ஸ்லோகங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அதத்விதீயோऽத்யாய:
அத்தியாயம் - 2
ஸாங்க்ய யோக: ஸாங்கிய யோகம்
ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ரு'பயாऽऽவிஷ்டமச்'ருபூர்ணாகுலேக்ஷணம் /
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதன: // 2.1
ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னார்; தம் - அந்த அர்ஜுனனிடம்; ததா - அவ்விதம்; க்ரு'பயா - இரக்கத்துடன்; ஆவிஷ்டம் - நிறைந்து; அச்'ருபூர்ண ஆகுல ஈக்ஷணம் - நீர் நிரம்பிய கலங்கிய கண்களுடன்; விஷீதந்தம் - துக்கத்தோடு இருந்த; இதம் - இந்த; வாக்யம் - வார்த்தையை; உவாச - சொன்னார்; மதுஸூதன: - பகவான் மதுஸூதனன்
ஸஞ்ஜயன் சொன்னது
2.1 இரக்கத்தாலும் துயரத்தாலும் அர்ஜுனனின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, கிருஷ்ணர் இவ்வாறு பேசுகிறார்.
.................................................................................
ஸ்ரீபகவாநுவாச
குதஸ்த்வா கச்'மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்/
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந // 2.2
ஸ்ரீபகவாநுவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; குத: - எந்தக் காரணத்தினால்; த்வா - உன்னை; கச்'மலம் - மனச்சோர்வு; இதம் - இந்த; விஷமே - இக்கட் டான சமயத்தில்; ஸமுபஸ்திதம்- வந்தடைந்தது; அநார்யஜுஷ்டம் - இது சான்றோர்களால் கடைபிடிக்கப்படாதது; அஸ்வர்க்யம் - ஸ்வர்க்கத்தை அளிக்காதது; அகீர்திகரம் - புகழையும் தரத்தக்கதல்ல; அர்ஜுந - அர்ஜுனா
ஸ்ரீபகவான் சொன்னது
2.2 இந்த இக்கட்டான வேளையில் எங்கிருந்து உனக்கு இப்படியொரு மனச்சோர்வு வந்தது, அர்ஜுனா, நீ உன்னுடைய தகுதிக்கு ஏற்றபடி நடந்து கொள்ளவில்லை. இது, உன்னைத் தம்மைத்தாமே அறிவதிலிருந்து விலக்கிவிடும்.
......................................................................................
க்லைப்ப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே/
க்ஷுத்ரம் ஹ்ரு'தயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட
பரந்தப // 2.3
க்லைப்ப்யம் - அலியின் தன்மையை; மா ஸ்ம கம: - அடையாதே; பார்த
- பார்த்தா; ந - இல்லை; ஏதத் - இது; த்வயி - உனக்கு; உபபத்யதே - பொருத்தமானது; க்ஷுத்ரம்- இழிந்த; ஹ்ரு'தயதௌர்பல்யம் - மனத்தின் தளர்ச்சியை; த்யக்த்வா - விடுத்து; உத்திஷ்ட - போருக்காக எழுந்து நில்; பரந்தப - எதிரிகளை அழிப்பவனே
2.3 ஓ பார்த்தா, எதிரிகளை அழிப்பவனே! பயத்தைக் கண்டு பயந்துவிடாதே, அது உனக்கு அழகல்ல. இந்தப் பலவீனமான மன அமைப்பை விட்டுவிட்டு எழுந்து நில்!
......................................................................................
அர்ஜுந உவாச
கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதன /
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதன //2.4
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; கதம் - எவ்வாறு; பீஷ்மம் - பீஷ்மரையும்; அஹம் - நான்; ஸங்க்யே - போர்க்களத்தில்; த்ரோணம் ச
- துரோணரையும்; மதுஸூதன - மதுஸூதனா; இஷுபி: - அம்புகளினால்; ப்ரதியோத்ஸ்யாமி - எதிர்த்துப் போரிடுவேன்; பூஜார்ஹௌ - இருவருமே பூஜிக்கத்தக்கவர்கள்; அரிஸூதந- எதிரிகளை அழிப்பவனே
அர்ஜுனன் சொன்னது.
2.4 ஓ மதுவை அழித்தவனே! என்னுடைய வணக்கத்திற்கு உரியவர்களான பீஷ்மரையும், துரோணரையும் எதிர்த்து நான் எப்படிப் போர் செய்ய முடியும்?
......................................................................................
குருநஹத்வா ஹி மஹாநுபாவாந்
ச்'ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே /
ஹத்வார்தகாமாம்ஸ்து குருநிஹைவ
புஞ்ஜீய போகान्ருதிரப்ரதிக்தான் // 2.5
குருந் - பெரியவர்களை; அஹத்வா - கொல்லாமல்; ஹி - நிச்சயமாக; மஹாநுபாவாந் - மேன்மை பொருந்திய; ச்'ரேய - மேன்மைதரும்; போக்தும்- அனுபவிப்பது; பைக்ஷ்யம்; அபி - பிச்சை எடுப்பதால் கிடைக்கும் அன்னத்தைக் கூட; இஹ லோகே - இவ்வுலகில்; ஹத்வா
- கொன்றாலும்; அர்தகாமாந் - செல்வமும், சுகத்தை அனுபவிப்பதும்; து-ஆனால்; குருந்- பெரியவர்களை; இஹ - இவ்வுலகில்; ஏவ - மட்டும்; புஞ்ஜீய - அனுபவிக்கப் போகின்றேன்; போகாந் - அனுபவிக்கும் சுகங்கள்; ருதிரப்ரதிக்தாந் - இரத்தத்தில் தோய்ந்த
2.5 இவர்களைப் போன்ற மேலான ஆச்சாரியர்களை அழித்துவிட்டு வாழ்வதை விட பிக்ஷை எடுத்து வாழ்வதே சிறந்தது. இவர்களைக் கொன்ற பிறகு, நான் அனுபவிக்கும் சொத்துகளும், ஆசைகளும் இவர்களின் ரத்தத்தால் கறைபடிந்ததாகவே இருக்கும்.
ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு: /
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்-
தேSவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா: // 2.6
ந - இல்லை; ச - கூட; ஏதத் - இதை; வித்ம: - அறிய; கதரத் - இவ்விரண்டில் எது; ந: - நமக்கு; கரீய: - சிறந்தது; யத் வா ஜயேம - அல்லது அவர்களை வெற்றி கொள்வதா; யதி வா - அல்லது; ந: - நம்மை; ஜயேயு: - வென்று விடுவதா; யாந்-அவர்களை; ஏவ - மட்டும்; ஹத்வா
- கொன்று; ந ஜிஜீவிஷாம: - வாழக்கூட விரும்பவில்லையோ; தே - அந்த; அவஸ்திதா: - எதிர்த்து நிற்கிறார்கள்; ப்ரமுகே - நம்முன்னே; தார்தராஷ்ட்ரா: - த்ருதராஷ்ட்ர குமாரர்கள்
2.6 நம்மை அவர்கள் வீழ்த்துவது நல்லதா அல்லது நாம் அவர்களை வீழ்த்துவது நல்லதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் முன் இருக்கும், திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் உயிர்வாழ விரும்பமாட்டோம்.
கார்ப்பண்ய தோஷோபஹதஸ்வபாவ:
ப்ரு'ச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: /
யச்ச்ரேய: ஸ்யாந் நிச்'சிதம் ப்ரூஹி தந்மே
சி'ஷ்யஸ்தேஹம் சா'தி மாம் த்வாம் ப்ரபந்நம் //2.7
கார்ப்பண்ய தோஷ உபஹத ஸ்வபாவ: - கோழைத்தனத்தினால் சீரழிந்த சுபாவம் கொண்டவனும்; ப்ரு'ச்சாமி- கேட்கின்றேன்; த்வாம் - உங்களிடம்; தர்மஸம்மூடசேதா: - தர்ம விஷயத்தில் குழம்பிய மனமுடையவனுமான; யத் - எந்த; ச்'ரேய: ஸ்யாத் - நன்மை தரக்கூடிய; நிச்'சிதம் - உறுதியாக; ப்ரூஹி - சொல்லுங்கள்; தத் - அதை; மே - எனக்கு; சிஷ்ய: - சீடன்; தே
- உங்களுடைய; அஹம் - நான்; சா'தி - அறிவுரை சொல்லுங்கள்; மாம் - எனக்கு; த்வாம் - உங்களை; ப்ரபந்நம் - சரணடைந்த
2.7 என் இதயம் துக்கத்தால் நிறைந்து இருக்கிறது. எனது கடமை எது என்று தெரியாமல் என் மனம் கலங்கியிருக்கிறது. நான் எதைச் செய்ய வேண்டுமென்று தயவு செய்து சொல்லுங்கள். நான் உங்களுடைய சீடன். நான் உங்களிடம் தஞ்சம் அடைந்துள்ளதால் எனக்கு வழிகாட்டுங்கள்.
....................................................................
ந ஹி ப்ரபச்'யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம் /
அவாப்ய பூமாவஸபத்நம்ரு'த்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம் // 2.8
ந - இல்லை; ஹி - நிச்சயமாக; ப்ரபச்'யாமி- பார்க்கவில்லை; மம - என்னுடைய; அபநுத்யாத்- விரட்டியடிக்குமோ; யத் - எது; சோகம் - துக்கத்தை; உச்சோஷணம் - வாட வைக்கிற; இந்த்ரியாணாம் - புலன்களை; அவாப்ய - அடைந்தால்; பூமௌ
- பூவுலகில்; அஸபத்நம் - எதிரிகளற்ற; ருத்தம் - செல்வங்கள் நிறைந்த; ராஜ்யம் - ராஜ்யம்; ஸுராணாம் - தேவர்களுக்கு; அபி
- கூட; ச - மற்றும்; ஆதிபத்யம் - தலைவனாக இருப்பதையும்
2.8 இந்தப் பூலோகத்தில் எல்லையில்லாத செல்வங்களையும், ஐஸ்வரியங்களையும் நான் அடைந்தாலும், மேல் உலகத்தில் தேவர்களை ஆளும் பதவி கிடைத்தாலும் என் புலன்களை எரிக்கும் இந்தத் துக்கத்திலிருந்து எனக்கு விமோசனம் கிடைக்குமா?
