவும் முடியாது.
அந்த அறிவு, அந்த அஹங்காரம் மிகக் கூர்மையாகவும் மிக நுட்பமாகவும் மாறிவிடுவதால், அது போலியான சாட்சியங்களையும் போலியான நுட்பங்களையும் கொண்டு தான் வெற்றி அடைந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும். அந்தப் போலியான சாட்சிகள்தான் இந்தப் போலியான பூக்கள்.
இறுதியான ஞானத்தை நேர்மையின் மூலம்தான் அடையமுடியுமே தவிர, அறிவாலோ, செல்வத்தாலோ அடைய முடியாது. நீங்கள் புலன்களின் பின்னால் ஓடுவதால் அல்லது வெளி உலகத்தின் பின்னால் ஓடுவதால் ஞானத்தை அடைய முடியாது.
யாகத்தில் உன்னதமானது பக்தி
இப்போது கிருஷ்ணர் பல வகையான வேள்விகளைப் பற்றிப் பேசுகிறார்.
உபநிஷத ஸ்லோகம் போன்ற இது ஒரு அழகான ஸ்லோகம்.
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே|
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே||
முழுமையாக இருப்பது பூர்ணம். அந்தப் பூர்ணத்திலிருந்து, அந்தப் பூரணத்தை அகற்றிவிட்டால், மீதம் இருப்பதும் பூரணம்தான்.
கணிதத்திலும் அதே வகையான ஒப்புமை இருக்கிறது. எல்லையற்றதிலிருந்து எல்லையற்றதை அகற்றிவிட்டால், எஞ்சி இருப்பது என்ன? எஞ்சி இருப்பதும் எல்லையற்றதுதான்!
"இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்?" என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு.
இந்தப் பிரபஞ்சமே (பேரண்டமே) உருவாக்குபவர்தான். உருவாக்கல், உருவாக்குபவர், உருவாக்கப்பட்டவை-இவை மூன்றும் வெவ்வேறானவை அல்ல. இந்தப் பிரபஞ்சம்தான் உருவாக்குபவர்; இந்தப் பிரபஞ்சம்தான் உருவாக்கப்பட்டது; இந்தப் பிரபஞ்சம்தான் உருவாக்கும் செயல்முறை.
எல்லையற்றதிலிருந்து
எல்லையற்றதை
அகற்றிவிட்டால்,
எஞ்சி இருப்பது என்ன?
எஞ்சி இருப்பதும்
எல்லையற்றதுதான்!
இப்போது யாராவது ஒருவர் இந்தப் பேரண்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தால், உருவாக்கியவரே அறிவுடையவர். உருவாக்கப்பட்டவையோ, உருவாக்கும் செயலோ அவருக்கு நிகர் அல்ல.
ஆனால் இந்தப் பேரண்டம் புத்திசாலித்தனம் மிக்கது. இந்தப் பிரபஞ்சம், இந்தப் பேரண்டம் மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்தது, அதுவே எங்கும் வியாபித்து உள்ளது.
நீங்களும் நானும் இந்தப் பேரண்ட ஆற்றலின் தெளிவான வெளிப்பாடுகள். நாம் இந்தப் பேரண்ட சக்தியால் உருவாக்கப்பட்டவர்கள். நாம் 'பேரண்ட சக்தியின் வெளிப்பாடுகள்' என்பதன் பொருள் என்ன? புத்திசாலித்தனமான பேரண்ட சக்தி, நம் ஒவ்வொருவருடைய இருப்புத் தன்மையிலுமே வியாபித்து இருக்கிறது. அந்தப் பேரண்ட சக்திகான் உருவாக்குபவர். அதனால் நாமும் உருவாக்குபவரே. உருவாக்குபவர், உருவாக்கல், உருவாக்கப்பட்டவை இவை யாவும் ஒன்றே. இவை தனிப்பட்டவை அல்ல.
தமிழ் திருமுறை நூலான பெரிய புராணத்தைப் பற்றி நாம் ஏற்கனவே பேசி இருக்கிறோம். பெரிய புராணம் அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றி விவரிக்கிறது. இந்த நாயன்மார்கள் ஆழ்ந்த சிவபக்தர்கள். அவர்கள் பக்தர்களுக்கும் மேலானவர்கள்; சிவபெருமானின் சீடர்கள்! சிவபெருமான் அவர்களுக்கு உபதேசம் செய்ய உருவத்துடன் இல்லாவிட்டாலும் அவர்கள் அனைவரும் சிவபெருமானின் சீடர்களே! நேரடியாகச் சிவன் உபதேசம் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபதேசம் செய்து, அவர்களைப் பூர்ணத்துவம் அடையச் செய்ய சிவனுடைய சக்தியே போதுமானதாக இருந்தது.
இந்த நாயன்மார்களில் ஒருவர், தினமும் பூக்களைப் பறித்து சிவனுக்கு அர்ப்பணம் செய்வதைத் தவிர தம் வாழ்வில் வேறு ஏதும் செய்யவில்லை. மற்றொருவர் பாடல்களைப் பாடினார். அவர்கள் எதைச் செய்தாலும் தங்களைச் சிவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துச் செய்தார்கள்.
அவர்கள், தங்களையும் தங்கள் செயல்களையும் தங்களுக்கு மிகவும் பிடித்தமான சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார்கள். அவர்கள் பூக்களைப் பறிப்பதாக இருந்தாலும் சரி, பாடல்களைப் பாடுவதாக இருந்தாலும் சரி, வேறு எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் சரி, அவர்கள் முழுமையாக அந்தச் செயலில் மூழ்கி இருந்ததால், வேறு எந்த நினைவோ, எண்ணங்களோ அவர்கள் மனத்தில் இருக்கவில்லை.
சிவனின் ஸ்தூல ரூபம் நாயன்மார்களுக்குத் தேவைப்படவில்லை. அவர்கள் அனைவரும் சிவனுடைய சக்தியில் கரைந்து இருந்தார்கள். சிவனின் ஜ்வாலையில் அவர்கள் தங்களையே அர்ப்பணித்தார்கள். அவர்கள் சிவனுடன் ஒன்றாகிய இருந்தார்கள். அவர்களுக்கு, உருவாக்குபவர், உருவாக்கல், உருவாக்கப்பட்டவை இவை அனைத்தும் ஒன்றே.
அதே போல் பிருந்தாவனத்தில் இருந்த கோபிகைகள் அனைவரும் கிருஷ்ணனிடம் மூழ்கி இருந்தார்கள். கிருஷ்ணரைத் தவிர வேறு ஏதும் அவர்கள் கண்களுக்குத் தென்படவில்லை. கோபிகைகளின் சாரமாகிய ராதா தம் தோழியைப் பார்த்து, "ஏன் நான் எங்குப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் கிருஷ்ணனையே பார்க்கிறேன்?" என்று கேட்கிறாள்.
அந்தத் தோழி மிக அழகாகச் சொல்கிறாள், "ராதா, அது ஏன் என்று தெரியுமா? நீ கிருஷ்ணரையே உன் கண்ணுக்கு மையாக இட்டிருக்கிறாய்.

கிருஷ்ணரின் பிம்பத்தையே கண்களில் அணிந்திருக்கிறாய். அதனால்தான் நீ எதைப் பார்த்தாலும் கிருஷ்ணரையே பார்க்கிறாய்.”
ஒரு உண்மையான பக்தர் எல்லாவற்றிலும் கடவுளைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவருக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார். அடுத்த சில ஸ்லோகங்களில் நாம் பல்வேறு வகையான வேள்விகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்குள் நுழையக் காத்திருக்கிறது பிரபஞ்ச சக்தி
கேள்வி: ஸ்வாமிஜி, மிக, மிக உள் அடுக்காகிய நிர்வாண அடுக்கில், “கடவுளும் நீங்களும் நானும் ஒன்றே; அங்கு ஒருவர் தம்முடைய தெய்வீகத்தை உணருகிறார்,” என்று நீங்கள் சொன்னீர்கள். நித்யானந்த ஸ்பூரண தியான வகுப்பில், ஒருவருடைய மரண அனுபவத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இதைக் கற்றுத் தருகிறீர்கள். ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுதே இந்த நிலையை அடைய முடியுமா?
மிக அருமையான கேள்வி, அதற்கான விடை: “நிச்சயமாக உங்களால் அடைய முடியும்.”
நித்யானந்த ஸ்பூரண வகுப்பில் - இந்த ஏழு ஆற்றல் அடுக்குகளின் வழியே செல்லும் நுட்பங்களை நாங்கள் கற்றுத் தருகிறோம். மரணத்தின்போது இந்த அடுக்குகளின் வழியேதான் உயிர் செல்கிறது. முதல் ஐந்து அடுக்கு களும் இந்த வாழ்க்கைக் கால அளவுக்குள்ளேயே இருக்கிறது. இந்த வாழ்விலேயே அனுபவிக்கப்படுவதாக இருக்கிறது. உங்களது அன்றாட வாழ்வில் தினசரி, நீங்கள் ஸ்தூல சரீரத்திலிருந்து ஸூக்ஷ்ம சரீரத்தின் வழியாக காரண சரீரத்திற்கு செல்கிறீர்கள்.
விழிப்பு நிலையில் புலப்படும் சரீரம் ஸ்தூல சரீரம். இரவில் கனவு காணும்போது இருக்கும் சரீரம் ஸூக்ஷ்ம சரீரம்.
நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது உள்ள சரீரம் காரண சரீரம். இது மரணத்துക്കു மிக அருகில் உள்ளது. தினமும் நீங்கள் மரணம்வரை பயணம் செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வருகிறீர்கள். இந்த செயல்முறைதான் உங்களுக்குப் புத்துயிர் ஊட்டுகிறது, இயல்பிலும் தோற்றத்திலும் உள்ளுரம் பெறச் செய்கிறது, புது வலிமை பெறச் செய்கிறது.
உண்மையாகச் சொல்லப் போனால், இந்தச்
செயல்முறையை சில நாட்களுக்கு நீங்கள்
இழந்தீர்கள் என்றால், சோர்வினால் நீங்கள்
உயிர் இழக்க நேரிடும்.
காரண சரீரத்தை உங்கள் உயிர் கடந்து சென்றுவிட்டால், அது மீண்டும் திரும்பி வர முடியாது. இந்தக் காரண அடுக்கு ஒரு இருண்டப் பாதையாக, இந்த உலகமும் அதைத் தாண்டியுள்ள உண்மை நிலையும் சந்தித்துக்கொள்ளும் ஒரு புள்ளியாக, ஒரு இடமாக இருக்கிறது. இந்த உலகிலிருந்து உடல்-மனம் கடந்த நிலையான உண்மை நிலைக்கு மாறும்போது, இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இந்தக் காரண சரீரத்தின் வழியாகத்தான் உயிர் பயணம் செய்கிறது. இது ஒரு இருண்டப் பாதையாக உள்ளது.
இந்தக் காரண சரீரத்தின் இருள், ஒரு தாயின் கருப்பையில் உள்ள இருளை ஒத்திருக்கும். உடலைவிட்டுப் பிரிந்த உயிர் அந்த இருண்டப் பாதையில் பயணம் செய்து ஒரு புதிய உடலை எடுக்கிறது.
உங்களிடம் உள்ள மரண பயத்தை நீக்குவதற்காகவும் உங்களைக் கட்டுப்படுத்தும் எண்ணப் பதிவுகளை உங்களிடமிருந்து நீக்குவதற்காகவும் உங்களை இந்தப் பயணத்தில் அழைத்துச் செல்கிறேன்.
இந்த NSP வகுப்பில், உங்களுடைய ஸம்ஸ்காரங்களுக்குக் காரணமாகிய உங்கள் எண்ணப்பதிவுகளின் மீது உங்களைச் செயல்பட வைக்கிறேன். உங்களுடைய எதிர்மறைகளை நீக்கி, நீங்கள் புதிய பிறப்பு எடுக்கிறீர்கள்.
அடுத்த நிலையாகிய த்யான சிகிச்சையாளர் தீக்ஷைக்கு (Healers Initiation) நீங்கள் வரும்போது, நீங்கள் உயிருடன் இருக்கும் போதே எவ்வாறு காரண சரீரத்தையும் தாண்டி மற்ற அடுக்குகளுக்குச் செல்வது என்பதைக் கற்றுக் கொடுக்கிறேன்! தியான சிகிச்சையாளர்கள் தியானம் செய்யும்போது, மிக உயர்ந்த ஏழாவது அடுக்காகிய நிர்வாண சரீரத்தை அடைகிறார்கள். ஒவ்வொருமுறை தியானம் செய்யம்போதும் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.
எல்லாச் சமயங்களிலும் அவர்கள் தியான நிலையிலேயே இருக்கமுடியும். அதனால் அவர்கள் நிர்வாண சரீரத்திலேயே எப்போதும் இருக்கமுடியும். இந்தப் பேரண்டத்தின் குணப்படுத்தும் ஆற்றல் அவர்களுக்குள் பாய்ந்து அவர்கள் மூலமாக நோய்களைக் குணப்படுத்துகிறது.
அதனால் நிர்வாண சரீரத்தை அடைய நீங்கள் மரணம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அது, உங்களுடைய உடல் - மனஅமைப்பைத் திறந்து வைத்து, உங்களுக்குள் நுழையக் காத்திருக்கும் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை, உங்களுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டியதுதான்.

தியாகத்தின் பொருளைப் புரிந்துகொண்டு தூய்மையடையுங்கள்

4.26 வேறு சில யோகிகள், காது முதலிய எல்லாப் புலன்களையும் மன அமைதி என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். மற்றும் சில யோகிகள், ஒலி முதலிய எல்லாப் புலன்நுகர் பொருட்களையும் புலன்கள் என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்.
4.27 ஆத்ம ஞானத்தில் விருப்பமுடைய வேறு சில யோகிகள், புலன்கள் மற்றும் பிராணன்களின் செயல்கள் அனைத்தையும் யோகம் என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். அவர்கள், மனஅமைதி என்னும் யோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
4.28 வேறு சிலர், திரவியங்களைக் கொண்டு யாகம் செய்கிறார்கள்; சிலர், தவம் என்னும் யாகத்தையும் சிலர் அஷ்டாங்க யோக வடிவான யாகத்தையும் மேலும் சிலர், அஹிம்சை முதலிய தீவிரக் கொள்கையோடு கூடிய தன்னைப் பற்றிய அறிவைக் கற்றுக்கொள்ளுதலாகிய 'ஞான யஜ்ஞ'த்தைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

மற்றும் சிலர், உள் இழுக்கும் சுவாசமாகவும் வெளிவிடும் சுவாசமாகவும் இருக்கிற உயிர்ச்சக்தியான பிராணனை ஹோமம் செய்கிறார்கள். உள்சுவாசம் வெளிசுவாசம் இவற்றின் போக்கைக் கவனிப்பதன் மூலம் சுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
வேறு சிலர், முறையாக உண்பவர்களாக உயிர்ச் சக்தியை உயிர்ச் சக்தியிலேயே ஹோமம் செய்கிறார்கள். இந்த சாதகர்கள், யக்ஞங்களின் பொருளை அறிந்தவர்கள். யாகத்தின் மூலம் பாவங்கள் அல்லது கர்மங்கள் நீக்கப்பட்டு, அவர்கள் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள்.
குரு வம்சத்தில் சிறந்தவனான அர்ஜுனா! யக்ஞத்தில் எஞ்சிய அமுதத்தைப் பருகுகிற யோகிகள் சாச்வதமான மேலான பரமாத்மாவை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவருக்கு இவ்வுலகமே இல்லை. அப்படியிருக்கப் பரலோகம் ஏது?
இவ்வாறு, செயல்களிலிருந்து பிறக்கும் பல வகை யக்ஞங்களைப் பற்றி வேதங்களில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்வதின் மூலம் ஒருவர் விடுதலை அடைகிறார்.

