பகவத்கீதை
பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | : கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி) |
| த்ருபதன் | : திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் | : அரசர் துருபதனின் மகன் |
| சி'கண்டி | : சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | : அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசர் |
| யுயுதானன் | : கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி'ராஜன் | : அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | : சிறந்த போர்வீரர் |
| குந்தி போஜன் | : முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | : குந்தி போஜனின் சகோதரர் |
| சை'ப்யா | : சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | : சேதி நாட்டின் அரசர் |
| உத்தமௌஜன் | : சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர்கள் | : யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் |
| யுதிஷ்டிரர் | : தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பீமன் | : கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | : வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | : குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
ஸஹதேவன் : ஜோதிடக் கலையில் வல்லவர்.
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | : | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
| பீஷ்மர் | : | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | : | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகர்ணன் | : | கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | : | பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்’வத்தாமன் | : | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்’ருபர் | : | கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச’ல்லியன் | : | அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.) |
| ஸௌமாதத்தி | : | பகிகர்களின் அரசர் |
| துச்’சாதனன் | : | கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | : | கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோதரர்களில் மூத்தவர் |