....................................................................
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ரு'ஷீகேச'ம் குடாகேச': பரந்தப: /
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ //
ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னார்; ஏவம் - இவ்வாறு; உக்த்வாசொல்லிவிட்டு; ஹ்ரு'ஷீகேசம் - அந்தர்யாமியான ஸ்ரீ க்ருஷ்ணனிடம்; குடாகேச: - அர்ஜுனன்; பரந்தப: - எதிரிகளை அழிப்பவன்; ந யோத்ஸ்யே
- போர்புரியமாட்டேன்; இதி -என்று; கோவிந்தம் - ஸ்ரீ க்ருஷ்ணனிடம்; உக்தவா - சொல்லி; தூஷ்ணீம் - மௌனமாக; பபூவ - ஆகி விட்டார்; ஹ
- தெளிவாக
ஸஞ்ஜயன் சொன்னது
2.9 அதற்குப் பிறகு அர்ஜுனன் கிருஷ்ணரிடம் "கோவிந்தா, நான் போரிடமாட்டேன்," என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.
தமுவாச ஹ்ரு'ஷீகேச': ப்ரஹஸந்நிவ பாரத /
ஸேநயொருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச: //
தம் - அர்ஜுனனிடம்; உவாச - சொன்னார்; ஹ்ரு'ஷீகேச': - அந்தர்யாமியான ஸ்ரீ கிருஷ்ணன்; ப்ரஹஸந் இவ - சிரித்தாற் போல; பாரத
- பரதகுலத் தோன்றல் திருதராஷ்டிரரே; ஸேநயோ: - படைகளுக்கும்; உபயோ: - இரண்டு; மத்யே - நடுவில்; விஷீதந்தம் - துயரப்பட்டுக் கொண்டிருக்கும்; இதம் - இந்த; வச: - வார்த்தைகளை
2.10 இரண்டு படைகளுக்கும் நடுவில் துக்கத்தால் துவண்டுபோய் இருக்கும் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சிரித்த வண்ணம் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீபகவாநுவாச
அசோ'ச்யாநந்வசோ'சஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ச்'சபாஷஸே /
கதாஸூநகதாஸூம்ச்'ச நாநுசோச'ந்தி பண்டிதா: //
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; அஸோ'ச்யாந் - துக்கப்படாத மனிதர்களின் பொருட்டு; அந்வசோ'ச: - வருந்துகிறாய்; த்வம் - நீ; ப்ரஜ்ஞாவாதாந் - படித்தவர்களைப் போன்று; ச - மேலும்; பாஷஸே - பேசுகிறாய்; கதஸூந் - உயிர் போனவர்களுக்காகவும்; ந - இல்லை; அகதாஸூந் ச - உயிரை விடாதவர்களுக்காகவும்; ந - அநுசோ'சந்தி - வருந்துவதில்லை; பண்டிதா: - பண்டிதர்கள்
பகவான் சொன்னது
2.11 யாரைப் பார்த்து நீ துக்கப்பட வேண்டிய தேவை இல்லையோ, அவர்களைப் பார்த்து நீ துக்கப்படுகிறாய். ஆனாலும் நீ உயர்ந்த கருத்துக்களைப் பேசுகிறாய். கற்றறிந்தவர்கள் இறந்தவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள், உயிரோடு இருப்பவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள்.
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா: /
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் // 2.12
ந - இல்லை; து - ஆனால்; ஏவ - இல்லவே; அஹம் - நான்; ஜாது
- எப்பொழுதாவது; ந ஆஸம் - இருந்ததில்லை; த்வம் - நீயும்; ந - இருந்ததில்லை; இமே - இந்த; ஜநாதிபா: - அரசர்களும்; ந - இருந்ததில்லை; ச - கூட; ஏவ - என்பதும்; ந பவிஷ்யாம: - இருக்கப்போவதில்லை என்பதும்; ஸர்வே - அனைவரும்; வயம் - நாம்; அத: பரம் - இனிமேலும்
2.12 கடந்தகாலத்தில் நான் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததில்லை. அதேபோல்தான் நீயும், இங்கிருப்பவர்களும் எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறீர்கள். இனி வரும் எதிர்காலத்திலும் நாம் எல்லோரும் இருப்போம்.
தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா /
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி // 2.13
தேஹிந: - ஜீவாத்மாவுக்கு; அஸ்மிந் - இந்த; யதா - எப்படி; தேஹே - உடலில்; கௌமாரம் - இளமையும்; யௌவநம்- வாலிபபருவமும்; ஜரா
- முதுமையும்; ததா - அவ்வாறே; தேஹாந்தரப்ராப்தி: - வேறு உடலும் வந்து சேர்கிறது; தீர: - வீர புருஷன்; தத்ர - அவ்விஷயத்தில்; ந முஹ்யதி - கலங்குவதில்லை
2.13 எப்படி இந்த ஆத்மா குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய அனுபவங்களைக் கடந்து செல்கிறதோ, அதேபோல்தான் அது, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலிற்குக் கடந்து செல்கிறது. தமக்குள் மையத்தில் நிலைபெற்றிருக்கும் மனிதர் இந்த மாற்றங்களைக் கண்டு பயப்படுவதில்லை.
.......................................................................................
மாத்ராஸ்பர்சா'ஸ்து கௌந்தேய சீ'தோஷ்ணஸுக₂து:க₂தா: /
ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்திதிக்ஷஸ்வ ப₂ரத // 2.14
மாத்ராஸ்பர்சா': து - புலன்களின் சுக விசயங்கள்; கௌந்தேய - குந்தியின் மைந்தனே; சீ'த உஷ்ண ஸுக₂து:க₂தா: - சீதோஷ்ணம் மற்றும் சுகதுக்கங்களை கொடுக்கக்கூடிய; ஆகமாபாயிந்: - உண்டாகி அழிப்பவை; அநித்யா: - நிரந்தரமற்றவை; தாந் - அவற்றை; திதிக்ஷஸ்வ - பொறுத்துக்கொள்; ப₂ரத
- பரத குலத்தின் வாரிசே
2.14 ஓ குந்தியின் மைந்தனே! ஐம்புலன்களின் தொடர்பால் வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம் தோன்றுகிறது. இவற்றிற்கு ஒரு தோற்றமும் முடிவும் இருக்கிறது. ஓ பாரதா, இவை நிலையானதல்ல. அதனால் அவற்றைத் தைரியமாக எதிர்கொள்.
.......................................................................................
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப₂ /
ஸமது:க₂ஸுக₂ம் தீரம் ஸோऽம்ரு'தத்வாய கல்பதே // 2.15
யம் - எந்த; ஹி - நிச்சயமாக; ந வ்யதயந்தி - கலங்க வைப்பதில்லையோ; ஏதே - இவை; புருஷம் - மனிதனை; புருஷர்ஷப₂ - புருஷர்களில் சிறந்தவனே; ஸமது:க₂ஸுக₂ம் - ஸுகதுக்கங்களைச் சமமாக ஏற்கிற; தீரம் - தீரனான; ஸ: - அவன்; அம்ரு'தத்வாய - மோக்ஷத்திற்கு; கல்பதே - தகுதி பெறுகிறான்
2.15 வீரர்களில் சிறந்தவனே! தன்னுள் நிலைபெற்று இருக்கும் ஒருவரை இந்த அனுபவங்கள் பாதிக்காது. அப்படிப்பட்ட மனிதருக்குச் சுகமும், துக்கமும் ஒன்றுதான். அவர் ஞானத் திற்குத் தகுதி உடையவராகிறார்.
.......................................................................................
நாஸதோ வித்யதே பா₄வோ நாபா₄வோ வித்யதே ஸத: /
உப₄யோாபி த்ரு'ஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்சி'பி₄: // 2.16
ந - இல்லை; அஸத: - இல்லாததற்கு; வித்யதே- அங்கு; பாவ: - இருப்பது என்பது; ந - இல்லை; அபாவ: - இல்லாமை என்பதும்; வித்யதே - அங்கு; ஸத: - உண்மையாக இருப்பதற்கு; உபயோர்பி - இரண்டின்; த்ரு'ஷ்ட
- கண்டறியப்பட்டது; அந்த: - தத்வம்; து- மேலும்; அநயோ: - இந்த; தத்த்வதர்சி'பி - தத்வஞானிகளால்
2.16 ‘இருப்பில்’ இல்லாததற்கு என்றுமே இருப்பு என்பது இல்லை. ‘இருப்பில்’ இருப்பதற்கு என்றுமே இறப்பு இல்லை. இந்த இரண்டின் தன்மையை உணர்ந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள் ஆகிறார்கள்.
........................................................................................
அவிநாசி' து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம் /
விநாச'மவ்யயஸ்யாஸ்ய ந கச்'சித்கர்துமர்ஹதி // 2.17
அவிநாசி' து - அழிவற்றதுதான்; தத் - அதை; வித்தி - அறிந்து கொள்; யேந - எதனால்; ஸர்வம் - உடல் அனைத்தும்; இதம் - இந்த; ததம் - வ்யாபிக்கப்பட்டிருக்கிறதோ; விநாச'ம் - அழிவை; அவ்யயஸ்ய - அழிவற்றதற்கு; அஸ்ய - அந்த; ந - இல்லை; கச்'சித்
- எவரும்; கர்தும் - உண்டாக்குவதற்கு; அர்ஹதி - ஆற்றல் பெற்றவர்
2.17 இந்த உடலும் உலகமும் எதனால் வியாபிக்கப்பட்டுள்ளதோ அதை அழிக்க முடியாது என்பதை அறிந்துகொள். எதனாலும் அதை அழிக்க முடியாது; அது நிலையானது; அது அழிவற்றது.
........................................................................................