வரவேற்கும் மனப்பாங்கு கடவுளையே வரவழைக்கும்
இந்த ஸ்லோகங்கள் எல்லாவற்றிலும் கிருஷ்ணர் பல்வேறுவிதமான யாகங்களைப் பற்றிப் பேசுகிறார். நீங்கள் ‘யாகம்’ என்று சொல்லும்போது, அது கொடுக்கும் ‘செயல்’ பற்றிக் குறிப்பிடுவதற்காகச் சொல்லப்படும் சாதாரணமான வார்த்தை இல்லை. அது கொடுக்கும்போது உள்ள ‘மனப்பாங்கு’ பற்றிக் குறிப்பிடுவதற்காகச் சொல்லப்படும் வார்த்தை. ‘செயல்’, ‘மனப்பாங்கு’ இந்த இரண்டின் பொருளைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் மிகவும் முக்கியம். இல்லாவிட்டால், நீங்கள் வேதங்களில் சொல்லியது போல் சடங்குகளையும் அனைத்து செயல்களையும் செய்வீர்கள். ஆனால் அந்தச் சடங்கோ, அந்தச் செயலோ எந்த நோக்கத்தோடு செய்யப்பட வேண்டுமென்பதைத் தவற விட்டுவிடுவீர்கள்.
பழமையான இந்து இதிகாசமான பாகவதத்திலிருந்து ஒரு அழகான கதை.
ஒருமுறை கிருஷ்ணர் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாடி முடித்ததும் அவருடைய நண்பர்கள் மிகவும் களைப்படைந்து கிருஷ்ணரைப் பார்த்து, "ஓ கிருஷ்ணா! எங்களுக்கு மிகவும் பசிக்கிறது. உணவிற்காக எங்குச் செல்வது என்று தயவுசெய்து சொல்," என்று கேட்டார்கள்.
"மிகவும் படித்த பண்டித பிராமணர்களும் சமயகுருமார்களும் மோட்சம் அடைய வேண்டுமென்பதற்காக அருகில் உள்ள கூடத்தில் மிகப்பெரிய வேள்வி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று, நான்தான் உங்களை அவர்களிடம் அனுப்பியதாகவும் உங்களுக்கு உண்ண உணவு கொடுக்குமாறும் கேளுங்கள்," என்றார் கிருஷ்ணர்.
கிருஷ்ணருடைய நண்பர்களும் கிருஷ்ணர் சொன்னதுபோல் அந்த முனிவர்களிடம் சென்று, "கிருஷ்ணன்தான் எங்களை இங்கு அனுப்பினான். நாங்கள் பசியாக இருக்கிறோம். எங்களுக்கு உண்பதற்கு ஏதாவது கொடுங்கள்," என்று கேட்டார்கள்.
சமயச் சடங்கு முறைகளையும் யாகங்களையும் வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி செய்வதில் அந்த ப்ராஹ்மணர்கள் கட்டுண்டு இருந்தார்கள். ஆனால் அந்த யாகத்தின் நோக்கத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அந்த வேள்வி செய்வதன் நோக்கமே, அந்தத் தெய்வீக சக்திக்கு காணிக்கை கொடுப்பதுதான்.
எந்தச் சக்திக்கு அவர்கள் அந்த வேள்வியை அர்பணிக்கின்றார்களோ, அந்தச் சக்தியே அவர்களிடம் நேரடியாக யாசகம் கேட்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அந்த ப்ராஹ்மணர்களால் அதை உணர முடியவில்லை. அவர்கள் அந்தச் சிறுவர்களுக்கு உணவு ஏதும் கொடுக்கவில்லை.
'யாகம்' என்னும் சொல் கொடுக்கும்செயலைப் பற்றிக் குறிப்பிடவில்லை; கொடுக்கும்போது உள்ள உளமனப்பாங்கைப் பற்றிக் குறிக்கிறது.
ஏமாற்றத்துடன் திரும்பிய கிருஷ்ணரின் நண்பர்கள், கிருஷ்ணரிடம் என்ன நடந்தது என்பதைச் சொன்னார்கள். அந்த மூடாள் ப்ராஹ்மணர்களைப் பற்றி அச்சிறுவர்களிடமிருந்து கேட்ட கிருஷ்ணர் சிரித்து விட்டு, "இப்போது இந்த ப்ராஹ்மணர்களின் கள்ளங்க கபடமற்ற மனைவிமார்களிடம் சென்று அவர்களிடமும் அதையே கேளுங்கள்," என்று சொன்னார்.
அவரின் நண்பர்களும் ப்ராஹமணர்களின்
மனைவியரிடம் சென்று, "ஓ பெண்களே,
இங்கு அருகாமையில் விளையாடிக்
கொண்டிருக்கும் கிருஷ்ணரால் நாங்கள்
அனுப்பப்பட்டிருக்கிறோம்.
நாங்கள் மிகவும் பசியுடன்
இருக்கிறோம். அதனால் உங்களிடம்
உணவுக்காக வந்திருக்கிறோம்," என்று
சொன்னார்கள்.
அத்தைக் கேட்ட அந்தப் பெண்கள், தங்களுக்குச் சேவை செய்ய ஒரு மிகச் சிறந்த தருணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து, அவர்கள் அனைவர் வீட்டிலும் இருந்த உணவுகளை எல்லாம் ஒன்று திரட்டி எடுத்துக் கொண்டு கிருஷ்ணருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் உணவு படைப்பதற்காக விரைந்து சென்றார்கள்.
அந்தச் சேவை மனப்பான்மையும் விருந்தினர்களை வரவேற்கும் மனப்பாங்கும்தான் மிக முக்கியம்.
மஹாபாரத்தில் மிக அழகான ஸ்லோகம் இருக்கிறது. "ஒரு விருந்தினர் அனைத்துக் கடவுளர்களுடன் வருவார். அந்த விருந்தினர் மதிக்கப்பட்டால், அந்தக் கடவுளர்களும் அவர்களால் மதிக்கப்பட்டவர்களாகிறார்கள். ஏமாற்றத்துடன் அவர் சென்றால், அந்தக் கடவுளர்களும் ஏமாறுவார்கள்?" என்று அந்த ஸ்லோகம் சொல்கிறது.
அதனால்தான் ஸம்ஸ்க்ரு தத்தில், அதிதி தேவோபவ - ‘விருந்தினரே கடவுள்’ என்று நாம் சொல்கிறோம். திதி என்பது தேதியைக் குறிக்கிறது. 'அதிதி என்பது அதன் எதிர்மறை சொல். அதனால் எவரொருவர் முன் கூட்டியே தேதி, சந்திப்புத்திட்டம் இல்லாமல், எதிர்பாராத சூழ்நிலையில் உங்களைத் தேடி திடீரென்று வருகிறாரோ அவர்தான் அதிதி அல்லது விருந்தாளி.
யாராவது ஒருவர் எதிர்பாராத சூழ்நிலையில் உங்களைத் தேடி வந்தாலும் அவருக்கும் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான வரவேற்கும் மனப்பாங்கு. ஸம்ஸ்க்ரு தத்தில், கொடுப்பதற்கு தானம் என்ற வார்த்தை வழங்கப்படுகிறது. தானம் என்றால் பங்கிட்டுக்கொள்ளுதல், பங்களித்தல் என்று பொருள்.
சமைக்கப்பட்ட உணவைப் பாதிக்கிற
நான்கு வகையான குறைபாடுகளைப் பற்றி
ஆயுர்வேதம் சொல்கிறது.
கால தோஷம் ; சமைக்கப்பட்ட உணவை நீண்ட நேரம் வைத்திருக்கும்போது, அதன் தரம், தன்மை கெட்டுப் போகிறது. இதைத்தான் கால தோஷத்தினால் பாதிக்கப்பட்ட உணவு என்கிறோம்.
ரச தோஷம் ; நறுமணக் குறைபாடு உணவை
சுவை இழக்கச் செய்கிறது. அதை ரச தோஷம்
என்கிறோம்.
யாராவது ஒருவர்
எதிர்பாராத சூழ்நிலையில்
உங்களைத்
தேடி வந்தாலும்
அவருக்கும்
சேவை செய்யுங்கள்.
அதுதான்
உண்மையான
வரவேற்கும்
மனப்பாங்கு.
ஸம்ஸர்க தோஷம்; சேர்க்கையின் குறைபாட்டால் அதாவது அசுத்தமான கைகளால் உணவு தீண்டப்பட்டாலோ, உணவில் பூச்சி முதலானவை விழுவதாலோ ஏற்படுவது ஸம்ஸர்க தோஷம்.
பாவ தோஷம் ; இனிமையான பண்பு இல்லாமலோ , உள்ளன்பு இல்லாமலோ ஒருவர் உணவு வழங்கும்போது, உணவு வழங்குபவருடைய மனத்தின் குறைபாடுகள், வழங்கப்படும் அந்த உணவைப் பாதிக்கும். அவ்வகையான உணவு உணவே அல்ல. அது ஒரு விஷம்; நான்கு வகையான குறைகளில் இந்த நான்காவதாக சொல்லப்பட்ட பாவ தோஷம் மிகவும் மோசமானது.
உண்மையான வேள்வியின் பொருளே அது எதற்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்துதான் உள்ளது.
மரங்களைப் பாருங்கள். அவை புயல் காற்று, அடை மழை, வெப்பம் பனி இவை அனைத்தையும் எதிர்கொண்டு, நம்மை அவற்றிலிருந்து பாது காக்கிறது; மற்றவர்களின் நலனுக்காகவே அவை வாழ்கின்றன. தன்னிடம் வருபவர் எவரையும் அது திருப்பி அனுப்புவதில்லை.
தன்னை வெட்ட வரும் மனிதரைப் பார்த்தாலும் கூட, அது தன் முகத்தைத் திருப்பிக்கொள்வதில்லை. அவை, தன்னை வெட்ட வரும் அந்த மனிதருக்கும் நிழல் கொடுக்கிறது. பழங்களையும் பூக்களையும் தருகிறது. இலைகள், பூக்கள், பழங்கள், வேர்கள், பட்டை, மரக்கட்டை, அதன் நறுமணம், அதன் நிழல் என மரத்தின் எல்லாப் பகுதிகளுமே அனைவருக்கும் பயன்படுவனவாகவே இருக்கின்றன.
கொடுக்க முடியாததைத் தியாகம் செய்வதே உன்னதத்திலும் உன்னதம்
ஒரு சின்ன கதை:
பயங்கரமான நோய் ஒன்றினால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டாள். சிறுமியினுடைய ஐந்து வயது நிரம்பிய சகோதரனும் அப்போதுதான் அந்த நோயிலிருந்து குணமாகி இருந்தான்.
மருத்துவர் அந்தச் சிறுவனைப் பார்த்து, "உன்னுடைய ரத்தத்தை உன் சகோதரிக்கு மாற்றம் செய்தால்தான் உன் சகோதரியைக் காப்பாற்ற முடியும். உன் சகோதரிக்கு ரத்தம் கொடுக்க நீ தயாராக இருக்கிறாயா?'' என்று கேட்டார்.
அந்தச் சிறுவன் பயந்து போனான். அவன் சிறிது தயக்கத்திற்குப் பின், "சரி டாக்டர்,'' என்று சொன்னான்.
அந்த இரத்தமாற்றம் நிறைவடைந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அந்தச் சிறுவன் மருத்துவரைப் பார்த்து, "டாக்டர் நான் எப்போது மரணம் அடைவேன்,'' என்று மிக மெதுவாகக் கேட்டான்.
அதன் பிறகுதான் அந்த மருத்துவருக்கு அச்சிறுவனின் பயம் புரிந்தது. தனது இரத்தத்தை தன் சகோதரிக்குக் கொடுப்பதனால், தனது உயிரையே கொடுப்பதாக அச்சிறுவன் நினைத்துக் கொண்டான்.
அந்தச் சிறுவன் தன் சகோதரிக்கு இரத்தம்
கொடுப்பதன் மூலம், தான் இறந்துவிடுவோம்
என்று எண்ணினான். அப்படி இருந்தும்
அவன் தன் சகோதரிக்காகத் தன் உயிரையே
தியாகம் செய்யத் தயாராக இருந்தான்.
உங்களால் கொடுக்க முடியாத ஒன்றை நீங்கள்
கொடுக்கும்போதுதான், அதை உண்மையான
தியாகம் என்று கருத முடியும். உங்களால்
கொடுக்க முடிந்த ஒன்றைப் பிறருக்குக்
கொடுக்கும்போது, அது உண்மையான
தியாகம் ஆகாது.

ஒரு செல்வந்தர் நன்கொடை
கொடுக்கும்போது, அவர் எதையும் த்யாகம்
செய்யவில்லை. அவர் ஒரு நல்ல செயலைச்
செய்திருக்கிறார். அவ்வளவுதான்!
த்யாகம் என்ற சொல் இங்கு வேள்வி,
யாகம், யக்ஞம், ஹோமம் என்பவற்றையும்
குறிக்கிறது.
கிருஷ்ணர் பல வகையான த்யாகங்களைப் பற்றி இங்குக் குறிப்பிடுகிறார். செல்வத்தைத் த்யாகம் செய்தல், யோகம் மற்றும் தவம் இவற்றின் மூலம் த்யாகம் செய்தல். செல்வம், உடல், மனம், ஆன்மீகம் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து த்யாகம் செய்தல். இப்படிப் பலவகையான த்யாகங்களைப் பற்றி அவர் பேசுகிறார்.
ஒருவர் இவற்றைத் தம் உடலை வருத்தியோ, தம் செல்வத்தைச் செலவிட்டோ செய்தால் மட்டுமே, அவை உண்மையான த்யாகங்களாக இருக்கும். இல்லையென்றால், அவை அர்த்தமற்ற வெறும் சடங்குகளாகவே இருந்துவிடும்.
எப்படி இருந்தாலும் தன்னால் கொடுக்க முடிந்தவற்றை ஒருவர் கொடுக்கும்போது கூட, அதனை நல்ல நோக்கத்தோடு செய்தால், அவை அந்த மனிதருக்கு நல்லதையே கொடுக்கும். அவருக்கு நன்மையே செய்யும். அவருடைய நோக்கமே அவருடைய மன அமைப்பை மாற்றி அமைத்து, அவரை விடுதலை அடையச் செய்யும்.
தம்முடைய செல்வத்தை மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதில் நம்பிக்கையில்லாதவரால், தம்முடைய செல்வத்தை இப்போது இந்த வாழ்வில் அனுபவிக்க முடியாதது மட்டுமல்லாமல், அவருடைய அந்த மன அமைப்பால் அடுத்தடுத்த பிறவிகளிலும் துன்பற நேரும்.

ஒருவர் தமக்கு மிகவும் பிடித்த
ஒன்றையோ அல்லது கொடுப்பதற்கு
மிகவும் கஷ்டமான ஒன்றையோ த்யாகம்
செய்தால், அவர் முற்றிலும் மாறுபாடான த்யாக நிலையை அடைந்து, அதன் மூலம் விடுதலை அடைகிறார். அப்படிப்பட்ட மனிதர் விடுதலைக்கு அழைத்துச் செல்லும் பந்தங்கள் அற்ற நிலைக்குள் நுழைகிறார்.
கிருஷ்ணர் காலத்திலும் சரி, இப்போதும் சரி நீங்கள் சொல்வதுதான் நடந்து வருகிறது. தானம் கொடுப்பவர்களில் பலர் தங்களுடைய அஹங்காரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காகவும் தாங்கள் கொடுப்பதை விட அதிகமான பலன்களைத் திரும்பப் பெறலாம் என்ற நோக்கத்தோடும்தான் தானம் கொடுக்கிறார்கள்.

பலனை எதிர்பார்க்காமல் தானம்செய்யும் குணம் மட்டும் ஒருவரிடம் இருக்குமானால்...
கேள்வி : பணக்காரர்கள் சுயநல நோக்கத்தோடு தானம் கொடுக்கலாம். ஆனால் அதன் மூலம் பயனடைபவர்கள், அந்தச் சுயநல நோக்கத்தைப் பார்ப்பதில்லை. அவர்கள் பலனை மட்டுமே பார்க்கிறார்கள். தானம் கொடுக்கும்போது, உயர்ந்த நோக்கத்தோடுதான் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினால் மிகச் சிலரே தானம் கொடுக்க நேரிடும். அது தேவை உள்ளவர்களைத்தான் அதிகமாகப் பாதிக்கும். பிறகு என்ன செய்வது?
கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய அரசர்கள் அனைவரும் இவ்வகையான வேள்விகளை, தங்களுடைய தகுதியை உயர்த்திக்கொள்வதற்காகச் செய்யப்படும் ஒரு சடங்காகச் செய்தார்களே தவிர, ஆழ்ந்த சுயநலமற்ற உணர்வோடு செய்யவில்லை.
இதை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
இந்த உலகம் அவ்வழியில்தான் உள்ளது.
ஒருவர் பணத்தைத் தானமாகக் கொடுப்பதற்கு
முன்பே, புகைப்படக்காரர் அங்குத்
தயாராக இருக்கிறாரா, தாம் பணத்தைக்
கொடுக்கும்போது புகைப்படம் எடுத்து,
புகைப்படத்தை அடுத்த நாள் நாளிதழில்
பிரசுரிக்கிறாரா என்பதுவரை ஊர்ஜிதம்
செய்துகொள்வார்.
இந்தச் செயல்முறையில், த்யாகத்தின் முழுப் பொருளும் மறைந்து போகிறது. பிறகு த்யாகம் என்ற பெயரில் என்ன நடக்கிறது? என்ன
ஒவ்வொரு மூச்சையும்
அது
எங்கிருந்து புறப்பட்டதோ,
அந்தப் பேரண்டத்திற்கே
அர்ப்பணம் செய்யும்போது
அது தியாகமாக
மாறிவிடுகிறது.
நடக்கிறது என்றால் வியாபாரம்தான்.
உங்கள் உடல் ஆரோக்கியத்துடனும் பலத்துடனும் இருக்கும் பொருட்டு, நீங்கள் யோகம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது, கிருஷ்ணர் இங்கே சொல்லும் த்யாகம் இல்லை. மூச்சையோ, வாழ்க்கை சக்தியையோ த்யாகம் செய்யும் செயல் இல்லை இது.
இந்த ஸத்யத்தைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு மூச்சையும் அது எங்கிருந்து புறப்பட்டதோ அந்தப் பேரண்ட ஆற்றலுக்கே அர்ப்பணம் செய்து, முழுமையான விழிப்புணர்வுடனும் செய்தால், அது த்யாகமாக மாறிவிடுகிறது.
‘தன்னை உணர்தல்’ என்ற பாதையில் செல்வதற்கு, என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு, கிருஷ்ணர் வழிகாட்டுகிறார். அவர் சுயநல நோக்கத்தோடு கொடுப்பவர்களைத் தடுத்து நிறுத்துவதில்லை.
ஆனால் அவர், சுயநலமின்றி கொடுப்பவர்கள் எவ்வாறு அழிவற்ற நிலையான உணர்வு நிலையை நோக்கி நகர்ந்து பயன் அடைகிறார்கள் என்பதைப் பற்றிச் சுருக்கமான குறிப்புத் தருகிறார்.
“நீங்கள் கீதா என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் அது முடிவில் த்யாகி என்று முடியும். அதாவது த்யாகம் என்று உணர்த்தும் வார்த்தையில் வந்து முடிப்பீர்கள்,” என்று இராமகிருஷ்ணர் சொல்லி இருக்கிறார்.
கீதையின் மையக் கருத்தாக த்யாகம் அல்லது
பிணைப்பில்லாதிருத்தல்தான் என்பதுதான்
உள்ளது. இங்கு இதுதான் முக்கிய
பிரச்சினையாக இருக்கிறது.
பலனை எதிர்பார்க்காமல் பொருளைத்
தானமாகக் கொடுக்கும் குணம் ஒருவரிடம்
இருக்குமானால், அதுவே நாளடைவில்
எந்தச் செயலையும் பலனை எதிர்பார்க்காமல்
செய்யும் நிலைக்கு அவரை அழைத்துச்
சென்றுவிடும்.
கீதையின்
மையக் கருத்து:
த்யாகம்
அல்லது
பிணைப்பில்லாதிருத்தல்!
ஒரு செயலைச் செய்வதனால் என்ன கிடைக்கும்; அதைச் செய்யாவிட்டால் என்ன நிகழும்; அதிலிருந்து அதிகமான பலனை எப்படி பெற முடியும் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாம் செய்ய வேண்டிய செயல்களைச் செய்வதற்கு இந்தக் குணம் வழிகாட்டும்.
பலன் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கக் கற்றுக் கொண்டால், எதிர்பார்ப்பு என்ற பந்தத்தையே உடைத்துவிடுவீர்கள். இது உங்களை விடுதலை அடையச் செய்யும்.
மற்ற மக்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் ; உலகில் உள்ள மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். இந்தப் பேரண்டம் எப்போதுமே நிலையாக, காலங்காலமாகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. விஞ்ஞானிகளின் கணக்கெடுப்பின் படி சில பில்லியன் வருடங்கள் மட்டும் அல்ல!
அது, அவ்வகையான மக்களையும் உயிர்வாழவைக்கும். நீங்கள் கிருஷ்ணரின் வார்த்தைகளைப் புரிந்து கொண்டால், அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
எதையும் கேட்காமல் கொடுங்கள்; எந்த நோக்கமும் இல்லாமல் த்யாகம் செய்யுங்கள். இது உங்களை மேலே உயர்த்தும். அது உங்களை நிலையான ஆனந்தமாகிய நித்யானந்தத்திற்கு அழைத்துச் செல்லும்.


நீங்கள் பாவிகள் அல்ல!
ஓ எதிரிகளை வெல்பவனே! திரவியங்களால் செய்யப்படும் யக்ஞத்தைக் காட்டிலும் ஞான யக்ஞமே மிகவும் மேலானது. ஓ ப்ரீதாவின் மகனே! கர்மங்கள் அனைத்துமே ஞானத்திலேயே வந்து முடிவு பெறுகின்றன.
ஒரு ஞான குருவை அணுகி கேள்விகள் கேட்டும் தொண்டுகள் செய்தும் இந்த ஸத்யங்களைப் புரிந்துகொள். ஒரு ஜ்ஞானகுரு ஸத்யத்தை உணர்ந்து இருப்பதால், அவர் உனக்குத் தீட்சை அளித்து ஞானத்தை உபதேசிக்க முடியும்.
ஓ பாண்டவா, இதைத் தெரிந்து கொண்டால் ஆசையினாலோ அல்லது மாயையினாலோ வேதனைப்படமாட்டாய். இதன் மூலம் உயிர்கள் அனைத்தும் மஹோன்னதமான என்னிடத்தில் இருப்பதை நீ அறிந்துகொள்வாய்.
நீ பாவிகளுக்குள்ளேயே அதிக பாவம் செய்தவனாக இருந்தாலும்

ஞானம் என்னும் படகினால், நிச்சயமாக நீ துன்பம் என்னும் கடலை முழுமையாகக் கடந்துவிடுவாய்.
உருவமில்லாப் பரம்பொருள் உருவம் தாங்கி வந்துவிட்டது
பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனின் தலையையும் பாதத்தையும் காண முயற்சிக்கும் கதையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். விஷ்ணுவால் தாம் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொள்ள முடிந்தது, ஆனால் பிரம்மாவால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
செல்வம் படைத்த ஒருவர் செல்வத்தின் வரையறையை உணருகிறார், ஆனால் அறிவு படைத்த ஒருவர் அஹங்காரம் கொண்டவராக மாறிவிடுகிறார்; அவர் அறிவின் வரையறையை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்பதுதான் இந்த பிரம்மா, விஷ்ணு கதையால் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.
அறிவைத் தியாகம் செய்வது செல்வத்தைத் தியாகம் செய்வதை விட மிக மிகக் கஷ்டம். ஒரு அறிஞர், "எனக்கு ஒன்றும் தெரியாது," என்று ஒத்துக்கொள்வது, தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம். தமது அடையாளத்தை அவர் இழந்துவிடுகிறார்.
"உங்கள் அறிவை, பட்டறிவை என்னுடைய பாதத்தில் சமர்ப்பியுங்கள். அதன் மூலம் இறுதியான ஸத்யத்தை அனுபூதியாக்கிக்கொள்ளுங்கள்," என்று கிருஷ்ணர் தேடுதல் உடையவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
குரு என்பவர் ஸத்யத்தை அவரே உணர்ந்தவராக இருப்பார். ஆனால் ஒரு ஆசிரியரோ, அறிவைத் தகவல் தொடர்பு மூலம் பெறுபவராக இருப்பார். குரு என்பவர் மட்டும்தான் அவர் அனுபவமாக பெற்ற ஸத்யத்தை வெறுமனே மாற்றித் தருவார். அவர் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஸம்ஸ்க்ரு 'தத்தில் மூன்று அழகான வார்த்தைகள் இதை அழகாக விவரிக்கின்றன.
நீங்கள் அன்னையின் கருப்பையில், பூ கர்ப்பத்தில் பிறந்தீர்கள்; இது உங்களின் ஸ்தூல பிறப்பைக் குறிக்கிறது.
ஆசிரியர் தனது அன்பாலும் போதனைகளாலும் இருதயத்தில், ஹ்ருத் கர்ப்பத்தில் பிறக்க வைக்கிறார்.
ஒரு குரு உங்களை முற்றிலுமாக உணர்வுமாற்றம் அடையச் செய்து, புதியவராக்கி, உங்களை ஜ்ஞான கர்ப்பத்தில் பிறக்க வைக்கிறார்.
அப்போது நீங்கள் த்விஜ, மீண்டும் பிறக்கிறீர்கள்!
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஞான குருவிடம் உங்களைத் திறந்து வைப்பதுதான். நீங்கள் உங்களை, உங்கள் குருவிடம் திறந்து வைக்கும்போது, அவருடைய ஸாந்நித்யமே உங்களைக் குணப்படுத்தும். அவருடைய உணர்வு நிலைக்கே உங்களை உயர்த்த முடியும். இதைத்தான் விச்'வரூப தர்ச'னம் என்று சொல்கிறோம்.
விச்'வரூப தர்ச'னம் என்பது கிருஷ்ணர், தாம் யார் என்பதை அர்ஜுனனுக்கு உணர்த்தவதற்காக, தனது பேரண்ட ரூபத்தை அர்ஜுனனுக்குக் காண்பித்தத்தைக் குறிக்கிறது.
தான் இருக்கும் விழிப்பு உணர்வு நிலைக்கே அர்ஜுனனையும் கிருஷ்ணர் உயர்த்துகிறார்.
குருமார்களுக்கு, அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் என்று ஏதும் இருக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அனுபவித்து தீர்ப்பற்குக் கர்மா என்று ஏதும் கிடையாது.

மக்கள் மீது, மனித சமுதாயத்தின் மீது உள்ள
முழுமையான கருணையினால் மட்டுமே
அவர்கள் இந்தப் பூமிக்கு வருகிறார்கள்.
காற்றழுத்ததாழ்வு மண்டலப் பகுதி காற்றை ஈர்ப்பது போல், இந்த உலகத்தில் மனச்சே சார்வு ஏற்படும்போது, குரு கீழிறங்கி வரவேண்டுமென்று மக்கள் விரும்பும்போது, உருவமற்ற பேரண்ட சக்தி உருவத்துடன் கீழிறங்கி வருகிறது. இந்தச் சக்திதான் கிருஷ்ணர், கிறிஸ்து, புத்தர் என்று பல்வேறு உருவங்களில் அறியப்படுகிறது.
தெய்வீக ஆற்றல் உங்களுக்குள் பாய்ந்துவிடும்
புத்தர் சொல்கிறார்
புத்தம் ச்ரணம் கச்சாமி
தம்மம் ச்ரணம் கச்சாமி
ஸங்கம் ச்ரணம் கச்சாமி
இதன் பொருள்
'ஞான குருவாகிய புத்தரிடம் நான் சரண் அடைகிறேன் புத்தரின் போதனைகளுக்கு நான் சரண் அடைகிறேன் புத்தரின் இயக்கத்திற்கு நான் சரண்அடைகிறேன்'
உண்மையில், குரு, அவரது போதனைகள், அவரது சங்கம் இவை மூன்றும் வேறுபட்ட பொருட்கள் அல்ல. குரு அவரது உடல், அவரது போதனைகள், அவரது சங்கம் இவை மூன்றிலும் வாழ்கிறார்.
தேடல் உடையவர்களின் அறியாமையை நீக்குவதற்காகவும் அவர்களுக்குப் பாதையைக் காண்பிப்பதற்காகவும் குருமார்கள் வருகிறார்கள்.
குருவினுடைய மூன்றில் ஒரு பங்கு ஆற்றல்தான் அவரது ஸ்தூல சரீரத்தில் இருக்கிறது. மீதமுள்ள பகுதிகள் அவருடைய போதனைகளிலும் அவருடைய ஸங்கத்திலும் இருக்கின்றன.
'நித்யானந்த என்பதில் நித்யம், த்யானம், ஆனந்தம் இவை மூன்றும் ஒருங்கிணைந்து உள்ளது.
நித்யம் - ஸ்தூல உடலில உள்ள குருவாகிய நித்யானந்தா
த்யானம் - எனது போதனைகள், எனது தியான நுட்பத்தைப் பற்றிய செய்திகள்.
ஆனந்தம் - உங்களுக்குள் புதைந்து இருக்கும் ஆனந்த ஊற்றை வெளிகொண்டு வருவதற்கான எனது இயக்கம்.
இந்த மூன்றும் ஒருங்கிணைந்து
> ஒரு குரு
> உங்களை முற்றிலுமாக
> உணர்வுமாற்றம்
> அடையச் செய்து,
> புதியவராக்கி,
> உங்களை
> ஞான கர்ப்பத்தில்
> பிறக்க வைக்கிறார்.
நித்யானந்தம் என்று அழைக்கப்படும் ஆற்றலாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,
ஸ்தூல ரூபத்தில் குருவைப் பின் தொடர்வதாகிய இந்த முதல் நிலையை செய்வது மிகவும் எளிது. ஏனென்றால் இயல்பாகவே குருமார்கள் மனத்தைக் கவர்பவர்களாகவும் நம்மை ஈர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
அடுத்த படி நிலை, அவரது போதனைகளைப் பின்பற்றுவது. இது சிறிது கஷ்டமானது. ஏனென்றால், குருவின் அழகிய உருவத்தை உற்றுப் பார்ப்பதைத் தவிர, இப்போது நீங்கள் வேறு ஏதோ ஒன்றைச் செய்தாக வேண்டும்.

நீங்கள் அவருடைய போதனைகளைக்
கேட்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைப்
பின்பற்ற வேண்டும்; செயல்படுத்த
வேண்டும்.
அதன் பிறகுதான் நீங்கள் குரு என்ன உபதேசம் செய்கிறாரோ அதை உள்வாங்குவீர்கள். ஆனால் இதற்கு உங்களிடம் இருந்து சிறிது முயற்சி தேவைப்படுகிறது. அது உங்களுடைய சுயவளர்ச்சிக்காகவே இருந்தாலும்கூட, உங்களது தமஸ், மந்தத் தன்மை உங்களை அதைச் செய்யவிடாமல் தடுக்கும்.
இறுதி நிலையில், நீங்கள் உங்கள் வாழ்வை இந்த ஸங்கத்திற்காகவும அவருடைய போதனைகளைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணிக்கிறீர்கள். இந்த நிலை மிகவும் கஷ்டமான ஒன்று, ஏனென்றால் உங்கள் வாழ்நாள் முழுவதையும் ஸங்கத்திற்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. இந்த மூன்றாவது நிலையில், இன்றியமையாத, மிகவும் முக்கியமான பண்பான ‘அர்ப்பணிப்பு மனப்பான்மை’ உங்களிடம் இருக்க வேண்டியுள்ளது.
ஆச்ஃரம வாழ்க்கை மிகவும் சுலபமானது என்றும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எல்லாம் வந்து வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, ஒரு எளிதான வாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்ற இடம் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். அப்படி இல்லை!
குரு என்பவர் மட்டும்தான்
தாம் அனுபவமாகப் பெற்ற
ஸத்யத்தை
வெறுமனே
உங்களுக்கு
மாற்றித் தருவார்.
ஆச்ரம வாழ்வு வேலைகள் நிறைந்த வாழ்வு. ஏனென்றால் நீங்கள் ஒவ்வொரு கணமும் குருவின் போதனைகளைச் செயல்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். உங்களுடைய ஸங்கம் முழுவதுமே அவருடைய வார்த்தைகளைப் பரப்புவதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
நீங்கள் குருவிடம் சரண் அடையும்போது, நீங்கள் அவருடைய ஸங்கத்திற்கும் போதனைகளுக்கும் சரண் அடைகிறீர்கள். நீங்கள் ஸ்தூல நிலையில் சரண் அடையும்போது, உங்களுடைய ஸ்தூல உடலையும் உங்களுடைய வசதிகளையும் குருவுக்குச் சரண் செய்து விட்டு, அவருடைய போதனைகளை உள் வாங்கிக் கொண்டு, அதைப் பரப்புகிறீர்கள்.
நீங்கள் குருவிடம்
சரணடையும்போது,
அவருடைய
ஸங்கத்திற்கும்
போதனைகளுக்கும்
சரணடைகிறீர்கள்.
ஸ்தூல நிலையில் நீங்கள் உங்கள் சுகபோகங்களை, செல்வம், உணவு, உறக்கம் இவற்றின் மீதுள்ள விருப்பங்களை த்யாகம் செய்கிறீர்கள். இதனை த்யாகம் என்று கூட சொல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் இதைத்தான் உண்மையில் செய்ய விரும்பினீர்கள் என்பதையும் உங்கள் காலத்தையும் சக்தியையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தும்வழி இதுதான் என்பதையும் உங்கள் இருப்புத் தன்மையிலிருந்தே உணர்வீர்கள்.
இந்த ஸங்கத்தின் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, மிகப்பெரிய பாரமாகவும் மிகப்பெரிய பொறுப்பாகவும் தோன்றிய எல்லாமே உண்மையில் ஒரு ஆனந்த அனுபவம்தான் என்பதை நீங்களே உணர்வீர்கள். ஒரு குருவின் ஸங்கம் முழுமையான ஆனந்தத்தைத் தவிர வேறு என்ன கொடுக்க முடியும்?
குருவிடமும் ஸங்கத்திடமும் சரண் அடைந்து, பொறுப்பேற்று எழுந்து நிற்கும் அந்தக் கணமே, தெய்வீக ஆற்றல் உங்களுக்குள் பாய்ந்து ஓடுவதையும் நீங்களும் உங்கள் வாழ்க்கை நீரோட்டம் போகிற போக்கிலேயே உங்கள் முயற்சியின்றியே எளிதாகப் பாய்ந்து ஓடி, உங்களை நீங்களே மிக அழகாக வெளிப்படுத்துவதையும் காண்பீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான், நீங்கள் உறுதியடனும் எளிதில் கிடைக்கக்கூடிய, பயன்படுத்திக்கொள்ள கூடிய நிலையிலும் இருப்பதுதான். அப்போது தெய்வீக ஆற்றல், உங்களை திறமையுடையவர்களாகச் செய்துவிடும்.
எது நிஜமான நேசம்? எது நிஜமல்ல?
மன ரீதியாக, உங்கள் பட்டறிவை குருவுக்கு, அவரது ஸங்கத்திற்கு அர்ப்பணம் செய்கிறீர்கள். உங்கள் மனத்தின் செயல் திறனையும் மனத்தின் கடுமையான முயற்சிகளையும் ஸங்கத்திடம் சரண் செய்து, ஸங்கத்தின் தேவைக்கு ஏற்ப ஸங்கத்திற்குத் தொண்டு செய்கிறீர்கள்.
நீங்கள் திரவமாக மாறி, குருவால் உருவாக்கப்பட்ட அச்சுகளில் பாய்ந்து ஓடுகிறீர்கள்.

‘நீங்கள் எந்த முறையில் சிறப்பாக வளர முடியும்’ என்பதை குரு அறிவார். உங்களுடைய தேவைக்கும் திறமைக்கும் ஏற்ப அவர் தனித்தனியே அச்சுகளை உருவாக்குகிறார். அவரை நம்பி, உங்களுடைய திடமான அஹங்காரத்தை விட்டு விட்டு திரவமாக மாறினால், அவர் உங்களுக்காக உருவாக்கிய இடங்களில் சென்று நீங்கள் நிரம்ப முடியும்.
உங்களுடைய இருப்புத் தன்மையானது குருவிடம் சரண் அடையும்போது, குருவின் அழைப்பை உங்களின் இருப்புத் தன்மை உணர்ந்துகொள்ள முடியும். நீங்கள் குருவின் ஒரு பகுதியாக மாறுவீர்கள். நீங்கள் அதற்குப் பிறகு எந்த ஒரு தனி அடையாளத்தையும் கொண்டு செல்லமாட்டீர்கள்.
guru box graphic
குரு
அவரது உடல்,
அவரது போதனைகள்,
அவரது ஸங்கம்
–இவை மூன்றிலும்
வாழ்கிறார்.
உங்கள் குரு, அவரது போதனைகள், அவரது ஸங்கம் இவற்றிற்கு நீங்கள் முழுமையாகச் சரண் அடையும்போது, உணர்வுருமாற்றம் அடையும் செயல்முறை தானாகவே நடைபெறும். நீர் உருவமற்ற நீராவியாக மாற்றம் அடைகிறது. நீங்கள், நீராவியைப் போல் இப்போது அனைத்துத் திசைகளிலும் பரவுவீர்கள்.
அங்கு வரம்புகள் ஏதும் இல்லை. ஏனென்றால், எல்லைகள், வரம்புகள் இவையாவும் நமது மனத்தில்தான் இருக்கின்றன. நீங்கள் இப்போது மனத்தைத் தாண்டி உங்கள் திறனை வெளிப்படுத்துகிறீர்கள்.
குருவானவர் அவர் இருக்கும் அதே ஆனந்த
நிலையை நீங்களும் உணர, உங்களைப்
பல்வேறு வழிகளில் சோர்வின்றியும்
கருணையுடனும் தள்ளிவிடுகிறார்.
குருமார்கள் ஸத்யத்தில் நிலை
நிறுத்தப்பட்டவர்கள். உங்கள் மீது கொண்ட
கருணையினால் நீங்கள் புரிந்துகொள்ளும்
விதத்தில் அவர் உங்களுடன் தம் உணர்ச்சி
களைப் பகிர்ந்துகொள்கிறார்.
குருவுக்குத் தெரிந்த
ஒரே உணர்ச்சி,
அன்புதான்.
ஆனால் ஒரு குருவுக்குத் தெரிந்த ஒரே உணர்ச்சி, அன்புதான். மற்ற உணர்ச்சி கள் எல்லாம் நீங்கள் அறிந்த மொழியில் உங்களுக்குப் போதிப்பதற்காக அவர் செய்யும் பாவனை (நடிப்பு).
"நான் உங்களிடம் கருணை காட்டும்போது, நான் உங்களை ஏமாற்றுகிறேன். நான் உங்களைக் கடிந்து பேசும்போதுதான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். இருவழிகளிலும் நீங்கள் வளர்கிறீர்கள்," என்று நான் எப்போதும் மக்களிடம் சொல்வதுண்டு.
வாழும் ஞானி,
ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம் -வேத சத்தியம்
வேதங்கள், "ஒருவர் ஞானமடைய குரு தேவை," என்று மிகத் தெளிவாக அறிவிக்கின்றன. எல்லா விதமான புத்தகங்களைப் படிக்கவும் சிறந்த குருமார்களின் பதிவுசெய்யப்பட்ட போதனைகளைக் கேட்கவும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அவர்களுடைய வாய்மொழி மட்டுமே இருக்கும். உடல் மொழி...? அவர்களுடைய ஸாந்நித்யம் நமக்குக் கிடைப்பதில்லை.
உதாரணத்திற்கு, யோக கலையை எடுத்துக்கொள்ளுங்கள். அது இன்றைய நடைமுறையில் வெறும் 'உடற்பயிற்சி' என்ற அளவிலேயே கற்றுத்தரப்படுகிறது. அதனால் உடல் நலம் கிடைக்கப் பெறுவது உண்மைதான்; என்றாலும் உடல் நலம் யோக பலன்களில் ஒரு சிறு பகுதியே. பதஞ்சலி கற்றுக் கொடுத்த யோகா, 'உடல் அமரும் நிலை'களைப் பற்றியது அல்ல, அதாவது ஆசனங்களைப் பற்றியது அல்ல; அது அதைவிடவும் மேலானது. இது ஞானத்தை அடைவதற்கான ஒரு வழி. பதஞ்சலி அதை ஞானம் அடைவதற்கு ஒரு வழியாகக் கருதினார்.
ஆனால் இப்போது பதஞ்சலியின் உடல் மொழி நம் அனைவருக்கும் கிடை க்காது. அவருடைய வார்த்தைகள்தான் இருக்கின்றன. வார்த்தைகளால் அவ்வளவுதான் வழங்கமுடியும்.
வார்த்தைகளின் அடியில் உள்ள சாரத்தை நமக்கு அறிவிக்க, பதஞ்சலி இருந்த அதே உணர்வு நிலையில் இருக்கக்கூடிய ஒரு வாழும் ஒரு ஞானி இருக்க வேண்டும்.