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ச'ரீரிண: /
அநாசி'நோsப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பரத // 2.18
அந்தவந்த: - அழிக்கூடியவையாக; இமே - இந்த; தேஹா: - அனைத்து உடல்களும்; நித்யஸ்ய - நித்யமான; உக்தா: - சொல்லப்பட்டுள்ளன; ச'ரீரிண: - ஜீவாத்மாவினுடைய; அநாசி'ந: - அழிவற்ற; அப்ரமேயஸ்ய
- விளக்க முடியாத, அளவிட முடியாத; தஸ்மாத் - ஆகவே; யுத்யஸ்வ - போர்புரிவாயாக; பரத - பரதகுலத் தோன்றலே
2.18 சக்தியின் ஸ்தூல வெளிப்பாடாக இருக்கும் இந்த உடல்கள் அழிந்துவிடும். ஆனால் சக்தி நிலையானது. அதை அழிக்க முடியாது. அதனால், ஓ பாரதா, நீ போர் செய்.
........................................................................................
ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யச்'சைநம் மந்யதே ஹதம் /
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே//
2.19
ய- எவன்; ஏநம் - இந்த ஆத்மாவை; வேத்தி - நினைக்கிறானோ; ஹந்தாரம் - கொல்பவனாக; ய: - எவன்; ச - மற்றும்; ஏநம் - இந்த ஆத்மாவை; மந்யதே - நினைக்கிறானோ; ஹதம் - கொல்லப்பட்டவனாக; உபௌ - இருவருமே; தௌ - அந்த; ந விஜாநீத: -அறியாதவர்கள்; ந
- இல்லை; அயம் - இந்த ஆத்மா; ஹந்தி - கொல்வது; ந ஹந்யதே - யாராலும் கொல்லப்படுவதுமில்லை
2.19 எவன் இந்த ஆத்மாவைக் கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவைக் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ அந்த இருவருமே அறியாதவர்கள். ஏனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை; யாராலும் கொல்லப்படுவதுமில்லை.
.......................................................................................
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்-
நாயம் பூத்வா பவிதா வா ந பூய: /
அஜோ நித்ய: சா'ச்'வதோயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ச'ரீரே // 2.20
ந ஜாயதே - பிறப்பதும் இல்லை; ம்ரியதே - இறப்பது; வா - அன்றியும்; கதாசிந் - ஒருபொழுதும்; ந - இல்லை; அயம் - இந்த ஆத்மா; பூத்வா - முன் உண்டாகி; பவிதா - ஏற்படக்கூடியது என்பதும்; வா - அவ்வாறே; ந
- இல்லை; பூய: - பிறகு; அஜ: - பிறப்பற்றவன்; நித்ய: - நித்யமானவன்; சா'ச்'வத: - எக்காலத்திலும் உள்ளவன்; அயம் - இந்த; புராண: பழமையானவன்; ந ஹந்யதே - கொல்லப்படுவதில்லை; ஹந்யமாநே - கொல்லப்படும் போது; ச'ரீரே - உடல்
2.20 ஆத்மா பிறப்பதில்லை. அது இறப்பதும் இல்லை. ஒரு காலத்தில் இல்லாதிருந்து பிறகு பிறந்தது இல்லை. அது என்றும் இல்லாமல் போகப்போவதும் இல்லை. அது பிறவாதது. நிலையானது, மாறாதது மற்றும் புராதனமானது.
உடல் கொல்லப்படும்போதும், ஆத்மா கொல்லப்படுவதில்லை.
.......................................................................................
வேதாவிநாசி'நம் நித்யம் ய ஏநமஜமவ்யயம் /
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம் // 2.21
வேத - அறிகிறானோ; அவிநாசி'நம் - அழிவற்றவன்; நித்யம் - நித்யமானவன்; ய: - எந்த; ஏநம் - இந்த ஆத்மாவை; அஜம் - பிறப்பற்றவன்; அவ்யயம் - மாறுதலற்றவன்; கதம் - எவ்வாறு; ஸ: - அவன்; புருஷ: - மனிதன்; பார்த - பார்த்தா; கம் - யாரை; காதயதி - கொல்லச் செய்கிறான்; ஹந்தி - கொல்கிறான்; கம் - யாரை
2.21 ஓ பார்த்தா, ஆத்மா அழிவில்லாதது, நித்யமானது, பிறப்பில்லாதது, மாறாதது என்பதை உணர்ந்து கொண்ட மனிதர் எப்படி மற்றவரைக் கொல்வார் அல்லது மற்றவர்களைக் கொல்லக் காரணமாக இருப்பார்?
...........................................................................................
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவாநி க்ரு'ஹ்ணாதி நரோSபராணி /
ததா ச'ரீராணி விஹாய ஜீர்ணாந்-
யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ // 2.22
வாஸாம்ஸி - துணிகளை; ஜீர்ணாநி - பழைய உபயோகமற்ற; யதா -எப்படி; விஹாய- நீக்கிவிட்டு; நவாநி - புதிய; க்ரு'ஹ்ணாதி - எடுத்துக் கொள்கிறானோ; நர: - மனிதன்; அபராணி -வேறு; ததா- அவ்வாறே; ச'ரீராணி - உடல்களை; விஹாய - நீக்கிவிட்டு; ஜீர்ணாநி - பழைய; அந்யாநி - வேறு; ஸம்யாதி - அடைகிறான்; நவாநி - புதிய உடல்களை; தேஹீ - ஜீவாத்மா
2.22 மனிதன் எப்படிப் பழைய ஆடையைக் கழற்றி விட்டுப் புதிய ஆடையை உடுத்திக் கொள்கிறானோ, அதேபோல் ஆத்மாவானது பழைய உடலை விட்டுவிட்டு புதிய உடலை எடுத்துக் கொள்கிறது.
...........................................................................................
நைநம் சிந்தந்தி ச'ஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: /
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந சோ'ஷயதி மாருத: // 2.23
ந - இல்லை; ஏநம் - இந்த ஆத்மாவை; சிந்தந்தி - வெட்டுவது; ச'ஸ்த்ராணி
- ஆயுதங்கள்; ந - இல்லை; ஏநம் - இவனை; தஹதி - எரிப்பது; பாவக:
- நெருப்பு; ந - இல்லை; ச - மேலும்; ஏநம் - இல்லை; க்லேதயந்தி - நனைப்பதில்லை; ஆப: - தண்ணீர்; ந சோ'ஷயதி - உலர வைப்பதில்லை; மாருத: -காற்று
2.23 ஆத்மாவை ஆயுதங்களால் வெட்ட முடியாது; நெருப்பால் சுட முடியாது; தண்ணீரால நனைக்க முடியாது; காற்றால் உலர்த்த முடியாது.
.......................................................................................
அச்சேத்யோsயமதாஹ்யோsயமக்லேத்யோsசோ'ஷ்ய ஏவ ச /
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோsயம் ஸநாதந: // 2.24
அச்சேத்ய: - வெட்டுப்படமுடியாதவன்; அயம் - இந்த ஆத்மா; அதாஹ்ய: - எரிக்கப்படமுடியாதவன்; அயம்- இந்த ஆத்மா; அக்லேத்ய:
- நனைக்கப்பட முடியாதவன்; அசோ'ஷ்ய: - உலர்த்தப்பட முடியாதவன்; ஏவ - சந்தேகமின்றி; ச - மேலும்; நித்ய: - நித்யமானவன்; ஸர்வகத:
- எங்கும் நிறைந்தவன்; ஸ்தாணு: - ஸ்திரமாக இருப்பவன்; அசல: - இயக்கமற்றவன்; அயம் - இந்த ஆத்மா; ஸநாதந: - சாஸ்வதமானவன்
2.24 ஆத்மாவை உடைக்க முடியாது; எரிக்க முடியாது; கரைக்க முடியாது; உலர்த்த முடியாது; அது நிலையானது. எங்கும் வியாபித்து இருக்கிறது; நிலையானது; அசைக்க முடியாதது; புராதனமானது.
.......................................................................................
அவ்யக்தோsயமசிந்த்யோsயமவிகார்யோsயமுச்யதே /
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுசோ'சிதுமர்ஹஸி // 2.25
அவ்யக்த: - புலன்களுக்கு புலப்படாதவன்; அயம் - இந்த ஆத்மா; அசிந்த்ய: - மனத்தால் சிந்திக்க முடியாதவன்; அயம் - இந்த ஆத்மா; அவிகார்ய: - மாறுதல் இல்லாதவன்; அயம் - இந்த ஆத்மா; உச்யதே - சொல்லப்படுகிறது; தஸ்மாத் - ஆகையால்; ஏவம் - மேலே கூறியவாறு; விதித்வா - அறிந்து கொண்டு; ஏநம் - இந்த ஆத்மாவை; ந - இல்லை; அநுசோ'சிதும் - வருத்தப்படுவது; அர்ஹஸி - பொருத்தமுடைய
2.25 ஆத்மா உருவெடுக்காதது; நினைத்துப் பார்க்க முடியாது; மாற்ற முடியாது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு புரிந்து கொண்ட பிறகு நீ துக்கப்படுவது பொருத்தமுடையதாகாது.
.......................................................................................
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ரு'தம் /
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் சோ'சிதுமர்ஹஸி // 2.26
அத ச - ஆயினும்; ஏநம் - இந்த ஆத்மாவை; நித்யஜாதம் - எப்பொழுதும் பிறந்து கொண்டேயிருப்பவன்; நித்யம்- எப்பொழுதும்; வா - அவ்வாறே; மந்யஸே - கருதினால்; ம்ரு'தம் - இறந்து கொண்டேயிருப்பவன்; ததாபி - அப்படியானாலும் கூட; த்வம் - நீ; மஹாபாஹோ - நீண்ட கைகளை உடையவனே; ந - இல்லை; ஏவம் - இவ்வாறு; சோ'சிதும் - வருத்தப்படுவது; அர்ஹஸி - பொருத்தமான
2.26 ஓ சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டவனே, ஆத்மாவானது தொடர்ந்து பிறக்கிறது, தொடர்ந்து இறக்கிறது என்று நினைத்தாலும் அதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை.
.....................................................................................