குரு கீதையில் ஒரு அழகான வாக்கியம்
உள்ளது. அது, 'பிரம்மன் உங்கள் தலையில்
எழுதிய தலையெழுத்தை, குரு தமது இடது
கால் பெருவிரலால் அழித்து விட முடியும்'
என்பதுதான்.
குரு உங்களின் தலையெழுத்தையே மாற்றி
அமைக்க முடியும். நீங்கள் கற்பனை
செய்துகூடப் பார்த்திராத ஒரு புதிய பரிமாண
த்திற்குள் உங்களை அழைத்துச் செல்ல
முடியும்.
ஒரு ஜோதிடர் உங்களது எதிர்காலத்தைப் பற்றி வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ஒரு குரு உங்களுடைய எதிர்காலத்தையே மாற்றி அமைத்துவிடுவார்.
குருவானவர் பிரபஞ்சத்தையே இயக்கும் அந்தப் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றானவர். கோள்களையும் நட்சத்திரங்களையும் இயக்கும் அந்த ஆற்றல் உங்களுடைய வாழ்க்கையைக் கையாள முடியாதா?
பெரிய பிரச்சினை என்னவென்றால், வாழும் ஞானியுடன் தொடர்புகொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. உடலை விட்டுவிட்ட குருமார்களிடம் தொடர்புகொள்வது மிகவும் எளிது. அவரை நீங்கள் கடவுளாகப் பார்க்க முடியும். கடவுளைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் அனைத்துக் கற்பனைகளையும் நீங்கள் அவர் மேல் செலுத்த முடியும். “நான் மீண்டும் மீண்டும் கீழிறங்கி வருவேன்,” என்று கிருஷ்ணர் வாக்குறுதி கொடுக்கும்போது, அவரின் சக்தி மீண்டும் மீண்டும் இந்தப் பூமிக்கு கீழிறங்கி வரும் என்ற பொருளில் சொன்னார்.
மஞ்சள் உடை, கைகளில் புல்லாங்குழல், தலைமுடியில் இரண்டு மயில் பீலி என்று அதே உருவத்துடன் கிருஷ்ணர் கீழிறங்கி வருவார் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் இந்தப் பூமியில் தோன்றுகிறார்; ஆனால் நாம் மிகவும் தந்திரக்காரர்களாக இருப்பதால், நாம் எந்த ஒரு உருவத்திலும் அவரைத் தவறவிட்டுவிடுகிறோம். நாம் எல்லா குருமார்களையும் தவறவிட் டுவிடுகிறோம்.
மேலும் ஒரு விஷயம்: வாழும்
ஞானியிடமிருந்து தப்பித்துச் சென்று,
உடலை விட்டுவிட்ட ஒரு குருவை வெறுமனே
வழிகபட்டு, நீங்கள் உங்களை மிக எளிதாக
ஏமாற்றிக்கொள்ளலாம்.
வெறுமனே வழிபட்டு நாம் எளிதாக தப்பித்துக்கொள்ளலாம். வேறு ஏதும் செய்யத் தேவையில்லை என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை குருவின் விக்ரஹத்திற்கு முன் நின்று சொல்லி, சில சடங்குகளைச் செய்துவிட்டு சென்றுவிடுவீர்கள். உணர்வுருமாற்றம் நிகழ்வதற்கான எல்லாச் சாத்தியக்கூறுகளிடமிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள்.
ஒரு ஜோதிடர்
உங்களது
எதிர்காலத்தைப் பற்றி
வேண்டுமானால்
சொல்லலாம்.
ஆனால் ஒரு குரு
உங்களுடைய
எதிர்காலத்தையே மாற்றி
அமைத்துவிடுவார்.
அமயம் அநஹங்காரம் அராகம் அமதம் ததா
நான் எனது பற்றற்ற தன்மையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்,
நான் எனது அஹங்காரமற்ற தன்மையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன் என்று நீங்கள் ஸ்லோகத்தில் சொல்வீர்கள்.
நீங்கள் ஸ்லோகத்தை விக்ரஹத்திற்கு முன் சொல்லலாம். அந்த விக்ரஹமும் ஒன்றும் சொல்லாமல் அங்கு வெறுமனே நின்றவாறே இருக்கும். ஆனால் நீங்கள் அதை என்னிடம் சொன்னால், நான் என்ன செய்வேன்? நான் உங்கள்
கழுத்தைப் பிடித்து, “ஏய் உன் பற்றற்ற
தன்மை எங்கு உள்ளது? அதைக் கொடு. உன்
அஹங்காரமற்ற தன்மை எங்கு இருக்கிறது?
அதைச் சரண் செய்,” என்று சொல்வேன்.
“எனது அஹங்காரத்தைச்
சமர்ப்பிக்கிறேன்,” என்று
வெறுமனே உங்களால்
என்னிடம் சொல்ல
முடியாது.
உங்களுடைய சின்ன அஹங்காரத்தைக் காட்டிலும் மிக உயர்ந்ததான உங்களுடைய உண்மையான ஆத்மாவை உங்களுக்குக் காண்பிப்பதற்காகவே உங்களுடைய அஹங்காரத்தை வெட்டிவீழ்த்துகிறார். அதற்காக வாழும் ஞான குரு உங்கள்மீது இடைவிடாது வேலைசெய்து கொண்டு இருப்பார். ஆனால் அந்த அஹங்காரம் குருவின் கைகளால் வெட்டுப்பட்டுச் சாக அஞ்சுவதால், நீங்கள் தப்பிக்க முயற்சி செய்கிறீர்கள்.
குருவின் சக்திக்கு முன் உங்களைத் திறந்து வையுங்கள். உங்கள் கண் முன்னேயே நீங்கள் உணர்வுமாற்றம் அடைவதை நீங்கள் பார்க்கலாம்.
குருவின் ஸாந்நித்யத்தில் இருப்பதே உங்களைக் குணப்படுத்தும். குருவின் சக்திக்கு முன் உங்களைத் திறந்து வைத்தலே உங்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய புற்று நோயான அஹங்காரத்தை அகற்றிவிடும்.
குருவிடம் மிக நெருக்கமாக உள்ள சீடருக்கோ அல்லது பக்தருக்கோ தாம் குருவிடம் மிக நெருக்கமான இருக்கிறோம் என்ற அஹங்காரம் இருக்கும். இப்படிப்பட்ட மாயையாலும் மயக்கத்தாலும் அஹங்காரம் என்னும் நோயாலும் பாதிக்கப்பட்டவர்களே இல்லை. அஹங்காரம் எதை விரும்புகிறதோ அதை மட்டுமே பார்க்கிறது. உண்மையில் என்ன இருக்கிறதோ அதைப் பார்ப்பதில்லை.

உங்களுக்குள்ளேயே பிரபஞ்சத்தை உணர்ந்திடலாம்
ஒரு சின்ன கதை:
நாற்பது வயது நிரம்பிய ஒருவர் நோய்வாய்ப்பட்டதால், சில சோதனைகளை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சோதனைக்குப் பின், தமக்குக் கொடுத்த மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து மெது மெதுவாக வெளிவந்து கொண்டிருந்தார்.
அவர் கண்களைத் திறந்துபார்த்தார். அவர் அருகில் அவருடைய மனைவி அமர்ந்திருப்பதைப் பார்த்தார். தம் மனைவியைப் பார்த்து அவர் "நீ மிகவும் அழகாக இருக்கிறாய்," என்று சொன்னார்.
அதைக் கேட்ட அவருடைய மனைவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் மீண்டும் தூங்கி விட்டார். . சிறிது நேரத்திற்குப் பின் கண் விழித்து எழுந்த அவர், மீண்டும் தம் மனைவியைப் பார்த்து, "நீ நன்றாக இருக்கிறாய்," என்று சொன்னார்.
அந்த மனைவி கேட்டார், "சிறிது நேரத்திற்கு முன் மிக அழகாக இருக்கிறாய் என்று சொன்னீர்களே. அந்த அழகுக்கு என்ன ஆயிற்று?"
அந்த மனிதர் பதில் அளித்தார், "மருந்தின் விளைவு சிறிது சிறிதாக குறைந்து கொண்டு வருகிறது."
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இவ்வாறுதான் மாயை அல்லது போலிக்கருத்து இருக்கும்! அது இருக்கும்வரை உங்களால் உண்மையைப் பார்க்க முடியாது.
மாயை மெதுவாக உங்களை விட்டு நகர்ந்தால்தான் உங்களால் ஸத்யத்தை உணர முடியும்; உங்களை உணரமுடியும். பிறகுதான் நீங்கள் உண்மையைப் பார்ப்பீர்கள்.
பிறகு நீங்கள் அஷ்டவக்ரர் பேசுவதைப் போல் பேச ஆரம்பிப்பீர்கள். அஷ்டவக்ரர் அழகாக அறிவிக்கிறார், "நான் இந்த
> மாயை இருக்கும்வரை
> உங்களால்
> உண்மையைப்
> பார்க்க முடியாது.
வெளியைப் போன்று எல்லையற்றவன்; ஆனால் இந்த உலகம் ஒரு ஜாடியைப் போல எல்லை உடையது. இதனைத் தெரிந்துகொள்வது அறிவு. பிறகு இதில் துறத்தலும் இல்லை; ஏற்றுக்கொள்ளுதலும் இல்லை; இடைநிறுத்தலும் இல்லை.
நான் இந்தக் கடலைப் போன்றவன். இங்கு இருக்கும் எண்ணற்ற பொருட்கள் இந்தக் கடலில் எழும் அலைகளுக்கு ஒப்பானது. இதைத் தெரிந்துகொள்ளுதல் அறிவு. பிறகு இதில் துறந்தலும் இல்லை; ஏற்றுக்கொள்ளுதலும் இல்லை; இடை நிறுத்தலும் இல்லை.
நான் முத்துச் சிப்பியைப் போன்றவன். இந்தக் கற்பனை உலகம் வெள்ளியைப் போன்றது. இந்த உண்மையைத் தெரிந்துகொள்வதுதான் அறிவு. பிறகு இதில் துறத்தலும் இல்லை; ஏற்றுக்கொள்ளுதலும் இல்லை; இடை நிறுத்தலும் இல்லை.
நான் அனைத்து உயிரினங்களிலும்
இருக்கிறேன், அனைத்து உயிரினங்களும்
என்னூல் இருக்கின்றன. இதைத்
தெரிந்துகொள்வதுதான் அறிவு. பிறகு இதில்
துறத்தலும் இல்லை; ஏற்றுக்கொள்ளுதலும்
இல்லை; இடை நிறுத்தலும் இல்லை.''
நீங்களும் இந்த ஸத்யத்தை உணர்ந்தீர்கள் என்றால், நீங்களே இந்த பிரபஞ்சத்தின் பாகம் என்பது புரியும் .
இந்தப் பிரபஞ்சமாகவே மாறிவிடுவீர்கள். பிறகு நீங்கள் விரும்புவதற்கு இங்கு ஒன்றும் இல்லை; பந்தப்படுத்திக்கொள்வதற்கும் ஒன்றும் இல்லை.
'நீங்கள் யார்' என்பதற்கும் 'இந்தப் பிரபஞ்சம் என்ன' என்பதற்கும் இடையே இனிமேல் எந்தவித வேறுபாடும் இல்லை.
நம்மைப் பிரிக்கும் இந்த மாயை என்ற பொய்மை மறைந்துவிடும். அதனால்நான் நமது ஞானகுருவை, குரு என்று அழைக்கிறோம்.
அதிக பாவம்செய்தவரைக் கூட காப்பாற்றும் படகு
'கு' - என்றால் இருள்; 'ரு' - என்றால் ஒளி. 'குரு' இருளிலிருந்து ஒளிக்கு நம்மை வழிநடத்திச் செல்பவர்.
நம்மை அறியாமை என்னும் இருளிலிருந்து ஆனந்தம் என்ற ஒளிக்கு அழைத்துச் செல்பவர்.
குரு என்பவர் நல்லவர் யார், தீயவர் யார் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. அவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
நீங்கள் செய்வது சமுதாயத்தால் நல்லது
என்று பாராட்டப்பட்டாலும் சரி அல்லது
பாவம் என்று குற்றம் சாட்டப்பட்டாலும்
சரி அதைப்பற்றி அவர் கவலைப்படுவதே
இல்லை. குற்றம் குற்றமற்றது என்ற முழுக்
கருத்துமே சமுதாயத்தைப் பொறுத்தது.
சில சமுதாயத்தில், ஒருவருக்கு மேற்பட்டவரைத் திருமணம் செய்வது பாவச் செயல் என்பார்கள். ஆனால் வேறு சில சமுதாயத்தில் அவ்வாறு திருமணம் செய்வது பாவம் இல்லை என்பார்கள். சில சமுதாயத்தில் விலங்குகளைப் பலியிடுவது பாவச் செயல் என்பார்கள்; வேறு சில சமுதாயத்தில் அது ஒரு மதச் சடங்காகவே இருக்கிறது.
இந்த எல்லா வேறுபாடுகளையும் பட்டறிவுதான் செய்கிறது. இங்கே கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார்,"நீங்கள் பாவிகளுக்குள்ளேயே அதிகப் பாவம் செய்தவராக இருந்தாலும் ஞானமாகிய படகின் உதவியால் நீங்கள் துக்கக் கடலைக் கடந்துவிடலாம்."
ஆன்மீக நிலையில், பாவம் என்ற கருத்தே கிடையாது.
எப்படிச் சமுதாயம் இருக்க வேண்டும்? எப்படிச் சமுதாயம் உருவாகக் கூடாது?
மக்களைப் பயமுறுத்துவதற்காகவும் அதன் மூலம் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காகவுமே, ‘பாபம்’ என்ற கருத்து மனிதராலும் மனிதரால் உருவாக்கப்பட்ட மத, சமுதாய, அரசியல் அமைப்புகளாலும் நிறுவனங்களாலும் உருவாக்கப்பட்டது.
இந்த மாதிரியான அமைப்புகளில் வேறு வகையான சட்டங்கள் அதாவது ஆள்பவருக்கு ஒருவிதமான சட்டங்களும் ஆளப்படுபவர்களுக்கு இன்னொரு விதமான சட்டங்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அனைவரும் ஒரே தரத்தால் மதிப்பீடு செய்யப்படுவதில்லை.
ஒரு அரசர் எந்த ஒரு பாவத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார். ஆனால் அவருடைய குடிமக்கள் அரசருடைய கருணையைப் பொறுத்து மதிப்பீடு செய்யப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள்.
நம் முதன்மையான பாவமே நாம் நமது உண்மையான இயல்பை, தெய்வீக தன்மையை மறந்து விட்டதுதான். விலங்குகள், தாங்கள் விலங்கா அல்லது கடவுளா என்று தங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவை இயற்கையோடு இயைந்து செல்கின்றன. அவை பசிக்கும்போது உணவு உண்ணுகின்றன.
அவை இயற்கை வழிநடத்தும்போது புணருகின்றன, சோர்வாக இருக்கும்போது உறங்குகின்றன. இந்த நோக்கில் பார்த்தால், அவை இயற்கையோடும் தெய்வீகத்தோடும் ஒன்றி இருக்கின்றன. மனித இனத்தைப் போன்று அவை குழம்பிப்போய் இல்லை.
மனிதர்கள் சாப்பிடக் கூடாதபோதும்
சாப்பிட்டு உடலை பருમનાக்கிக்
கொள்கின்றனர். அவர்களுடைய கண்கள்
மிகவும் சோர்வடைந்து, இமைகள்
மூடவேண்டுமென்று கெஞ்சும்போதும்கூட,
அவர்கள் தொலைக்காட்சியை பார்த்துக்
கொண்டு இருக்கிறார்கள்.
உடலுறவு என்பது தனது இனத்தை
நிலைநிறுத்துவதற்காக மட்டுமே, தனது இன
விருத்திக்காக மட்டுமே என்ற நிலைமாறி,
இன்று ஒருவகையான கேளிக்கையாக மாறி
உள்ளது.
பட்டறிவைத் தவறான முறையில்
பயன்படுத்தி, நமது உண்மை இயல்பைக்
கெடுத்துக்கொண்டோம். இதுதான் நாம் செய்த
மிகப்பெரிய பாவம்.
ஞானமும் சடங்கும்
ஒன்று கலக்கும்போது,
அதுவே
உண்மையான
பிரார்த்தனையாக
மாறுகிறது.
நமக்கு உண்மையான அறிவு, நோக்கம் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும் தன்மை - இம்மூன்றும் இருந்தால் அந்த நோக்கமே, அந்த அறிவே, அந்தச் செயலை தெய்வீக செயலாக மாற்றிவிடும்.
அந்தச் செயல் இனிமேல் ஒரு சாதாரண சடங்காக இல்லாமல், இறுதி லட்சியத்தை அடைய ஒரு வழியாக அமையும்.
தானாகவே நீங்கள் துக்கக் கடலைக் கடந்துவிடுவீர்கள், ஏனென்றால் இந்தத் துக்கமே, உங்கள் இருப்புத் தன்மையின் உண்மை இயல்பை நீங்கள் உணராததனாலும் உங்கள் அறியாமையினாலும் வந்ததுதான்.
ஆன்மாவைச் சடங்குடன் சேர்த்தால் அது ஆன்மீகமாக மாறுகிறது. ஞானமும் சடங்கும் ஒன்று கலக்கும்போது, அதுவே உண்மையான பிரார்த்தனையாக மாறுகிறது.

நீங்கள் தெய்வீகமானவரே!
கேள்வி: ஸ்வாமிஜி, உண்மையான தெய்வீக தன்மையை அறியாததுதான் நமது முதல் பாவம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். உண்மையான இயல்பை நாம் மறந்ததனால் நாம் அனைவரும் பாவிகள் என்றுதானே அர்த்தம். நம்மைப் பாவிகள் என்று அடையாளம் காட்டும் மதங்கள் அனைத்தும் உண்மையில் சரிதான் இல்லையா?
அறியாமை ஒரு பாவம் அல்ல; அது பாவமாகவும் இருக்க முடியாது. உங்களுடைய சொந்தப் படைப்புக்களைத்தான் நான் பாவம் என்று இங்கு குறிப்பிடுகிறேன். அவை யாவும் உங்கள் மனத்தின் படைப்புக்களே.
நீங்கள்
ஒரு ஆனந்தமான
உயிரினம்.
நீங்கள் துக்கப்படுவதற்கு
எந்தக் காரணமும்
இல்லை.
ஆன்மீகத்தில் பாவம் என்று எதுவும் கிடையாது. நரகம் என்று அழைக்கப்படுவதும் ஏதும் கிடையாது. இவை இரண்டும் உங்கள் மனத்தில் உள்ளவைதான். ஒன்று செயலாகவும் மற்றொன்று இடமாகவும் இருக்கிறது. அவ்வளவுதான்.
நீங்கள் ஒரு ஆனந்தமான உயிரினம். நீங்கள் துக்கப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
நீங்கள் ‘பாவம்’ என்ற சொல்லால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள். ‘மன்னிப்பு’ என்ற மற்றொரு வார்த்தையின் மூலம் ‘நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்’ என்ற வாக்குறுதியும் உங்களுக்கு அளிக்கப்படுகிறது.
பாவம், விடுதலை இந்த இரண்டு வார்த்தைகளுமே உங்களை ஏமாற்றுவதற்காகவே திறமையாகக் கையாளப்படும் வார்த்தைகள். அவை உங்களைக் கட்டுப்படுத்தவும் உங்களை ஆளவும் உருவாக்கப்பட்டவை. நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை.
மதங்களும் சமுதாயமும் வேறு எவ்வகையில் உங்களை ஆளமுடியும்? ஏற்கனவே சரியான அறிவில் நிலைகொண்டு இருப்பதனால், பாவம் மன்னித்தல் இவற்றைப் பற்றிக் கவலைப்படாத சூஃபி துறவிகள், நாஸ்டிக்குகள், (கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினர்) யோகிகள் போன்று நீங்களும் ஆகலாம். மதத் தலைவர்கள்தான், பாவத்தின் மூலமாகவும் பயத்தின் மூலமாகவும் உங்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் பாவிகள். பிரபஞ்ச சக்தி யாரையாவது தண்டிப்பதாக இருந்தால், இவர்களைத்தான் தண்டிக்கும்.
அவர்கள் சட்டத்தை இயற்றுவார்கள், பிறகு அந்தச் சட்டம் மக்களுக்குப் பொருந்தாதவாறு ஊர்ஜிதமும் செய்துகொள்கிறார்கள்.
குருவினுடைய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுதான் மதங்கள் நிறுவப்படுகின்றன. மதங்களை உருவாக்கிய எந்த ஒரு குருவும் ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ பாவி என்று சொல்லவில்லை.

ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளே
இருக்கும் தெய்வீகத்தைப் பற்றியே அவர்கள்
அனைவரும் ஒரே விதமாகப் பேசினார்கள்.
மீண்டும் மீண்டும் அவர்கள், "உங்களுக்குள் தேடுங்கள். ஸத்யத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியும்," என்று சொல்கிறார்கள்.
எல்லா மனிதர்களும் பாவிகள் என்றால், இந்த குருமார்களும் பாவிகள்தானே? அவர்கள் பாவிகள் இல்லை என்றால், அவர்களுடைய பெயர்கள் மட்டும் பாவிகள் பட்டியலிலிருந்து விடுபட்டுப்போனது எப்படி? அவர்கள் மட்டும் விதிவிலக்கானவர்களாக ஆனது எப்படி?
நாம் அனைவரும் தெய்வீக ஆன்மாவுடன் பிறந்து இருக்கிறோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் தெய்வீகத்தைத் தேடும் ஒரு மனிதன் இல்லை! உண்மையில், நீங்கள் மனித உணர்வு கொண்ட ஒரு தெய்வம்!
நீங்கள் பிறக்கும் பொழுதே உங்களை இந்த உண்மையை உணா விடாமல், அறியாமை என்கிற திரை தடுத்துவிடுகிறது.
துரதிஷ்டவசமாக இந்தச் சமுதாயமும் மதமும் அந்தத் திரையை அகற்றுவதற்குப் பதிலாக, அந்தத் திரையை மேலும் வலுவூட்டி உங்களைக் கட்டுப்படுத்துகிறது.
எப்போதாவது ஒருமுறை நீங்கள் திடீரென்று
விழித்துக் கொண்டு, நம்முள் இருக்கும்
ஏதோ ஆழமான ஒன்றை நாம் தவறவிட்டுக்
கொண்டு இருக்கிறோம் என்பதை நீங்கள்
உணருகிறீர்கள். தேடுதல் ஆரம்பம் ஆகிறது.

நீங்கள் அதிஷ்டசாலியாகவும் நேர்மையானவராகவும் இருந்தால், உங்களை உயர் நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு குருவைக் கண்டுபிடிப்பீர்கள். அவர் உங்களை அன்பில் உயர்த்துவார். உங்களுக்குள் இருக்கும் ஸத்யத்தைக் கண்டுபிடிக்கவும் நீங்கள் தெய்வீகமானவர்கள் என்பதை உணரவும் அவர் உதவுவார்.
அதன் மூலம் நீங்கள் எல்லாக் கட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறீர்கள்.
வாழ்நாளில் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், உங்கள் உயிர் மரணம் அடையும் தருணத்திலாவது இந்த விடுதலைக்காகவும் தன்னை உணர்ந்துகொள்வதற்காகவும் ஏங்குகிறது. நீங்கள், உங்களை உணரும் பொருட்டே மீண்டும் மீண்டும் பிறக்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் தெய்வீக தன்மையின் ஸத்யத்தை ஒருமுறை உணர்ந்துவிட்டாலே போதும், அதற்குப் பிறகு பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற ஸம்ஸார சக்கரத்தால் கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்.
நீங்கள் பாவிகள் இல்லை என்பதில் உறுதியாக இருங்கள். உண்மையில் நீங்கள் தெய்வீகமானவரே!


சந்தேகங்கள் அழித்துவிடும்
4.37 அர்ஜூனா! கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது விறகை எரித்துச் சாம்பலாக்குவது போல, ஞானமாகிய நெருப்பு எல்லாக் கர்மாக்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.
4.38 உண்மையில், ஞானத்தைவிடத் தூய்மையான பொருள் இந்த உலகில் வேறு ஏதும் இல்லை. அதை அறிந்த பக்குவமடைந்த மனிதர், காலக்கிரமத்தில் தன்னிடத்திலேயே ஆனந்தத்தை அனுபவிக்கிறார்.
4.39 ச்ரத்தையோடு (துணிவுடன் கூடிய நம்பிக்கை) இருக்கும் ஒருவர் ஞானத்தை அடைகிறார். அவருக்குப் புலன்கள் மீது கட்டுப்பாடு இருக்கிறது.
இந்த ஞானத்தை அடைபவர் தாமதமின்றி அந்தக்க கணமே மேலான அமைதியைப் பெறுகிறார்.