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ரு'த்யுர்த்ருவம் ஜந்ம ம்ரு'தஸ்ய ச /
தஸ்மாதபரிஹார்யே$ர்தே ந த்வம் சோ'சிதுமர்ஹஸி // 2.27
ஜாதஸ்ய - பிறந்தவனுக்கு; ஹி - நிச்சயமாக; த்ருவ: - நிச்சயமானது; ம்ரு'த்யு - இறப்பு; த்ருவம்- நிச்சயம்; ஜந்ம - பிறப்பு; ம்ரு'தஸ்யச
- இறந்தவனுக்கும்; தஸ்மாத் - ஆகவே; அபரிஹார்யே அர்தே - தவிர்ப்பதற்கான உபாயமே இல்லாத விஷயத்தில்; ந - இல்லை; த்வம் - நீ; சோ'சிதும் - துயரப்படுவது; அர்ஹஸி - பொருத்தமான
2.27 உண்மையில், எது பிறந்ததோ அதற்கு இறப்பு நிச்சயம். எது இறந்ததோ அதற்குப் பிறப்பு நிச்சயம். அதனால் தவிர்க்க முடியாதவற்றிற்காக நீ துக்கப்படுவது பொருத்தமானதன்று.
.....................................................................................
அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத /
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா // 2.28
அவ்யக்தாதீநி - பிறப்பதற்கு முன் தென்படாதவையாக இருந்தன; பூதாநி
- எல்லா உயிரினங்களும்; வ்யக்தமத்யாநி - நடுவில் தென்படுகின்றன; பாரத - பரத குலத்தில் உதித்தவனே;அவ்யக்தநிதநாநி ஏவ- இறப்பிற்குப் பின்னும் தென்படாமலே போகக்கூடியன; தத்ர - இந் நிலையில்; கா பரிதேவநா - ஏன் வருத்தப்பட வேண்டும்
2.28 ஓ பாரதா! உயிர்கள் தொடக்கத்தில் வடிவமற்று இருக்கின்றன. முடிவில் வடிவமற்று இருக்கின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் வடிவம் பெற்று 'இருப்பதுபோல்' இருக்கிறது. இதில் நாம் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?
................................................................................
ஆச்'சர்யவத் பச்'யதி கச்'சிதேந -
மாச்'சர்யவத்வததி ததைவ சாந்ய: /
ஆச்'சர்யவச்சைநமன்ய: ச்'ரு'ணோதி
ச்'ரு'த்வாப்யேநம் வேத ந சைவ கச்'சித் //
2.29
ஆச்'சர்யவத் - ஆச்சர்யம் போல; பச்'யதி - பார்க்கிறான்; கச்'சித் - யாரோ ஒருவன்; ஏநம் - இந்த ஆத்மாவை; ஆச்'சர்யவத் - ஆச்சர்யம் போல; வததி - வர்ணிக்கிறான்; ததா ஏவ - அவ்வாறே; ச - மற்றும்; அந்ய: வேறொருவன்; ஆச்'சர்யவத் - ஆச்சரியம் போல; ச- மேலும்; ஏநம்- ஆத்மாவை; அந்ய: - வேறு ஒருவன்; ச்'ரு'ணோதி - கேட்கிறான்; ச்'ரு'த்வா அபி - கேட்டாலும்; ஏநம் - ஆத்மாவை; வேத - அறிய; ந - இல்லை; ச - மேலும்;ஏவ - மட்டும்; கச்'சித் - யாராவது ஒருவன்
2.29 இதை அற்புதம் என்று ஒருவர் பார்க்கிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் பேசுகிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் கேட்கிறார். இதையெல்லாம் கேட்ட பிறகும் கூட, ஒருவர் கூட இதைப் புரிந்துகொள்ளவே இல்லை.
................................................................................
தேஹீ நித்யமவத்யோsயம் தேஹே ஸர்வஸ்ய பாரத /
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் சோ'சிதுமர்ஹஸி //
2.30
தேஹீ - ஆத்மா; நித்யம் - எப்பொழுதும்; அவத்ய: - கொல்லப்படமுடியாதவன்; அயம் - இந்த; தேஹே - உடலிலும்; ஸர்வஸ்ய
- எல்லோருடைய; பாரத - பாரத; தஸ்மாத் - ஆகவே; ஸர்வாணி- எல்லா; பூதாநி - உயிரினங்களுக்காகவும்; ந - இல்லை; த்வம் - நீ; சோ'சிதும் - வருந்துவது; அர்ஹஸி - பொருத்தமுடைய
2.30 ஓ பாரதா, உடலில் வாழும் இதை யாராலும் அழிக்க முடியாது. படைப்பில் எந்த உயிருக்காகவும் நீ கவலைப்படாதே!
................................................................................
ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி /
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ௨ந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே //
2.31
ஸ்வதர்மம் - தம்முடைய தர்மம் என்று; அபி - பார்த்தாலும்; ச - அவ்வாறே; அவேஷ்ய ந- இல்லை; விகம்பிதும் - தயங்குதல்; அர்ஹஸி
- தகுதியுடைய; தர்ம்யாத் ஹி யுத்தத் - தர்ம சம்மதமான போரைக் காட்டிலும்; ச்'ரேய: - மேன்மை தரும் கடமை; அந்யத் - வேறு; க்ஷத்ரியஸ்ய - க்ஷத்ரியனுக்கு; ந வித்யதே - கிடையாது
2.31 ஒரு க்ஷத்ரியனாக உன் கடமையைச் செய்ய வேண்டும். நேர்மையான போரில் ஈடுபடுவதை விட ஒரு க்ஷத்ரியனுக்கு சிறந்தது வேறொன்றுமில்லை. அதற்காக நீ தயங்கக் கூடாது.
.......................................................................................
யத்ரு'ச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ரு'தம் /
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ரு'ச'ம் // 2.32
யத்ரு'ச்சயா - தானாகவே; ச - மேலும்; உபபந்நம் - நேர்ந்திருக்கிறதும்; ஸ்வர்கத்வாரம் - சொர்க்கவாயில் வடிவான; அபாவ்ரு'தம் - திறந்து வைக்கப்பட்டுள்ளதுமான; ஸுகிந: - பாக்யமுடைய; க்ஷத்ரியா: -க்ஷத்ரியர்கள்; பார்த - பார்த்தனே; லபந்தே - அடைகிறார்கள்; யுத்தம் - யுத்தத்தை; ஈத்ரு'ச'ம் - இத்தகைய
2.32 ஓ பார்த்தா, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட போரில் கலந்து கொள்ளும் க்ஷத்ரியர்கள் உண்மையில் பாக்கியவான்கள். இது, சொர்க்கத்தின் வாசலை அவர்களுக்குத் திறக்கச் செய்கிறது.
.......................................................................................
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி /
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி // 2.33
அத - ஆகவே; சேத் - என்ற நிலையில்; த்வம் -நீ; இமம் - இந்த; தர்ம்யம் - தர்மத்தோடு கூடிய; ஸங்க்ராமம்- யுத்தத்தை; ந கரிஷ்யஸி - செய்யவில்லை; தத: - அப்போது; ஸ்வதர்மம் - ஸ்வதர்மத்தையும்; கீர்திம் ச - புகழையும்; ஹத்வா - இழந்து; பாபம் - பாவத்தை; அவாப்ஸ்யஸி - அடைவாய்
2.33 இந்தத் தர்மப்போரில் நீ போர் புரியாமல் இருப்பாயேயானால், கடமையைச் செய்ய தவறிய பாவம் உன்னை வந்தடையும். உன் புகழ் அழியும்.
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேsவ்யயாம் /
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே // 2.34
அகீர்திம் - இகழ்ச்சி; ச - மேலும்; அபி - கூட; பூதாநி - அனைவரும்; கதயீஷ்யந்தி - பேசுவார்கள்; தே - உன்னுடைய; அவ்யயாம் - நீண்டகாலம் இருக்கக் கூடிய; ஸம்பாவிதஸ்ய- கௌரவம் உடையவனுக்கு; ச- மேலும்; அகீர்தி: - இகழ்ச்சி; மரணாத் - மரணத்தைக் காட்டிலும்; அதிரிச்யதே - அதிகமான துன்பத்தைக் கொடுக்கக் கூடியது
2.34 உனக்கு ஏற்படும் மாறாத இந்த அவமானத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். புகழை உடையவனுக்கு அதை இழப்பது என்பது மரணத்தை விடக் கொடுமையானது.
பயாதரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா: /
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம் //
2.35
பயாத் - பயத்தினால்; ரணாத் - யுத்தத்திலிருந்து; உபரதம்
- பின்வாங்கியவனாக; மம்ஸ்யந்தே - நினைப்பார்கள்; த்வாம் - உன்னை; மஹாரதா: - அந்த மஹாரதிகள்; யேஷாம் - எவர்களுடைய; ச - மேலும்; த்வம் - நீ; பஹுமத: - மிகவும் பெருமை பெற்றவனாக; பூத்வா - இருந்துவிட்டு; யாஸ்யஸி - அடைவாயோ;லாகவம் - தாழ்வை
2.35 நீ ஒரு கோழை என்பதால்தான் போரில் ஈடுபடவில்லை என்று மாவீரர்கள் நினைப்பார்கள். உன்னைப் பற்றியும், உன் வீரத்தைப் பற்றியும் கடந்தகாலத்தில் உயர்வாக மதித்தவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் உன்னைத் தாழ்வாக மதிப்பார்கள்.
அவாச்யவாதாம்ச்'ச பஹூந் வதிஷ்யந்திதவாஹிதா: /
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம் // 2.36
அவாச்யவாதாந் ச - சொல்லத்தகாத வார்த்தைகளையும்; பஹூந் - பலவிதமான; வதிஷ்யந்தி- சொல்வார்கள்; தவ - உன்னுடைய; அஹிதா:
- எதிரிகள்; நிந்தந்த: - நிந்தித்து; தவ - உன்னுடைய; ஸாமர்த்யம் - திறமையை; தத: - அதைவிட; து:கதரம் - அதிகத் துயரம்; நு - இருக்கும்; கிம் - வேறு என்ன
2.36 உன்னுடைய எதிரிகள் உன் திறமையைப் பழித்து, பேச க்கூடாத வார்த்தைகளால் பழித்து பேசி உன்னை அவமானப்படுத்துவார்கள். இதை விட வலியைத் தரக்கூடியது வேறு ஏதாவது இருக்க முடியுமா?
.......................................................................................