ஞானமற்றவர்களும் நம்பிக்கை அற்றவர்களும் எப்போதும் சந்தேகத் தன்மையோடு இருப்பவர்களும் அழிக்கப்படுகிறார்கள்.
இந்த உலகத்திலோ, அடுத்த உலகத்திலோ அவர்களுக்கு இன்பம் கிடையாது.
யார் ஒருவர் தம் செயல்களினால் விளையும் பலன்களைத் துறந்து விட்டாரோ, யாருடைய சந்தேகங்கள் அழிக்கப்பட்டுவிட்டனவோ, யார் ஒருவர் தன்னுள் உறுதியாக நிலைகொண்டிருக்கிறாரோ, அவர், அவருடைய செயல்களால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.
பரதனின் வழிவந்தவனே, அதனால் எழுந்து நில்! யோகத்தில் உன்னை நிலைநிறுத்து. உன் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அறியாமையால் தோன்றிய சந்தேகங்களை ஞானம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்திவிடு.
உங்களை ஆள்வது யார்?
ஒரு அழகான கதை!
ஒரு குடிகாரன் இருந்தான். குடிப்பதை நிறுத்தச் சொல்லி அவனுடைய மனைவி எப்போதும் அவனுடன் சண்டைபோட்டுக் கொண்டிருப்பார்.
ஒரு நாள் அவனுடைய மனைவி நாளிதழ் ஒன்றை அவனிடம் காண்பித்து, "இதைப் பாருங்கள், நமது பக்கத்து வீட்டுக்காரர் நேற்று அதிகமாகக் குடித்துவிட்டு, படகில் ஏறி ஆற்றில் சென்றிருக்கிறார். எப்படியோ அவர் படகு கவிழ்ந்து விட்டது. அதனால் அவர் அந்த ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்து விட்டார். அவர் குடிக்காமல் மட்டும் இருந்திருந்தால் இப்படி இறந்திருக்கமாட்டார். நீங்கள் குடிப்பதை நிறுத்தாவிட்டால், உங்களுக்கும் இதேதான் நிகழும்," என்று சொன்னார்.
அதற்கு அந்த மனிதர், "அவர் ஆற்றில் விழுந்தார், அப்படித்தானே?" என்று கேட்டார்.
மனைவி: "ஆமாம்."
அந்த மனிதர்: "அவர் அந்தத் தண்ணீருக்குள் விழும்வரை இறக்கவில்லை சரியா?" மனைவி: “ஆமாம், அது உண்மைதான்.”
அதற்கு உடனே அந்த மனிதர் சொன்ன பதில்:
“அந்தத் தண்ணீர்தான் அவரைக் கொன்றது;
அவருடைய குடி அல்ல!”
புலன் இன்பங்கள் உங்களை வழிநடத்தும்போது, நீங்கள் மிகச் சுலபமாகத் தவறான முடிவுக்கு வருகிறீர்கள். உங்களின் நாட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எதற்குமே விளக்கம் கொடுப்பீர்கள்; ஸத்யத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல.
உங்கள் அஹங்காரம் என்னும் வடிகட்டி நீங்கள் உங்கள் புலன்கள் மூலம் உணர்ந்துகொள்வதை வடிகட்டிவிட்டு, அதற்குத் தன்னுடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு வேறொரு விளக்கத்தை உங்களுக்குக் கொடுக்கிறது.
நீங்கள் பார்ப்பதை, கேட்பதை, தொடுவதை, சுவைப்பதை, நுகர்வதை இவை அனைத்தையும் நீங்கள் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை உங்களுடைய அஹங்காரம் முடிவு செய்கிறது. மேலும் நீங்கள் எப்படி செயல்படவேண்டுமென்பதையும் உங்கள் அஹங்காரம்தான் முடிவு செய்கிறது.
உங்களுடைய அஹங்காரம் என்ற பூதக் கண்ணாடி மூலம் இவ்வளவுதான் பார்க்க முடியும். நீங்கள் எதைப் பார்த்தாலும் கறைப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். ஏனென்றால் நீங்கள் உங்கள் மனத்தின் மூலம் பார்க்கிறீர்கள்; கடந்தகால நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒருதலைபட்சமான, ஒரு பக்கசார்பான புரிந்துகொள்ளுதல் மூலம் பார்க்கிறீர்கள்.
ஸத்யத்தைப் பார்க்க வேண்டுமானால், நீங்கள் அஹங்காரம், மனம், புலன்கள் இவற்றைக் கடந்துதான் பார்க்க வேண்டும். நீங்கள் இதைச் செய்யும்போதுதான், இறுதி ஸத்யத்தின் முடிவான எல்லையில்லாப் பரிமாணங்களைப் பார்க்க முடியும்.
நீங்கள் ஒன்று சேர்க்கும் வார்த்தைகள் உங்களுக்கு இறுதி அறிவைக் கொடுக்க முடியாது. நீங்கள் வார்த்தைகளை அதன் பொருளைக் கிரஹிக்காமல் சேகரித்தால் அஜீரணம் ஏற்படும் அல்லது அந்த வார்த்தைகளை மற்றவர்கள் மீது வாந்தி எடுக்க ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள்
ஒரு சின்ன கதை:
ஒரு சமயம் ஒரு குருடர் மருத்துவரிடம் சென்று அவருடைய கண்பார்வையை மீண்டும் பெற ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டார்.
அந்த மருத்துவர் அவரைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, "ஆமாம் ஒரு அறுவை சிகிச்சையை செய்து கொண்டீர்களானால், நீங்கள் உங்களது கண்பார்வையை மீண்டும் பெறலாம். அதன்பிறகு நீங்கள் கைத்தடி இல்லாமலேயே நடக்க ஆரம்பிக்கலாம்," என்று சொன்னார்.
அதற்கு அந்த மனிதர், "டாக்டர், அறுவை சிகிச்சைக்குப் பின் எனக்கு கண்பார்வை கிடைத்துவிடும் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என்னால் எப்படி கைத்தடி இல்லாமல் நடக்க முடியும்? அது எனக்குப் புரியவில்லை," என்று பதில் சொன்னார்.
அந்தக் குருடருக்கு, கைத்தடி இல்லாமல் நடக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை! 'பார்க்கமுடியும்' என்பதற்கு என்ன பொருள் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.
அந்த மருத்துவர் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து, அவருக்குக் கண்பார்வை கிடைத்து விட்டால், பிறகு தாமாகவே அவர் தமது தடியைக் கீழே போட்டுவிடுவார்.
நான் மக்களிடம் "மனத்தை விட்டுவிடுங்கள்," என்று சொல்லும்போது, அவர்கள் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல் பார்க்கிறார்கள். அவர்கள் என்னிடம் கேட்பதுண்டு, "எங்களால் எப்படி மனத்தை விட முடியும்? உங்களுக்கு அது சுலபமானது. நீங்கள் அனைத்தையும் துறந்து விட்டீர்கள்.
உங்களுக்கு மனைவி இல்லை, பொறுப்புகள் இல்லை. எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் ஞானமடைந்தவர். அதனால் நீங்கள் பேச முடியும். ஸம்ஸார ஸாகரத்தில் வாழும் எங்களால் எப்படி மனம் இல்லாமல் வாழ முடியும்?" நீங்கள் உங்கள் மனதைவிடும்போது மட்டுமே, உங்கள் எண்ணங்களைக்
> அறியாமையால் தோன்றிய சந்தேகங்களை ஞானம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்திவிடு.
கோர்த்து ஒரு தண்டை உருவாக்குவதை
நிறுத்தும்போது மட்டுமே, நீங்கள்
உண்மையில் 'பார்க்கத்' தொடங்குகிறீர்கள்.
அதன் பிறகு உங்கள் அஹங்காரம் நீங்கள்
பார்க்கிற விஷயங்களிலுள்ள ஸத்யத்தில்
தலையீடு செய்வதை நிறுத்திவிடுகிறது.
நீங்கள் பார்ப்பது,
கேட்பது, தொடுவது,
சுவைப்பது,நுகர்வது
இவை அனைத்தையும்
எப்படிப் புரிந்துகொள்வது
என்பதை
உங்களுடைய
அஹங்காரம்தான்
முடிவு செய்கிறது.
உங்கள் புலன்கள் உணர்ந்து சொல்வதை வடிகட்டுவதையோ அல்லது அதனோடு மேலும் எதையாவது சேர்ப்பதையோ உங்களுடைய அஹங்காரம் நிறுத்திவிடுகிறது. அப்போது உங்களுடைய மதிப்புள்ள அமைப்புகள், நம்பிக்கைகள், ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நினைவுப் பதிவுகள், இவற்றால் ஆன உங்களுடைய மூட்டைகள் யாவும் கரைந்து, புதியதாக 'நீங்கள்' பிறக்கிறீர்கள். நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள்.
அதற்குப் பிறகு உங்களுடைய செயல்கள் அனைத்துமே, மனம் இல்லாத நிலையாகிய உள்ளுணர்விலிருந்தும் மேலான விழிப்புணர்வு நிலையிலிருந்தும் உண்மை நிலையிலிருந்தும்தான் எழும்.
உடனடியாகச் செயல்படுத்துங்கள், தப்பிவிடுவீர்கள்
அடுத்த வரியில் கிருஷ்ணர் ச்ரத்தா என்ற வார்த்தையை மீண்டும் உபயோகப்படுத்துகிறார். உண்மையில் ச்ரத்தா என்பதை நம்பிக்கை என்று மொழிபெயர்க்க முடியாது.
ச்ரத்தா என்றால் நம்பிக்கையை மட்டும் குறிக்கவில்லை. அது, நம்பிக்கையையும் அந்தக் கருத்தை செயல்படுத்துவதற்கான தைரியத்தையும் சேர்த்தே குறிக்கிறது. அந்தக் கருத்தைச் சோதனை செய்து பார்க்கக்கூடிய தைரியம்தான் ச்ரத்தா. அந்தக் கருத்தைச் சோதனை செய்து பார்க்கக்கூடிய தைரியத்தைத்தான் இங்கு ச்ரத்தா என்று குறிப்பிடுகிறார்.
உங்களுக்கு அறிவு இருந்து, அதே சமயம் அந்தப் போதனைகளைப் பின்பற்றுவதற்கான தைரியமும் இருந்தால், பிறகு நீங்கள் இறுதியானதை அடையலாம்.
பெரும்பாலான மக்களுக்கு அவர்களது ஆராய்ச்சியைப் பின்பற்றக்கூடிய தைரியம் கிடையாது. பூமி சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கலிலியோ அறிவித்தபோது, எல்லாக் கிரகங்களும் பூமியைச் சுற்றித்தான் சுழல்கிறது என்பதுதான் அப்போதைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருந்ததால், கலிலியோ துன்புறுத்தப்பட்டார்.
அவருடைய கட்டுரையில் ஒரு அடிக்குறிப்பு கொடுத்துள்ளார், "நாம் இதனை மறுக்கலாம். ஆனால் சூரியனும் பூமியும் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்தவ நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சூரியனும் பூமியும் தொடர்ந்து அதே வழியில்தான் நகரும்!"
நீங்கள் கிழக்கத்திய துறவிகளைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் பல உள் உலக ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார்கள்.
பல இலட்சம் பேர், தங்களது உடலையும் மனத்தையுமே சோதனைச் சாலைகளாகப் பயன்படுத்தி, முழுநேர ஆராய்ச்சியாக இதைப்பல்லாயிரம் வருடங்களாக செய்து இருக்கிறார்கள். அவர்களுடைய தைரியமான படிப்புக்கள், ஆராய்ச்சிகளின் முடிவுதான் இந்த உள் உலக அறிவு.
உள் உலகத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்ததோடு மட்டும் அல்லாமல், அவர்கள் கண்டுபிடித்தவற்றை கடைப்பிடிக்கும் தைரியமும் அவர்களுக்கு இருந்ததனால், அவர்கள்தான் உண்மையில் உள் உலக விஞ்ஞானிகள்.
பதஞ்சலியைப் பாருங்கள், யோக ஸூத்ரத்தில் அவர் சொல்லி உள்ள எல்லாவற்றையும் சோதனை செய்வதற்கும் சரிபார்ப்பதற்கும், எல்லோருக்கும் அதை முழுமையாகத் திறந்து வைப்பதாக மிகவும் துணிச்சலுடன் அறிவித்திருக்கிறார்.
"நீங்கள் இதை முயற்சிசெய்ய கட்டுப்பாடு
ஏதும் தேவை இல்லை, இதனுடன்
எதையாவது சேர்ப்பதாக இருந்தாலும் சரி,
தொகுத்து அமைப்பதாக இருந்தாலும் சரி,
அதை நீங்கள் தடையின்றி செய்யலாம்,"
என்று சொல்கிறார்.
அவர் தமது ஆய்வு அறிக்கையை
சோதனைசெய்து, பிறகு நம் முன்
வைத்திருக்கிறார். அவர் உங்களுக்கு,
இதனை உங்கள் வாழ்வில் முயற்சி
> ச்'ரத்தா
> என்னும் சொல்
> நம்பிக்கையையும்
> அந்தக் கருத்தை
> செயல்படுத்துவதற்கான
> தைரியத்தையும்
> சேர்த்தே குறிக்கிறது.
செய்யும்படி அழைப்புவிடுகிறார்.
முயற்சிசெய்து கற்றுக்கொள்ளும்போது, நீங்கள் அதில் சொல்லப்பட்டதை விட ஏதாவது அதிகமாகக் கற்றுக் கொண்டால், அதையும் அதனுடன் சேர்த்து தொகுத்து அமைக்க பதஞ்சலியின் யோகஸூத்ரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுதான் நமது அமைப்பின் அழகு. இந்த உயிரோட்டமான அமைப்பு காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளக் கூடிய வகையிலே திறந்து வைக்கப்பட்ட அமைப்பாக இருப்பதுதான் இதனுடைய தனிச்சிறப்பு!
‘ஸத்யம்தான் முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று நமது குருமார்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அதனால் அவர்களுடைய ஆய்வு
அறிக்கையை, அவர்கள் அனுபவத்திலிருந்து
கற்றனவற்றை அடிப்படையாகக் கொண்டு
முன் வைத்திருக்கிறார்கள்.
அந்த ஸத்யத்தைப் பயிற்சி செய்யும்போது
யாராவது, எதையாவது இழந்தால்,
அதனை இழப்பது நல்லதுதான். ஸத்ய
சோதனையின்போது, அதன்முன் நிற்க
முடியாத எதுவும் அழிந்து போவதே நல்லது;
அது அழிந்துவிட அனுமதியுங்கள்.
அது எவ்வளவு சீக்கிரம் அழிந்து போகிறதோ, அந்த அளவுக்கு நமது இருப்புத் தன்மைக்கு நல்லது.
அனைத்து மத, ஆன்மீக தத்துவங்களில், ஸநாதனதர்மம் என்றழைக்கப்படுகிற இந்துமத தத்துவ நூலான வேத நூல்கள் மட்டுமே காலத்திற்கு ஏற்றவாறு தன்னைத் திருத்தி அமைக்க அனுமதிக்கின்றன.
இயற்கையின் குரல் என்று நாம் நம்புகிற வேதங்களும் உபநிஷதங்களும் கூட சட்ட நூல்களோ விதிமுறை நூல்களோ அல்ல. அவை விழிப்புணர்வு நிலையில் புரிந்துகொள்ளப்பட்டு, பின்பற்றபட வேண்டிய ஸத்யங்கள். ஒருவர் அதைக் கடைப்பிடிக்காவிட்டால் அதற்குத் தண்டனை ஏதும் கிடையாது, அதன்படி நடக்காவிட்டால் பாவி என்று அவரை ஒதுக்குவதும் கிடையாது.
நடைமுறைப்படுத்தும் தைரியமே சிரத்தை
முற்காலத்தில் பின்பற்றப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் தேவைப்பட்டால் அவற்றைத் திருத்தி அமைத்துக்கொள்ளலாம் என்ற தெளிவான அடிக்குறிப்புகளோடுதான் வெளிவந்திருக்கின்றன. எந்த ஒன்றுமே உச்சரிப்பதனால் மட்டுமே புனிதம் அடைந்துவிடுவதில்லை.
நாம் இன்று கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மரபுமுறைகள் எல்லாம் இந்தச் சமுதாயத்தின் தலையீட்டால் வந்தது. நாம் இந்த ஸத்யங்களை மிகுந்த விழிப்புணர்வுடனும் மிக நுட்பமாகவும் ஆராய வேண்டும்.
இந்த ஸத்யங்கள் ஒருமுறை சோதனை செய்யப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதென்றால், அதனை நடைமுறைபடுத்துவதற்கான தைரியம் நமக்குத் தேவைப்படுகிறது. வெறும் அறிவு மட்டுமே போதாது.
சிர்த்தா அதைப் பற்றியதுதான். துணிச்சலுடன் கூடிய நம்பிக்கையைத்தான் சிர்த்தா என்ற வார்த்தை குறிக்கிறது. உங்களது புலன்களோடு போரிடுவதற்கு சிர்த்தையுடன் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுடைய மனமும் புலன்களும் தாங்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் உங்களை அழைத்துச் செல்ல அனுமதிக்காதீர்கள். அதற்குப் பதிலாக, உங்களுடைய மனத்தை ஸத்யத்தின் பாதையில் திருப்புங்கள்.
> வேதங்களும் உபநிஷதங்களும் விழிப்புணர்வு நிலையில் புரிந்துகொள்ளப்பட்டு, பின்பற்றப்பட வேண்டிய ஸத்யங்கள்.
இந்த உலகில் அநேக மக்கள் லஷ்மியாலும் சரஸ்வதியாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் வெகு சிலரே காளியால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார்கள். லஷ்மியும் சரஸ்வதியும் காளியுடன் ளையும்போது மட்டுமே, உங்களுடைய விடுதலை உறுதி செய்யப்படுகிறது!
சந்தேகம் தீரவேண்டுமா? கேள்விக்குப் பதில் வேண்டுமா?
அடுத்த சில ஸ்லோகங்களில், கிருஷ்ணர், “சந்தேகப்படுபவர்களுக்கும் அறிவு, நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் எப்போதும் ஆனந்தம் கிடைப்பதில்லை,” என்று சொல்கிறார். அவர் ‘எப்போதும்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்.
ஆரம்பம் முதலே உங்களுக்குச் சந்தேகம் இருக்கக் கூடாது என்று அவர் சொல்லவில்லை; சந்தேகம் இருப்பது இயல்புதான்.
உங்களுக்கு மனம் என்று ஒன்று உள்ளவரை சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் உங்களால் அதைக் கடந்து செல்லவும் முடியும்.
சிவ ஸூத்ரத்தில் தேவி கேட்கிறாள், “ஓ சிவனே உங்களுடைய இயல்பு என்ன? அதிசயங்கள் நிறைந்த இந்தப் பிரபஞ்சம் என்பது என்ன? எது விதையை அமைத்திருக்கிறது? இந்தப் பிரபஞ்ச சக்கரத்தை யார் நிர்வகிக்கிறார்? உருவத்தைக் கடந்தும் உருவத்துக்குள் ஊடுருவியும் உள்ள இந்த வாழ்வு என்பது என்ன? இடம், காலம், பெயர், உருவம் இவற்றைக் கடந்து எப்படி நாம் அதனுள் பூரணமாக நுழைய முடியும்? என்னுடைய சந்தேகங்கள் தீர்க்கப்படட்டும்,” என்று கேட்கிறாள்.
மிக அழகாக, அவளுடைய முழு மன நிலையையும் இந்த சில வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துகிறாள். கடைசி வார்த்தைகள் ‘எனது சந்தேகங்கள் தீர்க்கப்படட்டும்’ என்பது.
> லஷ்மியும் சரஸ்வதியும் காளியுடன் இணையம்போது மட்டுமே, உங்களுடைய விடுதலை உறுதி செய்யப்படுகிறது!
“தயவுசெய்து எனது கேள்விகளுக்கு விடை அளியுங்கள்,” என்று தேவி ஒருபோதும் கேட்கவில்லை. ‘கேள்விகளுக்கு விடை அளியுங்கள்’ என்று கேட்டிருந்தால், அந்தத் தவற்றை அவர் செய்திருந்தால், சிவனின் மூலம் அவர் மேலும் ஒரு கீதையை உருவாக்கி இருப்பார்.
ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், கீதையில் அர்ஜூனன் பூரணமாக கிருஷ்ணரிடம் சரண் அடையத் தயாராக இல்லை. அதனால்தான்
ஆரம்பத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப்
பட்டறிவுப்பூர்வமான பதில்களையே
சொல்லவேண்டியிருந்தது.
இந்தப் பதில்கள் மூலம் தனது குழப்பத்தைத்
தீர்த்துக்கொள்ள முடியும் என்று அர்ஜுனன்
நினைத்தார். இவையாவும் மிக ஆழமான
சந்தேகங்களாக இருப்பதால், ஸத்யங்களை
உணர்வதன் மூலம் மட்டுமே அவற்றைத்
தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை
அர்ஜுனன் தெரிந்துகொள்ளவில்லை.
சந்தேகப்படுபவர்களுக்கு
ஒருபோதும்
ஆனந்தம்
கிடைப்பதில்லை.
அதனால்தான் “எனக்கு ஒன்றும் தெரியாது,” என்று அர்ஜுனனை ஒப்புக்கொள்ளச்செய்ய, 700க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களைமுதலில் கொடுக்க வேண்டிய அவசியம் கிருஷ்ணருக்கு ஏற்பட்டது.
முடிவில் அர்ஜுனன் “எனக்கு ஒன்றும் தெரியாது,” என்று சொல்லிய பிறகுதான் கிருஷ்ணர் தம்மையே வெளிப்படுத்துகிறார்.
அவர் ஸத்யத்தை வெளிப்படுத்தி, அதை அர்ஜுனனை உணர வைக்கிறார். ஏனென்றால் அந்த ஒரே வழியில்தான் அர்ஜுனன் ஸத்யத்தை உணர முடியும்.
“எனது கேள்விகள் விடை அளிக்கப்படட்டும்,” என்று நீங்கள் சொன்னால், அறிவுத்திறன் மிக்க விடைகளைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் தேவி, “எனது சந்தேகங்கள் தீர்க்கப்படட்டும். நீங்கள் வார்த்தைகளைக் கொடுத்தாலும் சரி, ஆற்றலைக் கொடுத்தாலும் சரி, உத்திகளைக் கொடு த்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி எனக்குக் கவலை இல்லை. ஆனால் சந்தேகங்களிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்,” என்று சொல்கிறார்.
கேள்விகள் தேடுதலாக மாறும்போது, நீங்கள் இந்த மொழியில்தான் பேச ஆரம்பிப்பீர்கள். ‘தேவை’, ‘உடனடி தேவையாக’ மாறும்போது, நீங்கள் இந்த மொழியில்தான் பேசத் தொடங்குவீர்கள்.
தேவி மிக அழகான வார்த்தைகளில் ஆரம்பிக்கிறார் “எனது சந்தேகங்கள் தீர்க்கப்படட்டும்.” ஆழ்ந்த சரணாகதியை இது உணர்த்துகிறது.
என்ன நிகழப்போகிறது என்பதை அறியாது, ஆழ்ந்த எதிர்ப்பற்ற காத்திருத்தல்தான் ‘எதிர்ப்புத் தெரிவிக்காத சரணாகதி. இதைத்தான் நாம் பூர்ண சரணாகதி என்று சொல்கிறோம்.
உண்மையில், “எப்போதும் நான் காத்திருப்பேன்,” என்று நீங்கள் முடிவுசெய்த அந்தக் கணமே, செயல்கள் தானாகவே நிகழ ஆரம்பித்துவிடும்! அவசரத்துடனும் கலக்கத்துடனும் நீங்கள் இருக்கும்வரை உங்களுக்குள் செயல்கள் நிகழ்வதை நீங்கள் தடுத்து நிறுத்துகிறீர்கள்.
மிகுந்த முயற்சிசெய்து ஒரு தாமரையை மலர வைப்பது போன்றதுதான் இது. ஒரு தாமரையை உடனடியாக மலர வைக்கவேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்கள் கைகளால் தாமரையின் இதழ்களை விரிப்பீர்கள். அது மலரைப் போன்று இருக்குமா? அது தாமரை மலரைப் போல இருக்காது. தானாகவே மலர்ந்தால்தான், தாமரையை ‘தாமரை மலர்’ என்று நாம் சொல்ல முடியும். அதற்குச் சிறிது இடமும் காலமும் கொடுங்கள்.
நீங்கள காத்திருக்க தீர்மானித்த உடனே, நிகழ்வுகள் தானாகவே நடக்க ஆரம்பிக்கும்; நீங்கள் இனிமேல் காத்திருக்கத் தேவையில்லை. நீங்கள் காத்திருக்கத் தீர்மானிக்கும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். நீங்கள் காத்திருக்க தீர்மானித்த அந்தக் கணமே, இனிமேலும் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.

நீங்கள் ‘ஏன்’ என்று கேட்கும்போது, ஸத்யத்தை அடையமுடியாது. ஏனென்றால் நீங்கள் ‘ஏன்’ என்று கேட்க ஆரம்பிப்பதற்கு முன், ‘என்ன’ என்பதைப் பார்க்க நீங்கள் தயாராக இல்லை. அதற்கு முன் நீங்கள் ‘ஏன்’ என்று கேட்கிறீர்கள். உங்கள் குரு அறுவைச் சிகிச்சை செய்து, உங்களுடைய உண்மையான ‘நான்’ ஐ திருப்பித் தர அனுமதியுங்கள். அதன்பிறகு எது நீங்கள் இல்லையோ, அதைத் தானாகவே கீழே விட்டுவிடுவீர்கள்.

உங்களைக் குருவாகவே உணர்வீர்கள்!
குரு - சிஷ்ய உறவுகளில் உள்ள நிலைகளை கிருஷ்ணர் இங்கே குறிப்பிடுகிறார். முதல் நிலையில் உள்ளவர்கள் தூய்மையான பட்டறிவு படைத்தவர்கள், சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். ‘சந்தேக அடிப்படை’ என்றால் எதிர்மறை சந்தேகங்கள், அவையாவும் தூய்மையான பட்டறிவைச் சார்ந்தவை.
குருவைப் பார்த்தவுடன், நீங்கள் உங்களுக்குள், "ஆங்! இவர் இங்கு உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்? இந்த இளவயதில் இவர் எப்படி இவ்வளவு பெரிய கூட்டத்தை ஒன்று திரட்டமுடியும்? இவர் முப்பது வயது நிரம்பியவரைப் போன்று தோன்றுகிறார். இவர் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் பயிற்சி பெற்றவராகவும் தெரியவில்லை, அறிவுள்ளவராகவும் தோன்றவில்லை.
எப்படி இவர் இவ்வளவு பெரிய கூட்டத்தை, இவரைச் சுற்றி ஒன்று திரட்ட முடிகிறது? இங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது?" என்று கே கேட்டுக்கொள்வீர்கள்.
அடுத்த படி நிலை, புத்திசாலித்தனம் ; பட்டறிவிலிருந்து புத்திசாலித்தனம். நீங்கள் உங்களுக்குள், ‘இந்த நிகழ்ச்சியில் நாம் ஏன் கலந்துகொள்ளக்கூடாது? உண்மையில் அவர் என்ன செய்யப் போகிறார் என்றுதான் பார்ப்போமே’ என்று நினைப்பீர்கள்.
‘அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’ என்று கேள்வி கேட்கும் நிலையிலிருந்து, ‘ஓ! அவர் எதையோ குறிப்பிடுகிறார். நாம் அவரை நம்பவும் இல்லை, நம்பாமலும் இல்லை. சரி நாமே அதைச் சரிபார்த்துவிடுவோம்’ என்று நினைக்கும் நிலைக்கு வந்துவிடுவீர்கள். பட்டறிவு புத்திசாலித்தனமாகிறது. இப்போது நீங்கள் அந்த குருவுக்கு சிறிது இடம் கொடுக்கிறீர்கள்.
நீங்கள் காத்திருக்க தீர்மானித்த உடனே, நிகழ்வுகள் தானாகவே நடக்க ஆரம்பிக்கும்; நீங்கள் இனிமேல் காத்திருக்கத் தேவையில்லை.
அடுத்து நீங்கள் தொடர்ந்து உள்ளே பார்க்கத் துவங்குவீர்கள் என்றால், புத்திசாலித்தனத்திலிருந்து புத்திசாலித்தனத்தோடு உணர்ச்சியும் கலந்த நிலைக்குச் செல்கிறீர்கள். அதாவது 60% புத்திசாலித்தனம் 40% உணர்ச்சி இவை இரண்டும் கலந்த நிலைக்குச் செல்கிறீர்கள். அந்த சமயம்தான் நீங்கள் குருவிடம் ஒரு நண்பரைப் போல் உணர்வீர்கள்.
அதன்பிறகு உணர்ச்சி 60% ஆகவும் புத்திசாலித்தனம் 40% ஆகவும் மாறுகிறது.
அந்தச்சமயம்தான் நீங்கள் குருவை ஒரு மூத்தவராக, தந்தையாகவோ அல்லது தாயாகவோ அல்லது கடவுளாகவோ அல்லது ஒரு ஆச்சாரியாராகவோ உணர்கிறீர்கள்.
உங்களுக்கு அவரிடம் மரியாதை ஏற்படுகிறது. பிறகு அந்த உறவு தூய உணர்ச்சியாக மாறுகிறது.
ஒரு தாய்க்கும் மகனுக்கும் உள்ளதைப் போல ஒரு ஆழ்ந்த இணைப்பை உணருவீர்கள்.
அதற்குப் பிறகு அங்கு உணர்ச்சியும் இல்லை, பட்டறிவும் இல்லை, புத்திசாலித்தனமும் இல்லை. அது இருப்புத் தன்மை அளவில் உள்ள உறவு. அது மிக நெருங்கியவரிடம் உள்ள ஒரு ஆழ்ந்த பிணைப்பு, மதுர பாவம்.
திடீரென்று அவர் மிக நெருங்கியவராகவும் கூட இல்லை; அதையும் கடந்தவராக இருக்கிறார் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.
நீங்கள் மதுர பாவத்தை உணர ஆரம்பிப்பீர்கள், குருவாகவே உங்களை நீங்கள் உணர்வீர்கள்.
அதைத்தான் நான் தத் த்வம் அஸி என்று குறிப்பிடுகிறேன். தத்த்வமஸி என்றால் ‘அதுவே நீயாக உள்ளாய்’ என்று பொருள். ‘நீதான் குரு’ என்பது அதன் பொருள்.
முதலில், அது சந்தேகங்கள் நிறைந்த ஒரு சாதாரண பட்டறிவு. ஆனால் நீங்கள் அதைக் கடந்து செல்லவேண்டும். எதிர்மறை சந்தேகங்கள் உள்ள இந்த நிலையில் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்றால், இயல்பாகவே
பட்டறிவு நிலை
புத்திசாலித்தனமாக
மாறும்போது
நீங்கள் குருவுக்குச்
சிறிது இடம்
கொடுக்கிறீர்கள்.
நீங்கள் சந்தேகங்களாலும் துக்கங்களாலும் கஷ்டப்படுவீர்கள்.
அடுத்த நிலை புத்திசாலித்தனம்; பிறகு 60% புத்திசாலித்தனம் + 40% உணர்ச்சி; பிறகு 60% உணர்ச்சி + 40% புத்திசாலித்தனம்; பிறகு தூய்மையான உணர்ச்சி; பிறகு தூய்மையான இருப்புத் தன்மை அளவிலான உறவு; பிறகு இவை அனைத்தும் உள்ள மற்றும் அதற்கு மேலும் ஏதோ ஒன்று சேர்ந்த நிலை.
சந்தேகங்கள் நிறைந்த
சாதாரண பட்டறிவை
நீங்கள்
கடந்து செல்ல
வேண்டும்.
நீங்கள் சந்தேகத்தையும் நம்பிக்கையையும் கடந்து, உருவமற்ற சக்திதான் நீங்கள் என்பதை உணர்ந்தால், பிறகு உங்களை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.
இந்த இரகசிய விஞ்ஞானத்தை ஒரு கொள்கையாக உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இப்போது உங்களுடைய கேள்விகளோடு இதை ஒப்பு நோக்கி ஆராய்ச்சி செய்ய நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்.

தேடுதலை ஆழப்படுத்துங்கள்
கேள்வி: ஸ்வாமிஜி, ஒருவர் ஞானமடைந்து விட்டாரா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
அர்ஜுனன் இதே கேள்வியைக் கேட்கிறார். இரண்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் இதே கேள்விக்குப் பதில் அளிக்கிறார் என்று நினைக்கிறேன். நான் அந்த ஸ்லோகங்களை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
அர்ஜுனன் கேட்கிறார்:
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேச்வ |
ஸ்திததீஃ கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ||
“கிருஷ்ணா! எல்லாவற்றையும் கடந்த அந்த ஸமாதி நிலையோடு ஒன்றுபட்டிருக்கும் விழிப்புணர்வு கொண்ட ஒருவருடைய அடையாளங்கள் எவை? அவர் எவ்வாறு பேசுவார்? அவருடைய மொழி என்ன? அவர் எவ்வாறு அமருவார்? எப்படி நடப்பார்?”
இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள கேள்வி இது.
உண்மையில், இரண்டாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் கிருஷ்ணருடன் இணக்கம்கொள்ளத் தயாராக இல்லை. அதனால்தான் கிருஷ்ணர் ஞானமடைதலைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கும் பொழுதே, உடனே அர்ஜுனன் இடைமறித்துக் கேட்கிறார், "ஒருவர் ஞானமடைந்து விட்டாரா இல்லையா என்பதை எப்படிப் கண்டுபிடிப்பது? ஞானமடைந்த ஒருவர் எப்படி நடப்பார்? எப்படி உட்காருவார்?"
> ஞானத்தை அளப்பதற்கு எந்த அளவுகோலும் இல்லை.
உண்மையில், கிருஷ்ணர் ஞானமடைந்து விட்டாரா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்தக் கேள்வியை அர்ஜுனன் கேட்கிறார்.
ஞானமடைதலைப் பற்றி கிருஷ்ணர் விளக்கிச் சொல்லும்போது உடனே அர்ஜுனன், "ஞானமடைந்த மனிதர் எவ்வாறு நடந்துகொள்வார்? என்னிடம் சொல்லுங்கள்," என்று கேட்கிறார்.

அவர் இப்படிக் கேட்பதற்கான பொருள் என்ன? அவர் கிருஷ்ணரைச் சந்தேகிக்கிறார், கிருஷ்ணரின் அதிகாரப்பூர்வமான உரிமையைச் சந்தேகிக்கிறார். கிருஷ்ணரை அளப்பதற்கு ஏதாவது ஒரு அளவுகோல் அவருக்குத் தேவைப்படுகிறது.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம்: கருணையின் காரணமாக, கிருஷ்ணர் இதற்குத் தர்க்க ரீதியாகப் பதில் சொன்னாலும் நீங்கள் தர்க்க ரீதியாக ஞானத்தை அளவிட முடியாது.
அதுதான் முடிவான ஸத்யம். கருணையினால் மட்டுமே கிருஷ்ணர் சில கருத்துகளைக் கொடுக்க முயற்சி செய்கிறார்.
உண்மையில் கிருஷ்ணர் அந்தக் கேள்வியைத் தள்ளிப்போடுகிறார்.
அவர் பதில் சொல்லவில்லை.
கேள்விகளைக் கையாள இரண்டு மூன்று முறைகள் இருக்கின்றன.
ஒரு மனிதர் என்னிடம் வந்து, "ஸ்வாமிஜி, கடவுளை எப்படி உணருவது? கடவுளை எப்படி அடைவது? கடவுளைப் பற்றி ஏதாவது எனக்கு கற்றுக் கொடுங்கள், ஆத்மா, ப்ரஹ்மம் இவற்றைப் பற்றியும் தயவுசெய்து சொல்லுங்கள்," என்று கேட்டார்.
நான் அவரிடம், "சரி நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? உங்களுடைய குடும்பம் எப்படி உள்ளது?" என்று வழக்கமான முறையில் பேச ஆரம்பித்தேன்.
அவரும் பேச ஆரம்பித்தார். அந்த உரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதற்குப் பிறகு அவர் என்னுடன் மூன்று மணி நேரம் இருந்தார். ஆனால் அவர் கேட்ட முதல் கேள்வியை மீண்டும் ஒருமுறைகூட கேட்கவேயில்லை!
அவர் அந்தக் கேள்வியையே மறந்துவிட்டார். தாம் கேள்வி கேட்டோம் என்பதைக் கூட அவர் மறந்துவிட்டார். அவர் அந்த விஷயத்திற்கே வரவில்லை. அவருடைய வாழ்க்கையில் அந்தக் கேள்வி எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்!
ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக அவர் கேட்டார். அதே போல் நீங்களும் குருவைப் பார்க்கும்போது, உங்களுக்கும் ஆன்மீகத்தில் கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.
ஏதோ ஒரு வழியில் நீங்கள் குருவுட ன் தொடர்புகொள்ள வேண்டும்; உங்களுக்கும் சில வார்த்தைகள் தெரியும் என்பதைக் காண்பிக்க வேண்டும். அவ்வளவுதான்!
ஒரு மனிதர் வந்து "பதினெட்டுக் கரங்களை உடைய காளியை வழிபாடு செய்யும் மந்த்ரத்தைச் சொல்லிக் கொடுங்கள். நான் சொல்வதை அவர் கேட்க வேண்டும். அதற்கான மந்த்ரத்தைச் சொல்லிக் கொடுங்கள்,"
> நீங்கள் சந்தேகத்தையும் நம்பிக்கையையும் கடந்து, உணர்வுமாற்ற சக்தியை உணர்ந்தால், அதுதான் நீங்கள். என்று கேட்டார்.
அப்போது அவரிடம் சொன்னேன், "முதலில் இரண்டு கைகளை உடைய உங்கள் மனைவி நீங்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பதற்கான ஏதாவது மந்திரத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். முதலில் இரண்டு கைகளை உடைய பெண்ணை எவ்வாறு நேசிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் பதினெட்டுக் கைகளை உடைய பெண்ணை எவ்வாறு நேசிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளலாம்."
'உங்கள் மனைவியுடன் எவ்வாறு வாழ வேண்டும்' என்ற வாழ்வின் அடிப்படை அறிவியலே உங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் பெரிய பெரிய வார்த்தைகளை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்.

பெரிய வார்த்தைகளிலும் நாகரிக சொற்களிலும் நாம் நமது வாழ்வை எப்போதும் வீணடித்துக் கொண்டு உள்ளோம்.
அதனால்தான் கடவுளைப் பற்றிக் கேட்ட கேள்வியையே இந்த மனிதர் அடியோடு மறந்து விட்டார். அதற்குப் பிறகு அவர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் என்னுடன் செலவிட்டார். ஆனால் அவர் அந்தக் கேள்வியை மீண்டும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
ஏதாவது பேச வேண்டுமென்பதற்காக அவர் அந்தக் கேள்வியைக் கேட்டார். அது அவருடைய தேடுதல் இல்லை. கேள்விகள் எல்லாம் ஒருவகையில் விடையளிக்கப்படுகின்றன. ஆனால் தேடுதல் வேறு ஒருவகையில் விடையளிக்கப்படுகிறது.
dதயவுசெய்து மிகவும் தெளிவாக இருங்கள். கேள்விகள் எல்லாம் ஒருவகையில் விடையளிக்கப்படுகின்றன. ஆனால் தேடுதல் வேறு வகையில் விடையளிக்கப்படுகிறது.