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா
போக்ஷ்யஸே மஹீம் /
தஸ்மாதுத்திஷ்ட கெளந்தேய யுத்தாய க்ரு'தநிச்'சய: //
ஹத்: வா - கொல்லப்பட்டாலோ; ப்ராப்ஸ்யஸி- அடைவாய்; ஸ்வர்கம்
- ஸ்வர்க்கத்தை; ஜித்வா வா - வெற்றி பெற்றாலோ; போக்ஷ்யஸே - அனுபவிப்பாய்; மஹீம் - புவியை; தஸ்மாத் - ஆகையினால்; உத் திஷ்ட - எழுந்திரு; கௌந்தேய - குந்தி புத்திரனே; யுத்தாய - யுத்தத்தின் பொருட்டு; க்ரு'தநிச்'சய: - உறுதியாக நிச்சயித்துக் கொண்டு
2.37 யுத்தத்தில் கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய், வெற்றியடைந்தால் இந்த உலகத்தை நீ அனுபவிப்பாய். ஓ குந்தியின் மகனே! போரிட எழுந்து நில்.
.......................................................................................
ஸுகது:கே ஸமே க்ரு'த்வா லாபாலாபௌ ஜயாஜயௌ /
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி //
ஸுகது:கே- சுக துக்கங்களையும்; ஸமே - சமமாக; க்ரு'த்வா - கருதி; லாபாலாபௌ - லாபநஷ்டங்களையும்; ஜயாஜயௌ - வெற்றி தோல்விகளையும்; தத: - அதற்குப்பின்; யுத்தாய - யுத்தத்திற்கு; யுஜ்யஸ்வ
- தயாராவாயாக; ந - இல்லை; ஏவம் - இவ்விதம்; பாபம் - பாவத்தை; அவாப்ஸ்யஸி - அடையமாட்டாய்
2.38 சுகம் வலி, லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி இவை எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள். போரின் நியதியைக் காப்பதற்காகப் போரிடு. உனக்கு எந்தப் பாவங்களும் வராது.
........................................................................................
ஏஷா தேSபீஹிதா ஸாங்க்³யே பு³த்³தி⁴ர்யோகே³ த்விமாம் ச்²ரு'ணு/
பு³த்³த்யா யுக்தோ யயா பார்த கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி // 2.39
ஏஷா - இந்த; தே - உனக்கு; அபீஹிதா - சொல்லப்பட்டது; ஸாங்க்³யே - ஞானயோக விஷயத்தில்; பு³த்தி⁴: - புத்தி; யோகே³ - கர்மயோக விஷயத்தில்; து³ - இனி; இமாம் - இதனை; ச்²ரு'ணு- கேள்; பு³த்³த்யாயுக்த: - புத்தியோடு கூடியவனாக ஆகி; யயா - அந்த; பார்த - பார்த்தா; கர்மப³ந்த⁴ம் - கர்ம பந்தத்தை; ப்ரஹாஸ்யஸி - முழுமையாக விலக்கி விடுவாய்
2.39 ஓ பார்த்தனே! இதுவரை உனக்கு ஸாங்க்ய யோகத்தைப் (ஞானயோகம்) பற்றிய விஷயங்கள் சொல்லப்பட்டன. இனி கர்மயோகத்தைப் பற்றிய விஷயங்களைக் கேள். இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் கர்ம பந்தத்தை முழுமையாக விலக்கி விடுவாய்.
........................................................................................
நேஹாபி⁴க்ரமநாஶோ'sஸ்தி ப்ரத்யவாயோ ந வித்³யதே /
ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் //
2.40
இஹ - இந்தக் கர்மயோகத்தில்; அபி⁴க்ரமநாஶ': - ஆரம்பம் அதாவது விதை அழிவது என்பது; ந அஸ்தி - இல்லை; ப்ரத்யவாய: - நேரெதிரான விளைவும்; ந வித்³யதே - இல்லை; அஸ்ய த⁴ர்மஸ்ய- இந்தக் கர்மயோகம் என்கிற தர்மத்தை; ஸ்வல்பம் அபி - சிறிதளவு கைக் கொள்வதும் கூட; மஹத: பெரியதான; ப⁴யாத் - பிறப்பு, இறப்பு என்ற பயத்திலிருந்து; த்ராயதே - காப்பாற்றுகிறது
2.40 இந்தக் கர்மயோகம் வீண்போவதும் இல்லை; ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தப் போவதும் இல்லை. இந்தக் கர்மயோகம் என்கிற தர்மத்தைச் சிறிதளவு கைக்கொண்டால்கூடப்போதும், இது மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றுகிறது.
........................................................................................
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந /
பஹுசா'கா ஹ்யநந்தாச்'ச புத்தயோsவ்யவஸாயிநாம் //
2.41
வ்யவஸாயாத்மிகா- தீர்மானமான; புத்தி: - புத்தி; ஏகா - ஒன்றுதான்; இஹ - இந்தக் கர்ம யோகத்தில்; குருநந்தந - குரு குலத்தில் உதித்தவனே; பஹுசாதா: - பல நோக்கங்களுடையனவாகவும்; ஹி - நிச்சயமாக; அநந்தா: ச - முடிவற்றவையாகவும்; புத்தய: - புத்திகள்; அவ்யவஸாயிநாம் - ஒரு விஷயத்திலும் நிச்சய புத்தி இல்லாத, விவேகமற்ற பயனில் ஆசையுள்ள மனிதர்களுடைய
2.41 குருகுலத்தில் உதித்தவனே, இப்போது உனக்குத் தேவை ஒரு முகப்பட்ட தீர்மானமான புத்தி ஒன்றே! மன உறுதி இல்லாத மனிதர்களுடைய புத்திகள், பல நோக்கங்களுடையனவாகவும் முடிவற்றவையாகவும் இருக்கின்றன.
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபச்'சித:/
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந: // 2.42
யாம் இமாம் - இந்த எல்லா விதமான; புஷ்பிதாம்
- மலர் போலக் கவர்ச்சியுள்ள; வாசம் - பேச்சை; ப்ரவதந்தி- எடுத்துப் பேசுகிறார்களோ அவிபச்'சித் - அறிவிலிகள்; வேதவாதரதா - கர்மங்களின் பயன்களைப் புகழ்ந்துரைக்கும் வேத வாக்கியங்களிலேயே ப்ரியம் வைத்தவர்களான; பார்த - பார்த்தா; ந - இல்லை ; அந்யத் - ஸ்வர்கம் தவிர மேலான பொருள் வேறொன்றும்; அஸ்தி - இல்லை; வாதிந: - வாதம் செய்கிறவர்களான
2.42 ஓ, பார்த்தா! வேதங்களின் புகழ்ச்சி மிக்க வார்த்தைகளிலேயே இன்பம் காணும் முட்டாள்கள், " இதைத்தவிர வேறு ஒன்றுமில்லை," என்று சொல்கிறார்கள்.
காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம் /
க்ரியাবিশே'ஷபஹுலாம் போகைச்'வர்யகதிம் ப்ரதி // 2.43
காமாத்மாந: -போகங்களில் மூழ்கியவர்களான; ஸ்வர்கபரா: -ஸ்வர்க்கமே மேலானது என்று நினைப்பவர்களான; ஜந்மகர்மபலப்ரதாம்- கர்மங்களின் பயனான பிறவியை அளிக்கிற; க்ரியাবিশே'ஷபஹுலாம் - பலவகையான கர்மங்களைச் சொல்கிற; போாக ஐச்'வர்யகதிம்; ப்ரதி - போகங்கள் மற்றும் செல்வங்கள் பெறுவதற்குரிய
2.43 சொர்க்கம் போன்ற மேல் உலகங்களையும், மேலான பிறப்பு மற்றும் அதிகாரம் போன்ற இந்தக் கீழ் உலக செல்வங்களையும் அடைவதற்கு உதவுகிற, அதாவது பலன்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு விதமான செயல்களைப் பற்றிப் பேசுகிற வேதங்களின் மலர் போன்ற பேச்சுக்களில் மிகக்குறைந்த அறிவை உடைய அறிவிலிகள் பற்றுதல் வைக்கின்றனர். புலன்களின் ஆசைகளைத் திருப்திபடுத்திக்கொண்டும், செல்வ வளம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதும் தவிர, வேறு சிறந்த வாழ்க்கை இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள்.
..........................................................................................
போகைச்'வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ரு'தசேதஸாம்/
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமௌதௌ ந விதியதே // 2.44
போக ஐச்வர்ய ப்ரஸக்தாநாம் - போகத்திலும் செல்வத்திலும் மிகுந்த பற்றுள்ளவர்களுக்கு; தயா - அந்தப் பேச்சினால்; அபஹ்ரு'த சேதஸாம்
- மனம் அபஹரிக்கப்பட்டு; வ்யவஸாயாத்மிகா புத்தி: - நிச்சயமான கருத்துள்ள புத்தி; ஸமௌதௌ - பரமாத்மாவிடம்; ந விதியதே - நிலை பெற்றிருப்பதில்லை
2.44 இவ்வாறு வேறு நோக்கங்களில் மனம் திருப்பப்பட்டவர்களும், உறுதியற்றவர்களும் தியானத்திற்கும், ஸமாதி அனுபவத்திற்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதில்லை.
..........................................................................................
த்ரைகுண்யவிஷ்யா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந /
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்த்தோ நிர்யோகக்ஷேம
ஆத்மவாந் // 2.45
த்ரைகுண்யவிஷ்யா: - முக்குணங்களின் செயல்களான போகங்களையும், அவற்றின் ஸாதனை முறைகளையும் பற்றிச் சொல்பவை; வேதா: -வேதங்கள்; நிஸ்த்ரைகுண்ய: - அந்த போகங்களிலும் அவற்றின் ஸாதனங்களிலும் பற்றுக் கொள்ளாதவனாக; பவ - ஆகக் கடவாய்;அர்ஜுந
- அர்ஜுனா; நிர்த்வந்த்வ: - மகிழ்ச்சி துயரம் முதலிய இரட்டைகளுக்கு ஆட்படாதவனாக; நித்யஸத்த்வஸ்த: - நித்யப் பொருளான பரமாத்மாவிடம் நிலை பெற்று; நிர்யோகக்ஷேம: - யோக க்ஷேமத்தை, பொருள் சேர்ப்பது, காப்பது என்பதை விரும்பாதவனாக; ஆத்மவாந் - தமக்கு வசப்பட்ட மனமுடையவனாக
2.45 ஓ அர்ஜுனா, வேதங்கள் சொல்கிற முக்குணங்களையும் கடந்தவனாக இரு; இருமைகளிலிருந்து விடுபட்டவனாய், ஸத்வ குணத்தில் நிலைபெற்றவனாய், பொருள் சேர்ப்பது, அதைக் காப்பாற்றுவது என்கிற எண்ணங்களிலிருந்து விடுபட்டவனாய், தன்னிலே நிலைகொண்டவனாய் இரு.
.......................................................................................
யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே /
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத: //
யாவாந் - எவ்வளவு; அர்த: - பயன்; உதபாநே - சிறிய நீர் நிலையினால்; ஸர்வத: - எல்லாப் புறங்களிலும்; ஸம்ப்லுத உதகே - நிறைந்த நீ ர் நிலையை; தாவாந் - அவ்வளவு பயன்தான் கிடைக்கும்; ஸர்வேஷு
- அனைத்து; வேதேஷு - வேதங்களினாலும்; ப்ராஹ்மணஸ்ய - பிராம்மணனுக்கு; விஜாநத: - தத்வ ரீதியாக அறிந்து
2.46 ஏற்கெனவே வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட இடத் தில் இருக்கும் ஒருவருக்கு கிணற்று நீரினால் என்ன பலனோ, அதேபோலத்தான் தம்மை உணர்ந்து கொண்ட துறவி, வேதங்களினால் மிகக் குறைந்த பலனே அடைகிறார்.
.......................................................................................
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந /
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோஸ்த்வகர்மணி //
கர்மணி ஏவ - கர்மங்களை ஆற்றுவதில் தான்; அதிகார: - பொறுப்பு உண்டு; தே - உனக்கு; மா - ஒருபோதும் இல்லை; பலேஷு - பயன்களில்; கதாசந
- ஒருகாலும்; மா - ஒருபோதும் இல்லை; கர்மபலஹேது: - கர்மங்களின் பயன்களைக் கோருவதற்குக் காரணமாக; பூ: - இரு; மா - ஒருபோதும் இல்லை; தே- உனக்கு; ஸங்க: - பற்று; அஸ்து - இருக்கட்டும்; அகர்மணி
- கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும்
2.47 உனக்குக் கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பலன்களில் ஒருகாலும் உரிமையில்லை. பலன்களே உன் நோக்கமாக இருக்கக் கூடாது; இதற்காக நீ செயலற்ற தன்மையில் விழுந்துவிடவும் கூடாது.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய /
ஸித்த்யஸிdist்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே //
யோகஸ்த: - யோகத்தில் நிலைபெற்று; குரு - செய்; கர்மாணி - செய்ய வேண்டிய கர்மங்களை; ஸங்கம் - பற்றினை; த்யக்த்வா - துறந்து; தநஞ்ஜய
- தனஞ்ஜயா; ஸித்தி - அஸித்த்யோ: - கைக்கூடுவது, கைக்கூடாமலிருப்பது என்பதில்; ஸம: - ஸமநோக்குடையவனாக; பூத்வா - இருந்து; ஸமத்வம்
- ஸமபாவனை; யோக: - யோகம்; உச்யதே - சொல்லப்படுகிறது
2.48 ஓ தனஞ்ஜயா! நீ செய்யவேண்டிய கர்மங்களை, யோகத்தில் மையம் கொண்டவனாய், பலன்களில் பற்றில்லாமல் செய். வெற்றி தோல்விகளில் சமநிலையுடையவனாக இரு. ஸமபாவனைதான் யோகம் என்று சொல்லப்படுகிறது.
...........................................................................................
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய /
புத்தௌ ச'ரணமந்விச்ச க்ரு'பணா: பலஹேதவ: //
தூரேண - மிகவும்; ஹி - நிச்சயமாக; அவரம் - தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது; கர்ம - பயன் கருதிச் செய்யப்படும் கர்மம்; புத்தியோகாத் - புத்தியோகத்தைக் காட்டிலும்; தநஞ்ஜய - தனஞ்ஜயா; புத்தௌ - ஸமபுத்தியில்; சரணம் - தஞ்சம்; அந்விச்ச - அடைவாய்; க்ரு'பணா: - இரக்கத்துக்குரியவர்கள்; பலஹேதவ: - பலனுக்குத் தம்மைக் காரணமாக்கிக் கொள்கிறவர்கள்
2.49 இந்தச் ஸமபாவனையான புத்தியோகத்தைக் காட்டிலும் பலன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது. ஆகவே அர்ஜுனா, ஸமபுத்தியில் தஞ்சம் அடைவாய். பயன் கருதுபவர்கள் இரங்கத்தக்கவர்கள்.
...........................................................................................
புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ரு'ததுஷ்க்ரு'தே /
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌச'லம் //
புத்தியுக்த: - ஸமபுத்தியுடையவன்; ஜஹாதி - விட்டுவிடுகிறான் அதாவது அவற்றிலிருந்து விடுபடுகிறான்; இஹ - இவ்வுலகிலேயே; உபே - இரண்டையும்; ஸுக்ரு'ததுஷ்க்ரு'தே - பாவ புண்ணியங்கள் என்ற; தஸ்மாத் - இதனால்; யோகாய - ஸமத்வயோகத்தில்; யுஜ்யஸ்வ
- ஈடுபட்டிரு; யோக: - ஸமத்வரூபயோகம்; கர்மஸு - கடமையை ஆற்றுவதில்; கௌச'லம் - திறமை (கர்மபந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உபாயம்)
2.50 ஸமபுத்தியுடையவன் புண்ய பாவங்கள் என்ற இரண்டையும் இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். இதனால் நீ ஸமத்வ யோகத் தில் ஈடுபட்டிரு. கடமையை ஆற்றுவதில் உள்ள திறமையே யோகம். கர்மபந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உபாயமாகும்.
.................................................................................................
கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண: /
ஜன்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம் // 2.51
கர்மஜம் - கர்மத்தினால் உண்டாகும்;புத்தியுக்தா: - ஸமபுத்தியுடைய; ஹி
- நிச்சயமாக; பலம் - பயனை; த்யக்த்வா - தியாகம் செய்து; மநீஷிண:
- ஞானிகள்; ஜந்மபந்தவிநிர்முக்தா: - பிறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபட்டு; பதம் - பிரஹ்மபதத்தை; கச்சந்தி - அடைகிறார்கள்; அநாமயம்
- மாறுதல்களற்ற
2.51 ஏனெனில் ஸமபுத்தியுடைய ஞானிகள் கர்மத்தினால் உண்டாகும் பலனைத் தியாகம் செய்து, பிறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபட்டு எல்லாவித துக்கங்களையும் கடந்த உயர்ந்த நிலையினை அடைகிறார்கள்.
.................................................................................................
யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி /
ததா கந்தாஸி நிclassர்வேதம் ச்'ரோதவ்யஸ்ய ச்'ருதஸ்ய ச //
2.52
யதா - எப்பொழுது; தே - உன்னுடைய; மோஹகலிலம்- மோஹம் என்னும் சேற்றை; புத்தி: - புத்தி; வ்யதிதரிஷ்யதி - முற்றிலுமாகக் கடந்து விடுகிறதோ; ததா - அப்பொழுது; கந்தாஸி - அடைவாய்; நிர்வேதம் - வைராக்யத்தை; ச்'ரோதவ்யஸ்ய - கேட்கப்படுகிறவை பற்றி; ச்'ருதஸ்ய - கேட்டவை பற்றி; ச - மேலும்
2.52 மாயையைக் கடக்க உன்னுடைய புத்தி உனக்கு உதவுகிற போது, நீ இதுவரை கேட்ட எல்லாவற்றிலும் இனி கேட்கப் போகிற எல்லாவற்றிலும் விருப்பு வெறுப்பு அற்ற நிலையை அடைவாய்.
.................................................................................................
ச்'ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிச்'சலா /
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி // 2.53
ச்'ருதிவிப்ரதிபந்நா: - பற்பல வசனங்களைக் கேட்டு சஞ்சலமாகியுள்ள; தே - உன்னுடைய; யதா - எப்பொழுது; ஸ்தாஸ்யதி - நிலைபெறுகிறதோ; நிச்'சலா - அசையாமல்; ஸமாதௌ- பரமாத்மாவிடம்; அசலா - திடமாக; புத்தி: - புத்தி; ததா - அப்பொழுது; யோகம் - யோகத்தை; அவாப்ஸ்யஸி
- அடைவாய்
2.53 நீ இதுவரை கேட்டவற்றால் குழப்பம் அடையாதவனாய், உன் இருப்புத்தன்மையை விட்டு அகலாத புத்தியுடையவனாய் இருக்கும்போது, நீ 'தன்னை - உணர்தல்' நிலையை அடைகிறாய்.
அர்ஜுந உவாச
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேச'வ /
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் // 2.54
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; ஸ்திதப்ரஜ்ஞஸ்ய - சமாதியில் நிலைபெற்றுப் பரமாத்மாவை அடைந்த ஸ்திர புத்தியுள்ளவனின்; கா - என்ன; பாஷா - இலக்கணம்; ஸமாதிஸ்தஸ்ய - நிலையான (அகலாத) மனதுடையவனாய்; கேச'வ - கேசவா; ஸ்திததீ: - ஸ்திர புத்தியுள்ள புருஷன்; கிம் - எப்படி; ப்ரபாஷேத - பேசுவான்; கிம் - எப்படி; ஆஸீத - உட்காருவான்; வ்ரஜேத - நடப்பான்; கிம் - எப்படி
அர்ஜுனன் சொன்னது
2.54 கேசவா! நிகழ்காலத்திலேயே நிலைபெற்று, சத்தியத்தின் விழிப்புணர்விலும் ஞானத்திலும் கரைந்திருக்கும் ஒருவுடைய இலக்கணம் என்ன? இந்த ஞானத்தில் நிலைகொண்ட மனிதர் எப்படிப் பேசுவார்? எப்படி உட்காருவார்? மேலும் எப்படி நடப்பார்?