துணிச்சல் இருந்தால் கேள்வி கேளுங்கள்
ஒருமுறை ஒரு இளைஞர், “ஸ்வாமிஜி, நீங்கள் கடவுளைப் பார்த்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார். அவர் இராமகிருஷ்ணரைப் பற்றியும் வேதாந்த இலக்கியத்தைப் பற்றியும் நிறைய படித்திருப்பதாகத் தெரிந்தது. அவர் விவேகானந்தரின் உருவம் பதித்த கழுத்தணியை அணிந்திருந்தார்.
அவர் கேட்டார், "நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?"
நான் அவரிடம் "நீங்கள் இராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப் பற்றியும் விவேகானந்தர் வாழ்க்கையைப் பற்றியும் படித்திருக்கிறீர்களா?" என்று திரும்பக் கேட்டேன். "ஆமாம்!" என்று அவர் சொன்னார்.
விவேகானந்தர் இராமகிருஷ்ணரைக் கேட்டது போல், அதே முறையில் நான் உங்களைக் கேட்கிறேன், "நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.
அவர் அங்கிருந்து ஓடிவிடாதபடி நான் அவருடைய சட்டையை இறுகப்பிடித்துக் கொண்டு, "இராமகிருஷ்ணர், தாம் கடவுளை பார்த்ததாகச் சொன்னார். உடனே விவேகானந்தரும் அப்படியே இராமகிருஷ்ணரைப் பின்பற்றிச் சென்றார். வாழ்நாள் முழுவதும் அவர் இராமகிருஷ்ணருடனேயே இருந்தார்.
இப்போது நான் உங்களிடம் சொல்கிறேன். நான் கடவுளைப் பார்த்தது மட்டுமன்றி உங்களுக்கும் காட்ட முடியும். வாருங்கள். நான் உங்களுக்குக் கடவுளைக் காண்பித்தவுடன், நீங்களும் உங்கள் வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்பவராக இருக்க வேண்டும்," என்று சொன்னேன்.
அந்த மனிதர் என் கைகளைவிடுவித்துக்
கொண்டு ஓடிவிட்டார். அவர் அப்படியே
மறைந்துவிட்டார். அவர் தப்பித்து ஓடி
விட்டார்.
உங்களால் பொறுப்பெடுக்க முடியவில்லை என்றால், கேள்வி கேட்காதீர்கள்.
> ஞானத்தைப் பற்றிய
> கேள்விகளுக்குத்
> தர்க்க ரீதியாகப்
> பதில் சொன்னாலும்,
> நீங்கள்
> ஞானத்தைத்
> தர்க்க ரீதியாக
> அளவிட முடியாது.
நீங்கள் இராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப்
பற்றியும் விவேகானந்தரின் வாழ்க்கையைப்
பற்றிப் படித்திருப்பதனால் மட்டுமே கேள்வி
கேட்காதீர்கள்.
விவேகானந்தர் இராமகிருஷ்ணரைக்
கேட்டது உண்மைதான். அவருக்குத்
தைரியம் இருந்தது, அதன் பிறகு
இராமகிருஷ்ணரைப் பின்பற்றிச்
செல்வதற்கான துணிச்சல் இருந்தது.
இராமகிருஷ்ணர், "ஆமாம் நான் கடவுளைப்
பார்த்திருக்கிறேன்," என்று சொல்லிய
உடன் விவேகானந்தர் இராமகிருஷ்ணரைப்
பின்தொடர்ந்தார்.
> உங்களால்
> பொறுப்பெடுக்க
> முடியவில்லையென்றால்,
> கேள்வி கேட்காதீர்கள்.
நான்அவரிடம் "நான் கடவுளைப் பார்த்தது மட்டும் அல்லாமல், நான் உங்களுக்குக் காண்பிக்கவும் முடியும் வாருங்கள்," என்று சொன்னேன். ஆனால் அந்த மனிதர் தப்பித்துச் சென்று விட்டார்.
நாம் எப்போதும், வெற்று வார்த்தைகளால் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். கேள்விகள் ஒருவிதமாகப் பதில் அளிக்கப்படுகின்றன. தேடுதல் வேறுவிதமாகப் பதில் அளிக்கப்படுகிறது. இங்கு அர்ஜுனன் கேள்வியைக் கேட்கிறார். அது தேடுதல் அல்ல.
அது கேள்வியா, தேடுதலா என்று எப்படிப் கண்டுபிடிப்பது?
அது தேடுதலாக இருந்தால் உங்களுக்கு ஒரே ஒரு வார்த்தைதான் இருக்கும். நீங்கள் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு நிறுத்திவிடுவீர்கள். பிறகு நீங்கள் பதிலுக்காகக் காத்திருப்பீர்கள்.
அது பட்டறிவுப்பூர்வமான கேள்வியாக இருந்ததென்றால், நீங்கள் தொடர்ந்து குறைந்தது பத்து வார்த்தைகளாவது பேசுவீர்கள். இங்கு அவர் பத்துக் கேள்விகளைக் கேட்கிறார். அவர் எப்படிப் பேசுவார்? அவரது மொழி என்ன? அவர் எப்படி உட்காருவார், எப்படி நடப்பார்? அப்படி என்றால் அவருக்குப் பதிலில் ஆர்வம் இல்லை என்று அர்த்தம்!
உங்களுக்குப் பதிலில் ஆர்வம் இருந்தால் முதல் கேள்வியோடு நிறுத்திவிடுவீர்கள்; நீங்கள் பதிலுக்காகக் காத்திருப்பீர்கள். பிறகுதான் நீங்கள் அடுத்த கேள்வியைக் கேட்பீர்கள்.
பதில்கள் விடையாக...!
ஆனால் இங்கு அர்ஜூனன் பட்டறிவுப்பூர்வமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவர் அந்த நிலையில்தான் உள்ளார். பிறகு கிருஷ்ணர் ஆரம்பிக்கிறார்.
மிகத் தெளிவாக இருங்கள், உண்மையில் கிருஷ்ணர் அர்ஜூனனுக்குப் பதில் சொல்லவில்லை! கேள்விகளுக்குப் பதில் அளிப்பது என்பது எந்தவிதத்திலும் பயன்படாது என்று அவருக்குத் தெரியும். அதனால், அவர், அர்ஜூனனுக்கே கூட தாம் விடை பெறவில்லை என்ற எண்ணம் எழாத வண்ணம் விடை அளிக்கிறார். மேலும் அந்த விடைகளைக் கொண்டு அர்ஜூனன் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத வண்ணமும் விடை அளிக்கிறார்!
இங்கே அவர் பதிலைத் தருகிறார்
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோகதாந் |
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே ||2.55
கிருஷ்ணர் அர்ஜூனனைப் பார்த்து, "ஹே பார்த்தா! எந்த ஒரு மனிதர் தம் மனத்தில் எழும் எல்லா விதமான ஆசைகள், சுயநல செயல்கள் இவற்றைக் கட்டுப்படுத்துகிறாரோ, தம்முடனும் தம் விழிப்புணர்வுடனும் தமது நிலையான ஆனந்தத்திலுமே இருந்து மனநிறைவு பெறுகிறாரோ, அவரே உறுதியான மனமும் வாழ்வும் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது."
சரி, இந்த அளவீட்டைக் கொண்டு உங்களில் எத்தனை பேரால் , ஒருவர் ஞானமடைந்தவரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியும்? என்று எனக்குச் சொல்லுங்கள். இங்கு அவர் பதிலைக் கொடுத்துள்ளார். நம்மில் யாராவது இந்தப் பதிலைப் பயன்படுத்த முடியுமா? கேள்விக்குப் பதில் கிடைத்த பிறகு, பதிலுக்கு முன்னால் இருந்ததை விட, இப்போது அதிகப் பிரச்சினைகள் இருக்கும்!
கேள்விகள்,
ஒருவகையில்
விடையளிக்கப்படுகின்றன.
தேடுதல்,
வேறு வகையில்
விடையளிக்கப்படுகிறது.
உண்மையில், சிலசமயம் பதிலைக்
கொடுப்பதன் மூலம், கேள்வி கேட்பதற்கு
முன்னால் இருந்ததை விட, அதிகக்
கேள்விகளைத்தான் உருவாக்குவீர்கள்!
முதல் முதலில் அர்ஜுனனுக்குப் பத்துக் கேள்விகளே இருந்திருந்தால், இந்தப் பதிலுக்குப் பிறகு அவருக்கு இருபதுக்கும் மேற்பட்ட கேள்விகள் இருந்திருக்கும்!
ஏனென்றால், "யார் ஒருவர் தமது சொந்த விழிப்புணர்விலேயே முழுவதுமாக நிலை பெற்றிருக்கிறாரோ, யார் ஒருவர், தமது சொந்த உணர்விலேயே மனநிறைவு அடைந்திருக்கிறாரோ, அவரே உறுதியான மனமும் வாழ்வும் கொண்டவராக இருப்பார் என்று சொல்லப்படுகிறது,'' என்றுதான் கிருஷ்ணர் பதில் சொல்கிறார்.
> கேள்விக்குப் பதில் கிடைத்த பிறகு, பதிலுக்கு முன்னால் இருந்ததைவிட அதிகப் பிரச்சினைகள் தோன்றும்!
"அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது,'' என்றுதான் அவர் சொல்கிறார். அவர் தமது அனுபவத்திலிருந்து இந்தப் பதிலைக் கொடுக்கவில்லை. 'அவர் இருக்கிறார்' என்று அவர் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அதைச் சொல்லவில்லை. "அவரே உறுதியான மனமும் வாழ்வும் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது,'' என்று சொல்லி, பழியைப் பாரம்பரியத்தின் மீது சுமத்திவிட்டு, அவர் தப்பிக்க முயற்சி செய்கிறார்.
அவர் நேராக முன்னே வரவில்லை. அவர் நேரிடையாகக் கேள்வியை எதிர்கொள்ளவில்லை. அவர் அதை அப்படியே செல்ல விட்டுவிடுகிறார். ஏனென்றால் அர்ஜுனன் இறுதி ஸத்யத்திற்கு இன்னமும் தயாராகவில்லையாததால், அவர் கேள்விகளைத் தவிர்த்துவிடுகிறார் .
இராமகிருஷ்ணரின் நெருங்கிய சீடர்கள் அவரிடம் சில வரங்களைக் கேட்கிறபோது, அவர், "கவலைப்படாதே நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்று சொல்வார்.
அந்தக் கேள்வியையோ, வரத்தையோ அந்தச் சமயத்திற்குத் தவிர்க்க வேண்டுமென்று நினைத்தால், "காளியிடம் சென்று வழிபடு,'' என்று சொல்லிவிடுவார். அவர் தம்மை முன்நிறுத்த மாட்டார். அவர் அந்தக் கேள்வியைத் தவிர்த்துவிடுவார். அதைத்தான் கிருஷ்ணர் இங்குச் செய்கிறார். அவர் சொல்கிறார், "இது நம்பப்படுகிறது."
ஞானியின் அடையாளங்கள்
அடுத்த ஸ்லோகம்:
துஃகேஷ்வநுத்விக்நமநாஃ ஸுகேஷு விகதஸ்ப்ருஹஃ |
வீதராகபயக்ரோதஃ ஸ்திததீர்முநிருச்யதே || 2.56
அதன் மொழிபெயர்ப்பு: துக்கத்திலும் கலங்காத மனம் உடையவர், இன்பத்தைத் தேடிச் செல்லாதவர், பற்று, அச்சம் கோபம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றவரே ஞானி என்று அழைக்கப்படுகிறார். அவர் நிலையான ஆனந்தத்திலும் உயர்ந்த உணர்வு நிலையிலும் இருப்பார்.
உங்களுடைய மனம் அதிகப்படியாக உணர்ச்சிப்பூர்வமான பற்றுதல்களால் நிரப்பப்படாமல் இருந்தால், அது உங்கள் வாழ்வில் சுந்திரமாகப் பாயமுடியும்.
பெரும்பாலான மக்கள், ''ஸ்வாமிஜி, வேத நூல்களிலிருந்து எப்படி உங்களால் இடைவிடாமல் மேற்கோள் காட்டமுடிகிறது? உங்களால் எங்கிருந்து இந்த அளவு தகவல்களைப் பெற முடிகிறது? எப்படி உங்களால் இத்தனை விஷயங்களைப் பேச முடிகிறது? எப்படி உங்களுக்கு இந்த அளவு கூர்மையான நினைவுத் திறன் இருக்கிறது? கூர்மையான நினைவாற்றலைப் பெற எங்களுக்கு ஒரு உத்தியைத் தாருங்கள்,'' என்று என்னிடம் கேட்பதுண்டு.
அது மிகவும் எளிமையான இரகசியம்.
கூர்மையான நினைவாற்றலுக்கு இதுதான் முடிவான உத்தி; கூர்மையான நினைவாற்றலை பெறுவது எப்படி?
நான் அவர்களுக்குச் சொல்கிறேன்,''உணர்ச்சிப்பூர்வமான பற்றுதல்களை விட்டுவிடுங்கள்!''
ஒரு கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்கிறதோ, அது போன்றுதான் உங்கள் உள்தளமும் வேலை செய்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் அதிகச் செறிவுள்ள புகைப்படங்களால் நிரப்பப்படும்போது, என்ன
> துக்கத்திலும் கலங்காத
> மனம் உடையவர்,
> இன்பத்தைத்
> தேடிச் செல்லாதவர்,
> பற்று, அச்சம், கோபம்
> இவற்றிலிருந்து
> விடுதலை பெற்றவரே
> ஞானி!
ஆகிறது? அதில் அதிகமான செய்திகளைப்
பதிவுசெய்து வைக்க முடிவதில்லை. ஆனால்
அதுவே வெறும் வார்த்தைகளால் ஆன
ஆவணங்களால் நிரப்பப்படும்போது, அதில்
அதிக அளவு செய்திகளைப் பதிவுசெய்து
வைக்க முடிகிறது. உங்களுடைய உணர்ச்சி
வயப்பட்ட பற்றுதல்கள்தான், வார்த்தை
ஆவணங்களைச் செறிவூட்டப்பட்ட
புகைப்பட ஆவணங்களாக மாற்றுகிறது.
வார்த்தை ஆவணங்களோடு உங்கள்
உணர்ச்சிப்பூர்வமான பற்றுதல்களை
சேர்க்கும்போது, வார்த்தை ஆவணங்களே
செறிவூட்டப்பட்ட புகைப்படங்களாக
உருமாற்றம் அடைகிறது.
கூர்மையான
நினைவாற்றலைப்
பெற வேண்டுமானால்,
உணர்ச்சிப்பூர்வமான
பற்றுதல்களை
விட்டுவிடுங்கள்.
ஏதாவது ஒரு விஷயத்தோடு உணர்ச்சிப்பூர்வமான பற்றுகளால் பந்தப்படும்போது, மீண்டும் மீண்டும் நீங்கள் அதையேதான் நினைப்பீர்கள். அதுவே உங்களுடைய உள் தளத்தில் மிகப்பெரிய பகுதியை எடுத்துக்கொள்கிறது. உங்களுடைய முழு உள் தளமும் அந்த ஒரு குறிப்பிட்ட படத்தால் விழுங்கப்பட்டுவிடுகிறது.
உங்கள் உள் தளத்தில் அறுவை சிகிச்சை செய்து, அதனுள்ளே பார்க்க முடிந்தால், உங்கள் உள்தளத்தின் அதிக பகுதி, உங்களுடைய மனைவி அல்லது குடும்பம் அல்லது குழந்தைகள் என்ற இந்த மூன்று அல்லது நான்கு புகைப்படங்களால் நிரப்பப்பட்டு இருக்கும். இந்த நான்கு அல்லது ஐந்து படங்கள்தான் அதிக செறிவூட்டப்பட்டதாக இருக்கும்.
உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கின் தொண்ணூறு சதவிகிதப் பகுதி இந்த நான்கு அல்லது ஐந்து படங்களால் நிரப்பப்பட்டு இருக்கும். அதனால்தான் மற்ற வேலைகளுக்கு நினைவுத் தளத்தில் இடம் இருப்பதில்லை. உங்களது முழு நினைவுத் தளமும் ஏற்கனவே இவற்றால் இடம்பிடிக்கப்பட்டு இருக்கும். நினைவுத் தளத்தில் இடம் எதுவும் விட்டுவைக்கப்படுவதில்லை.
உணர்ச்சிப்பூர்வமான பற்றுதலைச் சேர்ப்பதன் மூலம் செறிவுள்ள படங்களை உருவாக்குவதை நீங்கள் குறைக்க முடிந்தால், உங்களால் மேலும் அதிக வார்த்தை ஆவணங்களைக் கையாள முடியும்; அதனால் அதிக நினைவுப் பகுதி உங்களுக்குக் கிடைக்கும். அந்த இரகசியத்தைத்தான் கிருஷ்ணர் இங்கே தருகிறார். எவருடைய உள் தளம் முழுவதும் வெறுமையாக உள்ளதோ, எவருடைய ‘ஹார்ட் டிஸ்க்’ தூய்மையாக உள்ளதோ, யாரால் எந்த ஒரு தகவலையும் எந்த நேரத்திலும் செயல்முறைப்படுத்த முடியுமோ, எவருடைய உள் தளம் ஒளிவு மறைவில்லாமல், சுதந்திரமாக, தெளிவாக உள்ளதோ, அவரை ஸ்திதப்ரஜ்ஞ என்று குறிப்பிடலாம். அழிவில்லாத, நிலையான விழிப்புணர்வு நிலையில் உள்ளவர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
தர்க்கம், ஞானிகளை அடையாளம்காண ஒருபோதும் உதவாது
இந்த அனைத்துப் பதில்களையும் கிருஷ்ணர் தருகிறார். ஆனால் நான் சொல்கிறேன், இந்த அளவீடுகளைக் கொண்டு ஒருவர் ஞானமடைந்தவரா அல்லது ஞானமடையாதவரா என்று எப்போதுமே கண்டுபிடிக்க முடியாது. இந்த அளவுகோலைக் கொண்டு அறிவுப்பூர்வமாக நிச்சயமாக கண்டு பிடிக்க முடியாது.
உங்களுக்கு நேர்மையான பதில் தேவையானால், நான் ஒன்றுதான் சொல்ல முடியும். "தர்க்க ரீதியாக நீங்கள் எப்போதுமே கண்டுபிடிக்க முடியாது!"
யாராவது ஒருவர் ஞானமடைந்தவராக இருந்தாரென்றால், நீங்கள் அவரைப் பார்த்தவுடனே, உங்கள் இதயத்துக்குள்ளே ஏதோ ஒன்று நிகழும். உங்களுடைய அறிவைக் கடந்து உங்களுடைய முழு இதயமும் அவருடன் ஒருங்கிணைந்து இருக்கும்; அவரை உங்களால் மறக்க முடியாது.
நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுடைய முழு இருப்புத் தன்மையும் அவரை நோக்கி இழுக்கப்படும். அவர் தானாகவே உங்களுடைய முழு இருப்புத் தன்மையையும் நிரப்புவார். உங்களுக்கு என்ன நிகழ்ந்து கொண்டு உள்ளது என்று உங்களுக்குத் தெரியாது. உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது அல்லது தர்க்க ரீதியாக ஆராய்ந்து அறிய முடியாது.
நீங்கள் வெறுமனே காத்துக் கொண்டு இருப்பீர்கள், "அவரை எப்போது நான் மீண்டும் பார்க்க முடியும்? அவரை அடுத்து
எப்போது நான் பார்க்கமுடியும்?'' என்று
அவருக்காகக் காத்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்கள் இதயம் எளிதாக அன்பில் விழும்.
குருமார்களிடம் வைக்கும் அன்பில் நீங்கள்
உயர்கிறீர்கள், சாதாரண மனிதர்களிடம்
வைக்கும் அன்பில் நீங்கள் விழுகிறீர்கள்!
உங்கள் உள் தளத்தில் ஏதோ ஒன்று
நிகழும். உங்களுடைய கட்டுப்பாட்டைத்
தாண்டி, உங்களுடைய தர்க்கத்தைத்
தாண்டி, அவர் ஞானமடைந்தவர் என்று
உங்கள் இதயத்திற்குத் தெரியும். அவரிடம்
"முடியாது," என்று உங்களால் சொல்ல
முடியாது.
குருமார்களிடம் வைக்கும்
அன்பில்
நீங்கள் உயர்கிறீர்கள்,
சாதாரண மனிதர்களிடம்
வைக்கும் அன்பில்
நீங்கள் விழுகிறீர்கள்!
மிகவும் தெளிவாக இருங்கள், அவ்வாறு நடந்தால் அந்த மனிதர் உங்களுக்கு உதவி செய்யப் போகிறார். அந்த மனிதர்தான், வாழ்வு என்பது என்ன? என்பதை உங்களுக்குக் காண்பிக்கப் போகிறார்.
அந்த மனிதர்தான் உங்களுடைய குரு. அது நிகழவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். உங்கள் தேடலைத் தொடருங்கள். சரியான குருவை நீங்கள் சந்திப்பீர்கள்.
யார் ஞானமடைந்து உள்ளார்கள், யார் ஞானமடையவில்லை என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பட்டறிவினால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.
யாராவது உங்களுக்கு உதவி செய்யப் போகிறார் என்றால் உங்களுடைய இதயம் எளிதாக அவருடன் ஒருங்கிணைந்து இருக்கும். அவர் ஞானமடையாதவராக இருந்தாலும் உங்களுடைய இதயம் அவருடன் ஒருங்கிணைந்து இருந்தால், அவர் உங்களுக்கு உதவி செய்வார்.
ஒருவர் ஞானமடைந்தவராக இருந்தும் உங்களுடைய இதயம் அவருடன் ஒருங்கிணைந்து போகவில்லை என்றால், அவர் உங்களுடைய குரு கிடையாது. அவரை மறந்துவிடுங்கள். அதனால் நீங்கள் குழம்ப வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே தளர்வடையும்ங்கள்.
சரியான பாதையைக் காண்பிப்பது எப்படி, சரியான பாதையில் உங்களை வழிநடத்திச் செல்வது எப்படி என்று உங்கள் இதயத்திற்குத் தெரியும் உங்களுடைய இதயம்நான் நீதிபதி. உங்களை, சரியான காலத்தில், சரியான நேரத்தில், சரியான மனிதரிடம் அது தானாகவே வழிநடத்திச் செல்லும்.
அதனால் தெய்வீக பரப்ரம்ஹமாகிய கிருஷ்ணர், நம் அனைவரையும் சரியான சக்திக்கும் சரியான மனோபாவத்திற்கும் சரியான அனுபவத்திற்கும் வழிநடத்திச் செல்லட்டும்.
அவர் முடிவில்லா நிலையான ஆனந்தத்தைப் பொழியட்டும். அவர் நம்மை நித்யானந்த அனுபவத்திற்குள் மூழ்கச் செய்து, நித்யானந்தத்தை உணரச் செய்து நித்யானந்தத்தை வெளிப்படுத்தச் செய்யட்டும்.
நன்றி.
ஓம் தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரம்ஹவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஶ்ரீக்ரு'ஷ்ணார்ஜுனஸம்வாதே
ஜ்ஞான கர்ம ஸந்நியாஸயோகோ நாம சதுர்தோ'த்யாய: ||
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஜ்ஞான கர்ம ஸந்நியாஸ யோகம் என்ற நான்காவது அத்தியாயம்.

பகவத்ஃகீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்ஃகீதையின் பின்புலமாக இருக்கும் ஸத்யத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.
அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மஹரிஷி வேத விஞ்ஞான விச்̈வா வித்யாபீடத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பகவத்ஃகீதையின் ஸ்லோகங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஸத்யங்களை அடிப்படையாகக்கொண்ட த்யான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. த்யானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.
த்யானம் செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
த்யானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
த்யானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உட்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது. மூளை செயல்பாட்டோடு இணைந்து ஒருமுகப்படும்பொழுது ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
புலன்களை உணரும் தன்மையும் முழுமையான உடல் நலமும் மேம்பாட்டு மன அழுத்தம் குறைகிறது. மேலும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
த்யானத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.
7000 மக்கள் (ஆராய்ச்சியின்பொழுது உலக மக்கள் தொகையில் √1 சதவீதத்தின் அடுக்கு) இணைந்து கூட்டு த்யானம் செய்ததால், உலக அளவில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் பெருமளவில் குறைந்தன.
த்யானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.
டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், ‘பகவத்ீ்கதை மிக உயர்ந்த ஸத்யத்தை மனித குலத்திற்கு்கொண்டு சேர்க்கிறது’ என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வேத நூலின் ஸத்யத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் சேவையை மிகுந்த நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.
கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனனின்
- வேறு சில பெயர்கள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜூனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜூனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜூனனை அழைக்கிறார்.
அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
| அரிஸூதனன் | : பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன் | : கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் |
| கோவிந்தன் | : எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர் |
| பகவான் | : ஆறுவித குணங்களை உடையவர். அவை |
- பரிபூரண ஞானம்.
- பரிபூரண வைராக்கியம்.
- பரிபூரண பலம்
- பரிபூரண கீர்த்தி
- பரிபூரண தேஜஸ்
- பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ)
| புருஷோத்தமன் | : மேலான புருஷன் |
மதுஸூதனன் : மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன் : லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன் : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேஷ்வரன் : யோகத்திற்குத் தலைவர்
வாஸுதேவன் : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
ஜனார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேசன் : இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன் : பாபம் அற்றவர்
அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
அர்ஜுனன் : நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன் : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீடி : கிரீடம் தரித்தவர்
குடா கேசன் : தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன் : 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன் : குந்தியின் மகன்
தனஞ்ஜயன் : செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன் : எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன் : பாண்டுவுக்கு மகன்
பார்த்தன் : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன் : பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின் : இடது கையால் அம்பு எய்பவர்

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | : கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி) |
| த்ருபதன் | : திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் | : அரசர் த்ருபதனின் மகன் |
| சி'கண்டி | : சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | : அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசர் |
| யுயுதாநன் | : கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி'ராஜன் | : அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | : சிறந்த போர்வீரர் |
| குந்தி போஜன் | : முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | : குந்தி போஜனின் சகோதரர் |
| சை'ப்யா | : சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | : சேதி நாட்டின் அரசர் |
| உத்தமளௌஜன் | : சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர்கள்: | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் |
| யுதிஷ்டிரர் | : தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பீமன் | : கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | : வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | : குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
| ஸஹதேவன் | : ஜோதிடக் கலையில் வல்லவர். |
கெளரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | : அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
| பீஷ்மர் | : கெளரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | : கெளரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகர்ணன் | : கெளரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | : பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | : துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்'ருபர் | : கெளரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | : அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.) |
| ஸெளமாதத்தி | : பாகிர்களின் அரசர் |
| துச்'சாதனன் | : கெளரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | : கதாயுத சண்டையில் வல்லவர், கெளரவ சகோதரர்களில் மூத்தவர் |