ஸ்ரீபகவாநுவாச
ப்ரஜஹாதி யதாகாமாந் ஸர்வாந்பார்த மநோகதாந் /
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே// 2.55
ஸ்ரீ பகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; ப்ரஜஹாதி - அறவே துறக்கிறானோ; யதா - எப்பொழுது; காமாந்- ஆசைகளையும்; ஸர்வாந்
- எல்லா; பார்த - பார்த்தா; மநோகதாந் - மனத்திலுள்ள; ஆத்மநி ஏவ
- ஆத்மாவிடமே; ஆத்மநா - ஆத்மாவினால்; துஷ்ட: - ஆனந்தமாக இருக்கிறானோ; ஸ்திதப்ரஜ்ஞ: - ஸ்திதப்ரக்ஞன்; ததா - அப்பொழுது; உச்யதே - சொல்லப்படுகிறான்
ஸ்ரீ பகவான் சொன்னது
2.55 பார்த்தா, எப்பொழுது இந்த மனிதர் மனத்திலுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறந்துவிட்டு, ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறாரோ, அப்பொழுது அவர் ஸ்திதப்ரஜ்ஞன் (ஞானத்தில் நிலைபெற்றிருப்பவர்) என்று சொல்லப்படுகிறார்.
...........................................................................................................
து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ரு'ஹ: /
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்மூநிருச்யதே // 2.56
து:கேஷு - துன்பங்கள் நேர்கையில்; அநுத்விக்நமநா: - எவனுடைய மனம் கலங்குவது இல்லையோ;ஸுகேஷு விகதஸ்ப்ரு'ஹ: - சுகங்களை அடையும் போது அவற்றில் சிறிது கூட ஆசை கொள்வதில்லையோ; வீதராகபயக்ரோத: - எவனுக்கு விருப்பு, பயம், கோபம் இவை முற்றும் அற்றுப்போயினவோ; ஸ்திததீ: - ஸ்திதப்ரக்ஞன்; முநி: - முனிவன்; உச்யதே - சொல்லப்படுகிறான்
2.56 துன்பங்கள் நேர்கையில் எவருடைய மனம் கலங்குவதில்லையோ, செல்வ வளம் மிக்க நிலையிலிருந்தாலும் யார் ஒருவருடைய மனம் புலனின்பங்கள் பின்னால் ஓடுவதில்லையோ, விருப்பு, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறதோ அந்தத் துறவி ஸ்திதப்ரஜ்ஞன் என்று சொல்லப்படுகிறார்.
...........................................................................................................
ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய சு'பாசு'பம் /
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா // 2.57
ய: - எவன் ஒருவன்; ஸர்வத்ர - அனைத்திலும்; அநபிஸ்நேஹ: -பாசம் வைக்காமல்; தத்தத் - அந்தந்த; ப்ராப்ய - அடைந்து; சு'பாசு'பம் - நல்ல அல்லது கெட்ட பொருளை; ந அபிநந்ததி - மகிழ்வதுமில்லையோ; ந த்வேஷ்டி - வெறுப்பதுமில்லையோ; தஸ்ய - அவனுடைய; ப்ரஜ்ஞாபுத்தி; ப்ரதிஷ்டிதா - ஸ்திரமானது
2.57 யார் ஒருவர், இது நல்லது கெட்டது என்று எதிலுமே பற்று வைக்காமல், எல்லாவற்றையும் எல்லா சமயங்களிலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்கிறாரோ அவருடைய புத்தி ஸ்திரமானது.
..........................................................................................
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோSங்கநீவ ஸர்வச': /
இந்த்ரியாணீந்த்ரியார்த்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா //
யதா - எப்பொழுது; ஸம்ஹரதே - உள்ளிழுத்துக் கொள்கிறாரோ;ச - மேலும்; அயம் - இந்த மனிதன்; கூர்ம: - ஆமை; அங்காநி இவ - தனது அங்கங்களை உள் இழுத்துக்கொள்வதுபோல; ஸர்வச': ச - எல்லாப் பக்கங்களிலிருந்தும்; இந்த்ரியாணி - புலன்களை; இந்த்ரியார்தேப்ய: - புலன்நுகர் பொருட்களிலிருந்து; தஸ்ய - அவனுடைய; ப்ரஜ்ஞா - புத்தி; ப்ரதிஷ்டிதா - ஸ்திரமானது
2.58 எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனது அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆமையைப்போல, புலன்நுகர் பொருட்களிலிருந்து தம்முடைய புலன்களை ஒரு மனிதர் முற்றிலும் உள் இழுத்துக் கொள்ளும் போது அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.
..........................................................................................
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந: /
ரஸவர்ஜம் ரஸோSப்யஸ்ய பரம் த்ரு'ஷ்ட்வா நிவர்ததே //
விஷயா: - புலன்நுகர் பொருட்கள்தான்; விநிவர்தந்தே- விலகுகின்றன; நிராஹாரஸ்ய - போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத; தேஹிந:
- மனிதனுடைய; ரஸவர்ஜம் - பற்று விலகுவதில்லை; ரஸ: அபி - அப்பற்றும்; அஸ்ய - இந்த ஸ்திரப்ரக்ஞனுக்கோ; பரம் - பமாத்மாவை; த்ரு'ஷ்ட்வா - தரிசித்த பிறகு; நிவர்ததே - விலகி விடுகிறது
2.59 புலன்நுகர் பொருட்கள் உடலிலிருந்து விலகி நிற்கின்றன. ஆனால் அவற்றின் மேல் உள்ள ஆசைகள் விலகுவதில்லை. பரமாத்மாவைத் தரிசித்த பிறகு அவருடைய அந்த ஆசைகளும் விலகி விடுகிறது.
..........................................................................................
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்'சித: /
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந: // 2.60
யதத: - முயற்சியுள்ள; ஹி - நிச்சயமாக; அபி - கூட; கௌந்தேய - குந்தியின் மகனே; புருஷஸ்ய - மனிதனின்; விபச்'சித: - புத்திசாலியான; இந்த்ரியாணி - புலன்கள்; ப்ரமாதீநி - கொந்தளிக்கும்; ஹரந்தி - இழுத்துச் சென்று விடுகின்றன; ப்ரஸபம் - பலவந்தமாக; மந: - மனத்தை
2.60 ஓ குந்தியின் மகனே! கொந்தளிப்புள்ள புலன்கள்,முயற்சியுள்ள புத்திசாலியான மனிதனின் மனத்தைக் கூடப் பலவந்தமாக இழுத்துச் சென்று விடுகின்றன.
..................................................................................
தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: /
வசே' ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா//
2.61
தாநி - அந்த; ஸர்வாணி - அனைத்துப் புலன்களையும்; ஸம்யம்ய - வசப்படுத்தி; யுக்த: - ஒருமுகப்படுத்திய சித்தமுடையவன்; ஆஸீத - அமரவேண்டும்; மத்பர: - என்னையே பரமகதியாகக் கொண்டு; வசே' - வசப்பட்டு இருக்கின்றனவோ; ஹி - நிச்சயமாக; யஸ்ய - எவனுடைய; இந்த்ரியாணி - புலன்கள்; தஸ்ய - அவனுடைய; ப்ரஜ்ஞா - புத்தி; ப்ரதிஷ்டிதா - ஸ்திரமாகிறது
2.61 அந்த அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒருமுகப்படுத்தி என்னையே பரமகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும். யார் ஒருவருடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ, அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.
..................................................................................
த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷ்வபஜாயதே /
ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோsபிஜாயதே //
2.62
த்யாயத: - சிந்தித்துக் கொண்டிருக்கிற; விஷயாந் - புலன்நுகர் பொருட்களை; பும்ஸ: - மனிதனுக்கு; ஸங்க: - பற்று; தேஷூ- அவ்விஷயங்களில்; உபஜாயதே - ஏற்படுகிறது; ஸங்காத் - பற்றுதலிலிருந்து; ஸஞ்ஜாயதே
- உண்டாகிறது; காம: - ஆசை; காமாத் - ஆசையிலிருந்து; க்ரோத: - கோபம்; அபிஜாயதே - உண்டாகிறது
2.62 புலன்நுகர் பொருட்களையே சிந்தித்துக் கொண்டிருக்கிற மனிதனுக்கு அவ்விஷயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து கோபம் உண்டாகிறது.
.......................................................................................
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ரு'திவிப்ரம: /
ஸ்ம்ரு'திப்ரமசா'த் புத்திநாசோ' புத்திநாசா'த் ப்ரணச்'யதி // 2.63
க்ரோதாத் - கோபத்திலிருந்து; பவதி - உண்டாகிறது; ஸம்மோஹ: -மிகுந்த அறிவின்மை; ஸம்மோஹத் - அறிவின்மையால்; ஸ்ம்ரு'திவிப்ரம: நினைவுத் தடுமாற்றம்; ஸ்ம்ரு'திப்ரமசா'த் - நினைவு தடுமாறுவதனால்; புத்திநாச': - புத்தி அல்லது விவேகத்தின் அழிவு; புத்திநாசா'த் - விவேகம் அழிவதனால்; ப்ரணச்'யதி - வீழ்ச்சியடைகிறான்
2.63 கோபத்தினால் மிகுந்த அறிவின்மை ஏற்படும். அறிவின்மையால் நினைவுத் தடுமாற்றம் உண்டாகிறது. நினைவு தடுமாறுவதனால் புத்தி அதாவது விவேகத்தின் அழிவு உண்டாகிறது. விவேகம் அழிவதனால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சியடைகிறான்.
.......................................................................................
ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைச்'சரந் /
ஆத்மவச்'யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி // 2.64
ராகத்வேஷவியுக்தை: - விருப்பு வெறுப்புகளின்றி; து - ஆனால்; விஷயாந்
- போக விஷயங்களில்; இந்த்ரியை: - புலன்கள் மூலம்; சரந் - ஸஞ்சரித்துக் கொண்டு; ஆத்மவச்'யை: - தன்னால் வசப்படுத்தப்பட்டுவிட்ட; விதேயாத்மா - தம் வசப்பட்ட மனதுடைய ஸாதகன்; ப்ரஸாதம் - உள்ளத்தெளிவை; அதிகச்சதி - அடைகிறான்
2.64 ஆனால் தம்மால் வசப்படுத்தப்பட்டுவிட்ட புலன்களின் மூலம் விருப்பு வெறுப்பின்றி போக விஷயங்களில் சஞ்சரிக்கும் தம்வசப்பட்ட மனதுடைய சாதகர் உள்ளத்தெளிவை அடைகிறார்.
.......................................................................................
ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே /
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாசு' புத்தி: பர்யவதிஷ்டதே // 2.65
ப்ரஸாதே - உள்ளத்தெளிவு ஏற்பட்டுவிட்டால்; ஸர்வது:காநாம் - எல்லா துக்கங்களுக்கும்; ஹாநி: - அழிவு; அஸ்ய - இவனுடைய; உபஜாயதே
- ஏற்பட்டுவிடும்; ப்ரஸந்நசேதஸ: - தெளிவடைந்த மனமுள்ள கர்மயோகியின்; ஹி - உண்மையிலேயே; ஆசு' - விரைவிலேயே; புத்தி: - புத்தி; பர்யவதிஷ்டதே - நன்கு ஸ்திரமாகிவிடும்
2.65 அந்த அமைதியில் இவருடைய எல்லாத் துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். அமைதியடைந்த பட்டறிவு மனம் விரைவிலேயே நன்கு ஸ்திரமாகி விடுகிறது.
...........................................................................................
நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா³வநா /
ந சாபா³வயத: சா'ந்திரசா'ந்தஸ்ய குத: ஸுகம் // 2.66
ந அஸ்தி - அங்கு இல்லை; புத்தி: - புத்தி ; அயுக்தஸ்ய - உறுதியான புத்தியற்றவனுக்கு; ந- தோன்றாது; ச - அவ்வாறே; அயுக்தஸ்ய - மனத்தையும் புலன்களையும் வெற்றி கொள்ளாதவனுக்கு; பா³வநா - பாவனை; ந - இல்லை; ச - கூட; அபா³வயத: - பாவனையற்றவனுக்கு; சா'ந்தி: - அமைதி ;அசா'ந்தஸ்ய - அமைதியற்றவனுக்கு; குத: - ஏது; ஸுகம் - சுகம்
2.66 தம்மைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத ஒரு மனிதர், அறிவுடையவராகவோ மகிழ்ச்சி உடையவராகவோ அமைதி உடையவராகவோ இருக்க முடியாது. அமைதியற்றவர் மனத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும்.
...........................................................................................
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோSநு விதீயதே /
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்ப⁴ஸி //2.67
இந்த்ரியாணம் - புலன்களில்; ஹி- நிச்சயமாக; சரதாம் - போகங்களில் ஸஞ்சரிக்கிற; யத் - எந்த ஒரு புலனுடன் கூட; மந: - மனம்; அநுவிதீயதே
- ஒட்டி இருக்கிறதோ; தத் - அந்த ஒரே புலன்; அஸ்ய - இந்த மனிதனின்; ஹரதி - அடித்துக் கொண்டு போவது; ப்ரஜ்ஞாம் - புத்தியை; வாயு: - காற்று; நாவம் - ஓடத்தை; இவ - போல; அம்ப⁴ஸி - நீரில் போய்க் கொண்டிருக்கும்
2.67 நீரில் இருக்கும் படகை, காற்றானது அடித்துச் செல்வதுபோல், மனத்தை புலன்கள் இழுத்துச் செல்கின்றன. மனம், அலைபாயும் புலன்களை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர் நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. அவர் நிகழ்காலத்தை இழக்கிறார்.
................................................................................................
தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ரு'ஹீதாநி ஸர்வச':
இந்த்ரியாணீந்த்ரியார்த்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா//
தஸ்மாத் - ஆகையால்; யஸ்ய - எந்த மனிதனுடைய; மஹாபாஹோ - வலிமையான தோள்களை உடையவனே; நிக்ரு'ஹீதாநி - மீட்கப்பட்டு - விட்டனவோ; ஸர்வச': - எல்லாவிதங்களிலும்; இந்த்ரியாணி - புலன்கள்; இந்த்ரிய அர்தேப்ய: - புலன்களுக்குரிய போகப்பொருட்களிலிருந்து; தஸ்ய - அவனுடைய; ப்ரஜ்ஞா - புத்தி; ப்ரதிஷ்டிதா - ஸ்திரமானது
2.68 ஆகையால் வலிமையான தோள்களை உடைய அர்ஜுனனே! எந்த மனிதருடைய புலன்கள், புலன்களுக்குரிய போகப்பொருட்களில் இருந்து மீட்கப்பட்டு விட்டனவோ, அவருடைய புத்தி ஸ்திரமானது.
................................................................................................
யா நிசா' ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ /
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிசா' பச்'யதோ முநே: /
யா - எது; நிசா' - இரவோ; ஸர்வபூதாநாம் - அனைத்து உயிரினங்களுக்கும்; தஸ்யாம் - அதில்; ஜாகர்தி - விழித்திருக்கிறான்; ஸம்யமீ - ஸ்திதப்ரக்ஞனான யோகி; யஸ்யாம் - எதில்; ஜாக்ரதி - விழித்திருக்கின்றனவோ; பூதாநி - அனைத்து உயிரினங்களும்; ஸா - அது; நிசா' - இரவு போல ஆகிறது; பச்'யத: - பரமாத்மாவின் தத்வத்தை உணர்கிற; முநே: - முனிவருக்கு
2.69 அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவோ, அதில் புலன்களை தம் வசப்படுத்திய யோகி விழித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களும் எதில் விழித்திருக்கின்றனவோ, அது, தம்மை உணர்ந்த ஞானிக்கு இரவு ஆகிறது.
................................................................................................
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஶ'ந்தி யத்வத் /
தத்வத்காமா யம் ப்ரவிஶ'ந்தி ஸர்வே
ஸ ஶா'ந்திமாப்நோதி ந காமகாமீ // 2.70
ஆபூர்யமாணம் - எல்லாப்பக்கங்களிலும் நீர் நிறைந்ததும்; அசலப்ரதிஷ்டம்
- அசைவில்லாமலும் இருக்கும்; ஸமுத்ரம் - கடலை; ஆப: - பல ஆறுகள்; ப்ரவிஶ'ந்தி - கலந்து விடுகின்றனவோ; யத்வத் - எவ்விதம்; தத்வத் - அதே போல; காமா: - போகங்களும்; யம் - ஸ்திதப்ரக்ஞனான மனிதனை; ப்ரவிஶ'ந்தி - வந்து அடைகின்றன; ஸர்வே - அனைத்து; ஸ:
- அவனே; ஶா'ந்திம் - மேலான அமைதியை; ஆப்நோதி - அடைகிறான்; ந- அடைவதில்லை; காமகாமீ - போகங்களை விரும்புகிறவன்
2.70 எல்லாப் பக்கங்களில் இருந்து வரும் பல ஆறுகள் கடலில் புகுந்தாலும் கடல் அசைவதில்லை; அதேபோல் ஞானி எல்லாப் பக்கங்களில் இருந்து வருகிற அனைத்துவித ஆசைகள் புகுந்தாலும் அவர் நிலைதடுமாறுவதில்லை. அவரே மேலான அமைதியை அடைகிறார்; போகங்களை விரும்புபவர் அமைதியை அடைவதில்லை.
................................................................................
விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஶ'சரதி நி:ஸ்ப்ருஹ:/
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஶா'ந்திமதிகச்சதி // 2.71
விஹாய - துறந்துவிட்டு; காமாந் - விருப்பங்களையும்; ய: - எந்த; ஸர்வாந் - அனைத்து; புமாந் - மனிதன்; சரதி - சஞ்சரிக்கிறானோ; நி:ஸ்ப்ருஹ: - சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக; நிர்மம: - மமதை இல்லாதவனாக; நிரஹங்கார: - அஹங்காரமற்றவனாக; ஸ: - அவனே; ஶா'ந்திம் - அமைதியை; அதிகச்சதி - அடைகிறான்
2.71 எந்த மனிதர் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவராக, அஹங்காரமற்றவராக, சிறிதளவு ஆசையும் இல்லாதவராக ஸஞ்சரிக்கிறாரோ, அவரே அமைதியை அடைகிறார்; அவரே சாந்தியை அடைகிறார்.
................................................................................
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி /
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேSபி ப்ரஹ்மநிர்வாணம் ரு'ச்சதி // 2.72
ஏஷா - இதுதான்; ப்ராஹ்மீ ஸ்திதி: - பிரஹ்மத்தை அடைந்தவனின் நிலை; பார்த்த - பார்த்தா; ந - இல்லை; ஏநாம் - இதை; ப்ராப்ய - அடைந்த பின்; விமுஹ்யதி - மோஹமடைவதில்லை; ஸ்தித்வா- நிலைபெற்று; அஸ்யாம் - இந்த ப்ரம்ம நிலையிலேயே; அந்தகாலே அபி - உயிர் பிரியும் நேரத்திலும்; ப்ரஹ்மநிர்வாணம் - பிரம்மானந்தத்தை; ரு’ச்சதி - அடைகிறான்
2.72 ஓ பார்த்தா, கடவுள் தன்மையை உணர்ந்த நிலை என்பது இதுதான். இதை அடைந்தபின் ஞானி ஒரு போதும் மோஹமடைவதில்லை. மேலும் இந்தப் பிரஹ்ம நிலையில் நிலைபெற்றிருக்கும் ஒருவர், உயிர் பிரியும் நேரத்திலும் கடவுள் தன்மையோடு ஒன்றிணைகிறார்.
...........................................................................................
ௐ தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே
ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஸாங்க்3யயோகோ நாம த்விதீயோऽத்யாய: //
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான யோக விஞ்ஞானமாகிய மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதுமாகிய ஸாங்கிய யோகம் எனப் பெயர் படைத்த இரண்டாவது அத்தியாயம்.